என் தளத்தில் தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் அனைவரும் ஒரு விஷயம் புரிந்திருக்கும். நிறையப் புத்தகங்கள் படிப்பவன் நான் என்பதுதான் அது. நாவல்கள், கட்டுரைகள், சிறு சிறு துணுக்குகள், நகைச்சுவை என்று எந்த வடிவமாக இருந்தாலும் படிப்பதை நேசிப்பவன் நான். தீவிரமான இந்த வாசிப்புப் பழக்கம் எப்போதிலிருந்து என்னைப் பற்றிக் கொண்டது என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறேன்.
பள்ளி நாட்களில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. கொஞ்சம் பெரிய கிளாஸ் (6,7) வந்த சமயத்தில் அம்புலிமாமா, ரத்னபாலா போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் படித்ததுண்டு. அவ்வளவே. மற்றபடி சினிமா பார்ப்பதில் இருந்த ஆர்வம் படிப்பதில் இருந்தில்லை. அப்படிப்பட்ட என்னை நிறையப் புத்தகங்கள் படிக்கச் செய்தது அழகப்பா கலைக் கல்லூரி.
அழகப்பா கல்லூரியில் மிகப் பெரிய நூலகம் உண்டு. எல்லா சப்ஜெக்ட் புத்தகங்களும், எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் அங்கே இருக்கும். கல்லூரியில் கொடுத்த இரண்டு டோக்கன்களை உபயோகப்படுத்தி அம்மா விரும்பிப் படிக்கும் லக்ஷ்மி எழுதிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பேன். திருப்பித் தருவதற்கு முன் ஒன்றிரண்டை படித்துப் பார்த்து ரசித்ததுண்டு.
என்னுடன் பொருளாதாரம் படித்த நண்பர்களெல்லாம் நூலகத்திற்குச் செல்லும் போது போட்டி போட்டுக் கொண்டு சாண்டில்யன் எழுதிய புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். சாண்டில்யனின் சில புத்தகங்களை யார் முதலில் படிக்க எடுத்துச் செல்வது என்பதில் ஏதோ அடிதடி ரேஞ்சுக்கு முட்டி மோதிக் கொள்வார்கள். சரி, அந்த ஆசாமி என்னதான் எழுதியிருக்கிறார் பார்க்கலாமே என்று யாரும் போட்டியிடாத அவருடைய குட்டி புத்தகம் ஒன்றை (வசந்த காலம்) எடுத்துப் போய்ப் படித்தேன். என்ன ஒரு தமிழ் நடை! என்ன விறுவிறுப்பு! சாண்டில்யன் என்னைப் பற்றிக் கொண்டார். அவரது எல்லாப் புத்தகங்களையும் நானும் போட்டி போட்டு எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அவருக்கு அடுத்து தமிழ்வாணனும், சுஜாதாவும் என்னை விடாமல் பிடித்துக் கொள்ள அந்த இருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று படிக்க ஆரம்பித்தேன்.
கல்லூரி முடித்து வெளிவந்து வேலை தேடிய காலங்களில் என் செலவுகளுக்கும், அப்ளிகேஷன் போடும் செலவுகளுக்காகவும் காலையில் என் நண்பனின் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் பகுதிநேர இன்ஸ்ட்ரக்டராகவும், மாலையில் நான் இருந்த பேங்க் காலனி ஏரியா மக்களுக்காக சர்க்குலேஷன் லைப்ரரி ஒன்றை நடத்தியும் சம்பாதித்து வந்தேன். லைப்ரரிக்காக வார, மாத இதழ்கள் அனைத்தையும் வாங்க வேண்டியிருந்தது.
1985ல் துவங்கி 90 வரையில் மாத நாவல்களின் பொற்காலம் எனலாம். ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுககோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, தேவிபாலா ஆகிய அறுமூர்த்திகள் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். (பின்னல் தாமதமாக வந்து சேர்ந்தவர் இந்திரா செளந்தர்ராஜன்) பாக்கெட் நாவல், க்ரைம் நாவல், எ நாவல் டைம், குடும்ப நாவல், ராணிமுத்து, குங்குமச் சிமிழ், கார்த்திகா, டேபிரேக், ஊதாப்பூ, ரேகா, சின்ன ரேகா, டெவில், சஸ்பென்ஸ், சூப்பர் நாவல், ராஜாராணி, ரம்யா, ஏ ஒன், சுஜாதா, சத்யா, நாவல்டி, கோஸ்ட், உங்கள் ஜூனியர், உல்லாச ஊஞ்சல், புல்லட் ஐ, லென்ஸ் நாவல்.... ஹப்பா, மூச்சு வாங்குது. இப்படி ஒரு மாதத்தில் ஏறத்தாழ 25 மாதநாவல்கள் வெளியான காலம் அது. எல்லாவற்றையும் லைப்ரரிக்காகவும், சொந்த விருப்பத்துக்காகவும் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
இப்படி லைட் ரீடிங்காக ஆரம்பித்த என் படிக்கும் பழக்கம் பின்னர் ஹெவி ரீடிங்காகவும் மாறியது. இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களையும் விரும்பிப் படித்தேன். (இந்நாட்களில் பின்நவீனத்துவம் என்று எழுதி, படிப்பவர்களை பாயைப் பிறாண்டச் செய்யும் சில நவீன இலக்கிய(?) வாதிகளை நான் படிப்பதில்லை) நான் விரும்பிப் படித்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரையும் ஒருமுறையாவது சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்ற தீராத ஆவல் எனக்குள் இருந்தது. மதுரையில் இருந்து கொண்டு எவ்வாறு எழுத்தாளர்களைச் சந்திப்பதும் கதைகள் குறித்துப் பேசுவதும் இயலும்? ஆகவே நான் படித்த நாவல்கள் குறித்து என் விமர்சனங்களை கடிதங்களாக அனுப்பிக் கொண்டிருந்தேன். (இப்படி எழுதுவதையெல்லாம் எழுத்தாளர்கள் கவனித்துப் படிப்பார்களா? சில சமயம் பாராட்டாமல் திட்டியும் எழுதுகிறோமே... என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எனக்குள் தோன்றும்)

பயப்படாதீங்க... நான்தான்! அழகப்பா காலேஜ்ல படிக்கறப்ப... (எவ்ளோ பெரிய கண்ணாடிடா!) |
அப்படி நான் வியந்து ரசித்த எழுத்தாளர்களில் சிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பின்னாட்களில் எனக்குக் கிடைத்தது. நான் பழகிய எல்லா எழுத்தாளர்களிடமிருந்தும் நான் கண்ட பல நல்ல விஷயங்களை (சுட்டு) எனதாக்கிக் கொண்டேன். என்னை நான் பண்புள்ளவனாக மேம்படுத்திக் கொள்ள நான் பழகிய, இன்றும் பழகிவரும் எழுத்தாளர்கள் அனைவருமே காரணகர்த்தாக்கள். (அதனால் ‘என்னைச் செதுக்கிய சிற்பிகள்’ என்றுதான் தலைப்பு வைப்பதாக முதலில் எண்ணியிருந்தேன்.) நடை பழகிக் கொள்ளும் குழந்தைகள் முதலில் நடை வண்டியைப் பிடித்து நடை பழகி, பின் தானே நடப்பது போல எனக்கு நடை வண்டிகளாக இருந்த எழுத்தாளர்களையும், அவர்களுடனான என்னுடைய நட்பைப் பற்றியும் நான் சொல்லிச் செல்லவிருக்கும் தொடர்தான் இந்த ‘நடை வண்டிகள்’.
எழுத்தாளர்களுடன் பழகி வருவதில் நிறைய நல்ல விஷயங்களும், இனிமையான அனுபவங்களும் கிடைத்ததைப் போலவே ஒரே ஒரு எழுத்தாளர் எனக்குக் கசப்பான அனுபவத்தைக் கொடுத்தார். (இனி அவரைச் சந்திக்கவே வேண்டாமடா சாமி என்று மனதிற்குள் அலறும் அளவுக்கு). அதுபோன்ற கசப்புகளை விலக்கி, இனிப்புகளை மட்டுமே இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னைத் தொட்டு நீங்களும் தொடர்வீர்கள் தானே...
பின் குறிப்பு: என் நண்பர்களின் பதிவுகளையும், என் தளத்துக்கு வராத மற்றும் பலருடைய பதிவுகளையும் படித்துக் கருத்திடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பிடித்த அந்த விஷயத்தை சில சொ(நொ)ந்தப் பிரச்சனைகள் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்குச் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். அடுத்த வாரத்திலிருந்து அனைவரின் தளங்களிலும் என் வருகை இருக்கும். பொறுத்தருளுங்கள் நண்பர்களே!
பின்பின்குறிப்பு: நான் இந்த வலையைத் துவக்கி எழுதத் துவங்கியபோது எனக்குள் பெரிதாய் தன்னம்பிக்கை இருக்கவில்லை. ‘‘பல பெரியவங்கல்லாம் எழுதற இடத்துல நாம என்ன எழுதிக் கிழிச்சிடப் போறோம்... பத்து பேராவது நாம கிறுக்கறதைப் படிச்சாச் சரி’’ என்ற மனநிலைதான் இருந்தது. இன்று 50வது பதிவு வெளியிடும் வேளையில் என்னை நம்பி, என்னைப் பின்தொடர்பவர்கள் நூறு பேர்! எனக்குள் தன்னம்பிக்கையை ஊட்டி, பொறுப்புணர்வுடன் எழுத வைத்த அந்த நூறு பேருக்கும் என் கரம்கூப்பிய நன்றி! (ஆதரவு தரும் மற்ற எல்லா நண்பர்களுக்கும் சேர்த்துத்தான்)

|
|
Tweet | ||
50க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் படிப்பு ஆர்வத்தைப் பற்றி மிக அழகாக பகிர்ந்திருக்கீங்க.
//உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னைத் தொட்டு நீங்களும் தொடர்வீர்கள் தானே...//
கட்டாயம் தொடருவோம்.
Good. Pl. continue. Congrats for 50th post
ReplyDeleteஉங்கள் வாசிப்பு அனுபவங்கள் படிக்க
ReplyDeleteசுவராஸ்யமாக இருந்தது.
ஒரே கப்பல் . ஒரே களம்.
பாலமித்ரா படித்ததில்லையோ ?
சதத்திற்கும் , அரை சதத்திர்க்கும்
ஆயிரமாய் மேன்மேலும் பெருக வாழ்த்துக்கள்.
நடை வண்டியின் [து]தளிர் நடைகள் காண ஆவல்.
பாஸ் இது உங்கள் 50வது பதிவா அதற்கு முதலில் வாழ்த்துக்கள்
ReplyDelete@ RAMVI said...
ReplyDelete-முதல் வருகைக்கும், தெம்பூட்டும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் ஸார்! முதன்முதலாக என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய உங்களின் அன்பு என்றும் மறக்க முடியாதது!
நானும் சின்ன வயதில் அதாவது சிறுவனாக இருந்த போது நாவல்களை விரும்பி படிப்பவன் தான் ஆனால் இப்ப இளைஞனான பின் கால ஓட்டத்தில் எல்லாம் காணாமல் போய்விட்டது.
ReplyDeleteசாண்டிலியன் எனக்கும் மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர்.
@ மோகன் குமார் said...
ReplyDeleteஉற்சாகம் தந்த தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி மோகன்குமார்!
உங்கள் சின்ன வயது போட்டோ அழகாக இருக்கு
ReplyDelete@ ஸ்ரவாணி said...
ReplyDeleteவாசிப்புக் கடலில் என்னுடன் ஒரே தோணியில் பிரயாணிக்கும் தோழிக்கு என் இதயம் கனிந்த நன்றி! நடைவண்டிகள் உங்களின் ரசனைக்குரியதாகவே அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
@ K.s.s.Rajh said...
ReplyDeleteராஜ்! 500 பதிவுகள், 1000 பதிவுகள் கடந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இது பெரிதா? போக வேண்டிய தூரம் நிறைய உள்ளதே... இதை உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல ஒரு வாய்ப்பாகக் கருதித்தான் சொன்னேன். இப்போது உங்களுக்கும் உங்கள் மூலம் அனைவருக்கும் என் இதய நன்றி!
@ K.s.s.Rajh said...
ReplyDeleteநான் உங்களுக்கு நேர்மாறாக இருந்திருக்கிறேன். சின்ன வயதில் படித்ததை விட இப்போதுதான் நிறையப் படித்து வருகிறேன். சாண்டில்யனின் கதை நேர்த்தியும், உரையாடல் நேர்த்தியும் எல்லோருக்கும் பிடித்தவைதானே! என் முகத்தை(யும்) பாராட்டியதற்கு நன்றி ராஜ்!
வாழ்த்துக்கள்!
ReplyDelete50க்கு வாழ்த்துக்கள். 100க்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..நடை வண்டிய ஓட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?.முதலில் உங்கள் புகைப்படம் பார்த்து குழம்பிவிட்டேன்..கல்லூரி கால படம் அருமை..நடை வண்டியில் எதையெல்லாம் ஏற்றிச் செல்லப் போகிறீர்கள் என்று ஒரு முன்னோட்டம் மாதிரி சொல்லியிருக்கிறீரகள்..நூல் பிடித்தாற்போல சொன்னது சிறப்பு..நீங்கள் மறுபடியும் காண விழையாத அந்த எழுத்தாளரை நான் யூகித்துவிட்டேன்..50 ஐ விடுங்கள் 500 வது பதிவை விரைவில் எட்ட வாழ்த்துகள்.நடை வண்டியில் நானும் ஏறிக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விழைகிறேன்..நன்றி..
ReplyDeleteஇன்னும் என் மகள் என் திருமண புகைப்படத்தில் நான் போட்டிருக்கும் ராய்பான் ஸ்டைல் பெரிய கண்ணாடியை கிண்டலடிக்கிறாள்...இப்போது அது தான் பேஷன்...எவியாடோர்...என்கிறார்கள்...
ReplyDeleteஇந்த வலை உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகப்படுத்தியது
என்று எடுத்துக்கொள்ளுங்கள்...
உங்களைப்போன்றோருடன் தோள் உரசுவதில் பெருமை எனக்கே...
தொடர்ந்து கலக்குங்கள் கணேஷ் சார்..
உங்க படிப்பு ஆர்வம் பிரமிக்க வைக்குது. தேடித்தேடி நல்ல புக்செல்லாம் படிச்சிருக்கீங்க. வாய்ப்பும் கிடைச்சிருக்கு. நிறைய படிச்சதாலதான் பெரியகண்ணாடி போட்டீங்களோ? நான்லாம் பள்ளிக்கூடமே போனதில்லே. 30-வயசிலேந்துதான் தமிழ்படிக்கவே வாய்ப்பு கிடைத்தது.
ReplyDeleteக க கணேஷ்ஷ்ச்ச்ஷ் ப பயமாருக்கு முதல்ல போட்டோவை எ எடுங்கப்பா:):) (kidding)
ReplyDelete//எழுத்தாளர்களுடன் பழகி வருவதில் நிறைய நல்ல விஷயங்களும், இனிமையான அனுபவங்களும் கிடைத்ததைப் போலவே ஒரே ஒரு எழுத்தாளர் எனக்குக் கசப்பான அனுபவத்தைக் கொடுத்தார். (இனி அவரைச் சந்திக்கவே வேண்டாமடா சாமி என்று மனதிற்குள் அலறும் அளவுக்கு). அதுபோன்ற கசப்புகளை விலக்கி, இனிப்புகளை மட்டுமே இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னைத் தொட்டு நீங்களும் தொடர்வீர்கள் தானே...
// >>>
வேணுமின்னே கசப்பை வெளிப்படுத்த சிலர் விரும்பி வருவார்கள் கணேஷ் .. வார்த்தைகள் அவர்களுக்கு சிறகுகள் அல்ல சீவும் கத்திகள். அவங்களை விலக்கிடுவோம் இனியவைகளே எழுதுவோம் உங்கள் அனுபவங்களை எளிமையா எழுதறது சிறப்பா இருக்கு கணேஷ்
50 ஆச்சா.முதல்ல வயசோன்னு நினைச்சேன்.
ReplyDeleteகண்ணாடிக்குள்ள இன்னும் இரண்டு கண் இருக்க
இடம் இருக்கு !
வாழ்த்துகள் வாழ்த்துகள்.இப்போ கொஞ்சக் காலமாகத்தான் உங்கள் பதிவுகள் படித்து உங்கள் ரசிகையாகிவிட்டேன்.இன்னும் தொடருங்கள்.தொடர்கிறோம் !
@ அப்பாதுரை said...
ReplyDeleteஉங்களைப் போன்ற மதிப்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கிறது என்பதுதான் எனக்குள் பொறுப்புணர்ச்சியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக் காரணம். தங்களுக்கு என் இதய நன்றி!
@ r.v.saravanan said...
ReplyDeleteசரவணன்! அன்பு நிறைந்த உங்களின் வாழ்த்து எனக்குள் மகிழ்வை ஏற்படுத்துகிறது. மனமார்ந்த நன்றிகள்ப்பா!
@ மதுமதி said...
ReplyDeleteபாஸிட்டிவ்வான வார்த்தைகளைப் பயன்படுத்தி வாழ்த்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் கவிஞரே... என் எழுத்து நடையை நன்றாயிருக்குன்னு சொன்னதற்கும் நடைவண்டிப் பயணத்தில் உடன் வரவிருப்பதற்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!
@ ரெவெரி said...
ReplyDeleteநான் மதிக்கும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களில் தாங்களும் ஒருவர். தாங்கள் உடன் வருவதாகச் சொன்னது எனக்கு ‘பீமன்’ பலம்! மிக மிக நன்றி! (அந்தக் கண்ணாடிக்கு அப்ப ‘கார்பன்’ ஃப்ரேம் கண்ணாடின்னு பேர். லைட் வெயிட்டுன்னு சஜஸ்ட் பண்ணாங்க. இப்ப அவுட் ஆஃப் பேஷனாயிடுச்சு. அதைவிட லைட்டான கண்ணாடில்லாம் வந்துடுச்சுல்ல...)
@ ஷைலஜா said...
ReplyDeleteஎடுத்துடலாம்க்கா... நீங்கள் சொல்வது சரிதான். அந்த எழுத்தாளரை மிக மதித்துக் கொண்டாடுபவர்கள் நிறையப் பேர் உண்டு. கசப்புகள் நம்முடனேயே புதையட்டும். இனிப்புகளை மட்டும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாம். மிக்க நன்றிக்கா!
@ Lakshmi said...
ReplyDeleteநானும்கூட படிக்கிற காலத்தை விட்டுட்டு காலேஜ் வந்த பருவத்துக்கப்புறம்தானே படிக்கும் பழககம் வந்துச்சுன்னு வருந்தியிருக்கேன். ‘படிக்கிற விஷயத்துக்கு வயசு ஒரு தடையேயில்ல. எப்ப ஆரம்பிச்சாலும் நல்லதுதான்’ம்பார் பி.கே.பி. சார்! என் அம்மா இந்த 75 வயசுலயும் ஆர்வமா எல்லா ரைட்டர்ஸையும் படிப்பாங்க. அதனால நீங்களும் வருந்தாம நிறையப் படிங்க. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தறதுக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ ஹேமா said...
ReplyDeleteகேலி பண்ணாதீங்க ஃப்ரண்ட்! வயசு 50ஐத் தொடறதுககு இன்னும் ஐந்தரை வருஷங்கள் காத்திருக்கணும். நீங்களெல்லாம் உடன் வருவதாக ஆதரவுக்கரம் நீட்டுவது என் பாக்கியம் என்றே கருதுகிறேன். உங்களுக்கு என் இதய நன்றி!
வாசிப்பு என்பது தவம் போல உங்க அனுபவம் பத்தி பாராட்டாம என்னவோ மடல் அனுப்பிட்டேன் அப்றோம்
ReplyDeleteஅசச்ச்சோ சும்மா சொன்னேன் போட்டோவை எடுக்க வேணாம் கணேஷ்!!
@ ஷைலஜா said...
ReplyDeleteஓ.கே... சரியாச் சொன்னீங்க... வாசிப்பு என்பது தவம் போல! இதுவேதான் என் கருத்தும்!
கண்டிப்பாய் நீங்கள் வருவதற்கு அரங்கன் அருள்வான்! ஸ்ரீரங்க கோபுரத்தின் பின்னணிக் கதை நான் கல்லாத கடலளவில் ஒன்று. உங்களிடம் பின்னர் மின்மடல் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். நன்றி!
ReplyDelete<<<<>>>
அப்படில்லாம் லேசுல தப்பிக்கமுடியாது அரைமணில வெள்ளைகோபுரம் என் வலைல வரும் அங்க கோபுர தரிசனத்துக்கு வந்துடுங்க!!
வாழ்த்துகள் 50
ReplyDeleteWhen Century?
2012லேயே 50, 500 ஆக வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDelete100 ஃபாலோயர்ஸ் 1000 ஆக உயர வாழ்த்துக்க்ள் அண்ணா.
ReplyDeleteஅண்ணா 101வது ஃபாலோயர் நாந்தான்
ReplyDeleteவணக்கம் நண்பரே,
ReplyDeleteகல்லூரி நாட்கள் நமக்கு பழகிக் கொடுக்கும்
பழக்கங்களில் முக்கியமானவைகளில் ஒன்று புத்தகம் வாசிப்பது.
அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
நடைவண்டி பயணத்தை காண ஆவலாக உள்ளேன் நண்பரே.
@ ஷைலஜா said...
ReplyDeleteவெள்ளைக் கோபுரத்தின் கதையும், தியாகத்தின் தரிசனமும் கண்டு நெகிழ்ந்தேன். மகிழ்ந்தேன்க்கா.
@ Rathnavel said...
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்களும், ஆசிகளும் இருக்கும்போது விரைவில் ஆகிவிடும்! மிக்க நன்றி ஐயா...
@ ராஜி said...
ReplyDeleteslow and steady அப்படிங்கறது என் பாலிஸி. அதனால 2012ல ஐநூறு ஆகாது. ஆனாலும் முடிந்தவரை அதிகமாக விஷயங்கள் தர முயல்கிறேன் தங்கையே. என்னை தட்டிக் கொடுத்துப் பாராட்டும் உனக்கு என் இதயம் கனிந்த நன்றி!
@ மகேந்திரன் said...
ReplyDeleteகரெக்ட் மகேன். ஆழமான வாசிப்புப் பழக்கத்துக்கு விதை கல்லூரி சூழ்நிலை தரும். அதை கைக்கொள்ளாதவர்கள் வேலைக்குச் சென்று வாழ்வியலில் புகுந்த பின்னும்கூட படிக்கும் பழக்கம் அற்றவர்களாகவே இருப்பார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். தங்களி்ன ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி நண்பா!
சாண்டில்யன் பற்றி சொன்னதும் நினைவுக்கு வருகிறது
ReplyDeleteபொதிகைத் தொலைக் காட்சியில் சிலபல நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கும். ஆனால் விளம்பரமில்லாமல் எப்போது போடுகிறார்கள் என்பது தெரியாமல் முடிந்து விடும். அது போல ஒன்று நேற்று வெள்ளி இரவு ஏழு மணி நிகழ்ச்சி. எழுத்தாளர்கள் பற்றிய நிகழ்ச்சி போலும். நேற்றும், அதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கும்...சாண்டில்யன் பற்றியது.
எந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்? புதூர் சத்யா?
ReplyDeleteஎழுத்தாளர்களுடனான உங்கள் நட்பு பற்றிதான் இந்தத் தொடர்.....ஆஹா ஆவலுடன் காத்திருக்கிறேன் படித்து மகிழ. கசப்பான அனுபவங்கள் கொடுத்த அந்த எழுத்தாளர் யார் என்று எனக்கொரு கேஸ் உண்டு.................................. அவர்தானே?
கண்ணாடிக்குள் இன்னும் இரண்டு கண்களுக்கு இடமிருக்கு என்ற ஹேமாவின் கமெண்ட்டை ரசித்தேன்.
ReplyDeleteஐம்பதுக்கு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதொடருங்கள்.
அருமையான பகிர்வு.தொடருங்கள்.படிக்க ஆவலாக உள்ளோம்.
ReplyDeleteபழைய புரஃபைல் படத்திற்கும்,இப்போதுள்ள புரஃபைல் படத்திற்கும்,இந்த பெரீஈஈஈஈஈய கண்ணாடி அணிந்த புகைப்படத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம்.ஒற்றுமை என்னன்ன பெரிய கண்ணாடிதான்...:)
வணக்கம் சார்,நலமா?
ReplyDeleteநானெல்லாம் இப்பத்தான் வாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.உங்கள் வாசிப்பு அனுபவம்,வியக்க வைக்கிறது.
உங்கள் நடைவண்டியில் பயணிக்க என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வலைப்பூ ஆரம்பித்த ஐந்தே மாதங்களில் ஐம்பதாவது பதிவா...!!!!!!!!!பலே!! வாழ்த்துக்கள்!விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதற்கண், பதிவு ஐம்பதிற்கு வயது எண்பதின்
ReplyDeleteவாழ்த்துக்கள்! வாழ்க! வளர்க!
வாசிக்கும் பழக்கத்தை நேசிக்கும் உங்கள்
போக்கும் நோக்கும் மிகவும் நன்றே!
நடை வண்டி நகரட்டும்! நாங்களும் பின்
தொடர தடையின்றி!
புலவர் சா இராமாநுசம்
@ ஸ்ரீராம். said...
ReplyDeleteஎழுத்தாளர்கள் பற்றிய நிகழ்ச்சியா? தவறவிடாமல் அவசியம் பார்த்துடறேன். சொன்னதுக்கு தாங்க்ஸ் சார்! நான் இருந்த என் நண்பனோட இன்ஸ்டிட்யூட் தபால் தந்தி நகர்ல ‘ஜெயா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்’ன்னு பேரு. ரொம்ப வருஷம் நடந்தது. பிஸியாவும் நடந்தது. இப்பல்லாம் சரியாப் போகறதில்லன்னு அதை நிறுத்திட்டான். ஹேமாவின் கமெண்ட்டைப் படித்து நான்கூட குபீர்னு சிரிச்சு ரசிச்சேன். இப்ப உங்க மூலமா ஹேமாவுக்கும், உற்சாகமூட்டும் கருத்துக்களைத் தந்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்!
@ ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஉங்களைப் போல நண்பர்களின் ஆதரவு இருக்கறப்ப... இன்னும் நிறைய, நிறைவாச் செய்ய முடியும்னு நம்பிக்கை எனக்குண்டு. தங்களுக்கு என் மனமார்ந்தநன்றி!
@ ஸாதிகா said...
ReplyDeleteஎன் பதிவுகளை நீங்கள் தொடர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சிஸ்! இப்ப ரீசன்ட்டா போட்ட கண்ணாடி ரொம்பச் சின்னதுதான். கால இடைவெளியில நிறைய மாறிடுச்சு. (சமீபத்து ஃபோட்டோ என்னை அதிக வயசானவனா காமிக்குது. அதான் போடலை!) உற்சாகம் தந்த கருத்துக்களுக்கு என் இதய நன்றிம்மா!
@ கோகுல் said...
ReplyDeleteஎன்ன கோகுல்! என் இனிய நண்பர்களில் நீங்களும் ஒருவர்தானே... உங்களுக்கு நடைவண்டியில் இடமில்லாமலா? மகிழ்வுடன் தொடர்வோம் நாம். உங்களுக்கு என் இதய நன்றி!
@ ஸாதிகா said...
ReplyDeleteவலைப்பூ ஆரம்பித்த ஐந்தே மாதங்களில் ஐம்பதாவது பதிவா...!!!!!!!!!பலே!! வாழ்த்துக்கள்!விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள்.
-மனம் நிறைய மகிழ்வுடன் நீங்கல்லாம் வாழ்த்தும் போது நிச்சயம் இன்னும் அதிக விஷயங்களைத் தந்து சதம் தொட்டுரலாம்! மிக்க நன்றிம்மா!
@ புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteவாழ்த்துச் சொல்வதைக் கூட கவிதையாக எழுத தங்களால்தான் இயலும! (நானும்கூட உங்களின் பொங்கல் பதிவிற்கு இப்படி கமெண்ட் போட்டு முயற்சித்தேன். ஆனாலும் நீங்கள்தான் கானமயில்!) எனக்கு ஆதரவும், உற்சாகமும் தரும் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி ஐயா!
உங்களது ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள். வாசிப்பதன் அருமையை நான் உணர்ந்து கொண்டதும் கல்லூரி நாட்களில்தான். நன்றி சார்.
ReplyDelete@ பாலா said...
ReplyDeleteகல்லூரிகளில் நூலகங்கள் வைத்திருப்பது எவ்வளவு பயனுள்ளது என்பது என்னைப் போல் பயன்பெற்ற பல நண்பர்களின் பின்னுட்டங்களிலிருந்து அறிய முடிகிறது. உங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் என் இதயம் நி்றைந்த நன்றி பாலா!
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். நொந்து போகச் செய்த எழுத்தாளர் விவரம் கிசு கிசு வாகச் சொன்னால், அந்தத் தகவல், நாங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க உதவுமே!
ReplyDeleteநடைவண்டியைத் தள்ளுவதற்கு ஆரம்பியுங்கள். நாங்களும் பின் தொடர தயார்!
ஐம்பதுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இவ்வளவு வாசிப்பா.!அப்பாடி. அன்பவங்களை முடிந்த வரை நானும் தொடர்கிறேன்.
ReplyDeleteஎன் தளத்துக்கு வராத மற்றும் பலருடைய பதிவுகளையும் படித்துக் கருத்திடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ReplyDeleteபகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
கசப்புகளை விலக்கி, இனிப்புகளை மட்டுமே இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னைத் தொட்டு நீங்களும் தொடர்வீர்கள் தானே...நிச்சயமாக தொடர காத்திருக்கிறேன் அருமையான பகிர்வு
ReplyDeleteநடைவண்டியில் தொடங்கிய உங்கள் பயணம் பற்றி படிக்கும்போது, உங்கள் பதிவுகளின் வெற்றிக்கு காரணம் தெரிந்தது. 50 பதிவுகளை, அனைவரும் விரும்பும் வண்ணம் பதிவிடுவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் தாங்கள் அதை செய்து இருக்கிறீர்கள். விரைவில் அடுத்த இலக்கைத் தொட வாழ்த்துக்கள்!
ReplyDelete@ kg gouthaman said...
ReplyDeleteK.G.G. ஸார் கேட்டு சொல்லாமலா? கிசுகிசு பாணியில் சொல்வதானால் அந்த எழுத்தாளரின் படைப்புகளைப் படைப்புகளைப் படிப்பவர்களில் நிறையப் பேர் அவரையே தன் ஞான குரு என்று சொல்வார்கள். சில திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் இருந்திருக்கிறார். கண்டுபிடிச்சுக்கோங்க... தங்களின் தொடரும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteவாங்க வல்லிம்மா! இப்ப நான் படிக்கிறதே குறைவு, இன்னும் நிறையப் படிககணும்கற மனநிலை உள்ளவன் என்னுடையது. நீங்கள் முடிந்தவரை தொடர்கிறேன் என்றது எனக்கு மகிழ்வு. தொடரும் போட்டு நெடுக்க எழுதாமல் இரண்டு அத்தியாயங்களுக்கு ஒரு அனுபவம் என்று பிரித்துத்தான் எழுதப் போகிறேன். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்! உங்களுக்கு என் இதய நன்றி!
@ இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteதங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
@ sasikala said...
ReplyDeleteஎன் தளத்துக்கு முதல் வருகை என்று நினைக்கிறேன். நல்வரவு! தங்கள் படைப்புகள் எதையும் படித்திராதவன் நான். தாங்கள் என் படைப்பைப் படித்து என்னுடன் தொடர்வேன் என்று சொல்வது எனக்கு மிகமிக மகிழ்வளிக்கிறது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ வே.நடனசபாபதி said...
ReplyDeleteஆஹ்... உங்களின் வாழ்த்திலேயே உங்களின் அன்பை நன்குணர முடிகிறது. பின்னென்ன... நிறையச் செய்யலாம், நிறைவாய்ச் செய்யலாம். என் இதயம் கனிந்த நன்றிகள் நண்பரே...
நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
வணக்கம்!
ReplyDelete// பின் குறிப்பு: என் நண்பர்களின் பதிவுகளையும், என் தளத்துக்கு வராத மற்றும் பலருடைய பதிவுகளையும் படித்துக் கருத்திடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.//
ஒரு எழுத்தாளருக்கே உரிய நல்ல பண்பு. நடை வண்டியில் இனிப்பை மட்டுமே எழுதி திகட்டச் செய்ய வேண்டாம். அடுத்தவர்களுக்கு வழிகாட்டிட கசப்பு அனுபவத்தினையும் சொல்லுங்கள். தங்களது அனைத்து பதிவுகளையும் தொகுத்து புத்தகமாக தாருங்கள். வாழ்த்துக்கள்.!
@ Rishvan said...
ReplyDeleteஅவசியம் வருகிறேன் ரிஷ்வன்- வரும் வாரத்திலிருந்து. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
@ தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteதமிழ் இளங்கோ! தங்களின் கருத்தை பரிசீலிக்கிறேன். சமீபகாலமாக என் மனதில் ஓடிக் கொண்டிருந்த ஒரு எண்ணத்தை தாங்கள் சரியாகப் படம் பிடித்தது போல் சொல்லி விட்டீர்கள். புத்தகமாகத் தயாரிக்கும் ஏற்பாடுகளில் விரைவில் இறங்கி விடுகிறேன். நற் கருத்துக்கு என் இதயம் கனிந்த நன்றி!
சகோதரா உங்கள் 50வது இடுகைக்கு வாழ்த்துகள். வாசிப்பு விடயத்தில் ஒரே கதை தான் இவ்விடமும். முன்பு கதைகள், நாவல்கள் வாசிப்புப் பிரியையாக இருந்தேன். இப்போது சிறு கதை நாவல்களை ஒதுக்குகிறேன். கட்டுரை ஆய்வுகள் என்று வாசிக்கவே மிகப் பிரியம். இதில் கவிதை முதலிடம். நன்றி வாழ்த்துகள் மயுபடியும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
50 பதிவுகள் நூற்றுக்கு மேற்பட்ட தொடர்பவர்கள்
ReplyDeleteபதிவுலகில் ஐந்து மாதங்களில் இந்த சாதனையை அடைவது
மிகப் பெரும் சாதனையே
தங்கள் முன்னுரை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திப் போகிறது
கசப்பான அனுபவத்தையும் பெயர் குறிப்பிடாமல் எழுதலாம்
அடுத்தவர்களுக்கு உதவும்
நூறாய் ஆயிரமாய் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 11
ReplyDelete@ kavithai (kovaikkavi) said...
ReplyDeleteநல்லது. நான் எல்லாவகை எழுத்துக்களையும் படிக்கிறேன். தங்களுக்கு கதைகள் ஆர்வத்தைத் தரவில்லை. அவ்வளவே... அதனாலென்ன? வாசிப்புப் பழக்கம் என்றும் நன்றே! வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!
@ Ramani said...
ReplyDeleteதங்களின் ஆலோசனையை மதிக்கிறேன். நிச்சயம் பெயர் குறிப்பிடாமல் அதையும் பகிர்ந்து கொள்கிறேன். உற்சாகமூட்டிய கருத்தைத் தந்து வாழ்த்திய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!
வாழ்த்துக்கள்...........தொடருங்கள்.....
ReplyDelete@ Shakthiprabha said...
ReplyDeleteஉற்சாகம் ஊட்டிய தங்களின் கருத்துக்கு என் இதயம் கனிந்த நன்றி!
அழகப்பா காலத்தில அழகா இருக்கேப்பா lol
ReplyDelete@ ரசிகன் said...
ReplyDeleteஹா... ஹ்ஹா... நீங்கள் ரசித்து கருத்திட்டதற்கு என் மனமார்ந்த நன்றி!