Thursday, January 12, 2012

சின்னச் சின்னப் பூக்கள்!

Posted by பால கணேஷ் Thursday, January 12, 2012
ரு சமயம் மகாவிஷ்ணு கைலாயம் சென்றிருந்தபோது கணேசரிடம் கொஞ்சி விளையாடினார். குழந்தை கணேசர் சட்டென்று தன் துதிக்கையை நீட்டி விஷ்ணுவின் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் அடக்கிக் கொண்டார். விஷ்ணு எத்தனையோ விதமாக கெஞ்சிக் கேட்டும் பலனில்லை. தரமாட்டேன் என்று அடம் பிடித்தார் வினாயகர். விஷ்ணுவுக்கு ஒரு யுக்தி தோன்றியது. உடனே தன் காதுகளைக் கைகளல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்தார். குழந்தை வினாயகர் அதைக் கண்டு குபுக்கென்று குலுங்கிச் சிரிக்க, வாயில் அடக்கி வைத்திருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. உடனே விஷ்ணு அதைக் கையில் எடுத்துக் கொண்டு ‘எஸ்கேப்’ ஆனார்.

மகாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்ட செயல் சமஸ்கிருதத்தில் ‘தோர்பிகர்ணம்’ என்று சொல்லப்பட்டது. ‘தோர்பி’ என்றால் கைகளால். ‘கர்ணம்’ என்றால் காதுகள். கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் ‘தோர்பிகர்ணம்’ நாளடைவில் திரிந்து பேச்சு வழக்கில் தோப்புக்கரணம் ஆகிவிட்டது.  தோப்புக் கரணம் என்றால் தோப்பில் போடும் குட்டிக்கரணம் என்று பொருள் கொள்ளலாகாது. இனி ‘தோர்பிகர்ணம்’ என்றே பொருள் கொள்வீராக!

இப்போது எதற்கு இந்தப் புராணம்? வேறொன்றுமில்லை... நேற்று என் மருமகள் ‘ஹோம் ஒர்க் பண்ணலை. மிஸ் பனிஷ் பண்ணுவாங்க’ என்று பள்ளி செல்ல அடம் பிடித்ததைப் பார்த்த போது என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. பள்ளிச் சிறுவனா யிருந்த காலத்தில் சுந்தரம் வாத்தியார் கொடுத்த அதிகபட்ச தண்டனை இந்த ‘தோர்பி கர்ணம்’தான். மறக்க முடியாத (ஆன்மீக) பனிஷ்மென்ட் ஆச்சே!

==============================================

ள்ளி நாட்கள் என்றதும் வேறொன்றும் தோன்றுகிறது. தமிழ் மொழியின் சிறப்பே இரண்டு பொருள் தரும் ஒரே வார்த்தைகள்தான். இவற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ‘சிலேடை’ என்கிற அற்புதமான ஒரு விஷயம் தமிழ் மொழியில் நிறைய .உண்டு.

முன்பொரு பதிவில் நாங்கள் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலப்படுத்தி விளையாடும் வழக்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில பாடங்கள் மொழிபெயர்ப்புக்குத் தோதாக இல்லையென்றாலும் கர்ணகடூரமாக தமிங்கிலீஷிலாவது மொழி பெயர்த்துப் பாடிவிடுவோம். ‘சிந்து ரிவரின் மிசை மூனினிலே, சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து, போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம்’ என்பது போல. இப்படியெல்லாம் ஆங்கிலப்படுத்தி(?)க் கொண்டிருந்த எங்களை அப்படிச் செய்ய முடியாமல் தோற்கடித்த பாடலும் ஒன்று உண்டு. கீழே நான் கொடுத்துள்ள பாடலை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்...

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

==============================================

தானே புயல் காரணமாக ‘நாகேஷ்’ என்று மழை பெய்த ஓய்ந்திருந்த (எத்தனை நாளைக்குத்தான் ‘சோ’ன்னு மழை பெஞ்சதா சொல்றது? ஹி... ஹி...), பத்து தினங்களுக்கு முந்தைய ஒருநாள். வாரத்தில் ஒருநாள் நண்பருடன் வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு டீக்கடைக்குச் சென்று காபி குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தெருவோரத்தின் டிரெய்னேஜில் இருந்த சிறு ஓட்டை வழியாக ஒரு எலிக்குஞ்சு தலையை எட்டிப் பார்ப்பதும், மனித நடமாட்டம் ‌கண்டதும் தலையை .உள்ளிழுத்துக் கொள்வதுமாக இருந்தது. பொந்தை விட்டு சற்று வெளியே வரும். கடையில் நின்றிருப்பவர்களில் யாராவது அசைந்தால் கடகடவென்று மீண்டும் குழிக்குள் ஓடிவிடும்.

இதை நான் கவனித்துக் கொண்டிருந்தபோதே அது நடந்தது. சுண்டெலி தலையை ‌வெளியே நீட்டிப் பார்த்துவிட்டு பொந்தை விட்டு வெளி வந்தது. சிறிது தூரம் அது முன்னேறுவதற்குள் பறந்து வந்த காக்கை ஒன்று அதைக் கவ்வியபடி பறந்து மே‌லே மரக்கிளையில் அமர்ந்தது. அதைக் கொத்தியது.

பாவம், சுண்டெலியார் கொத்தப்பட்டு, மரத்திலிருந்து கீழே விழுந்தார். காகம் அதன் அருகில் சென்று கொத்த முயல, வேறு நான்கைந்து காகங்கள் அருகில் வந்தன. இந்தக் காகம் அவற்றை விரட்டிவிட்டு தானே கவ்விக் கொண்டு மரக்கிளையில் அமர்ந்து மீண்டும் கொத்தித் தின்னத் துவங்கியது. மற்ற காகங்கள் அருகில் வந்ததும் அவற்றை விரட்டிய வண்ணமிருந்தது.

‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்று ஒரு தாடிக்காரப் புலவர் (மதுமதி! உங்களை இல்லைங்க...) இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தாரே... அந்தக் காகங்களெல்லாம் என்னவாயின? ‘இரை கிடைத்தாலும் இல்லையென்றாலும் உறவை அழைக்கும் காக்கைகளே’ என்று எம்.ஜி.ஆர்.  கூடப் பாடுவாரே... அப்படிப்பட்ட காகங்கள் இரை கிடைத்ததும் ஒன்றை மற்றொன்று துரத்தியதைக் கண்டு வியந்தேன். மனிதர்கள் போட்ட உணவுகளைத் தின்று தின்று காகங்கள் கூட குணம் மாறி விட்டனவா என்ன?

நகரக் காக்கைகளிடம் வேறொன்றும் கவனி்த்திருக்கிறேன். மதுரையில் நான் சிறுவயதில் இருந்த காலத்தில் காக்கைகளை சற்று தூரத்தில் இருந்து கையசைத்து ‘போ’ என்று விரட்டினாலே பறந்து விடும். சென்னை நரகத்திலோ... ச்சே, நகரத்திலோ... மாடிக் கைப்பிடிச் சுவரில் அமரும் காக்கையை சற்று தூரத்திலிருந்து ‘போ’ என்று விரட்டினால் ‘எவன்டாவன்?’ என்பது போல் ஓரக்கண்ணால் ‘ஸைட்’ அடிக்கின்றன- எத்த‌னை ஹாரன் அடித்தாலும் நகராமல் ‘இடிச்சுடுவியா நீ?’ என்கிற மாதிரி சென்னை ஜனஙகள் நடுரோடில் நடக்கிறார்களே... அந்த மாதிரி! மிக அருகில் நெருங்கி, விரட்டினால்தான் பறக்கின்றன. இந்த மெத்தனமும் நகரத்து மனிதர்களின் உணவைத் தின்பதனால் அவற்றுக்குப் பழகியிருக்குமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் தோன்றுவதுண்டு.

==============================================

ழைய (சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த) குங்குமம் இதழ் ஒன்றில் கண்ணில் பட்ட வித்தியாசமான துணுக்குச் செய்தி இது. (பட், இவங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!)


==============================================

ஓக்கே... இப்போ to end with a smile...  லைட்டா ஹி... ஹி...ங்க!

(கோழி ஒண்ணு முட்டையிட்டு யானைக் குஞ்சு வந்ததுன்னு...)

படம்: என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.

64 comments:

  1. உங்கள் சின்னப் பூக்கள் நிறைய புன்னகையை சிந்தின.
    பல்சுவை நகைச்சுவை விருந்து. அருமை.

    ReplyDelete
  2. @ ஸ்ரவாணி said...

    முதல் வரவாய் வந்த தோழிக்கு என் நல்வரவு! நீங்கள் ரசித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியும், உங்களுக்கு என் உளப்பூர்வமான நன்றியும்!

    ReplyDelete
  3. தோப்பு கரணம் இல்லை..'தோர்பிகர்ணம்' என்ற விளக்கத்தை புராணத்தின் உதவியோடு விளக்கிவிட்டீர்கள்..சிறப்பு..சிலேடை தான் தமிழுக்கு அழகு..தாங்களே சிலேடை சிதறல் என்ற பதிவை இட்டிருந்தீர்கள்.முந்தைய பதிவை குறிப்பிடும்போது சுட்டி இணைக்கவும்..அந்தப் பாடலை ஆங்கிலப் படுத்துவது கடினம்தான்..எலியும் காக்கையும்.. (இந்த மெத்தனமும் நகரத்து மனிதர்களின் உணவைத் தின்பதனால் அவற்றுக்குப் பழகியிருக்குமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் தோன்றுவதுண்டு)சரியாகச் சொன்னீர்கள்.ஒரே வரியில் பின்னூட்டம் இட முடியவில்லை ..பதிவு அப்படி..ஆக மொத்தம் ஒரு கதம்பத்தை கொடுத்துவிட்டீர்கள்..சிறப்பு..உங்களுக்கு தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. @ மதுமதி said...

    கவிஞரே... இனி தாங்கள் குறிப்பிடுவது போல சுட்டி இணைக்கிறேன். என் எண்ணத்தை நீங்களும் ஆமோதித்ததில் மிக மகிழ்ந்தேன். இப்படிக் கதம்ப சரங்கள் அடிக்கடி வழங்க வேண்டுமென்பதும் என் விருப்பம்தான்! உடன் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி! உங்களுக்கு தேசிய இளைஞர் தின மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. //‘தோர்பிகர்ணம்’//
    புதிய தகவல்! நல்ல பதிவு பாஸ்!

    ReplyDelete
  6. ரொம்ப சுவாரசியமா இருக்கு பதிவு! தோப்புகர்ண கதை எப்பவோ பெரியம்மா சொல்லி கேட்டது. திரும்ப இப்போ என்ஜாய் பண்ணி படிச்சேன். நன்றி!
    நாங்களும் இது போல தமிழ் பாடலை ஆங்கில படுத்தி ராகமா பாடாம அப்படியே சொல்லுவோம், அப்பதான் கண்டுபிடிக்கறது கஷ்டமா இருக்கும். அப்பறம் நீங்க இதை கேள்விபட்டிருக்கீங்களான்னு தெரியல, 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' இந்த ஒரே வரியை வெச்சுண்டு இந்த பாடலை அதோட மெட்டுல முழுசா பாடுவோம். ரொம்ப ஜாலியா இருக்கும். good olden days!
    // இந்த மெத்தனமும் நகரத்து மனிதர்களின் உணவைத் தின்பதனால் அவற்றுக்குப் பழகியிருக்குமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் தோன்றுவதுண்டு.//
    நல்லாதான் சொன்னீங்க. இங்க பறவைகள் கூட இப்படிதான் இருக்கு. நான் தினமும் பாக்கறேன்.

    உங்கள் நண்பருக்கு என் பாராட்டை தெரிவியுங்கள். சிரிச்சு மாளலை. படமும் ரொம்ப அழகா வரைஞ்சிருக்கார். முட்டைலேந்து வர அந்த குட்டி யானை சரி க்யூட். யானைனாலே எனக்கு அவ்ளோ பிடிக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விலங்கும் யானைதான்.

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வணக்கம் அண்ணா. நம்ம தோப்புகரணம் அயல் தேசத்திலே Brain Yoga என்ற பெயரிலே பிரசித்தமாகி வருகிறது. You tube இல் தேடினால் நிறைய படங்கள் கிடைக்கும். நானும் தமிங்கிலிஷில் படிக்கும் காலத்தில் பாடி திரிவேன். அந்த நாளை நினைவு படுத்தி விட்டீர்கள். கடைசி படம் சிரிக்கும் படி இருந்தது. உங்களுக்கு இளைஞனின் தின வாழ்த்துக்கள். :P

    ReplyDelete
  8. இதோ அந்த அருமையான பதிவு ...[சிலேடை சிதறல்]
    சுட்டுவிரலால் சுட்டிக்காட்டிய மதி சகோ வுக்கும் என் நன்றி !
    http://minnalvarigal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete
  9. @ ஜீ... said...

    தங்களின் வருகைக்கும் ரசித்ததற்கும் என் மனமார்ந்த நன்றி ஜீ!

    ReplyDelete
  10. @ மீனாக்ஷி said...

    வணக்கம் மீனாக்ஷி மேடம்! பழைய நினைவுகளை அசை போடறதுன்னா எனக்கும் மிகப் பிடிக்கும். நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. எனக்கு இஷ்ட தெய்வமே பிள்ளையார்தான்! யானை முகத்தோனாச்சே... தாஸ் கிட்ட நீங்க ரசிச்ச‌தை சொல்லிடறேன். (இன்னொரு தாஸ் படம் கூட பார்த்தவுடனே குபீர் சிரிப்பைத் தரும். வர்ற பதிவுல தந்துடறேன்) பறவைகள் விஷயத்துல நீங்க என் கட்சிதான்கறதுல சந்தோஷம்! உங்களுக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் + நன்றி!

    ReplyDelete
  11. @ ரசிகன் said...

    வாங்க ரசிகன், உங்களுக்கும் அந்த நாள் ஞாபகம் வந்ததா? சந்தோஷம்! தாஸ்கிட்ட நீங்க ஜோக் ரசிச்சதை தெரிவிச்சிடறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் + இளைஞர்தின, பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. @ ஸ்ரவாணி said...

    சிலேடைச் சிதறல்களைப் படித்து ரசித்ததுடன் எனக்காகத் தேடி லி்ங்க்கையும் எடுத்துத் தந்த உங்களின் அன்புக்கு என் ராயல் சல்யூட்! என் இதயபூர்வமான நன்றி!

    ReplyDelete
  13. உங்கள் வலைத்தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன்.இந்த பதிவை படித்ததும் மனம் நிறைவாக இருக்கிறது. கடைசியில் போட்ட கார்டுன் நச் என்று இருந்தது வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  14. கடைசி படம் ரொம்ப நக்கல்

    ReplyDelete
  15. சின்ன சின்னபூக்கள் பெரிய பெரிய விஷயங்களை சொல்லி இருக்கே. எல்லாமே ரசனைக்குறியதாக இருக்கு . நன்றி.

    ReplyDelete
  16. தோர்பிகரணம் மறுபடி படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது. ஆங்கிலப்'படுத்திப்' பாடும் பாடல் செய்தியும் சுவாரஸ்யம். காக்கைகளைப் பற்றி நாம்தான் தப்பாய்ப் புரிந்து கொண்டிருக்கிறோமோ....மீனாக்ஷி சொல்லும் பாடலை நாங்களும் அதே போல பாடுவோம். சில சமயம் வார்த்தையின் இரண்டாவது எழுத்தை முதல் எழுத்தாக்கி பேசுவோம். என் நண்பன் தேவன் அதில் வேகமாகப் பேசக் கூடியவன். (உதாரணமாக வருது என்ற சொல்லை ரவுது என்றும் போகிறது என்ற சொல்லை கோபிறது என்றும்) இன்னொரு முறை வார்த்தையின் இரண்டாவது எழுத்தில் தொடங்கி முதல் எழுத்தைக் கடைசி எழுத்தாக்கிப் பேசுவது!

    ReplyDelete
  17. @ Avargal Unmaigal said...

    முதல் வருகைக்கு என் நல்வரவு! நிறைவாக ரசித்ததற்கும், கார்ட்டூனைப் பாராட்டியதற்கும் என் இதய நன்றி! உங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. @ என் ராஜபாட்டை"- ராஜா said...

    ரசித்துப் படித்ததற்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ராஜா!

    ReplyDelete
  19. @ Lakshmi said...

    சின்னச் சின்னப் பூக்களை நீங்கள் ரசித்துப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிம்மா!

    ReplyDelete
  20. @ ஸ்ரீராம். said...

    ‘தண்ணிய ஊத்தி எழுப்பினா அம்மா’ என்பதை ‘உண்ணிய தூத்தி எழுப்பினா’ என்பது போல கன்னா பின்னாவென்று நானும் பேசியதுண்டு. அதை ஒரு தனிப்பதிவாக எழுத எண்ணியிருந்தேன். போட்ட உடைச்சுட்டிங்களே ஸ்ரீராம் ஸார்... தோர்பி கரணம், காக்கை விஷயம் எல்லாவற்றையும் நீங்கள் ஸ்லாகித்துப் பாராட்டியதற்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  21. என்ன இருந்தாலும்.. அந்த நெய் விற்றவர்களின் நேர்மை.. சான்சே இல்லை!

    ReplyDelete
  22. நாகேஷ் மழை...///
    டைமிங் ஜோக் அதிகம் சொல்விங்களோ?

    ReplyDelete
  23. // மனிதர்கள் போட்ட உணவுகளைத் தின்று தின்று காகங்கள் கூட குணம் மாறி விட்டனவா என்ன//
    சரியான சாட்டை அடி போன்ற கேள்வி!
    மனித குணத்தை தெளிவு படுத்துமா?

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. தோர்பிக்கரணம் பற்றிய அழகான விளக்கம் நண்பரே.

    இந்தப் பாடலை தமிங்கிலிஷ் ஆக்குவது சிரமம் தான்
    நண்பரே.

    "நாகேஷ்" னு மழை பெய்ததா...
    முடியல சாமி.......

    வியாபாரத்தில் இவ்வளவு நேர்மையானவர்களும்
    இருந்திருக்கிறார்கள் பாருங்கள்...

    மிகவும் ரசித்தேன் நண்பரே இன்றைய பதிவை.

    ReplyDelete
  25. சின்னச் சின்னப் பூக்களுக்குள் பெரிய நல்ல
    விஷயங்களைப் போட்டுப் பிரமாதப் படத்தியுள்ளீர்கள்.எல்லாப் பூக்களுமே அழகு. குறிப்பாக காக்கைப் பற்றி சொன்னது ரொம்ப சரி கணேஷ் சார். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இனிய பொங்கல் நல் வாழ்த்தக்கள்

    ReplyDelete
  26. அட...போன பதிவில நான் தலையில குட்டினபடியாலதானே உங்களுக்குத் தோபுக்கரணம் ஞாபகம் வந்திருக்கு !

    நாங்க படுறபாட்டில தமிங்கிலீஷ் பாட்டு வராது.தனுஷ்கிட்ட கேட்டுப் பாருங்களேன் !

    நாகேஷை நினைவு படுத்திக்கிட்டே இருக்கீங்க.
    நன்றி !

    இங்கேயும் புறாக்கள் தெருவில பயமில்லாம நடக்குது.பாரதி சொன்ன விடுதலை இவங்களோடதான் !

    நேர்மையான் விளம்பரம்.யானைக்குஞ்சு ... !

    ReplyDelete
  27. Sorry for late coming. Every part of this post is super. Summa Nach nu irukku Sir. Thodarungal.

    ReplyDelete
  28. என்னங்க இது.. தோப்புல போடுற கரணம்னு தானே நெனச்சிட்டிருந்தேன்?

    சினிமா பாட்டுக்கு சப் டைடில் போடுறவங்க கிட்டே கொடுத்தா சும்மா பின்னியெடுத்துட மாட்டாக?

    அப்படியே காக்கா பிடிக்கிறாங்கறதுக்கும் எதுனா அர்த்தம் இருந்தா போட்டுறுங்க.. மெட்ராஸ் காக்கானா சும்மாவா?

    சுமங்கலி நெய் தான் இருப்பதிலேயே பெஸ்ட் ஜோக். ('79 பிரதியை சேத்து வச்சிருக்கீங்களே?)

    ReplyDelete
  29. காக்கைகளைப் பார்த்து ஒத்துமையா இருக்க கத்துக்கணும்ன்னு சொல்லுவாங்க. இங்கே மனுஷங்களைப் பார்த்து அதுங்கல்லாம் கெட்டுப் போயிட்டுது போலிருக்கு. எந்த இடத்துல இருக்கோமோ, அந்த இடத்தோட குணம் கொஞ்சமாவது ஒட்டிக்கிறது வழக்கம்தானே :-))

    தோப்புக்கரணம் போடும்போது காதுகளை பிடித்துக்கொள்வதால் அழுத்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு, ஞாபக சக்தி பெருகுதாம்.. மேலை நாட்டுல கண்டு பிடிச்சு சொல்லியிருக்காங்க..

    ReplyDelete
  30. ''...உடனே தன் காதுகளைக் கைகளல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்தார். குழந்தை வினாயகர் அதைக் கண்டு குபுக்கென்று குலுங்கிச் சிரிக்க, வாயில் அடக்கி வைத்திருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. உடனே விஷ்ணு அதைக் கையில் எடுத்துக் கொண்டு ‘எஸ்கேப்’ ஆனார்...''
    முதல்ல ஒரே முசுப்பாத்தி தான் போங்க நல்ல சுவையாக இருந்தது.ஒன்று சொன்னா கோபிக்காதீங்கோ. முதல் மூன்று விடயத்தோட நிறுத்தினால் போதாதா? மற்றவை அடுத்த தடவைக்கு வைக்கலாம் போல உள்ளது.இது என் கருத்து மட்டுமே.. மிக சுவையானவை .வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkvai.wordpress.com

    ReplyDelete
  31. ஆஹா... எல்லாவற்றையும் மிகவும் ரசித்தேன். காக்கைகளின் குணம் மாறிவருவதை இன்னும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கே ஆஸ்திரேலியாவில் பல கடற்பறவைகள் குறிப்பாக ஸீகல் பறவைகள் இப்போதெல்லாம் இரைதேடிக் கடலுக்குப் பறப்பதில்லை. கூட்டம் கூட்டமாக உணவகங்களைச் சுற்றி வந்து கிடைப்பதைப் பொறுக்கியோ, பறித்தோ உண்டு வாழ்கின்றன. அவற்றிடம் தேடலுணர்வு முற்றிலும் தொலைந்துவிட்டதாக ஆய்வறிக்கை சொல்கிறது.

    துணுக்கு துணுக்கிடவைத்தாலும் ரசிக்கவைத்தது.

    யாழிக்குஞ்சு ரொம்ப அழகு.

    பகிர்ந்த யாவுமே ரசனையின் உச்சம். நன்றி கணேஷ் சார்.

    சில நாட்களாகவே தங்கள் தளத்துக்கு வரும்போதெல்லாம் தளம் திறக்காமல் பிரச்சனை இருந்தது. இப்போதுதான் வரமுடிந்தது.

    ReplyDelete
  32. @ bandhu said...

    ஹா.. ஹா... நானும் மிக ரசித்தது அந்தத் துணுக்கைத்தான். உங்களுக்குப் பிடிச்சிருந்ததில் மகிழ்ச்சி. நன்றி!

    ReplyDelete
  33. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

    முன்னெல்லாம் முயற்சி பண்ணி சொல்லிட்டிருந்தேன். இப்ப தானா வருது பிரகாஷ்! தங்கள் வருகையால் மகிழ்ச்சி + தங்களுகு்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  34. @ புலவர் சா இராமாநுசம் said...

    ஆம் ஐயா! என் மனதில் எழுந்த கேள்வி அது. மனித மனம் மாற வேண்டும் என்பது என் அவா. உங்களின் வருகைக்கும் கருத்துக்கு்ம் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  35. @ புவனேஸ்வரி ராமநாதன் said...

    நீங்கள் அனைத்துப் பகுதிகளையும் ரசித்துப் படித்ததை அறிந்து மகிழ்ந்தேன். உங்களுக்கு என் நன்றியும், உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  36. @ ஹேமா said...

    நீங்க சொல்றதை ஒத்துக்கறேன்- தலையில குட்டறதால மூளைச் சுரப்பிகள் தூண்டப்பட்டு நல்லாவே வேலை செய்யுது. பறவைகள் மட்டும்தான் பூரண விடுதலையை அனுபவிக்கின்றன போலும். அனைத்து பூக்களும் உங்களுக்குப் பிடித்திருந்ததை அறிந்து மகிழ்வு. உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  37. @ துரைடேனியல் said...

    தெம்பூட்டும் வார்த்தைகளை வழங்கி பாராட்டிய துரைக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  38. @ அப்பாதுரை said...

    அதுவும் சரிதான். அன்னிக்கு ஒரு பாட்டுக்கு சப் டைட்டில் இப்படி போட்டிருந்தாங்க: what i told to you? why are you Garing? பாட்டு என்ன தெரியுமா? ‘நான் என்ன சொல்லிவிட்டேன், நீ ஏன் மயங்குகிறாய்?’ மயங்குகிறாய் என்ற வார்த்தைக்கு இப்படி நேரடி மீனிங்லயா மொழிபெயர்ப்பாங்க? அவ்வ்வ்வ்வ! காக்கா பிடிக்கிறதுக்கும் அர்த்தம் உண்டே. ஐடியா குடுத்ததுக்கு நன்றி. அடுத்த பதிவுல போட்ரலாம். பழைய புத்தகங்கள் கலெக்ஷன் கொஞ்சம் என்னிடம் உண்டு. பற்றாததற்கு இருக்கவே இருககிறது ஐயா மகாலிங்கம் அவர்களின் ‘காந்தி நூலகம், சைதாப்பேட்டை’. அங்கே பொக்கிஷங்கள் நிறைய உண்டுங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  39. @ அமைதிச்சாரல் said...

    பாருங்க மேடம்... நம்ம முன்னோர்கள் உண்டாக்கின பழக்கங்களோட நல்லதை நமக்கு மேல்நாட்டினர் சொன்னாதான் தெளிவாப் புரியுது. ஹும்..! உங்கள் வருகைக்கும் நல்ல கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி + உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  40. @ kavithai (kovaikkavi) said...

    உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல சந்தோஷம்! எனக்கு சுலபத்துல கோபமே வராதுங்க. எதுனாலும் தயங்காம சொல்லுங்க. மேட்டர் நிறைவாக் குடுக்கணும்கறது என் எண்ணம் வேதா! சொல்றதுக்கு இன்னும் கடலளவு மேட்டர்கள் இருக்கு. அதனால அதிக மேட்டர் இருந்தா பரவாயில்லன்னு தோணுது எனக்கு! அக்கறையா கருத்து சொன்ன உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  41. @ கீதா said...

    அடடா... பறவைகள் அங்கயும் குணம் மாறிட்டுதா? அந்தத் துணுக்கு எனக்கும் இதே உணர்வுதான் தந்தது. யானைக் குஞ்சை நீங்க ரசிச்சதுல எனக்கு மகிழ்ச்சி. கனிவான தங்கள் கருத்துக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  42. வணக்கம் பாஸ் கொஞ்ச நாள் உங்கள் தளத்தின் பக்கம் வரவில்லை கொஞ்சம் பிசி மன்னிக்கவேண்டும்

    இன்று ஒரு அருமையான பகிர்வை பகிர்ந்திருக்கிறீங்க அருமை

    ReplyDelete
  43. ////தானே புயல் காரணமாக ‘நாகேஷ்’ என்று மழை பெய்த ஓய்ந்திருந்த (எத்தனை நாளைக்குத்தான் ‘சோ’ன்னு மழை பெஞ்சதா சொல்றது? ஹி... ஹி...), ////

    ஹா.ஹா.ஹா.ஹா எப்படி பாஸ் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க

    ReplyDelete
  44. கீழே நான் கொடுத்துள்ள பாடலை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்...

    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    செவ்வாய் கோவைப் பழமாக
    சேர்ந்தே நடந்தது அழகாக//

    அண்ணே..அண்ணே..நான் மொழி பெயர்க்கிறேன் .சரியான்னு பார்த்து சொல்லுங்க.

    சன் டே என்பது ஐ யாக
    மண்டே என்பது கேர்ளாக
    டியூஸ்டே கோயம்புத்தூர் புரூட்டாக
    ஜாயிண்ட் பண்ணி வாக் பண்ணுவோம் பியுட்டியாக...

    ஹே ஹே எப்பூடீ?

    ReplyDelete
  45. அப்படிப்பட்ட காகங்கள் இரை கிடைத்ததும் ஒன்றை மற்றொன்று துரத்தியதைக் கண்டு வியந்தேன்//மனுஷங்க மாதிரி காகமும் மாறி விட்டது போலும்.

    // (பட், இவங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!)
    // எனக்கும்தாண்ணே.ரொம்ப தைரியமுள்ள நேர்மை உள்ளவர்களா இருப்பாங்க போலும்.

    பதினாறு வயதினிலே படப்பாடலை சித்திரம் மூலம் காட்டி விட்டீர்கள் அருமை.

    ReplyDelete
  46. @ மகேந்திரன் said...

    மகேன், இந்த விஷயங்கள் எல்லாவற்றையுமே நீங்கள் ரசித்ததில் மகிழ்ந்தேன். உங்களுக்கு மனமார நன்றி நவில்கின்றேன்!

    ReplyDelete
  47. @ K.s.s.Rajh said...

    என்ன ராஜ்? நானும்கூடத்தான் முன்ன மாதிரி தொடர்ந்து உங்க பதிவுக்கு வர முடியறதில்லை. உங்க தொடரையே இன்னும் தொடர முடியாம பொங்கல் நாள்ல படிச்சேயாகணும்னு ப்ளான் பண்ணிருக்கேன். நீங்களும்தான் மன்னிக்கணும். அது போகட்டும், நீங்கள் இந்த விஷயத்தை ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
  48. @ ஸாதிகா said...

    அழகா மொழி பெயர்த்திருக்கே தங்கச்சி. ஆனா இதுல ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்), செவ்வாய் (‌சிவந்த இதழ்)ங்கற இன்னொரு பொருள் கிடைக்காதே... ரெண்டு பொருளை தமிழ்ல நாம உணர்ற மாதிரி எப்படி மத்த மொழியால முடியுங்கறதுதான் என் கேள்வி! நான் ரசித்த அந்த விளம்பரத்தையும், தாஸின் கார்ட்டூனையும் நீயும் ரசித்ததைக் கண்டு மிக மகிழ்ந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  49. மகாலிங்கம் அவர்களின் நூலகமா? விவரம் சொல்லுங்க..

    ReplyDelete
  50. (கோழி ஒண்ணு முட்டையிட்டு யானைக் குஞ்சு வந்ததுன்னு...)
    >>>>
    ஹா ஹா எப்படி அண்ணா இப்பதான் ஜெயா டிவியில் அந்த பாட்டை கேட்டுட்டு ஹம் பண்ணிக்கிட்டே உங்க தளத்துக்கு வந்தால் அதே பாட்டு எழுத்து வடிவில் ஆச்சர்யமா இருக்கே.

    ReplyDelete
  51. கீழே நான் கொடுத்துள்ள பாடலை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்...
    >>>
    எனக்கு அம்புட்டு அறிவுலாம் இல்லைங்கண்ணா. பிள்ளைங்க ஸ்கூல் விட்டு வரட்டும். அவங்ககிட்ட கேட்டு சொல்றேன்.

    ReplyDelete
  52. @ அப்பாதுரை said...

    சொல்றேன் ஸார்... சென்னை சைதாப் பேட்டையில் மகாலிங்கம், மகாலிங்கம்னு (ரெண்டு பேரில்ல, ஒருத்தர்தான்!) ஒருத்தர் ‘மகாத்மா காந்தி வாடகை நூல் நிலையம்’னு நடத்திட்டு இருக்காரு. காந்தி பி(வெ)றியரான அவர் சுதந்திரப் போராட்ட காலத்துலருந்து இன்று வரை விடாம நடத்திட்டிருக்காரு. ராஜாஜில்லாம் வந்து விசிட்டர்ஸ் புக்ல கையெழுத்து போட்டதைல்லாம் இப்பவும் பாதுகாப்பா வெச்சிருக்காரு. போனா பாக்கலாம். அவர்கிட்ட அந்தக் காலத்துலருந்து இந்தக் காலம் வரை புத்தகப் பொக்கிஷங்கள் நிறைய இருக்கு. தவிர, ஆண்டுக்கு ஒரு முறை அவர் நூல் நிலையம் சார்பா எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா நடத்துவார் ஸார். இவ்வளவு தூரம் நான் சொன்னதிலருந்தே அவரைப்பத்தி புரிஞ்சிருப்பீங்க. சென்னை வந்தா சொல்லுங்க. கூட்டிட்டுப் போறேன்... சரியா அப்பா ஸார்!

    ReplyDelete
  53. @ ராஜி said...

    சில தற்செயல் நிகழ்வுகள் இப்படித்தான் பல சமயங்கள்ல ஆச்சரியத்துல ஆழ்த்திடும். பாக்கலாம்... குழந்தைங்க எப்படி மொழிபெயர்த்துச் சொல்லுதுன்னு. ஆர்வமா காத்திருக்கேன். கேட்டுட்டு தவறாம இந்த அண்ணனுக்கும் செர்ல்லிடும்மா... தவறாமல் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி + உங்கள் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  54. ஒன்றில் ஐந்து என்று ஐந்து வெவ்வேறு பூக்களை தொடுத்து ஒரு அழகிய மாலையை (பதிவை) கொடுத்தமைக்கு நன்றி. இயற்கை, சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒவ்வொரு உயிரினமும் தன்னை, தன் குணத்தை மாற்றிக்கொள்ள வழி செய்வதாக படித்ததாக நினைவு.எனவே காகத்தை பற்றிய உங்கள் கணிப்பு சரியே. பொங்கல் வாழ்த்துக்களுடன்!

    ReplyDelete
    Replies
    1. இந்த மலர் மாலையை ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் என் இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  55. சின்னப்பூக்கள் சுவாரசியம்.

    தோர்பிகர்ணம் பற்றிய குறிப்பு அருமை.

    இப்பொழுது காக்காகள் யாருக்கும் பயப்படுவதில்லை என்பது உண்மைதான்,நான் கூட இதை பற்றி யோசனை செய்திருக்கிறேன்.

    கடைசி கார்ட்டூன் சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  56. @ RAMVI said...

    சின்னப் பூக்களை சுவாரசியம் எனப் பகர்ந்த தங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  57. சின்ன சின்ன பூக்களில் நல்ல கதம்ப மாலையாய் பதிவு! அதிலும் நெய்யில் மெய்! ஆஹா...கணேஷ் அருமை!

    ReplyDelete
  58. @ ஷைலஜா said...

    நெய்யில் மெய்! ஹா... ஹா... என்ன அழகாச் சொல்லிட்டிங்க. கதம்ப மாலைக்காக என்னைத் தட்டிக் கொடுத்ததுல மிக மகிழ்ச்சி எனக்கு. என் இதய நன்றி.

    ReplyDelete
  59. 'தோர்பிகர்ணம்'- விரிவான விளக்கம் சார்! 'சிலேடை' என்று இப்போது உள்ள குழந்தைகளைக் கேட்டால் 'அந்த சிலேட் (Slate) எங்கே கிடைக்கும்?' என்று கேட்கிறார்கள். காக்கை கூடவா மாறி விட்டது? எங்க ஊரில் சிட்டுக்குருவியையே பார்க்க முடிவதில்லை சார்! இன்னும் கொஞ்ச வருடங்களில் காக்கையும் அப்படித்தான் போல (Due to Mobile Towers.....?) பதிவின் முடிவில்... துணுக்குச் செய்தி, படம் அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

    ReplyDelete
  60. பொங்கலுக்கு முன்னையே உங்க பல்சுவை விருந்தை ரசிச்சாச்சு. உங்க எழுத்தின் ஹாஸ்யம் சுண்டி இழுக்கும் மந்திரம்

    ReplyDelete
  61. @ திண்டுக்கல் தனபாலன் said...

    ஹா... ஹ... என்ன செய்ய? தமிழ் படிக்கும் குழந்தைகளே அரிதாகிவிட்டதால் சிலேடைக்கு இந்த நிலைதான். மொபைல் டவர்களால் சிட்டுக் குருவி இனம் அழிந்து பல காலமாச்சு தனபாலன் சார்! துணுக்கு + படம் எல்லாம் ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  62. @ Shakthiprabha said...

    ‘பல்சுவை விருந்து’ன்னு நீங்க குறி்ப்பிட்டிருக்கறது மகிழ்ச்சி தருது. அடிக்கடி இப்படி பல்சுவை விருந்து தர முயல்கிறேன். உங்களுக்கு என் இதய நன்றி + இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  63. சுதந்திரப் போராட்டக் காலத்துலந்து நடத்திட்டிருக்காரா? ரொம்ப சின்ன வயசுக்காரரோ?

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube