Tuesday, January 17, 2012

மொறுமொறு மிக்ஸர்!

Posted by பால கணேஷ் Tuesday, January 17, 2012
சின்னச் சின்னப் பூக்கள்’ என்ற தலைப்பில் நான் கொடுத்திருந்த பதிவைப் படித்துவிட்டு, ‘‘மொறுமொறுவென்று மிக்ஸர் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. வாரம் ஒன்று இதுமாதிரி கொடுங்கள்’’ என்றார் நான் மதிக்கும் எழுத்தாளர் (நண்பர்) கடுகு அவர்கள். அவர் விருப்பப்படி  இந்த வார மசாலா மிக்ஸர்:

===============================================

முதல்ல ஒரு புதிரோட ஆரம்பிக்கலாம். கீழே நான் கொடுத்திருக்கற ஒன்பது கோடுகளை...
| | |  | | |  | | |

அப்படியே பத்தா மாத்தணும். இதென்ன பெரிய விஷயம்? எக்ஸ்ட்ராவா ஒரு கோடு போட்டுட்டாப் போச்சுங்கறார் ஸ்ரீராம் ஸார்! இதே கோடுகளை வெச்சு பத்தா மாத்தணும்கறதுதான் கண்டிஷன்! யோசிங்க மக்காஸ்... அப்பாலிக்கா சொல்றேன் எப்பூடின்னு!

===============================================

ங்கள் குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்காதவர்கள் குழல் இனிது, யாழ் இனிது என்பார்கள் என்றார் தாடிக்காரர். அப்படி மழலையின் சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பை என் பெற்றோர்களுக்கு நான் தந்ததில்லையாம். பேச ஆரம்பி்த்தபோதே தமிழ் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்குமாம். (அப்பவே தமிழ்க் காதல் ஆரம்பமாய்டுச்சு போல). ஆனால் அதிலும் ஒரு குறையைத் தந்திருந்தார் பகவான்! அது என்னன்னாக்கே... ‘ச’வே வராது எனக்கு. ‘ச’ என்ற எழுத்தை உச்சரிக்க வராமல் ‘ச’ வரும் இடங்களில் எல்லாம் ‘த’ போட்டுப் பேசியிருக்கிறேன். (அப்பா... ஜெய்தங்கர் படம் கூட்டிட்டுப் போப்பா..)

என்னைவிட பதினைந்து வயது மூத்த என் அத்தங்கா (அத்தை பெண்) மதுரை வந்தால் என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டு, ‘‘கண்ணா! என் பேர் என்ன சொல்லு?’’ என்று கேட்பாள். நான் தெளிவாக ‘‘வதந்தி’’ என்பேன். ‘‘படவா, வதந்தி இல்லடா... வசந்தி! எங்க ‌சொல்லு... வசந்தீ!’’ என்று அவள் சொல்ல, அவள் வாயையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஸ்பஷ்டமாக ‘‘வதந்தீ’’ என்று மறுபடி சொல்வேனாம் நான். அவள் கலகலவென்று சிரித்துவிட்டு எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஓடி விடுவாளாம். பின்னாட்களில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் இதை சொல்லிச் சொல்லி என்னைக் கலாய்த்து சிரிப்பாள் அத்தங்கா.

===============================================

அடங்கொக்கமக்கா..! ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ன்னு மீசைக்காரன் இதுக்காகவா பாடினார்?


===============================================
ரு ‘அட’ போட வைக்கும் தகவல்: ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதம மந்திரியே திறந்து வைத்திருக்கிறார். அந்தப் பெருமைக்குரியவர்... வேறு யார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்! 1963ல் அந்தமானில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். உலக அளவில் மக்கள் திலகத்துக்கு மட்டும்தான் அனைத்துலக ரசிகர் மன்றங்கள் உருவாகி 85 நாடுகளில் ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டன.

===============================================

இது முதல் முதல்ல பத்திரிகைகள்ல வந்த ‘நிரோத்’ விளம்பரம்! பழைய்ய்ய்ய காலத்து புத்தகம் ஒண்ணோட கட்டிங்லருந்து ஸ்கேன் பண்ணது. தேதி, வருஷம் தெரியலை, ஸாரி!



===============================================

சிறு வயதில் கமர்கட் வாங்கி ருசித்துச் சாப்பிட்டிருப்பீர்கள். கமர்கட்ன்னா என்னன்னு கேக்குற குயந்தைப் பசங்களுக்கு... இன்னிக்கு நீங்கல்லாம் விரும்பிச் சாப்பிடற ‘மகா லாக்டோ’ மாதிரி ஒரு விஷயம். அதை வீட்லயே செஞ்சு சாப்பிட்டா ரொம்பவே நல்லா இருக்கும்ல... எப்படிச் செய்யறது?

1 கப் தேங்காய்த் துருவலையும், வெல்லத் துருவல் 2 கப்பும், 1 டேபிள் ஸ்பூன் நெய்யையும் எடுத்துக்கங்க. முதல்ல வெல்லத் துருவலை கால் தம்ளர் தண்ணி விட்டு அடுப்புல வெச்சுக் கரைய விடணும். அப்புறம் அந்த வெல்லக்கரைசலை இறக்கி வடிகட்டிக்கோங்க. அடுத்து, வடிகட்டிய வெல்லக் கரைசலை மறுபடி அடுப்புல வெச்சு லேசாக் கொதி வந்ததும் அதோட தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறுங்க.

ஆச்சா... இரண்டும் சேர்ந்து திரண்டு வர்ற சமயத்துல நெய் ஊத்தி நல்லாக் கிளறுங்க. நெய் சேர்ந்து கெட்டியான கலவையா ஆனவுடனே இறக்கிடுங்க. அது சூடு ஆறுவதற்கு முன்னாலயே சட்டுன்னு உருண்டைகளா உருட்டிப் போட்ருங்க. அவ்வளவுதான்! சூப்பரா வீட்லயே கமர்கட் செஞ்சிட்டீங்களே... சாப்பிட்டுப் பாருங்க... சூப்பரா இருக்கும். (‘தில்’ படத்துல லைலா டிவியில குல்பி செய்ய சொல்லித் தர்றதைப் பாத்துட்டு விக்ரம் + டீம் ஏடாகூடமா செஞ்சுட்டு முழிப்பாங்களே.... அதுமாதிரி நீங்க செஞ்சு சரியா வராட்டா என்னைக் கேக்கக் கூடாதுப்பா... சொல்லிப்புட்டேன்!)

===============================================

இப்போ... அந்தப் புதிருக்கு விடை: ஒன்பது கோடுகளையும் இப்படி அடுக்கினா...
TEN
 இப்போ பத்தா ஆயிட்டுது இல்லீங்களா... (ஹய்யோ... ஹேமா ‘கொலவெறி’ யோட என் தலையில குட்டறதுக்கு வர்றாங்க. ஓடிடுரா கணேஷ், ஓடிடு!)

===============================================

அப்புறம்... to end with a smile, வழக்கம் போல என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸோட கார்ட்டூன்!



ன்ன மக்களே... இந்த வாட்டி மிக்ஸர் மொறுமொறுன்னு இருந்துச்சான்னு கொஞ்சம் சொல்லிப்புட்டுப் போறது...

67 comments:

  1. மிக்சர் மொறு மொறுப்பா சுவையா இருந்தது, வாழ்த்துகள். அடுத்தமிக்சர் எப்போ?

    ReplyDelete
  2. கமர்கட் செய்முறை சூப்பர்.கார்ட்டூன் அருமை.
    இப்படி டென் போடறதை யாரு சொல்லிக் கொடுத்தாங்க.:)

    ReplyDelete
  3. @ Lakshmi said...

    பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்கல்ல... சீக்கிரமே கொடுத்துரலாம். முதல் வருகையாய் வந்து பாராட்டிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  4. @ வல்லிசிம்ஹன் said...

    கார்ட்டூன், கமர்கட் செய்முறை பாராட்டினதுக்கு நன்றி. (இதுக்குன்னே தனியா ரூம்போட்டு யோசிப்போம்ல...) உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்மா!

    ReplyDelete
  5. மிக்சர் கமர்கட்டுடன் சேர்த்து சாப்பிட
    ருசியாக இருந்தது. டென் புதிர் எல்லாம் கண்டுபிடிக்கிறதுல
    நாங்க டென்/டென் வாங்கிட்டோம் இல்ல ?

    ReplyDelete
  6. ஓடினாலும் பிடிச்சிடுவேன்ல.சுவிஸ்ல ஆட்டோ இல்ல அதான் யோசிச்சிட்டு இருக்கேன் !

    9 கோடுகளையும் உத்துப் பாத்திட்டு இருந்தேனா.பக்கத்தில ஒரு கோடு தெரிஞ்சுது.ஒருவேளை அதுதான் 10ஆவது இருக்குமோ.இல்லன்னா ஒரு கோட்டைப் பாதியாப் பிச்சுப் போடுவீங்களோன்னு வாசிச்சிட்டே வந்தா...சொதப்பிட்டீங்களே !

    எழுத்தில மட்டும்தான் *ச* ஒழுங்கா வருதோ.இதுக்காகவே உங்ககூடப் பேசிப்பாக்கணும்போல இருக்கு!

    இண்ணைக்கு மாமனிதர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம்தானே !

    அதுசரி...இப்பிடி இனிப்பு,நெய் சேர்த்துச் சாப்பிட்டு எல்லாருக்கும் சீனியைக் கூட்டி வைக்கப்
    போறீங்கபோல இருக்கே.இது என்னமோ கொலைவெறித்திட்டம் தோழர்களே.யாரும் செய்து சாப்பிடாதேங்கோ !

    கார்ட்டூன் சிரிச்சாலும் மனிதனின் உதவி மனப்பான்மை குறையிலன்னு சொல்லுது.நண்பருக்கு நன்றி!

    இவ்வளவும் மூச்சு விடாம சொல்லிட்டு மிக்ஸர் சரில்லன்னு சொல்லமுடியுமோ !

    ReplyDelete
  7. ////ஒரு ‘அட’ போட வைக்கும் தகவல்: ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதம மந்திரியே திறந்து வைத்திருக்கிறார். அந்தப் பெருமைக்குரியவர்... வேறு யார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்! 1963ல் அந்தமானில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். உலக அளவில் மக்கள் திலகத்துக்கு மட்டும்தான் அனைத்துலக ரசிகர் மன்றங்கள் உருவாகி 85 நாடுகளில் ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டன.
    ////

    இப்படி ஒரு புகழ் வேறு எந்த தமிழ் நடிகருக்கு கிடைக்கும்

    ReplyDelete
  8. இந்த வார மிக்சர் மொரு மொரு

    ReplyDelete
  9. @ ஸ்ரவாணி said...

    டென் புதிர் உங்களுக்குச் சும்மா... நீ்ங்க புத்திசாலின்னு எனக்கு முன்னயே தெரியுமே... (ஐஸ்! ஐஸ்!) மிக்ஸரை கமர்கட்டுடன் சேர்த்து ரசித்துச் சாப்பிட்ட உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  10. @ ஹேமா said...

    அதிகாரத்துக்குப் பயந்து ஓடலாம், அன்புக்குப் பயந்து ஓட முடியுமா ஹேமா... ‘ச’ வராதது குழந்தைப் பருவத்திலங்க. ரெண்டு வருஷம் கழிச்சு நல்லாவே ச போட்டுப் பேச ஆரம்பிச்சுட்டேன். இன்னிக்கு எனக்குப் பிடித்த எம்.ஜி.ஆரின் பிறந்த தினம். அதனாலதான் அந்தத் தகவலை வெச்சேன். (நினைவு தினம் இல்லீங்க) ரசிச்சு, கை குலுக்கினதுக்கு என்னோட மனமார்ந்த நன்றி தோழி!

    ReplyDelete
  11. @ K.s.s.Rajh said...

    ஆமாம் ராஜ். எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான இன்று அவரை இப்படி நினைவுகூர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி. மொறு மொறு மிக்ஸரை மிக ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  12. அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. // ‘ச’ வரும் இடங்களில் எல்லாம் ‘த’ போட்டுப் பேசியிருக்கிறேன்// இப்ப தரியாப் போத்துல்ல?

    ReplyDelete
  14. கம்மர்கட் செய்முறைக்கு நன்றி... கார்ட்டூன் அலும்பு... தலைவர பத்தின தகவல் அட்டகாசம் பசங்க கிட்ட சீன் போட வசதியா இருக்கும்...

    ReplyDelete
  15. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ஸார்!

    ReplyDelete
  16. @ கே. பி. ஜனா... said...

    அஞ்து வயதுலயே தரியாப் போத்து! ஹா... ஹா... நீங்கள் ரசித்துப் படித்து கருத்திட்டதற்கு என் இதய நன்றி ஜனா ஸார்!

    ReplyDelete
  17. @ மரு.சுந்தர பாண்டியன் said...

    கமர்கட்டையும், கார்ட்டூனையும் ரசிச்சுப் பாராட்டின உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! (பசங்க கிட்ட சீன் போடறதா? நாசமாப் போச்சு... புள்‌ளைங்க கிட்டல்ல சீன் போடணும்? அப்பாவிப் பையன் போலருக்கு) ஹா... ஹா...

    ReplyDelete
  18. மிக்தர் மொறு மொறுன்னு ரொம்ப துவை!

    ReplyDelete
  19. @ சென்னை பித்தன் said...

    ஹெஹ்‌ஹே... நீங்க ரதித்ததை எவ்வளவு அழகா தொல்லிட்டிங்க... உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  20. மிக்சர் மொறு மொறுப்பா சுவையா இருந்தது கணேஷ் ஸார்...
    புதிர்..-:)
    கமர்கட் செய்முறை சூப்பர்...
    கார்ட்டூன் அருமை ...

    ReplyDelete
  21. @ ரெவெரி said...

    இந்த மிக்ஸரின் அனைத்துப் பகுதிகளையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  22. உடனே பின்னூட்டமிடமுடியாதபடிக்கு கமர்கட் செய்யப் போய் இந்தக் கரண்டி ஒட்டிகிட்டு எடுக்கவே வரவில்லை...மெல்ல எடுத்துட்டு இப்பதான் டைப் செய்யறேன்!
    எம் ஜி ஆர் பற்றிய தகவல் அட!. கமர்கட், மிக்சர், காஃபி அருமை!

    ReplyDelete
  23. @ ஸ்ரீராம். said...

    என்னது... கமர்கட் ‘சிவாஜி’ ஆயிடுச்சா? முருகல்லா யேசுவே! நான் சரியாத்தாம்பா சொல்லிருந்தேன். என் ஃபேவரைட் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் ஆச்சே! மொத்தமாக ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  24. அட்டகாஸமான மொறு மொறு மிக்சர்!!! ரசித்தேன்.

    நேத்து எங்கூர் டிவியில் frozen planet என்று ஒரு தொடர் ஆரம்பிச்சு இருக்கு. அதுலே பனி மேடையில் கிடக்கும் ஸீல் பிராணியைப்பிடிக்க இந்தத் திமிங்கிலக்கூட்டம் எப்படி சாமர்த்தியமா வேலை காட்டுதுன்னு உங்க கார்ட்டூன் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

    கமர்கட் பாகு ரொம்ப முத்தணும். அப்பதான் வாயில் போட்டதும் கரையாத கல்கமர்கட் கிடைக்கும்:-)

    ReplyDelete
  25. @ துளசி கோபால் said...

    மிக்ஸரையும், கார்ட்டூனையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! கமர்கட் செய்முறையில் எனக்குத் தெரியாத ஒரு புது விஷயத்தைச் சொல்லிருக்கீங்க டீச்சர்! மெனி ஸ்பெஷல் தாங்க்ஸ்!

    ReplyDelete
  26. மிக்ஸர் ரொம்பவே மொறுமொறுப்பாக,சுவையாக இருக்கு.

    ReplyDelete
  27. மொறு மொறு மிக்ஸர் காரம் மணம் குணம் நிரம்ப சுவைபட இருந்தது.கமர்கட் ரெஸிப்பி சூப்பர்.கமர்கட் சாப்பிடத்தான் தெரியும்.தயாரிக்க தெரியாது.ரெஸிப்பி கொடுத்ததற்கு நன்றி.தி நகர் உஸ்மான் சாலையில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் தள்ளு வண்டிகளில் வைத்து பளபளக்கும் கமர்கட் விற்பனை அமோகமாக நடக்கும்.அருகே சென்றாலும் தள்ளுவண்டிஅருகே நின்று வாங்கி சாப்பிட கூச்சமாக இருக்கும்.இனி உங்கள் ரெஸிப்பி போல் டிரை பண்ணுகின்றேன்.

    ReplyDelete
  28. @ RAMVI said...

    மிக்ஸரை ரசிச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  29. @ ஸாதிகா said...

    நிஜம்தாம்மா. சிறுபிள்ளைத்தனம்னு சொல்லிடுவாங்களோன்னு நிறையப் பேருக்கு கூச்சமாத்தான் இருக்கும். இதுல உள்ளதுபடி டெஸ்ட் செஞ்சு பாத்தேன். சரியா வந்தது. செஞ்சு பார்த்தா ஸாதிகா வீட்லயும் சரியா வரும்னு நம்பறேன். நன்றி!

    ReplyDelete
  30. ஹய்யூ...
    ஹய்யா......
    ஹய்யாய்யோஒ......

    கமர்கட்டு ...

    """ உன்பேரை சொல்லும்போதே
    உள்நெஞ்சு கொண்டாடும்"""

    இந்த பெயரை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு

    கிடைத்த காசில் கமர்கட்டும்.. கல்கோனாவும் வாங்கி தின்று
    பொழுதைக் கழித்த நாட்கள் கண்முன் நிழலாடுது
    நண்பரே.


    மிக்செர் சும்மா மொறுமொறுப்பா சுவையா இருக்கு..

    ReplyDelete
  31. @ மகேந்திரன் said...

    இவ்வளவுக்கு உங்களை ப்ளாஷ்பேக்குக்கு என் பதிவு அழைத்துச் சென்றதில் எனக்கு மகிழ்ச்சி. தங்களின் பாராட்டுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  32. நானும் நீங்கள் சொல்லிய TEN தான் நினைத்தேன்,ஆனால் அதிலும் ஒரு சந்தேகம் வந்தது.E,N ல் 3 கோடுகள் உள்ளது.T ல் ரெண்டு கோடுகள்தானே உள்ளது.அல்லது T யின் மேல்புறத்தில் உள்ள - இந்தக் கோடு இரு பிரிவாக உள்ளதோ,ஓவரா யோசிச்சு தொதப்புரேனா?

    மிக்சர் மொறுமொறுப்பாகவே உள்ளது.

    ReplyDelete
  33. @ thirumathi bs sridhar said...

    நீங்கதான் குழம்பிட்டீங்க. E என்ற எழுத்தில் நான்கு கோடுகள் (மூன்று இணைகோடுகளை இணைக்கும் நெடுக்குக் கோடு நான்காவது), Nல் மூன்று கோடுகள், Tயில் ரெண்டே கோடுகள் ஆக மொத்தம் ஒன்பது கோடுகள் தானே. மிக்சரை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  34. இன்னும் கொஞ்சல் காரம் சேருங்க சார்

    ReplyDelete
  35. X| - | = Xனு சொல்வீங்களோனு பயந்துகிட்டே இருந்தேன், நல்ல வேளை.
    கருணாநிதி டிபோ கவர்கிறது.
    அடுத்து ஜவ் மிட்டாய், தேன் மிட்டாய் போன்ற லாகிரிகளையும் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (உடனே தொடப்பத்தைக் கொடுக்க வேண்டாம்.. அதை ஏற்கனவே பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் செய்துவிட்டார்)

    ReplyDelete
  36. @ ரஹீம் கஸாலி said...

    கண்டிப்பா அடுத்ததுல காரம் இன்னும் சேர்த்துடறேன் தம்பி. தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி!

    ReplyDelete
  37. @ அப்பாதுரை said...

    அடடே... நீங்க சொன்னப்புறம்தான் இந்தப் புதிருக்கு இப்படி ஒரு ஆங்கிளும் இருக்கறது தெரியுது. சூப்பர் ஸார்! தேன் மிட்டாய்! சின்ன வயசில நான் விரும்பிச் சாப்பிட்டது. அதோட ரெஸிபியை நான் தேடிட்டுத்தான் இருக்கேன். கெடைச்சா கண்டிப்பா உங்களுக்குச் சொல்லாமலா? உங்கள் கருத்துக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  38. குருவின் குருவே! (நீங்க மட்டும்தான் சொல்வீங்களா, நாங்களும்தான் சொல்வோம்! :))
    உங்க வதந்தீ கதை நல்லா இருக்கு! :) அட காக்காவே! இது நிஜமாவேதானா! இல்லை கேமரா ட்ரிக் எதாவதா?
    கமர்கட் சாப்பிட்டதில்லை. பல்லுல எல்லாம் ஈழிக்கும்னு எப்பவுமே பிடிக்காது. தேன் மிட்டாய், பொட்டி கடைல எதாவது அம்மா வாங்கிண்டு வர சொன்னா, மீதி ரெண்டு பைசா, மூணு பைசான்னு இருந்தா அதுக்கு தேன் மிட்டாய்தான். அவ்ளோ பிடிக்கும்.
    பழைய கால எம்.ஜீ.ஆர் ரொம்பவே handsome!
    உங்க நண்பன் கார்டூன்ல கலக்கறாரு. இதுவும் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  39. அப்பாதுரை, நீங்கள் கணித புலிதான்! கணேஷ் சொன்ன விடையை யூகிக்க முடிந்தது. நீங்க சொன்ன விடை ம்ம்மம்ஹ்ம்ம்... நிச்சயமா சான்சே இல்லை என் மர மண்டைக்கு. :)

    ReplyDelete
  40. வணக்கம்! பிளாஸ்டிக் பைகளில் போட்டு ஸ்வீட் ஸ்டால்களில் விற்கப்படும் மிக்சரைவிட நியூஸ் பேப்பரில் பொட்டலம் கட்டி தள்ளுவண்டி சரக்கு மாஸ்டர் தரும் மிக்சர் காரமாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும். உங்கள் மிக்சர் நல்ல மொறுமொறுப்பு. கமர்கட் வாசம் பள்ளிக்கூட நினைவுகளை உண்டாக்குகின்றன.

    ReplyDelete
  41. @ மீனாக்ஷி said...

    குருவின் குரு! ஹாஹ்ஹா... அசத்திட்டீங்க போங்க... ‘வதந்தீ’ கதை இல்லயே மேடம்! என்கிட்ட இருந்த அப்பாவித்தனம்ல அது! அந்தக் காக்கா... நானும் ஃபோட்டோஷாப் ட்ரிக்கா இருக்குமோன்னுதான் டவுட் பட்டேன். ஆனா ஒரு அதிர்ச்சி குடுத்தது. அதான் வெச்சேன். தேன் மிட்டாய் விரும்பாத குழந்தைகளே கிடையாதுன்னு தோணுது, இல்ல... நண்பர் ஆரோக்கியதாஸ் கிட்ட உங்க பாராட்டைச் சொல்லிடறேன். அப்பா ஸாரை எண்ணி நானும் வியக்கிறேன்! உங்களின் உற்சாகமூட்டும் விமர்சனத்துக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  42. @ தி.தமிழ் இளங்கோ said...

    வாங்க நண்பரே... பள்ளி நினைவுகளை உங்களுக்கு உண்டாக்கியதிலும், மிக்ஸர் சுவையா இருக்கு என்று நீங்கள் சொல்லியதிலும் எனக்கு கொள்ளை மகிழ்‌ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  43. மொறுமொறுப்பான ‘மிக்ஸரை’ தந்தற்கு நன்றி. மிக்ஸரில் இருக்கின்ற சுவைபோல ஒவ்வொரு துணுக்கும் சுவையாக இருந்தது. திரு ஆரோக்கியதாஸின் கார்ட்டூன் அருமை.

    ReplyDelete
  44. பத்துக் கோடு புதிர் மிகவும் அருமை!

    யூகிப்பது கடியது!
    மிக்சர் பிடித்தது சுவையும் நன்றே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  45. @ வே.நடனசபாபதி said...

    தாங்கள் மிக்ஸரின் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்ததற்கும், தாஸின் கார்ட்டூனைப் பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  46. @ புலவர் சா இராமாநுசம் said...

    புதிரை ரசித்து, மிக்ஸரையும் பாராட்டிய தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றி!

    ReplyDelete
  47. கம்மர்கட், இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன்...

    மிக்சர் சுவையா காரம் கம்மியா இருக்கு...

    ReplyDelete
  48. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

    தங்கள் வருகைக்‌கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி நண்பா!

    ReplyDelete
  49. மிக்சர் நல்லா மொறுமொறு
    கம்பூட்டர் இரண்டு நாட்களாக மக்கர் செய்ததால்
    உடன் பின்னூட்டமிட முடியவில்லை
    தொடர வாழ்த்துக்கள்
    tha.ma 10

    ReplyDelete
  50. @ Ramani said...

    தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் ஸார்1

    ReplyDelete
  51. பெரிய எழுத்தாளரே பாராட்டிட்டார்னா அப்புறம் நான் வேற சொல்லணூமா? வாழ்த்துகள்!
    மிகசர் நல்ல மொறு மொறு ஆனா கமர்கட்டைக்கொண்டுவந்து இணையப்புகழ்பெற்ற என் மைசூர்பாக் என்கிற மைபாவை இப்படிப்பின்னுக்குத்தள்ளிட்டீங்களே தம்பி?:) காக்கா கண்ணுக்கு மைகொண்டுவா தான் தெரியும் இது என்னவோ கொண்டுவருதே?:):) எம் ஜி ஆர் தினத்தில் அவர் பத்தின செய்தியும் அருமை... கலக்குங்க கணேஷ்!(2நாள் ஸ்ரீரங்கம்போய்விட்டேன் அரங்கனைக்காண! அதான் பதிவுக்கு பதில் எழுத தாமதம் இல்லேன்னா மட்டும்....என்கிறீர்களா?:)

    ReplyDelete
  52. என்ன மக்களே... இந்த வாட்டி மிக்ஸர் மொறுமொறுன்னு இருந்துச்சான்னு கொஞ்சம் சொல்லிப்புட்டுப் போறது.
    >>>
    மிக்ஸர் செம காரமாவும் இருந்துச்சுண்ணா

    ReplyDelete
  53. நான் 9 கோடுகள் இணைச்சு பத்தாக்கிட்டேனே(உங்க விடையை பார்த்து).

    ReplyDelete
  54. கம்மர்கட்டுடன் மிக்சர் சாப்பிட்டேன்..நல்லாயிருக்கு...

    ReplyDelete
  55. @ ஷைலஜா said...

    யார் பாராட்டினாலும் நீஙகளும் சொல்லணும்; அது எனக்கு வைரத்தின் மதிப்புக்கா! மிக்ஸரின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்துப் பாராட்டியதற்கு என் இதய நன்றி! ஜனவரியில ஸ்ரீரங்க ரங்கநாதரைப் பார்க்கப் போயிட்டிங்க. (ரங்கநாதரின் தரிசனம் நன்றாகக் கிடைத்ததா?) பிப்ரவரியில செனனை ரங்கநாத தரிசனத்துக்கு அவசியம் நீங்க வரணும்கறது என் அனபுக் கட்டளை. (புரியுதுதானே!)

    ReplyDelete
  56. @ ராஜி said...

    மிக்ஸரை ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு நன்றி!

    ReplyDelete
  57. @ veedu said...

    நீங்கள் ரசித்துச் சாப்பிட்டதற்கு (படித்ததற்கு) என் மனமார்ந்த நன்றிகள் சுரேஷ்!

    ReplyDelete
  58. யார் பாராட்டினாலும் நீஙகளும் சொல்லணும்; அது எனக்கு வைரத்தின் மதிப்புக்கா! மிக்ஸரின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்துப் பாராட்டியதற்கு என் இதய நன்றி! ஜனவரியில ஸ்ரீரங்க ரங்கநாதரைப் பார்க்கப் போயிட்டிங்க. (ரங்கநாதரின் தரிசனம் நன்றாகக் கிடைத்ததா?) பிப்ரவரியில செனனை ரங்கநாத தரிசனத்துக்கு அவசியம் நீங்க வரணும்கறது என் அனபுக் கட்டளை. (புரியுதுதானே!)





    MM<<<<
    நன்றி கணேஷ். வைரமாக்கிட்டீங்க என்னை!அதுக்காககவே ஜொலிச்சாகவேண்டும்!! உறவினர் வீட்டுக்கல்யாணம் அதுக்கு ஸ்ரீரங்கம்போனதில் அரங்கனை தரிசித்தேன். அரங்கனைப்பார்த்துவிட்டு வெள்ளைகோபுரம் வாசலில் நின்று அந்தவீரப்பெண்மணி வெள்ளையம்மாவை மானசீகமாய் நினைத்து கைகுவிப்பது வழக்கம். தெரியுமல்லவா அந்த கோபுரத்தின் பினன்ணியில் ஒரு தியாகக்காவியமே அடங்கி இருக்கிறது என்பது?

    ReplyDelete
  59. //பிப்ரவரியில செனனை ரங்கநாத தரிசனத்துக்கு அவசியம் நீங்க வரணும்கறது என் அனபுக் கட்டளை. (புரியுதுதானே!)
    ///


    sorry முந்தின மடல்ல இதுக்கு பதில் எழுத மறந்தேன். அன்புக்கட்டளையை சிரமேற்று வருவேன் அரங்கன் அதற்கு தடை செய்யாமல் அருள்வான் !

    ReplyDelete
  60. @ ஷைலஜா said...

    கண்டிப்பாய் நீங்கள் வருவதற்கு அரங்கன் அருள்வான்! ஸ்ரீரங்க கோபுரத்தின் பின்னணிக் கதை நான் கல்லாத கடலளவில் ஒன்று. உங்களிடம் ‌பின்னர் மின்மடல் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். நன்றி!

    ReplyDelete
  61. எல்லா சுவையும் நல்லா இருந்ததே.

    ReplyDelete
  62. @ Shakthiprabha said...

    என் நண்பர்கள்ல நீங்க மட்டும் இதைப் பாக்கலையேங்கற குறை இருந்தது. இப்ப மனம் திருப்தியாச்சு. மிக்ஸரை நீங்க ரசிச்சதுல மிக்க மகிழ்ச்சி + என் இதய நன்றி!

    ReplyDelete
  63. வதந்தி படித்ததும் எனக்கு ஷைலஜா அக்காவின் மெய் மறந்த காதல் கதை தான் நினைவுக்கு வந்தது.

    அந்த விளம்பரத்துல இருக்க விலாசத்த பாருங்க. இப்போ தெளிவா விலாசம் இருந்தாலே சென்னைல கண்டுபிடிக்கிறது சிரமமா இருக்கு.

    கமர்கட், மிக்சர்... டிபன் சாப்டா மாதிரி இருக்கு.

    ReplyDelete
  64. @ ரசிகன் said...

    ஷைல்லஜ்ஜாக்காவின் அந்த்த்தக் கதை தானே? எனக்க்கும் ரொம்ப்ப்பவே பிடிச்சது அது. அந்தக் காலத்துல இவ்வளவு விலாசம் கொடுத்தாலே வழிகாட்டற அளவுக்கு மக்கள் மனமும், மக்கள் தொகையும் இருந்திருக்கு. இப்ப... ஹும்! உங்கள் ரசனைக்கு ஒரு சல்யூட் + என் இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  65. மிக்சர் மொறு மொறுப்பா சுவையா இருந்தது

    ReplyDelete
  66. @ சமுத்ரா said...

    தங்களின் பாராட்டு தெம்பூட்டுகிறது. என் மனமார்ந்த நன்றி ஸார்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube