Sunday, January 29, 2012

மொறுமொறு மிக்ஸர் - 2

Posted by பால கணேஷ் Sunday, January 29, 2012
முன்குறிப்பு : இந்தப் பதிவின் நடுவில் பெண்கள் படிக்கக் கூடாத ஒரு ஜோக்கை வெளியிட்டிருக்கிறேன். தங்கைகள், அக்காக்கள், தோழிகள் எல்லாருக்கும் அதைப் படித்தால் கோபம் வரும் என்பதால் தாண்டிச் சென்றுவிடும்படி வேண்டுகிறேன்.

================================================

ராஜுவும் லதாவும் விரித்து வைக்கப்பட்ட ஒரு செய்தித்தாளின் இரு முனைகளில் நிற்கிறார்கள். ராஜு கை நீட்டினால் லதாவைத் தொட முடியவில்லை. லதா தன் கையை நீட்டி ராஜுவைத் தொட முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? யோசியுங்கள்... பிறகு ‌சொல்கிறேன்.

================================================

சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒருசில தெருக்களுக்கு மட்டும் ஒரு தனிப் பெயர் உண்டு. கேட்டால் குபீர் என்று சிரிக்கத் தோன்றும். அப்பகுதியின் பெயர் கொலைகாரன்பேட்டை! நான் பார்த்த வரையில் அந்தப் பகுதியில் கொலை காரர்கள் யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை; சாதாரண ஜனங்கள்தான் இருக்கிறார்கள். எதனால் இப்படி ஒரு வினோதப் பெயர் வந்திருக்கக் கூடும்..? பல இடங்களுக்கு எதனால் இப்படிப் பெயர் வந்தது? எப்படி மருவியது என்றே கண்டுபிடிக்க இயலவில்லை. இல்லையா...!

==============================================

ண்டனில் வெஸ்ட் எண்ட் தியேட்டரில் நிர்வாணக் காட்சிகள் நிறைந்த ‘ஓ கல்கட்டா!’ நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடக நிர்வாகிகளுக்குப் புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. நாடகக் கொட்டகையில் சரியான முறையில் கதகதப்பு ஏற்படுத்தும் சாதனம் நிறுவ்பப்டாவிடில், நடிகர்கள் அத்தனை‌ பேரும் உடையணிந்து மேடை மீது தோன்றப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்கள்!
-25.12.1970 தினமணிகதிரில் வெளிவந்த துணுக்கு!

================================================

து விளமபர நேரம். 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு விளம்பரம் இது:

================================================

ப்போது ‘பெண்கள் படிக்‌கக் கூடாத’ அந்த ஜோக்:

டாக்டர் தன் முன்னால் வந்து அமர்ந்த அந்த இளைஞனை ஏறிட்டார். ‘‘சொல்லுப்பா... என்ன உன்னோட பிரச்சனை?’’

இளைஞன் சொன்னான்: ‘‘டாக்டர்! எனக்கு நூறு வயசு வரைக்கும் வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க...’’

டாக்டரின் பதில்: ‘‘உடனே கல்யாணம் பண்ணிக்கோ...’’

இளைஞன் முகம் மலர்ந்தவனாய், ‘‘கல்யாணம் பண்ணிக்கிட்டா நூறு வயசு வரைக்கும் வாழலாமா டாக்டர்?’’ என்று கேட்க, டாக்டர் சிரிப்புடன் பதிலிறுத்தார், ‘‘இல்லை! இந்த மாதிரி நூறு வயசு வரைக்கும் வாழணுங்கற அபத்தமான ஆசை எல்லாம் வராது!’’ என்று.

‘பெண்கள் படிக்கக் கூடாத ஜோக்’ என்றதும் நான் ஏதோ 18+ ஜோக்கைப் போட்டிருப்பேன் என்று நினைத்து வேகமாகத் தாண்டி வந்தவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்ளுங்கள்! ஹி... ஹி...

==================================================

சுஜாதா! பன்முக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான இவரது படைப்புகளைப் படிக்கும் போதெல்லாம் மனதினுள் ஒரு பிரமிப்பு எழும். தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய ‘நில் கவனி தாக்கு’ தொடர்கதைக்கு அதன் ஆறாவது வாரத்தில் இப்படி முன்கதைச் சுருக்கம் கொடுத்திருக்கிறார்:

இதுவரை : இந்த முன்கதை உங்களுக்குப் புரியாது. பேசாமல் சென்ற ஐந்து இதழ்களைப் படித்து விடுங்கள்! நான் தாக்கப்பட்டேன். முதலில் அந்தப் பெண்ணின் கண்களால். பின்பு சில பெயர் தெரியாத ரெளடிகளால். ஒரு விஞ்ஞானியை இழந்தேன். நடேசன் என்னைத் திட்டாமல் விடுவாரா? டெலிபோன் கால் ஒன்றில் ஐம்பது லட்சம் கேட்டார்கள். ‘கால்’ எங்கிருந்து வந்தது என்ற கண்டுபிடித்து அங்கே சென்றால், இந்த வெரோனிக்கா... சே சே, நான் பார்க்கவே இல்லையே! கடமையே கண்ணாக இருந்தேன்.

-எப்பூடி! ரத்தினச் சுருக்கம் என்பதற்கும் மேலாக பிளாட்டினச் சுருக்கமாக இப்படி முன்கதையைத் தர இந்த ஜாம்பவானால் மட்டும்தான் முடியும்! இதே நாவலில் ஒரு காபரே நடனம் நடப்பதை கதாநாயகன் பார்க்கிறான். அதை இப்படி விவரிக்கிறார்:

‘தம்’ என்று ஏதோ அதிர்ந்தது. ‘‘பத்து’’ என்று வழுக்கையின் குரல் ஒலித்தது. வெரோனிக்கா தன் இடது கை வளையல்களைக் கழற்றி விசிறி எறிந்தாள். மீண்டும் லயம். மீண்டும் சுழற்சி. மீண்டும் சிரிப்பு. மீண்டும் ‘தம்’. ‘‘ஒன்பது’’ என்றான் வழுக்கை. வெரோனிக்கா தன் முத்து மாலையைக் கழற்றினாள். மீண்டும் சுழற்சி. மீண்டும் ‘தம்’. ‘‘எட்டு’’ காது வளையங்கள் கழன்றன... ‘தம்’. ‘‘ஏழு’’ கார்டிகனின் ZZZப்! ‘‘ஆறு!’’ ஸ்கர்ட் உதிர்ந்தது. அவள் காஃபி நிற உடல் நீச்சல் உடையில் பளபளத்தது.

‘‘ஐந்து’’

இரண்டு நட்சத்திரங்கள், பூ

‘‘நான்கு’’

ஒரு பூ
ரு பூ
பூ


|

-இப்படி வார்த்தைகளிலேயே படம் பிடித்துக் காட்டும் வித்தை... No chance except One and only Sujatha!

==================================================

புதிரின் விடை மிகவும் ஸிம்பிளானது. ஒரு அறையில் கதவு மூடப்பட்டிருக்க, கதவிடுக்கில் நியூஸ் பேப்பர் நுழைக்கப்பட்டிருக்கிறது. இந்த முனையில் ராஜுவும் அந்த முனையில் லதாவும் இருந்தாலும் கதவு மூடியிருப்பதால் ஒருவரை ஒருவர் தொட இயலவில்லை. அவ்ளவ் தாங்க... ஹி... ஹி...

==================================================

இப்போது... To end with a smile, 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு ஜோக்!

==================================================
-சுஜாதா 1970லிருந்து 1976 வரையிலான காலகட்டத்தில் தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய தொடர்களை பைண்ட் செய்து வைத்திருந்ததை புரட்டிக் கொண்டிருந்ததில் இத்தனை மேட்டர்களும் தேறின. நல்லாருக்கா..?

61 comments:

  1. பழைய தினமணிக் கதிரில் தங்களுக்கு பிடித்த துணுக்குகளை எங்களுக்கும் பகிர்ந்தது மகிழ்ச்சி..சுஜாதாவுக்கு ஈடு இணை யாரும் இல்லை.அவர் இன்னும் எழுத்துக்களாய் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்..தொடர்ந்து காலம் கடந்த,நாங்கள் காணாத பத்திரிக்கை துணுக்குகளை எங்களுக்காக பகிர்ந்து வருகிறீர்கள் பாராட்ட வேண்டிய விசயம்..தொடருங்கள்..

    ReplyDelete
  2. நான் ஏமாறலை...கணேஷ் சார் பதிவுல அதெல்லாம் இருக்காது என்று பட்சி சொல்லுச்சுங்க...
    அந்த வீட்டு சினிமா மிசின்ல ஊமை படம் பார்த்திருக்கிறேன்....எங்க தாத்தா வாங்கியது...கூடவே பலே பாண்டியா ரீல் கொடுத்திருந்தாங்க அதை பலவருசம் ஒரே படத்தையே ஓட்டிஓட்டி கடுப்பேத்தினார்....

    ReplyDelete
  3. மொரு மொறு மிக்சர் 2-வும் நல்ல ருசிதான். பைண்ட் செய்த புக்லேந்து இவ்வளவு தான் கிடைச்சதா?

    ReplyDelete
  4. மிக்சர் ரொம்பவே முறுமுறுப்பாக இருக்கு.

    கொலைகாரன்பேட்டையில் பைலட் திரைஅரங்கில் நான் சிறு வயதில் சினிமா பார்த்திருக்கிறேன்.அந்த திரை அரங்கம் இன்னும் இருக்கா??

    சுஜாதா அவர்களின் எழுத்து பற்றிய சுவாரசியமான தகவல்கள். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. சென்னை வந்தால் எங்கே தங்குவது என்ற சிக்கல் இல்லை.

    ReplyDelete
  6. டெம்ப்ளேட் மாற்றி விட்டீர்கள்!
    புதிர் பற்றி ரொம்ப யோசிக்கவில்லை. கடைசியில் நீங்களே சொல்லி விடுவீர்கள் என்று தெரியும்!
    மொத்தத்தில் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  7. நல்லாவே இருக்கு
    தாங்கள்படித்து ரசித்தவைகளை
    நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. @ மதுமதி said...

    கவிஞரே... தங்களுக்கு இது பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. அவ்வப்போது தொடர்கிறேன். என் கருத்தும் சுஜாதா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான். முதல் வருகையாய் தாங்கள் என்னை உற்சாகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  9. @ veedu said...

    ஹேய்... சுரேஷ்! என் மேல இவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கற உங்களுக்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ்! நீங்க ஏமாறலைங்கறதுல எனக்கும் சந்தோஷம்! அந்த மூவி மெஷின்கூட ஒரு திரைப்படம் ஃப்ரீயாத் தருவாங்கன்ற தகவலை நான் இதைப் போட்டதால தெரிஞ்சுக்க முடிஞ்சது உங்கட்டருந்து. உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  10. @ Lakshmi said...

    மிக்ஸரை ரசிச்சதுல மிகமிக சந்தோஷம். இன்னும் நிறையக் கிடைச்சிருக்கும்மா. ஒரே பதிவுல போட்டுட்டா எப்படி? ‌அதனால அடுத்த பகிர்வுக்கு எடுத்து வெச்சிருக்கேன். தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  11. @ RAMVI said...

    ராம்வி ஸார்... இப்பவும் அந்த தியேட்டர் இயங்கிட்டுதான் இருக்கு. சென்னை வந்தால் பாக்கலாம்! தாங்கள் ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  12. @ யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

    வாங்க ஞானேந்திரன்! நலம்தானே... தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  13. @ அப்பாதுரை said...

    ஹஹ்ஹா... சரியாச் சொன்னீங்க. நீங்க கவலைப்படாம சென்னைக்கு வரலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  14. @ ஸ்ரீராம். said...

    பழைய டெம்ப்ளேட்டில் ஏதோ பிரச்சனை! என் நண்பர்களான நீங்களனைவரும் இடும் கமெண்ட்கள் ஒரு வரியின்மேல் ஒரு வரி ஏறி படிக்க கஷ்டப்படுத்தியது. அதனால் ‘ஸிம்பிள்’ ஃபார்மெட்டுக்கு மாறிட்டேன். அடடா... இப்படி ஒரு விஷயம் இருக்கா? இனிமே புதிரின் விடைய அதுக்கடுத்த பதிவுல சொல்லிட்டாப் போச்சு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  15. @ Ramani said...

    தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஸார்! இதேபோல சுவாரஸ்யம் குன்றாமல் இனியும் தொடர்ந்து தர முயல்கிறேன்!

    ReplyDelete
  16. 18+ , பட ஜோக் சிரிக்க வைத்தது.

    கிரிஸ்பி மிக்ஸ்ர் தான்.

    ReplyDelete
  17. @ ஸ்ரவாணி said...

    நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றிகள்!

    ReplyDelete
  18. பகிர்வு அருமை:)! சினிமா மெஷின் எங்கள் வீட்டில் இருந்தது. சினிமா படம் காட்ட அல்ல. அப்போதைய குடும்ப விழா வீடியோக்களை இப்படியான ரீல்களில் மூவி படமென காட்டுவார்கள்.

    ReplyDelete
  19. எல்லாமே கலக்கல்! ரொம்ப சுவாரசியமா இருந்துது. ஸ்ரீராம் சொன்ன மாதிரி புதிருக்கான விடையை நீங்களே சொல்லி விடுவதால், நான் வீணா மண்டையை உடைசுக்கறதில்லை. இருக்கற கொஞ்ச நஞ்ச மூளையும் தேஞ்சு போய்ட போறதேன்னு ஒரு பயம்தான். :)

    ReplyDelete
  20. @ ராமலக்ஷ்மி said...

    ஓ! இதன் பயன் சினிமா பார்க்க மட்டுமேயானது என்றுதான் எண்ணியிருந்தேன். புதிய விஷயம் ஒன்று உங்களால் தெரிந்தது. உங்கள் வருகைக்கும் நற் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  21. @ மீனாக்ஷி said...

    கொஞ்சம் கஷ்டமான புதிராக் கொடுத்து அடுத்த பகுதில விடை தந்துரலாமா? (கோடுகளை இணைக்கச் சொன்ன உங்கள் ப்ளாக் புதிரை சுலபமா விடுவிச்ச உங்களுக்கா மூளை தேயும் -நான் சொல்ல வேண்டிய வசனத்தை நீங்க சொன்னா எப்பூடி குருவே?) எல்லாம் கலக்கல்ன்னு சொல்லி உற்சாகப்படுத்தினதுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  22. மொறுமொறு மிக்ஸர் ரொம்பவே சுவையா இருக்கு கணேஷ் சார். எல்லா பகுதிகளும் அருமை. வீட்டு சினிமா மெஷின், பாம்பு கார்ட்டூன் எல்லாம் அருமை. என்னிடமும் முன்பு இப்படி கலெக்சனெல்லாம் இருந்துச்சு. இப்போ இல்ல. அதான் நீங்க இருக்கீங்களே. அப்புறம் சுஜாதா எப்பவுமே ஜாம்பவான்தான். அதில் சந்தேகமில்லே. முதல் பகுதியை தவறவிட்டு விட்டேன். இருங்க. அதையும் படிச்சுடறேன். நல்லாருக்கு. தொடருங்கள்.

    தம 8.

    ReplyDelete
  23. கணேஷண்ணா பதிவில் இப்படியா என்று அவநம்பிக்கையோடும் அதிர்ச்சியோடும் படித்தேன்.கிரேட்...என் நம்பிக்கை வீண்போகவில்லை.

    ReplyDelete
  24. @ துரைடேனியல் said...

    ரசித்துப் படித்து கருத்திட்டதற்கு என் மனமார்ந்த நன்றி துரை!

    ReplyDelete
  25. ஸாதிகா said...

    சும்மா... விளையாட்டுக்கு பயங் காட்டினேன். பெண்களை மதிக்கிற நானா அப்படில்லாம் மேட்டர் போடுவேன்? என்மீது நம்பிக்கை வைத்த தங்கைக்கு மனமகிழ்வுடன் நன்றி!

    ReplyDelete
  26. புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு சார்! மிக்ஸர் - 2 அருமை ! (எல்லா மேட்டர்களும்) நன்றி சார் !

    ReplyDelete
  27. அருமை அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. வார்த்தைகளால் நிகழ்வை கண்முன் நிறுத்தும் கலை அவருக்கே உரித்தானது.

    ReplyDelete
  29. சுவாரசியமாக இருந்துதுங்க... நன்றி...

    ReplyDelete
  30. பிரதிபா ராஜகோபாலன் எழுதிய மூன்றாவது கண் வாசித்திருக்கிறீர்களா நண்பரே..அந்த நூல் உங்களிடம் உள்ளதா?

    ReplyDelete
  31. @ திண்டுக்கல் தனபாலன் said...

    வருக நண்பரே! ‌எல்லாப் பகுதிகளையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  32. @ dhanasekaran .S said...

    மிக ரசித்தீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகளால் புரிய வைத்து விட்டீர்கள் தனசேகரன்! உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  33. @ கோகுல் said...

    ஆமாம் கோகுல்! எழுத்தாளர்களில் அவர் ஒரு LEGEND! என்னுள் பிரமிப்பை எப்போதும் ஏற்படுத்தியவர். உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி + என் மனமார்ந்த நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  34. @ மரு.சுந்தர பாண்டியன் said...

    சுவாரசியமாக இருந்தது என்று சொல்லி உற்சாகமூட்டிய தங்களுக்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்? மிகமிக மகிழ்வுடன் என் நன்றி!

    ReplyDelete
  35. @ மணிஜி...... said...

    வாங்க மணிஜி! நலம்தானே! அந்த நூலைப் படித்திருக்கிறேன். என்னிடம் இருப்பதாக நினைவு. (உறுதியாகக் கூற இயலவில்லை) வீட்டில் தேடிப் பார்த்துவிட்டு பிப்.1ல் வெளியிடும் பதிவில் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். (படிக்கப் பிடிக்குமெனில் மகிழ்வுடன் தங்களுக்கு அளிக்கிறேன்) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  36. பத்திரிகையை ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துவிட்டு ஒரு பக்கத்தில் ஒருவரும் மறுபக்கத்தில் ஒருவருமாகத் தூரமாக நிற்பார்களோ என்று நினைத்தேன் !

    பெண்கள் வாசிக்கூடாது என்று சொன்னதற்காகவே தைரியமாக வாசித்தேன்.அப்படி என்ன எழுதிவிட உங்களிடம் தைரியமிருக்கும் !

    வீட்டு சினிமா மெஷின்...இபிடி ஏதோ இருக்கா !

    பா...ம்...பு !

    எல்லாமே சூப்பர் மொறு மொறு !

    ReplyDelete
  37. மொறுமொறு மிக்ஸர் ரொம்பவே சுவையா இருக்கு கணேஷ் சார்...

    18 +/- 6 ...ஹி... ஹி...
    -:)

    ReplyDelete
  38. @ ஹேமா said...

    தைரியமாப் படிச்சீங்களா... ஹாஹா... இந்த விஷயத்தல வேற மாதிரி ஜோக் போட எனக்கு தைரியம் கிடையாதுங்கறதுல நான் மகிழ்ச்சி அடையறேன். வீட்டு சினிமா மெஷின் ஒரு காலத்துல இருந்தது. உள்ள பல்பு ஒண்ணு இருக்கும். முக்கா மணி நேரத்துக்கு மேல பாக்க முடியாது. சூடாயிடும். கொஞ்ச நேரம் விட்டு மறுபடி போட்டுப் பாக்கணும். இப்படிப் பல தொல்லைங்க இருந்தாலும், அதுல பாக்க சந்தோஷமாத்தான் இருந்தது ஒரு காலத்துல! மிக்ஸரை ரசிச்சுப் பாராட்டினதுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  39. @ ரெவெரி said...

    ரசிச்சுப் படிச்சு, பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  40. கணேஷ், 'கோடு போடுங்கள்' விடை சொன்னது வெறும் லாஜிக்தான். ஸ்கூல் படிக்கும்போது கை எடுக்காம ஸ்டார் போடறது எப்படின்னு கத்துண்டப்போ தெரிஞ்சுண்ட லாஜிக்தான் இதுக்கு உபயோகமாச்சு. ரெண்டாவது கோட்டையும், மூணாவது கோட்டையும் புள்ளிக்கு வெளியே வரை நீட்டி பிறகு சேர்த்தால் ரொம்ப ஈஸியா போடலாம். அவ்வளவுதான். இதுல மூளைக்கு வேலையே இல்லை.
    நீங்க கு.கு. ஆயிட்டதால (அதான் குருவின் குரு) உங்ககிட்ட இந்த ரகசியத்தை சொன்னேன். சரியா! :)
    நானாவது என் மூளையை உபயோகிக்கறதாவது!
    (அது கிடையாதுங்கறதால நைசா இப்படி எல்லாம் சொல்லி ஒப்பேத்திக்கறேன். கண்டுக்காதீங்க. :))

    ReplyDelete
  41. வர வர இனிமே வீட்டுல கஷ்டப்பட்டு நான் செய்ற மிக்சர்லாம் எடுபடாதுபோல்ருக்கே கணேஷின் இந்த மிக்சர் முன்னாடி!! அசாத்திய மொறு மொறு! வித்தியாசமாய் கொடுப்பதால் சுவையாக இருக்கு கணேஷ்.

    ReplyDelete
  42. good one Ganesh..//ராஜுவும் லதாவும் விரித்து வைக்கப்பட்ட ஒரு செய்தித்தாளின் இரு முனைகளில் நிற்கிறார்கள்.//நான் இரண்டு பேரும் பேப்பரில் படமாக நிற்கிறார்கள் என்று
    நினைத்தேன்.

    ReplyDelete
  43. மிக்ஸரில் உள்ள அனைத்துமே நமத்துப்போகாமல் ‘மொறு மொறு’ என இருந்தன. அதுவும் சுஜாதா அவர்களின், ‘நில் கவனி தாக்கு’ கதையில் அந்த ‘காபரே’ நடனம் பற்றி அவர் தந்த அந்த முப்பரிமாண விவரிப்பை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  44. @ மீனாக்ஷி said...

    இதை ட்ரை பண்ணிப் பாத்தேன். புரிஞ்சுது. நீங்க சொன்ன மாதிரி ஸிம்பிள் லாஜிக்தான். எனக்குத்தான் சட்னு பிடிபடலை. விளக்கத்துக்கு நன்றிங்க!

    ReplyDelete
  45. @ ஷைலஜா said...

    அட... உங்களுக்கு இவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு தெரிஞ்சப்புறம், அடுத்த மிக்ஸர் பொட்டலத்தை இன்னும் சுவையாக் கட்டணும்னு எனக்குத் தோணிருச்சு. நன்றிக்கா!

    ReplyDelete
  46. @ சமுத்ரா said...

    முதல் வருகைக்கும், முத்தான கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி ஸார்!

    ReplyDelete
  47. @ வே.நடனசபாபதி said...

    ‘முப்பரிமாண விவரிப்பு!’ வார்த்தையே அருமையா இருக்கு ஸார்! உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷம் + என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  48. முறுமுறுப்பாகவே உள்ளது.

    ReplyDelete
  49. கண்டிராத கதிரின் சுவைகளை
    சற்றும் சுவை மாறாமல் எமக்கு
    அளித்தமைக்கு நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
  50. @ thirumathi bs sridhar said...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  51. @ மகேந்திரன் said...

    ரசித்துப் படித்த நண்பர் மகேனுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  52. அண்ணன் பிளாக்குல பெண்கள் படிக்க கூடாத ஜோக்கா? படிச்சுட்டு தலையில ரத்தம் வரும் அளவுக்கு குட்டனும்ன்னு நினைச்சேன். தப்பிச்சுட்டீங்க அண்ணா.

    ReplyDelete
  53. @ ராஜி said...

    நீங்கல்லாம் இருக்கும் போது அப்படிச் செஞ்சிடுவனா என்ன... நல்லவேளை... குட்டு வாங்காம தப்பிச்சேன்டா சாமி!

    ReplyDelete
  54. ஹாமில்டன் வாராவதி,அம்பட்டன் வாராவதி ஆனதுபோல குலசேகரன் பேட்டை கொலைகாரன் பேட்டை ஆகிவிட்டது!
    மற்றவை:
    பூவிருந்தவல்லி=பூனமல்லி
    திருஅல்லிக்கேணி=திருவல்லிக்கேணி

    ReplyDelete
  55. @ Ganpat said...

    அடக்கடவுளே... குலசேகரன் பேட்டை என்கிற அழகான பெயரா இப்படி மருவியிருக்கிறது... வியத்தகு தகவல் தந்து என் ஐயத்தைப் போக்கிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  56. நல்ல மிக்ஸர் போங்க :)))
    நான் புதிருக்கு முதல்லையே விடை கண்டுபுடிச்சுட்டேன்! ஒரே வித்தியயசம் கண்ணாடி கதவு என்று நினைத்தேன். :)

    ReplyDelete
  57. @ Shakthiprabha said...

    கண்ணாடிக் கதவுன்னு நீங்க நினைச்சதும் சரியான விடைதானே... லாட்டரல் திங்கிங்ன்னு இந்த மாதிரிப் புதிரைச் சொல்லுவாங்க. கண்டுபிடிச்சதுக்கு பாராட்டுக்கள் + என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  58. நட்புடன் நக்கீரன். தினமனி கதிர் பைண்டீங் தொடராக பதிவு போடலாமே. பல சுவாரசியைங்கள் கிடைகுமே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆலோசனைப்படி இன்னும் சில பதிவுகள் வெளியிடுகிறேன். நன்றி ஸார்!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube