Monday, October 31, 2011

மேலும் சில வர்ணனைகள்!

Posted by பால கணேஷ் Monday, October 31, 2011
மிழ் நாவல்களில் நான் படித்த, மின்னலெனப் பளிச்சிடும் ‘மின்னல் வரி’களை முன்பு உங்களுக்கு வழங்கியிருந்தேன். இப்போது மீண்டும் ஒருமுறை தமிழின் பிரபல நாவலாசிரியர்களின் வரிகள் உங்கள் முன் மின்னுகின்றன.

தமிழில் புதிய புதிய வார்த்தைகள் கண்டறியப்பட்டு தமிழ் மேன்மேலும் மேம்பட வேண்டும் என்றார் பாரதியார். அப்படி ‌மாறிவரும் தமிழின் புதிய வகைகளில் இது அறிவியல் தமிழ் :

நாம் எல்லோரும் மெல்ல எரிந்து கொண்டி ருக்கிறோம் ஒரு தீ போல. நம் உடலின் பெரும்பாலன மாலிக்யுல் கூட்டணுக்கள் பாதிக்கு மேல் பதினைந்து நாட்களில் புதுப்பிக்கப் படுகின்றன. நம் உடலின் கால்சியம் நான்கு வருடத்தில் பாதிக்கு மேல் புதுசாகிறது. 86 நாட்களில் நம் தசை நார்களிலும் மூளையிலும் உள்ள புரோட்டீன் வஸ்துக்கள் அனைத்தும் தீர்ந்து போகின்றன.

-‘கற்பனைக்கும் அப்பால்’ நூலில் சுஜாதா

Drizzling என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மெலிதான மழையை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம். ஆனால் அதை இவர்போல அழகாக வர்ணிக்க நம்மால் இயலுமா? :

ச்சரியப்படும் விதத்தில் இருந்தது சென்னையின் வானம்! ஊட்டியோடும் ‌கொடைக்கானலோடும் போட்டிக்குத் தயாராகி விட்ட மாதிரி சாரல் மழை..! கள்ளிச் சொட்டு போல பருமனாகவும் இல்லாமல், பசுமடிப் பீறல் போல சன்னமாகவும் இல்லாமல், பார்பர் ஷாப்பில் ஷேவிங் முடித்த பிறகு ஸ்ப்ரே செய்யும் தினுசில் ஆனாலும் மகா மெல்லிசான ஒரு கொசுத் தூறல்!

-‘மனசு’ சிறுகதையில் இந்திரா செளந்தர்ராஜன்

பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்திருந்த சமூகத்தில் அடிமைத் தளையிலிருந்து பெண்கள் வெளிவந்து விட்டாலும் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லையோ என்று எனக்கு சில சமயம் தோன்றுவதுண்டு. அதை இங்கே எழுத்தாளர் எப்படி அழகாகச் சொல்கிறார் பாருங்கள் :

பெண்களின் மீது கற்பென்றும், கெளரவமென்றும் போலியான பல அழுக்குப் போர்வைகள் போர்த்தப் பட்டிருக்கிறது. ‘ஜோதிகா சூப்பர்ல’ என்று ‌சொல்லும் கணவனிடம் ‘சூர்யாகூட அழகு தாங்க’ என்று தன் ரசனையைச் சொல்ல முடியாத அவஸ்தைகள்.

-‘மன ஊஞ்சல்’ நூலில் அனுராதா ரமணன்

யுத்தத்தை யாரும் விரும்புவதில்லை. அப்படி பெரும் யுத்தம் நிகழும் போது மன்னர் காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி... தலைவர்களை விட முன்னால் சென்று போரிடும் சிப்பாய்க்குத்தான் எப்போதுமே பாதிப்பு அதிகம். தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் போர்க்காட்சியை இப்படி விவரிக்கிறார் :
 
ண்டைக்குழல் ஒலிக்கிறது. தூசு, புழுதி, தீக்கல், வாள்கள், துப்பாக்கிக் குண்டு சத்தம், கூச்சல். இன்னும் புழுதி, குழப்பம். கட்டளையிடுவோர் யாரும் இல்லை. படைத் தலைவர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள். ஊர் பேர் அறியாச் சிப்பாய்தான் போவதறியாது நிற்கிறான்.

-‘ஒற்றன்’ நாவலில் அசோகமித்திரன்

‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க. உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வெப்பாங்க’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலைக் கேட்டிருப்பீர்கள். அப்படி பயமுறுத்தப்பட்ட கதாநாயகன் மற்றும் அவன் நண்பர்களின் பார்வையில் பட்ட ‘பிசாசு’ எத்தகையது என்பதை எழுத்தாளர் இப்படி நயம்படச் சொல்கிறார் :

தோ நின்று கொண்டிருக்‌கிறது அந்தப் பிசாசு. தன்னுடைய கருங்கால்களைப் பரப்பிக் கொண்டும், நிழல் போன்ற கைகளைத் தலைக்கு மேலே கூப்பிக் கொண்டும் அது சற்று அசைந்தது. அவனுடைய கண்கள் விழித்தது விழித்தபடியே இருந்தன. பிறகே, பிசாசு வேறொன்றுமல்ல... தடித்த அடிமரங்களும் அவற்றின் உச்சாணிக் கொம்புகளும்தான் அப்படித் தோன்றின என்று அவனுக்குத் தெரிந்தது.

-‘சுவாமியும் சிநேகிதர்களும்’ நாவலில் ஆர்.கே.நாராயண்

அம்பு, ஊசி, தோட்டா இப்படி எந்தக் கூர்மையான பொருளும் எதிர்ப் படுவதை துளைத்துக் கொண்டு ஆபத்தை விளைவிப்பவை. தன் கதாநாயகன் எத்தகைய கூர்மையுள்ளவன் என்பதை தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றின் ஆசிரியர் இவ்வளவு அழகாக வர்ணிக்கிறார் :
 
கூர்மைக்கு மற்றவைகளைத் துளைத்துக் கொண்டு போகும் ஆற்றல் உண்டு. மற்றவைகள் வழிவிடத் தயங்கினாலும் கூர்மை தன் வழியைத் தானே உண்டாக்கிக் கொண்டு முன்செல்லும். அரவிந்தன் நோக்கிலும் நினைப்பிலும் கூர்மையுள்ளவன். அவன் உள்ளத்துக்கும், பண்புகளுக்கும் மற்றவைகளையும் மற்றவர்களையும் உணரும் ஆற்றல் அதிகம்.

-‘குறிஞ்சி மலர்’ நாவலில் நா.பார்த்தசாரதி

ஏழைகள் செய்தால் குற்றமாகப் படும் எதுவும் பணக்காரர்கள் செய்தால் குற்றமாக கருதப்படாது. மேல் தட்டு வர்க்கத்தினரை இப்படி அழகாகப் படம் பிடித்துக் காட்ட எழுத்துலக ஜாம்பவானாகிய இவரால்தான் இயலும்:


ந்த ஜாதியை தனிப்பட அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிவப்பாக கொழு கொழுவென்று இருப்பார்கள் இவர்கள். பெண்கள் மெலிதான கருநீல ஸாரி அணிந்து சோரம் போவார்கள். நளினமான விரல்களின் இடையில் சிகரெட்டு குடிப்பார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு பிங்க்கி, ராகுல், பப்புலு என்று ஏதாவது பேர் இருக்கும். இத்தகைய மனிதர்கள்தான் பெங்களூர் ஜிம்கானாவில் மெம்பராக இருக்க முடியும்.

-‘ஆட்டக்காரன்’ சிறுகதையில் சுஜாதா

என்ன... மின்னிய வரிகளை ரசிச்சீங்களா... இங்க சொல்லிப் போடுங்க...

23 comments:

  1. அருமையான பகிர்வு

    ReplyDelete
  2. மின்னிய வரிகள் ரசிக்கவைத்தன. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. இம்புட்டு புத்தகம் படிக்க எப்படி நேரம் கிடைக்குது? :-)

    அனைத்து வர்ணனைகளும் அட்டகாசம். பெஸ்ட் - இந்திரா சௌந்திரராஜன்.

    ReplyDelete
  4. எல்லா வர்ணனைகளும் சூப்பர்.,

    ReplyDelete
  5. மின்னிய வரிகள் சூப்பர் thanks

    ReplyDelete
  6. இராஜராஜேஸ்வரி said...
    மின்னிய வரிகள் ரசிக்கவைத்தன. பாராட்டுக்கள்..

    -உங்களின் ரசிப்புத் தன்மைக்கு அடியேனின் நன்றிகள்!


    சேட்டைக்காரன் said...
    இம்புட்டு புத்தகம் படிக்க எப்படி நேரம் கிடைக்குது? :-)
    அனைத்து வர்ணனைகளும் அட்டகாசம். பெஸ்ட் - இந்திரா சௌந்திரராஜன்.

    -மனம் இருந்தால் நேரம் கிடைக்கும் சேட்டையண்ணா. என்னுடைய கருத்தும் இந்திராஜி பெஸ்ட் என்பதுதான். சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  7. வேடந்தாங்கல் - கருன் *! said...
    எல்லா வர்ணனைகளும் சூப்பர்.,

    -தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் கருன் சாருக்கு மிக்க நன்றி!

    r.v.saravanan said...
    மின்னிய வரிகள் சூப்பர் thanks

    -சரவணன் சார்! உங்கள் நேரத்தை ஒதுக்கிப் படித்தமைக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். தொடர்ந்து வாருங்கள். நன்றி.

    ReplyDelete
  8. தமிழ் மின்னல்களைக் கண்டு மகிழ்ந்தேன் அன்பரே...

    ReplyDelete
  9. முனைவர்.இரா.குணசீலன் said...
    தமிழ் மின்னல்களைக் கண்டு மகிழ்ந்தேன் அன்பரே...

    -முனைவரையாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. எத்தனை அருமையா சொல்லி இருக்கீங்க இப்படியெல்லாம் வாசகர்கள் கவனித்துப்படிக்கிறார்கள் என்பதில் எழுத்தாளர் மகிழ்ந்துபோவார்களே...இந்திரா சௌந்தர்ராஜனிடம் கண்டிப்பாக சொல்கிறேன் ஏன் என்றால் அவர் என் கசினாக இருப்பதால்..

    ReplyDelete
  11. ஷைலஜா said...

    எத்தனை அருமையா சொல்லி இருக்கீங்க இப்படியெல்லாம் வாசகர்கள் கவனித்துப்படிக்கிறார்கள் என்பதில் எழுத்தாளர் மகிழ்ந்துபோவார்களே...இந்திரா சௌந்தர்ராஜனிடம் கண்டிப்பாக சொல்கிறேன் ஏன் என்றால் அவர் என் கசினாக இருப்பதால்..

    -ஷைலஜாக்கா... முதல் தடவையா என் தளத்துக்கு நீங்க வந்ததில் மகிழ்ச்சி. இந்திராஜி என் நண்பர்தான். நெல்லை கணேஷ் என்று சொன்னால் புரிந்து கொள்வார். என் முந்தைய பதிவுகளில் ஒன்றான ‘அழகன் அருகிருக்கும் பட்டிணம்’ அவர் கைவண்ணம்தான். தங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. இதே மாதிரி ஒரு முயற்ச்சியை எஸ்.ரா ஒரு புத்தகத்தில் செய்திருப்பார்... மன விலாசமா? அருமையாக இருந்தது உங்கள் பதிவும்..

    ReplyDelete
  13. வணக்கம் பாஸ் எனக்கு மிகச்சின்ன வயதிலேயே நாவல்கள் படிக்கும் பழக்கம் இருந்தது இப்ப சில ஆண்டுகளாக கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டது ஆனாலும் எனக்குள் இருக்கும் அந்த நாவல் படிக்கும் வாசகனை நீங்கள் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்....

    தொகுப்புக்கள் அருமை

    ReplyDelete
  14. அருமையான பகிர்வு.நிறைய வாசிப்பீர்கள் போல் தெரிகின்றதே சகோ.வாசித்ததை அவ்வப்பொழுது இப்படி பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  15. படங்களும் இணைத்து இருப்பது சிறப்பு ...நினைத்து நினைத்து ரசிக்க ஒரு தொகுப்பு

    ReplyDelete
  16. suryajeeva said...
    இதே மாதிரி ஒரு முயற்ச்சியை எஸ்.ரா ஒரு புத்தகத்தில் செய்திருப்பார்... மன விலாசமா? அருமையாக இருந்தது உங்கள் பதிவும்..

    -எஸ்.ரா. எங்கே? நானெங்கே? உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சூர்யஜீவா சார்!

    K.s.s.Rajh said...
    வணக்கம் பாஸ் எனக்கு மிகச்சின்ன வயதிலேயே நாவல்கள் படிக்கும் பழக்கம் இருந்தது இப்ப சில ஆண்டுகளாக கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டது ஆனாலும் எனக்குள் இருக்கும் அந்த நாவல் படிக்கும் வாசகனை நீங்கள் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்....
    தொகுப்புக்கள் அருமை.

    -மீண்டும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை புதுப்பித்துக் கொள்ளுங்கள் ராஜா சார். நிறையப் படிப்பவன்தான் நிறைய எழுத முடியும். (சுடுவதைச் சொல்லவில்லை) உங்களின் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  17. Rathnavel said...
    அருமை ஐயா.

    -மிக்க நன்றி ரத்னவேல் சார்!


    ஸாதிகா said...
    அருமையான பகிர்வு.நிறைய வாசிப்பீர்கள் போல் தெரிகின்றதே சகோ.வாசித்ததை அவ்வப்பொழுது இப்படி பகிர்ந்து கொள்ளுங்கள்.

    -முடிந்த போதெல்லாம் நேரத்தை உண்டாக்கி படிக்கும் பழக்கம் கொண்டவன்தான் தங்காய்! நல்ல விஷயங்களை அவசியம் பகிர்ந்து கொள்கிறேன். வருகைக்கு நன்றி!

    பூங்குழலி said...
    படங்களும் இணைத்து இருப்பது சிறப்பு ...நினைத்து நினைத்து ரசிக்க ஒரு தொகுப்பு.

    -அழகான பெயர் தங்களுடையது. நான் எழுதுவது தவிர, முடிந்த போதெல்லாம் நீங்கள் ரசிக்கும் வண்ணம் தொகுப்புகளும் தருகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  18. சி.பி.செந்தில்குமார் said...
    Pagirvuku nanri

    -வலையுலகில் எனக்கு சீனியரான தங்கள் பாராட்டு எப்போதுமே மகிழ்வு தரும் ஒன்று. நன்றி செந்தில்!

    ReplyDelete
  19. நல்ல ரசனை.நல்ல தேர்வு.

    ReplyDelete
  20. நெல்லை கணேஷா?ஒக்கே (இந்திராஜி) அவர்கிட்ட சொல்றேன்...வலைப்பூ அழகா இருக்கு கணேஷ்

    ReplyDelete
  21. சென்னை பித்தன் said...
    நல்ல ரசனை.நல்ல தேர்வு.

    -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்னைப்பித்தன் சார்!

    ஷைலஜா said...
    நெல்லை கணேஷா?ஒக்கே (இந்திராஜி) அவர்கிட்ட சொல்றேன்...வலைப்பூ அழகா இருக்கு கணேஷ்.

    -ஷைலஜாக்கா! என் வலைப்பூ வடிவமைப்பு தங்களைக் கவர்ந்ததில் மிக மகிழ்கிறேன். தாங்கள் என் நண்பரின் உறவினர் என்பதிலும் அகமகிழ்கிறேன். இத்தனை மகிழ்வைத் தந்த உங்களுக்கு நன்றி நவில்கிறேன்...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube