Wednesday, January 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 15

Posted by பால கணேஷ் Wednesday, January 23, 2013

மீபத்தில் புத்தகக் கண்காட்சிக்குப் போகும் வழியில் பல இடங்களில் ‘வைரமுத்துவின் 37 புத்தகங்கள்’ என்று போட்டு ஸ்டால் எண்களைத் தெரிவித்த போஸ்டர்கள் கண்ணில் பட்டன. சிந்தனை முகமாய் புத்தகத்தைப் புரட்டியபடி கவிஞர் ‌வைரமுத்துவின் புகைப்படம் அச்சிட்டிருந்த அந்த போஸ்டர்களில் ‘தமிழின் நிகழ்காலம்’ என்று வைரமுத்துவைப் புகழ்ந்திரு்ந்தார்கள். ‘‘அடாடா... வைரமுத்து ஸார் தமிழின் நிகழ்காலம்னா, ‘அவர்’ கடந்த காலம்னு இவங்களே ஒத்துக்கறாங்களா...?’’ என்று கேட்டது மனஸ். ‘‘தெரியலையேப்பா... தெரியலையே...’’ என்று சிவாஜி குரலில் பதிலளித்தேன் நான்.

=======================================

மீபத்தில் ரசித்த சர்தார்ஜி ஜோக்: ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. திடீரென்று எட்டு சர்தார்ஜிகள் ரயில் வரும் சமயம் பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் மீது ரயில் ஏறிவிட்டது. மற்றவர்களை கைது செய்திருக்கிறார்கள். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை நிருபர், பிளாட்பாரத்தில் குப்புறப் படுத்திருந்த ஒரு சர்தார்ஜியை எழுப்பிக் கேட்டான். ‘‘அவங்க ஏன் தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க?’’

‘‘தற்கொலையா? அதெல்லாம் ஒண்ணுமில்ல... ரயிலுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்ப, அனவுன்ஸ்மென்ட்ல ‘ரயில் முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்’னு சொன்னதும், இவங்க பயந்து போய் பி்ளாட்பாரத்துல இருந்தா ரயில் மோதி செத்துருவோமேன்னு தண்டவாளத்துக்கு பாய்‌ஞ்சுட்டாங்க...’’ என்றார்.

நிருபர் வியப்புடன், ‘‘அவங்க எல்லாம் முட்டாள்களா இருந்தாலும் நீங்க ஒருத்தராவது புத்திசாலியா நடந்துக்கிடடீங்களே...’’ என்றார். சர்தார்ஜி சோகமாக, ‘‘நீங்க வேற ஸார்... நான்தான் உண்மையில தற்கொலை பண்ணிக்க வந்தவன். அனவுன்ஸ்மென்டை கேட்டதும் ரயில் என்மேல ஏறட்டும்னு குப்புறப் படுத்துட்டேன். அந்த பாழாப் போன ரயில் அவுங்க சொன்னபடி பிளாட்பாரத்துல வராம, தண்டவாளத்துல வந்து ஏமாத்திடுச்சு...’’

=======================================

மீப்த்தில் டீக்கடையில் கேட்ட உரையாடல்:

‘‘ஹும்! சேவை வரியை ரத்து செய்யணும்னு கோரி சினிமா உலகத்தைச் சேர்ந்தவங்க உண்ணாவிரதம் இருக்காங்களாம். அவங்க ப்ளாக் மணி வெச்சுக்காம இருந்தாலே அரசாங்கத்துக்கு நிறைய வரி கட்டலாமே...’’

‘‘நானும் அந்த நூஸைப் பட்ச்சேம்ப்பா. ஒரு விஸ்யம் புரில எனுக்கு.,.. அதின்னாது அது சேவை வரி?’’

‘‘அது ஒண்ணுமில்ல தம்பி. படம் பாக்கற நாமல்லாம் கேளிக்கைய அனுபவிக்கறோம்கறது்க்காக டிக்கெட்லயே கேளிக்கை வரி செலுத்தறோம்ல. அதுமாதிரி... அவங்க சேவை வரின்னு ஒண்ணு அரசாங்கத்துக்க கட்டணு்ம். அதை விதிக்கக் கூடாதுன்ற கோரிக்கைகாகத்தான் உண்ணாவிரதம்.’’

‘‘நான் ஒண்ணும் கேளிக்கை வரி கட்டறதில்லையேப்பா...’’

‘‘நீ தனியா கட்ட வேணாம். படம் பாக்கற ஒவ்வொருத்தரையும் தேடிப் பிடிச்சு வரி வசூலிக்க முடியாதுன்னுதான் அரசாங்கம் சினிமா டிக்கெட்லயே அதைச் சேர்த்திருக்கு. டிக்கெட் விற்பனைலருந்து தியேட்டர்காரங்க அதைக் கட்டிருவாங்க...’’

‘‘ஓ... அப்படியா விஸ்யம்? ஆனா ஒண்ணு புரியலப்பா... நாம கேளிக்கைய அனுபவிக்கறோம், அதனால கேளிக்கை வரி செலுத்தணும். அதான் ஞாயம். ஆனா இவங்கதான் யாருக்கும் எந்த சேவையும் செய்யலையே... அப்புறம் இன்னாத்துக்கு இவுங்க மேல சேவை வரி? அதான் நீக்கச் சொல்லிப் போராடறாங்க அல்லாரும். ரொம்பக் கரீக்டுப்பா...’’

=======================================

மீபத்தில் படித்ததில் ரசித்தது:

ந்த விமானத்தில் வந்தவர்களனைவரும் வெளியே போய் விட்டார்கள்- ஒரே ஒருவரைத் தவிர. நாலு கெளண்ட்டர் தள்ளி ராஜீவ்காந்தியின் இரு பெரிய பெட்டிகள், கைப்பைகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்த துணிமணிகள், சாமான்களெல்லாம் வெளியே வாரியிறைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த சோதனை அதிகாரி பெட்டியில் இன்னும் ‘எதையோ’ தேடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேர வதக்கலுக்கப்புறமும் ராஜீவின் முகத்தில் புன்னக‌ை மாறவில்லை. ஆபீஸர் பார்த்த சாமான்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு ராஜீவ் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. ‘‘என்னடா இது... இரண்டு மணி நேரமா அவர் பொட்டியில எனு்னடா தேடறீங்க. அவர் யாரு தெரியுமில்ல...? முன்னாள் பிரதமரின் மகன்! அவரென்ன கடத்தல்காரரா? ஏண்டா இப்படிப் படுத்தறீங்க? உண்மையான கடத்தல்காரனைக் கண்டுபிடிக்கறதில்லே...’’ என்று பொரிந்து தள்ளினேன். அதற்கு ரஙகராஜன், ‘‘எங்களுக்கும் டூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போகணும். ஆனா மேலிடத்திலிருந்து ஆர்டர்- குறைந்தது ரெண்டு மூணு மணி நேரமாவது அவரைத் ‘தாளித்து’ அனுப்ப வேண்டுமென்று நார்த் பிளாக்கிலிருந்து உத்தரவு. எங்களுக்கும் கஷ்டமாத்தான் ஸார் இருக்கு. ஆனா நாளைக்கு போன் வ்ந்தா நாங்க பதில் சொல்லியாகணும்’’.

எனக்கு கோபம் தாளவில்லை. ஆனால் ராஜீவ்காந்தியோ தனக்கு ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அவர் காத்த பொறுமையை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை. எப்படி அவரால் அந்தச் சமயத்தில் கடுப்பின்றிச் சிரிக்க முடிந்தது? உண்மையிலேயே பெரிய மனிதர். கடைசியில் மூன்று மணி நேர சித்ரவதைக்குப் பிறகு வெளியில் வாரியிறைத்த துணிகளை பெட்டியில் அடைக்க முயன்று, அது முடியாமல் ஒரு பெட்ஷீட்டில் தனி மூட்டையாகக் கட்டி அதை சுமந்து கொண்டு புன்சிரிப்பு மாறாமல் ஏர்போர்ட்டுக்க வெளியே காத்திருந்த காருக்கு நடந்து போனார்- பிற்காலத்தில் பிரதமராகப் போகும் அந்த முன்னாள் பிரதமரின் மகன்.

இந்தச் சம்பவம் சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வாரிசு ஒருவருக்கு நேர்ந்தால் என்னாகும் என்று ஒரே ஒரு கணம் நினைத்தப் பாருங்கள். தன் ஓட்டை மோட்டார் பைக்கல் தப்பாக ஓன்வேயில் ‌போய் போலீஸ்காரரிடம் மாட்டிக் கொண்ட என்னைப் போன்ற பொதுஜனம், ‘‘நான் யாரு தெரியுமில்லே... 17வது வார்டு கெளன்சிலருக்கு ஒண்ணுவிட்ட மாமனோட சித்தப்பா எனக்கு மச்சான் முறை. கமிஷனருக்கு போன் போடுய்யா’’ என்று சொல்கிற இந்தக் காலத்தில் ஒரு வித்தியாசமான உண்மைக் காட்சிக்கு நான் ஒரு சாட்சி.

-‘பல நேரங்ளில் பல மனிதர்கள்’ புத்தகத்திலிருந்து. எழுதியவர்: பாரதி மணி.

=======================================

‘‘சமீபத்துல தொடர்ந்து ஹாலிடேவா வந்துச்சா... ஃபுல்லா வாங்கிவச்சு சரக்கு இன்னும் தீரலப்பா... மப்பும் இன்னும் தெளிய மாட்டங்குதுப்பா...!’’



=======================================

கரு்த்துப் பெட்டிக்கு சமீபத்தில் இருக்கீங்க. புடிச்சிருந்துச்சான்னு சொல்லிட்டுப் போங்க. ஹி... ஹி...

52 comments:

  1. வைரமுத்து சார் தமிழின் நிகழ்காலம் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.. அதற்காக 'அவர்' எப்படி கடந்த காலம் ஆக முடியும்ன்னு?

    ராஜீவ் காந்தி அவர்களைப் பற்றிய தகவல் சுவையாக இருந்தது. ஹ்ம்ம்.. எவ்வளவு பெரிய மனிதர்..

    ஜிம்மியின் ஹேங் ஓவர் சூப்பர்..!

    ReplyDelete
    Replies
    1. நேற்று என ஒன்றிருந்தால்தானே இன்று என ஒன்றிருக்க முடியும், நாளை என ஒன்றைக் குறிப்பிட முடியும்? அதனாலதான் மனஸ்க்கு அப்படி குதர்க்கமாத் தோணிடுச்சு. அது ஒரு லூஸு... விடுங்க. ராஜீவை நீங்களும் ரசித்ததிலும், ஜிம்மியின் ஹேங் ஓவரை ரசித்ததிலும் மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  2. கண்காட்சி வேலை எல்லாம் முடிஞ்சி போச்சா
    சர்தார் ஜி ஜோக்ஸ் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. புத்தகக் கண்காட்சி முடிஞ்சு இப்போ ரிலாக்ஸ் முரளி. ஜோக்கை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  3. அடங்காத மனஸ்! அதுகிட்டே கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க எதிர்காலம் யாருன்னு?

    ஒன் புக் வொன்டர் கூடக் கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தால் போதும் அப்படி விஷயங்கள் வந்து விழும். படு சுவாரஸியம். என்ன சோகமுன்னா கேட்டதையெல்லாம் எழுத முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஒன்புக் வொண்டர் & நல்லா இருக்கே பேரு. கொஞ்ச நேரம் உரையாடினப்பவே நீங்க சொன்னதுதான் எனக்கும் தோணிச்சு. ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. சர்தார்ஜிகளை கிண்டல் செய்யும் மரபு சில ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. பொதுப்பெயர் ஒன்றை அது போன்ற கேரக்டர்களுக்கு சூட்டவும். சர்தார்ஜி வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சிவா? எனக்கு இந்த விஷயம் தெரியாது. ஸாரி. குமுதம் இதழ்ல படிச்சு சிரிச்சது அது. அதனால அப்படியே போட்டுட்டேன். மிக்க நன்றி.

      Delete
  5. - தமிழின் நிகழ்காலம்.... அப்போ எதிர்காலம் இல்லை!!

    - சர்...ஹா ஹா..ஹா... ஆனால் மிஸ்டர் எக்ஸ் பிரயோகமாய் இருந்திருக்கலாம்!

    - மி.வ. கணேஷ் எழுதியுள்ள வரிகளைப் ("அது ஒண்ணுமில்லை தம்பி...") படிக்கும்போது சிபு கூட நடிக்கும் கணேஸ் (!) குரல் கேட்கிறது!

    - பாரதி மணி சாரின் குறிப்புகள் : சுவாரஸ்யம். ராஜீவ் புன்னகை அழகர்.

    - மப்பு நாயார் பு.ப டாப்பு! பாவம்! அப்படி உட்காரவச்சிக் கொடுமை செய்து பு.ப எடுக்கறதுக்குள்ள ரொம்பப் பாடு பட்டிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. புன்னகை அழகரா? நல்லாயிருககு. எனக்கும் பிடிச்சது அவரோட புன்முறுவல். அட! நாயார் விஷயத்தை நான் இந்தக் கோணத்துல யோசிக்கலையே...! சிபு கணேஷை நினைச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. சர்தார்ஜி ஜோக்ஸ் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. சிவாஜி குரல் பலே !
    'மனஸ்' க்கு தான் மப்பு தீரலலையோ ?
    ஹிஹிஹி... கோச்சிகாதீங்க !

    ReplyDelete
    Replies
    1. காமெடியா எழுதறது எல்லாருக்கும் உரிமை. இதுக்கேன் கோபம் வரப்போவுது..? ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. மிக்சர் கலக்கல்!
    சிவாஜி குரலில் வந்த பதிலை கற்பனை பண்ணி பாத்து சிரிசிரின்னு சிரிச்சேன். சூப்பர்!

    சர்தார்ஜி ஜோக் அமர்க்களம். ராஜீவ் காந்தி பற்றிய செய்தி உண்மையிலேயே உயர்ந்த மனிதர்களுக்கான பண்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.
    'புன்னகை அழகர்' நல்ல பட்டம் ஸ்ரீராம்.

    நாயாரு கலக்கிட்டாரு! :)

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  9. உண்மையிலேயே மிக்ஸ்ர் அருமை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. மிக்சர்நல்லாருந்துச்சு கணேஷ் சார் சரிதாயணம் படிக்க ஆரம்பித்து இறுதி பகுதிக்கு வந்து விட்டேன் சுவார (ஹா) ஸ்யமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்துப் படித்து, சரிதாயணத்தையும் வாங்கிப் படிக்கிற உங்களின் அன்பிற்கு மனமகிழ்வுடன் என் நன்றி சரவணன்.

      Delete
  11. பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தக விமர்சனம் சுகா சொல்வனத்தில் எழுதி இருந்தார், வாங்கலாம் என்று எடுத்துவிட்டேன் இருந்தும் வாங்கிய புத்தகங்களை முடித்து விட்டு அதற்கு வருவோம் என்று வைத்து விட்டேன்.

    டீகடை உரையாடல் ரசித்து சிரிக்க முடிந்தது.... மிக்செர் அருமை

    ReplyDelete
    Replies
    1. சுகா எழுதிய ‘பாட்டையா’வைப் படித்து ரசித்தாயா நீயும்? அதற்கு முன்பே கடுகு ஸார் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கூறி எனக்குத் தந்திருந்தார். சுகாவின் எழுத்தைப் படித்ததும், சுறுசுறுப்பாக இந்த நூலையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். மிக்ஸரை ரசித்த சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. இப்பொழுது தான் கவனித்தேன் மின்னல் வரிகளின் புதிய படம் வெகு அழகு...பொருத்தம் ...அருமை

    ReplyDelete
    Replies
    1. இன்று காலை திடீரென்று தோன்றிய ஐடியாவில் உருவானது அது. அதையும் ரசித்து நீ பாராட்டியதில் எனக்கு மனநிறைவு. படா டாங்ஸ்ஸுப்பா!

      Delete
  13. Sardarji joke is quite old one but the matter relating to Shri Rajiv Gandhi is really unheard so far and it reflects his cool mindedness. Above all, you have compared this incident with the present day politicians of Tamil Nadu. We all kept mum when a big heroic (herioinic) welcome was extended in TN airport when she stepped out from the jail.

    ReplyDelete
    Replies
    1. இந்த சர்தார்ஜி ஜோக்கை சமீபத்தில்தான் நான் கேட்டு ரசித்தேன். பழையதுதானா அது? ரைட்டு... அடுத்த விஷயமா நீங்க சொல்லியிருக்கறதை நானும் கவனிச்சு அவ்வ்வ்வ்!னு வாயப் பொத்திக்கிட்டு ஓடிட்டேன். நோ கமெண்ட்ஸ்! மிக்க நனறி நண்பரே!

      Delete
  14. ராஜீவ் காந்தியின் செய்தி ஆச்சரியப்பட வைத்தது.ஜிம்மியின் போஸ் சூப்பர். ஆனா பாவம் கஷ்டப்பட்டிருக்கும்.மொறு மொறு மிக்சர் கர கர வென பிரமாதமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.ர

      Delete
  15. நீங்க பேசமா: சமீபத்தில் செய்த மொறு மொறு மிக்ஷர்-நு டைட்டில் போட்டு இருக்கலாம் சார்...

    டீ கடைல இப்படிஒரு ஞானியா??? பாவம் சர்தார்ஜி-ஸ்...

    ReplyDelete
    Replies
    1. டீக்கடை மாதிரி நிறைய ஜனங்க புழங்கற இடங்கள்ல காதைக் கூர்தீட்டி வெச்சுக்கிட்டா நிறைய ஞானிகளைப் பார்க்கலாம் சமீரா. சர்தார்ஜி ஜோக் உட்பட ‘சமீபத்துல’ போட்ட மிக்ஸரை ரசிச்சதுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  16. மிச்சர் ரசித்து சுவைவுடன், தெரிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்து ருசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. சுவை மிகுதி !சவைத்தேன்! அனைத்தும்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா.

      Delete
  18. அந்த "அவரை " இன்னும் நினைவில் வைத்திருக்கிறிர் ..?நான் மறந்துட்டேன் சார் ...
    கட்டு மரமும் ஒரு நா கரை சேர்ந்து ஆகும் .. எத்தனை நாளுக்கு தான் பயணம் பண்ணுவது ?

    ராஜீவ் மேட்டர் அசத்தல் ,,

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... மறந்துட்டீங்களா? ரைட்டு. ராஜீவ் மேட்டரை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  19. மொறுமொறு மிக்ஸரில் இருந்த ஒவ்வொரு துணுக்கும் இரசிக்கக்கூடியதாய் இருந்தது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்துப் படிதத உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. சேவை வரி சம்பாஷணை வெகு ஜோர்! ஜோக் ரசிக்க வைத்தது! ராஜிவ் சம்பவம் வியக்க வைத்தது! அருமையான தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சம்பாஷணை, புத்தக விஷயம், ஜோக் என அனைத்தையும் ரசித்த நண்பருக்கு மனமகிழ்வுடன் என் நன்றி

      Delete
  21. Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  22. ின்றைய மொறு மொருவில் சுவை தூக்கல்.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த தங்கைக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  23. சர்தான வாத்யாரே.,நாம குஷாலா இருக்க கேளிக்கை வரி கட்றோம்,அணங்க இன்னா சேவை பண்டாங்கனு சேவை வரி?

    ReplyDelete
    Replies
    1. அத்தான வாத்யாரே.... இன்னா கரீக்டா சொல்லிக்கினே. படா டாங்ஸுப்பா!

      Delete
  24. நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ளேன்! மொறு மொறு நன்றாகவே நாவில் சுவையோடு கரைந்தது.


    ReplyDelete
    Replies
    1. வெல்கம் ஸார். நலம்தானே... மிக்ஸரி்ன் சுவையை ரசித்துச் சுவைத்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  25. சுவையுடன் கூடிய மிக்ஸர்....

    நேரமில்லா காரணத்தினால் நிறைய பதிவுகள் படிக்க முடியாது பெண்டிங்! அதான் லேட்!

    ReplyDelete
    Replies
    1. என் நிலையும் அதுதான் வெங்கட். நேரத்தை உண்டு பண்ணித்தான் படிக்க வேண்டியுள்ளது. அதனால் பரவாயில்லை. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  26. டீ கடையிலும் ஞானம் பிறக்கும்!
    மொறு மொறுவில் ரொம்பவும் ரசிக்க வைத்தது 'சேவை வரி' தான்!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube