Friday, January 11, 2013

அப்பாவிப் பதிவர் வாங்கிய பல்புகள்!

Posted by பால கணேஷ் Friday, January 11, 2013

ந்தப் பதிவரை எனக்கு நீஈஈஈண்ட காலமாகப் பழக்கம். அவர் பதிவுலகிற்கு வந்தபின் ரொம்பவே விவரமானவராயிட்டார். பதிவுகள் எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னால அவர் வாங்கின ரெண்டு பல்புகளை இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன்.

சம்பவம் : 1

து 2000ம் ஆண்டு. அவர் அப்ப திருநெல்வேலியில வேலை பாத்துட்டிருந்தார். அவருக்கு மிக நெருங்கிய நண்பன் போன் பண்ணி (இருவரும் ஒரே அலுவலகம்தான்- நண்பனுக்கு வெளியில் சுற்றும் உத்தியோகம்) ‘‘லேய், தினேஷ் நெல்லைக்கு வந்திருக்காம்லே. பேசியே நாளாச்சுன்னு சொன்னியே... உடனே போன் பண்ணிப் பேசிட்டுப் போய்ப் பாருலே. இன்னிக்கு ராத்திரி ஊருக்குப் போறானாம்...’’ என்றான். ‘‘நம்பர் சொல்றா, குறிச்சுக்கறேன்’’ என்று இவர் பேப்பருடன் தயாராக, நண்பன் சொன்னான்: ‘‘மூணு ரெண்டு நாலு ஜீரோ மூணு ரெண்டு’’ என்று. நம்ம அ.ப. பேப்பர்ல இப்படி எழுதிக்கிட்டாரு: 324032.

அலுவலகத்திலிருந்து வெளியே வந்து பப்ளிக் டெலிபோன் பூத்தில பல தடவை அந்த நம்பரை ட்ரை பண்ணினாரு. அவருக்குக் கிடைச்ச பதில்: "This number does not exist."ங்கறதுதான். ‌கடைசில வெறுத்துப் போய் டயல் பண்றதை விட்டுட்டாரு. மாலையில டூர்லருந்து அந்த நண்பன் வந்ததும், ‘‘என்னலே, பேசினியா?’’ என்று கேட்க, இவர், ‘‘பல தடவை ட்ரை பண்ணேன்டா. நம்பர் டஸ்நாட் எக்ஸிஸ்ட்ன்னே வருது’’ என்றிருக்கிறார். அவன் உடனே இவரை பூத்துக்கு அழைத்துப் போய் நம்பரை டயல் பண்ண, இவர் டிஸ்ப்ளேயில் பார்த்திருக்கிறார்- 32000032 என்பது சரியான நம்பர்.

தினேஷிடம் பேசிமுடித்து வெளியே வந்ததும், நண்பர் மீது பாய்ந்தார் இவர். ‘‘ஏலே மூதி! நம்பரை ஒழுங்காச் சொல்ல மாட்டியாலே... மூணு ரெண்டு டபுள் ஜீரோ டபுள் ஜீரோ மூணு ரெண்டுன்னு நீ சொல்லியிருந்தா அப்பவே பேசியிருபேன்ல..’’ என்று சொல்லி தான் எழுதி வைத்திருந்த நம்பரைக் காட்ட, அவன் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறான். ‘‘எலே, கோட்டிக்காரப் பயலே! எங்கயாச்சும் ஆறு டிஜிட்ல டெலிபோன் நம்பர் வருமாலே...? அப்பவே நீ சுதாரிச்சிருக்க வேணாமா? நீ தப்புப் பண்ணிட்டு என்னைக் கேக்க?’’ என்று அவன் விடாமல் சிரிக்க, இவர் ‌‘ழ‌‌ே’ என்று விழித்திருக்கிறார்.

சம்பவம் : 2

ம்ம அ.ப.வை ஒரு அவசர வேலையா பெங்களூர்ல இருக்கற அவர் நண்பன் உடனே வரச் சொல்லி, டிக்கெட்டும் அனுப்பினதால புறப்பட்டுப் போனார். அவர் முன்னப்பின்ன பெங்களூரு போனதில்ல. கண்டோன்மென்ட் ஸ்டேஷன் நெருங்கறப்ப நண்பனுக்கு போன் பண்றார். அவன், ‘‘நான் ஒன்வேல சுத்திட்டு வர்றதுக்கு லேட்டாயிடும். ஸ்டேஷன் பக்கத்துல ரெண்டு நிமிஷ நடை தூரத்துல காரோட வெயிட் பண்ணிட்டிருக்கேன். ஸ்டேஷனை விட்டு வெளிய வந்ததும் கூப்பிடு’’ என்றிருக்கிறான் நண்பன். இவர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், அவனைக் கூப்பிட்டு, ‘‘நான் ஸ்டேஷனுக்கு வெளில நிக்கறேன்’’ என்க, அவன், ‘‘எதிர்ல ஒரு யானை தெரியுதா?’’ என்று கேட்டிருக்கிறான். இவர் பார்‌க்க, எதிரில் ஒரு யானை நடந்து சென்று கொண்டிருந்தது. ‘‘ஆமா, தெரியுது’’ என்று இவர் பதிலளித்ததும், ‘‘அந்த யானை திசையிலயே வந்தா ஒரு சர்க்கிள் வரும். அதுல இடது பக்கம் திரும்பினா, காரோட நான் நிக்கறது தெரியும்’’ என்றிருக்கிறான்.

இவரும் யானை சென்ற  திசையிலேயே அதைப் பின்தொடர்ந்து நடந்திருக்கிறார். சிறிது தொலைவு சென்றதும், பாதை இரண்டாகப் பிரிய, யானை இடதுபுறப் பாதையில் சென்று விட்டது. சர்க்கிள் எதையும் காணோமே என்று இவர் ‘ழே’ என்று விழித்து, மீண்டும் நண்பனுக்கு டயல் செய்து, ‘‘டேய், நீ சொன்னபடி யானை வழியா வந்ததுல ரோடுதான் ரெண்டாப் பிரியுது. சர்க்கிள் எதையும் காணமேடா’’ என்று கேட்க, ‘‘நீ இடது பக்கம் போயிட்ட போலருக்கு. அப்படியே திரும்பி ஸ்டேஷனுக்கு வந்து வலதுபுறமா வா’’ என்று நண்பன் பதிலுரைக்க, விதியே என்று இவர் மீண்டும் ஸ்டேஷனை நோக்கி நடந்து, அதைத் தாண்டி கொஞ்சம் தூரம் நடந்தார்.

அங்கே சற்று தூரம் சென்றதும் ஒரு யானை சிலை இருக்க, அதைச் சுற்றி ஒரு சர்க்கிள் இருந்தது. அதில் இடதுபுறம் செல்லும் பாதையில் பார்க்க, காரின் வெளியி்ல் நின்றிருந்த நண்பன் கையாட்டி அழைத்திருக்கிறான். நண்பனின் அருகில் சென்றதும், ‘‘ஏன் இத்தனை லேட்?’’ என்று அவன் கேட்க, ‘‘நீ யானை தெரியுதான்னு கேட்டப்ப, என் எதிர்ல ஒரு யானை நடந்துட்டிருந்தது. நீ எங்கருந்தோ என்னைப் பாத்துட்டுதான் பேசறேன்னு நான் நினைச்சு, யானை திசையில நீ போகச் சொன்னதால அது பின்னால போய்ட்டேன். இப்பத்தான் புரியுது நீ யானை சிலையச் சொல்லியிருக்கேன்னு. ஏண்டா பாவி... யானை சிலைன்னு தெளிவாச் சொல்லித் தொலையக் கூடாதா?’’ என்று இவர் வருத்தம் பாதி, கோபம் பாதியாகக் கேட்க, நெல்லை நண்பனைப் போலவே இந்த பெங்களூர் நண்பனும் ரசித்து வாய்விட்டுச் சிரித்திருக்கிறான். ‘‘ஏண்டா நான் பேசற நேரம் நிஜ யானை நேர்ல போகும்னு கனாவா கண்டேன்?’’ என்று அவன் சிரிக்க, இவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

இப்படி இரண்டு பல்புகள் வாங்கிய அந்த அ.ப. யாருன்னு கேக்கறீங்களா? ஜன்னல் வரிகள் ஜாலடணேஷ் தவிர வேற யாரு அவ்வளவு புத்திசாலி(?)யா இருக்க முடியும்? ஹி... ஹி...

======================================

ப்ப புத்தகக் கண்காட்சி அப்டேட்ஸ்: என்னுடைய ‘சரிதாயணம்’ புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸ் -- ஸ்டால்: 43,44 தவிர, மயிலவன் பதிப்பகம் ---ஸ்டால் 295, 296 ஸ்டாலிலும் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நம் பதிவர் புத்தகங்களுள் எனக்குத் தெரிந்த மேலும் இரண்டு.

அகிலா - ரசனை மிகுந்த கவிதைகளையும், அழகான எழுத்து நடையில் கட்டுரைகளையும் படைக்கும் இவரது படைப்புகள் இப்போது ‘சின்னச் சின்னச் சிதறல்கள்’ (இவர் எழுதும் தளத்தின் பெயரும் அதுவே) நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

ஜீவா என்று விரிவாக நண்பர்களால் அழைக்கப்படும் இவரின் சுருக்கப் பெயர் ஜீவானந்தம். ‘கோவை நேரம்’ என்ற தன் தளத்தி்ல பல அரிய ஆலயங்களைப் பற்றியும், நல்ல உணவகங்களைப் பற்றியும், இவர் சென்று சுற்றுலா தலங்களைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார். அவை இப்பொழுது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன- ‘கோவை நேரம்’ என்ற பெயரிலேயே.

இவை தவிர கடுகு (அகஸ்தியன்) அவர்கள் எழுதிய ‘கமலாவும் நானும்’ என்ற நகைச்சுவைக் கதைகளும், அனுபவக் கட்டுரைகளும் அடங்கிய பொக்கிஷப் புத்தகமும் இம்முறை பு.க.வில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.

இந்த மூன்று புத்தகங்களும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலிலேயே கிடைக்கும் என்று பட்சி சொல்கிறது. (பஜ்ஜி இல்லீங்க, பட்சி!) உங்கள் புத்தகக் கண்காட்சி விசிட்டில் தவறாமல் டிஸ்கவரிக்கு ஒரு விசிட் அடித்து நம் பதிவர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ்வீர்கள்.. சரிதானே...!

56 comments:

  1. நல்ல நகைச்சுவைதான். உங்க புத்தகம் இல்லாம மத்தவங்க புத்தகத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படிததுக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி முரளிதரன்.

      Delete

  2. சுவையான அனுபவங்கள்தான். பஜ்ஜி சொன்னதை, அடச்சே...பட்சி சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்களை ரசித்து பட்சி சொலவதையும் கேட்கும் ஸ்ரீராமுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  3. புத்தக அறிமுகங்களுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களை ரசித்து ஊக்குவிககும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  4. ஹா..ஹா.. அந்த அப்பாவிப்பதிவர் வாங்கிய மீதி பல்புகளை வெளியிடாமல் ஒளிச்சு வெச்சுருக்கும் கணேஷ்ஜியை வன்மையாகக் கண்டிக்கிறோம் :-)))))))))))))

    சகோக்களின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ.. மொத்த பல்பயும் சொல்லிட்டா இமேஜ் என்னாவுறது மேடம்...? அப்படி என்ன இமேஜ் இருக்குன்னு கேக்கறீங்களா... ஹி... ஹி... சரிசரி... மீதியை அப்றம சொல்றேன் உங்களுக்கு. மனம் நிறைய வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் எங்கள் நன்றி.

      Delete
  5. இவையிரண்டும சாதாரண நிகழ்வு தான் என்றாலும் நீங்க சொல்லும்போது அதில் ஒரு நகைச்சுவை இழையோடியது..

    ReplyDelete
    Replies
    1. உண்நைதான் தோழா. எதையும் சொல்லும் விதம்தான் மாற்றுகிறது. என் அடுத்த பதிவைப் பாருங்களேன். இன்னும் விளக்கமாகப் புரியும். ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. நீங்க சொல்ல்யிருக்கவே வேண்டாம் அந்த அப்பாவி யாருன்னு நாங்களே கண்டு பிடிச்சிருப்போம்.
    சாதாரண சம்பவங்களை மிக அழகாக சுவையாக எழுதியிருக்கீங்க.

    புத்தக கண்காட்சி வெளீயீட்டிற்கு வாழ்த்துக்கள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. அந்த அப்பாவியை நிறையப் பேரு நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஹி... ஹி... மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்திற்கு உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. ஆஹா.... பெண்களூரில் பல்பு வாங்கியச்சா.... :) நல்ல நகைச்சுவை. ரசித்தேன்.

    புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் கணேஷ். மற்ற நண்பர்களுக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. பெண்களூரிலும் பல்பு வாங்கியாச்சான்னு கேட்டிருக்கணும் நீங்க. வாழ்த்திய உங்களுக்கு இதயம் நிறை நன்றி.

      Delete
  8. இதுபோல போன் நம்பர் குறிச்சுகிடுறவங்க நிறையாபேரு இருக்காங்க. யானை சிலைன்னு அவரு தெளி வா சொல்லி இருக்கலாம்ல. புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்து புத்தக வெளியீட்டிற்காய் வாழ்த்திய பூந்தளிருக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. மிக நல்ல நகைச்சுவை.... சில காலமாக காணமல் போன "மின்னல்வரிகள்" இன்று நல்ல நகைச்சுவையுடன் அடித்தது.
    புத்தக வெளீயிட்டு விழாவுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனி அடிக்கடி மின்னல் அடிக்க வைக்கிறேன் நண்பரே. ரசிததுப் படித்து வாழ்ததிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. பல்புகள் பிரகாசம் !
    ஜாலடனேஷ் அ .ப வா ?
    இல்லை ... அடப்பாவி பதிவர் ஆச்சே !

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்... நீங்களே இப்படிச் சொன்னா... புதுசா பழகறவங்க கிட்ட என் இமேஜ் என்னாவறது..? அவரு நிஜமாவே அப்ப்ப்பாவி தாங்க... நெம்புங்க.. ஸாரி. நம்புங்க... ஹி... ஹி... மிக்க நன்றிங்க.

      Delete
  11. அண்ணே!தலைப்பை மட்டும் படித்த நிமிஷமே அந்த அ. ப நீங்களே தான்ன்நான் யூகித்து விட்டேன்.ஹி..ஹி..தின்னவேலி பாஷையில் அப்படியெ பிச்சு உதறிட்டீங்க.

    என்னுடைய ‘சரிதாயணம்’ புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸ் -- ஸ்டால்: 43,44 தவிர, மயிலவன் பதிப்பகம் ---ஸ்டால் 295, 296 ஸ்டாலிலும் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்// மிக்க மகிழ்ச்சி.இது போல் பல நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள்.


    // உங்கள் புத்தகக் கண்காட்சி விசிட்டில் தவறாமல் டிஸ்கவரிக்கு ஒரு விசிட் அடித்து நம் பதிவர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ்வீர்கள்.. சரிதானே...!// சரிதான் சரிதான்..:)

    ReplyDelete
    Replies
    1. நெல்லையில் ஐந்து வருஷங்கள் வாழ்ந்ததால அங்க பேசற ஸ்டைல் அத்துபடி. நானும் அப்படியே கொஞ்ச நாள் பேசிட்டிருந்தேன்மா. எங்களுக்கு வாழ்த்துத் தெரிவி்த்து, புத்தகங்களையும் வாங்கவிருக்கும் தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. அந்தப் பதிவர் என்றதும் அந்த புத்திசாலிப் பதிவர் என் வாத்தியாரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது மிஸ்டர் தினேஷ் சாரி சாரி ஜன்னல் வரிகள் ஜால டனெஷ்

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாய் ஊகித்த சீனுவுக்கு ஒரு ஷொட்டு. மிக்க நன்றி பிரதர்!

      Delete
  13. தலைப்பை படிக்கும்போதே தெரிஞ்சி போச்சி... அது நீங் தான்னு.. ஐய்யோ.. ஐயோ..!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... அவ்வளவு ஈஸியா கண்டுபிடிச்சுட்டிங்களா? நம்ம மேல அவ்ளவ் நம்பிக்கை. அவ்வ்வ்வ. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  14. That APPAVI PADIVAR now has become a ADAPPAVI PADIVAR while writing in his blog. Very nice practical jokes which made me to smile for a while. Everyone might have got such bulbs in their life. Do not worry, I also got some bulbs like this.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா... நாங்களும் பல்ப் வாங்கினதுண்டுன்னு நீங்க சொல்றது ரொம்பவே ஆறுதல்தான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  15. Congrats to you, Kovai neram and Akila for publishing a book.

    ReplyDelete
    Replies
    1. எங்களை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  16. பல்பு சூப்பரா இருந்தது...:)) மீதியையும் அப்பப்போ சொல்லுங்க...

    புத்தக வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார். மற்றவர்களின் புத்தக அறிமுகத்துக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பல்புகளை ரசித்து, என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. சம்பவங்கள் இரண்டுமே சிரிப்பை வரவழைத்தது. அட நமக்கு ரொம்ப தெரிஞ்சவங்க புத்தகங்கள் வெளியாகிறது . அருமையான விற்பனை சந்தை அமைய வெளியிடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எங்கள் அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  18. உங்களின் நகைச்சுவை சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் தொற்றிக்கொள்ளும் அண்ணா.

    நண்பர்களின் புத்தகங்கள் குறித்தும் தெரியப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சவையை ரசித்து, எங்களின் மகிழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திய தம்பிக்கு இதயம் நிறைந்த மகிழ்வுடன் நன்றி + இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  19. இத்தனை அப்பாவியான (அருமையான) பதிவர் எழுதிய புத்தகம் வெளிவருவது புதிவுலகத்திற்கே பெருமை!

    இந்தப் புத்தாண்டு தொடங்கி நீங்கள் எழுத்துலகில் வீறு நடை போட மனமார்ந்த வாழ்த்துக்கள், கணேஷ்!

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தை ரசித்து, என் தொடர்ந்த செயல்பாட்டிற்கு ஆசி நல்கிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா.

      Delete
  20. அவசியம் அடுத்தமுறை சென்னை வருகையில்
    தாங்கள் குறிப்பிட்டுள்ள நம் பதிவர்கள் புத்தகம் அனைத்தையும்
    அள்ளில் கொண்டு வந்து விடுவேன்
    அருமையான அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரமணி ஸார்... எனக்கு ஒரு தொ‌லைபேசி அடியுங்கள். அள்ளிக் கொள்கிற வேலையை நான் சுலபமாக்கி விடுகிறேன் தங்களுக்கு. உங்களின் வாழ்த்தில் மகிழ்ந்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  21. ரெண்டுபல்புகளோட புதிய பதிவர்களின் புத்தக அறிமுகமும் தங்களுக்கு உரிய நகைசுவையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. நான் முதலிலேயே நினைச்சேன் சார்.. அந்த அ.ப. நீங்களா தான் இருப்பீங்கன்னு!! சுவையோட நகைபுரிய வச்சிடீங்க.....

    ReplyDelete
    Replies
    1. என்னை நன்கறிந்து எடைபோட்ட சமீராவுக்கு பாராட்டுக்கள் மற்றும் நகையை ரசித்துச் சிரித்தமைக்கு என் இதய நன்றி.

      Delete
  23. நானும் சிறைய “பல்பு“ வாங்கி இருக்கிறேன்.
    வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று பயந்து சொல்வதில்லை.

    நீங்கள் வாங்கிய “பல்புகள்“ பிரகாசமாகத் தான் உள்ளது.
    வாழ்த்துக்கள் பால கணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பல்புகளை ரசித்து வாழ்த்திய அருணாவுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  24. வணக்கம் நண்பரே...
    இவ்வளவு அப்பாவி பதிவரா நீங்கள்....
    அப்படியே எங்க ஊர்ப்பக்கம் போயிட்டு வந்ததுபோல
    இருந்துச்சு...
    பல்புகள் பதிவர்களுக்கு சகஜம் தானே...

    இன்றுதிக்கும் சரிதாயணம்
    இனிவரும் காலங்களின்
    இனிதான பாதைக்கு
    மெலிதான திறவுகோல் ஆகட்டும்!
    வலிமையான பலநூறு
    தெளிதேன் படைப்புகளை
    இனியிங்கு சாரைபோல
    இனிதாய் படைத்திட
    எனதான வாழ்த்துக்கள் ........

    நம் உடனான தோழமைகளின் புத்தகங்களையும்
    இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சரிதாயணத்தை கவிதையால் வாழ்த்தி தோழர்களையும் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மகேன்.

      Delete
  25. தங்கள்புத்தக வெளிப்பாடிற்கு மனமார்ந்த வாழ்த்து. பதிவு மிக நல்ல சுவை பலபுகள்.
    இனிய நல்வாழ்த்து.சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. பல்புகளை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete

  26. வணக்கம்!

    இரண்டு பல்பு வாங்கியதை
    இனிதே ஏற்றி ஒளிதந்தீா்!
    திரண்டு வந்த நினைவுகளைத்
    தேனில் குழைத்துச் சுவைசெய்தீா்!
    உருண்டு பிரண்டு கிடந்தாலும்
    உன்போல் வாய்ப்பு கிடைத்திடுமோ?
    அரண்டு மிரண்டு நிற்கின்றேன்!
    அருமை மின்னல் வரிகளிலே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. இந்த நகைச்சுவையைப் படித்து ரசித்து அழகுத் தமிழில் வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி கவிஞரே.

      Delete
  27. எங்கள் புத்தகங்கள் வெளியீடு பற்றிய உங்களின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி....உங்களை புத்தக கண்காட்சியில் சந்திக்கிறோம்...

    ReplyDelete
  28. ஏண்டா பாவி... யானை சிலைன்னு தெளிவாச் சொல்லித் தொலையக் கூடாதா?’’

    தெளிவாகச் சொல்லிட்டாலும் நம்ம கற்பூரம்தான்....ஹி.....ஹி...

    ReplyDelete
  29. அன்பின் பல கணேஷ் - ஜன்னல் வரிகள் ஜால டணேஷ் பல்பு வாங்கியது சூப்பர் - வி.வி.சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube