ஹாய்... ஹாய்... ஹாய்...!
அனைவரும நலம்தானே...! பிறந்திருக்கற இந்த புதுவருடம் உங்களுக்கு நிறைய வெற்றிகளையும் முழுக்க முழுக்க சந்தோஷங்களையும் நிரப்பினதா அமையட்டும்னு மனம் நிறைய வாழ்த்தறேன். நேற்றைய தினம் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. பதிப்பக நிறுவனத்துல பணிக்குச் சேர்ந்ததால புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நிறையப் புத்தகங்களைத் தயாரிக்கும் பொருட்டு இரவு பகல் பாராமல் பணி செய்ய வேண்டியதாய் அமைந்தது சென்ற மாதம். எல்லாத்தையும் முடிச்சிட்டு இதோ மீண்டும் வந்துட்டேன். இனி முன்போல் ஒரு தினம் விட்டு ஒரு தினம் தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம். அவனியிற் சிறக்க தேவி பராசக்தி அருள் புரிவாளாகுக! (பாரதியார் கவிதைகள் படிச்சு, வொர்க் பண்ணினதோட பாதிப்பு. ஹி... ஹி...)
ஜனவரி மாதம் பிறந்தது என்றாலே திருவிழா மயம்தான். பொங்கல் திருவிழா ஒன்றாலேயே இந்த மாதம் களைகட்டி விடும் அனைவருக்கும். சென்னைவாசிகளுக்கோ அத்துடன் புத்தகத் திருவிழாவும் சேர்ந்து கொள்வதால் டபுள் தமாக்காதான். இம்மாதம் 11 ம் தேதி முதல் 23ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ கிரவுண்டில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த வருஷ புத்தகக் கண்காட்சி எனக்கு மிகமிக விசேஷமானது.
அனைவரும நலம்தானே...! பிறந்திருக்கற இந்த புதுவருடம் உங்களுக்கு நிறைய வெற்றிகளையும் முழுக்க முழுக்க சந்தோஷங்களையும் நிரப்பினதா அமையட்டும்னு மனம் நிறைய வாழ்த்தறேன். நேற்றைய தினம் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. பதிப்பக நிறுவனத்துல பணிக்குச் சேர்ந்ததால புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நிறையப் புத்தகங்களைத் தயாரிக்கும் பொருட்டு இரவு பகல் பாராமல் பணி செய்ய வேண்டியதாய் அமைந்தது சென்ற மாதம். எல்லாத்தையும் முடிச்சிட்டு இதோ மீண்டும் வந்துட்டேன். இனி முன்போல் ஒரு தினம் விட்டு ஒரு தினம் தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம். அவனியிற் சிறக்க தேவி பராசக்தி அருள் புரிவாளாகுக! (பாரதியார் கவிதைகள் படிச்சு, வொர்க் பண்ணினதோட பாதிப்பு. ஹி... ஹி...)
ஜனவரி மாதம் பிறந்தது என்றாலே திருவிழா மயம்தான். பொங்கல் திருவிழா ஒன்றாலேயே இந்த மாதம் களைகட்டி விடும் அனைவருக்கும். சென்னைவாசிகளுக்கோ அத்துடன் புத்தகத் திருவிழாவும் சேர்ந்து கொள்வதால் டபுள் தமாக்காதான். இம்மாதம் 11 ம் தேதி முதல் 23ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ கிரவுண்டில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த வருஷ புத்தகக் கண்காட்சி எனக்கு மிகமிக விசேஷமானது.
காரணம் 1 : சிங்கப்பூரில் வசிக்கும் தம்பி சத்ரியன் எழுதிய ‘கண் கொத்திப் பறவை’ மற்றும் நண்பர் சி.கருணாகரசு எழுதிய ‘நீ வைத்த மருதாணி’ ஆகிய கவிதைப் புத்தகங்களை நான் வடிவமைத்து இருக்கிறேன். ‘கண்கொத்திப் பறவை’ - கவிதைகளைப் படித்தால் உங்கள் மனங்களைக் கொத்திச் சென்று விடுவார் கவிஞர் சத்ரியன். ‘நீ வைத்த மருதாணி’ - அவள் வைத்த மருதாணி சில தினங்களில் கலைந்து விடும். கருணாகரசுவி்ன் கவிதைகள் மருதாணியாக உங்கள் மனங்களில் ஒட்டிக் கொண்டு கலையவே கலையாது. அத்தனை அழுத்தமான கவிதைகள் இவர்கள் இருவருடையதும். உள்ளடக்கத்திலும் சொல்லாடலிலும் அழகான இவர்களின் கவிதைகளை வடிவமைப்பால் மேலும் அழகாக்க நான் முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதை நீங்கள் அவசியம் படித்துவிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்கள் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டாலில் கிடைக்கும்.
காரணம் 2 : நான் எழுதிய ‘சரிதா’ கதைகள் மற்றும் சிரித்திரபுரம் ஆகியவை சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தப் புத்தகமும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் சில ஸ்டால்களிலும் கிடைக்கச் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன். ஸ்டால் நம்பர்கள் அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விளக்கமாய் தெரிவிக்க(விளம்பரப்படுத்த?)ப்படும். தமிழில் வெளியான மிகச் சிறந்த நகைச்சுவை(!)ப் புத்தகங்களில் ஒன்றான(?) இந்தப் புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கிப் படித்து சிரிக்க (முயற்சிக்க) வேண்டும் என்பது என் வேண்டுகோள் மற்றும் ஆலோசனை. ஹி... ஹி...
அப்புறம்... தமிழனாய்ப் பிறந்தவர்கள் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தகங்கள் என்று நான் மதிக்கும் ‘பாரதியார் கவிதைகள்’ மற்றும் மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ ஆகிய இரண்டும் விகடன் வெளியீடாக வருகின்றன. ‘கோச்சடையான்’ என்ற மன்னின் வாழ்க்கையை கெளதம நீலாம்பரன் அழகாக எழுதியது குமுதம் வெளியீடாக வருகிறது. இவற்றை வாங்கிப் படிக்கலாம் என்று ‘டிக்’ அடித்து வைத்திருக்கிறேன். மற்ற நல்ல புத்தகங்களின் வருகையைப் பற்றி முதல்தினம் ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வந்து எழுதுவதாக ஒரு உத்தேசம் இருக்கிறது.
வேறென்ன... இந்தியத் தலைநகரில் 6 மிருகங்களால் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியனாய்ப் பிறந்தமைக்காய் நம்மைத் தலைகுனிய வைத்தன என்றே சொல்ல வேண்டும். இதனால் நிகழ்ந்த போராட்டங்களும், அபத்தமாய் அரசியல் புள்ளிகள் உதிர்த்த கருத்துக்களும், ‘எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிவது பெண்கள் சுதந்திரம்’ என்று பெண்கள் அமைப்புகள் உயர்த்திய புரட்சி(?)க் கொடியும் அந்தப் பெண்ணின் இறப்பும் நீஙகள் அறிந்ததே. இந்த விஷயத்தில் தவறு இரவில் தனியாக வந்த அந்தப் பெண்ணின் மீதோ, அந்த இளைஞர்களின் குடியின் மீதோ,அல்ல... பெண்மையை மதிக்கக் கற்றுத் தராமல் அவர்களை மிருகங்களாக வளர்த்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களைச் சார்ந்தது என்று நான் நினைக்கிறேன்.
நேற்றைய தினம் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து வந்தது. மிகச் சரியாக ஒன்றாம் தேதி கைக்குக் கிடைக்கும் வண்ணம் நம் தபால் துறையின் வேகத்தை(!)க் கணக்கிட்டு அனுப்பிய அவரின் திட்டமிடலை வியந்து கொண்டே பிரித்துப் பார்த்தேன். என் மன ஓட்டத்துக்கு ஏற்ப அவர் அழகாய் வடிவமைத்து வெளிப்படுத்தியிருந்தார். அதை இங்கே மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அப்புறம்... தமிழனாய்ப் பிறந்தவர்கள் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தகங்கள் என்று நான் மதிக்கும் ‘பாரதியார் கவிதைகள்’ மற்றும் மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ ஆகிய இரண்டும் விகடன் வெளியீடாக வருகின்றன. ‘கோச்சடையான்’ என்ற மன்னின் வாழ்க்கையை கெளதம நீலாம்பரன் அழகாக எழுதியது குமுதம் வெளியீடாக வருகிறது. இவற்றை வாங்கிப் படிக்கலாம் என்று ‘டிக்’ அடித்து வைத்திருக்கிறேன். மற்ற நல்ல புத்தகங்களின் வருகையைப் பற்றி முதல்தினம் ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வந்து எழுதுவதாக ஒரு உத்தேசம் இருக்கிறது.
வேறென்ன... இந்தியத் தலைநகரில் 6 மிருகங்களால் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியனாய்ப் பிறந்தமைக்காய் நம்மைத் தலைகுனிய வைத்தன என்றே சொல்ல வேண்டும். இதனால் நிகழ்ந்த போராட்டங்களும், அபத்தமாய் அரசியல் புள்ளிகள் உதிர்த்த கருத்துக்களும், ‘எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிவது பெண்கள் சுதந்திரம்’ என்று பெண்கள் அமைப்புகள் உயர்த்திய புரட்சி(?)க் கொடியும் அந்தப் பெண்ணின் இறப்பும் நீஙகள் அறிந்ததே. இந்த விஷயத்தில் தவறு இரவில் தனியாக வந்த அந்தப் பெண்ணின் மீதோ, அந்த இளைஞர்களின் குடியின் மீதோ,அல்ல... பெண்மையை மதிக்கக் கற்றுத் தராமல் அவர்களை மிருகங்களாக வளர்த்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களைச் சார்ந்தது என்று நான் நினைக்கிறேன்.
நேற்றைய தினம் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து வந்தது. மிகச் சரியாக ஒன்றாம் தேதி கைக்குக் கிடைக்கும் வண்ணம் நம் தபால் துறையின் வேகத்தை(!)க் கணக்கிட்டு அனுப்பிய அவரின் திட்டமிடலை வியந்து கொண்டே பிரித்துப் பார்த்தேன். என் மன ஓட்டத்துக்கு ஏற்ப அவர் அழகாய் வடிவமைத்து வெளிப்படுத்தியிருந்தார். அதை இங்கே மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ரைட்டு... ஒரு புதிய, வித்தியாசமான கேப்ஸ்யூல் நாவலோட உங்களை வெள்ளிக்கிழமை சந்திக்கறேன். ஸீ யு.
|
|
Tweet | ||
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.கண்காட்சியில் சந்திக்கலாம்.
ReplyDeleteநன்றி முரளி. அவசியம் சந்திக்கிறேன்.
Delete
ReplyDeleteபுத்தக வெளியிட்டிற்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்
நன்றி நண்பா. உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteம்
ReplyDeleteஆங்....வாழ்த்துக்கள்
மகிழ்வுதந்த உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும நன்றி முத்தரசு. உங்களுக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteவாழ்த்துக்கள் நண்பரே ,ணி யார் சொல்வார் தடை
ReplyDeleteஉங்களின் பயணம் தொடரவும் புத்தாண்டு வாழ்த்துக்களும்
மனம் நிறைய வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றியும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.
Deleteபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteடில்லி சம்பவம் கொடூரமானதுதான் ஆனால் அதனையும் விட கொடூரமான அல்லது அதற்கு ஈடான சம்பவங்கள் இன்றும் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அவைகள் ஏன் இந்த நியாயக் காரர்கள் கண்களுக்குத் தென்படவில்லையோ :(
நிறைய கொடூர சம்பவங்கள் நடப்பது இதன் மூலமாவது கவனம் பெற்றது என்பதை நான் எண்ணி ஆறுதல்பட்டுக் கொள்கிறேன். வாழ்த்துச் சொன்ன தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஅவனியிற் சிறக்க தேவி பராசக்தி அருள் புரிவாளாகுக!
ReplyDeleteபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...
உங்களின் வாழ்த்தும் பாராட்டும் எனக்கு எப்பவும் ஸ்பெஷல். அதனால் மனமகிழ்வுடன் என் நன்றியும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.
Deleteஇந்த புதுவருடம் உங்களுக்கு நிறைய வெற்றிகளையும் முழுக்க முழுக்க சந்தோஷங்களையும் நிரப்பினதா அமையட்டும்னு மனம் நிறைய வாழ்த்தறேன்//என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ReplyDelete//இந்தப் புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கிப் படித்து சிரிக்க (முயற்சிக்க) வேண்டும் என்பது என் வேண்டுகோள் மற்றும் ஆலோசனை.// கண்டிப்பாக.அதிலும் எனக்கு மிகப்பிடித்தமான சரிதயணம் தொகுக்கப்பட்டு புத்தக் வடிவில் கிடைக்கப்போகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி.அவசியம் புத்தகம் வெளியிடும் அன்றே வாங்கிக்கொள்கிறேன்:)
புத்தகத்தை அவசயம் வாங்கிப் படிக்கிறேன்னு சொல்லி எனக்கு வைட்டமின் தந்த தங்கைக்கு மனம் நிறைந்த நன்றி.
Deleteஅண்ணாவிற்கு புத்தாண்டு வாழ்த்துகளும், புத்தக ஆண்டு வாழ்த்துகளும்.
ReplyDeleteஇதுவரை'கண்கொத்திப் பறவை' யைப் படித்த வாசக நண்பர்கள் இப்புத்தகத்திற்காக உழைத்த அத்தனைப் பேரையும் வெகுவாக பாராட்டினார்கள். வடிவமைப்பில் உங்களின் உழைப்பும், அற்பணிப்பும் அளப்பரியது.
மனமகிழ்வுடன் என் புத்தாண்டு நல்வாழத்துகள் தம்பி. புலவர் ஐயா உட்பட பலரும் வடிவமைப்பை பாராட்டியதில் மனம் மகிழ்வால் நிரம்பியுள்ளது எனினும் அதை பிறர் சொல்வதே சிறந்தது. நான் சொன்னால் தற்புகழ்ச்சியாகி விடுமன்றோ... என்மேல் நம்பிக்கை கொண்டு நீங்கள் தந்த வாய்ப்பிற்கும் மகிழ்வு தந்த உங்களின் பாராட்டுக்கும் நெகிழ்வுடன் என் நன்றி.
Deleteபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் sir
Deleteவாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி சரவணன்.
Deleteமனமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்கு இதயம் நிறை நன்றி மற்றும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் தங்களுக்கு.
ReplyDeleteபுத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்! இன்னும் பல விரைவில் வரவேண்டும்!
ReplyDeleteஉங்களின் ஆசிகளுடன் அது நிறைவேறும் ஐயா. என் இதயம் நிறை நன்றி தங்களுக்கு.
Deleteஉங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இனிய புது வருஷ வாழ்த்துக்கள்! புத்தகச் சந்தையில் கவனிக்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்ட் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம். - ஜெகன்னாதன்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜெ. 9ம் தேதி புத்தகக் கண்காட்சியில் சுற்றி நல்ல புத்தகங்கள் என்று நான் ரசிப்பவற்றை. வாங்க இருப்பவற்றை அவசியம் 10ம் தேதியன்று பகிர்வேன் நண்பரே. நன்றி.
Deleteபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் பதிவு பார்த்து!!
ReplyDeleteஜனவரி பிடித்தற்கு முக்கிய காரணம் இரண்டு; லீவ் நிறைய கிடைக்கும், அப்புறம் புத்தக கண்காட்சி.. இந்த முறை கூடுதல் மகிழ்ச்சி உங்கள் புத்தக வருகை மற்றும் நீங்கள் வடிவமைத்த புத்தகங்கள்!!
இனிவரும் நாட்களில் நீங்கள் நிறைய இப்படி எழுதணும் சார்... நன்றி!!
உன் விருப்பப்படி நிறைய எழுத முயல்கிறேன்மா. என் புத்தகத்துக்காய் கூடுதல் ஆர்வமுடன் இருக்கும் அன்பிற்கு என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteகணேஷ் அண்ணா புத்தக கண்காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஆவலுடன் புத்தகக் கண்காட்சியை எதிர்பாக்கும் தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteபுத்தக வெளியீட்டுக்கும் புத்தாண்டுக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteபாக்கியம் ராமசாமி என்றதும் அப்புசாமி நினைவுக்கு வருவதைப்போல் கணேஷ்ஜின்னதும் சரிதாவும் சிரித்திரபுரமும் நினைவுக்கு வருமளவுக்கு இரண்டு புத்தகங்களும் விற்பனையில் தூள் கிளப்பி பிரபலமடைய வாழ்த்துகள்..
மனமகிழ்வு தந்த உங்களின் இரண்டு வாழ்த்துகளுக்கும் என் இதயம் நிறைந்த நன்றியும், புத்தாண்டு வாழ்த்துகளும்.
Deleteவாழ்த்துக்கள் நண்பரே உங்கள் புத்தகங்கள் வாங்கும் ஆவலுடன் இருக்கிறேன் அப்புசாமியின் பாதிப்பு மேலும் எங்களுடைய புத்தகங்களுக்கும் உங்கள் விளம்பரம் தேவை ............கடைசியாக சொன்ன கருத்துக்கள் முதன்மையாக அனைவரும் செயல்படுத்த வேண்டியது நன்றி பகிர்விற்கு மேலும் புத்தகம் வெளியிடும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ் படித்த உங்களின் புத்தக அலமாரியில் என் ‘நகை’க்கும் ஓர் இட்ம் உண்டு என்பதில் மிக்க மகிழ்ச்சி தோழி. கோவை நண்பர்களின் புத்தகம் பற்றியும் விரிவாகப் பேசிப் பகிர்கிறேன் நிச்சயம். மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்கு என் மனம் நிறைந்த நன்றி.
DeleteWOW what a coming back!!!!! Happy to see you again after a long g a p. Hope to meet you through this blog regularly without much break in between.
ReplyDeleteஆம். இனி நிச்சயம் அடிக்கடி என்னைச் சந்திக்கலாம் மோகன் இங்கே. தொடர்ந்து எழுத எனக்கு ஊக்கந்தரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteபுத்தாண்டு வாழ்த்துக்கள். சார் பிசியா ஆகிவிட்டதால் இடைஞ்சல் செய்ய விருப்பமில்லை . திடிரென பதிவைப் பார்த்தும் மகிழ்ச்சி. ஆவலுடன் புத்தக கண்காட்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
ReplyDeleteஎன்னதிது திடீர்ன்னு சார் எல்லாம்? நான் பேசக்கூட இல்லைன்னு கோபம்போல. புத்தகக் கண்காட்சிக்கு ஆவலுடன் காத்திருக்கும தென்றலுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteபுத்தாண்டு வாழ்த்துகள் கணேஷ்!
ReplyDeleteபுது வருடத்தில் தங்கள் புத்தகங்கள் பெருவெற்றி பெற வாழ்த்துகள்!
இது போல மேலும் பல புத்தகங்களை இவ்வருடமும் எழுத இறைவன் தங்களுக்கு நேரமும் வசதியும் ஏற்படுத்தட்டும்!
உங்களுக்கும் மகிழ்வுடன் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மனமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்திற்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteதங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இடைவெளி இல்லாமல் பதிவிட திரும்பவும் வந்திருக்கின்ற உங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்களது படைப்புக்கள் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்னை வரவேற்று வாழ்த்திய உங்களின் அன்பிற்கு மனமகிழ்வுடன் என் நன்றி நண்பரே.
Deleteபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்! சரிதாயணம் பார்க்க ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்கா இருக்கேன். கோட்டையிலும்(வேலூர் கோட்டைங்க) உங்க சரிதா (நகைச்சுவை) கொடி கட்டி பறப்பாங்கல்ல்...!
ReplyDeleteஎனக்கும் கோட்டையில் சரிதாவின் கொடி பறக்க வேண்டும் என்பதில் மிக விருப்பம் தான். வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஎங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
ReplyDelete‘எங்கள்’ பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி தருகின்றன. என் இதயம் நிறை நன்றி ஸ்ரீராம்.
Deleteவணக்கம் நண்பரே...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
புத்தகக் கண்காட்சி விழா சிறக்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் மகேன். புத்தகத் திருவிழா முடிந்ததும் சந்திக்கலாம். உற்சாகம் தந்த உங்களின் வருகைக்கு உளம் கனிந்த நன்றி.
Deleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.என் கடன் பணி செய்து கிடப்பதே என்று (அதுவும் புத்தகங்களுக்கு நடுவில்) இருந்து பணி செய்துவிட்டு உற்சாகமாய் வந்திருக்கும் உங்களிடமிருந்து ஊற்றாய பெருகி வரப்போகும் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரிதாயணம் சிலருக்கு அப்புசாமி ஞாபகம் வருவதைப்போல எனக்கு கடுகு சாரின் கமலாவும் நானும் ஞாபகம் வருகிறது.
ReplyDeleteஎன்னிடமிருந்து நல்ல பதிவுகள் வருமென்ற உங்களின் எதிர்பார்ப்பிற்கு ஒரு சலயூட் ஷமி. சரிதா கதைகள் கடுகு ஸாரி்ன் கமலா கதைகளின் பாதிப்பிலிருந்து பிறந்தவைதான். ஆகவே அவை நினைவுக்கு வந்தால் அது மிகமிகச் சரியானதே. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteவாழ்த்துக்கள்! தொடர்ந்து கலக்குங்க!
ReplyDeleteபார்த்து நாளாச்சு சுரேஷ். நலம்தானே? உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்களின் வாழ்த்துக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!
Deleteவணக்கம் நண்பரே...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
புத்தகக் கண்காட்சி விழா சிறக்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகமகிழ்வுடன் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரிதுவான். மனமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்கு என் இதயம்நிறை நன்றி.
Deleteபுத்தாண்டில் பல நல்ல செய்திகளைப் பகிர்ந்துள்ளீர்கள்! மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteமகிழ்வும், உற்சாகமும் தந்த உங்களின் பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteபுத்தாண்டுக்கும், புத்தக வெளியீட்டுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களின் ஆசிகளும் வாழ்த்துக்களும் எனக்கு மிகப்பெரிய பலம் ஸார். என் உளம் கனிந்த நன்றி.
Delete‘நீ வைத்த மருதாணி’
ReplyDelete>>
புத்தகத்தோட தலைப்பே கவிதையா இருக்குண்ணா. எனக்கும் நிறைய புத்தகங்கள் வாங்கி பார்சல் பண்ணி அனுப்பவும்
தலைப்பு மட்டுமில்ல... அவர் எழுதியிருக்கற கவிதைகளும் ரொம்பவே ரசிக்க வெக்குதும்மா. பு.கண்காட்சியில நிறைய வாங்கி பார்சல் நிச்சயமா அனுப்பிடறேன். சரிதானே...!
Deleteபுத்தக கண்காட்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் .இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும்!
ReplyDeleteநீண்ட இடைவெளியாய்டுச்சு நேசன் உங்களைப் பாத்து. உங்களுக்கும் உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Deleteகவிதைப்புத்தகம் கண் சிமிட்டுகின்றது எப்போது என்னை வாங்குவாய் என்று இப்போது சென்னை வர முடியாவிட்டாலும் பின் ஒருநாள் வாங்க முடியும் அவர் கவிதைக்கு உங்கள் பார்வையில் ஒரு பதிவு தாருங்கள் அன்புடன் தனிமரம்!மீண்டும் சந்திப்போம் !
ReplyDeleteநல்ல கவிதைகள் அடங்கிய தொகுப்புகள் அவை. நான் படித்து ரசித்தவற்றை பின்னர் பதிவாக அவசியம் வெளியிடுகிறேன் நேசன். மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைய நன்றி.
Deleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் !
ReplyDeleteபுத்தக வெளியீட்டிற்கும்
சேர்த்தே !
வடிவமைப்பு அற்புதம் !
வடிவமைப்பை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Deleteவருக வருக! மீண்டும் பதிவுலகிற்கு திரும்பி வந்ததற்கு நல்வரவு!
ReplyDeleteபுத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். இந்த வருடம் மிகச் சிறந்த வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள்!
வாங்கோ ரஞ்சனிம்மா... உங்களுக்கு என் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளும், உங்களின் ஆசிகளுக்கு மகிழ்வுடன் என் நன்றியும்!
Deleteபிறந்திருக்கும் இவ்வாண்டு உங்களுக்கு சிறப்புற அமைந்திருக்கின்றது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
நலம்தானே மாதேவி... இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் பூரண மகிழ்ச்சியையும், நல்லனவற்றையும் தரட்டும்னு வாழ்த்தறேன். நன்றி!
Deleteசொல்லவே இல்ல புக் வந்திருக்குன்னு?:) அதான் இங்க சொல்லிட்டேனேக்கா என்கிறீர்களா சரிதான்..பாராட்டுக்கள். சுபா எனக்கும் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி இருந்தார்(கள்) எத்தனை அருமையாக இருக்கு அந்த வாசகங்கள் இல்லையா...கணேஷுக்கும் அன்பான வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் கணேஷ் புத்த வெளியீட்டிற்கு. புத்தக கண்காட்சியை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.சென்னைக்குவர சந்தர்ப்பம் அமையுமா என தெரியவில்லை.
ReplyDeleteதங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Wish you a happy new year, belated
ReplyDeleteலேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete