Wednesday, January 16, 2013


ன்னுடைய ‘சரிதாயணம் @ சிரிதாயணம்’ புத்தகததிற்கு நூல் வெளியீட்டு விழா நடத்த இயலாமல் போய் விட்டதே என்று ஒரு ஏக்கம் மனதுக்குள் இருக்கத்தான் செய்தது. அந்தக் குறையை நிவர்த்தி செய்து மகிழ்ச்சியைத் தந்தார் ‘சிரிப்பானந்தா’ என்ற பெயரில் அறியப்படும் திரு.சம்பத்குமார். நான் அவரிடம் ‘சரிதாயணம்’ புத்தகத்தை அளித்து, படித்துக் கருத்துக் கூறும்படி கேட்டிருந்தேன். ‘‘ஜோக்ன்ற வார்த்தைய ‌சொன்னாலே சிரிக்கற ஆசாமி நான். நகைச்சுவை கதைகள்னு வேற சொல்றீங்க. அவசியம் படிக்கறேன்’’ என்று சொல்லிச் சென்ற அவர், கதைகளை படித்து ரசித்து, என்னைத் தொடர்பு கொண்டு புத்தகக் கண்காட்சியின் மூன்றாவது தினமான ஞாயிறன்று (போகியன்று) அம்பத்தூரில் மாலையில் நடைபெறவிருந்த சிரிப்பரங்கத்தின் மாதாந்தரக் கூட்டத்திற்கு என்னை அழைத்தார். அங்கே அவரது சிரிப்பரங்க உறுப்பினர்களுக்கு என் புத்தகம் பற்றிப் பேசி அறிமுகம் செய்யவிருப்பதாகச் சொன்னார்.

காலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கோவையிலிருந்து தங்கள் புத்தகங்களுடன் வந்திருந்த நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு மதியம் 2.45க்கு அங்கிருந்து கிளம்பினேன்- நண்பர்கள் சீனுவையும், அரசனையும் உடனழைத்துக் கொண்டு. என் பதி்ப்பாளர் பிரகாஷ், வடபழனியிலிருந்து நேராக அம்பத்தூர் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். நாங்கள் பேருந்தில் ஏறிச் சென்று கொண்டிருந்தபோது, தொலைபேசியில் அழைததார் ஸ்ரீராம். தான் புத்தகக் கண்காட்சியில் இருப்பதாக அவர் கூற, நாங்கள் விழாவுக்குச் சென்று கொண்டிருப்பதை அவரிடம் ‌சொன்னேன். நேரில் சந்தித்து அளவளாவி மகிழும் வாய்ப்பு போய்விட்டதே என்று ரொம்பவே வருத்தமாக இருந்தது.

ஏற்கனவே சிரிப்பரங்கத்தி்ன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனுபவசாலியான சீனு, எங்களை சரியாக வழிநடத்திச் சென்றார். சிரிப்பரங்கம் துவங்குவதற்கு முன்பு, தலைமை ஏற்பவரை மேடைக்கு அழைத்த சிரிப்பானந்தா, அடுத்து, ‘‘எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களையும், பதிப்பாளர் பிரகாஷ் அவர்களையும் சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கிறேன்’’ என்றார். ஆனந்த அதிர்ச்சியாகிப் போனது எனக்கு. ‘‘என்னை நல்லவேன்னு சொல்லிட்டாங்கம்மா...’’ என்று வடிவேலு புலம்புகிற தினுசில், ‘‘என்னை எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாங்கய்யா...’’ என்று மனஸ் உள்ளே குதியாட்டம் போட்டது. பாவம்...! ஆட்டுக்கு எப்பவுமே முதலில் அலங்காரம் பண்ணி மாலை போடுவார்கள் என்பது அதற்குத் தெரிந்தால் தானே...

சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஜோக்குகளை சொல்லி சபையைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பது வழக்கமான ஒன்றாம். உறுப்பினர்கள் ‌அழைக்கப்பட்ட வரிசையில் வந்து சொல்லத் தொடங்கினர். சில ஜோக்குகள் பழையவையாக இருந்தன. சில புதிதாகச் சொல்லப்பட்டவையாக இருந்தன. இருந்தாலும் அனைவரும் எல்லா ஜோக்குகளுக்கும் சிரித்து உற்சாகப்படுத்தினார்கள். (ஒருவேளை சிரிக்காவிட்டால் சிரிக்கும்வரை இவர் ஜோக் சொல்லிக் கொண்டே இருப்பாரோ என்பதாலும் இருக்குமோ? ஹி... ஹி....)

மேடையில் அமர்ந்து கொண்டு ஜாலியாக ஜோக்குகள் கேட்டு சிரித்துக கொண்டிருந்த எனக்கு பாக்ஸிங் புலி முகம்மது அலி போல ஒரு ‘பன்ச்’ கொடுத்தார் சிரிப்பானந்தா.  நான்கைந்து உறுப்பினர்கள் ‌பேசியதும், ‘‘இப்போது ‘சரிதாயணம்’ங்கற புத்தகத்தைப் பத்தி சொல்லப் போறேன். அது முடிந்ததும் தலைவர் உரையாற்றுவார். பின் சிறப்பு விருந்தினர்கள் உரை நிகழத்துவார்கள். பின் மற்ற உறுப்பினர்களின் சிரிப்பைத் தொடரலாம்’’ என்றதும் நான் ‘ழே’ என்று விழிக்க ஆரம்பித்தேன். ‘‘ம்மே... ம்மே...’’ என்று மிரண்டு போய் அலறியது மனஸ்!

ஸ்கூல்ல படிக்கறப்பவே பேச்சுப் போட்டிக்கு பேர் கொடுத்துட்டு, ஸ்டேஜுக்குப் ‌போனதும் மைக்கையும், எதிர்லருக்கற மக்களையும் பார்த்து கை, கால் உதறி, பேச்சே வராம ‘திருதிரு’ன்னு முழிச்சுட்டு பேசாமலேயே எஸ்கேப்பான மாவீரன்(!) நான். என்னைப் போய் சிறப்பு உரை ஆத்துவாருன்னு சொல்லிட்டாரே... என்னத்தை ஆத்தறது?ன்னு புரியலையே... என்று எண்ணியபடி பதிபபாளர் பிரகாஷைப் பார்த்தேன். அவர் வாழ்க்கையைப் படித்தவர், மனிதர்களைப் படித்தவர், ஆனால் பள்ளிக்குச் சென்று அதிகம் படிக்காதவர் என்பதால் அவர் என்னைவிட மோசமாக விழித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அங்கே சிரிப்பானந்தா புத்தகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். என் கதைகளைப் புகழ்ந்து தள்ளினார். கதையில் வரும் பல (எனக்கே தெரியாத) நல்ல அம்சங்களை ரசித்து,  நுணுக்கமாக அவர் விவரித்தபோது, சற்றே கூச்சத்தால் நெளிய வேண்டியிருந்தது. அவர் பேசினதும் வந்திருந்த உறுப்பினர்களில் பெரும்பாலானவங்க புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கிக்கிட்டாங்க. சிரிப்பரங்க உறுப்பினர்கள் எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. ஹி... ஹி.... அதன்பின் தலைமையுரை நடக்க ஆரம்பித்தது.

என் மனசுக்குள் நாம என்ன பேசி ஒப்பேத்தப் போறோம் என்கிற சிந்தனை ஓடிட்டிருந்தது. தலைமையுரைக்குப் பின் பதிப்பாளர் பிரகாஷைப் பேசச் சொல்ல, ‘‘நான் ரொம்ப வருஷமா நிறைய புத்தகங்கள் போட்டுக்கிட்டிருக்கேன். ஒரு நகைச்சுவைப் புத்தகம் வெளியிடணும்னு ரொம்ப நாள் எண்ணம். பாலகணேஷ் எனக்கு நீண்டகால நண்பர். இவர் நகைச்சுவைச் சிறுகதைகள்னதும் உடனே வெளியிட்டுட்டேன். உங்க எல்லாருக்கும் நன்றி’’ அப்படின்னு நம்ம பிலாசபி பிரபாகரன் பேசற மாதிரி நாலே வார்த்தை பேசிட்டு ‘எஸ்’ஸாயிட்டாரு.

இவங்க பேசற நேரத்துக்குள்ள யோசிச்சு ஒரு மாதிரியா தயாராயிருந்தேன். நான் முன்ன எழுதின ‘இரட்டைப் புலவர்கள்’ மேட்டர்லருந்து ஒண்ணையும், ‘சிலேடைச் சிதறல்கள்’லருந்து ஒண்ணையும், ரெண்டு நாள் முன்னாடி படிச்ச முனைவர் கு.ஞானசம்பந்தன் புத்தகத்திலிருந்த மூணு ஜோக்குகளையும் எடுத்து, அந்த உதிரி ஜோக்குகளை வார்த்தைப் பூக்களால இணைச்சு ஒரு மாலையா மனசுக்குள்ள தயாரிச்சு வெச்சிருந்தேன். அதை கடகடன்னு மைக் முன்னாடி ஒப்பிச்சேன். குரல்ல கொஞசம் தடுமாற்றம் வேற.

நான் பேசி முடிச்சு மேடைய விட்டு இறங்கினதும், சற்றே பருமனான ஒரு பெண்மணி என்னை‌ நோக்கி அடிக்க வருபவர் போல வேகமாக வந்தார். முன்பே மேடைக்கு வந்து, பிஸ்கட், காபி எல்லாம் கொடுத்து ‘கவனித்தது’ அவர்தான் -இப்போது வரும் வேகத்தைப் பார்த்தால் நம் பேச்சுக்காக ‘கவனித்து’ விடுவாரோ என்று உதறல் எனக்கு. அருகில் வந்தவர், ‘‘மேடையில பேசினதே இல்லை, முதல் அனுபவம்னு சொல்லிட்டு அருமையாப் பேசி அசத்திட்டீங்க. சூப்பர்’’ என்று கை கொடுத்தாரே பார்க்கலாம்! ஹப்பாடா...! ‘‘அட... நமக்கும் ஒரு ரசிகையா... அவ்வ்வ்வ!’’ என்று மனஸ் குட்டிக்கரணமடிக்க, சந்தோஷமாகக் நன்றி சொன்னேன்.

விழாவுக்குக் கிளம்புகையில், பு.கண்காட்சியில் அன்று கூடியிருந்த நண்பர்கள் படையுடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், திரும்புகையில் பல பிரதிகள் புத்தகம் விற்று பலரைச் சென்றடைந்து விட்ட சந்தோஷமும், ‌ஜோக்குகள் கேட்டு மகிழ்ந்த அனுபவமும் சேர்ந்து கொள்ள, திரும்புகையில் மனஸ் மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தது. இந்த மகிழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணமான சிரிப்பானநதா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. (நிச்சயம் இந்த வார்த்தை என் உணர்வுகளை வெளிக்காட்டுவதாகாது. அதற்கும் மேல் மனஸ் தளும்பிக் கொண்டிருக்கிறது).

சிரிப்பரங்கத்துக்கு எனக்கு வழிகாட்டியா செயல்பட்டதோட இல்லாம, விழாவு்க்கு அழைச்சுட்டுப் போய் அங்கருந்து நான் புறப்படற வரைக்கும் என்கூடவே இருந்து உதவின, திடங்கொண்டு போராடும் ‘சீனு’, பொங்கலுக்கு ஊருக்குப் புறப்படற அவசரத்தில புத்தகக் கண்காட்சில சுற்றுவதைப் புறக்கணித்து எனக்காக என்னுடன் வந்து விழா முழுவதும் உடனிருந்த ‘கரைசேரா அலை’ அரசன் இருவருக்கும் என் மனம் நிறைய நன்றி!

65 comments:

  1. ஆனந்த அனுபவம் !
    சரிதாயணம் என் வீட்டு புத்தக அலமாரியையும்
    அலங்கரிக்கும் நாள் நோக்கி .....

    ReplyDelete
    Replies
    1. இவ்வார இறுதியிலேயே நிச்சயம் அலங்கரிக்கும் தோழி. உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி ஆவலுடன் நானும். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இதைப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. Replies
    1. மனமகிழ்வு தந்த உங்களின் நல்வாழ்த்துக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  3. நானும் அம்பத்தூரில் நடந்த சிரிப்பரங்கத்தில் கலந்துகொண்டது போன்ற உணர்வு தங்கள் பதிவைப்படித்ததும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விழா நிகழ்வை ரசித்துக் கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  4. ஆஹா ஆஹா.... சிரிப்பு வேணாமுன்னு யாராவது சொல்வாங்களா?

    மனஸ் போட்ட ஆட்டத்தை நினைச்சு நானும் சிரிக்கிறேன்.

    அடுத்த பதிப்பு எப்போ?

    பி.கு: எழுத்தாளர் = அட்லீஸ்ட் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டவர்.

    ஜோதியில் கலந்தமைக்கு வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்டு, என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி. (இந்த புத்தகம் நல்லா போயி்ட்டதுன்னா, அடுத்தது உடனே வந்துராதா என்ன...)

      Delete
  5. என் கைக்கு இன்னும் புகைப் படங்கள் வந்து சேரவில்லை சார்... தாமதத்திற்கு மன்னிக்கவும்... அவர் கூடிய விரைவில் என்னிடம் தந்துவிடுவார் என்று நம்புவோமாக.. ஆமன்....

    சிறப்பான ஏற்பாடு செய்தமைக்கு சிரிபானந்தாவிற்கு நன்றிகள்.. சிரிபரங்கம் பற்றியும் பதிவு செய்தது மகிழ்ச்சி...

    எழுத்தாளராக தன நிலை உயர்த்தி இருக்கும் வாத்தியார் வாழ்க வாழ்க

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன... படங்களை வைத்து ஒரு தனிப்பதிவு பின்னால போட்டுரலாம்... என்னுடனேயே எப்போதும் இருந்து இப்போதும் என்னை வாழ்த்திய உனக்கு என் இதய நன்றி!

      Delete
  6. வாழ்த்துக்கள் கணேஷ் ...புத்தக அட்டைப்படம் மிக அருமையாக இருக்கிறது. நகைச்சுவை புத்தகத்திற்கு ஏற்ற மேல் அட்டை. நீச்சயம் அட்டை மட்டும் அல்ல உள்ளே உள்ள நகைச்சுவை எல்லோரையும் கவரும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ந்ண்பா. அட்டைப் படத்தை நான் ‘ஸ்பாட் லேமினேஷன்’ ‌முறையில் அச்சிடும்படி பதிப்பாளரிடம் சொல்லியிருந்தேன். (எழுத்தாளர் பெயர், கதை பெயர், படம் மூணும் ஸ்பெஷல் லாமினேஷன்ல மின்னறது ‘ஸ்பாட் லாமினேஷன்’ம்பாங்க) புத்தகத்தை கையில வாங்கினவங்க எல்லாருமே அட்டையப் பாராட்டறதுல எனக்கு சந்தோஷம். அ‌து இப்ப உங்க மூலமாகவும். என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்கிகளின் பகிர்வு நண்பரே...
    புத்தக அறிமுக விழா இல்லாமல் போனதற்கு..
    இந்த சிரிப்பரங்கம் வடிகாலாக அமைந்து போனது...
    வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் மகேன். என் மன உணர்வுகளுக்கு சிரிப்பரங்கம் விடுதலை தந்து மகிழ்வைத் தந்தது. என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. மிக்க மகிழ்ச்சி. கணேஷ் சார்! இரண்டு முறை கண்காட்சிக்கு வந்தும் புலவர் ஐயா வைத்த தவிர வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அடாடா... நானும் இந்த முறை நிறையப் பேரை சந்தித்தும் சிலரை சந்திககத் தவறியுமிருக்கிறேன். சரி, விரைவில் மீண்டும் சந்திக்கலாம். என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. சிரிப்பரங்கத்தில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அண்ணா . வாழ்த்துகள்.

    புது வேலை தங்களுக்கு மிக மகிழ்ச்சியும், மன நிறைவும் தருவதை நேரில் பேசிய சில நிமிடங்களில் உணர முடிந்தது. இந்த ஆண்டு உங்களுக்கு அசத்தலாய் இருக்கும் என நம்புகிறேன்

    அப்புறம் புக்கை நானும் படிச்சிகிட்டு இருக்கேன் :)

    ReplyDelete
    Replies
    1. உங்களின கணிப்பு மிகச் சரியே. இப்போதைய என் மனநிலை அபபடித்தான் மகிழ்வும பூரிப்புமாய் இருக்கிறது. உங்களைப போன்றோரின் வாழ்ததுகளால் இவ்வாண்டு வெற்றிகரமாய் நிச்சயம் அமையும். என் புக்கை படிச்சுட்டு நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க மோகன். (சந்தடி சாக்குல விளம்பரம். ஹி.. ஹி..) உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. நேரில் வர முடியவில்லையெனிலும் ரசிக்க முடிந்தது..... புத்தகத்தை நீங்கள் சிரிப்பானந்தாவிடம் தந்த போது நானும் கூடவே இருந்தேன் - நடேசன் பூங்காவில் - அப்போது பேசியதை மனதில் மீண்டும் அசை போட்டேன்... :)

    வாழ்த்துகள் கணேஷ். மேலும் பல புத்தகங்கள் வெளியிட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். அன்றைய சந்திப்பு மிக இனிமையாக அமைநதிருந்தது இலலையா... என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  11. சரிதாயணம் @ சிரிதாயணம்’ புத்தகததிற்கு நூல் வெளியீட்டு விழா நடத்த இயலாமல் போய் விட்டதே ஏன், ஏன் ,ஏன்?

    ஆட்டுக்கு எப்பவுமே முதலில் அலங்காரம் பண்ணி மாலை போடுவார்கள் என்பது அதற்குத் தெரிந்தால் தானே. அதானே, அதானே?

    சிரிப்பானந்தா தயவுல நிறையபேருக்கு உங்க புக் படிக்க கிடைச்சிருக்கே? அது பெருமைதானே? எனக்கு எப்ப கிடைக்கும்???????

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்து ரசித்த பூந்தளிருக்கு என் உளம் கனிந்த நன்றி. உங்கள் முகவரியை எனக்கு மடலிடுங்கள் தங்கையே. உடன் அனுப்பித தருகிறேன்.

      Delete
  12. சிரிப்பானந்தா சம்பத் போன்ற அருமையானதொரு மனிதர் வாயிலாக உங்கள் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது பெரும் பாக்கியம். இன்னும் நிறையப் புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான். சிரிப்பானந்தா அற்புதமான மனிதர். அவர் ராசிக் கரங்களால் புத்தகம் அறிமுகம் பெற்றது எனக்கு மிகமிகமிக மகிழ்வே. உங்களின் வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  13. இன்னும் இன்னும் நிறையப் புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள் கணேஷ். சந்தோஷத்தில் பெரிய சந்தோசம் பிறரைச் சந்தோஷப் படுத்துவது. இது நீங்கள் எழுதிய புத்தகத்துக்கும் பொருந்தும். அம்பத்தூர் சிரிப்புக் கூட்டத்துக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள். அன்றைய மாலை முழுவதும் சிரித்துச் சிரித்தே கழிந்ததில் விழா முடிந்து 2 நாட்களாகியும் இன்னும் மனஸ் சந்தோஷமாகவே துள்ளிக் கொண்டிருக்கிறது. நற்கருத்து சொன்ன உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  14. You have got Man of Match award in your debut match. Very good. Keep it up. I expect more such books from you soon.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் மோகன். மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.

      Delete
  15. அதற்கும் மேல் மனஸ் தளும்பிக் கொண்டிருக்கிறது).

    இனிதான வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  16. மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்கு மன நிறைவுடன் என் நன்றி.

      Delete
  17. சுவாரசியமான சுவையான அனுபவம் தங்களுக்கு. அதை எங்களுடன் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டதை படித்து ரசித்து மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  18. வாழ்த்துகள் பால கணேஷ்! வரிசையாக வெளிவரப்போகும் பல நூல்களுக்கு இது ஒரு தொடக்கமே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க குட்டன்... பாத்து நாளாச்சு இந்தப் பக்கம்! நலம்தானே... என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  19. பத்தகச் சந்தையில் தங்களை சந்திக்கயியலாவிட்டாலும், நல்ல நிகழ்வு நடந்துள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.

      Delete
  20. வாழ்த்துக்கள் கணேஷ் சார் புத்தகம் நம்ப ஏரியாவுக்கு எப்ப வருகிறது?(கோவை)

    ReplyDelete
    Replies
    1. இன்னும் மற்ற ஊர்களில் கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை. புத்தக கண்காட்சி முடி்ந்ததும் செய்துவிட்டு சொல்கிறேன். அதற்கு முன் புத்தகம் என்னுடனேயே கோவைக்கு உங்களைச் சந்திக்க வரவும் வாய்ப்புள்ளது. பார்க்கலாம்... என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  21. வாழ்த்துக்கள் கணேஷ் சார்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி சரவணன்.

      Delete
  22. புத்தக வெளியீடு நிகழாத வருத்தத்தை திரு சிரிப்பானந்தா அவர்களின் சிரிப்பரங்கம் போக்கியிருக்கிறது என்பதை தளும்பும் உங்கள் 'மனஸ்' சொல்லிவிட்டது.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா.

      Delete
  23. “சரிதாயணம் @ சிரிதாயணம்” புத்தகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! படிக்க ஆவலாக உள்ளேன்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி சுபத்ரா. bganesh55@gmail.com என்ற என் முகவரிக்கு மடலிடுங்கள். புத்தகம் அனுப்புகிறேன். மிக்க நன்றி.

      Delete
  24. பதிவு மிக மிக நகைச்சுவையாக இருந்தது.

    வெளியிட்ட நிகழ்ச்சியே இவ்வளவு சுவாரசியம் என்றால்
    புத்தகம் எப்படி சுவாரசியமாக இருக்கும் என்பதை நினைத்து என் மனம் இப்பவே படிக்க ஏங்குகிறது.
    (நானும் “ஜோக்“ என்று சொன்னாலே சிரித்துவிடும் பேர்வழி தான்)
    உங்கள் புத்தகம் மணிமேகலைப் பிரசுரமா...?
    எழுதிப் போட்டு கேட்டு படித்து விடுகிறேன்.

    வாழ்த்துக்கள் பாலகணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பிரபல பிரசுரங்கள் வெளியிடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. இப்புத்தகத்தை என் நண்பரின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் பெற என்னும் வசதி செய்ய முயன்று வருகிறேன். வரும் வாரத்தில் தெரிவிக்கிறேன் அருணா. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  25. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜனா... பாத்து நாளாச்சு... நலம்தானே! மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  26. இதுவே ஒரு சூப்பர் புத்தக அறிமுக விழா.. மேடைல ஒரு கலக்கு கலக்கிடீங்க போல.. ஆனாலும் உங்க மனஸ் உங்கள ரொம்ப பயமுறுத்துது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா. நானே எதிர்பாராம கலக்கிட்டேன். மனஸ் எப்பவுமே அப்படித்தான்... அதை மாத்தவே முடியாது. ரசிச்சப் படிச்ச உனக்கு என் இதய நன்றி.

      Delete
  27. ஆனந்த அனுபவம்.
    வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  28. ‘‘மேடையில பேசினதே இல்லை, முதல் அனுபவம்னு சொல்லிட்டு அருமையாப் பேசி அசத்திட்டீங்க. சூப்பர்’’ என்று கை கொடுத்தாரே பார்க்கலாம்! ஹப்பாடா...! //

    முதல் பேச்சிலேயே அசத்தி விட்டீர்களா.... வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. என்னை வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி நண்பரே...

      Delete
  29. Sooper sir.. Congratulations! Eagerly waiting for your book!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களு்க்கு மனம் நிறை நன்றி நண்பா.

      Delete
  30. வாழ்த்துகள் சார். சரிதாயணம் வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் படித்து விழுந்து விழுந்து சிரிக்க போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் படித்து, விழாமலேயே சிரியுங்கள். வாழ்த்‌துச் சொன்ன உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  31. தமதமான வரவுக்கு மன்னிக்க.முதல் ஆளாக வாழ்த்த வேண்டும்,புத்தகம் வாங்க வேண்டும் என்ரு இருந்தேன்.சந்தர்ப்ப சூழ்நிலையால முடிய வில்லை.வாழ்த்துக்களண்ணா.இன்னும் உங்கள் படைப்பு பற்பல நூல் வடிவில் வரவேண்டும் என்பதே என் அவா.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய நூல்கள் வரணும்கறதுதான்மா என் ஆசையும். பார்க்கலாம். புத்தகம் நீங்கள் வாங்கா இயலாவிட்டால் என்ன... உங்களை அது தேடி வரும். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வாழ்த்திய தங்கைக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  32. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  33. சரிதாயணம் படிச்சுட்டு, "ழே" என விழிக்கணும்னு வந்தால் இங்கே புத்தகமாக வெளிவந்தது குறித்துச் சொல்லி இருக்கீங்க. ஹிஹிஹி, எனக்குத் தெரியாது. மன்னிச்சுக்குங்க. :(

    அம்பத்தூருக்கு நாங்க இல்லாதப்போப் போயிருக்கீங்களே? அப்போ வந்திருக்கலாம். :)))

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube