Tuesday, January 29, 2013

ச்சும்மா.... கொஞ்சம் ஜாலியா...!

Posted by பால கணேஷ் Tuesday, January 29, 2013
ஹாய்,,, ஹாய்,... ஹாய்.... நான் நல்ல சந்தோஷமான மூட்ல இருக்கேன்றதால... இன்னிக்கு எந்த மேட்டரையும் எழுதி உங்களைத் துன்புறுத்த வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். (காரணம் கடைசியில சொல்லப்படும்.) இங்க நான் தந்திருக்கற புகைப்படங்களைப் பார்த்து மெல்லிய புன்னகை சிந்திட்டுப் போங்க.

டைமே இல்லப்பா... பிஸி(னஸ்)மேன் நான்!

குழந்தை எங்க போயிரப் போவுது? ‘விஸ்வரூபம்’ எப்ப ரீலீஸ்னு மெசேஜ் வந்திருக்கு... பாத்துடறேன் முதல்ல...

என் கிட்டருந்து பந்தை தட்டிப் பறிக்க எந்தக் கொம்பனாலயும் முடியாது...!

இப்படி டெய்லி காசு போட்டு பணம் சேத்தா தான் குட் பாய்!

‘‘இதான் விஸ்வரூபம் ரிலீஸாகாம இருக்கறதுக்கு நிஜக் காரணம். நான் சொன்னேன்னு கமல்கிட்ட சொல்லிடாதீங்க, சரியா...?’’

லண்டன்ல எங்க நல்ல சாப்பாடு கிடைக்கும்னு தெரிஞ்சுக்காம எப்படி அங்க பறக்கறதாம்...?
‘‘உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே கிடையாதாடா...?’’



வலையுலகில் 500 அடிச்சுட்டு அசால்ட்டா பல பேர் அடிச்சு ஆடிட்டிருக்கறப்ப வெறும் 200 அடிச்சுட்டு நான் ‘ஆடக்’கூடாதுதான்! ஆனா சற்று பின்னோக்கி்ப் பார்த்தால் நான்தான் எழுதினேனா என்று எனக்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. அப்படி நான் தொடர்ந்து எழுதிட்டு வர்றதுக்கு காரணம் நீங்க... நீங்க... நீங்க மட்டும்தான். அதனால என்னை செயல்பட வைக்கிற உங்களுக்கு மிகமிக மகிழ்வோடயும், மன நெகிழ்வோடயும் என் நன்றி!

80 comments:

  1. 200 பதிவுகள் இட்டமைக்கும், விரைவில் 1000 பதிவுகளை தொடவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான உங்களின் வாழ்த்து முதலில் கிடைத்தது மிகமிக மகிழ்வாக இருக்கிறது ஸார். என் இதயம் நிறை நன்றி!

      Delete
  2. வாவ்.... 200-வது பதிவா? வாழ்த்துகள் கணேஷ்.... படங்களும் கமெண்டுகளும் அருமை!

    BIT படம் தவிர்த்திருக்கலாம்.....

    ReplyDelete
    Replies
    1. ஸாரி... கொஞ்சம் ஓவர்!ன்னு சொல்ற மாதிரி ஆயிடுச்சோ...? ஸாரி வெங்கட்! ஹி... ஹி... வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  3. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  4. இருநூறுக்கு வாழ்த்துக்கள்......

    அப்படியே உங்களுக்கு வந்த கருத்துரைகளின் எண்ணிக்கைகளையும் பாருங்க.. பத்தாயிரத்துக்கும் மேல தாண்டியிருச்சு.

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அடடே... வரலாறு ரொம்ப முக்கியம்னு சைடுல ‌போட்டுட்டு, நானே வரலாறை கவனிக்காம இருந்திருக்கேன். ஹி... ஹி... சுட்டிக்காட்டி, வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள் நண்பா1

      Delete
  5. 200 வது பதிவா? ஆச்சர்யம் அத்தனையும் முத்துக்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கண்ணதாசன். திரும்பிப் பார்க்கையில் நான் மனம் வருந்தும்படியோ, என்னால் பிறர் மனம் வருந்தும்படியோ எதுவும் எழுதவில்லை என்பதில் எனக்கு ஒரு தனி நிறைவு. அன்புடன் வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  6. இருநூறுக்கு நல்வாழ்த்துகள்! தொடருங்கள்.

    படங்கள் நல்ல பகிர்வு. குறிப்பாக நான்காவது:)!

    ReplyDelete
    Replies
    1. படங்களை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  7. ச்சும்மா.... கொஞ்சம் ஜாலியா...! 200 பதிவு போட்டாலும் எல்லாம் தங்கம்தான்.வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் தங்கமென்று மனம் நிறைய வாழ்த்திய நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  8. Congrats!

    All photos & comments were nice - especially piggy's bank!

    ReplyDelete
    Replies
    1. அந்த பன்றியின் உண்டியல் உங்களுக்கும் பிடிச்சிருக்கா? மகிழ்ச்சி! என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  9. 200 க்கு வாழ்த்துக்கள்

    ஆங்

    ஏங்.. இப்பூடீ.....நாங்க பன்ற வேலைய நீங்க பண்றீங்க - நீங்கெல்லாம் எழுதோணும். ச்சும்மா.... கொஞ்சம் ஜாலியா...ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. அன்பாய் உரிமையாய் சொன்னதில் மகிழ்ச்சி நண்பா. நிறைய எழுதறேன். (எப்பயாச்சும்தான் புகைப்படப் பதிவு போடுவேன்) மகிழ்வு தந்த உங்கள் வாழ்த்துக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  10. எங்கிருந்து சார் இந்த படங்கள பிடிச்சீங்க !!!

    ஆஹா! 200 - டபுள் செஞ்சுரி போட்டீங்களா??? தொடர்ந்து பல சென்சுரி அடிக்க வாழ்த்துக்கள் சார்!!

    ஹ்ம்ம்.. நான் எப்ப ஒரு 50 - அரை சதம் போடபோறேன்னு தெரியல.. எனக்கு 50 ஆகறதுக்குள்ள நடந்த சரி....

    ReplyDelete
    Replies
    1. கலெக்ஷன்ல கொஞ்சம் வெச்சிருக்கேன் அப்பப்ப எடுத்துவுட... டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்தினதுல ரொம்ப மகிழ்வோட என் நன்றி. அரைசதம் சீக்கிரம் போட வெச்சுடறோம் வாங்க- குறைஞ்ச வயசுலயே... சரியா?

      Delete
  11. பார்த்தாலே சிரிக்க தூண்டும் பாலா சார் படங்களும் வரிகளும் .........அருமை

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழி!

      Delete
  12. படன்கள் எல்லாமே மிக அருமை. 200 பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்க.....

    ReplyDelete
    Replies
    1. படங்களை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  13. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அய்யா ..
    20000 ஆம் பதிவு காண வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவ்ளவ் பேராசை எனக்கில்லை ராஜா... ஆனாலும் தாராள மனசோட வாழ்த்தின உங்க அன்பு ரொம்பப் பிடிச்சிருக்கு. மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  14. வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து இன்னும் சுவாரசியமாக எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இயன்றவரை சுவாரஸ்யமாய் எழுதுகிறேன் பாலா. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. You have crossed 200 but I could read only 50% of it and that 50% is enough to continue to read your blog. This is the secret of your writing. No vulgarity, disciplined way of conveying the matter, hilariously narrating the incidents etc., etc. are the core reasons for your success. KEEP IT UP - I AM WAITING.

    ReplyDelete
    Replies
    1. என் தோழிகளும், தங்கைகளும் முகம் சுளிக்கும்படி எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பேன் நான். ஹிலேரியஸ் என்பது இயல்பாய் வருகிற ஒன்று. அனைத்தையும் நீங்கள் ரசிப்பதில் மனநிறைவு எனக்கு. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  16. 200-க்கும் விரைவில் 2000 இடுகை தொடவும் வாழ்த்துகள்.

    பந்து விளையாடும் கொம்பன் அருமை :-)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  17. முதலில் 200க்கு வாழ்த்துக்கள் அண்ணா...

    இது இன்னும் லட்சங்களில் தொடரட்டும்...

    படங்கள் அனைத்தும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. படங்களை ரசித்து என்னையும் மனம் நிறைய வாழ்த்தின உங்களுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி குமார்.

      Delete
  18. வரும் ஞாயிறு மாலை பார்க் ஷெரட்டனில் 200 பேருக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்த அண்ணன் பாலகணேஷ் புகழ் ஓங்குதாங்காக ஓங்குக!!

    ReplyDelete
    Replies
    1. நான் யாருன்னு எனக்கே தெரியலை இப்போ... ஓடிர்றா கணேஷ்... வம்புல மாட்டிவிடப் பாக்குறாரு... (மிக்க நன்றி சிவா!)

      Delete
  19. படங்கள் ஊறுகாய் மாதிரி .... கொஞ்சம் தொட்டுக் கொண்டு மூச்சு விட்டுக்கலாம்.
    வெரைட்டியாவும் இருக்கும். ம்ம்ம்... ஜாலியாதான் இருக்கு.
    200...க்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ஊறுகாயை ரசித்து என்னை வாழ்த்திய உங்கள் அன்புக்கு என் இதயம் நிறை நன்றிகள்!

      Delete
  20. 200வது பதிவுக்கு வாழ்த்துகள் சார். படங்கள் எல்லாம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. படங்களை ரசித்து என்‌னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  21. என்னது 200 ஆஆஆஆஆஆஆஆஆ
    கணேஷண்ணா அடிச்சி தூள்கிளப்புறீங்கபோங்க, விரைவில் 1000 மென்ன அதையும்தாண்டி பதிவுகளை தொடர்ந்து தந்துகொண்டேயிருங்க. வாழ்த்துக்கள்!

    அதுசரி வெரும் போஸ்ட் மட்டும்தானா.


    இனிப்பு புளிப்பு
    உப்பு உரைப்பு
    ஏதுமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. இப்ப வெறும்‌ போஸ்ட் மட்டும்தான். விரைவில் ட்ரீட்டே தர்றேன். என்னை வாழ்த்தின தங்கைக்கு என் அன்பும் மனம் நிறைந்த நன்றியும்!

      Delete
  22. 200க்கு வாழ்த்துக்கள் அண்ணா! ட்ரீட் எங்கே?!

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல்ல க்ராண்ட் ட்ரீட்டா சேர்த்துக் கொண்டாடிடலாம் தங்கச்சி!

      Delete
  23. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! மேலும் மேலும் சிறப்பான பதிவுகளுடன் பல்கிப் பெருக வாழ்த்துகிறேன். - ஜெகன்னாதன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகை மற்றும் வாழ்த்து நிறைய மனமகிழ்வைத் தருகிறது ஜெ. என் இதயம் நிறை நன்றி!

      Delete
  24. சத்தமே இல்லாம் ரெண்டாவது சதம் அடிச்சுட்டீங்களா?! அடடா, இனியாவது கொஞ்சம் விழிப்பா இருந்து பதிவு போட்டு அண்ணானை முந்தனுமே!

    ReplyDelete
    Replies
    1. நீ என்னை முந்தினா என்னைவிட சந்தோஷப்படறவங்க வேற யாரும்மா இருக்க முடியும்? முந்து... என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

      Delete
  25. 200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் பால கணேஷ் சார். இன்னமும் மேன்மேலும் பதிவுகளும், புத்தகங்களும் வளர வாழ்த்துக்கள். சிரிக்க வைத்தது உங்களின் புகைப்பட்ங்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... பதிவுகளோட புத்தகங்களும் வளர நீங்க வாழ்த்தினது மனசுக்கு நிறைவா இருக்கு எழில். ரசித்துச் சிரித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  26. இருநூறாவது பதிவுக்கு

    இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. என் துவக்க காலம் முதல் என்னைப் படித்து உற்சாகம் தந்து என்னை வாழ்த்துகிற உங்களின் வாழ்த்து இப்பவும் கிடைச்சதுல அலாதி சந்தோஷம். உங்களுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  27. இரண்டு நூறு என்ன இரண்டாயிரம் பதிவுகள் ஈடுபாட்டுடன் செய்க பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கள் தந்த மனமகிழ்வோடு என் உளம் கனிந்த நன்றி உங்களுக்கு!

      Delete
  28. 200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை ப(பா)ணி தொடரட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. 200 உடன் நகைச்சுவைப் ப(பா)ணி தொடர வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  29. 200 வது பதிவுக்கு வாழ்த்துகள், கணேஷ்! 2000 பதிவுகள் போட்டு சாதனை செய்ய வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மூத்தவர் ஆசிகள் இருந்தால் எதுவும் சாத்தியம் என நம்புபவன் நான். உங்கள் ஆசிகளுட்ன் வாழ்த்தும் கிடைத்ததில் மிகமிக மகிழ்ச்சி. என் இதயம் நிறை நன்றிம்மா!

      Delete
  30. படங்கள் அனைத்து சூப்பர்.
    200 –வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. படங்களை ரசித்து என்னை வாழ்த்திய அருணாவிற்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  31. சச்சின், சேவாக்கை தொடர்ந்து நீங்களும் இருநூறு அடிச்சுடீங்களா.. பலே..! உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். (பல பதிவுகள், புத்தகங்கள் இப்படி).. வாழ்த்துகள் சார்..!

    ReplyDelete
    Replies
    1. சமீபத்துலதான் முதல் செஞ்சுரி போட்ட உங்களை சந்தோஷமா வாழ்த்தினேன். இப்ப என் டபுள் செஞ்சுரிக்கு மனம் நிறைய சந்தோஷத்தோட வாழ்த்தியிருக்கீங்க நீங்க! உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி ஆனந்த்!

      Delete
  32. இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள்.கணேஷ் சார்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே!

      Delete
  33. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கணேஷ். தொடர்ந்து நிறைய எழுதணும். நகைச்சுவை உங்களுக்கு ரொம்ப இயல்பா வரது. அதனால நிறைய நகைச்சுவை பதிவுகளும் எழுதுங்க.

    படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆறாவது படம் ரொம்ப பிடிச்சுது.

    ReplyDelete
    Replies
    1. சில பேர் சீரியஸா ஏதாவது கருத்துச் சொன்னாக் கூட ‘நல்ல டமாஸு’ன்னு சொல்வாங்க. நாம அந்த டைப். ஹி... ஹி... அதனால நிச்சயம் எழுதறேன் மீனாக்ஷி. படங்களை ரசிச்சு என்‌னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  34. 200....Eniya vaalththu....vaalka!...valarka!....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தெம்பூட்டும் உங்களின் வாழ்த்துகளுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  35. இருநூறுக்கு வாழ்த்துக்கள். படங்கள் அருமை எங்கே கிடைக்கிறதோ தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. மனமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துகளுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.

      Delete
  36. படங்கள் அனைத்தும் அருமை... 200- வாழ்த்துகள்...பூஜ்ஜியங்கள் பின்னால் அணிவகுக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. பாத்து நாளாச்சு அன்பு... சுகம்தானே? ரசித்துப் படித்து நிறைவாய் என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  37. இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன் உங்ககிட்ட இருந்து! சீக்கிறமா 10,000 பதிவுகள் எழுதி எங்களையும் உங்களையும் சந்தோசப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. என்மேல் அன்புகொண்டு என்னை மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  38. உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!. 20th சென்ச்சுரி ஃபாக்ஸ்காரங்க உங்களைத் தேடிட்டு இருங்காங்களாம்!!

    ReplyDelete
    Replies
    1. ‘20ம் நூற்றாண்டு நரி’யின் லோகோ எனக்கு ரொம்பப் பிடிக்கும் அழகு! அதான் கொஞ்சம் நமககேத்த மாதிரி வளைச்சுக்கிட்டேன். அவங்க தேடிப் பிடிக்கறதுக்குள்ள எஸ் ஆயிருவேன்ல... ஹி... ஹி... என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  39. இரட்டைச்சதத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் வாழ்த்திய குட்டனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  40. வலைச்சர வாரத்தில் சற்றே பிசியாகி விட்டதால் எங்கும் செல்ல முடியவில்லை...

    இருநூறு பதிவுகள் எழுதியதற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே....

    இன்னும் சளைக்காமல் பதிவுலகில் ஓட்டம் எடுக்கவும்.. ஓட்டத்தின் வேகம் உற்சாகம் குறையாமல் ஓடவும் வாழ்த்துக்கள்....

    குறிப்பு : பதிவுலகில் இருந்து ஓட்டம் எடுத்து விட வேண்டாம் :-) ஹா ஹா ஹா

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube