Monday, January 21, 2013

மூ்ன்று சந்தோஷ நிகழ்வுகள்!

Posted by பால கணேஷ் Monday, January 21, 2013

19.01.2013 சனி்க்கிழமை அன்று கவிஞர் சத்ரியன் புத்தகக் கண்காட்சிக்கு வருவதாகச் சொல்லியிருந்ததால் மதியம் 2 மணிக்கு ‌அங்கு சென்றேன்.நான் கிளம்புவதற்கு முன்பே செல்வி சமீரா போன் செய்து தான் பு.க.வில் இருப்பதாகச் சொல்ல, அவரை ‘டிஸ்கவரி’க்கு வரச் சொல்லியிருந்தேன். தம்பி சத்ரியனைச் சந்தித்து பேசி மகிழ்ந்தபோது சமீரா வர, அவரை அறிமுகம் செய்தேன். அப்‌போது ‘தென்றல்’ வீசியது. சசிகலா வந்தாங்க. பேசிக்கிட்டே ஸ்டாலை விட்டு வெளில வந்தா... நம்ம ‘மூவர் குழு’. அதாங்க... மெட்ராஸ்பவன் சிவகுமார், அஞ்சாஸிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன். மூவர் அணியோடவே பு.க.வுல வாஙகின புத்தகங்களோட கனமான பல பைகளைச் சுமந்துக்கிட்டு ‘கனமான’ மனிதர் ஆரூர் மூனா செந்தில்! (பதிவர் திருவிழா சமயத்துல இவரை வெச்சு ஒரு சர்ச்சைக் கிளப்புனவங்க, ஆர்வமா இத்தனை புத்தகங்களைப் வாஙகிப் படித்து ரசிக்கற அவரோட நல்ல பழக்கங்களை பாராட்டி கொஞ்சம் கை குலுக்குங்கப்பா). பட்டிக்காட்டான் ஜெய் வந்திருந்தார்.

இந்த நேரத்துல கேபிள் சங்கர் வந்து சேர ஜமா களை கட்டிருச்சு. அடுத்த நபரா வந்து கை குலுக்கினாரு நம்ம டி.என்.முரளிதரன். எங்க சுவாரஸ்யமான பேச்சு சத்தத்தோட டெஸிபல் கொஞ்சம் கூடினப்ப முதுகி்ல் தட்டியது ஒரு கை. திரும்பினால்... கவியாழி கண்ணதாசனும், புலவர் இராமானுசம் ஐயாவும்! அவங்களைப் பாத்த சந்தோஷத்துல எல்லாரும் பேசிட்டருக்கறப்ப அதகளமா என்ட்ரி குடுத்தாரு கவிஞர் மதுமதி. அப்புறம் தமிழ்ராஜா,. கவிஞர் பத்மஜா, தமிழரசின்னு எல்லாரும் வந்து சேரவும் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கோட வாசல்ல ஏதோ தனி பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணாமலேயே தன்னிச்சையா நடந்துடுச்சுங்க.

 சட்டுன்னு ‘எக்ஸ்பிரஸ்’ ஐடியாவா, தம்பி சத்ரியனோட ‘‌கண்கொத்திப் பறவை’ புத்தகத்தை புலவர் ஐயா வெளியிட, என் ‘சரிதாயணம்’ புத்தகத்தை நண்பர் கேபிள் சங்கர் வெளியிட வெச்சு புகைப்படங்கள் எடுத்து சந்தோஷப்பட்டுக்கிட்டோம். ரெண்டு மூணு பதிவர் சந்திச்சாலே பேச்சும், சிரிப்பும், கேலியும் கிண்டலும் அமர்க்களப்படும். இத்தனை பேர் சந்திச்சா அந்த இடம் எப்படி இருந்திருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்குங்க.

மாலை 5.30 மணிக்கு நான் நண்பர்களிடமிருந்து (பிரிய மனமின்றி) வி‌டைபெற்றுக் கிளம்பினேன்- மற்றொரு முக்கிய நிகழ்வுக்குச் செல்ல வேண்டியிருந்ததால். அப்படி‌ என்ன முக்கிய நிகழ்வுன்னு கேக்கறீங்களா? ‘பாட்டி சொன்ன கதை’ ருக்மணி சேஷசாயி அவர்களை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவங்களோட 75வது பிறந்ததினமான அன்று மா‌லை 5.30க்கு ‘ஒரு ஃபேமிலி கெட்டுகெதர்’ அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க. அந்த ஃபங்ஷனை அட்டெண்ட் பண்ணத்தான் அவசரமா போக வேண்டியதாயிடுச்சு. அது மற்றோர் ஆனந்த நிகழ்வு. அவங்களோட பல பரிணாமங்களை மேடையில் ஒவ்வொருவரும் அவரைப் பத்திப் பேசறப்ப புரிஞ்சக்கிட்டேன்.

ஏழு சகோதரர்களுக்கிடையில பிறந்த இவங்க, கல்யாணத்துக்கு அப்புறம்தான் தீவிரமா, படிப்பு எழுத்துல ஈடுபட்டிருக்காங்க. இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம் பெற்று, ஆசிரியர் பயிற்சியும் முடிச்சு ஆசிரியப் பணி. 27 நூல்கள் இதுவரை எழுதி வெளியிட்டிருக்காங்க. எப்படியும் 50 ஆக அதை உயர்த்திவிட வேண்டும்னு ஒரு லட்சியம் இருக்காம். இப்பவே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்மா! ஆன்மீகத்துல தீவிர ஈடுபாடு உள்ளவங்க இவங்க. விழாவை அவரோட சகோதரர் பாண்டுரங்கன் தொகுத்து வழங்க, இடையிடையே நகைச்சுவையா பேசி கலகலப்பூட்டினார் ருக்மணியம்மாவோட மகன் ரங்கநாதன். கலகலப்பான அந்தக் குடும்ப விழாவுல கலந்துக்கிட்டு திரும்பி வருகையில் மனசெல்லாம் மகிழ்ச்சியால நிறைஞ்சிருந்தது. இந்த விழாவை எனக்கு நினைவூட்டி, அவசியம் செல்லும்படி உந்துதல் கொடுத்த ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மனசு நிறைய நன்றி!

20.1.2013 ஞாயிற்றுக்கிழமை- ‘டிஸ்கவரி’ல வெச்சிருந்த ‘சரிதாயணம்’ புத்தகம் விற்றுத் தீர்ந்து விட்டதால் மேலும் பிரதிகளைக் கொண்டு வைப்பதற்காக காலையில் புத்தகக் கண்காட்சிக்கு (மறுபடி) போக வேண்டியிருந்துச்சு. புத்தகங்களைக் ‌கொடுத்துட்டு, ரெண்டாவது ரவுண்ட் பர்ச்சேஸ் பண்ணினப்ப, குடந்தையூரார் ஆர்.வி.சரவணன் வந்தார். அவரோட பேசிக்கிட்டே பர்ச்சேஸிங் முடிச்சுட்டு லன்ச் டயத்துல வீட்டுக்குக் கிளம்பினேன். ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தயாராகி மாலையில் நண்பர் திரு.பாலஹனுமான் (என்கிற ஸ்ரீனிவாசன்) அவர்களின் மகள் மீராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டேன். துளசி டீச்சரின் ஃபங்ஷன் நடந்த அதே உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல லான்லயே அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க. நண்பர் மோகன்குமார் ‌நேரே அங்கே வந்துடறதாச் சொல்லியிருந்தார்.

உள்ளே நுழைஞ்சதுமே அருமையான கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடந்துக்கிட்டிருந்துச்சு. நண்பர் ஸ்ரீனிவாசன் மகிழ்வாய் கை குலுக்கி வரவேற்றார். நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களான்னு கண்ணால ஸ்கேன் பண்ணிட்டே வந்தா... மு்ன் வரிசையில உக்காந்து சங்கீதத்தை ரசிச்சுக்கிட்டிருந்தாரு ‘பாட்டையா’ பாரதி மணி ஐயா. அவர் பக்கத்துல போய் உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தேன். என் முதல் புத்தகத்தை அவரிடம் கொடுத்து ஆசி பெற்றேன். கொஞ்‌ச நேரத்தில் கடுகு ஸாரும், கமலா அம்மாவும் வந்தாங்க. கடுகு ஸார்ட்ட பேசிட்டிருக்கறப்ப, எழுத்தாளர் என்.சொக்கன் தன்னுடன் வந்ததா சொன்னார். அவ்வளவுதான்... சொக்கன் ஸாரை எனக்கு அறிமுகம் பண்ணி வைங்கன்னு அவரைப் போட்டு தொணப்ப ஆரம்பிச்சுட்டேன். கடுகு ஸார் எழுந்து அவரே சொக்கன் ஸாரைத் தேடி அழைத்து வருவதாகச் சொல்லி எனக்காக மண்டபம் பூராவும் நடந்தார். சிறிது நேரத்தில் கண்டேன் என்.சொக்கன் அவர்களை!

சொக்கன் ஸார்கூட இமெயில், ட்விட்டர், பேஸ்புக் மாதிரி விஷயங்கள் மூலமா நல்ல அறிமுகம் உண்டு என்றாலும் நேரில் சந்திக்கற மகிழ்ச்சியே தனிதான் இல்லையா...! நான் ரசித்த அவர் எழுத்துக்களைச் சொல்லி, ‘சரிதாயணம்’ அவரிடம் தந்து (அவரை மட்டும் தப்பிக்க விட்ரலாமா? ஹி... ஹி...) நேரம் போவதே தெரியாமல் உரையாடிக் கொண்டிருந்தோம். பாலஹனுமான் மூலமாக மற்றொரு நல்லறிமுகம் நேற்று கிடைத்தது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தென்றல்‘ இதழின் ஆசிரியர் திரு.அரவிந்த் ஸ்வாமிநாதனை அறிமுகப்படுத்தினார். சமீபத்தில்தான் சில ‘தென்றல்’ இதழ்களைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்ததால் அவற்றைப் பற்றி அவருடன் பேசினேன்.

‘தென்றல்’ இதழை ஆன்லைனிலும் படிக்கலாம் என்று அதற்கான வழி சொல்லித் தந்தார் அரவிந்த். சிறந்த பத்திரிகை ஆசிரியர் மட்டுமின்றி ஆன்மீக ஈடுபாடு கொண்டவர், பல புத்தகங்கள் எழுதியவர் என்பதால் நாங்களனைவரும் சேர்ந்து பேச்சு சுவாரஸ்யமாகவே சென்றது. புகைப்படங்களை என்.சொக்கன் ஸாரின் (நல்ல) மொபைலில் எடுத்துக் கொண்டோம். (அவர் படங்ளை மடலிட்டதும் அவையும் பகிரப்படும்.) சற்று நேரத்தில் நண்பர் மோகன்குமாரும் வந்து சேர்ந்து கொண்டார். மேடையில் சங்கீதக் கச்சேரி முடிந்த பின்னும் இங்கே அரட்டைக் க்ச்சேரி நடந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டு, உணவருந்திவிட்டுக் கிளம்புகையில் வாட்ச்சில் மணி 9.45. ‘வீடு திரும்பல்’ பொருட்டு மோகன்குமாரை தி.நகரில் ட்ராப் செய்து விட்டு வீடு திரும்பினேன்.

-ஆக...கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து மூன்று சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில் பூரிக்க வைத்தன. (‘‘ஏற்கனவே எனக்குப் போட்டியா உப்பிட்டு வர்றீங்க. பாத்து... வெடிச்சுடாம...’’  என்று சிரிக்கிறாள் சரிதா. ஹி... ஹி...) உடனே உங்க எல்லார் கிட்டயும் ஷேர் பண்ணிக்கணும்னு ஆசை வந்துச்சு. டைரி எழுதற பழக்கத்தை உண்டாக்கிக்கணும்னும் எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு. ஸோ.... டூ இன் ஒன் பதிவா இந்த என் டைரிக் குறிப்பை உங்களுக்குத் தந்துட்டேன். பொறுமையாப் படிச்ச உங்களுக்கு ஸ்‌பெஷல் தாங்க்ஸ்!

63 comments:

  1. எனது புத்தகமும் வெளீயிட்டத ஏன் சொல்லலை ? தனி பதிவா சொல்லுவின்கலா?

    ReplyDelete
    Replies
    1. சத்ரியன் இப்ப எழுதறதில்லங்கறதால அவர் புக்கையும் என் புக்கையும் சொன்னேன். உங்க புக் வெளியிட்ட விஷயத்தை நீர் உம்ம கடையில பதிவா எழுதி ‘விளம்பரம்’ பண்ணினாத் தானே புக் விக்கும்! (கேபிளார் கிட்ட தனியா ட்யூஷன் போங்க) பதிவு தேத்தத் தெரியாத அப்பாவியாவே இன்னும் இருக்கீறே ஓய்! ரொம்ப டாங்க்ஸு!

      Delete
  2. உங்ள்கள் பதிவுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அங்கு வருகை தநததும் எங்களுடன் இருந்ததும் மகிழ்வான தருணங்கள். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.

      Delete
  3. ஆஹா.... பல நிகழ்வுகள் ஒரே சமயத்தில்.....

    தமிழகத்தில் இல்லாது போய்விட்டோமே என்று இருக்கிறது.....

    நல்ல பகிர்வுக்கு நன்றி கணேஷ் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட். அடுத்தடுத்து இந்த சந்தோஷமான விஷயங்கள் நிகழ்ந்ததை என்னாலேயே இன்னும் நம்பத்தான் முடியலை. ஆனா மனசு சந்தோஷமா இருக்குது. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  4. சனிக்கிழமை கண்காட்சிக்கு மதியம் 3 மணிக்கே வந்திருந்தும் உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். காரணம் முதலில் கடைசி ஸ்டாலில் ஆரம்பித்து ‘டிஸ்கவரி ஸ்டால்’ வரும்போது மணி 5.30 க்கு மேல் ஆகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயத்தை நீங்க போன்ல சொன்ன்ப்பவே அடாடா மிஸ் பண்ணிட்டமேன்னு மனது துடிச்ச்து. விரைவில் மற்றொரு சந்த்ர்ப்பம் வரும ஸார். உஙகளுக்கு என் இதய நன்றி.

      Delete
  5. கண்டிப்பாக உங்கள் எல்லாரையும் ஒருநாள் சந்தித்தே விடுவது என்ற ஆவலுடன் இருக்கிறேன் அண்ணே...வாழ்த்துக்கள் உங்கள் யாவருக்கும்...!

    ReplyDelete
    Replies
    1. நீஙக் இந்தியா வர்றப்ப ஒரு மெயில் தட்டுங்க அல்லது தொலைபேசுங்க மனோ. உஙக்ளுக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணிடலாம். மிக்க நன்றி.

      Delete
  6. டயரிக் குறிப்புகள் எமக்கும் சந்தோஷமே !
    கலக்குங்க !

    ReplyDelete
    Replies
    1. டைரிக் குறிப்புகளை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. சின்னதா புகை மூட்டம் இங்கே. கண்டுக்காதீங்க:-)))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... கண்டுக்கலை டீச்சர். உங்க அடுத்த விஸிட்ல இதே மாதிரி ஒரு விஷயத்தை செஞ்சு மத்த ஏரியாக்கள்லயும் புகை வர வெச்சிடலாம். சரியா... மிக்க நன்றி.

      Delete
  8. நாங்கலாம் இந்த சந்தோச நிகழ்வுல வரவே இல்லியே...மெடுல்லா ஆப்ல்கேட்டா...?

    ReplyDelete
    Replies
    1. ஜீவா... தேதிய கவனிங்க... நீங்க வந்து சென்ற மகிழ்வை உடனே பதிவு போட்டாச்சு நான. அது போன வாரம்... இது இந்த வாரம்.., ஹி,,,ஹி,,. நன்றிப்பா.

      Delete
  9. சார் வெளியூரில் இருப்பதால் புத்தக கண்காட்சியை ரொம்ப மிஸ் பண்றேன். எங்க ஊருக்கு பக்கத்தில் மதுரையில் கூட புத்தககண்காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு குறைவு.

    ReplyDelete
    Replies
    1. நலம்தானே பாலா... பாத்து நாளாச்சு... மதுரையில் செப்டம்பர் (அ) அக்டோபரில் பெரிதாக பு.கண்காட்சி நடக்குமே. இம்முறை வர முயல்கிறேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. இப்படி விரிவா எழுத உங்களிடம் டியூசன் எடுக்கப்போறேன்.சரியா ?

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... தென்றலுக்கி்ல்லாததா... எடுத்துட்டாப் போச்சு. மிக்க நன்றிம்மா.

      Delete
  11. உங்கள் மனசு முழுவதும் வழியும் சந்தோஷ‌ம் புரிகிற‌து! ஏனென்றால் படிக்கும்போதே எனக்கும் மனசு நிறைய மகிழ்வாக இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய மகிழ்ச்சியில் பங்கு கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. Is it a preplanned meet or just a coincedence? Whatever it is, your week end might have been a memorable one for you. In the same breath, you have posted your experience also instantly. Very nice post. I enjoyed reading it and felt the enjoyment you might have undergone while meeting the bloggers under one roof.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றிரண்டு பேர் சந்திப்பதாகத் திட்டம். மொத்தமாக ஒருங்கிணைந்தது ஆச்‌சர்ய ிகழ்வுதான் மோகன். ரசி்த்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  13. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி கணேஷ் சார்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான் சரவணன். மிக்க நன்றி.

      Delete
  14. புத்தக கண் காட்சி அனுபவம் பற்றி நானும் ஒரு பகிர்வு போட்டுட்டேன்

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு:). அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்து எங்களை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  16. நட்பின் மகிழ்ச்சியான தருணங்களை ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கோட வாசல்ல ஏதோ தனி பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணாமலேயே தன்னிச்சையா நடந்துடுச்சுங்க.

    நிறைவான தருணங்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் நிறை நன்றி.

      Delete
  18. எதிர்பாராமல் எல்லோரையும் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் சார்..
    ருக்மணி அம்மா பிறந்த நாள் விழா புகைப்படங்களை வந்ததும் பகிருங்க!

    ReplyDelete
    Replies
    1. ஓகேம்மா. சந்தித்த சந்தோஷத் தருணங்கள் மனதில் உறையட்டும். உனக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  19. பாலகணேஷ் சார்!ரொம்ப பிசி போல இருக்கு.புத்தகச்சந்தை பிறந்தநாள்,திருமணம் என்று .நடக்கட்டும்!
    சரிதாயணத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்தாலும் வருவேன்னு எழுதியிருந்ததால உங்களையும் அந்தக் கூட்டத்துல எதிர்பார்த்தேன் குட்டன் (ரியல்லி!) வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  20. ஒரு பதிவரின் டைரிக் குறிப்பா? வெரி இண்ட்ரஸ்டிங்க்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. டைரிக்குறிப்பை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  21. மகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளீர்கள். காணக்கிடைத்தது நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  22. சந்தோஷமான நிகழ்வுகள் தான். படங்கள் வந்த பிறகு பகிருங்கள். நாங்களும் இங்கிருந்தே பார்த்துக்கறோம்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பகிர்கிறேன். என் மகிழ்வினை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  23. உங்களின் டைரி குறிப்பைப் படித்ததும்
    ஏதோ.... நானும் உங்களுடனே இருந்தது
    போன்ற உணர்வைத் தருகிறது்.
    அவ்வளவு இயல்பாக இனிமையாக
    மகிழ்ந்து எழுதியிருக்கிறீர்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  24. ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு பாடிக்கலாம் நீங்க. பதிவு + டைரிக்குறிப்பு அதுக்காக சொன்னேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... ஆமாங்க. ரசித்துப் படிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  25. சனி& ஞாயிறு ரெண்டுநாள் விசிட்டா.....:-)))

    நான் நேற்றே உங்கள் புத்தகம் வெளியீட்டு செய்தியை என் பதிவில் சொல்லியாகிவிட்டது :-)))

    ReplyDelete
    Replies
    1. பார்க்கறேன் ஜெய். படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  26. புத்தகக் கண்காட்சி, பதிவர் சந்திப்புன்னு கலக்கறீங்கப்பா எல்லோரும் :-))

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து அன்புடன் வாழ்‌த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  27. சந்தோஷமான தருணங்களை நீங்கள் சொல்லியாவது கேட்க சந்தோஷமா இருக்கு ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. தூரம் பிரிச்சாலும் மனசால சந்தோஷப்படறீங்களே ஃப்ரெண்ட்! அதுவே எனக்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  28. சந்தோஷம் புரிகிறது. பகிர்வுக்கு நன்றி. பகிர்வு எங்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. என் சந்தோஷத்தில் பங்கு கொண்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  29. அடுத்தவங்க டைரி படிக்கறதுன்னாலே ஒரு சுவாரஸ்யம் தான்.. சந்தோஷமான நிமிடங்களை எங்களோட பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சார்..

    ReplyDelete
  30. முத்தான மூன்று அனுபவங்கள்..எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி,நன்றி.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. டைரிக்குறிப்புகள் அருமை.சரிதாயணம் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.கணினி திரையில் வாசித்ததாயினும் நூல் வடிவில் வாசிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மகிழ்வுடன் எழுதபட்ட இந்த பகிர்வை வாசித்தபொழுது எங்களுக்கும் மகிழ்ச்சியே!

      Delete
  32. நீங்க மறைச்ச விஷயத்த எல்லாம் என் பதிவுல சொல்லிட்டேன். இன்னும் படிக்கலயோ?

    ReplyDelete
  33. இந்தப் பதிவு எப்படி என் கண்களில் இருந்து தப்பியது என்று தெரியவில்லை. சொக்கன் எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர்....

    புத்தகக் கண்காட்சி பதிவர் சந்திப்பு அன்று எனக்கு இரவு நேரப் பனி ஆகையால் வர இயலவில்லை....

    ReplyDelete
  34. என்ன ஒரு நிறைவான நிகழ்வுகள்! வரமுடியாமல் போய்விட்டதே என்று இருக்கிறது.

    புகைப்படங்களை சீக்கிரம் போடுங்கள், கணேஷ்.

    சமீரா மூலம் உங்கள் புத்தகம் கிடைத்துவிட்டது. முழுவதும் படித்துவிட்டு உங்களுடன் பேசுகிறேன்.

    திருமதி ருக்மணியை வாழ்த்தி விட்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

    நன்றி!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube