Friday, January 6, 2012

நான் + ஒரு கொலைகாரன்-2

Posted by பால கணேஷ் Friday, January 06, 2012
திர்ச்சியில் சற்று நேரம் எனக்குப் பேச்சு வரவில்லை. பின் சற்று சுதாரித்துக் கொண்டு கேட்டேன். ‘‘ஏன் அண்ணனைக் கொலை பண்ணீங்க?’’

‘‘சின்ன வயசுலருந்தே ஏற்பட்ட பிளவு ஸார் அது. நான் படிப்புல கொஞ்சம் சுமார். ராமன் படிப்புல கெட்டி. நான் அப்பா தர்ற பாக்கெட் மணியெல்லாம் செலவழிச்சு காலி பண்ணிடுவேன். ஆனா ராமன் அதுல பாதியச் செலவு பண்ணிட்டு பாதியச் சேத்து வெப்பான். இப்படி எல்லா விஷயத்துலயும் எதிரெதிர் பர்ஸனாலிட்டிகளா இருந்தோம். எங்கப்பாவுக்கு என்னைவிட ராமன் மேல பாசம் ஜாஸ்தி. எங்கப்பா பெரிய கோடீஸ்வரர். அவன் எது கேட்டாலும் உடனே கிடைக்கும். எனக்குன்னா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டுத்தான் தருவார் எங்கப்பா. இதனால எனக்கு ராமன் மேல வெறுப்பு வளர்ந்துட்டே வந்தது...’’

‘‘அந்த வெறுப்புலதான் கொன்னீங்களா?’’

‘‘அதுமட்டுமில்ல ஸார்... இன்னொரு விஷயத்துலயும் என் லைஃப்ல விளையாடினான். நான் என் மாமா பொண்ணு ஸ்வேதாவைக்  காதலிச்சேன். அவளுக்கும் என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கறதா உணர்ந்தேன். பட், எங்கப்பா நான் பொறுப்பில்லாதவன்னும், ராமன்தான் அவளுக்குப் பொருத்தமான வன்னும் சொல்லி அவளை ராமனுக்குக் கட்டி வெச்சுட்டார். என்னோட எதிர்ப்பைக் காதிலயே வாங்கிக்கலை.

இந்தப் படுபாவி ராமனும், என் விருப்பத்தைத் தெரிஞ்சுக்கிட்டும், நான் அவன் கிட்ட எனக்காக விட்டுத்தரச் சொல்லிக் கெஞ்சினதை காதுலயே போட்டுக்காம, அவளை என் கண் முன்னாலயே கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தினான். அண்ணனா சார் அவன்? எனக்குள்ள அவன் மேல இருந்த வெறுப்போட சதவீதம் அதிகமாச்சு. கோபத்துல கொந்தளிச்சுட்டிருந்த எனக்கு அடுத்த இடி எங்கப்பா-அம்மா கார் விபத்துல இறந்த பின்னால விழுந்தது.’’

‘‘அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்துல இறந்துட்டாங்களா? இதைவிடப் பெரிய இடி என்ன இருக்கு?’’

‘‘இருந்தது ஸார். எங்கப்பாவோட உயில்ல சொத்துல முக்கால் பகுதி ராமன் பேர்லயும், கால் பகுதி என்னோட பேர்லயும் எழுதியிருந்தார். அது அவன் மேல எனக்கிருந்த கோபத்தோட சதவீதத்தை அதிகமாக்கிச்சு. ராமன் என் பங்கைப் பிரிச்சுக் கொடுத்து தனியா அனுப்பிட்டான். நான் எனக்குக் கிடைச்ச பங்கை உல்லாசமா செலவழிச்சு சீக்கிரமே அழிச்சுட்டேன். ராமன் பிஸினஸ்ல பணத்தைப் போட்டு பலமடங்காப் பெருக்கியிருந்தான்.
  வேற வழியில்லாம நான் அண்ணன் கிட்டத்தான் செலவுக்குப் பணம் கேட்டு கையேந்த வேண்டியிருந்தது. அவன்கிட்ட பணம் கேக்கறப் பல்லாம், தம்பியாச்சேன்னு பரிதாபப் பட்டு பலசமயம் பணம் கொடுப்பான். சில சமயங்கள்ல அட்வைஸ் மழையா பொழிஞ்சு தள்ளுவான். நான் ஊதாரித் தனமா ஊர் சுத்தாம அவன் கம்பெனில மேனேஜரா சேர்ந்து வேலை பாக்கணும்பான். ‘நீ முதலாளியா இருப்ப, நான் உன்கிட்ட வேலை பாக்கணுமாடா?’ன்னு எனக்கு கோபமான கோபம் வரும். பணம் கேட்க அவன் வீட்டுக்குப் போறப்ப ஸ்வேதா கண்ணுல படும் போதெல்லாம் எனக்குள்ள வயிற்றெரிச்சலோட அளவு ஜாஸ்தியாயிடும்.

ஒரு கட்டத்துல வெறுப்பாகிப் போயி, என்னை ‘நீ என் தம்பியேயில்ல, இனி இங்க வராத’ன்னு கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளில தள்ளி அவமானப்படுத்திட்டான். அது நடக்கறப்ப ஸ்வேதா கண்கொட்டாம பாத்துட்டிருந்தா. அவமானத்துல முங்கிப் போய் திரும்பிட்டிருந்தப்பதான் எனக்குள்ள இருந்த வெறி அதிகமாச்சு. அவனைக் கொன்னுடணும்னு திட்டம் போட வெச்சுது...’’

‘‘திட்டம் போட்டா கொன்னிங்க?..?’’

‘‘ஆமாம். போலீஸ்ல மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போக நான் விரும்பலை. நான் எந்த வகையிலயும் மாட்டிக்காம இருக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டு பல நாட்கள் யோசிச்சு திட்டத்தை அலசி ஆராய்ஞ்சு பாத்துட்டு, சில மாதங்கள் காத்திருந்து அப்புறம்தான் செயல்படுத்தினேன்.

ஒருநாள் அவன்கிட்ட போயி, ‘‘டில்லியில ஒரு கம்பெனில வேலை கிடைச்சிருக்குன்னும் அங்க போய் செட்டில் ஆகப் போறேன்னும் சொல்லி அவன்ட்ட பணம் கேட்டேன். ஏ.ஸி. கோச்சுல டிக்கெட் போட்டு, கையில நிறையப் பணமும் கொடுத்தான். ‘விட்டதுடா சனி’ங்கற மாதிரி ஒரு ரிஃலீ்ப் அவன் முகத்துல பாத்ததும் எனக்கு கோபம் எகிறிச்சு.

ரயில்ல ட்ராவல் பண்ணி, நடுராத்திரியில ஏதோ ஒரு ஸ்டேஷன்ல நின்னப்ப இறங்கிட்டேன். ஆட்டோ, டாக்ஸி பிடிச்சா பின்னால பிரச்சனை வரும்னு லாரி பிடிச்சு சென்னைக்கு வந்தேன். என் பெட்டியை ஒரு பாழுங்கிணத்துல போட்டு (அதுல வேல்யுபிளா எந்த திங்ஸ்ம் இல்ல- என் டிரஸ்கள் தவிர) டிஸ்போஸ் பண்ணிட்டேன். (எவிடென்ஸ் கூடாது ஸார்) மீசைய ‌ஷேவ் பண்ணிக்கிட்டு, ராமன் பங்களா சுவர் ஏறிக் குதிச்சு, ராத்திரி பூரா இருட்டுல, கொட்டற பனியில தோட்டத்துல ஒளிஞ்சிருந்தேன்.

காலையில தோட்டத்துல வாக் போறது அவன் பழக்கம்னு தெரிஞ்சு கையில இரும்புத் தடியோட காத்திருந்தேன். அவன் வந்தான். ஓங்கி ஒரே போடு! கத்தறதுக்குக் கூட அவகாசமில்லாம துடிச்சு செத்துட்டான். அவன் கண்கள்ல மட்டும் ‘ஏண்டா?’ங்கற கேள்வி இருந்ததை என்னால மறக்கவே முடியாது.

மடமடன்னு அவன் டிரஸ்ஸைக் கழட்டி நான் போட்டுக்கிட்டு, என் டிரஸ்ஸை அவனுக்குப் போட்டு விட்டேன். தோட்டத்துல மரம் நடுறதுக்காக ஒரு பெரிய குழி தோண்டியிருந்தாங்கன்றதை முதல்நாளே கவனிச் சிருந்தேன். அந்தக் குழியில அவன உடம்பைத் தள்ளி அவசரமா மண்ணைத் தள்ளினேன். அப்போதான் அந்தக் குரல் கேட்டுச்சு...’’

‘‘யாரும் பாத்துட்டாங்களா? மாட்டிக்கிட்டீங்களா? அதான் போலீஸ் தேடுதா உங்களை?’’

‘‘சரியான அவசரக்குடுக்கை ஸார் நீங்க! குரல் கொடுத்தது போலீஸ் இல்ல, குரல் கேட்டதும் திடுககிட்டுத் திரும்பிப் பார்த்தா... வீட்டு தோட்டக்காரன்! வேகமா வந்து, ‘நீங்க ஏன் ஸார் இந்த வேலை பண்ணணும்? நான்தான் காலையில வந்து குழியை மூடி மரக்கன்னை நட்டுடறேன்னு சொல்லியிருந்தேனில்ல... நான் குழியை மூடிடறேன்’ன்னான். நல்ல வேளையா அதுக்குள்ள நான் தள்ளின மண் ராமனை மூடியிருந்ததால அவன் எதையும் பார்க்கலை. மீதி மண்ணை அவன் தள்ளி மரக்கன்றை நட்டு்ட்டான். நான் பங்களாவுக்குள்ள வந்தேன்.‘‘

‘‘இப்ப நான் ராமன். இது என்னோட பங்களா, என் சொத்து. நினைக்கவே தித்திப்பா இரு்ந்தது. ஸ்வேதா வந்து காபி கொடுத்தா. அவளைக் கட்டிப் பிடிச்சு முத்தமிட்டேன். மனசுக்குள்ள ஒரு ஓரத்துல ‘இது தப்புடா’ன்னு மனசாட்சி குரல் கேட்டாலும், ‘நியாயமா எனக்குச் சேர வேண்டியவளை தட்டிப் பறிச்சவன் அவன்தானே. இதுல ஒண்ணும் தப்பில்ல’ன்னு அந்தக் குரலோட கழுத்தை முறிச்சுட்டேன்.

அதுக்கப்புறம் எந்த உறுத்தலும் இல்லாம நான் முழுமையா ராமனாவே மாறிட்டேன். அவனோட நடவடிக்கைகள், மேனரிஸம் எல்லாமே எனக்கு அத்துபடியானதால யாருக்கும் என்மேல எந்தச் சந்தேகமும் வரலை. ஊரைப் பொறுத்தவரை லட்சுமணன் டில்லி போயிட்டான். ராமன்தான் இங்க இருக்கான். எல்லாம் சரியாவே நடந்துச்சு. அந்தக் கொலைய போலீஸ் கண்டுபிடிக்கவே இல்லை ஸார்...’’

‘‘பின்ன... போலீஸ் தேடுதுன்னு சொன்னீங்களே...’’

‘‘ஆமா ஸார். போலீஸ் தேடறது ராமனைக் கொலை செஞ்சதுககாக இல்ல. நான் செஞ்ச இன்னொரு கொலைக்காக...’’ என்று பொக்ரான் அணு குண்டையே என்மேல் வீசினான் அவன். அதிர்ச்சியில் எனக்கு நாக்கு உலர்ந்து போனது.

-ஹய்யோ... ஹய்யோ... அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்கறானே... 
அடுத்த பதிவுல முடிச்சுடறேன்!

54 comments:

  1. //அடுத்த பதிவுல முடிச்சுடறேன்//
    ம்...

    ReplyDelete
  2. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    முதல் வருகைக்கும் ரத்தினச் சுருக்கமான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ஸார்...

    ReplyDelete
  3. ‘‘இருந்தது ஸார். எங்கப்பாவோட உயில்ல சொத்துல முக்கால் பகுதி ராமன் பேர்லயும், கால் பகுதி ராமன் பேர்லயும் எழுதியிருந்தார். //

    ராமன், லட்சுமணன் ஆச்சே...?

    ReplyDelete
  4. இப்ப நான் ராமன். இது என்னோட பங்களா, என் சொத்து. நினைக்கவே தித்திப்பா இரு்ந்தது. ஸ்வேதா வந்து காபி கொடுத்தா. அவளைக் கட்டிப் பிடிச்சு முத்தமிட்டேன்.//

    வாலி திரைப்படம் நியாபகத்துக்கு வருது...!!!

    ReplyDelete
  5. என்னாது இன்னொரு கொலையா அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  6. ஆமா ஸார். போலீஸ் தேடறது ராமனைக் கொலை செஞ்சதுககாக இல்ல. நான் செஞ்ச இன்னொரு கொலைக்காக...’’ என்று பொக்ரான் அணு குண்டையே என்மேல் வீசினான் அவன். அதிர்ச்சியில் எனக்கு நாக்கு உலர்ந்து போனது.//

    அண்ணியை கொன்னானா, வேலைக்காரனை கொன்னானா, கொஞ்சம் தள்ளி நில்லுங்க எல்லாம் தெரிஞ்ச உங்களையும் போட்டு தள்ளிரப்போறான் ஹி ஹி...

    ReplyDelete
  7. இன்னொரு கொலைக்கு இன்னொரு தொடரா...? திகிலாதான் போயிட்டு இருக்கு...!!!

    ReplyDelete
  8. @ MANO நாஞ்சில் மனோ said...

    ‘‘இருந்தது ஸார். எங்கப்பாவோட உயில்ல சொத்துல முக்கால் பகுதி ராமன் பேர்லயும், கால் பகுதி ராமன் பேர்லயும் எழுதியிருந்தார். // ராமன், லட்சுமணன் ஆச்சே...?

    பதிவை போஸ்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வர்றப்ப தம்பி கஸாலி போன் பண்ணி இந்தத் தப்பை சுட்டிக் காட்டினார். இப்ப நீங்களும் சொல்லிட்டிங்க. அவசரத்துல கவனிக்கலை. ஹி... ஹி... நன்றி நண்பா. இப்போ மாத்திட்டேன்...

    ReplyDelete
  9. MANO நாஞ்சில் மனோ said...

    கரெக்ட். வாலி படம்தான் எழுதறப்ப என் மைண்டலயும் ஓடிச்சு. பட், இந்தக் கதைக்கு அது தேவைப்பட்டுச்சு. முடிக்கறப்ப உங்களுக்கே புரியும் மனோ.

    ReplyDelete
  10. @ MANO நாஞ்சில் மனோ said...

    தள்ளியே நிக்கிறேன் நண்பா. தொடர் திகிலா போயிட்டிருக்குன்னு ரசிச்சுப் பாராட்டினதுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  11. அடுத்த அத்தியாயம் எப்போ?

    ReplyDelete
  12. முதல்ல ஒரு கொலைன்னுதான சொன்னான்.இப்ப இன்னொரு கொலையா?எதிர்பார்ப்பான இடத்தில் முடிச்சிட்டீங்களா?சரி தொடருகிறேன்.இந்தப் பகுதி திரில்லாதான் இருக்குது.தலைப்பின் அர்த்தம் இரு பகுதிக்கும் ஒன்றாக இருந்தாலும் புதுசா படிக்கிறவங்களுக்கு சின்ன குழப்பம் ஏற்படலாம்.

    ReplyDelete
  13. தொடர் மிகப் பிரமாதமாகத் தொடர்கிறது
    அவசியமானா முடிங்க
    இல்லாட்டி தொடரட்டும்
    வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  14. பொக்ரான் அணு குண்டு

    ReplyDelete
  15. அம்மா அப்பாவையும்
    அவன்தான் கொலை செய்தானா??

    ReplyDelete
  16. தொடர்கதை எழுதற மாதிரி இவன் தொடர் கொலையா ...?!
    கடவுளே , பயங்கரமா இருக்கே .....பாவம் உங்க நிலைமையும் !!!

    ReplyDelete
  17. @ ரஹீம் கஸாலி said...

    திங்கள்கிழமை போட்றலாம் தம்பி! (ஞாயித்துக் கிழமை பூரா புத்தகக் கண்காட்சில சுத்தப் போறேன் பிரதர்!)

    ReplyDelete
  18. @ thirumathi bs sridhar said...

    எதிர்பாராத அதிர்ச்சிக்கு அடுத்த பகுதியில முடிவு தெரிஞ்சிடும்ங்க. அதே தலைப்பை வெச்சா 2ங்கற நம்பரைப் பாக்காம பழசுன்னு யாரும் தாண்டிப் போயிரக் கூடாதேன்னு நினைச்சுதான் லைட்டா சேஞ்ச் பண்ணேன். 3வது (முடியற) பகுதிக்கு இதே தலைப்பையே கன்டின்யூ பண்ணிரலாம். ஓ.கே.வா? வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  19. @ Ramani said...

    இந்தக் கதையை நீங்கள் ரசித்துப் படித்ததை அறிந்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி. அடுத்த பகுதியில் முடிச்சிரலாம்னுதான் இருக்கேன். நன்றி ஸார்!

    ReplyDelete
  20. @ இராஜராஜேஸ்வரி said...

    அணுகுண்டுதான்! அம்மா, அப்பாவைக் கொன்னது இவனில்லை. அடுத்த பகுதியில பாருங்க, ப்ளீஸ்! உங்களின் தொடர் வருகைக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  21. @ ஸ்ரவாணி said...

    ஆஹா... எனக்காக நீங்க அனுதாபப்படறது தென்றல் வீசன மாதிரி மனசுக்கு சந்தோஷமா இருக்குங்க. மெனி மெனி ‌தாங்க்ஸ்!

    ReplyDelete
  22. இரண்டு பகுதியையும் சேர்த்துப் படித்து விட்டேன்.பிரமாதமாப் போகுது.உடனே அடுத்த பகுதி!

    ReplyDelete
  23. க்ரைம் ஸ்பெஷலிஸ்ட் ஆகிட்டீங்க கணேஷ்.... நாவலை தொடர்ந்து எழுதி அப்புறம் முழு நாவலா ஏதும் புக்கா போட்டுடுங்க..நல்லா எழுதறீங்க

    ReplyDelete
  24. @ சென்னை பித்தன் said...

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் இதயம் கனிந்த நன்றி ஸார்! அடுத்த பகுதி திங்களன்று வெளியிட்டுடறேன்...

    ReplyDelete
  25. @ ஷைலஜா said...

    இது குறுநாவல்க்கா. நீங்க சொன்ன உற்சாகத்துல முழு நாவலே எழுதிரலாமான்னு தோணுது. சீக்கிரத்துல முடிச்சுட்டு உங்களுக்கு சொல்றேன். சரியாக்கா? பாராட்டுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  26. கொலையுதிர் பதிவா....! கொல்றீங்களே....

    ReplyDelete
  27. நல்ல வேளை இன்னும் அந்த கொலைக்காரன் என் வீடு தேடி வரலை. வருவதற்குள் நான் வீடு மாறி போய்டுவேன்

    ReplyDelete
  28. என்ன கொலை மேல் கொலையா போய்கிட்டு இருக்கு. மனசுக்குள் ராஜேஷ்குமார்ன்னு நினைப்பா அண்ணா

    ReplyDelete
  29. அடுத்த திகில் கதை மன்னன்!!???

    ReplyDelete
  30. கொஞ்சம் இருங்க வரேன்...ஒரு பியர் இல்லன்னா ஒரு கிளாஸ் சிவப்பு வைன் என் கவிதைல சொன்னமாதிரி வேணும் இப்போ !

    ReplyDelete
  31. @ ஸ்ரீராம். said...

    ‘கொலையுதிர் பதிவு’ -சுஜாதா தடவிய இந்த வார்த்தை அருமையாக இருக்கிறது ஸ்ரீராம் ஸார். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!(என்னது கொல்றிங்களே..யா? கொல்றது அவன், பாவமா கேக்கறதுல்ல நானு. ஹி... ஹி...)

    ReplyDelete
  32. @ துரைடேனியல் said...

    துரை! விறுவிறுப்பாக இருக்கிறது என்ற உங்கள் பாராட்டு எனக்கு பலம். மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  33. ராஜி said...

    ஹய்யோ... வீடுல்லாம் மாறிடாதம்மா. அட்ரஸ் கண்டுபிடிக்க அண்ணன் கஷ்டப்படணும். அவனை நானே சமாளிச்சுக்கறேன். ராஜேஷ்குமாரை நிறைய படிச்சுட்டு, அவரோட பழகிட்டு அவர் பாதிப்பு என்ட்ட வராம போய்டுமா என்ன? (ஷைலஜாக்கா சொன்ன மாதிரி நாவல் எழுதறப்போ ஏழெட்டு கொலை பண்ணுவேனாக்கும்?!!)

    ReplyDelete
  34. @ ஹேமா said...

    ரெட் வைன்? அகதா கிறிஸ்டி கதையிலகூட இதைப் பத்தி எழுதிருப்பாங்க. அதைப் படிச்ச நாள்லருந்தே எப்படி இருக்கும்னு ஒருநாள் டேஸ்ட் பண்ணிப் பாத்துரணும்னு ஆசை. இப்ப நீங்க வேற தூண்டி விட்டுட்டிங்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா!

    ReplyDelete
  35. கணேஷ் said...

    ராஜி said...

    ஹய்யோ... வீடுல்லாம் மாறிடாதம்மா. அட்ரஸ் கண்டுபிடிக்க அண்ணன் கஷ்டப்படணும். அவனை நானே சமாளிச்சுக்கறேன். ராஜேஷ்குமாரை நிறைய படிச்சுட்டு, அவரோட பழகிட்டு அவர் பாதிப்பு என்ட்ட வராம போய்டுமா என்ன? (ஷைலஜாக்கா சொன்ன மாதிரி நாவல் எழுதறப்போ ஏழெட்டு கொலை பண்ணுவேனாக்கும்?!!)


    >>>
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  36. இன்னொரு கொலையா அப்படி போடுங்க..ஏன் அடுத்த பகுதியில முடிக்கனும்..கொண்டுபோங்க இன்னும் ரெண்டு மூணு அத்தியாயம்..ஆர்வத்தோடு........

    ReplyDelete
  37. பண வெறி ஒரு ஆளை கொலை செய்யும் அளவுக்கு ஆக்குதே. நல்லா விறு விறுப்பாதான் போகுது தொடர்.

    ReplyDelete
  38. @ சி.பி.செந்தில்குமார் said...

    நீங்கள் வழங்கிய பட்டத்தினால் (தகுதிக் குறைவு இருப்பினும்) அகமகிழ்ந்தேன் செந்தில். என் இதயம் நிறைந்த நன்றிகள் நண்பா...

    ReplyDelete
  39. @ மதுமதி said...

    இதை மூணு பகுதியா முடிச்சு வெச்சுட்டேன் கவிஞரே... (நீங்கல்லாம் பொறுமையா பல அத்தியாயங்கள் படிப்பீங்களோன்னு டவுட்ல) அடுத்து விறுவிறுப்பு குறையாதபடி ஒரு நெடுங்கதை தயார் பண்ணிட்டு சீக்கிரமே தருகிறேன். எனக்கு உற்சாக இன்ஜெக்ஷன் போட்ட நண்பா... என் இதய நன்றி.

    ReplyDelete
  40. @ Lakshmi said...

    மது, மாது, சூது இது மூணுலயும் (அளவு மீறி) மோகம் கொள்றதுதான் குற்றங்களுக்கு அடிப்படைன்னு சொல்வாங்க. க்ரைம் கதைகளுக்கும் இதான் பேஸ். விறுவிறுப்பா போகுதுன்னு சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  41. தொடர் கொலைகள் திக்..திக் என்கிறதே....

    ReplyDelete
  42. செம த்ரில்லிங்.. அடுத்த பதிவை சீக்கிரம் எழுதுங்கள்.

    ReplyDelete
  43. மாதேவி said...

    தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  44. @ பாலா said...

    பிடிச்சிருந்ததா? மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி பாலா!

    ReplyDelete
  45. கதை எதிர்பாராத முடிவோடு முடியும் என எண்ணுகிறேன். நீங்கள் அடுத்த பதிவோடு முடிப்பதாக முடித்திருந்தாலும் அது முடியுமா என்ற 'ஸஸ்பென்ஸ்'எனக்குள் இருக்கிறது.அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  46. ///‘‘அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்துல இறந்துட்டாங்களா? இதைவிடப் பெரிய இடி என்ன இருக்கு?’’///

    இது ஒரு பெரிய கொடுமை நண்பரே.
    என்னுடைய நண்பர் ஒருவர் அப்படித்தான்
    பேருந்து பயணம் ஒன்றில் குடும்பத்தில் அனைவரையும் பறிகொடுத்து
    அவர் மட்டும் உயிர் தப்பினார்..

    ReplyDelete
  47. கொலையை சூயிங்கம் மெல்வது போல இல்ல பாற்றி காரன் செய்திருக்கான்..
    இன்னுமொரு கொலையா??????
    முடியல...
    சரி .. பொறுத்திருந்து பார்க்கிறேன் அடுத்த பாகத்தில்....

    ReplyDelete
  48. @ வே.நடனசபாபதி said...

    ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    ReplyDelete
  49. @ மகேந்திரன் said...

    விரிவான கருத்திற்கு என் மனமார்ந்த நன்றி மகேன்.

    ReplyDelete
  50. @ Shakthiprabha said...

    நீங்கள் தொடர்வது எனக்குத் தருகிறது மகிழ்வு. என் இதய நன்றி.

    ReplyDelete
  51. விருவ்ருவென செல்லும் கதை. அருமையாக செல்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube