Thursday, November 17, 2011

எனக்கொரு மகன் பிறப்பான்!

Posted by பால கணேஷ் Thursday, November 17, 2011
விஸ்வநாதனின் கண்கள் சிவந்திருந்தன. ‘‘விளையாடறியா ராஜா? என்ட்ரன்ஸ் எக்ஸாம்லாம் எழுதி பாஸ் பண்ணிட்டு இப்ப மெடிக்கல் காலேஜ்ல சீட் வேற வாங்கியாச்சு. இப்ப வந்து ‘எனக்கு டாக்டருக்குப் படிக்கறதுல இஷ்டமில்லை. கேட்டரிங் டெக்னாலஜிதான் படிக்க ஆசைப்படறேன்’னு சொன்னா என்னடா அர்த்தம்? இதெல்லாம் முன்னாடியே சொல்லியிருக்கணும்...’’

‘‘சொன்னேன்ப்பா... நீங்கதான்...’’

‘‘ஆமாண்டா. நான்தான் கூடாதுன்னு சொன்னேன். உன்னோட எதிர்காலத்துக்கு ஏத்தது எதுன்னு பெத்தவங்க எங்களுக்குத்தான்டா நல்லாத் தெரியும். நீ டாக்டராகணும்ங்கறது என்னோட எத்தனை வருஷத்துக் கனவு தெரியுமா? இன்னும் ஒரு தடவை இந்த மாதிரிப் பேசினே... அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...’’ -கோபமாகச் சொல்லி (கத்தி) விட்டு வெளியேறினார் விஸ்வநாதன்.

விஸ்வநாதன் தன் மனைவிக்கோ, மகனுக்கோ ஏதும் குறை வைத்தவரில்லை. அவர்கள் கேட்காமலேயே தேவையானவற்றைச் செய்து விடுவார். டாக்டராக வேண்டுமென்ற அவரது கனவு பலிக்காமல் ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நடத்துவதிலேயே தன் திறமை முடங்கிப் போனதில் அவருக்கு மிகவும் வருத்தம். அதனால் மகன் ராஜாவை ஒரு டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்பதையே லட்சியமாக வைத்துக் கொண்டு, அதற்காக ராஜாவைச் சிறு வயது முதலே தயார்படுத்தத் தொடங்கி விட்டார் விஸ்வநாதன். இதனால் ராஜா இழந்தது நிறைய.

முகம் சுண்டிச் சுருங்கியிருக்க, கலங்கிய கண்களுடன் நின்றிருந்தான் ராஜா. மெல்ல அவன் அருகில் வந்த அம்மா அருணா, அவன் தோளைத் தொட்டாள். ‘‘அவரைப் பத்தித்தான் உனக்கு நல்லாத் தெரியுமேடா. தெரிஞ்சும் வீணா ஏண்டா அவர் வாயைக் கிளர்ற?’’

‘‘அம்மா... இதுவரைக்கும் அவரோட விருப் பத்துக்கு மாறா எந்த விஷயத்துலயாவது நீயோ, நானோ நடந்திருக்கோமா? அவர் ஒரு சர்வாதிகாரி மாதிரிதானே நடந்துக்கறார்? குடும்பத்துல எதுன்னாலும் அவர் இஷ்டப் படிதான் நடக்கணும்கறது சரி. ஆனா இது என்னோட எதிர்காலமாச்சே... இதுலயாவது என் இஷ்டத்துக்கு விடக் கூடாதா?’’

‘‘சரி... சரி... அப்புறமா அவர் நல்ல மூட்ல இருக்கறப்ப பேசிப் பார்க்கலாம். இப்ப இதை விட்டுடு...’’ என்றாள் அம்மா. ராஜாவுக்கோ மனதில் பதிந்துவிட்ட சில காட்சிகள் மறுஒளிபரப்பாகத் தொடங்கின.

சோஃபா. சோபாவில் சாய்ந்தபடி பேப்பர் படிக்கும் விஸ்வநாதன். அருகில் தயங்கியபடி ராஜா. நிமிர்ந்தார். ‘‘என்னடா?’’

‘‘வந்துப்பா... ஸ்கூல் கிரிக்கெட் டீம்ல என்னைச் சேர்த்திருக்காங்க. நா‌ளைலேர்ந்து பிராக்டிஸ் போகணும். அதுக்குக் கொஞ்சம் பணம்...’’

‘‘ஸில்லி! யாரைக் கேட்டு சம்மதிச்சே? நாளைலேர்ந்து உனக்கு ஸ்பெஷல் ட்யூஷன் கிளாஸ் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். கிரிக்கெட் டீம்ல உன்னால விளையாட முடியாதுன்னு சொல்லிடு...’’

‘‘அப்பா... எனக்கு இது நல்ல சான்ஸ்ப்பா... நான் டியூஷனையும் மிஸ் பண்ணாம படிச்சுடறேன்ப்பா...’’

‘‘நத்திங் டூயிங்! நாளைக்கு மாஸ்டர்கிட்ட சொல்லிட்டு நீ விலகிக்கற. இல்லேன்னா, நான் ஸ்கூல்ல வந்து பேசறேன்...’’

ஸ்கூட்டர். ஸ்கூட்டரை குனிந்து துடைத்துக் கொண்டிருக்கும் விஸ்வநாதன். அருகில் தயங்கியபடி ராஜா. நிமிர்ந்தார். ‘‘என்னடா?’’

‘‘வந்துப்பா... வர்ற வாரம் ஸ்கூல்ல பெங்களூர், மைசூர்க்கெல்லாம் டூர் கூட்டிட்டுப் போறாங்க. நானும் போயிட்டு...’’

‘‘வேண்டாம் ராஜா. உன்னோட ட்யூஷன் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எல்லாம் ஒரு வாரம் போகாட்டி பிக்அப் பண்றது ரொம்பக் கஷ்டம். நீ போக வேண்டாம்...’’

‘‘ஒரு வாரம் போனாலும் நான் அதிக டைம் ஸ்பெண்ட் பண்ணி கஷ்டப்பட்டு படிச்சு பிக்கப் பண்ணிடுவேன்ப்பா. ஸ்கூல்ல நிறையப் பேரு பேர் குடுத்திருக்காங்க. எனக்கும் ஆசையா...’’

‘‘இடியட்! நல்லவிதமா சொன்னாப் புரியாது? போடா... அதெல்லாம் நடக்கிற காரியமில்லை...’’ சொல்லிவிட்டு வீட்டினுள் சென்ற விஸ்வநாதனை கண்ணீருடன் பார்த்தான் ராஜா.

டையிலிருந்து வந்து ரிலாக்ஸ்டாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாதனை நெருங்கினாள் அருணா. ‘என்னங்க...’’

‘‘என்ன அருணா..?’’

‘‘நம்ம பையன் ராஜா இன்னிக்குப் பூரா சாப்பிடவே இல்லிங்க. எதையோ பறி கொடுத்தவனாட்டம் ரொம்ப சோகமா இருக்கான். நமக்கிருக்கறதோ ஒரே பையன். அதனால...’’

 
மேலே பேச விடாமல் அருணாவைக் கையமர்த்தினார் விஸ்வநாதன். ‘‘நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியுது அருணா. இதோபார்... அவன் விளையாட கேரம் போர்ட் வேணும்னு கேட்டப்ப அன்னிக்கே வாங்கித் தந்தேன். ‘புதுசா ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிள் வந்திருக்குப்பா. எனக்கு வாங்கித் தாங்க’ன்னு அவன் கேட்டதுக்காக அடுத்த நாளே வாங்கித் தந்தவன் நான். இப்படி எல்லா விஷயத்துலயும் நான் ஒரு நல்ல தகப்பனாதான் நடந்துட்டு வர்றேன். அவனும் ஒரு நல்ல மகனா நடந்துக்கிட்டு என்னோட விருப்பத்தை நிறைவேத்துவான்கற ஒரே எதிர்பார்ப்பு மட்டும்தான் எனக்கு. அதனால இந்த விஷயத்துல என்னோட விருப்பத்துக்கே விட்டுடு. ‌ப்ளீஸ்... மேற்கொண்டு எதுவும் பேசாத...’’ திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு மீண்டும் டி.வி.யின் பக்கம் பார்வையைத் திருப்பிய கணவனைப் பார்த்தபடி திகைப்புடன் நின்றாள் அருணா.

ரவு. சாப்பிடக்கூட வெளியில் வராத ராஜாவை அழைப்பதற்காகச் சென்ற சுந்தரம், உள்ளே தாயும் மகனும் பேசுவதைக் கேட்டதும் வெளியிலேயே நின்று விட்டார். உள்ளே அருணா சொல்லிக் கொண்டிருந்தாள்: ‘‘என்னால ஒண்ணும் பண்ண முடியலைடா. உங்கப்பாவோட முகத்தைப் பார்த்தாலும் பாவமாத்தான் இருக்குது ராஜா. நான் என்னதான் பண்ணட்டும் சொல்லு...’’

‘‘பரவாயில்லம்மா... நான் டாக்டருக்கே படிச்சு, ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி அப்பாவோட விருப்பத்தைக் கண்டிப்பா நிறைவேத்துவேன். கவலைப்படாதே...’’

‘‘இதுல உனக்கு ஒண்ணும் வருத்தமில்லையே...?’’

‘‘இருக்கும்மா. நிறையவே இருக்கு. ஆனா என்னாலதான் என்ன பண்ண முடியும்? அப்பாவை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாத நிலையில அவர் விருப்பப்படிதான் நான் படிச்சாகணும். ஆனா வருங்காலத்துல எனக்கு ஒரு மகன் பிறப்பான். அப்ப அவனை கேட்டரிங் டெக்னாலஜி படிக்க வெச்சு, உலகம் பூரா பேசப்படற கலைஞனாக்கி என்னோட விருப்பத்தை நிறைவேத்திக்குவேன். இது நிச்சயமா நடக்கும்மா...’’ தீவிரமாக முகத்தில் ஒருவித ஒளிவீச தன் மகன் சொல்வதை வாசல் அருகிலிருந்து கேட்ட விஸ்வநாதனுக்கு வெற்று முதுகில் சாட்டையடி பட்டதுபோல் மிக வலித்தது.

‘நான் டாக்டருக்குப் படிக்க முடியவில்லை என்பதற்காக என் விருப்பத்தை மகனின் முதுகில் ஏற்றி வைக்கிறேன். அவனோ தன் விருப்பத்தை தன் வாரிசின் முதுகில் ஏற்ற இப்போதே நினைக்கிறான். ஆக, தான் விரும்புவதைச் செய்யும் உரிமை பறிபோவது ஒன்றுதான் மிச்சம். இதனால் நான் என்ன சாதித்துவிடப் போகிறேன். தலைமுறை தலைமுறைகளாக இப்படி சுமைதாங்கிகளை உருவாக்கத்தான் வேண்டுமா?. ராஜா அவன் விரும்பிய வழியிலேயே செல்லட்டும்...’ -இப்படி ஓடியது விஸ்வநாதனின் எண்ணங்கள்.

ராஜாவும், அருணாவும் டைனிங் ஹாலுக்கு வந்து அமர்ந்தனர். மகனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த விஸ்வநாதன் சொன்னார்: ‘‘ராஜா! உனக்குப் பிடிச்ச மாதிரி கேட்டரி்ங் டெக்னாலஜி கோர்ஸ்லயே சேர்த்து விடறேன். நீ அதையே படிடா...’’

சிரித்தபடி சொல்லும் விஸ்வநாதனை, எது அவர் மனதை மாற்றியது என்பது புரியாமல் வியப்போடு பார்த்தனர் அருணாவும், ராஜாவும்.

=====================================================================

பின்குறிப்பு : ‘மழலை உலகம் மகத்தானது’ பதிவில் நான் வெளியிட்டிருந்த ‘இலக்கிய விருந்து’ எம்.பி.3. ஃபைலில் குழந்தைகள் தின உரை ஆற்றியவர் : எழுத்தாளர் ஷைலஜா அவர்கள். சரியான விடையை நண்பர்‌கள் யாரும் தரவில்லை.

42 comments:

  1. அருமையான கதை

    ReplyDelete
  2. ////ஆமாண்டா. நான்தான் கூடாதுன்னு சொன்னேன். உன்னோட எதிர்காலத்துக்கு ஏத்தது எதுன்னு பெத்தவங்க எங்களுக்குத்தான்டா நல்லாத் தெரியும். நீ டாக்டராகணும்ங்கறது என்னோட எத்தனை வருஷத்துக் கனவு தெரியுமா?////

    பாஸ் இன்றைக்கு நான் எழுதிய மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கேன்.
    என்ன ஆச்சரியம்

    ReplyDelete
  3. அருமையாக உள்ளது

    ReplyDelete
  4. K.s.s.Rajh said...
    அருமையான கதை.

    -நன்றி ராஜ்!

    பாஸ் இன்றைக்கு நான் எழுதிய மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கேன்.
    என்ன ஆச்சரியம்

    -கருத்தொற்றுமை சில சமயங்களில் ஏற்படுவதுண்டு. எனக்கும் ஆச்சரியம்தான் நண்பா...

    ReplyDelete
  5. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையாக உள்ளது

    -உங்கள் ரசனைக்கு என் நன்றி ராஜா சார்...

    ReplyDelete
  6. என் விருப்பத்தை மகனின் முதுகில் ஏற்றி வைக்கிறேன். அவனோ தன் விருப்பத்தை தன் வாரிசின் முதுகில் ஏற்ற இப்போதே நினைக்கிறான். ஆக, தான் விரும்புவதைச் செய்யும் உரிமை பறிபோவது ஒன்றுதான் மிச்சம். இதனால் நான் என்ன சாதித்துவிடப் போகிறேன். தலைமுறை தலைமுறைகளாக இப்படி சுமைதாங்கிகளை உருவாக்கத்தான் வேண்டுமா?./////
    நல்ல முடிவு.சமுதாயத்தில் நடைமுறையில் உள்ளதை உணர்வுகள் கொந்தளிக்க எழுதி இருக்கும் விதம் அருமை.இந்நேரம் என் மகனை நினைத்து கண்கள் பனிக்கின்றன.சுரங்கத்துறை பொறியியல் படிக்கவேண்டும் என்ற அவரது ஆசையை சில பல காரணங்களால் எங்கள் ஆசைப்படி நாங்கள் விரும்பிய குரூப்பில் சேர்ந்து படித்து வருகின்றார்.இருப்பினும் இன்னும் அந்த மைனிங் கனவு என் பிள்ளையை விட்டு அகலவே இல்லை.இக்கதை படிக்கும் பொழுது உண்மையில் கண்கள் கலங்கி விட்டன.

    ReplyDelete
  7. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையாக உள்ளது

    -உங்கள் ரசனைக்கு என் நன்றி ராஜா சார்...
    ஸாதிகா said...

    நல்ல முடிவு.சமுதாயத்தில் நடைமுறையில் உள்ளதை உணர்வுகள் கொந்தளிக்க எழுதி இருக்கும் விதம் அருமை.இந்நேரம் என் மகனை நினைத்து கண்கள் பனிக்கின்றன.சுரங்கத்துறை பொறியியல் படிக்கவேண்டும் என்ற அவரது ஆசையை சில பல காரணங்களால் எங்கள் ஆசைப்படி நாங்கள் விரும்பிய குரூப்பில் சேர்ந்து படித்து வருகின்றார்.இருப்பினும் இன்னும் அந்த மைனிங் கனவு என் பிள்ளையை விட்டு அகலவே இல்லை.இக்கதை படிக்கும் பொழுது உண்மையில் கண்கள் கலங்கி விட்டன.

    -சந்தர்ப்ப சூழ்நிலைகள் சில சமயங்களில் இப்படி விளையாடி விடுகிறது சிஸ்டர். நாமெல்லாம் விதியின் கைப்பொம்மைகளாகி விடுகிறோம். வருத்தம் வேண்டாம்...

    ReplyDelete
  8. ஸாதிகா said...
    உங்கள் தொடர் பதிவு அழைப்பை ஏற்று பதிவெழுதி இருக்கின்றேன்.

    -தோ வந்துட்டேன் சிஸ்டர்...

    ReplyDelete
  9. கதை நல்லா இருக்கு அண்ணா

    ReplyDelete
  10. பெற்றோர் தம் நிராசைகளை தம் வாரிசுகள் மீது தினிக்கக் கூடாது அவர்கள் முதுகில் சுமையைத் தினிக்காமல் சுயமாக முடிவெடுக்க வழிவிட வேண்டும் என்று கூறிவந்த சிறுகதை சிறப்பானது நண்பா!

    ReplyDelete
  11. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் விஷயத்தை எளிய நடையில் அருமையான கதையாக்கி விட்டீர்கள்.
    (ஆன்மீகப் பதிவுகள் பற்றி--பாருங்கள் என் மற்ற பதிவு-http://shravanan.blogspot.com)

    ReplyDelete
  12. ராஜி said...
    கதை நல்லா இருக்கு அண்ணா.

    -இன்னும் பல நல்ல கதைகளைத் தர வேண்டும் என்ற உந்துதலை உங்கள் பாராட்டு தருகிறது சிஸ்டர். நன்றி...

    ReplyDelete
  13. தனிமரம் said...
    பெற்றோர் தம் நிராசைகளை தம் வாரிசுகள் மீது தினிக்கக் கூடாது அவர்கள் முதுகில் சுமையைத் தினிக்காமல் சுயமாக முடிவெடுக்க வழிவிட வேண்டும் என்று கூறிவந்த சிறுகதை சிறப்பானது நண்பா!

    -உங்களி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே... (முடியும் பொழுதெல்லாம் வர்ருங்கள்...)

    ReplyDelete
  14. சென்னை பித்தன் said...
    ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் விஷயத்தை எளிய நடையில் அருமையான கதையாக்கி விட்டீர்கள்.

    -உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. (இப்போதே ஆன்மீகப் பதிவுகளைப் படிக்கத் துவங்கி விட்டேன்.) நன்றி.

    ReplyDelete
  15. தமிழ்வாசி - Prakash said...
    கதை அருமை சார்...

    -மிக்க நன்றி பிரகாஷ் சார்...

    ReplyDelete
  16. சி.பி.செந்தில்குமார் said...
    கதை அருமை.

    -ரசித்துக் கருத்துச் சொன்னதற்கு நன்றி செந்தில்!

    ReplyDelete
  17. சரியாக படிக்காத மாணவர்களை கவுன்சில் செய்யும்போது இது போன்று மாற்ற பட்ட கனவுகள் பற்றிய செய்திகள் எனக்கு கிட்டும். சிலர் மட்டுமே இதில் தேறுகின்றனர். மற்றவர் தேங்கிவிடுகின்றனர். நல்ல பகிர்வு சார்.

    ReplyDelete
  18. சாகம்பரி said...
    சரியாக படிக்காத மாணவர்களை கவுன்சில் செய்யும்போது இது போன்று மாற்ற பட்ட கனவுகள் பற்றிய செய்திகள் எனக்கு கிட்டும். சிலர் மட்டுமே இதில் தேறுகின்றனர். மற்றவர் தேங்கிவிடுகின்றனர். நல்ல பகிர்வு சார்.

    -தங்களின் வருகைக்கும் என்னை உற்சாகப்படுத்தியதற்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  19. கணேஷ் சார்,

    பெற்றோர்களுக்கும், வருங்கால பெற்றொர்களுக்கும் ஒரு வாழ்க்கைப்பாடம் படைத்திருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. இன்றைக்கு அனேக பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அவர்களாக விரும்பிப் படிக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். சமீபத்தில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டதும் அவன் மேல் படிப்பு திணிக்கப்பட்டதால் தான். அருமையான நாட்டுநடப்பை சொல்லுகின்ற கதை. வாழ்த்துக்கள்!

    இலக்கிய விருந்து படைத்தவரின் பெயரைத் தெரிவித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  21. Blogger சத்ரியன் said...
    கணேஷ் சார்,
    பெற்றோர்களுக்கும், வருங்கால பெற்றொர்களுக்கும் ஒரு வாழ்க்கைப்பாடம் படைத்திருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்.

    -பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  22. வே.நடனசபாபதி said...
    இன்றைக்கு அனேக பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அவர்களாக விரும்பிப் படிக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். சமீபத்தில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டதும் அவன் மேல் படிப்பு திணிக்கப்பட்டதால் தான். அருமையான நாட்டுநடப்பை சொல்லுகின்ற கதை. வாழ்த்துக்கள்!

    -ஆம். என் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தச் சிறுகதை. உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி...

    ReplyDelete
  23. ஆதங்க கதை நல்லா இருக்கு கணேஷ் சார்...பாராட்டுக்கள்...

    ReplyDelete
  24. பெற்றோர் தங்களின் விருப்பத்தை குழந்தைகள்மீது திணிக்கக்கூடாது என்பதை ஒரு கதைமூலமாக சுவார்சியமா சொல்லி இருக்கீங்க. அந்த அப்பா கடைசியில் மனது மாறியத்தற்கும் அதுவே காரணம் என்று சொல்லி இருப்பது பொருத்தம். கதை நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. ரெவெரி said...
    ஆதங்க கதை நல்லா இருக்கு கணேஷ் சார்...பாராட்டுக்கள்...

    -வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  26. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    யதார்த்தமான சிறு கதை..

    -நன்றி கருன்.

    ReplyDelete
  27. Lakshmi said...
    பெற்றோர் தங்களின் விருப்பத்தை குழந்தைகள்மீது திணிக்கக்கூடாது என்பதை ஒரு கதைமூலமாக சுவார்சியமா சொல்லி இருக்கீங்க. அந்த அப்பா கடைசியில் மனது மாறியத்தற்கும் அதுவே காரணம் என்று சொல்லி இருப்பது பொருத்தம். கதை நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

    -உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மகிழ்வைத் தந்தன. நன்றி.

    ReplyDelete
  28. அருமையான கதை தோழா..
    நான் உணர்ந்தேன்.. மற்ற தந்தைமார்களும் உணர்ந்தால் நலம்...

    ReplyDelete
  29. தமிழ்கிழம் said...
    அருமையான கதை தோழா..
    நான் உணர்ந்தேன்.. மற்ற தந்தைமார்களும் உணர்ந்தால் நலம்...

    -உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா...

    ReplyDelete
  30. வாழ்வியல் நுட்பத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் அன்பரே..

    அருமை..

    ReplyDelete
  31. முனைவர்.இரா.குணசீலன் said...
    வாழ்வியல் நுட்பத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் அன்பரே.. அருமை..

    -முனைவரையாவின் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது. நன்றி.

    ReplyDelete
  32. நல்ல வேளை. விஸ்வநாதனுக்கு புத்தி வந்தது. இல்லை என்றால் தலைமுறையே பாரம் சுமந்திருக்கும்.

    ReplyDelete
  33. ரசிகன் said...
    நல்ல வேளை. விஸ்வநாதனுக்கு புத்தி வந்தது. இல்லை என்றால் தலைமுறையே பாரம் சுமந்திருக்கும்.

    -கரெக்ட். நம் சந்ததியினரின் மேல் நமக்குத்தானே அக்கறை இருக்கும்? தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  34. இன்றைய கால பிள்ளைகளிடம் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி என் தளத்தில் (அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?) 3 பகுதிகளாக எழுதி உள்ளேன். முடிந்தால் படிக்கவும். பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  35. @ திண்டுக்கல் தனபாலன்

    -ஆம்! இன்றைய இளைய தலைமுறை வேகமாகவும் கூர்மையான அறிவுடனும்தான் இருக்கிறது. நீங்கள் சொன்னதை அவசியம் படிக்கிறேன். ந்ன்றி சார்!

    ReplyDelete
  36. //நான் டாக்டருக்குப் படிக்க முடியவில்லை என்பதற்காக என் விருப்பத்தை மகனின் முதுகில் ஏற்றி வைக்கிறேன். அவனோ தன் விருப்பத்தை தன் வாரிசின் முதுகில் ஏற்ற இப்போதே நினைக்கிறான். // அருமையான கதை....

    ReplyDelete
  37. இந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற கதை! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube