Saturday, November 5, 2011

அன்பு நெஞ்சம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்!

மகிழ்ச்சியான செய்தி ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். தற்போது கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ‘பாக்யா’ வார இதழில் என்னுடைய சிறுகதை வெளியாகி உள்ளது. இது என்னுடைய முதல் சிறுகதை அல்ல. என்றாலும் வலையுலகில் புகுந்து பதிவுகள் எழுதத் தொடங்கிய பின்னர் அச்சில் வெளியாகும் என் முதல் சிறுகதை என்பதும், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நிறையப் பேர் இருக்கிறீர்கள் என்பதும் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. ============================================================
வம்பர் 2ம் தேதியன்று முபீன் சாதிகா எழுதிய ‘அன்பின் ஆறாமொழி’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். நூலை மூத்த எழுத்தாளர் திரு.இந்திரா பார்த்தசாரதி வெளியிட, திரு.ஜமாலன் பெற்றுக் கொண்டார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நல்ல உரையைக் கேட்கக் கிடைத்த இனிய மாலைப் பொழுதாக அமைந்தது.

செய்தி வாசிப்பாளர் திரு.நிஜந்தனை அங்கு சந்தித்தேன். முதல் முறை சந்திக்கிறோம் என்ற உணர்வே எழாத வண்ணம் நட்புடன் பழகினார். அவர் சிறந்த பண்பாளர் என்பது நிஜந்தான்!  ஸாதிகாவின் கவிதைகள் படித்ததும் உடனே புரியக் கூடியவை அல்ல. அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள நாம் சற்று மெனக்கெட வேண்டும். முதன் முதலில் அவரது ப்ளாக்கிற்குச் சென்றபோது நானும் எதற்குக் கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தாண்டி வந்து விட்டேன். பின்னொரு நாளில் என்னதான் சொல்ல வருகிறார் பார்ப்போமே என்றெண்ணி, பொறுமையாக மீண்டும் படித்துப் புரிந்து கொண்டபோது மிகவும் பிடித்தது. அதன்பின் விடாமல் படித்து வருகிறேன். என்போல நீங்களும் படித்துப் புரிந்து கொண்டால் கலைடாஸ்கோப் வர்ணச் சிதறல்கள் போல பல வண்ணங்கள் காட்டும் கவிதைகள் அவருடையவை.

ஸாம்பிளுக்கு நான் ரசித்த அவருடைய இரண்டு கவிதைகளை இங்கே தந்துள்ளேன்...

மேகப் பறல்

நீலப் பறலின்
காந்தச் சிறகும்
மண்ணுள் முகிழ்த்த
வெள்ளி இறக்கை
தூவும் புகையில்
முடங்கும் வாசம்
தொகை பெருக்கி
விசிறிய வானம்
சிவந்த மூங்கில்
கீற்று மேகமாய்
கீழிறங்கும் சிதறி.

வானினது மானினிது

வானினது அதுநின்வானினிதினிதுவானிதுஇதுவான்
மானினது அதுநின்மானினிதினிதுமானிதுஇதுமான்
மீனினது அதுநின்மீனினிதினிதுமீனிதுஇதுமீன்
கானினது அதுநின்கானினிதினிதுகானிதுஇதுகான்
தேனினது அதுநின்தேனினிதினிதுதேனிதுஇதுதேன்
ஊனினது அதுநின்ஊனினிதினிதூனிதுஇதுஊன்
பொன்னினது அதுநின்பொன்னிதினிதுபொன்னிதுஇதுபொன்
நானினது அதுநின்நானினிதினிதுநானிதுஇதுநான்.

கவிதை என்ன சொல்கிறது என்று யோசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் வேளச்சேரி தண்டீஸ்வரர் நகரில் 3வது பிரதான சாலையில் 25ம் எண்ணில் அபிராமி அபார்ட்மெண்ட்ஸில் உள்ள பாலம் பதிப்பகத்தை அணுகி நூலினைப் பெறுங்கள்.

28 comments:

  1. பாக்யா-வில் சிறுகதை வெளியானது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள். தொடர்ந்து அடித்து ஆடுங்கள்! :-)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். பாக்யா வார இதழில் தங்கள் கதை வெளி வந்ததுக்கு. கவிதை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  3. பாக்யாவில் வெளிவந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

    கதையின் கருவும்,நடத்திச்சென்ற விதமும் வெகு ஜோர்.அந்தக்கால ராஜபுத்திர வம்சத்தினர் அருகேயே அழைத்த்ச்சென்றதொரு பிரம்மை!

    உங்களிடம் கைவசம் இருந்தால் நீங்கள் எழுதி பத்திரிகையில் வெளிவந்த கதைகளை ஒவ்வொன்றாக மீள்பதிவாக போடுங்கள் என அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன்.உங்களின் அச்சுவடிவில் வெளிவந்த மற்ற பிற கதைகளையும் ஆக்கங்களையும் படிக்க ஆவலாக உள்ளோம்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் என்று சொல்லும் அளவு நான் வளரவில்லை என்று நினைக்கிறேன்.. மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  5. சேட்டைக்காரன் said...
    பாக்யா-வில் சிறுகதை வெளியானது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள். தொடர்ந்து அடித்து ஆடுங்கள்! :-)

    -உங்களைப் போன்றவங்களோட ஆதரவு இருக்கறப்ப... நிச்சயம் அடிச்சு ஆடலாம்ண்ணா...

    ReplyDelete
  6. Lakshmi said...

    வாழ்த்துக்கள். பாக்யா வார இதழில் தங்கள் கதை வெளி வந்ததுக்கு. கவிதை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி

    -உங்களோட வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் எனக்கு எப்பவும் தேவை லக்க்ஷ்மிம்மா...

    ReplyDelete
  7. ஸாதிகா said...
    பாக்யாவில் வெளிவந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
    கதையின் கருவும்,நடத்திச்சென்ற விதமும் வெகு ஜோர்.அந்தக்கால ராஜபுத்திர வம்சத்தினர் அருகேயே அழைத்த்ச்சென்றதொரு பிரம்மை!
    உங்களிடம் கைவசம் இருந்தால் நீங்கள் எழுதி பத்திரிகையில் வெளிவந்த கதைகளை ஒவ்வொன்றாக மீள்பதிவாக போடுங்கள் என அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன்.உங்களின் அச்சுவடிவில் வெளிவந்த மற்ற பிற கதைகளையும் ஆக்கங்களையும் படிக்க ஆவலாக உள்ளோம்.

    -வாழ்த்தியதற்கு நன்றி. அன்புத் தங்கையின் வேண்டுகோளை மறுக்க முடியுமா? நிச்சயம் அவ்வப்போது வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  8. suryajeeva said...
    வாழ்த்துக்கள் என்று சொல்லும் அளவு நான் வளரவில்லை என்று நினைக்கிறேன்.. மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    -சூர்யஜீவா சார்... நம்ம ஊர்லதான் எல்லாரும் தப்பாப் புரிஞ்சுட்டிருக்காங்க ‘வாழ்த்த வயதில்லை’ன்னு. ஆசிர்வாதம் பண்ணத்தான் வயசு வேணும். வாழ்த்தறதுக்கு மனசு போதும். சின்னப் பையன்கூட முதியவரை வாழ்த்தலாம். உங்க மனசு புரியுது. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் கணேஷ்..எழுத எழுத வார்த்தைகள் நமக்கு வசப்படும். செதுக்க செதுக்க சிற்பம் போலத்தான் இதுவும்.
    விடா முயற்சிதான் இதற்கு அவசியம். பெரிதினும் பெரிதுகேள் என்றார் பாரதி அதை லட்சியமாய் வைத்து அடுத்தடுத்து கடும்முயற்சி செய்யவேண்டும் இடையில் பல தடைக்கற்கள் சோர்வுப்பாலங்கள் வரலாம் அத்தனையும் மீறித்தான் இன்றுவெற்றிபெற்றவர்கள் வந்துள்ளதை நினைப்போம்! மேலும் பலபடைப்புகள் வர வாழ்த்துகள் கணேஷ்!

    ReplyDelete
  10. கதை அருமை!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. விவேகானந்தரையே மிஞ்சிடிங்க போங்க!

    ReplyDelete
  12. சிறுகதை அருமை சார். பாக்கியாவில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஷைலஜா said...
    வாழ்த்துகள் கணேஷ்..எழுத எழுத வார்த்தைகள் நமக்கு வசப்படும். செதுக்க செதுக்க சிற்பம் போலத்தான் இதுவும்.
    விடா முயற்சிதான் இதற்கு அவசியம். பெரிதினும் பெரிதுகேள் என்றார் பாரதி அதை லட்சியமாய் வைத்து அடுத்தடுத்து கடும்முயற்சி செய்யவேண்டும் இடையில் பல தடைக்கற்கள் சோர்வுப்பாலங்கள் வரலாம் அத்தனையும் மீறித்தான் இன்றுவெற்றிபெற்றவர்கள் வந்துள்ளதை நினைப்போம்! மேலும் பலபடைப்புகள் வர வாழ்த்துகள் கணேஷ்!

    -வார்த்தைகள் வசப்பட வேண்டும்! மிகச் சரியாச் சொன்னீங்கக்கா. நான் ஆரம்பத்துல கிறுக்கினதை இப்ப எடுத்துப் பாககறப்ப சிரிப்பா வருது. இன்னும் நிறையச் செய்வதற்கு உங்கள் வாழ்த்துக்கள் எனக்குத் தூண்டுகோல்! நன்றி.

    ReplyDelete
  14. சீனுவாசன்.கு said...
    கதை அருமை!வாழ்த்துக்கள். விவேகானந்தரையே மிஞ்சிடிங்க போங்க!

    -வெல்கம் சீனிவாசன் சார்! அழகழகா குறுங்கவிதைகள் எழுதற நீங்க கதையை நல்லாயிருக்குன்னு சொல்றதுல மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு!

    ReplyDelete
  15. தமிழ்வாசி - Prakash said...
    சிறுகதை அருமை சார். பாக்கியாவில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    -வாங்க பிரகாஷ் சார்! நாளாச்சு இங்க பார்த்து. உங்கள் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  16. யதேச்சையாகவே அபரஞ்சிதா எனக்குப் பிடித்த பெண்.. இதைக் கதையில் படித்தபோது நெகிழ்வாக இருந்தது கணேஷ். அருமையான கதை. வாழ்த்துக்கள் பாக்யாவில் வந்தமைக்கு.

    ReplyDelete
  17. உங்கள் சிறுகதை பாக்யாவில் வெளியானதில் மகிழ்ச்சி சார் நிகழ்ச்சி குறித்த பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  18. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    யதேச்சையாகவே அபரஞ்சிதா எனக்குப் பிடித்த பெண்.. இதைக் கதையில் படித்தபோது நெகிழ்வாக இருந்தது கணேஷ். அருமையான கதை. வாழ்த்துக்கள் பாக்யாவில் வந்தமைக்கு.

    -நான் மிக மதிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் மிகமிக மகிழ்ச்சி தந்தது. நன்றிக்கா...

    ReplyDelete
  19. r.v.saravanan said...
    உங்கள் சிறுகதை பாக்யாவில் வெளியானதில் மகிழ்ச்சி சார் நிகழ்ச்சி குறித்த பகிர்வுக்கும் நன்றி.

    -உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். நன்றி சரவணன் சார்.

    ReplyDelete
  20. பாக்யா-வில் சிறுகதை வெளியானது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. பாக்யாவில் சிறுகதை வெளியானது மகிழ்ச்சி அளிக்கின்றது.நமது பதிவர்களை தங்கள் கதை வந்த பாக்யா புத்தகம் வாங்க சொல்லலாமே...நான் இன்று வாங்கிவிடுகின்றேன்....பதிவர்களே அப்ப நீங்க...!
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  22. மிக்க மகிழ்ச்சி நண்ரே..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. வேலன். said...
    பாக்யாவில் சிறுகதை வெளியானது மகிழ்ச்சி அளிக்கின்றது.நமது பதிவர்களை தங்கள் கதை வந்த பாக்யா புத்தகம் வாங்க சொல்லலாமே...நான் இன்று வாங்கிவிடுகின்றேன்....பதிவர்களே அப்ப நீங்க...!
    வாழ்க வளமுடன், வேலன்.

    -நன்றி வேலன் சார். பதிவர்களின் ஒற்றுமைக்கு தாங்கள் ஓர் உதாரணமாக இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு இருந்தால் போதும். இன்னும் நிறைய எழுதுவேன்...

    ReplyDelete
  24. முனைவர்.இரா.குணசீலன் said...
    மிக்க மகிழ்ச்சி நண்ரே..
    வாழ்த்துக்கள்..

    -நன்றி முனைவரையா. நல்ல தமிழறிந்த உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு கூடுதல் பலம்.

    ReplyDelete
  25. வாழ்த்து சொல்ல வயது ஒரு தடை அல்ல. தாங்கள் மேன்மேலும் வளர எனது நல்வாழ்த்துக்கள். நன்றி சார்!

    ReplyDelete
  26. @ திண்டுக்கல் தனபாலன்

    -மனம் நிறைந்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  27. அற்புதமான கதை அண்ணா. அன்புள்ளம் கொண்டவர்கள் என நீங்கள் பொதுவாக சொல்வதாக இடுகையை படித்த போது நினைத்தேன். கதையை படித்த பின் தான் தெரிந்தது நீங்கள் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள் என்று.

    உங்கள் கதை படித்த பின் எனக்கு ஒரு வருத்தம்....

    இவள் குற்றமுள்ளவள் என்றால் அதில் நமக்கு பங்கில்லையா என கேட்கும் நேர்மையான ஒரு ஆட்சியாளரை நான் என் நினைவு தெரிந்து பார்க்கவில்லை. எனது ஏக்கத்தை உங்கள் கதை அதிகப் படுத்தி இருக்கிறது.

    அன்பை மையப் படுத்தி எழுதப் படும் எதுவும் அற்புதமாகவே அமைந்து விடுகிறது. அன்பை போலவே...

    நல்ல கதை நண்பரே.

    ReplyDelete
  28. @ ரசிகன் said...

    மிகச் சரி நீங்கள் சொன்னது. வரலாற்றுக் காலத்தை ஒரு அடையாளமாக எடுத்துக் கொண்டேன். அவ்வளவே... இன்றும் நீங்கள் சொன்னது போலப் பொருத்திப் பார்க்கலாம். அன்பை மையப்படுத்தி எழுதுவது அன்பைப் போலவே அற்புதமாக அமைந்து விடுகிறது என்ற தங்கள் பாராட்டினை மிகமிகமிக ரசித்தேன். இதயம் நிறைந்த நன்றியை நவில்கிறேன்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube