Monday, December 2, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 1

Posted by பால கணேஷ் Monday, December 02, 2013
மப்பார்வதி பதயே... ஹரஹர மஹாதேவா... எல்லாருக்கும் வணக்கம். லோகத்துல எல்லாரும் க்ஷேமமா இருக்கணும், மாசம் தவறாம மழை பெய்யணும்னு வேண்டிண்டு கச்சேரிய ஆரம்பிக்கறேன். இந்தக் காலத்துல லோகத்துல புதுசு புதுசா நெறைய டி.வி. சேனல்கள் வந்துண்டிருக்கு. ஜனங்களும் சலிக்காம (சேனலை) மாத்தி மாத்திப் பாத்துண்டுதான் இருக்கா. அதுலயும் இந்தப் பொம்மனாட்டிங்க இருக்காளோல்லியோ... அவா இந்த டி.வி.யப் பாத்துட்டு... அதுலயும் குறிப்பா சீரியல்களைப் பாத்துட்டு பிழியப் பிழிய அழுது, வீட்டுல இருக்கறவாளப் படுத்தி அவங்களை அழ வெக்கறது இருக்கே... அதையே தனி சீரியலா எடுக்கணும் போங்கோ...! இப்படி டிவி சீரியலால அவதிப்பட்டு சீரியலான... ஸாரி, சீரியஸான ஒருத்தனோட கதைய இப்ப உங்களுக்கு நான் சொல்லப் போறேன்.

 தௌ கீர்த்தனாரம்பத்துல நம்ம கதாநாயகன் பாலகணேஷ் மாம்பலத்துல இருக்கற அவனோட வீட்டுல கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து எதையோ தட்டிட்டிருக்கான். அப்ப அவன் பக்கத்துல வர்ற அவனோட தர்மபத்தினி சரிதா, ‘‘என்னங்க... கண்ணை மூடிக்கிட்டு ஆ காட்டுங்க..." அப்படிஙகறா. இவ இப்படிச் சொன்னா ஏதோ விபரீதமாச்சேன்னு புள்ளையாண்டான் பயந்துண்டு, ‘‘ஆ காட்டச் சொல்றதே ஆபத்து. அதுல கண்ணை வேற மூடணுமா? எப்படிச் சாப்பிட்டாலும் நீ பண்ணின பதார்த்தத்தோட பேரை என்னால சொல்ல முடியப் போறதில்ல... அப்புறம் எதுக்கு..?"ங்கறான்.

‘‘ஹுக்கும்!’’ன்னு அவன் தோள்ல இடிச்சுட்டு, ‘‘சொன்னதைச் செய்யுங்களேன்"ன்னு அவ மிரட்டவும், அதுக்கு மேல தயங்கினா ஆபத்தாச்சேன்னு பயபக்தியா சொன்னதக் கேக்கறான் நம்ம கதாநாயகன். வாய்ல விழுந்ததைக் கடிச்சுட்டு, ‘ஆ'ன்னு அலறி கைல துப்பறான். கைல ஒரு வெள்ளையான ஒரு வஸ்துவோட சேர்ந்து வந்து விழறது அவன் கடைவாய்ப் பல்! ‘‘அடிப்பாவி...! மைசூர் பாகை இப்படியா கட்டியாப் பண்ணுவே? என்னோட ஒரு பல்லே உதிர்ந்துடுத்து பாரு உன்னால.."ன்னு அவனானா அலர்றான். அவளோ துளிக்கூட அலட்டிககாம. ‘‘மைசூர் பாகா...? நாசமாப் போச்சு! நான் பண்ணினது பாதுஷான்னா!"ங்கறா கூலா.

நம்மாளு வாயக் கொப்பளிச்சுட்டு வந்து மறுபடி சீட்டுல உக்காரப் போற நேரத்துல, ‘‘அக்கா... அத்திம்பேர் ஏன் இப்படி ‘இரண்டாம் உலகம்' படத்த ரெண்டாவது ஷோ பாத்துட்டு வந்தவர் மாதிரி ‘ழே'ன்னு முழிச்சுட்டிருக்கார்?’’ அப்படின்னு குரல் கொடுத்துட்டே உள்ள நுழையறான் சரிதாவோட தம்பி வாசன். அவனைப் பார்த்ததுமே வயத்துல புளிய... புளிய என்ன... மிளகு, உப்பு, இஞ்சின்னு சகல வஸ்துக்களையும் கரைக்கற மாதிரி இருக்கு நம்ம ஹீரோவுக்கு.

‘‘ஒரு குட் நியூஸ் சொல்றதுக்குத்தான்டா வரச் சொன்னேன். அதச் சொல்றதுக்கு முன்னால... இந்தா, இந்த ஸ்வீட்டைச் சாப்பிடு"ன்னு அவன் வாயிலயும் இவன் வாயில திணிச்ச அதே பதார்த்தத்தை திணிக்கறா சரிதா. ‘அடப் படுபாவி! சித்த முன்னால வந்திருக்கப்படாதோ’ன்னு மனசுல நெனச்சுண்டு, நம்மாளு அவனைப் பார்க்க, அவன் கடக் முடக்குன்னு கடிச்சு முழுங்கிட்டு ஏப்பம் விடறான். ‘‘ஸ்வீட் பிரமாதமாப் பண்ணியிருக்கேக்கா..." என்று அவன் சொல்லவும் தீப்பார்வையா முறைக்கறான் நம்மாளு.

‘‘சரி.. இனிமே நீ இந்த மாதிரி புதுசா பலகாரம் பண்ணினா முதல்ல இவனுக்குக் குடுத்துட்டு, (அவன் முழுசா இருந்தா&ன்னு மனசுல சொல்லிண்டு) அப்புறம் எனக்குத் தரணும். சரியா..."ன்னு அவசர ஒப்பந்தம் ஒண்ணு போடறதுக்கு இவன் முயற்சி பண்ண, ‘‘ஹும்...! குட் நியூஸ்ன்னு எந்தம்பி சொன்னானே... அது என்னன்னு கேக்கத் தோணறதா பாரு..."ன்னு (கண்ணீரே வராம) கண்ணைக் கசக்கறா சரிதா. ‘‘ஒன்னோட தம்பியப் பாத்த சந்தோஷத்துலயாக்கும் கேக்க மறந்துட்டேன். என்ன விஷயம், சொல்லும்மா..."ன்னு சமாளிக்கறான் பையன். இல்லாட்டி என்னென்ன விளைவுகள் வரும்னு நேக்கும் ஒங்களுக்கும் தெரிஞ்சதவிட அவனுக்குன்னா நன்னா தெரியும்? அவன் அப்படிக் கேக்கவுமே, சரிதா பல்லெல்லாம் வாயா சிரிச்சுண்டே, ‘‘எனக்கு மின்னல் டிவில சீரியல்ல நடிக்கற சான்ஸ் கிடைச்சிருக்கு" அப்படின்னு ஸ்லோமோஷன்ல ஒரு குண்டைத் தூக்கி இவன் மேல வீசறா.

‘‘ஐயையோ... இதென்ன விபரீதம்! நேரம் காலம் இல்லாம நீ சிரியல் பாத்துட்டு படுத்தறதே தாங்க முடியாது. நடிக்க வேற போறியா? எப்படிறீ?"ன்னு முழி பிதுங்க கேக்கறான் நம்மாளு. ‘‘அதாங்க... மின்னல் டிவில ‘டீ வித் திவ்யா' ** புரோகிராம்ல உங்களப் பேட்டியெடுக்கறதுக்காக டிவி ஸ்டேஷனுக்குப் போனோம்ல... நீங்க பேட்டி குடுத்துட்டிருந்த நேரத்துல சீரியல் டைரக்டர் சிவகங்கை சிவனாண்டியப் பாத்தேன். நான் பேசற ஸ்டைல் நன்னாயிருக்குன்னு சொல்லிட்டு அவர்தான் சீரியல்ல நடிக்கறேளான்னு கேட்டார். சரின்னுட்டேன்.."ங்கறா சரிதா.

‘‘அத்திம்பேர்... அககாவோட திறமயப் பத்தி ஒங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டேஸ்லயே ட்ராமாலல்லாம் நடிச்சு கப்லாம் வாங்கிருக்கா தெரியுமோ"ன்னு அக்காக்கு சரியா ஒத்து ஊதறான் வாசன். ‘‘ட்ராமால நடிச்சாளா? என்னவா நடிச்சா?"ன்னு நம்மாளு கேக்கறதுக்கு, ‘‘கதாநாயகியோட தோழிக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும். கதாநாயகி ஒரு மனோதத்துவ டாக்டர்ங்கறதால அவளைக் குணப்படுத்துவா... எங்கக்கா தோழி கேரக்டர்ல பைத்தியமா நடிச்சா"ங்கறான் வாசன். நம்ம கதாநாயகன் அப்பாவின்னா எப்படி ஒரு அப்பாவி பாருங்கோ... ‘‘நடிச்சிருக்க மாட்டாடா வாசன்... சும்மா வந்து இயல்பா பேசியிருப்பா. சூப்பர் நடிப்புன்னு நம்பி கப்பைக் குடுத்துட்டாங்க..." அப்படின்னு மனசுக்குள்ள நெனக்க வேண்டியதை சத்தமாச் சொல்லித் தொலைக்கறான். ‘‘ச்சீ, போங்க..." என்று கோபமாக சரிதா தன் (உலக்)கையால அவன் தலையில ஓங்கிக் குத்த... இப்ப அவனுக்குன்னா மூளை கலங்கினாப்போல ஆயிடுத்து! ஈரேழு உலகமும் நாலஞ்சு சுத்து சுத்திட்டு அப்பறமா நேராகறது அவனுக்கு! ‘ழே'ன்னு முழிக்கறான்!

அப்பறமா கொஞ்சம் சுதாரிச்சுண்டு, அப்பவும் பேமுழி முழிச்சுண்டு, ‘‘தோ பாரு சரி... இந்த மாதிரி சீரியல்ல நீ நடிக்கப் போறேன்னு சொன்னா எங்கம்மா திட்டுவா..."ன்னு அவன் ஆரம்பிக்க... ‘‘ஆமா... உங்க தங்கச்சி கால்கிலோ மேக்கப்ப முகத்துல அப்பிண்டு ஊர்கோலமா வர்றதுக்குல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா உங்கம்மா... எனக்குன்னாத்தான் சொல்லுவாளாக்கும்..."ன்னு ஆரம்பிச்சு அவ நான் பண்றதைவிடப் பெரிசா ஒரு காலாட்சேபம் பண்ண... டோட்டலா டெபாஸிட் இழந்த வேட்பாளராட்டமா ஆயிடறான் நம்மாளு.

‘‘ஹும்...! ஒரு காலத்துல டெலிபோன்ல டிவி சேனலுக்குப் பேசி கப்ஸி ரமாவையே அழவெச்சவ நீ! இந்த டைரக்டர் உன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ...?"ன்னு மெதுவா முனகறான. அது வாசனோட பாம்புக் காதுல சரியாப் போய் விழுந்துடறது. ‘‘அத்திம்பேர்... அது என்ன சமாச்சாரம்? நேக்குத் தெரியாதே. எங்கக்கா எப்படி கப்ஸி ரமாவை அழவெச்சான்னு சொல்லுங்கோ முதல்ல..."ன்னு தொணப்ப ஆரம்பிக்கறான். அடுத்தாத்து வம்புன்னா மட்டுமில்ல... சொந்த ஆத்துல வம்புன்னாலும் அத்தனை இன்ட்ரஸ்ட் அவனுக்கு...! இப்ப என்ன பண்றதுன்னு புரியாம சரிதாவ பரிதாபமாப் பாக்கறான் நம்மாளு.
 
                                                               அப்படி சரிதா என்னதான் பேசியிருப்பான்னு
                                                                சித்த நீங்களும் யோசிச்சிண்டிருங்கோ...
                                                                 நான் கொஞ்ச நாழில வெத்தல பாக்கு
                                                                 போட்டுண்டு மறுபடி வந்துடறேன்...!

மின்னல் டிவில நான் பங்கேற்ற ‘டீ வித் திவ்யா’ நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்!

52 comments:

  1. பேஷ்பேஷ் ரொம்ப நன்னா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. அதிகாலையில முதல் நபரா ரசிச்சு கைதட்டின உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  2. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் பொண்டாட்டிக்குப் பயந்த கதாநாயகனாகவே இருக்கப்போகிறீர்கள்? ஆண் வர்க்கமே கேலிக்குள்ளாகிறதே சுவாமி! பொறுத்தது போதும், பொங்கி எழுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா அவர்கள் சொன்னது உண்மை என்று பொங்கி எழுந்துடாதீங்க நண்பா அப்புறம் நம்ம வீட்டுல உள்ள பொங்க பானை பொங்குறது போல பொங்கிடுவாங்க

      Delete
    2. சில கேரக்டர்கள் மாறக்கூடாது செல்லப்பா ஸார்... அப்புசாமி புத்திசாலித்தனமாவும், சீதாப்பாட்டி மக்காவும் செயல்பட்டா ரசிப்பீங்களா என்ன? அதனதன் இயல்பு அப்படி. அப்படித்தான் சரிதா கேரக்டரும்...! உங்களுக்கும் நடைமுறை உண்மையைப் பேசும் மதுரைத்தமிழனுக்கும் என் மனம் நிறைய நன்றி!

      Delete
    3. ஆமாமா.. பொங்க வச்சுருவாங்க.

      Delete
  3. வணக்கம்

    பதிவை அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா...

    புதிய பதிவாக-என்வைலைப்பூ பக்கம் மாபெரும் கட்டுரைப்போட்டி.. வாருங்கள் வந்து பாருங்கள்
    இதோ முகவரி-http://2008rupan.wordpress.com/2013/12/02/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிதைப் போட்டியைத் தொடர்ந்து கட்டுரைப் போட்டியா? கலக்குங்க ரூபன்! படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. இப்படிப் பின்னுறாரே ரூபன்.. பாராட்டுக்கள்.

      Delete
  4. உண்மையிலேயே ரொம்ப நன்னா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!

      Delete
  5. அண்ணே! தீபாவளி பலகாரமா அந்த பாதுஷாவை அனுப்பிடாதேள்!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச காலத்துக்கு முன்னாலன்னா உனக்கு வீடு கட்ட கல்லுக்குப் பதிலா வெச்சுக்கன்னு அனுப்பியிருப்பேன். இப்ப அனுப்ப மாட்டேம்மா. ஹி... ஹி...!

      Delete
  6. ஹா ஹா ஹா...செம காமெடி.. உலக்கை.. ஹா ஹா... உண்மையிலேயே நடந்ததை எழுதிட்டீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட நடைமுறைதான்...! ஹி...ஹி..! மிக்க நன்றி!

      Delete
  7. செம காமேடி..... இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்....

    ReplyDelete
    Replies
    1. உங்க எதிர்பார்ப்பை அடுத்தடுத்த பகுதிகளும் நிறைவேற்றும் நண்பா! மிக்க நன்றி!

      Delete
  8. அற்புதமான கச்சேரி
    துவக்கமே அசத்தல்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கச்சேரியை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி! அடுத்தடுத்த பகுதிகளுக்கும் தவறாம வந்துடுங்கோ!


      Delete
  9. ‘எனக்கு மின்னல் டிவில சீரியல்ல நடிக்கற சான்ஸ் கிடைச்சிருக்கு" அப்படின்னு ஸ்லோமோஷன்ல ஒரு குண்டைத் தூக்கி இவன் மேல வீசறா.

    நீங்க பதிவர்கள் மீது சிரிப்பு பதிவுக்குண்டு வீசுவது போல....!

    ReplyDelete
    Replies
    1. இந்த சிரிப்புக் குண்டுகளை அனைவரும் ரசிக்கறாங்கதானே... அதனால தொடர்ந்து வீசுறேன். ரசித்துப் பாராட்டின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா!

      Delete
  10. அடடா ... என்ன சுகம் என்ன சுகம்.!!

    ப்ரவசனம் பிரமாதம்.

    சுப்பு தாத்தா கான சபாவிலே டிசம்பர் மாச கச்சேரி எல்லாம் ஆரம்பித்து விட்டது.

    உங்களுக்கு, திருவாதிரை அன்னிக்கு ப்ரைம் டைம் லே ஒரு உபன்யாசம் ஏற்பாடு பண்ணி இருக்கிரபடியாலே.

    தேவாள் இந்த அடியேன் சுப்பு தாத்தாவையும் ஒரு பின் பாட்டுக்காரனாய் சேர்த்துண்டு வர்ற தேங்காய் மூடிலே எனக்கும் ஒரு துண்டம் தருவார் அப்படின்னு,

    அந்த சாக்ஷாத் உச்சிப்பிள்ளையார் கோவில்லே இருக்கிற மகா கணபதியை சேவிச்சுக்கறேன்.

    மகா கணபதிம் மனசா ஸ்மராமி.

    பக்க வாத்தியம் சரிதா அவர்கள் மிருதங்கம், வாசிப்பார்கள். வாசிக்கவேண்டும். அப்பத்தான் கச்சேரி களை கட்டும்.

    எல்லா க்ஷேமமும் உண்டாகட்டும்.

    சமஸ்த மங்கலாணி பவந்து.

    சுப்பு தாத்தா.
    www.movieraghas.blogspot.com
    www.subbuthatha.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உங்க அத்தை பேரனின் இசை அருமை! ப்ரவசனத்தை ரசிச்ச உங்களுககு மகிழ்வோட என் நன்றி! பக்கவாத்தியமா சரிதாவச் சேத்துக்க ஆசைப்படறேளே... ஐயோ, பாவம் சூரித்தாத்தா!

      Delete
  11. சூப்பரோ சூப்பர்...

    எனது பங்கிற்கு : (!)

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டி.டி. கட்டுரைப் போட்டிக்கு என் வாழ்த்துக்கள்! ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  12. ரசிக்க வைத்த பகிர்வு...
    கடைசி வரை காமெடியில் சிரிக்க வைத்த எழுத்து அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. சிரித்தேன் என்று நீங்க சொன்னதில் மகிழ்ந்தேன் பிரதர்! மிக்க நன்றி!

      Delete
  13. ஏன்னா இது உங்களுக்கே நன்னா இருக்கா... இப்படி பயந்தபுள்ளை மாதிரியே எத்தனை நாளைக்குத்தான் இருப்பீங்கோ... கொஞ்சம் பொங்குங்கோ...

    ReplyDelete
    Replies
    1. ஷ்ஷு....! சரிதா பாக்கற மாதிரி இடத்துலயா இதைச் சொல்றது? நாம தனியா சந்திச்சு எப்படிப் பொங்கறதுன்னு ப்ளான் பண்ணலாம். எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணணும்... பீ கேர்ஃபுல்...! நான் என்னைச் சொன்னேன்! மிக்க நன்றி!

      Delete
  14. Replies
    1. நீங்கள் ரசித்ததில நான் மகிழ்ச்சியில் மிதந்தேன். மிக்க நன்றி தென்றல் மேடம்!

      Delete
  15. Vango Balaganesh Sastrigale !! Very good post in a typical Brahmin language with your branded humour. Keep it up. The very first thing I did it my house before some years was, stop watching the filthy yeah filthy serials in TV channels.

    ReplyDelete
    Replies
    1. பக்கா பிராமண பாஷை கதாகாலாட்சேபத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி! (நாளைக்கு வலைச்சரத்துல சென்னை பாஷைய சந்திக்கறப்ப என்ன சொல்லப் போறேளோ...?)

      Delete
  16. ரசித்தேன்... பிரமாதம்...கலக்கல்....நீண்ட நாட்களுக்குப் பிறகு சரிதா மேடத்தை பார்த்ததுல சந்தோஷம்...

    தொடர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் முழுவதுமே ‘சரிதா வாரம்’ ஆகத்தான் இருக்கப் போகிறது தோழி...! தொடரும் உங்களுககு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  17. பேச்சு நடையில் பெருங்காவியமா? அருமை. அருமை..!

    வணக்கம்...

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா...?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கும், புதிய தகவல் பகிர்ந்தமைக்கும் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. அண்ணா வழக்கம் போல அசத்தல் போங்கோ ஆனா என்ன எப்போ பாத்தாலும் மன்னிய பத்தி இப்படி தாக்கிண்டே இருக்கேலே மன்னி கம்பியுட்டர் தெறந்து இதெல்லாம் பாக்கா மாட்டாளா.... பார்த்தாள் அவ்வளோதான் நீங்கோ....:P

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையா... மன்னி இணையப் பக்கம் வர்றதில்லம்மா. நீங்க யாரும் போட்டுக் குடுத்து மாட்டி விட்ராதேள்...! ரொம்ப டாங்க்ஸு!

      Delete
  19. நீங்கள் இப்படி எழுதப் போகிறீர்கள் என்று தெரியும், ஆனால் இப்படித்தான் எழுதப் போகிறீர்கள் போயிற்று.. வித்தியாசமான முயற்சிக்குப் பின்னால் இருக்கும் படக் கலவைகள் பிரமாதம்... அத்தனை பொருத்தம்...

    எங்கேயும் எப்போதும் வாத்தியார் கலக்கு கலக்கு என கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சு வாத்தியாரே.. ரெண்டையும் ஒரே நேரத்துல ஓபன் பண்ணி வச்சு படிச்சாதால பின்னூட்ட இடம் மாறிடுத்து "-)))))

      Delete
  20. வரவிருக்கும் இந்த ஒரு வாரமும் நீங்கள் அடிவாங்க இருப்பதால் எங்கள் பாடு கொண்டாட்டம் தான் வாத்யாரே

    ReplyDelete
    Replies
    1. ஆசயப் பாரேன் இந்தப் பயலுக்கு...! வாரம் ஃபுல்லா நான் அடி வாங்கணுமாம். இல்ல தம்பீ... அடி வாங்கற ஆளு நாளைக்கே மாறிடும் பாத்துக்கோ...! ரெண்டு பக்கமும் ரசிச்சு வாழ்த்தின உனக்கு மகிழ்வோட என் நன்றி!

      Delete
  21. சுந்தர பாகவதர்னு ஒருத்தர் குமுதத்துல எழுதறதை படிச்சிருக்கேன்.
    அதை விட நகைச்சுவை கதைக்கு இந்தப் பாணி பொருத்தமோ பொருத்தம்
    கலங்குங்க! சாரி , கலக்குங்க

    ReplyDelete
    Replies
    1. சுந்தர பாகவதர் யார்ன்னு தெரியாதா முரளி? குமுதம் இணையாசிரியர்களில் ஒருவரான ஜ.ரா.சுந்தரேசனின் (அதாவது, பாக்கியம் ராமசாமியின்) மற்றொரு அவதாரம்தான் அது! எனக்கு ரொம்பப் பிடிக்கும் அந்த ஸ்டைல்! அதை இந்தக் கதைக்கு அடாப்ட் பண்ணிப் பாத்தப்போ கச்சிதமாப் பொருந்துச்சு. ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. ரொம்பக் காமேடியா இர்ந்திச்சு!உங்கலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. காமெடியை ரசிச்ச உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  23. ஹய்யோ... அப்படியே என் மனசுக்குள் ஒரு கதாகாலட்சேபம் அட்சரம் பிசகாமல் ஓடியது. வாசிக்கும்போதே அதை நேரில் கேட்பதைப் போன்று அற்புதமான எழுத்து. பாராட்டுகள் கணேஷ். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதோ போட்டுடறேன்... கச்சேரியை ரசித்துப் பாராட்டி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  24. குமுதத்துல முன்னொரு காலத்துல சுந்தர பாகவதர் அடிக்கடி எழுதிவந்த 'அதோ கீர்த்தனாரம்பத்துல...' என்று ஆரம்பமாகும்
    சில(சிறு)கதைகளைப் படிக்கறாப்பலேயேயிருக்கு இந்த
    '(பால)கணேஷ பாகவதரின் கச்சேரி- யைப் படிக்கையில.

    ReplyDelete
  25. அவா ஆத்துப் பாசை ரெம்ப நல்லா பேசுது மேன் நீ...!

    தொடர் இஸ்டோரி போட்டுகினியாபா... கண்டுக்கினேம்பா...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube