புத்தகக் கண்காட்சிக்குத் தயாராக வேண்டிய புத்தக வேலைகள் டேபிள்முன் குவிந்து கிடந்தாலும், அவற்றைத் துறந்து தன்னுடன் படம் பார்க்க வரும்படி என்னை கதறக் கதற ஐநாக்ஸுக்கு இழுத்துச் சென்றார் கோவை ஆவி. ‘பிரியாணி’ பார்க்கலாம் என்ற அவரிடம், ‘‘கௌதமபுத்தர் வேஷம் குடுத்தாலும் கார்த்தி தெனாவெட்டாத்தான் பேசுவார். டைரக்டர் வேற தம்பியை ஓவரா புரொஜக்ட் பண்ணுவாரு... அந்தப் படம் பாக்கற அளவுக்கு அஞ்சாநெஞ்சனில்லை நான்’’ என்று அலறினேன். ‘‘ரைட்டு... ‘என்றென்றும் புன்னகை’ பாக்கலாம்’’ என்று அந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்கினார் அந்த நல்லவர். ஆக... படம் பற்றிய எந்த முன்ஐடியாவும் இல்லாமல் ப்ளெயினாகச் சென்றேன் தியேட்டருக்குள்.
ரொம்ப சிம்பிளான கதைதான். நாசரின் மனைவி அவரைவிட்டு ஓடிப் போக, ‘பெண்களை நம்பக் கூடாது’ என்று நாசர் புலம்புவது அவர் மகனின் மனதில் அழுத்தமாகப் பதிகிறது. பெண்களை வெறுக்கிற ஒருவனாக வளர்ந்து ஜீவாவாகிறார். தான் கல்யாணம் பண்ணப் போவதில்லை என்று தான் கெடுவதுடன் தன் ஆருயிர் நண்பர்களான வினய், சந்தானம் இருவரையும் ‘கல்யாணம் பண்ணிக்கக் கூடாது’ என்று சத்தியம் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள, அவர்களைத் துறக்கிறார். அப்பா நாசரிடம் சிறு வயதிலிருந்தே பேசுவதில்லை (அதற்கும் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு) என்பதால் தனிமை கொல்ல... இச்சமயத்தில் தொழில்ரீதியாக அறிமுகமான த்ரிஷாவுடன் நெருக்கம் அதிகரிக்க... ஜீவா மனம் மாறினாரா இல்லையா என்பதை விளக்குகிறது படம்.
படத்தில் குறிப்பிடத்தக்க ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவற்றை முதலில் பார்க்கலாம். முதல் ப்ளஸ் ஒளிப்பதிவு. நான் பெயர் குறித்துக் கொள்ள மறந்த சினிமோட்டோகிராபர் ஆண்ட்ரியாவை(கூட) அழகாக, கிளாமராகக் காட்டியிருக்கிறார். நண்பர்கள் கல்யாணம் செய்த வெறுப்பில் தண்ணியடிக்கும் ஜீவாவிடம் த்ரிஷா வந்து பேசுகிற காட்சி ஓவியம் போல கண்களை இழுத்துப் பிடிக்கிறது. அசத்தியிருக்கும் ஒளிப்பதிவுக்கு ஒரு ஷொட்டு!

சந்தானத்தின் நகைச்சுவை நன்றாக வந்திருப்பது பெரிய ஆறுதல். வழக்கமாக கவுண்டர் ஸ்டைலில் பனச் டயலாக்கில் மட்டுமே ஸ்கோர் செய்கிற சந்தானம், குடிக்க மாட்டேன் எனறு மனைவியிடம் ஜம்படித்து விட்டு, மூக்குமுட்டக் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் காட்சியில் பாடி லாங்வேஜிலும் (முதல்முறையாக?) ஸ்கோர் பண்ணியிருக்கிறார். டைரக்டர் இயல்பாக அங்கங்கே தெளித்திருக்கும் நகைச்சுவை வெடிகள் நன்றாகவே வெடிக்கின்றன. உதா: ‘‘ஜிமமிங்கறது யாருங்க?’’ ‘‘என் ஃப்ரெண்டு வீட்டு நாய், ஏன்?’’ ‘‘அந்த நாய் கொஞ்சம் முன்னால உங்க செல்லுல கால் பண்ணி பேசிச்சு’’ ‘‘இன்னிக்கு என்னடி டிஃபன் செல்லம்?’’ ‘‘ம்... ஒரு டம்ளர் விஷம்!’’ ‘‘நான் ஆபீஸ்ல இருந்து வர லேட்டாகும். நீ சாப்ட்டுட்டுப் படுத்துடு!’’ ‘‘என்னங்க... எங்கம்மா வீடடு நாய் நேத்து செத்துப் போச்சு. எங்கம்மாவால அதை ஜீரணிக்கவே முடியல...’’ ‘‘உங்கம்மா எதுக்குடி நாயை எல்லாம் சாப்பிடறாங்க?’’
இன்னொரு பெரிய ப்ளஸ் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. ஆரம்பத்தில் வரும் தோஸ்து பற்றிய பாடலும், ஹரிணி பாடியிருக்கம் ஒரு டூயட்டும் ரம்யமாக ஒலிக்கின்றன. பின்ணனி இசையிலும் அசத்தலாகப் பண்ணியிருக்கிறார் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்!
மைனஸ்கள் என்றால்... ஒரு காட்சியில் கரப்பான்பூச்சி கக்கா போனமாதிரி கலர்ஃபுல் தலையுடன் வரும் விளம்பர ஏஜென்சி நிர்வாகி, ஜீவாவிடம், ‘‘உனக்குத்தான் நடிக்க வரலையே. அப்புறம் ஏன் வீணா ட்ரை பண்றே? விட்டுடு’’ என்கிறார். இதை டைரக்டர் தனக்குச் சொன்னதாக ஜீவா எடுத்துக் கொண்டு விட்டார் போலும்! அதிகம் மெனக்கெடாமல் இயல்பாக(?) நடித்திருக்கிறார். அவரைவிட அவர் நண்பனாக வரும் வினய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (அவன் ஹைட்டுக்கு முன்னால போற ஃபிகரை இங்கருந்தே ப்ரண்ட்ல பாத்துருவான்டா -சந்தானம்)

ஆன்ட்ரியா சிலபல காட்சிகளில் தோனறி தனக்குத் தரப்பட்ட க்ளாமர் வேலையை சரிவரச் செய்திருக்கிறார். மூக்கர் நாசர் வழக்கம் போல அருமை! த்ரிஷா...! சாமியில் பார்த்ததுபோலவே இன்னும் ஸ்லிம்மாக இருக்கிறார். வெளிநாட்டில் காதல் நெருக்கம் காட்டிய ஜீவா, நண்பனிடம், ‘என்கூட ப்ளைட்ல வந்தவங்க’ என்று சொல்லும் காட்சியில் முகத்தில் அதிர்ச்சியும், கண்ணீரும் காட்டி நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தும்... அதிவிரைவில் அண்ணி, அக்கா கேரக்டர்களுக்கு பிரமோஷன்(?) ஆகிவிடும் சாத்தியக்கூறும் தென்படத்தான் செய்கிறது.
பெண்களை வெறுககும் தன் மகனின் மனம் மாறவேண்டும் என்பதற்காக இரண்டாம் கல்யாணம் செய்கிறார் நாசர். அதற்காகக் கோபப்பட்டு வெறுப்பைக் கொட்டுகிறான் மகன். ‘‘எனக்காக அபபாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை வர வேணாம். நான் போறேன்’’ என்று புதுமனைவி சொல்லிவிட்டு என்னமோ ‘கொடுத்த கால்ஷீட் முடிஞ்சிருச்சு, ப்ரொட்யூஸர் பேமெண்ட் தந்துட்டாரு. வரேன்’ என்கிற மாதிரி ஜஸ்ட் லைக் தட் போகிறார். நாசரும் ஒழிஞ்சுது சனியன் என்கிற மாதிரி அதன்பின் சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் மகனுக்காக மட்டும் ஏங்குகிறாராம். டைரக்டர்வாள்... என்னங்காணும் இது? கல்யாண பந்தத்துக்கு இவ்வளவுதானா ஓய் மரியாதை?
தனக்குப் பிடிக்காத செயலை அப்பா செய்தாலும், நண்பர்கள் செய்தாலும் தூக்கி எறிகிற, ஏறக்குறைய ஹிட்லர் அளவுக்கு வடிவமைக்கப்பட்ட ஜீவாவின் கேரக்டர் மனம் மாறுவதற்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. பின்பாதியில் படத்தின் வேல்யூவைக் குறைக்கிற விஷயம் இதுதான். அதே மாதிரி நிறையப் படங்கள் பார்த்திருக்கும் நம் அனுபவத்தின் காரணமாக நண்பர்களின் மனமாற்றத்திற்கும், திடீர் திருமணத்திற்கும் பின்னணியில் நாசர் இருப்பாரோ என்பதை யூகிததுவிட முடிவது ஒரு மைனஸ்!

படத்தில் த்ரிஷாவைத் தவிர அத்தனை பேரும் பெரும்பாலான காட்சிகளில் ‘தண்ணி’யடித்துக் கொண்டே இருக்கிறார்கள். விளைவாக... ‘மதுகுடித்தல் உடல்நலத்துக்குக் கேடு’ திரையின் கீழ் ரொம்ப நேரம் கண்ணில் மின்னுகிறது. திரையில் சின்னதாக ஒரு கட்டம் கட்டி (டைரக்டர் ஸ்ரீதர் ஸ்டைலில்) அதில் முகேஷைப் பேச வைத்துவிடுவார்களோ எனறு பயம் வருகிற அளவுக்கு ஆகிவிட்டது...! ஹி... ஹி...!
‘‘டோட்டலா என்னதான்யா சொல்ல வர்றே நீயி? படம் பாக்கலாமா, வேணாமா?’’ என்பவர்களுக்கு:
சின்ன வயசிலிருந்து நெருங்கிப் பழகி ஒன்றாகவே வாழும் நண்பர்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பதும், அவர்கள் தங்களுக்குள்ளும், மற்றவர்¬ளையும் கலாய்க்கும் காட்சிகளை யூத்ஃபுல்லாக அமைத்தும் முதல் பாதி வரை இயல்பான நகைச்சுவையுடன் கொஞ்சமும் போரடிக்காமல் கொண்டு சென்றதற்கும், இரண்டாம் பாதியில் சற்றே சொதப்பினாலும், ‘மோசமான படம்’ என்கிற கேட்டகரிக்குப் போகாதபடி படத்தை முடித்திருக்கும் டைரக்டர் அஹமதுக்கு தாராளமாகத் தரலாம் ஒரு வெலகம் பொக்கே!
பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச சென்றால், நிச்சயம் ரசிக்க வைக்கிற ‘ஒரு தரம் பாக்கலாம்டா’ என்று சொல்ல வைக்கிற நல்லதொரு என்டர்டெய்னர்!

|
|
Tweet | ||
பார்த்திடலாம்... நன்றி... மின்னல் திரை புதிய ஆரம்பத்திற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅண்ணே உங்களை கோவை அவி அழைத்து கொண்டு போனாரு
ReplyDeleteஇங்க ஒரு பயலும் சிக்க மாடடேங்கிறானுங்க எல்ல படமும் சொந்த காசுலயேவா பாக்குறது அவ்வ்வ்வ்வ்
சக்கரகட்டி கோவை ஆவிக்கு பால கணேஸ் மேல பயங்கர கோபம் ஐயா அதனாலதான் அவரை படத்துக்கு கூட்டி போய் பழி வாங்குகிறார்.
Deleteஹஹஹா.. :)
Deleteதங்கச்சிக்கு போன் பண்ணி பேச நேரமில்ல. ஆனா, இளவட்டப் பசங்களோடு சினிமாக்கு போக மட்டும் டைமிருக்கு!?
ReplyDeleteயக்கா ...! யாரது இளவட்டம் ....?
DeleteU MEAN ஆவி ...?
அப்ப சீனுவெல்லாம் குழந்தையா ....?
தாடியெல்லாம் வெச்சு தாகூர் மாதிரி இருக்குற உங்கள யாரும் இளவட்டம் ன்னு சொல்லலேன்னு பொறாமை!! ;)
Delete//த்ரிஷா...! சாமியில் பார்த்ததுபோல// அப்போ சாமிக்கு அப்புறம் நீங்க திரிஷாவ பார்க்கவே இல்ல அப்டித்தான வாத்தியாரே :-)
ReplyDeleteஒரு டம்ளர் விஷம்... இதெல்லாம் ஜோக்கா? சட்டப்படி சுடலாம்.
ReplyDeleteபழைய ஜோக்கு தான் இருந்தாலும் சந்தானம் சொல்லும் போது புதுசா இருந்தது..
Deleteஒரு வேளை எனக்கு வயசாயிடுச்சுனு காட்டுதோ!
Deleteஇருந்தாலும் சுடலாம்.. ;)
அண்ணன்னேன் ...! விமர்சனத்த ஆவி எழுதுனாறா இல்ல நீங்கதானா இலா ரெண்டு பேருமா ...?
ReplyDeleteசூப்பரு ... அஞ்சாநெஞ்சன ல்லாம் வம்புக்கு இழுத்துருக்கீங்க போல ?
// ‘‘கௌதமபுத்தர் வேஷம் குடுத்தாலும் கார்த்தி தெனாவெட்டாத்தான் பேசுவார். // ஹா ஹா ...என்னாவொரு observation ..
//அதிவிரைவில் அண்ணி, அக்கா கேரக்டர்களுக்கு பிரமோஷன்(?) ஆகிவிடும் சாத்தியக்கூறும் தென்படத்தான் செய்கிறது.//
Continuity miss ஆகுறா மாதிரிலா இருக்கு ...
உங்களுக்கு ஆவி கிடைத்த மாதிரி எனக்கெதுவும் கிடைக்காதா ...? At-least பேயாவது ....
ஒய்.. உம்ம ஊருக்கு வந்து வச்சுக்கிறேன்..
Deleteகுறிப்பிட்டுள்ள டைலாக் மற்றும்
ReplyDeleteஇறுதியாக நீங்கள் கொடுத்துள்ள
சான்றிதழ் படம் பாக்கச் சொல்லுது
பார்த்திடவேண்டியதுதான்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
(ஒரேயடியா வேலை வேலைன்னு இல்லாமல்
இப்படியும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் )
tha.ma
ReplyDelete
ReplyDeleteநான் முதல் பாராவுக்கு அப்புறம் ரஜினி ஜம்ப் பண்ணுவது போல ஒரே தாவு தாவி கமெண்ட்ஸ் பக்கம் வந்துட்டேன். அப்ப நீங்க சினிமாவெல்லாம் பாக்க மாட்டேனா என்று கேட்காதீங்க. நானெல்லாம் டிவியின் முன்னால உட்கார்ந்து லேப்டாப்வுடன் விளையாடிக் கொண்டு சினிமாவின் வசனங்களை மட்டும் கேட்டு கொண்டிருக்கும் ஆளுங்க யாரவது அழகான பொண்ணு வந்து ஆடினா மட்டும் டிவியை பார்ப்பேனுங்க tha.ma 5
மின்னல் திரைக்கு பாராட்டுக்கள்..!
ReplyDeleteபார்த்திடுவோம் நன்றி ஐயா
ReplyDeleteமின்னல் திரையில் ஒரு பின்னல் விமர்சனம்...:)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteஐயா.
மிகச்சிறப்பாக உள்ளது விமர்சனம் கட்டாயம் பார்த்திடுவோம். படத்தை.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி கட்டாயம் எழுதுங்கள் ஐயா மேல் விபரங்களை பார்வையிட இதோ முகவரி.http://2008rupan.wordpress.com.
http://tamilkkavitaikalcom.blogspot.com/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஐயா
த.ம 7வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒரு தரம் பாக்கலாம்.......ம்.............ம்.........!
ReplyDeleteமின்னல் திரை. தலைப்பு சூப்பர். விமர்சனம் அருமை. சந்தானம் இருந்தால் தண்ணி அடிக்கும் காட்சி இல்லாமல் இருக்காது .. பிரிக்க முடியாதது சந்தானமும் மது அருந்தும் காட்சிகளும்
ReplyDeleteஹஹஹா.. படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். அடிபட்டு அப்போல்லோவில் அட்மிட் ஆக போனேன்.. பக்கத்துல புகாரி ஹோட்டல் இருந்ததால் பிரியாணி சாப்பிட்டு திரும்பி வந்துட்டன்.. :)
ReplyDeleteஆஹா...நீங்களுமா?
ReplyDeleteஉங்கள் விமர்சனம் அருமை அண்ணா...
ReplyDeleteபடம் பார்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது...
பொதுவாகப் படங்கள் பார்ப்பதில்லை. ஆனால் விமரிசனங்கள் படிப்பேன். யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது இவ்விமரிசனம்.
ReplyDeleteபடத்தைவிட உங்கள் விமரிசனம் நன்றாக இருக்கிறது, கணேஷ்! அதனால் படம் பார்க்க வேண்டாம்ன்னு தீர்மானம் பண்ணிவிட்டேன்! (ஆவியின் விமரிசனம் இன்னும் படிக்கவில்லை)
ReplyDeleteபார்க்காலாம் விரைவில் நெட்டில் வந்த பின் அண்ணாச்சி!
ReplyDeleteசுமார் தான்... என உங்கள் விமர்சனம் சொல்லாமல் சொல்லி விட்டது...:))
ReplyDeleteஅட மின்னல் திரையில் சினிமா விமர்சனம்...... நடத்துங்க! வேலையெல்லாம் எந்த அளவுல இருக்கு!
ReplyDeleteரொம்ப யூத் ஆகிட்டீங்க sir.. இப்பல்லாம் ஒரு படம் விடறதில்ல போல... ராஜி ஆன்டீ சொன்ன மாதிரி ஒரு கால் கூட பண்ண மாட்டேன்றீங்க.....
ReplyDeleteநான் பெயர் குறித்துக் கொள்ள மறந்த சினிமோட்டோகிராபர் ஆண்ட்ரியாவை(கூட) அழகாக, கிளாமராகக் காட்டியிருக்கிறார்
ReplyDeleteanna ஆண்ட்ரியாவை rompa rasichi iruekegapola iruke . anni mobile no kodunga call pani solren :))))))))))))))))))
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
ReplyDelete