Wednesday, December 11, 2013

பாட்டுக்(கும்)கொரு புலவன்!

Posted by பால கணேஷ் Wednesday, December 11, 2013
சுப்பிரமணிய பாரதி! மகாகவி என்ற சொல்லுக்கு மேல் ஏதாவது இருந்தால் அந்தப் பட்டத்துக்கும் தகுதியானவர். கண்ணன் கவிதைகளில், குயில் பாட்டில் தென்றலாய் வீசியவர்; தேசபக்திப் பாடல்களில் புயலாய்ச் சீறியவர்; வசன கவிதை என்ற ஒன்றை எழுதி, இன்றைய புதுக் கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்; உரைநடைத் தமிழையும் ஒரு கை பார்த்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11. இத்தருணத்தில் அவரது உரைநடையில் என்னைக் கவர்ந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

• தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செய்கை புண்ணியச் செயல் எனப்படும்.

* எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.
 
• உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே ‘நான்’ என்ற பாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறு என்று வேகமாகவும், பிழை இல்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.

* தேசாபிமானம் கற்பியாத கல்விமுறை வெறும் மண்ணாகுமேயன்றி ஒன்றுக்கும் பயன்படாது.

* அச்சமே மடமை; அச்சம் இல்லாமையே அறிவு. அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும் தாயும் சமானம்; ஏழையும் செல்வனும் சமானம்; படித்தவனும் படியாதவனும் சமானம்; அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலேயே மேலோங்கி நிற்கும்.

• அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும், தாயும் சமானம்; ஏழையும், செல்வமும் சமானம்; படித்தவனும், படியாதவனும் சமம். அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும்.

* வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மை  இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும்.

* எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாது இருத்தலே முக்தி. கவலைப்படாது இருந்தால்தான் இவ்வுலகத்தில் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய் அல்லது எவ்வித ஆபத்து நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின் அவை தாமே விலகிப் போய் விடும்.
• இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லா வற்றிலும் மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை.

* மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்கும் திறனும், பாயும் திறனும் கொண்டு இருப்பது மட்டு மேயன்றி, ஒட்டகத்தைப் போல பொறுக்கும் திறனும் வேண்டும். அவ்விதமான பொறுமை பலம் இல்லாதவர்களுக்கு வராது. இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானல் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த குணமானது பொறுமை.

• தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜுர வாழ்க்கை நாகரிகம் ஆக மாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம். அடக்கம், பொறுமை. ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும், நித்திய ஜீவனையும் விளைவிக்கும்.

* மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான் அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான் அல்லது பொய்க் காரணங்கள் செல்லி அது குற்றம் இல்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை. அதை நீக்கும் வழி சத்சங்கமும், தைரியமும்! பிறர் குற்றங்களை ஷமிக்கும் குணம் குற்றம் இல்லாதவர்களிடத்திலேதான் காணப்படும்.

• நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும் என்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும் வேறு வழி இல்லை.

* சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!

• யாகம் என்பதன் பொருளை நாம் மிகத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். பெரியதோர் இஷ்ட சித்தியின் பொருட்டாகச் சிறிய தற்கால சுகங்களை மனம் அறிந்து வெறுத்து விடுதலே யாகம்.

* பாவத்தைச் செய்வது இல்லை என்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் இருக்க முடியாது.

* தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும்.

* பொறுமை இல்லாதவனுக்கு இவ்வுலகில் எப்போதும் துன்பமே அன்றி அவன் ஒருநாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கு எத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றி உண்டாகிறது. வீட்டிலே பொறுமை பழகினால் அன்றி ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமை ஏற்படாது.

* உண்மையான தெய்வ பக்தி இருந்தால் மனோ தைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.

* தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டாக உலகத்தாரி்ன் நிந்தை, பழி, விரோதம், தீங்கு முதலியவற்றைக் கவனியாமல் உழைப்பவன் யக்ஞம் செய்பவன் ஆகிறான்.

• பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

• ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம். ஒரு சொற் கேளீர்... சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்.

• வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத்து தருக்குடை நீசர்கள் -இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்.

* அகண்ட வெளிக்கண் அன்பே வாழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெலாம்! கிருத யுகம்தான் மேவுகவே!
 
=====================================================
இது ஒரு மறு ஒளிபரப்பு!

=====================================================

32 comments:

  1. வணக்கம்
    ஐயா

    பாரதி பற்றி சிறப்பான.. தொகுப்பு. காலத்துக்கு தகுந்தமாதிரி பதிவு எழுதிய விதம் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறப்புப் பதிவாக பாரதியின்
    அற்புதமான வாசகங்களை
    பதிவாக அறியக் கொடுத்து
    சிறப்பித்தமைக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிற்ப்பான வரிகளை
    அழகாகத் தொகுத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  4. பாரதிக்கு மரியாதை.

    ReplyDelete
  5. அகண்ட வெளிக்கண் அன்பே வாழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெலாம்! கிருத யுகம்தான் மேவுகவே!

    ReplyDelete
  6. எம்மையும் கவிப்பக்கம்
    ஈர்த்த காந்தம்
    கருத்தினுள் ஒன்றிடச்செய்த
    மையநோக்கு விசை
    நம்பிக்கையால் உந்தியெழச் செய்த
    நெம்புகோல்
    முண்டாசுக் கவிக்கு பிறந்தநாள்...
    தீந்தமிழின் விவேகமான
    வீரத்தின் பிறந்தநாள்..

    எட்டையபுர பெருங்கவிஞனின் உரைநடை வரிகளை
    இந்நன்னாளில் எங்களோடு பகிர்ந்துகொண்ட
    நண்பருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. பாரதியின் சிந்தனைகள் இந்த காலத்தில் புத்தகங்களில் மட்டுமே இருக்கின்றன. மக்கள் மனதில் இல்லை tha.ma 5

    ReplyDelete
  8. பாரதி இப்போது இருந்தால் தமிழ்நாட்டுக்குள் இருக்கும் பார்களுக்கு தீ வைத்து பாரதீ என்ற பட்டம் பெற்று இருப்பான்.

    ReplyDelete
  9. அரசியல் தலைவர்களை மட்டும் வைத்து காமெடி பண்ணினால் நல்லா இருக்காது அதனால் வலையுலக தலைவரான பாலகணேஷையும் அவரது கட்சியை சார்ந்த தளபதியான சீனுவையும் வைத்து காமெடி பண்ணலாம் என்று மனதில் தோன்றியதன் விளைவே இந்த பதிவு ''வலையுலக வாத்தியாரும் சிஷ்யனும் சந்தித்து பேசினால்......?''http://avargal-unmaigal.blogspot.com/2013/12/bala-ganesh-and-seenu-comedy.html

    ReplyDelete
  10. பாரதி வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற பெருமிதம் கொள்வோம்!

    ReplyDelete
    Replies
    1. என்னாது...... ஆவி... நீங்க பாரதி காலத்துலேர்ந்து வாழும் ஆளா...????

      இனிமேல் கோவை ஆவின்னு பேர் போடாதீங்க.
      குடுகுடு ஆவின்னு மாத்துங்க.

      Delete
  11. ஹய்யோ... ஹய்யோ...
    இங்க நீங்க பாரதியின் படைப்பை போட்டா அங்கே ஒருத்தர் உங்களையே படைத்து வருத்தெடுத்திருக்கிறார்.

    ReplyDelete
  12. சிறப்பான வரிகளின் தொகுப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. இக்காலத்துக்கு வேண்டுவது என்னவென்று அக்காலத்திலேயே,கண்டு கொண்டவர் பாரதி!

    ReplyDelete
  14. //• தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜுர வாழ்க்கை நாகரிகம் ஆக மாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம். அடக்கம், பொறுமை. ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும், நித்திய ஜீவனையும் விளைவிக்கும்.//

    //தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செய்கை புண்ணியச் செயல் எனப்படும்.//

    //அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும், தாயும் சமானம்; ஏழையும், செல்வமும் சமானம்; படித்தவனும், படியாதவனும் சமம். அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும்.//
    - இந்த மூன்றும் ரொம்ப பிடித்தது....!

    ReplyDelete
  15. சிறப்பான தொகுப்பு...

    பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்....

    பிடித்த வரி...

    ReplyDelete
  16. பாரதியின் உரைநடை வரிகளின் தொகுப்பு அவருக்கு சிறந்த மரியாதை சேர்க்கும் விதமாக இருந்தது.

    ReplyDelete
  17. பாரதி பற்றிய பல அரிய தகவல்களை அறியப் பெற்றேன், பகிர்வுக்கு நன்றி அண்ணா!

    ReplyDelete
  18. பாரதியின் சிறப்பான சிந்தனைகள்..

    ReplyDelete
  19. பாரதியின் பிறந்த நாளில் திரும்பிய இடத்திலெல்லம் அவன் கவிதையை மட்டுமே கண்டு கொண்டிருந்த கண்களுக்கு அவனுடைய இன்னொரு போர்க்கருவியை இங்கு கண்டிட்ட மகிழ்ச்சி அதுவும் அழகிய முறையிலே கூர் ஏற்றப்பட்டதாய்.... அருமை அண்ணா...

    ReplyDelete
  20. தகுந்த நேரத்தில் நினைவூட்டியமைக்கு நன்றி!

    //அன்பே தெய்வம். // என்ற பொன்மொழி முக்கியம் கருதி
    இருமுறைகள் பதிந்துள்ளீர்களோ சார்?

    ReplyDelete
  21. குரங்காய் பிறந்தால் என்னவாம் முண்டாசுக்கு?

    ReplyDelete
  22. நல்ல பகிர்வு. நன்றி கணேஷ் ஐயா.

    ReplyDelete
  23. பாட்டுக்கொரு புலவன் பாரதியைப்
    போற்றித் தொழுதேற்றிடும்
    ஏற்றம் மிகு படைப்பிதற்கு என்
    இனிய வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  24. பாரதி பற்றிய நல்பதிவு
    நன்றி

    ReplyDelete
  25. //சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!//
    தமிழை ஒழுங்காகப் பேசாவிட்டாலுமா? எதற்கு வம்பு? ஒழுங்கான தமிழிலேயே கருத்தைச் சொல்லிவிடுவோம்...
    த.ம. ஓட்டு போட்டுவிட்டேன் ஐயா...

    ReplyDelete
  26. ஐயா வாத்தியாரே... Pl. Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
  27. அருமை. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  28. பாரதி பற்றி அருமையான தொகுப்பு..

    ReplyDelete
  29. பாரதியின் வார்த்தைகளில் எதுதான் இல்லை? அச்சம், பொறுமை, உழைப்பு, தேசாபிமானம், தமிழ்மொழி மீதான காதல்... வாசிக்க வாசிக்க வியப்பு மேலிட்டுக்கொண்டே போகிறது. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube