Saturday, December 28, 2013

ரெண்டு நாளா ‘சுடுதண்ணி வெக்கிறது எப்படி'ன்னும், ‘முட்டை அவிககிறது எப்படி'ன்னும், ‘டீ போடுறது எப்படி'ன்னும், ஆளாளுக்கு பதிவு போட்டுக் கலக்கிட்டிருக்காங்க. ஆனா பாருங்க... ஒரு பயபுள்ளையும் அதையெல்லாம் சாப்பிடறது எப்படின்னு சொல்லித் தரக் காணோம். அதனால... அந்த அரிய விஷயத்தை நான் ‘டச்' பண்ணலாம்னு நினைக்கிறேன். ‘டிச்' பண்ணிட்டேன்னு யாராவது கொந்தளிச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பில்ல.

சமைத்தல் யார்க்கும் எளிது அரியவாம்
சமைத்ததைத் தானே உண்ணல்


அப்படின்னு திருவள்ளுவர் சொல்லாத திருக்குறளே ஒண்ணு இருக்குது. அதனால ரொம்பக் கஷ்டமான அந்த சாப்பிடற விஷயத்தை ரொம்ப சிம்பிளாச் சொல்றேன் கேட்டுக்கங்க. இந்த முட்டை இருக்குதே முட்டை... அதை பள்ளிப் பருவத்திலயே மார்
க்க்ஷீட்ல (என்னை மாதிரி) நிறையப் பேர் வாங்கியிருப்பீங்க. இந்த முட்டைங்கறது வெள்ளையா, நீள் வட்டமான வடிவத்துல இருக்கும். (என்னா கண்டுபிடிப்பு!) வேகவைத்துத் தரப்பட்ட அதை கையால அழுத்திககூட ரெண்டு சரிபாதியாப் பிரிக்கலாம். பிரிக்கப்பட்ட பாதியின் மேல கொஞ்சம் உப்பும், கொஞ்சம் மிளகுத்தூளும் சேர்த்து (நமக்கிருக்கற) ஒரே வாய்ல திணிச்சுக்கிட்டு மென்னு சாப்பிட்டா... பேஷ், பேஷ்...! ரொம்ப நனனாருக்கும்.

சில பேத்துக்கு வாய்ங்கறது கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும். ‘பேச ஆரம்பிச்சா நிறுத்தாத ஒரே உயிரினம் எங்கம்மாதான். வாயா அது...? அலிபாபா குகை' அப்படின்னு பக்கத்து வீட்டுப் பையன் சோகமா சொல்வான். அதுமாதிரி வாய் இருக்கறவங்க ஒரு முட்டையை ஒரே வாய்ல திணிச்சு முழுங்கலாம். இல்ல... மாயாபஜார் படத்துல எஸ்.வி.ரங்காராவ் ஒரே சமயத்துல இருபது லட்டுகளை முழுங்குவாரே... அந்த மாதிரி ரெண்டு மூணு முட்டைகளை அட் எ ஸ்ட்ரெஸ் வாய்ல திணிச்சும் சாதனை பண்ணலாம். இதில் எந்த வகையைச் சேர்ந்தவர் நீவிர் என்பது உங்களுக்கே தெரியும்... ஹி... ஹி...!

அடுத்தது சுடு தண்ணீர்...! இதை ரெண்டு விதமாப் பயன்படுத்தலாம் நீங்க. முதல் வகை... ஒரு டம்ளர்ல எடுத்துக்கிட்டு, கொஞ்சத்தை வாய்க்குள்ள விடணும். அதோட சூடு ரொம்ப அதிகமா இருந்துச்சுன்னா, உங்க நாக்கு வாய்க்குள்ளயே அந்தக் கால டிஸ்கோ டான்ஸ், நடுககால பிரேக் டான்ஸ், இந்தக் கால குத்து டான்ஸ்னு எல்லா டான்ஸையும் ஆடும். அப்புறமா... அதை வாயால ஊதி, அதோ வீரியம் குறைஞ்சுட்டதான்னு ஒரு வாய் உள்ள விட்டு மெதுவாக் குடிககணும். இப்படியே மொத்த டம்ளரையும் குடிச்சுக் காலி பண்ணனுமுங்க. 

நீங்க கல்யாணமானவங்களா இருந்தா... காலையில ‘காபி’ அல்லது ‘டீ’ங்கற பேர்ல இப்படி சுடுதண்ணியைக் குடிச்சுப் பழக்கப்பட்ட அனுபவசாலியா இருப்பீங்க. (நோ... நோ... சரிதா மொபைல் நம்பர் தரமாட்டேன் சிஸ்டர்ஸ்!) ‘சுடு தண்ணியப் போட்டு அதை வாயால ஊதி ஆறவெச்சுக் குடிக்கறதுக்கு... அதை சுடவெக்காமலேயே குடிச்சுத் தொலைக்க வேண்டியதுதானே.... என்ன கெரகததுக்கு சுட வெக்கணும்?' அப்படின்னு .ங்க மைண்ட்வாய்ஸ் கத்திச்சுன்னா அது ரொம்ப நியாயமுங்க. பதிவுலக காதல் இளவரசன் ‘தி.கொ.போ.' சீனுகிட்டதான் இதைப் பத்திக் கேக்கணும்.

இங்கதானுங்க சுடுதண்ணியோட ரெண்டாவது பயன்பாடு வருது. அதை ஒரு பக்கெட்டுல எடுத்துக்கிட்டு, உங்கள் பாத்ரூமில் ஆடைகளற்ற நிலையில் நின்று கொண்டு அப்படியே மேலே ஊற்றிக் கொள்ள வேண்டும். இவ்விதம் செய்யின்... வடிவேல் போன்ற நிறத்தினராக இருந்தீர்களென்றால் கமல் போன்ற நிறத்தினராகி விடுவது நிச்சயம்! கூடவே அந்த சுடுதண்ணீர் உஙகள் உடலில் ஏற்படுத்தும் உற்சாகத்தின் விளைவக நீங்கள் ஒரு பாத்ரூம் நடனம்கூட ஆடுவீர்கள் என்பதால் இலவசமாக நடனப் பயிற்சி« வேறு கிடைப்பது போனஸ் பயன்பாடு. ஹி... ஹி...! ஏற்கனவே கமல் போன்ற நிறத்தினராக இருப்பீர்களாயின், சுடுதண்ணீருடன் கொஞ்சம் குளிர் நீரை மிக்ஸ் பண்ணி... (மிக்ஸ் பண்ணுறதுங்கறது தமிழ்நாட்ல எல்லாருக்கும் இப்ப அத்துப்படி தானுங்களே...!) அதை மேல ஊத்திக்கிட்டு குளிச்சிரலாம்.

அடுத்த கேட்டகரி தீக்குளிக்கிறது... ஸாரி, டீக்குடிக்கிறது! முதல்ல சுடச்சுடத் தரப்படற டீயை ஒரு டம்ளர்ல எடுத்துக்கணும். வலது கையை தலைக்கு மேலே கொண்டு போயி... டீ டம்ளரை அந்தக் கைல வெச்சுக்கணும். அப்புறம் அதுக்கு நேர்கீழா 90 டிகிரியில இடது கையில இன்னொரு காலி டம்ளரை வெச்சுக்கிட்டு அதிலருந்து டீயை இதக்கு டிரான்ஸ்பர் பண்ணனும். அப்புறம் இடது கைய மேல கொண்டுபோயி... வலது கைய கீழ கொண்டு வந்து மறுபடி டீயை டம்ளர் விட்டு டம்ளர் பாய வெக்கணும். இப்படி நாலஞ்சு தடவை பண்ணினப்புறமா டீ இருக்கற டம்ளரை வாய்ல வெச்சு ‘சுர்'ருன்னு சத்தம் வராம நாசூக்கா உறிஞ்சிக் குடிக்கணும்.

ஆக... சமைத்ததைப் பயன்படுத்தும் கலையை... சாப்பிடும் கலையை இப்ப நீங்க நல்லா தெரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நெனக்கிறேன். இப்படியான ஒரு அரிய கலையைக் கத்துக் குடுத்ததுக்காக நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா... ஒரு மெயில் அனுப்புங்க. என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேன். அப்படி இல்லாம விசேசமா ‘ஏதாவது' செய்யணும்னு நினைச்சீங்கன்னா... இந்தப் பதிவை என்னை எழுதுவெச்ச தி.கொ.போ.சீனு, கோவை ஆவி, தமிழ்வாசி பிரகாஷ், ‘நம்ம' நண்பன் அப்துல்பாஷித் ஆகியோரை அணுகுக! என் சார்பில் இவர்களே பரிசைப் பெற்றுக் கொள்வார்கள்! ஹா... ஹா... ஹா...!

52 comments:

  1. Replies
    1. நீங்க தானே ஆரம்பிச்சீங்க? அப்பா நீங்க தான் பர்ஸ்ட் வாங்கிக்கணும்... :)

      Delete
  2. அச்சச்சோ, கடைசி வரிய படிக்காம மீ பர்ஸ்ட் ன்னு சொல்லிட்டேனே.. நானா மாட்டிகேட்டேனே.. போதும் வாத்தியாரே.. இத்தோட நிறுத்திக்குவோம்.. இது மாதிரி ஒவ்வொரு பதிவு வெளிவர்ற போதும் என் பிளாக்குக்கு வந்து திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ;)

    ReplyDelete
  3. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    போற போக்கப் பாத்துக்கினா... இப்புடிக்கா குக்கு பண்ணி... இப்புடிக்கா துன்னுகினு... அப்பால... இஸ்டமக் கோயாரு எதுனா வந்துக்கினா... அத்துக்கு இன்னா ட்ரீட்மண்டுன்னு சொல்லி... நம்ப நம்பிள்கி டாக்குட்டரு... ஒரு பதிவத் தேத்த ஏற்பாடு பண்ணிக்கிணீங்களேபா...?

    ReplyDelete
  4. யோவ் ஆவி எல்லாம் உம்மால தான்... நான் பாட்டுக்கு ஒரு பதிவு போட்டேன்... ஏதோ திடிர்னு ரோசம் வந்து எதிர்பாட்டு பாடுற மாதிரி எதிர்பதிவு போட்டீரு... இப்ப பாரும் 'உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட" :-)))

    அய்யய்யோ இந்த பதிவுலையும் யாரும் வந்து எனக்கு அது தெரியாது, இது தெரியாதுன்னு சொல்லாம இருக்கணுமே :-) ஆண்டவா நீ தான் நம்ம மக்களை காப்பாத்தணும் :-)))))))))

    இருந்தும் சோம்பிக் கிடந்த பதிவுலகத்த திடங்கொண்டு போராட வச்ச அன்பு உள்ளங்கள் சீனு, ஆவி, தமிழ்வாசி, பிளாக்கர் நண்பன், ஹாரி, ராஜபாட்டை ராஜா உடன் வாத்தியார் ஆகியோர் வாழ்க வாழ்க

    # நமக்கு நாமே கட்டவுட் அடிச்சிகிட்டா தான் உண்டு :-))))

    ReplyDelete
    Replies
    1. "காமெடி கும்மி சிங்கங்கள்" என்பதை மறந்துட்டீங்களே?

      Delete
  5. எத்தனை பேர் இப்படிக் கிளம்பி இருக்கீங்கன்னு தெரியலையே !

    ReplyDelete
  6. தெளிவான விளக்கங்களுக்கு நன்றி!! படங்கள் எங்கே?!! :-))

    ReplyDelete
  7. /// இந்தப்
    பதிவை என்னை எழுதுவெச்ச
    தி.கொ.போ.சீனு, கோவை ஆவி,
    தமிழ்வாசி பிரகாஷ், ‘நம்ம' நண்பன்
    அப்துல்பாஷித் ஆகியோரை அணுகுக///

    இவர்கள் அணைவரும் நாடுகடத்தபட்டதாக கேள்விபட்டேன். . .

    ReplyDelete
    Replies
    1. நான் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுட்டேன் வாத்தியார் சார்! :)

      Delete
  8. ஹா... ஹா... சூப்பரு வாத்தியாரே...!

    ReplyDelete
  9. சமைத்தல் யார்க்கும் எளிது அரியவாம்
    சமைத்ததைத் தானே உண்ணல்

    ஆஹா... அருமை அண்ணா...

    ReplyDelete
  10. பல்லால் சவைப்பது எப்படி? நாக்கால் சுவைப்பது எப்படி - போன்ற தலைப்புகளிலும் பதிவு போடுங்களேன்.

    ReplyDelete
  11. அருமையான பதிவு சார் ... என் சந்தேகங்களை பட்டியல் இட ஆசை தான் ... நேரம் வருகையில் கேட்கிறேன் ...


    டீ டம்ளரை அந்தக் கைல வெச்சுக்கணும். அப்புறம் அதுக்கு நேர்கீழா 90 டிகிரியில இடது கையில இன்னொரு காலி டம்ளரை வெச்சுக்கிட்டு அதிலருந்து டீயை இதக்கு டிரான்ஸ்பர் பண்ணனும்//

    இங்கதான் மெர்சலானென் ...

    எலேய் சீனு ...................

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. என்ன ஒரு தகவல் sir... அதென்ன கல்யாணம் ஆனவங்க காலைல டீ-கு பதிலா வெந்நீர் குடிகறாங்களா? இத நான் சும்மா விட மாட்டேன்...

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா

    பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. வணக்கம்
    த.ம 7வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. வாவ்! வாட் எ வொண்டர்புல் போஸ்ட் சார்!

    நாங்க செனி வச்ச சுடுதண்ணீர், முட்டை, டீயை எப்படி சாப்பிடுறதுன்னு முழிச்சிட்டு இருந்தோம். தக்க சமயத்தில் பதிவு எழுதுனீர்கள். மிக்க நன்றி சார்!

    :)

    ReplyDelete
  17. நீங்களுமா வாத்தியாரைய்யா....!!!!!!!!

    உஙகள்- உங்கள்.....

    ReplyDelete
  18. theriyama intha pakkam vanthu intha pathiva padichitenooo-----------

    ankala ple ennaya kapathunga :((((((((((((

    ReplyDelete
  19. இந்தப் பதிவை என்னை எழுதுவெச்ச தி.கொ.போ.சீனு, கோவை ஆவி, தமிழ்வாசி பிரகாஷ், ‘நம்ம' நண்பன் அப்துல்பாஷித் ஆகியோரை அணுகுக!


    why this kola veri annankala ,, varen unga pakkam vanthu anga enna nadanthu irukunu pakuren

    ReplyDelete
  20. சமைத்தல் யார்க்கும் எளிது அரியவாம்
    சமைத்ததைத் தானே உண்ணல்

    nesathuku ippadi oru thirukural irukugala anna :(((((((((((

    ReplyDelete
  21. me they 25 st

    apadika vanthu adutha comment podren ok aduthathu avi annava parthutu varen

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. திருவள்ளுவருக்குத் தெரியாத
    குறளையே கண்டுபிடித்து
    எழுதியுள்ளீர்கள்
    அரமை ஐயா

    ReplyDelete
  24. அப்புறமா... அதை வாயால ஊதி, அதோட 'வீரியம்' குறைஞ்சுட்டதான்னு.................////அப்புடீன்னா?

    ReplyDelete
  25. சமைப்பது சாப்பிடுவது தெரிந்துகொண்டுவிட்டோம்.
    அதன் பிறகு ஒரு "முக்கி"யமான விஷயம் பற்றியும் விரைவில் ஒரு பதிவை உங்கள் வகுப்பிலிருந்து எதிர்பார்க்கும் ஒரு new admission

    ReplyDelete
  26. நல்ல பயனுள்ள பதிவு ! தொடருங்கள் :)

    ReplyDelete
  27. நீங்க மொக்கைப் பதிவு போடுவீங்கன்னு தெரியும். ஆனா, படு மொக்கைப் பதிவும் போடுவீங்கன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன் அண்ணா!. இதெல்லாம் ஸ்பைன்ற சின்ன பையனோடும், ஆவின்ற கெட்ட வஸ்துவோடும், சீனுன்ற ப்ளே பாய் கூடவும் சேர்ந்து ஊரை சுத்துற தோஷம்தான். சீக்கிரம் எதாவது கோவிலுக்குப் கூட்டிப் போய் தோஷம் கழிக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. யக்கோவ், ஆரம்பிச்சிருவீங்களே, சகவாசம் சரியில்லைன்னு... இதுக்கு நாங்க காரணம் இல்ல...

      Delete
  28. பதிவுலகத்தை யாரோ கண்ணு போட்டுடாங்க.........

    ReplyDelete
  29. வாத்தியாரே நீங்களும் களத்துல இறங்கியாச்சா.....

    கலக்கலா பதிவு எழுதி இருக்கீங்க வாத்தியாரே....

    இன்னும் யார் யார் என்னவெல்லாம் சமைச்சு அசத்தப் போறாங்களோ தெரியலையே!

    ReplyDelete
  30. சிறப்பான பகிருவுக்கும் பாராட்டுக்களும் பிறக்கப் போகும்
    புத்தாண்டில் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்ந்திடவும்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்
    இனிய வாழ்த்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  31. சிரிக்காமல் பதிவைப் படிப்பது எப்படி? பதிவு போடுறீங்களா இந்தத் தலைப்பிலே?

    ReplyDelete
  32. இதுவரை தெரியாத விஷயத்தை சொல்லி கொடுத்திருக்கீங்க...

    குறள் அருமை... நீங்களும் களத்துல குதிப்பீங்கன்னு நினைக்கலை... இருங்க சரிதாவுக்கு போன் பண்ணி சொல்றேன்...

    ReplyDelete
  33. கேட்டகரியா? யார் கேட்டது?

    ரஜினி நிறம்னு சொல்லக்கூடாதா? வயிரமுத்து அறம் வச்சுடுவாரா?


    ReplyDelete
  34. ஒரு சுடுதண்ணீ வைக்கறதுக்கு குறள் எல்லாம் போட்டு இப்படிக் கும்மி அடிக்கிறீங்களே!! தாங்கலடா சாமீ! இங்க அவன் அவன் பாச்சுலர் சமையலே செய்யறாங்க.....அதாங்க குடந்தையூர் சரவணன்......

    .பதிவு நல்ல நகைச்சுவையுடன் கூடிய ஒரு நல்ல பதிவு! ரசித்தோம்! சிரித்தோம்!

    வாழ்த்துக்கள்! தொடர்கிறோம் உங்களை எங்கள் வலத்தளத்திலும்!அதாக

    ReplyDelete
  35. பல் தேய்த்து வாய் கொப்பளித்து துப்புவது எப்படி என்று யாராவது எளிமையாகப் பதிவிட்டால் என் மகனிடம் படித்துக் காட்டுவேன்.

    ReplyDelete
    Replies
    1. காரணம், எனக்குப் பல் தேய்த்துப் பழக்கமில்லை.

      Delete
  36. பதிவு எழுத தலைப்பு கிடைக்காத தருணத்தில் இந்த மாதிரி பதிவுகளை எழுதுவது எப்படி ? என்று பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  37. சும்மா எட்டிப்பார்த்து ஒரு பின்னூட்டம் போடலாமேன்னு வந்து பார்த்தா - உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! கண்ணக் கட்டுதே..!

    ReplyDelete
  38. ஹா... ஹா............

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  39. என்ன பதிவு போட்டாலும் அண்ணனால அண்ணிய நினைக்கம இருக்க முடியரதில்ல :P அம்புட்டு பாசம்

    ReplyDelete
  40. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    தாங்கள் ஒரு இடுகை இட, அதைக் கலாய்த்தும், தாங்கள் பதிலுக்கு கலாய்ப்பதும் மிகவும் ரசனையாக, வாசிப்பதற்கு நகைச்சுவையாக இருக்கின்றது! எல்லோரும் இது போல இன்புற்றிருக்க தங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  41. அடடா!!.. இந்த டெக்கினிக்கு தெரியாம இவ்ளோ நாளா சுடு தண்ணியையும் அவிச்ச முட்டையையும் வீணாக்கிட்டேனே.

    ReplyDelete
  42. தங்களுக்கும், தங்கள் குடும்பதினருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  43. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube