Tuesday, December 3, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 2

Posted by பால கணேஷ் Tuesday, December 03, 2013
நான் வர்றதுக்குச் சித்த நாழி கூடவே ஆயிட்டாலும்கூட, கச்சேரியத் தொடர்ந்து கேக்கறதுக்கு ஆர்வத்தோட காத்திருக்கற உங்களுக்கெல்லாம் வணக்கம். அப்புறம் என்னாச்சுன்னா...

 வாசனோட தொணப்பல் தாங்க முடியாத நம்மாளு சரிதாவை பரிதாபமாப் பாக்க... ‘‘ஹும்...! நீங்க ஆரம்பிச்சாச்சு. அவன் சின்னப் புள்ளைலருந்தே அடம் புடிசசா சாதிக்காம விடமாட்டான். அப்புறமென்ன... சொல்லித் தொலையுங்கோ..."ன்னு சலிப்பாத்தானே சொல்றா. நம்மாளு மனசுக்குள்ள தானே சிரிச்சுண்டு, மேலுக்கு சாதுவா முகத்தை வெச்சண்டு வாசன்கிட்ட அந்தக் கதையச் சொல்றான். ‘‘அதையேண்டா கேக்கற... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால கப்ஸி உங்கள் சாய்ஸ்ன்னு ஒரு ப்ரொகிராம் ரொம்பவே ஃபேமஸ்! அதுக்கு டயல் பண்ணிப் பேசறவால்லாம் தவறாம, ‘மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருககீங்க’ன்னுட்டு வழியுவா."

‘‘தெரியும் அத்திம்பேர். அந்த ப்ரொகிராம் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்áங்கறான் வாசன். ‘‘அதேதான்... அதுல தன்னோட குரலும் கேக்கணும்னு உங்கக்காக்கு ரொம்பத்தானே ஆசை. பல மாசமா ட்ரை பண்ணிண்டிருந்தா. லைன்ல வெயிட்டிங் போட்டு கட் பண்ணி டெலிபோன் பில்தான் ஏறித்தே தவிர, இவ பேசினபாடில்ல... கடைசில ஒரு நாள் லைன் கிடைச்சிட்டுது. இவ என்ன பேசினா தெரியுமோன்னோ..."ன்னு கப்ஸி ரமா, சரிதா குரல்கள்ல நடிச்சே காட்டறான் நம்ம கதாநாயகன்.

‘‘ஹலோ... கப்ஸி ரமாங்களா...? நீங்களேதானா....? ஹை! எனக்கு லைன் கிடைச்சிருச்சு!"

‘‘சொல்லுங்க மேடம்...! எங்கருந்து பேசறீங்க? உங்க பேர் என்ன?"

‘‘என் பேர் சரிதாங்க. நான் வெஸ்ட் மாம்பலத்துலருந்து பேசறேன்... மேடம்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..."

‘‘ஓ...! தாங்க்யூ! சொல்லுங்க சரிதா. நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? உங்க ஹஸ்பெண்ட் என்னவா இருக்காரு? உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க?"

‘‘நான் ஹவுஸ் வைஃபா இருக்கேன் மேடம். என் வீட்டுக்காரர் பத்திரிகைத் துறையில இருக்காரு. ரீசன்ட்டாதான் கல்யாணமாச்சு மேடம்! இதுவரைக்கும் குழந்தைங்க இல்லிங்க..."

‘‘ஓ...! சீக்கிரமா கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன். அப்புறம் சொல்லுங்க சரிதா... உங்களுக்கு என்ன பாட்டு போடணும்?"

‘‘ஏதோ ஒரு பாட்டு போடுங்க மேடம்..."

‘‘நீங்கதான் டயல் பண்ணியிருக்கீங்க. உங்களுக்குப் பிடிச்ச பாட்டுத்தான் கப்ஸி உங்கள் சாய்ஸ்ல போடுவோம் சரிதா. அதனால நீங்களே சொல்லுங்க என்ன பாட்டுப் போடணும்?"

‘‘அதான் சொன்னேனே மேடம்... ஏதோ ஒரு பாட்டு போடுங்கன்னு..."

‘‘எனக்குப் பிடிச்ச ஏதோ ஒரு பாட்டப் போடணும்னு சொல்றீங்களா? இல்லீங்க... இன்னும் நிறைய நேயர்கள் பேசணும்னு காத்திண்டிருக்கா. சீக்கிரம் சொல்லுங்க சரிதா மேடம்...! எந்தப் படத்துலருந்து என்ன பாட்டு போடணும்னு..."

‘‘அதான் சொன்னேனே மேடம்... ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துலருந்து ‘ஏதோ ஒரு பாட்டு' போடுங்கன்னு..."

‘‘அவ்வ்வ்வ்வ்! பாட்டு பேரையா ஏதோ ஒரு பாட்டுன்னு சொன்னீங்க? சரிங்க.. இப்ப நீங்க கேட்ட ஏதோ ஒரு பாட்டு வருது --அப்படின்னு சொல்றப்ப கப்ஸி ரமாவோட முகம் போன போக்கையும், அவங்க மைல்டா அழுததையும் நீ பாத்திருக்கணுமே..."ன்னு சொல்லிட்டு கபகபன்னு சிரிக்கிறான் நம்மாளு. இப்ப இதைக் கேட்டதும் வாசனும் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரிச்சுடறான். சரிதா முகத்துல எள்ளு + கொள்ளு வெடிக்க... ‘‘சரி... சரி... ரொம்பத்தான்.... பல்லு சுளுக்கிக்கப் போறது. இதோ பாருங்கோ... வர்ற சனிக்கிழமைலருந்து ஷுட்டிங் ஆரம்பிக்கறதா சொல்லி வரச் சொல்லியிருக்காரு டைரக்டர். அதனால சனிக்கிழமை காலம்பற எட்டு மணிக்கெல்லாம் தயாராயிடுங்கோ... நாம போறோம்..."ன்னு சத்தம் போட்டுட்டு உள்ள போறா சரிதா.

சனிக்கிழமை காலம்பறவே பரபரப்பா தானும் எழுந்து, ஆத்துக்காரனையும் எழுப்பி துள்ளிக் குதிச்சுண்டு தயாராகறா சரிதா. போரூர் தாண்டி ஒரு பங்களால ஷுட்டிங்குங்கறதால எட்டு மணிக்கே கௌம்பி, சரியா பத்து மணிக்கெல்லாம் அங்க போய்ச் சேர்ந்துடறா. அங்க டைரக்டர் சிவகங்கை சிவனாண்டி காத்திண்டிருககார். அவர் டி.வி. சீரியல்ல புரட்சி பண்ணினவார். அதாவது... கண்ணீரும் அழுகையுமா வந்துட்டிருந்த சீரியல்கள்ல 80கள்ல வந்த சினிமா மாதிரி ‘டுஹாய் டுஹாய்'ன்னு கத்திக்கிட்டே பறந்து பறந்து போடற சண்டைகளையும், கார், வேன் சேஸிங்குகளையும் அறிமுகப்படுத்தினவரு. ஆளு பாக்கறதுக்கு பெரிய சைஸ் காராசேவுக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி (நன்றி: சந்தானம்) இருக்காரு. அந்த டைரக்டர் இவாளை நல்லவிதமாவே வெல்கம் பண்றார். ‘‘வாங்க மேடம்...! உங்களோட கேரக்டரைப் பத்தி மொதல்ல சொல்லிடறேன். ஒரு குடும்பத்துல மூத்த மருமகளா நீங்க வர்றீங்க. சின்ன மருமகள்கள் ரெண்டு பேருக்கும் உங்களுக்கும் ஆகாது. மாமியாரோட கூட்டணி வெச்சுட்டு அவங்களை மெரட்டறீங்க..."

‘‘அப்படியா? அப்புறம் என்ன ஆறது?"

‘‘சரிதான்... இவ்வளவு நேரம் கதை சொன்னதே அதிகம் மேடம்! இதை வெச்சுண்டே நூறு எபிசோட் தாண்டிருவேன். அதுக்கப்புறம் என்ன ஆறதுங்கறதை மெல்ல யோசிச்சுக்கலாம். இப்பவே என்ன அவசரம்?"ன்னு சிரிச்சுட்டு அப்பால போயிடறார் டைரக்டர். அப்புறம் கொஞ்ச நேரத்துல நடிக்கறவாள்ளாம் வந்து சேரச் சேர, கல்யாண வீடு மாதிரி ஆயிடறது அந்த பங்களா. சரிதா, ராமராஜன் மாதிரி ‘லைட்'டா மேக்கப்பிண்டுட்டு தன்னை எப்பக் கூப்பிடுவான்னு காத்துண்டிருக்கா. டைரக்டர் கூப்பிடற பாடில்லை. ‘‘ஸார்... என்னை எப்ப நடிக்க வெக்கப் போறீங்க?"ன்னு டைரக்டர் கிட்ட போய் வேற வேற மாடுலேஷன்ல அவ கேக்கறதும், ‘‘கொஞ்சம் பொறுங்க மேடம். நான் கூப்பிடறேன்"ன்னு வேற வேற மாடுலேஷன்ல அவர் சொல்றதும், சரிதா சலிச்சுக்கறதும் பாக்கறப்ப கரகாட்டக்காரன் வாழைப்பழக் காமெடியப் பாக்கற மாதிரி இருக்குது நம்மாளுக்கு. நல்லா சிரிச்சுண்டு ரசிச்சுண்டிருக்கான்.

இதுலயே லன்ச் டைமும் வந்துடறது. சும்மா சொல்லப்படாது... ஐட்டம்லாம் நல்லா இருக்கறதால... அட, சாப்பிடற ஐட்டங்களைச் சொல்றேனாக்கும் நான்... நம்ம ஹீரோ ஒரு பிடி பிடிக்கறான் - சரிதா பாக்காத நேரத்துல அசைவத்தையும்! அவளுக்கானா எப்ப நடிக்கக் கூப்பிடுவாளோங்கற படபடப்புல சாப்பாடே எறங்கலை போங்கோ... கடைசியில ஒரு வழியா ரெண்டு மணிக்கு அவகிட்ட வர்ற டைரக்டர், த்ன்னோட வர்ற அழகான பொண்ணை அவளுக்கு அறிமுகப்படுத்தறார். ‘‘அடுத்த ஷாட் உங்களோடதுதான் மேடம்! இவங்கதான் ரெண்டாவது மருமகளா நடிக்கப் போறாங்க. இவங்களோட நீங்க சண்டை போடற சீனை முதல்ல எடுக்கப் போறோம்"ன்னு சொல்லிட்டு, தன் அசிஸ்டெண்ட் கிட்ட டயலாக் சொல்லித்தரச் சொல்லிட்டு அப்பால போறாரு.

அந்த அழகான பொண்ணைப் பக்கத்துல பாத்ததும் நம்ம ஹீரோ புள்ளையாண்டான் முகம் பிரகாசமாயிடறது. கண்ணு ரெண்டும் பல்பு மாதிரி மின்னுது. அதைப் பார்த்து நறநறன்னு பல்லைக் கடிக்கறா சரிதா. அந்தப் பொண்ணோட சண்டை போடற மூடு அப்பவே ஸ்டார்ட்டாயிடுச்சு அவளுக்கு. ஏற்கனவே சரிதாங்கற நெருப்பு எரிய ஆரம்பிச்சுட்டதைத் தெரியாம, அதுல கொஞ்சம் பெட்ரோலையும் ஊத்தறா அந்தப் பொண்ணு.
   

                                                                     அப்புறம் என்ன நடந்ததுன்னு கேக்க
                                                                         நீங்க ரெடியா இருந்தாலும் நேக்கு லேசா
                                                                         வயத்தைக் கலக்கறது. சித்த நாழி
                                                                         பொறுங்கோ... வந்துடறேன்!

 
மின்னல் டிவியில இன்றைய நிகழ்ச்சி கொஞ்சம் காபி நிறைய இலக்கியம் படிக்க இங்கே க்ளிக்குக!

27 comments:

  1. ஆஹா கச்சேரி களை கட்டிடுச்சு....

    நடக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. கச்சேரியை ரசித்து உற்சாகப்படுத்தும :உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  2. அடுத்து அடிதடி உண்டு என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தடி கிடையாது... அடி மட்டும் உண்டு. ஹி.. ஹி...! மிக்க நன்றி டி.டி.!

      Delete
  3. நடிக்கப்போய் நிஜமாலுமே ஒரு சண்டை காட்சி அரங்கேறியதோ..!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பகுதியில தெரிஞ்சிரும். மிக்க நன்றிம்மா!

      Delete
  4. ஹா ஹா ஹா.. ஏதோ ஒரு பாட்டு போடுங்க... சிரிச்சு முடியலை... ஆவலுடன் அடுத்த பாகத்துக்காக....

    ReplyDelete
    Replies
    1. நாளையே க்ளைமாக்ஸ் வந்துரும் ஸ்.பை...! ரசித்து மகிழ்ந்த உனக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  5. டுஹாய் டுஹாய் புதுசா இருக்கே? என்ன அர்த்தம்? தேவ பாஷையா?

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா.... ஹா... அதென்ன பாஷையோ... 80லருந்து 90கள் வரை பிரபு, அர்ஜுன், ராமராஜன் மாதிரி ஹீரோக்கள் சண்டை போடறப்ப அப்படித்தான் பிஜிஎம் ஸவுண்டு இருக்கும்...! மிக்க நன்றி!

      Delete
  6. சூப்பர்! சண்டை சீனை பார்க்க நானும் நாளைக்கு கண்டிப்பா வந்துடறேன்....:))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ.... வாங்கோ... சண்டை சீனோட க்ளைமாக்ஸும் வந்துடும். தொடர்ந்து வர்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  7. காலேல படிச்சுட்டு காமெண்டு போட டயம் இல்லாமப் போயிடுத்து!இப்போ காமெண்டு போட மூடு இல்லியாக்கும்!!அப்புறமா,சண்ட முடிஞ்சப்புறமா காமெண்டு போட்டுடுறேன்,என்ன சொல்றேள்?

    ReplyDelete
    Replies
    1. நீங்க எது செஞ்சாலும் சரிதான்னு சொல்றேன்! மிக்க நன்றி!

      Delete
  8. சண்டை சீனை பார்க்க நானும் நாளைக்கு கண்டிப்பா வந்துடறேன்

    ReplyDelete
    Replies
    1. வெல்கம்...! சண்டையுடன் வரும் க்ளைமாக்ஸ் உங்களை ரசிக்க வைக்கும். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  9. இன்று இந்த நடுப் பகுதி படிச்சேன். சுவாரஸ்யமாயிருக்குது.
    என்ன அந்த சிவகங்கை சிவனாண்டியுடன் சரிதா சண்டை
    போடப் போட்டாள்-னு கச்சேரியை முடிக்கப் போறேளா?

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... அதைச் சொல்லிட்டா த்ரில் போய்டும்... அடுத்த பகுதிக்கு வரமாட்டேளே... நாளைக் காலைல பாத்தே தெரிஞ்சுக்குங்கோ... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. பதிவின் தலைப்பின்கீழ் பதிவிடும் நாள் (date) தெரியுமாறு செட்டிங் மாற்றுங்களேன் சார்!

    ReplyDelete
    Replies
    1. அது எப்படின்னு தெரியலையே நண்பா...! டெக்னிகல் டீடெய்ல் தெரிஞ்ச நண்பர்கள்ட்ட கேட்டு சீக்கிரமே மாத்திடறேன்.

      Delete
  11. சிரித்து ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி மாதேவி!

    ReplyDelete
  12. நகைச் சுவையாக எழுதப் பாடம் படிக்கிறேனாக்கும்...!

    ReplyDelete
  13. //கப்ஸி ரமா//

    நானும் இதேமாதிரி ஒரு கதை எனது வலைப்பூவில் போட்டிருக்கிறேன். டைம் கிடைக்கும்போது வந்து படித்துப் பாருங்கள் (என அழைக்கிறேன்).

    !என்ன வரம் வேண்டும்? (நகைச்சுவை)


    சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா? (நகைச்சுவை)

    ReplyDelete
  14. //கப்ஸி ரமா//

    இதையும் படித்துப் பா[க்க வா]ருங்கள்.
    ''வீரா சிகைக்காய் தூள்" :- இணைப்பு:
    http://nizampakkam.blogspot.com/2010/08/67radiocw.html

    ReplyDelete
  15. //அது எப்படின்னு தெரியலையே நண்பா...!//

    என்னையும் நண்பராக ஏற்றுக் கொண்டமைக்காக நன்றி.

    ReplyDelete
  16. கப்ஸி ரமா - செம கலாய்ப்பு. ராமராஜன் மாதிரி லைட்டா மேக்கப்பிட்டுண்டு... ஆஹா... உங்களுக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றும். ரசிக்கவைக்கும் எழுத்து. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube