ஆனந்த விகடன் இதழ் இரண்டு வாரங்களாக 3டி முறையில் படங்களை அச்சிட்டு அசத்தி வருகிறார்கள். இந்த முறையில் அச்சிடுவதற்கு ஒரு வாரம் முன்பு அங்கு பணி செய்யும் நண்பர் ஒருவருடன் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தோம். ‘‘முன்ன ஒரு சமயம் இப்படித்தான் ஆனந்த விகடன்ல 3டி படங்கள்னு போட்டுட்டு, கண்ணு கிட்ட கொண்டு போய் உத்துப் பாத்தா 3டி எஃபக்ட் தெரியும்னு போட்டீங்க... நானும் புத்தகத்தை கண்ணுகிட்ட வெச்சு வெச்சுப் பாத்ததுல கண்ணே லேசா ஒண்ணரைக் கண்ணாயிட்ட மாதிரி ஃபீலிங் வந்ததே தவிர, எஃபக்ட் ஒண்ணும் தெரியல" என்றேன். ‘‘இந்த முறை அப்படி இல்லிங்க. கண்ணாடியோட பாத்தீங்கன்னா... விளம்பரத்துல சொல்லியிருக்கற மாதிரி அள்ளும்" என்றார். விகடன் வெளியாகி 3டி படங்களை நான் ரசித்த பினனொரு நாளில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்போது இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘‘இப்ப என்ன நினைக்கறீங்க?’’ என்றார். நான் நினைத்ததைச் சொன்னவுடன், ‘‘பாதகா...!" என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்பால் நகர்ந்து சென்றுவிட்டார். நான் சொன்னது என்னவாக இருககும்? யூகியுங்க...
==================================
‘‘வடாபாவ் சாப்பட்டதுண்டா ஸார்?" என்று கேட்டார் சிவா. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த என் காதில் சரியாக விழாததால், ‘‘என்ன சிவா... திடீர்னு அடா புடாங்கறே?" என்றேன். ‘வடாபாவ் சாப்பிடலாமான்னு கேட்டேன் ஸார்’’ என்று சற்று பலமாகவே சிவா சொன்னதும், ‘‘அப்டீன்னா என்ன?" என்று கேட்டேன். நாங்கள் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போகலாம் என்று திட்டமிட்டுப் புறப்பட்டு ஸ்கூல் பையன் எங்களுடன் ஜாயின் செய்வதற்காக கிண்டி நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு ஞாயிறு மதியம் அது. ‘‘மும்பைல ரொம்ப ஃபேமஸ் டிஷ் ஸார்...! நாம டீக்கடையில வடை, ப்ஜ்ஜி சாப்பிடற மாதிரி அங்க அதைச் சாப்பிடுவாங்க. சென்னைல பல இடங்கள்ல இது கிடைக்குதுன்னாலும்... வேளச்சேரியில இதுக்குன்னே ஒரு தனிக் கடை ஆரம்பிச்சிருக்காங்க. வடா பாவ் நாலஞ்சு வெரைட்டில தர்றாங்க..." என்றார். ‘‘ரைட் போலாம்" என்றேன்.
==================================
‘‘வடாபாவ் சாப்பட்டதுண்டா ஸார்?" என்று கேட்டார் சிவா. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த என் காதில் சரியாக விழாததால், ‘‘என்ன சிவா... திடீர்னு அடா புடாங்கறே?" என்றேன். ‘வடாபாவ் சாப்பிடலாமான்னு கேட்டேன் ஸார்’’ என்று சற்று பலமாகவே சிவா சொன்னதும், ‘‘அப்டீன்னா என்ன?" என்று கேட்டேன். நாங்கள் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போகலாம் என்று திட்டமிட்டுப் புறப்பட்டு ஸ்கூல் பையன் எங்களுடன் ஜாயின் செய்வதற்காக கிண்டி நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு ஞாயிறு மதியம் அது. ‘‘மும்பைல ரொம்ப ஃபேமஸ் டிஷ் ஸார்...! நாம டீக்கடையில வடை, ப்ஜ்ஜி சாப்பிடற மாதிரி அங்க அதைச் சாப்பிடுவாங்க. சென்னைல பல இடங்கள்ல இது கிடைக்குதுன்னாலும்... வேளச்சேரியில இதுக்குன்னே ஒரு தனிக் கடை ஆரம்பிச்சிருக்காங்க. வடா பாவ் நாலஞ்சு வெரைட்டில தர்றாங்க..." என்றார். ‘‘ரைட் போலாம்" என்றேன்.
ஆஸர்கானா நிறுத்தத்தில் நாங்கள் காத்திருக்க, ஸ்.பை. வந்தார். ‘அம்மா மினி பஸ்'ஸில் சவாரி செய்தே ஆகவேண்டுமென்று பலப்பம் சாப்பிடாத குழந்தையாக சிவா அடம்பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்து ஐநது நிமிஷ மினி ட்ரிப் அடித்தோம். மதுரையிலும் கரூரிலும் நான் மினி பஸ் சவாரி செய்ததுண்டு. கசகசவென்று கூட்டம் நிரம்பி வழிய, கன்னாபின்னாவென்று ஏதோ பாட்டைக் கத்தவிட்டுக் கொண்டு, நல்ல அனுபவமாக ஒருநாளும் இருந்திராதது மினி பஸ். சென்னையில் கூட்டமில்லாமல் புதிய பஸ்ஸில் சென்றது வித்தியாசமான நல்ல அனுபவமாக இருந்தது. கொஞ்ச நாட்கள் போனால்தான் இந்த பஸ்கள் எல்லாம் என்ன லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன, எப்படி ஓடுகின்றன என்பதை முழுதாக மதிப்பிட முடியும். பார்க்கலாம். வேளச்சேரியில் குருநானக் கல்லூரி தாண்டி சிறிது தூரம் வந்ததும் சிவா குறிப்பிட்ட ‘கோலி’ என்ற பெயர் கொண்ட வடாபாவ் கடை இருந்தது. பனீர் வடாபாவ், சீஸ ஃபிங்கர் வடாபாவ் என்று இரண்டு வெரைட்டி ருசி பார்த்தேன். சிவா இதைப் பற்றி விரிவாக எழுத இருப்பதாக என்னிடம் சொன்னதால் என் ஒருவரி விமர்சனம்: செம்ம டேஸ்ட்! அதன்பின் மூவருமாக ஃபீனிக்ஸ் மாலுக்குச் சென்று ஒரு ரவுண்டு வந்தோம். ஒரு காஃபிக்கு 130 ரூபாயும், கண்ணில் படும் கடைகளில் ‘அத்தியாவசியப்' பொருள்களுக்கு 500, 1000 என்று செலவழித்துக் கொண்டிருந்த பல ‘ஏழை'களைக் கவனித்தது தனியொரு சந்தோஷம். இங்கே எதிர்ப்படுகிற எவராவது உங்களிடம் ‘‘இந்தியா ஏழைநாடு பிரதர்" என்று சொன்னால் நிச்சயம் கன்னத்தில் அறைவீர்கள்!
==================================
‘தி இந்து' நாளிதழ் தமிழில் லான்ச் ஆன ஓரிரண்டு மாதங்களுக்குள்ளாகவே ‘தீபாவளி மலர்' வெளியிட்டிருக்கிறது. எப்போதுமே ‘முதல்’ புத்தகங்களை வாங்கிப் பார்க்கும் ஆர்வம் எனக்குண்டு என்பதால் வாங்கிப் படித்தேன். கிட்டத்தட்ட விகடன் தீபாவளி மலரின் ‘ரிப்ளிகா’ மாதிரி இருக்கிறது. ஆனாலும் அதைவிடவும் ரசிக்க முடிந்தது என்னால். தமிழகத்தின் முகக்கிய சுற்றுலாத் தளங்களை அழகிய படங்களுடன் ஒரு பக்கக் கட்டுரைகளாக தந்திருப்பது வெகு அழகு!
==================================
‘தி இந்து' நாளிதழ் தமிழில் லான்ச் ஆன ஓரிரண்டு மாதங்களுக்குள்ளாகவே ‘தீபாவளி மலர்' வெளியிட்டிருக்கிறது. எப்போதுமே ‘முதல்’ புத்தகங்களை வாங்கிப் பார்க்கும் ஆர்வம் எனக்குண்டு என்பதால் வாங்கிப் படித்தேன். கிட்டத்தட்ட விகடன் தீபாவளி மலரின் ‘ரிப்ளிகா’ மாதிரி இருக்கிறது. ஆனாலும் அதைவிடவும் ரசிக்க முடிந்தது என்னால். தமிழகத்தின் முகக்கிய சுற்றுலாத் தளங்களை அழகிய படங்களுடன் ஒரு பக்கக் கட்டுரைகளாக தந்திருப்பது வெகு அழகு!
தீபாவளி மலர்களின் வழக்கம் போல் ஸ்வாமி படங்களுடன் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞானிகளின் படங்களும் தந்திருப்பது ரசனை! பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களின் கதைகளைத் தவிர்த்து, கட்டுரைகளாக வாங்கி வெளியிட்டிருப்பதும் மிக ரசிக்க வைத்தது. சினிமா பற்றி தரப்பட்டிருக்கும் தனிப் பகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும், வாத்தியார் சுஜாதாவின் டாப் சிறுகதையான ‘நகரம்’ வெளியாகியிருப்பதும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆக மொத்தத்தில்... கொடுத்த காசுக்கு ஏமாற்றாத ஒரு தீபாவளி மலர்!
==================================
நல்ல காரியம் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதன் முழு விளைவை சமீபத்தில்தான் அனுபவித்தேன். பதிவுலகின் சீனியரும், எனக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவருமான திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா 13 முதல் 16 வரை சென்னையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 14ம் தேதி நான் ஃப்ரீயாக இருந்தபோதே போய்ப் பார்த்திருக்க வேண்டும். சீனு, ஸ்.பை. உள்ளிட்ட ‘நம்ம பசங்க’ளுடன் போகலாம் என்று அடுத்த நாள் (15ம் தேதி) வருவதாக ஜி.எம்.பி. ஐயாவிடம் சொல்லிவிட்டேன். அடுத்த தினம் எதிர்பாராதவிதமாக அலுவலக ஆணிகள் சற்றும் அசையவிடாமல் என்னை அறைந்துவிட, நண்பர்களும் வேறுவேறு காரணங்கள் சொல்லி அன்று போக இயலவில்லை. அடுத்த தினமோ புயலின் விளைவாகப் பெயத பெருமழை! மழையினூடாக ஜி.எம்.பி. ஐயாவும் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். ஏன்தான் அந்த சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டேனோ... என்று இப்போதும் என் தலையில் குட்டிக் கொண்டு வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன். வெரி ஸாரி ஜி.எம்.பி. ஸார்!
==================================
==================================
நல்ல காரியம் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதன் முழு விளைவை சமீபத்தில்தான் அனுபவித்தேன். பதிவுலகின் சீனியரும், எனக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவருமான திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா 13 முதல் 16 வரை சென்னையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 14ம் தேதி நான் ஃப்ரீயாக இருந்தபோதே போய்ப் பார்த்திருக்க வேண்டும். சீனு, ஸ்.பை. உள்ளிட்ட ‘நம்ம பசங்க’ளுடன் போகலாம் என்று அடுத்த நாள் (15ம் தேதி) வருவதாக ஜி.எம்.பி. ஐயாவிடம் சொல்லிவிட்டேன். அடுத்த தினம் எதிர்பாராதவிதமாக அலுவலக ஆணிகள் சற்றும் அசையவிடாமல் என்னை அறைந்துவிட, நண்பர்களும் வேறுவேறு காரணங்கள் சொல்லி அன்று போக இயலவில்லை. அடுத்த தினமோ புயலின் விளைவாகப் பெயத பெருமழை! மழையினூடாக ஜி.எம்.பி. ஐயாவும் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். ஏன்தான் அந்த சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டேனோ... என்று இப்போதும் என் தலையில் குட்டிக் கொண்டு வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன். வெரி ஸாரி ஜி.எம்.பி. ஸார்!
==================================
நேற்று ‘கிருஷ்ண லீலை' என்ற படம் சன் லைஃப் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது (பின் பகுதிதான்). குசேலர் கதாபாத்திரத்தை நாகேஷ் செய்திருந்த விதம்...! அரண்மனையில் அலட்சியப்படுத்தும் சேவகர்களின் முன் கிருஷ்ணனே வாசலுககு வந்து அழைத்ததும் காட்டுகிற பந்தா... சேடிகள் கண்ணன் நடக்கும் பாதையில் மலர் இறைக்க, நாகேஷ் மேல் அது பட, அவர் நாணி துள்ளிக் குதிக்கும் அழகு... ஆளுயர மாலையை கண்ணன் போட்டதும் கழுத்து வளைந்து கும்பிடுவதும், ‘‘எத்தனை நேரம் கும்பிடுவாய் குசேலா?’ என கண்ணன் கேட்க, ‘‘கும்பிடலை கண்ணா... நீ போட்ட மாலை நிமிர விடவில்லை’ என்று பன்ச் அடிப்பதும்... கண்ணனின் அன்பில் நனைந்து தனக்கென எதுவம் கேட்காமல் அரண்மனையை விட்டு வெளியே வந்து புலம்புவதும்... எக்ஸ்ட்ரார்டினரி பர்ஃபாமன்ஸ்! பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு மட்டும் பலர் நடித்திருந்த குசேலர் வேஷத்தை இப்படியொரு காமெடி + சென்டிமென்ட்டுடன் பண்ண நாகேஷால்தான் முடியும். What a legend!
==================================
அப்புறம்... ஆ.வி. நண்பரிடம் நான் சொன்ன கமெண்ட்: ‘‘3டி படங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பாதான் இருக்கு பிரதர். ஆனா... இதை ஆ.வி.ல செய்யாம டைம்பாஸ்ல செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். ஹி... ஹி...!"
==================================
அப்புறம்... ஆ.வி. நண்பரிடம் நான் சொன்ன கமெண்ட்: ‘‘3டி படங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பாதான் இருக்கு பிரதர். ஆனா... இதை ஆ.வி.ல செய்யாம டைம்பாஸ்ல செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். ஹி... ஹி...!"
|
|
Tweet | ||
சரியா தானே கேட்டு இருக்கீங்க தல
ReplyDeleteஎன்னைப் போல் ஒருவன் & ஹி... ஹி...! டாங்ஸுப்பா!
Deleteஃபீனிக்ஸ் மால், வடாபாவ், மினி பஸ்சுன்னு அசத்துறீங்க அண்ணா. அப்புறம் கிருஷ்ண்லீலா படம் எனக்கும் பிடிக்கும் குசேலரா நடிச்ச மத்த நடிகர்களை விட நாகேஷ் ஐயா அந்த பாத்திரத்துக்கு ரொம்ப பொருத்தமான ஆள்.
ReplyDeleteஎன்னுடன் சேர்ந்து நகைச்சுவை மன்னனை ரசித்த தங்¬க்க்கு மனம நிறைய நன்றி!
Deleteவழக்கம்போல மிக்ஸர் சூப்பர்.... //கண்ணில் படும் கடைகளில் ‘அத்தியாவசியப்' பொருள்களுக்கு 500, 1000 என்று செலவழித்துக் கொண்டிருந்த பல ‘ஏழை'களைக் // ஹிஹி செம செம... இதுல உங்கள அடிச்சுக்கவே முடியாது சார்....
ReplyDeleteமிக்ஸரையும் என் எழுத்தையும் ரசித்த ப்ரியாவுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Delete// டைம்பாஸ்ல செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். //
ReplyDeleteசுவாமி சரணம்!!
சொலறதையும் சொல்லிப்புட்டு அப்புறம் என்ன ஓய் சுவாமி சரணம்?
Deleteவடா பாவ் கடை அடிக்கடி போகவேண்டிய பேவரிட் லிஸ்ட்ல சேர்த்துட்டேன்.... ஜி.எம்.பி.சாரை நான் மட்டுமாவது தனியா போய் பார்த்திருக்கலாம், நீங்க இல்லாம எப்படிப் போறதுன்னு விட்டுட்டேன்.... அடுத்த தடவை அவர் வரும்போது பார்க்கலாம்....
ReplyDeleteஆமா ஸ்.பை...! சீஸ் ஃபிங்கர் அவ்வளவு டேஸ்டியா இருந்தது இல்ல...? அவசியம் ரீ விஸிட் அடிக்கணும். நீ சொல்ற மாதிரி தாம்ப்பா நானும் எனக்கே சொல்லி சமாதானம் பண்ணிக்கிட்டேன். மிக்க நன்றி!
Deleteமிக்ஸர் நல்ல மொறு மொறு
ReplyDeleteரசித்துச் சுவைத்தேன்
தொடர வாழ்த்துக்கள்
மிக்ஸரை ரசித்துச் சுவைத்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமிக்குசர் நல்லா கீதுபா...
ReplyDelete//இங்கே எதிர்ப்படுகிற எவராவது உங்களிடம் ‘‘இந்தியா ஏழைநாடு பிரதர்" என்று சொன்னால் நிச்சயம் கன்னத்தில் அறைவீர்கள்!//
கரீட்டா சொல்லிகினபா...
நான் சொன்னதைப் பாராட்டின உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி நைனா!
Deleteஏதாவது ஒரு மால் போய்ப் பார்க்கணும். இதுவரை பார்த்ததில்லை. குசேல நாகேஷ் நானும் மிக ரசித்திருக்கிறேன். வடாபாவ் சாப்பிட்டதில்லை. இந்து தீபாவளி மலர் மதுரையிலிருந்து வர வேண்டும்! நான் மதுரைக்கு தினமணி தீபாவளி மலர் அனுப்புவேன்! எக்சேஞ்ஜ் மேளா!
ReplyDeleteமாலே ஸ்ரீராமான்னு ஒரு விசிட் அடிச்சுட்டு வாங்க ஃப்ரெண்ட்1 இந்த எக்ஸ்சேஞ்ச் மேளா சிஸ்டம் நல்லாருக்கே... ட்ரை பண்ணிப் பாத்துரலாம்! மிக்க நன்றி!
Deleteநம்ம அடுத்த டார்கெட் - அம்மா கொசுவலை.
ReplyDeleteமுதல்ல நம்ம டார்கெட் ‘அம்மா படுக்கை’யாத்தானே சிவா இருக்கணும்! அப்புறம்தானே ‘அம்மா கொசுவலை’? ஹி... ஹி...!
Deleteமொறு மொறு மிக்ஸர் நல்ல சுவை...
ReplyDeleteகுசேலர் என்றால் கண்ணிற்கு வருவது நாகேஷ் அவர்கள் தான்...
ரமணி ஐயாவை சந்தித்தீர்களா...?
மிக்ஸரை ரசித்த உங்களுககு மனம் நிறைய நன்றி டி.டி.! உங்களால் ஒரு ‘ரமணி’யமான மாலைப் பொழுது எனக்கு அமைந்தது. அதக்காகவும் ஸ்பெஷல் தாங்க்ஸ்!
Deleteஅம்மா உணவகம் இதுவரை சென்றதில்லை... அண்ணன் 'மெட்ராஸ்' அழைத்துச் செல்லவும்.. மெட்ராசுக்கு இல்லை யுவர் ஆனர்..
ReplyDeleteஎன்னது டைம் பாஸா வாத்தியாரே வரவர நீர் நாட்டியார் ஆகி வருகிறீர்..
குசேலன் - ஆமாம் ஓரிரு முறைத்தான் அந்தக் காட்சியை பார்த்துள்ளேன், நன்றாக நியாபகம் உள்ளது... நாகேசின் உடல் மொழி
‘நாட்டி’யார்...! ஹி... ஹி... ஹி...!
Deleteசாப்பிடறதே வேலைன்னு ஒரு குரூப்பா முடிவு பண்ணிட்டிங்க போல... பேசாம உங்க ஏரியாவுல ஹோட்டல் ஆரம்பிச்சுட வேண்டியதுதான்...!
ReplyDeleteஆஹா... நம்ம ஏரியாவுல அக்கவுண்ட் வெச்சு சாப்பிடறதுக்கு ஒரு கடைகூட அமையலையேன்னு ரொம்ப கவலைப்பட்டுட்டுல்ல இருந்தோம்... வெல்கம் உஷா மேடம்! ஹி... ஹி... ஹி...!
Deleteமிக்சர் செம..பேசாமல் உணவகம் போய்ட்டு வந்து இனி இந்த மிக்சரில் போடாமல் தனி சாப்பாட்டுகடை போட்டுடுங்க.
ReplyDeleteம்ம்ம்... எனக்கும் இப்படி ஓர் எண்ணம் தோணிச்சு சிஸ்! அடுத்து பண்ணிர வேண்டியதுதான்! மிக்க நன்றி!
Deleteவழக்கம் போல மிக்ஸர் சுவை மிக நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவழக்கம் போல் என்றதன் மூலம் என் செயல்பாட்டை ரசித்து ஊக்கப்படுத்திய நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஹிஹிஹி. அந்த 3 டி பீல் த....னி..... தான் பாஸ் :) நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி
ReplyDeleteசும்மா... கொஞ்சம் ஜாலியா, கேலியா கேட்ட கேள்விக்கா அது...! ஹி... ஹி...! மிக்க நன்றி!
Deleteஅப்படியே ஒரு நடை நடந்து நம்ம வீட்டுப் பக்கம் வாங்க நம்ம வீட்டிற்கு எதிரேதான் அஞ்சப்ப செட்டி நாடு இருக்கிறது
ReplyDeleteதோ... பொடிநடையா கிளம்பிட்டன்! உங்க வூட்டுப் பக்கம் வந்து டேஸ்ட் பாக்காம விட்ருவனா?
Delete3 டி பற்றி கேட்ட கேள்வி சூப்பர்
ReplyDeleteகுசும்பை ரசித்த குடந்தையூராருக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமழைக் காலமா இருந்தாலும் மிக்சர் மொறுமொறுப்பு குறையவில்லை.
ReplyDelete3D ஆசை கொஞ்சம் ஓவர்தான்
மிக்ஸரின் மொறுமொறுப்பை ரசித்துப் பாராட்டிய முரளிக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஎன்னை சந்திக்க வரமுடியாமல் போனதில் எனக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் அது உண்மையாகாது. ‘பயணங்களும் சில சந்திப்புகளும்’ என்னும் பதிவுத்தொடரின் கடைசி பகுதியில் எழுதி இருப்பதைப் பாருங்கள் There is always another chance. பிடித்த பதிவர் என்று எழுதி இருப்பது இதமாயிருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் தளத்தில் கருத்திடாமலேகூட பல பதிவுகளை நான் படித்து ரசித்ததுண்டு ஸார்! நீங்கள் சொல்லியிருப்பது போல மறுவாய்ப்பு கிட்டாமலா போய்விடும் என்றுதான் நானும் ஆறுதலபடுத்திக் கொண்டேன் என்னை. மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
மொறு மொறு மிக்ஸர் பதிவை நன்றாக சுவைத்தேன் அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமொறு மொறு மிக்ஸர் சுவை அள்ளிப்போனது மனதை... அருமை!
ReplyDeleteநான் இப்போ நலமே பிரதர்..:)
அன்புடன் விசாரிப்பிற்கு மிக்க நன்றி!
வாழ்த்துக்கள்!
ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி சிஸ்!
Deleteநல்ல சுவையான பகிர்வு!ஆ.வி.....................ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteபகிர்வையும், குறும்பையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி யோகராசா!
Deleteஹைய்ய்ய்.. வடாபாவ். மஹாராஷ்ட்ராவின் தேசிய உணவு. கோலி வடாபாவ் இங்கே ரொம்பப் பிரபலமான செயின் ஸ்டோர்ஸாக்கும்.
ReplyDeleteஅட...! கோலிங்கறது செயின் ஸ்டோர்ஸோட பெயரா? புதுத் தகவல் எனக்கு! உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி சாரல் மேம்!
Deleteமொறு மொறு சூப்பர் அண்ணே அதில் அந்த வடாபாவ் இருக்கே, மும்பையில பெரிய ஹோட்டலுக்கு போயெல்லாம் நாங்க சாப்பிடவே மாட்டோம் ருசியே இருக்காது மண்ணு மாதிரி இருக்கும் ஆனால் சின்ன சின்ன வண்டியில் கணவனும் மனைவியும் இருந்து பண்ணி விற்கும் இடங்களில் வாங்கி சாப்பிட்டாலே சுவை அள்ளும் அதுகூட மிளகாயை லேசா எண்ணெய் விட்டு வதக்கி அதுகூட கொஞ்சம் உப்புபோட்டு கடிக்க தருவார்கள், இப்பவே நாக்கில் நீர் சுரக்கிறது...!
ReplyDeleteநிஜந்தான் மனோ! பெரிய ஹோட்டல்கள்ல சாப்பிடற பூரியை விட, எளிமையா வண்டியில ஒரு கணவன் மனைவி (மாம்பலத்துல) போட்டுத் தர்ற பூரி சுவையா இருக்கறத நான் பலமுறை அனுபவிச்சு சாப்ட்ருக்கேன். வடாபாவ் விஷயத்துலயும் அதேதான்! மிக்க நன்றி!
Deleteவடாபாவ் இன்றுதான் கேள்விப்ப்டுகின்றேன் என்றாவது சுவைப்போம் !ஹீ நல்லா சென்னையை சுற்றுகின்றீர்கள் வாலிபர் போல! ஹீ
ReplyDeleteவாலிபர் போல...? நிஜமாவே வாலிபம் இன்னும் விடைபெறலை தம்பீ! வாலிபன்தான் நானும்! மிக்க நன்றி!
Deleteமொறு மொறு மிக்ஸர் நன்றாக இரந்தது.
ReplyDeleteஅந்த வடாபாவின் படத்தையாவது போட்டு இருக்கலாம்.
கண்களால் பார்த்தாவது மனத்தைத் தேற்றிக்கொண்டு இருப்பேன்.
நீங்கள் மட்டும் சாப்பிட்டு வந்து இப்படி வெறி ஏத்துவது சரியில்லை.
(நான் ஒரு சாப்பாட்டுப்பிரியை)
பகிர்வு அருமை கணேஷ் ஐயா.
படம பகிர்ந்திருக்கேனே.. பாக்கலியா அருணா? மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமிக்சர் நல்ல மோருமொருப்புடன் இருக்கிறது. ஆ.வி , வடாபாவ் தி இந்து மலர் எல்லாமே ரசிக்குபடியாக எழுதியுள்ளீர்கள். நகைச்சுவையில் நாகேஷுக்கு நிகர் நாகேஷ் தான்.
ReplyDeleteமிக்ஸரின் அனைத்து அம்சங்களையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteமிக்சர் அருமை ஐயா.
ReplyDeleteநாகேஷ் நாகேஷ்தான்
அன்றும் இன்றும் என்றும்
நன்றி ஐயா
உற்சாகம் தரும் உங்களின் கருத்துக்கு உளம்கனிந்த நன்றி நண்பரே!
Deleteமிக்சரின் அனைத்து ஐட்டங்களும் சுவையோ சுவை...
ReplyDeleteமிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteதங்களது 'துப்பறிய வாங்க' பதிவின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். படித்தீர்களா? *(சரியா?)
ReplyDeleteநீங்கள் சொல்லியிருந்த தகவல் மிகமிகச் சரியானதுதான் நண்பரே!
Deleteமிக்சர் அருமை அண்ணா....
ReplyDeleteஇந்தியா ஏழை நாடு என்பதெல்லாம் விவசாயம் இழந்து கூழைக்க் குடிப்பவர்களுக்கு மட்டும்தான்... மாடர்ன் மனிதர்களுக்கு அல்ல...
ரசித்து என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி பிரதர்!
Deleteமிக்ஸர்
ReplyDeleteமிக சுவைத்தது ...!
சுவைத்து ரசித்த உங்களுககு என் இதயம் நிறை நன்றி!
Deleteகடைசி வரியில் உள்ள உங்கள் ஆசை நிறைவேறட்டும் ..காரணம் ,பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொன்னால் எனக்கும் கிடைக்குமேங்கிற நப்பாசைதான் !
ReplyDeleteத.ம 1 ௦
நல்ல ப்ளான் தான் பகவான்ஜீ...! ஹா... ஹா... மிக்க நன்றி!
Deleteஇந்த மழையிலும் மிக்சர் நல்ல மொறு மொறுப்புதான்.
ReplyDeleteநீங்கள் ஆனந்த விகடனின் 3 D யைப் பற்றி என்ன சொல்லி இருப்பீர்கள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. (பதிவை படித்து முடிக்கும்போது பதில் கிடைத்தது. மனித வாழ்க்கையில் மனதிற்கு மட்டும் முதுமையில்லை)
வட இந்தியர்கள் புண்ணியத்தில் வட பாவ்வும் வந்துவிட்டது.
தி இந்துவின் தீபாவளி மலர் பேப்பர் பையனிடம் சொல்லி வைத்து இருந்தேன். கிடைக்கவில்லை. விற்காது என்று எண்ணி குறைவாக அச்சடித்து விட்டார்கள் போலிருக்கிறது. மறுபதிப்பு உண்டா என்று கேட்டுச் சொல்லுங்கள்.
GMB அவர்களும் சென்னையில் எதிர்பார்த்த பதிவர்கள் வராதது பற்றி எழுதி இருந்தார். பெங்களூர் சென்றால் அவரைப் பார்த்துவிட்டு வரவும்.
ஆம் ஐயா.. அவசியம் பார்த்துவரத்தான் வேணும்! மிக்ஸரை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteநகைச் சுவை மன்னன் நாகேஷ் அவர்களின் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும்
ReplyDeleteமனதில் நீங்காத இடத்தைப் பெற்றவை .இன்றைய நகைச்சுவையும் அப்படித்
தான் .தங்களின் சுவாரசியமான பொழுதுபோக்கு அனுபவங்களும் வாசித்து
ரசித்தேன் ஐயா .நேரப் பற்றாக் குறை காரணமாக இப்போதெல்லாம் வாசிக்கும்
ஆர்வம் இருந்தாலும் பலரது ஆக்கங்களையும் வந்து வாசிக்க முடிவதில்லை .
மன்னிக்கவும் ஐயா .தங்களின் ஆக்கங்கள் மென்மேலும் சிறந்து விளங்க என்
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
நேரப் பற்றாக்குறை...! அதுதான் அதிகம் எழுத விடாமல், படிக்க விடாமல் என்னையும் படுத்திட்டிருக்கு சிஸ்டர்! படித்து ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவடா பாவ்.... தில்லியிலும் சில இடங்களில் கிடைக்கிறது. ஆனால் மும்பை அளவு டேஸ்ட் இல்லையென மும்பையில் இதை உண்ட நண்பர் சொன்னார்! சென்னையில் எப்படியோ?
ReplyDelete//தமிழகத்தின் முகக்கிய சுற்றுலாத் தளங்களை அழகிய படங்களுடன் ஒரு பக்கக் கட்டுரைகளாக தந்திருப்பது வெகு அழகு!//
அட இதுக்காகவெ படிக்கணுமே!
இம்முறையும் உங்களைச் சந்திக்க இயலவில்லை என்னாலும்!
நல்ல மிக்சர்.... ரசித்தேன்.
மும்பை அளவுக்கு சென்னையில டேஸ்டா இருக்கான்னு மும்பைல சாப்பிட்ட அனுபவம் உள்ள நண்பர்கள்ட்ட கேக்கணும். ஆனா எனக்குப் புதுசுங்கறதால ரொம்பவே ரசிச்சேன் சுவையை! உங்களைத் தவறவிட்டதில் எனக்கும் வருத்தம்தான் நண்பரே! மிக்க நன்றி!
Deleteபுதுச்சேரி பதிப்பு இப்போதைக்கு வராததால் இன்னும் தி இந்து படிக்க வாய்ப்பில்லை..நாகேஷ் பற்றிய செய்தி அருமை
ReplyDeleteவிரைவில் புதுச்சேரி பதிப்பை துவங்கிடுவாங்கன்னு நினைக்கறேன். படித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Delete
ReplyDelete//ஆவி - //
ஒங்க உடலுக்கு மட்டுந்தேண்ணேன் வயசாயிருக்கு மனசுல இன்னும் இளம ஊஞ்சலாடுது ....! :)
//வாடா பாவ்//
இத உச்சரிக்கும் போதெல்லாம் மௌன ராகம் மெக்கானிக் - V.K.R. அ கூப்பிடுற டயலாக் தன ஞாபகத்துக்கு வர்றது ....!
மிக்சர் - As usual ....!
@ தி.கொ.போ.சீ
'நாட்டியார் "-விம்முங்கோ எசமான் ...! ( யூ கருவாடு Naughty )
அந்த மௌனராகம் டயலாக்....! இப்ப சொல்லிப் பாத்தாலும் சிரிப்பு வரத்தான் செய்யுது ஜீவன்! ஹா... ஹா...! யெஸ்... சீனு கருவாடு ‘நாட்டி’! யூ ஆர் ரைட்1 (நாட் லெஃப்ட்) ஹி... ஹி...! மிக்க நன்றி!
Deleteமொறு மொறு மிச்சர் சூப்பர் ....
ReplyDeleteபடித்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இந்த முறை உங்களின் தகவல் இங்கு வந்து சேரும் முன் என் கமெண்ட் அங்கு சென்றடைந்து விட்டது தெரியுமோ? அக்கறையாய் தகவல் சொல்லி மகிழ்வைத் தந்த உமக்கு மனம் நிறைந்த நன்றி நண்பா!
Deleteஆசைதான்!
ReplyDeleteகலகல எழுத்துக்குப் பெயர் பெற்ற உங்களிடமிருந்து வந்த மொறு மொறு மிக்ஸர் சூப்பர். வடா பாவ் - இதுவரை கேள்விப்பட்டதில்லை. புதிய அறிமுகம். தீபாவளி மலர் - அதுவும் பழைய ஆனந்தவிகடன் தீபாவளி மலர்களை மறக்கவே முடியாது. எப்போது எடுத்துப் பிரித்தாலும் புத்துணர்வு தரும் விநோதம். இப்போது வரும் சில தீபாவளி மலர்களைப் பிரிக்கவே அலுப்பாக உள்ளது. தி இந்து தீபாவளி மலர் குறித்த உங்கள் கருத்து வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. நன்றி கணேஷ்.
ReplyDeleteமொருமொருவென்று மிக்சர் படிக்க,பார்க்க நந்றாக இருக்கிரது. தொடர்ந்து வர முயற்சிக்கிறேன். அன்புடன்
ReplyDelete