தீபாவளிப் பண்டிகை ரொம்பக் கிட்டத்துல வந்தாச்சு... இன்னேரம் ‘‘புதுப் புடவைகளும் சுடிதார்களும் பர்ச்சேஸ் பண்ணப் போலாம்"னு மனைவி ஒரு பக்கம் இழுக்க, ‘‘அப்பா... புதுசா வந்துருக்கற பட்டாசு டைப் எல்லாம் வாங்கி வெடிச்சுரணும்" என்று மகன்/மகள் ஒரு புறம் இழுக்க, சராசரி குடும்பத் தலைவர்கள் விழிபிதுங்கி (தீபா)வலியுடன் இருக்கும் நேரம். தீபாவளிப் பண்டிகையைப் பத்தின சில தகவல்களை இப்ப நான் சொல்லப் போறேன்.
தீபாவளியை இந்தியா முழுக்க கோலாகலமாக் கொண்டாடறாங்க. தீபம்ங்கறது ஒளி தருகிற ஒன்று. ஆவளி-ன்னா வரிசைன்னு அர்த்தம். தீபங்களை வரிசையா ஏற்றி இருளை நீக்கும் பண்டிகைதான் தீபாவளி. அவங்கவங்க மனசுல இருக்கற இருட்டை எரிச்சு வெளிச்சமாக்கிக்கணும்கறது இதனோட உள்ளர்த்தம். மனசிலாயோ! நரகாசுரனை கிருஷ்ணர் காலி பண்ணினதால தீபாவளின்னும், சக்தியோட கேதார கௌரி விரதம் முடிஞ்சு சிவனோட அர்த்தநாரீஸ்வரரான தினம்னும் (ஸ்கந்தபுராணம்), தங்கக் கோயில் கட்டுமானப் பணி துவங்கிய நாள் இதுங்கறதால இதான் தீபாவளின்னு சீக்கியர்களும், மகாவீரர் மகாநிர்வாணம் அடைஞ்ச தினமான இதுவே தீபாவளின்னு சமணர்களும் வேறவேற விதமாச் சொன்னாலும் எல்லாரும் கொண்டாடறாங்க. ஆக... இந்தியா முழுக்க ஜாதி, மதம்னு பேதமில்லாம கொண்டாடப்படற ஒரு நாள் இது.
அதுல பாருங்க... சின்ன வயசுல எப்படா புது டிரஸ்ஸையும் பட்டாசுகளையும் கொடுப்பாங்கற பரபரப்புல... ராவெல்லாம் தூக்கமே வராது. இப்பவோ... கோழி கூவுறதுக்கு முன்னாலயே நடுராத்திரியில (நமக்கெல்லாம் காலைல 4 மணியே நடுராத்திரி மாதிரிதானே... ஹி... ஹி...!) எழுப்பி விட்டுடறாளேன்னு இல்லத்தரசி மேல (வெளிய காட்ட முடியாத) எரிச்சல்! தீபாவளி அன்னிக்கு மட்டும் உலகத்திலுள்ள எல்லாத் தண்ணீரிலும் கங்கை வியாபித்திருக்கறதா ஒரு ஐதீகமாம். அதனால எல்லாரும் ‘கங்கா ஸ்நானம் ஆசசா?'ன்னு விசாரிச்சுக்கறதை வழக்கமா வெச்சிருக்காங்க. எதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க!
தீபாவளி நாள்ல சேட்டுங்கல்லாம் மகாலக்ஷ்மி பூஜை செய்து, புதுக் கணக்கு எழுதவும், புது தொழில் தொடங்கவும் உகந்த நாளா கொண்டாடறாங்க. இமாசலப் பிரதேசத்துல பலவித மண்பாணடங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை பண்ணி அதை மத்தவங்களுக்குப் பரிசாத் தந்து (எவ்ளவு நல்ல பழக்கம்!) கொண்டாடறாங்க. ராஜஸ்தான்ல ஒட்டகம், யானைல்லாம் வெச்சு அணிவகுப்பு நடத்தி, குன்றுகள்ல பெரிய தீபம் ஏத்தி, கலர்கலரா டிரஸ் பண்ணி குதூகலமா கொண்டாடறாங்க. ஒரிஸ்ஸாவுல முன்னோர்களுக்கு படையல் வெச்சு, இந்த தினத்தைக் கொண்டாடறாங்க. பீஹார்ல அரிசி மாவுல லக்ஷ்மி படம் வரைஞ்சு (சினிமா நடிகை இல்லீங்க... கடவுள்!) பட்டாசு வெடிச்சு, துளசிச் செடிக்கு முன்னால படையல் போட்டு தீபாவளியை கொண்டாடி மகிழறாங்க. நாமல்லாம்... காலைல பலகாரத்தை சாம்பிளா டேஸ்ட் பாத்து கொறிச்சுட்டு, தலயோட ஆ ரம்பம் படம் பாக்க தலதெறிக்க ஓடி தீபாவளியக் கொண்டாடப் போறோம்... ஹி... ஹி... ஹி...!
தீபாவளிப் பண்டிகையப் பத்தி மகாத்மா காந்தி சொன்ன கீழ்க்கண்ட வரிகளை அப்படியே உங்களுக்கு சப்மிட் பண்ணிட்டு நான் ஜுட் விட்டுக்கறேன். ஸீ.யு...!
தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே? ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.
கடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.
-‘யங் இந்தியா' இதழில் காந்திஜி

|
|
Tweet | ||
ஆஹா நாந்தான் முதல் வாழ்த்தா...?இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்ன ஆச்சரியம் உஷா...! உங்க தளத்துல தீபாவளி போட்டியைப் படிச்சு ரசிச்சு கருத்திட்டுட்டு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு திரும்பிப் பாத்தா அதே நேரத்துல நீங்க இங்க எனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்கீங்க! ரொம்ப மகிழ்ச்சி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteஅருமை ... இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமகிழ்வாய் வாழ்த்துச் சொன்ன டி.டி.க்கு என் மனம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteஅருமை
ReplyDeleteஉங்களுக்கு என் இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.
வாம்மா எஸ்தர்... மகிழ்வு தரும் உன் வாழ்த்துக்கு மனம் நிறைய நன்றி! உனக்கும் உன் குடும்பத்திற்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்மா!
Delete// எதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க //
ReplyDeleteசரவெடி வெடிக்கும்போது பாதியிலேயே நின்றது போல அப்படியே விட்டுட்டீங்களே!
எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
அன்னிக்கு கங்கா வாய்லருந்துல்ல சரம் சரமா வெடி வெடிச்சது! ஹா... ஹா...! உங்களுக்கு மகிழ்வுடன் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா!
Deleteதீபாவளியை எங்க? எப்படிலாம் கொண்டாடுறாங்கன்னு ஒரு பதிவை தேத்தி வச்சிருந்தா நீங்க பதிவு போட்டுட்டீங்க. இனி புதுசா ஒரு பதிவை தேத்தி நம்ம பதிவர் கடைமையா ஆத்தோ ஆத்துன்னு ஆத்தனும்!!
ReplyDeleteஅட... அன்னிக்கு நான் தயார் பண்ணி வெச்சிருந்த திருநீர் மலைக் கோயில் பதிவை நீ வெளியிட்ட மாதிரி இன்னிக்கு நீ தயார் பண்ணி வெச்சிருந்த பதிவை நான் வெளியிட்டுட்டனாம்மா..? இந்தக் கருத்தொற்றுமை ஆச்சரியமாவும் மகிழ்சசியாவும் இருக்கு தங்கச்சிம்மா! நான்தான் பதிவு தேத்தவே முழிக்கிற ஆசாமி! நீ நினைச்சா ஒரு நாளைக்கு பத்து பதிவும் எழுதக் கூடிய திறமைசாலியாச்சே...! அசத்தும்மா!
Deleteதீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுப்பு தாத்தா.
subbuthatha72.blogspot.com
உங்களுக்கும் மீனாட்சியம்மாவுக்கும் மற்றும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்வுடன் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்மா!
Deletesuper boss...
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றியும், இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளும்...!
Deleteசுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டு வேறு எந்த கிரகத்தில் போய் வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை...என் மாணவர்களை ஓரளவு மூளைச்சலவை செய்து பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடச் சொல்லியிருக்கிறேன்..பெற்றோர்கள் உங்க வாத்தியாருக்கு வேற வேலை இல்லடா நீ வெடிடா என்றுதான் சொல்வார்கள் என்று தெரிந்தும்..தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே...
ReplyDeleteசிறு வயதுப் பையன்களுக்கு அறிவுரை சொன்னால் ஒரே ஆண்டில் மாற்றிவிட முடியாது நண்பா...! அளவோடு வெடியுங்கள் என்று பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளச் சொல்வது வேண்டுமானால் சாத்தியம்...! நல்லதொரு முன்னுதாரண முயற்சியை மேற்கொண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்வுடன் என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteபுரியாத சில பல விசயங்களைப் புரிய வைத்து முடிவில் சொன்ன நீதி
ReplyDeleteமனதுக்கு மகிழ்வினைக் கொடுத்துள்ளது ஐயா .பட்டாசுச் சத்தத்திற்குப்
பதிலாக ஏழைகளின் மனம் விட்டுச் சிரிக்கும் அந்த ஒரு நாள் சிரிப்பையாவது
கரியாக்கப் படும் காசால் வரவழைப்போம் என்று இப்போது இருக்கும்
நிலைமை மாறினால் அதுவே இன்பம் பொங்கும் தீபாவளியாகத் திகழும்
திகழ வேண்டும் என்று எனது மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்தினைத்
தங்களும் குடும்பத்தார் அனைவருக்கும் தெரிவிப்பதில் மட்டற்ற
மகிழ்ச்சியடைகின்றேன் ஐயா .இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா .
சரியாகச் சொன்னீர்கள் சிஸ்டர்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தீபாவளி பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்...ஐயா
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ரூபன்!
Deleteஅட்வான்ஸ்,தீபாவளி நல வாழ்த்துக்கள்!///எதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க!///பிளீஸ்,சொல்லுங்க,சொல்லுங்க!இப்புடி ஆர்வத்த தூண்டி விட்டுட்டு......மறைக்கப்புடாது .தீபாவளி பட்சணம் செரிக்காது,சொல்லிட்டேன்!
ReplyDeleteமறைக்கறது என்ன நண்பரே... அப்புறம் நான்ஸ்டாப் சரவெடி கங்காவின் வாயிலிருந்து வெடித்தது, நான் எஸ்கேப்! ஹா.... ஹா... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழத்துகள்!
Deleteசிரிப்பு வெடிகளும் சிந்தனை மத்தாப்பூக்களுடனும் தீபாவளியைச் சிறப்பாக்கியிருக்கின்றீர்கள்!
ReplyDeleteஅருமை!
உங்களுக்கும் உங்கள் இல்லாத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
பகிர்வை ரசித்து, என்னை வாழ்த்திய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் சிஸ்!
Deleteஇனிய தீப ஒளித் திரு நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்வுடன் கூடிய என் தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் நண்பரே!
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
ReplyDeleteமனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே..
மகிழ்ச்சி மகேன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் என் உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சக்கரக்கட்டி!
Deleteஇதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமுதலில் எனக்கு வந்து சேர்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்களுடையதுதான் ஜெயக்குமார்! நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !
ReplyDeleteஉங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் மகிழ்வான என் தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் அண்ணா!
Deleteதீபாவளி தகவல்கள் அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதகவல்களை ரசித்து, வாழ்த்திய சுரேஷுக்கு என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteஎதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க //அதன் பின் பட்டாசா?பாயாசமா??ஹீஹீ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்!
ReplyDeleteஅதன்பின்.... பட்டாசுகள்தான் தம்பீ! உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்கள் அனைருக்கும் மகிழ்வுடன் கூடிய என் தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteதீபாவளியின் சுவாரஸ்யங்கள் சின்ன வயதுடன் போய்விட்டனவே!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள் பால கணேஷ்
நிஜந்தான் நண்பரே.... சிறு வயது பரபரப்புகள் ஓய்ந்து இப்போது மற்றவர்கள் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடுவதைப் பார்த்து ரசிக்கத்தான் தோன்றுகிறது. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteநல்ல பதிவு. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
ReplyDeleteபகிர்வை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteஇப்போதெல்லாம் இளைஞர்கள் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம காட்டுவது குறைந்து வருவதாகவே படுகிறது.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்
அதற்குக் காரணம்... பட்டாசுகளின் தாறுமாறான விலை உயர்வால் பெற்றோர்கள் விழி பிதுங்குவது என்று எனக்குத் தோன்றுகிறது முரளி...! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteநல்ல பதிவு நண்பரே..தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteபகிர்வை ரசித்து என்னை வாழ்த்திய தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
DeleteSuper...
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ரசித்தமைக்கு மனம் நிறைய நன்றி! உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Deleteபார்த்துட்டேன் டி.டி. பட்டாமபூச்சிக்கு நன்றி சொல்லிட்டும் வந்துட்டேன். தகவல் தெரிவித்து சேவை புரியும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
ReplyDeleteவலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் தீபாவளி குறித்த பதிவுகளே தென்படுகின்றன. எப்படி இருந்தாலும் பண்டிகைகள் நன்று . கொண்டாட வே என்று நானும் எழுதி இருக்கிறேனே. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தலைவரே! இந்தக் கட்டுரையில் நீங்கள் எழுதியது எதுவரை, மகாத்மா காந்தி எழுதியது எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று புரியவில்லையே! (உங்களையும் ஒரு மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசையில் தவறில்லை தான்!) - தீபாவளி வாழ்த்துக்கள்! -கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
ReplyDeleteஇனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள் கணேஷ்.
ReplyDeleteஇனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .
பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)
தீபாவளிக்கு ஒரு கிராமம் பக்கம் போய்ட்டேன் கணேஷ் பதிவை இப்பதான் பார்த்தேன் ...கடைசிபாரா சிந்திக்கவைக்கிறது. செயல்படுத்தவேண்டும்.தாமதமான தீபாவளி வாழ்த்துகள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHilarious! Reading the "Ganga" episode brought out an instantaneous laughter in me - forgetting that I was still in the office!!
ReplyDeleteதீபாவளிக்கு காந்திஜியோட நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க சார்,,,
ReplyDeleteஅதெப்படி எல்லா மாநில செய்தியும் இப்படி தெரிஞ்சு வச்சிருக்கீங்க....