இன்று இணையம் நமக்கு மட்டற்ற வசதிகளை வழங்கியிருக்கிறது. இணையதளம் ஒன்றை நமக்கெனத் துவக்கி நமது சிந்தையில் முகிழ்க்கும் கவிதை, கதை, கட்டுரைகள் அனைத்தையும் பதிவேற்றி, பல நாடுகளிலிருந்தும் வாசக நட்புகள் அதைப் படித்து உடனுக்குடன் கருத்துச் சொல்லி... பின்னர் அவற்றை புத்தகமாகவும் வெளியிடும் நிலை இன்று சாத்தியம்! என்போன்றோர் கூட ஓரளவு பிரபலமாக இருக்க முடிகிறது! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய வசதி எதுவுமில்லை. ஒரு எழுத்தாளன் பெயர்பெற வேண்டுமானால் பல பத்திரிகைகளில் படைப்புகள் வெளிவந்து பின்னர்தான் புகழ்பெற முடியும். அத்தகைய காலகட்டத்தில் எழுதத் துவங்கி இன்றும் தன்னுடைய புகழ்க் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் தன் எழுத்துலக வாழ்வைத் துவங்கிய விதத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உடனே விரைந்து கடைசிப் பாராவுக்குச் செல்லாமல் அவர் யார் என்று கண்டுபிடியுங்கள் (ஆங்காங்ககே க்ளூக்கள் உண்டு) பார்ப்போம்...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவரான அந்த இளைஞருக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அப்போது இருக்கவில்லை. ‘தேன்மழை' என்ற இதழில் ஒரு புகைப்படம் பிரசுரித்து அதற்கேற்ற வாசகம் எழுதும் போட்டி வைத்திருந்தார்கள். காவியுடை அணிந்து இடுப்புக்கு மேல் ஆடையணியாமல் ருத்ராட்ச மாலைகள் அணிந்த ஒரு துறவி உட்கார்ந்திருக்க... அவர் அருகில் ஆடையணியாத சேரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் - இதுதான் படம். பார்த்ததும் அவர் மனதில் தோன்றிய எண்ணத்தை சுருக்கமாக ‘துறந்த நிலையும், திறந்த நிலையும்' என்று எழுதி அனுப்பினார். அந்த வாசகத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு என்றால் பெரிதாக எதுவும் நினைச்சுடாதீங்க. அந்த இதழின் ஒரு வருட சந்தா! அவ்வளவுதான்...! ஆனால் ‘நம்ம கிட்டயும் க்ரியேட்டிவிட்டி இருக்கு போலருக்கே...' என்று அவரை எண்ண வைத்தது அது. (இந்த க்ளூவை வைத்து அவர் யாரென்று கண்டுபிடித்திருந்தால் நீங்க 100 மார்க் வாங்கின உஸ்தாத்!)
அதன்பின் வந்த தீபாவளி சமயம்... தினத்தந்தி நாளிதழில் அப்போது பிரபலமாகியிருந்த கதாநாயகி சுஜாதாவிடம் வாசகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை தீபாவளி மலருக்காகக் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். நம்மவர் ‘நீங்கள் நடிப்பது கலையின் மீதுள்ள ஆசையினாலா, அல்லது பணம் சேர்க்கும் நோக்கத்திலா' என்று ஒரு கேள்வி எழுதி அனுப்பினார். அதைப் பிரசுரித்ததுதான் பிரசுரித்தார்கள்... அவர் எழுதின மாதிரியே போட்டிருக்கலாமில்லையா... இவரின் கேள்வியை இப்படி மாற்றிப் போட்டிருந்தார்கள்... ‘கண்ணே சுஜாதா! நீ நடிப்பது கலையின் மீதுள்ள ஆசையாலா அல்லது பணம் சேர்க்கும் நோக்கத்திலா?' என்று! சரி, போகட்டும்... கேள்வியை மாற்றியவர்கள் பெயர், முகவரியையும் மாற்றிப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இவரின் பெயர் போட்டு வந்ததால் அந்த ஊரில் பெயர் பெற்ற எஸன்ஸ் டீலரான அவரின் தகப்பனார் அதைப் பார்த்துவிட்டு... வேறு என்ன... சரமாரியாகத் திட்டுதான்! ‘என் தவறில்லை... பத்திரிகைக்காரர்கள் மாற்றி விட்டார்கள்' என்று அப்பாவை சமாதானபபடுத்த பெரும்பாடு பட்டார் அவர். (இந்த க்ளூவை வைத்து அவரைக் கண்டுபிடித்திருந்தால் 75 மார்க் உங்களுக்கு!)
அதன்பின் உஷாவாகி... ஸாரி, உஷாராகி சரியான பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள், கேள்வி பதில் என நிறைய எழுதினார் அவர். ‘டியர் மிஸடர் துக்ளக்' என்ற வாசகர் கடிதம் பகுதி இன்றும் துக்ளக்கில் பிரபலம். அதில் இவரது கடிதங்கள் பலமுறை இடம் பெற்றிருக்கின்றன. தன் பெயரைப் பல பத்திரிகைகளில் பார்த்து மகிழ்ந்து உத்வேகம் பெற்ற அவர், ‘அந்த மூன்று நாட்கள்' என்றொரு சிறுகதையை எழுதி ஆவிக்கு அனுப்பினார். (நம்ம நண்பர் ஆவி இல்லீங்க... ஆனந்த விகடன்!) அது விகடனல் பிரசுரமான ஆண்டு 1977. அடுத்து வந்த 1978ல் அலிபாபா, சாவி என்று வேறுபல இதழ்களில் அவரின் நான்கு சிறுகதைகள் பிரசுரமாயின. தொடர்ந்து நல்ல சிறுகதைகள் படைத்ததில் ஆசிரியர் சாவியின் கவனத்தை ஈர்த்தார் நம்மவர். (இங்கே கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு 50 மார்க்!)
சாவி அவர்கள் அப்போது ‘மோனா' என்று ஒரு மாதநாவல் நடத்தி வந்தார். அதில் நாவல் எழுதும் வாய்ப்பு நம்மவருக்குக் கிட்டியது. ‘அங்கே இங்கே எங்கே?' என்ற தலைப்பில் தன் முதல் நாவலை எழுதினார். (இப்போது கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு 25 மார்க்!) அதன்பின் பல பத்திரிகைகளில் தொடர்கதைகளும் நாவல்களும் எழுதி தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகப் புகழ் பெற்றார் அவர். ‘சாவி' சார் இளைஞர் படையினரை ஆசிரியர் குழுவாக நியமித்து ‘திசைகள்' என்ற இதழைத் துவக்கினார். அதில் இவர் உதவி ஆசிரியரானார். ‘சாவியின் செல்லப் பிள்ளை' என்று பலர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருங்கியவராகவும், அந்தப் பத்திரிகையில் ஏராளமான படைப்புகளை எழுதியும் குவித்தார். (இதுவரை கண்டுபிடிக்கலைன்னா... உங்களுக்கு மார்க்கே கிடையாதுங்க...!)
சாவி இதழில் ‘மிஸ் கவிதா' என்ற பெயரில் (தங்கை பெயர்) சித்திரக் கதைத் தொடர்கள் இரண்டு எழுதியிருக்கிறார் இவர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். அச்சமயம் வந்த சாவி இதழ் ஒன்றில் ‘பிரபா' என்ற பெயரில் ‘கறுப்புமெயில்' என்ற இவரின் சிறுகதையும், ‘மிஸ்.கவிதா' என்ற பெயரில் ‘டெவில் டேவிட்' தொடரின் அத்தியாயமும், பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயரில் ‘நீ மட்டும் நிழலோடு' தொடர்கதை அத்தியாயமும், ஒரு பேட்டிக் கட்டுரையில் ஆர்.பிரபாகர் என்று பெயர் போட்டும் ஒரே இதழில் நான்கு படைப்புகள் வெளிவந்த சிறப்பும் இவருக்கு உண்டு.

இவ்ளோ விஷயமும் என்னப் பத்தி தாங்க! |
அவர் முதல் சில சிறுகதைகளை தன் சொந்தப் பெயரான ‘ஆர்.பிரபாகர்' என்ற பெயரில்தான் எழுதியிருந்தார். அப்போது அவரின் அப்பா, ‘‘பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு ஊர் பேரை தன் பேரோட சேர்த்தவங்க அவங்களும் பிரபலமாகி, ஊருக்கும் பேர் வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதனால உன் பேரோட ஊரின் பேரைச் சேர்த்து ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ன்னு வெச்சுக்கோ" என்று ஐடியா தந்தார். தந்தையின் வார்த்தையை மதித்த அந்தத் தனயன் அதே பெயரில் பிரபலமாகி இன்று பத்திரிகைகள் கடந்தும் தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்று பல தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். இவர் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் (அ) இவரின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவன் என்பது என்றும் நினைத்தாலே இனிக்கும் விஷயம் எனக்கு!
|
|
Tweet | ||
டேஷ்போர்டுல போட்டோவோட உங்க பதிவு வந்திருச்சு வாத்தியாரே, அதனால எனக்கு நான் மார்க் போட்டுக்கலை... ரொம்ப சுவாரஸ்யமா பலருக்கும் தெரியாத பி.கே.பி.யின் ஆரம்பகால வாழ்க்கை நிகழ்வுகளை சொல்லியிருக்கீங்க....
ReplyDeleteஅடாடா... இதை யோசிக்காமப் போய்ட்டனே ஸ்.பை.! சரி... இனி மாத்த விரும்பலை. நிகழ்வுகளை ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
ReplyDeleteஊர்ப் பேரோட தன் பேரை இணைச்சவங்கெல்லாம் வாழ்க்கையில பெருசா வந்திருக்காங்கன்னு சொல்றீங்க.. அப்படித்தானே சாரே?
ReplyDeleteஇவண்,
'கோவை' ஆவி.. (ஹிஹிஹி !)
அப்படின்னு நான் சொல்லலை தம்பி... பி.கே.பி.யோட அப்பா சொன்னது அது. கரீக்ட்டுதான்!
Deleteஅப்ப... நானு..?
Deleteநீங்க ஏற்கனவே பெருசா வந்துட்டீங்கதானே உஸா...! வளரவேண்டிய என்ன மாதிரி சின்ன ஆசாமிங்களுக்குத்தான் ஆவி கேட்டது! ஹி... ஹி...!
Deleteஉங்க க்ளூ எதுவும் இல்லாமலே நான் அவரை கண்டுபிடிச்சிட்டனே..! ஸ்பை ரகசியத்த உடைச்சிட்டீங்க..!
ReplyDeleteஆமாம்ப்பா... கொண்டைய மறைக்கத் தெரியாம வேஷம் போட்டவன் கதையாயிருச்சு என் நிலைமை...! அவ்வ்வ்வ்வ! இனி உசாரா இருந்துக்கணும்ப்பா! மிக்க நன்றி!
Deleteபட்டுக்கோட்டையார் குறித்த பல அருமையான
ReplyDeleteவிஷயங்களைத் தங்கள் மூலம் அறிந்து கொண்டேன்
நதி முலம் அறிவது போல எழுத்தின் மூலம்
எழுத்தாளரின் மூலத்தை சுவாரஸ்யமாக அறியத்
தந்தது தங்கள் எழுத்துத் திறனைப் பளிச்சிடக் காட்டுகிறது
( மார்க் விஷயத்தில் எடுத்தது 0 தான் )
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
எழுத்து மூலம்...! ஆஹா... அடுத்து ரா.கு.வை வைச்சு இதே மாதிரி ‘முதல்’ அனுபவத்தை எழுதலாம்னு நெனச்சுட்டிருந்த எனக்கு அருமையான தலைப்பு தந்துட்டீங்க. உங்களுக்கு என் இதயம் நிறைய நன்றி ரமணி ஸார்!
Deleteநினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகள்..!
ReplyDeleteஇனிக்கும் நிகழ்வுகளை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபடம் வந்ததால் மிகச் சுலபமாக கண்டுபிடிக்க முடிந்தது கணேஷ்......
ReplyDeleteகொண்டையை மறந்துட்டீங்களே! :)
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் குறித்த பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது உங்கள் பதிவின் மூலம்.... நன்றி கணேஷ்.
ஆமாப்பா... புதுசா ஒண்ணு செய்யணும்கற பரபரப்புல கொண்டைய மறந்துட்டேன். ஹி... ஹி...! பி.கே.பி. குறித்த பல விஷயங்களை இப்போது என்மூலம் தெரிந்து கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஹாஹா ஹையோ ஹையோ
ReplyDeleteஹி... ஹி... ஹி... ஹஹ்ஹஹ்ஹா! மிக்க நன்றிங்கோவ்!
Deleteநான் எடுத்தது பூச்சிய புள்ளிதான்..
ReplyDeleteஇதுவரை பெயரை மட்டும் தான் கேட்டிருந்தேன் இப்போ இவரின் எழுத்து பிரவேசம் பற்றியும் சிறிதளவு தெரிந்து கொண்டேன் சார்
படித்து அறிந்து கொண்டு, கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஆமா நானும் படம் பார்த்து விட்டு இங்க வந்தா என்ன இது இப்படி படத்தையும் போட்டு கண்டும் பிடிக்க சொல்றாஙக்ளே என நினைத்தேன்.
ReplyDeleteகொஞ்சம் அவசரமா செயல்பட்டதால எல்லார்ட்டயும் பல்பு வாங்கிட்டேன் சசி...! வாட் டு டூ! மிக்க நன்றிம்மா!
Deleteஇந்த ஆவி, ஸ்பை, சீனு கூட சேர்ந்து அறிவு மழுங்கிட்டே போகுதுண்ணா உங்களுக்கு!! படம் போட்டு புதிர் போடுறீங்க பருங்க. யாராலயும் கண்டுப்பிடிக்கவே முடியலை.
ReplyDeleteஐயய்யோ... நம்ம பயலுங்க இந்த கமெண்ட்டைப் படிச்சு கான்டாகி ‘அறிவு மழுங்கிட்டதுன்னு தங்கச்சி சொல்லியிருக்காங்களே... அப்படி ஒண்ணு இருந்திச்சா’ன்னுல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டா பெரிய விபரீதமாச்சுதேம்மா...! மீ எஸ்கேப்!
Deleteஉங்களைப் பற்றிய சுய அறிமுகமோ என்று முதலில் நினைத்தேன். ( உங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்என்ற செய்தியைப் படித்ததால்.)பட்டுக்கோட்டை பிரபாகர் பற்றிய சில தகவல்கள் தெரிவித்ததற்கு நன்றி.
ReplyDeleteஅச்சச்சோ...! என்னைப் பத்தி நானே எழுதிக்கற அளவுக்குல்லாம் இன்னும் நான் வளரலீங்க ஐயா...! பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
Deleteநானும் என் பேரை புதுச்சேரி கலியபெருமாள்னு மாத்திக்கலாமோ..
ReplyDeleteஅட... இந்த ஐடியாகூட நல்லாத்தான் இருக்குது வாத்தியாரே... மாத்திக்கிட்டு நீங்களும் பிரபலமடைய வாழ்த்துக்களும், உங்களுக்கு என் மனம் நிறைய நன்றியும்!
Deleteபட்டுகோட்டை பிரபாகர் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் (அ) இவரின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவன் என்பது என்றும் நினைத்தாலே இனிக்கும் விஷயம் எனக்கு!
ReplyDeleteஉங்களின் நண்பர்களில் நானும் ஒருவர் என்பது இனிக்கும் விஷயம் எனக்கு
என் நண்பர்கள் ஒவ்வொருவரும் ரத்தினங்களாக அமைந்தது எனக்கு வரம் குடந்தையூராரே - உம்மையும் சேர்த்து! மிக்க நன்றி!
Deleteதிரு.பட்டுக்கோட்டை பிரபாகரைப்பற்றி சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்!!
ReplyDelete[ ஒரு கதாசிரியரின் திறமையுடன்] இனிய நன்றி!!
கதாசிரியரின் திறமையுடன்.... மகிழ்வு கொள்ளச் செய்த தங்களின் பாராட்டுக்கு மனம் நிறைய நன்றி மனோம்மா!
Deleteபட்டுக்கோட்டை பிரபாகர் வாழ்க்கை குறிப்புக்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கலக்கிவிட்டீர்கள்! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநான் நெருங்கிப் பழகிய க்ரைம் கதை மன்னரின் ஆரம்ப நாளைப் பற்றியும் எழுதிக் கலக்க விருப்பம் சுரேஷ்! ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteதிரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பற்றிய குறிப்புகள், தொகுப்பு சுவைபட இருந்தது.
ReplyDeleteஅவர் எழுதிய முதல் தொடர்கதையின் ('திசைகள்' இதழில்) பெயர் என்ன சார்?
‘ஒரு வானம், சில பறவைகள்’ என்பது திசைகளில் அவர் புதிய பாணி கதைக்கருவைக் கையாண்டு எழுதிய முதல் தொடர்கதையின் பெயர். இன்று நினைவுகூர்ந்து கேட்கிறீர்கள் எனில் நீங்களும் அவரின் பரமவிசிறி என்பது தெரிகிறது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே!
Deleteவித்தியாசமான் கோணத்தில் பட்டுக் கோட்டை பிரபாகரைப் பற்றி அழகாய் எழுதி அசத்தி விட்டீர்கள் கணேஷ் சார்.
ReplyDeleteபிகேபியைப் பற்றி எழுதியதைப் படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநான் இவரின் அந்த ஆனந்த விகடன் தொடர்கதை மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன். அதுவும் அது வெளிவந்த காலத்தில். 'துப்பறிய வாங்க'ன்னு கூப்பிட்டு முதலிலேயே இப்படிப் படத்தையும் கொடுத்தா நாங்கள்லாம் எங்க துப்பறிவாளராவது!
ReplyDeleteஹி... ஹி... ஹி... தப்பு நடந்து போச்சுங்கோ தங்கம்! இனிம டபுள் உஸாரா இருப்போம்ல...! மிக்க நன்றி!
Deleteபட்டுக்கோட்டை பிரபாகர்தானே அந்த எழுத்தாளர். கரெக்டா கண்டு பிடிச்சுட்டோமில்லே. எப்பூடி :-))))))))
ReplyDeleteஅருமையான வித்தியாசமான முயற்சி.
டேஷ்போர்டில் வந்த படத்தை நான் பார்க்கலைன்னு சொன்னா நம்பணும் :-))
நம்பிட்டேன் சாரல் மேடம்! நான் பல்பு வாங்காம தப்பிக்கணும்னு அக்கறையா நீங்க சொன்ன விதம் பிடிச்சிருக்கு! ஹி... ஹி...! தகவல்களை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல க்ளூ!எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாததால மண்டைய உடைச்சுக்கல.கடேசில நீங்க போட்டு உடைப்பீங்களேன்னு பொறுமை காத்து லாஸ்ட் வரைக்கும் படிச்சேன்!
ReplyDeleteகடைசிவரை பொறுமை காத்துப் படித்து ரசித்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபல ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக் கோட்டை பிரபாகர் அவர்களின் கதைகளை விரும்பிப் படித்திருக்கின்றேன். ஒரு முறை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை, பட்டுக்கோட்டையில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் பார்த்த நினைவு இருக்கிறது. நன்றி ஐயா
ReplyDeleteபட்டுக்கோட்டையில் சில காலம் அவருடைய அப்பா மெடிகல் ஷாப்பும் நடத்தி வந்தார். அதை பெரும்பாலான நேரங்களில் பி.கே.பி.தான் பார்த்துக் கொண்டார். அங்கே சந்தித்திருக்கிறீர்கள் நீங்கள் என்பதில் மகிழ்ச்சியும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றியும்!
Deleteபடம் வந்துட்டதால ஈசியா தெரிஞ்சு போச்சு. படிப்படியாக பி.கே.பி. யை பற்றி எழுதிய விதம் சூப்பர்.
ReplyDeleteஎழுத்தாளரைப் பற்றிய எழுத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை ந்னறி முரளி!
Deleteஇதுவரை தமிழ் மணத்தில் இணைக்க வில்லையா? இப்போது இணைத்து ஓட்டு போட்டு விட்டேன்.
ReplyDeleteநேற்று தமிழ்மணத்தில் ஏஏதா பிரச்சனை இருந்ததால் என் பதிவை ஏற்றுக் கொள்ள மறுத்தது. நாம வேற பல்பு வாங்கிட்டமா... சரி, அடுத்த பதிவை இணைச்சுக்கலாம்னு விட்டுட்டேன் முரளி! இப்ப எனக்காக அதைச் செய்தமைக்கு உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteநிறைய தகவல்கள் தெரிஞ்சி வச்சிருக்கீங்க சார்..
ReplyDeleteநான் போஸ்ட் படிக்கறதுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிட்டேன்...
(அதன் போட்டோ போட்டு இருக்கீங்களே .. பாத்துட்டேன்... ஹி ஹி ஹி)
//பால கணேஷ்November 6, 2013 at 9:25 PM
ReplyDelete‘ஒரு வானம், சில பறவைகள்’ என்பது திசைகளில் அவர் புதிய பாணி கதைக்கருவைக் கையாண்டு எழுதிய முதல் தொடர்கதையின் பெயர். இன்று நினைவுகூர்ந்து கேட்கிறீர்கள் எனில் நீங்களும் அவரின் பரமவிசிறி என்பது தெரிகிறது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே! //
அந்தத் தொடர்கதை திசைகள் இதழில் முடியும்வரை ப.கோ.பி. அவர்களின் பெயரை போடாமல் கடைசி வாரம்தான் அவரது பெயரை போட்டார்கள் - சரியா சார்?
மிகமிகச் சரி!
ReplyDelete