‘மலைப் பாதையில் நடந்த வெளிச்சம்’ என்ற கவிதை நூலை தம்பி சத்ரியன் நாங்கள் முதல்முதலில் சந்தித்தபோது கையெழத்திட்டு எனக்குப் பரிசளித்திருந்தார். எந்தப் பதிப்பகம் வெளியிட்டது என்று பார்த்தால் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ என்றிருந்தது ஒரு ஆச்சரியம்! வேடியப்பரு நல்ல ரசிகரு, தம்பி சத்ரியன் நல்ல கவிஞரு. ஒருவர் வெளியிட்டதை அடுத்தவர் பரிசளித்ததில் இருந்தே இந்தப் புத்தகம் சிறப்பானது என்பதை என் மனது கணித்தது. மெல்ல படிக்கத் துவங்கினேன். மெல்ல என்றால் எப்படி...? 96 பக்கங்களே கொண்ட இந்தக் கவிதை நூலை ஆகஸ்ட் 2012ல் படிக்கத் துவங்கி, பிப்ரவரி 2013ல் முடித்திருக்கிறேன்.
இப்படி மெதுவாகப் படித்ததற்குக் காரணம் சோம்பல் அல்ல... அடுத்தடுத்த பணிகளின் நடுவில் கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் புத்தகம் படிக்கும் என்னால் இன்னும் விரைவாகப் படித்து முடித்து விட்டிருக்க முடியும். நல்ல ஃபில்டர் காஃபியை ஸிப் ஸிப்பாய் உறிஞ்சி சுவைத்துக் குடிப்பது போல ஒவ்வொரு கவிதையாக ரசித்து, மனதில் உள்வாங்கி வியந்து படித்ததுதான் இத்தனை தாமதத்திற்குக் காரணம். அந்த வகையில் கவிதைகளை எழுதிய திருமதி. பத்மஜா நாராயணன் தாங்க குற்றவாளி. நான் இல்லை.
இப்படி மெதுவாகப் படித்ததற்குக் காரணம் சோம்பல் அல்ல... அடுத்தடுத்த பணிகளின் நடுவில் கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் புத்தகம் படிக்கும் என்னால் இன்னும் விரைவாகப் படித்து முடித்து விட்டிருக்க முடியும். நல்ல ஃபில்டர் காஃபியை ஸிப் ஸிப்பாய் உறிஞ்சி சுவைத்துக் குடிப்பது போல ஒவ்வொரு கவிதையாக ரசித்து, மனதில் உள்வாங்கி வியந்து படித்ததுதான் இத்தனை தாமதத்திற்குக் காரணம். அந்த வகையில் கவிதைகளை எழுதிய திருமதி. பத்மஜா நாராயணன் தாங்க குற்றவாளி. நான் இல்லை.
இந்தச் சிறுமியா கவிதை எழுதினது! |
‘பத்மஜாவின் கவிதைகள் மனவெளியில் படிமமாய் உறைந்து கிடக்கும் பிம்பங்களின் மாய இருளை அகற்றி புதுவெளிச்சம் பாய்ச்சி ரசனையின் ஆழ்மட்டத்திற்கு நம்மை உள்ளிழுத்துச் செல்கின்றன’ என்று இலக்கிய வார்த்தைகளைப் போட்டு நான் விமர்சிக்க ஆரம்பித்தால் கையில் கட்டையை எடுப்பீர்கள் என்பதால் ஸிம்பிளாக நம்ம ஸ்டைல்லயே சொல்லிடறேன்.
பொதுவா கவிதைகள்ல எனக்குத் தெரிஞ்ச வரை மூணு கேட்டகரி உண்டு. ஒண்ணு - படிச்சதும் புரிஞ்சு ‘அட!’ன்னு ரசிச்சுச் சொல்ல வைக்கிற டைப். ரெண்டாவது - கவிஞர் உள்ளீடா சொல்லியிருக்கறதை கொஞ்சம் சிரமப்பட்டுப் புரிஞ்சுக்கீட்டு ரசிக்க வைக்கிற டைப். மூணாவது - தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் புரியாத டைப். மூணாவது டைப் புத்தகங்கள் (தப்பித் தவறி) கைல கிடைச்சுட்டா, புத்தகத்தை கீழ வெச்சுட்டு எடுக்கவே மாட்டேன். முதல் டைப்பா இருந்துட்டா எடுத்த புக்கை கீழ வைக்கவே மாட்டேன். இந்தப் புத்தகம் முதல் ரகம்.
‘கதவிலக்கம் தொலைத்த வீடு’ என்கிற இவரின் கவிதையின் கருவை நானும் யோசித்ததுண்டு. என்ன செய்ய.... எனக்கு இப்படி கவிதையாய்ச் சொல்லத் தெரியவில்லையே...! கவிதைகள் சில புரியாவிட்டாலும், புரிந்தது போல் நடிக்கும் சிலரும், வெறும் வார்த்தைகளாகவே வாசிக்கும் பலரும் நம்மிடையே உண்டு. அவற்றை அழகாய் எடுத்துரைக்கும் ‘யாருக்கும் புரியா கவிதை’ என்ற கவிதையும், கவிதாவஸ்தை என்ற கவிதையில் கவிதை எழுதுவதின் அவஸ்தையை பத்மஜா சித்தரித்திருக்கும் அழகும் அவசியம் படித்து உணர்ந்து ரசிக்க வேண்டியவை.
பொதுவா கவிதைகள்ல எனக்குத் தெரிஞ்ச வரை மூணு கேட்டகரி உண்டு. ஒண்ணு - படிச்சதும் புரிஞ்சு ‘அட!’ன்னு ரசிச்சுச் சொல்ல வைக்கிற டைப். ரெண்டாவது - கவிஞர் உள்ளீடா சொல்லியிருக்கறதை கொஞ்சம் சிரமப்பட்டுப் புரிஞ்சுக்கீட்டு ரசிக்க வைக்கிற டைப். மூணாவது - தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் புரியாத டைப். மூணாவது டைப் புத்தகங்கள் (தப்பித் தவறி) கைல கிடைச்சுட்டா, புத்தகத்தை கீழ வெச்சுட்டு எடுக்கவே மாட்டேன். முதல் டைப்பா இருந்துட்டா எடுத்த புக்கை கீழ வைக்கவே மாட்டேன். இந்தப் புத்தகம் முதல் ரகம்.
‘கதவிலக்கம் தொலைத்த வீடு’ என்கிற இவரின் கவிதையின் கருவை நானும் யோசித்ததுண்டு. என்ன செய்ய.... எனக்கு இப்படி கவிதையாய்ச் சொல்லத் தெரியவில்லையே...! கவிதைகள் சில புரியாவிட்டாலும், புரிந்தது போல் நடிக்கும் சிலரும், வெறும் வார்த்தைகளாகவே வாசிக்கும் பலரும் நம்மிடையே உண்டு. அவற்றை அழகாய் எடுத்துரைக்கும் ‘யாருக்கும் புரியா கவிதை’ என்ற கவிதையும், கவிதாவஸ்தை என்ற கவிதையில் கவிதை எழுதுவதின் அவஸ்தையை பத்மஜா சித்தரித்திருக்கும் அழகும் அவசியம் படித்து உணர்ந்து ரசிக்க வேண்டியவை.
நூலாசிரியர் பத்மஜா நாராயணன் |
நூலாசிரியர் பத்மஜா என்னைப் போல ரொம்பவே தன்னடக்கமான பேர்வழி போலருக்கு. தன் முன்னுரையில் தன்னைப் பற்றி எளிமையாகவே சொல்லியிருக்கிறார். ஆனால் கவிதைகளைப் படித்தவுடன் மனதில் பிரம்மாண்ட வடிவெடுத்து விடுகிறார். (ஹைய்யோ பத்மா மேடம்... உங்களை கேலியெல்லாம் பண்ணலை! சீரியஸாத்தான் சொல்றேங்க). என்னை விட அறிவிற் சிறந்த அபபாதுரை ஸார் தன் ‘மூன்றாம் சுழி’ தளத்துல இந்தப் புத்தக்தை படிச்சுட்டு எழுதியிருக்கற விமர்சனத்தை இங்கே ‘க்ளிக்’கி ரசிக்கலாம் நீங்க. அவரைவிட அதிகமா நான் என்னாத்தை சொல்லிடப் போறேன்?
‘தீங்குளிர்’, ‘காகிதக் கப்பலாய் நான்’, ‘காலோவியம்’.... இன்னும் எதைச் சொல்ல, எதை விட? எல்லாக் கவிதைகளுமே ரசனையான வாசிப்பனுபவத்தை எனக்குள் விதைத்தன. அந்த வாசிப்பனுபவத்தை நீங்களும் அனுபவித்தே உணரக் கடவீர்கள் என்று சொல்லிக் கொண்டு, நான் மிக ரசித்த இந்தப் புத்தகத்திலிருந்து சில சாம்பிள் கவிதைகளை உங்கள் ரசனைக்காக இங்கே பகிர்கிறேன்.
‘தீங்குளிர்’, ‘காகிதக் கப்பலாய் நான்’, ‘காலோவியம்’.... இன்னும் எதைச் சொல்ல, எதை விட? எல்லாக் கவிதைகளுமே ரசனையான வாசிப்பனுபவத்தை எனக்குள் விதைத்தன. அந்த வாசிப்பனுபவத்தை நீங்களும் அனுபவித்தே உணரக் கடவீர்கள் என்று சொல்லிக் கொண்டு, நான் மிக ரசித்த இந்தப் புத்தகத்திலிருந்து சில சாம்பிள் கவிதைகளை உங்கள் ரசனைக்காக இங்கே பகிர்கிறேன்.
கீழ இருக்கற இந்தக் கவிதைல இவங்க என்ன சொல்லியிருக்காங்கன்னு (சின்னப் பையனானதால) எனக்குப் புரியலீங்க... நிஜம்மா..!
ஏனுங்க... கவிதைங்க உங்களைக் கவர்ந்துச்சான்னு கீழ கொஞ்சம் சொல்லிப் போட்டுப் போங்க...!
|
|
Tweet | ||
விமர்சனம் உங்கள் பாணியில் ரசமாகவே.
ReplyDeleteதேர்ந்த கவிஞரின் தொகுப்பை மிகச் சிறப்பாய் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்..
//இந்தப் புத்தகம் முதல் ரகம்.//
ரசித்துப் படித்து் ரசமாக இருக்கிறதென்றுகூறி மகிழ்வளித்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete"கண்படாமல் போ" என்று சொல்லும் ரசனையான மனதை விட, பிரார்த்திக்கும் ஏங்கும் ஆசுவுசப்படுத்திய மனது தான் மிகவும் பிடிக்கிறது...
ReplyDeleteஆமாம் தனபாலன். திண்ணை வைத்த வீடுகளைக் காண்கையில் எனக்குள்ளும் அந்த ஆதங்க மனசு எட்டிப் பார்க்கும். கவிதைகளை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteரிஷபன் அவர்கள் சொல்வது போல் அழகாக உங்கள் பாணியில் சொல்லி இருக்கிறீர்கள். கவிதைகள் பிரமாதம். பத்மஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//வேடியப்பரு நல்ல ரசிகரு, தம்பி சத்ரியன் நல்ல கவிஞரு. ஒருவர் வெளியிட்டதை அடுத்தவர் பரிசளித்ததில் இருந்தே இந்தப் புத்தகம் சிறப்பானது என்பதை என் மனது கணித்தது. //
புத்தகத்தின் சிறப்பை அழகா சொல்லி இருக்கீங்க.
என் எழுத்தையும், நான் பகிர்ந்த புத்தகத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஅருமையான கவிதை தொகுப்பை மிக அழகாக அறிமுகம் செய்திருக்கீங்க. சிறப்பான பதிவு.
ReplyDeleteகவிதைத் தொகுப்பை ரசித்து நான் பகிர்ந்ததை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deleteஅருமையான நூல்விமர்சனம் தந்து இருக்கின்றீர்கள்.நான்காவது கவிதையும்,படமும் சூப்பர்.
ReplyDeleteஅனைவரும் ரசிக்கும் கவிதையாக அது அமைந்து விட்டது. ரசித்துப் படித்த தங்கைக்கு என் இதய நன்றி!
Deleteகடந்த வாரத்தில் கோவையில் இவர்கள் நூல் வெளியிடப்பட்டது அதில் தோழிக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்வித்தேன் நான் உண்மையில் அருமையான உணர்வு மிக்க கவிதைக்கு சொந்தகாரிதான்
ReplyDeleteபத்மஜா நல்ல கவிஞர், நல்ல தோழி - இரண்டு வகையிலும் நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. ரசித்துப் படித்துக் கருத்திட்டு என் எழுத்தை மலரச் செய்யும் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deleteஅருமையாக விமர்சித்திருக்கிறீர்கள். பகிர்ந்தவற்றில் இரண்டும் மூன்றும் மிகப் பிடித்தன.
ReplyDeleteரசிக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான உங்களை இந்தக் கவிதைகள் ரசிக்க வைத்ததில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி. உங்களுககு என் இதயம் நிறை நன்றி!
Deleteபிரமாதம்!
ReplyDeleteசுருக்கமான சிவாவின் ஒற்றை வார்த்தை எனக்குள் ஊற்றெடுக்கச் செய்கிறது புதுத் தெம்பை. நன்றி சிவா!
Deleteநல்ல கவிதை தொகுப்பிற்கு நல்ல விமர்சனம்.
ReplyDeleteரசித்துப் படித்து மகிழ்வளித்த ஆனந்துக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஅவர் கவிதைகளுக்கு தங்கள் ;வரிகள் மேலும் சிறப்பு சேர்த்தன.
ReplyDeleteகவிதைகளையும் என் எழுத்தையும் ரசித்த தென்றலுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஎன்ன சொல்லுங்க , கவிதை கவிதை தாங்க.
ReplyDeleteஇரண்டாவதை மிக மிக ரசித்தேன்.
‘மலைப் பாதையில் நடந்த வெளிச்சம்’ புத்தகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.
40 பக்க கட்டுரை சொல்லாததை 4 வரி்க் கவிதை சொல்லிவிடுகிறது. அதனால்தானே தோழி எனக்குக் கவிதை எழுத வரவில்லையே என்கிற சன்னமான வருத்தம் மனதுள் அலையடிப்பதை பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். கவிதை கவிதைதான்! ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஇரண்டாம், மூன்றாம் கவிதை யதார்த்தமாய் சொல்லி அழகாய் ரசிக்க வைத்தது.
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteகாலை மட்டும் பார்த்தவரின் கவிதை ப்ரமாதம். எல்லோரும் இப்படித்தான் ஏதேதோ கற்பனையை துளி உண்மையுடன் கலந்து கனவுலகில் இருக்கிறோம் - முழு உண்மையை எதிர்நோக்கும் துணிச்சல் இல்லாமல்! - ஜெ.
ReplyDeleteமிகப் பெரும்பான்மையினரின் நிலை அதுதானே ஜெ... என்ன செய்ய...? இந்தக் கவிதையைப் பொறுத்தமட்டில் நிதர்சனத்தை எதிர்கொள்ளத் தயங்கும் அந்த மனதில் ஒரு ரசனையின் வெளிப்பாட்டைத்தான் நான் பார்த்தேன். மிக்க நன்றி!
Deleteபாதக் கவிதை அப்பாதுரை சிலாகித்திருந்தபோதே ரசித்தது. யோசிக்க வைத்தது. நல்ல பகிர்வு.
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம். அப்பாதுரை ஸார் நல்ல ரசிகராயிற்றே... இதை நீங்கள் ரசித்ததில் எனக்கு மிக மகிழ்வு. மிக்க நன்றி!
Deleteபுரிஞ்சி போச்சி எனது கவிதையை பார்க்கவே இல்லைன்னு.பத்மஜா அவர்களின் கவிதை தொகுப்பு நான் இன்னும் வாங்கலை ,படித்து விட்டு சொல்கிறேன் நண்பரே.
ReplyDelete(தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் புரியாத டைப். மூணாவது டைப் புத்தகங்கள் (தப்பித் தவறி) கைல கிடைச்சுட்டா, புத்தகத்தை கீழ வெச்சுட்டு எடுக்கவே மாட்டேன்.)
என் கைக்கு வரும் புத்தகங்கள், நான் வாங்கும் புத்தகங்கள் எல்லாமே வரிசைக்கிரமமாய்த்தான் படிப்பேன் நண்பரே (90 சதவீதம்). உங்களின் கவிதைப் புத்தகத்தில் 80 சதவீதம் கவிதைகள் நான் படித்தவை தாமே...! ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் நிறை நன்றி!
Deleteகவிதைகள் இரண்டும் நான்கும் அருமை.. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்
ReplyDeleteகவிஞருக்கு வாழ்த்துச் சொல்லி, பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிகள் தோழி!
Deleteஒருபாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! என்ற பழமொழியை நினைவு படுத்தின நீங்கள் பகிர்ந்த கவிதைகள்! விமர்சனம் மிக்க நன்று! பர்சனலாய் ஒரு வேண்டு கோள்: உங்களின் சரிதாயணம் புத்தகம் வாங்க ஆசை! வி.பி.பியில் அனுப்ப முடியுமா? எனது மெயில்முகவரி தருகிறேன்! பதில் தருவீர்களா? நன்றி! thalir.ssb@gmail.com
ReplyDeleteஎன்னப்பா இப்படிக் கேட்டுப்புட்டீங்க... உங்கள் போன்ற ரசிகருக்கு புத்தகம் அனுப்பித் தருவதைவிட ஆனந்தம் எனக்கு வேறென்ன இருக்கப் போகிறது? உடன் தொடர்பு கொள்கிறேன். அனுப்புகிறேன் நண்பா. மிக்க நன்றி!
Deleteசிறப்பான விமர்சனம். அப்பாதுரை பக்கத்தில் பார்த்தபோதே படிக்க நினைத்த புத்தகம்!
ReplyDeleteஅடுத்த பயணத்தின் போது வாங்கிடுவோம்!
த.ம. 6
கண்டிப்பா வாங்கிடலாம் வெங்கட். படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஎன்னா சாரு!பிரியலே!அது ஒரு மாதிரி..மாதிரி சுகம்தான்?!
ReplyDeleteஅருமைக்கவிதைகளின் அழகு அறிமுகம்
அழகுக் கவிதைகளின் அறிமுகத்தை ரசித்த அன்பு நண்பருக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteவிமர்சனம் அருமை புத்தகத்தை படிக்கனும் போல இருக்கு ஆனால் அங்கே வெளியிடப்படும் புத்தகங்கள் பெரும்பாலும் எங்கள் ஊர்களில் எல்லாம் கிடைக்காதே.
ReplyDeleteஎன்ன செய்ய... டிஸ்கவரி புக் பேலசின் ஆன்லைனில் வேண்டுமானால் ஆர்டர் கொடுத்து வாங்க இயலுமா என்று பாருங்கள். உதாரண லின்க் என் தளத்தில் சைட் பாரில் என் புத்தகத்திற்கு கொடுத்திருக்கிறேன் பிரதர். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!
Deleteஎனக்கு கவிதை படிக்க ஆர்வம் வருவதில்லை சார்.. நீங்க சொன்னமாதிரி படிச்சதும் புரியற கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்!!!
ReplyDeleteநிஜமாவே எனக்கும் புரியல சார் இந்த டெக்டானிக் கவிதை..
திண்ணை பற்றிய கவிதை சூப்பர்!!
கவிதையை ரசித்துக் கரு்த்திட்ட சமீராவுக்கு என் மனம் நிறை நன்றி!
Delete//‘பத்மஜாவின் கவிதைகள் மனவெளியில் படிமமாய் உறைந்து கிடக்கும் பிம்பங்களின் மாய இருளை அகற்றி புதுவெளிச்சம் பாய்ச்சி ரசனையின் ஆழ்மட்டத்திற்கு நம்மை உள்ளிழுத்துச் செல்கின்றன’ என்று இலக்கிய வார்த்தைகளைப் போட்டு நான் விமர்சிக்க ஆரம்பித்தால் கையில் கட்டையை எடுப்பீர்கள் என்பதால் ஸிம்பிளாக நம்ம ஸ்டைல்லயே சொல்லிடறேன்.//
ReplyDelete** நெசந்தாங்க.. நாலுவாட்டி படிச்ச பின்னாடிதான் புரிஞ்சுச்சு .**
// பொதுவா கவிதைகள்ல எனக்குத் தெரிஞ்ச வரை மூணு கேட்டகரி உண்டு. ஒண்ணு - படிச்சதும் புரிஞ்சு ‘அட!’ன்னு ரசிச்சுச் சொல்ல வைக்கிற டைப். ரெண்டாவது - கவிஞர் உள்ளீடா சொல்லியிருக்கறதை கொஞ்சம் சிரமப்பட்டுப் புரிஞ்சுக்கீட்டு ரசிக்க வைக்கிற டைப். மூணாவது - தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் புரியாத டைப். மூணாவது டைப் புத்தகங்கள் (தப்பித் தவறி) கைல கிடைச்சுட்டா, புத்தகத்தை கீழ வெச்சுட்டு எடுக்கவே மாட்டேன். முதல் டைப்பா இருந்துட்டா எடுத்த புக்கை கீழ வைக்கவே மாட்டேன். இந்தப் புத்தகம் முதல் ரகம். //
** லக லக .. மீ டூ ....**
ரகளையான , ரசனையான விமர்சனம் ... சூப்பருங்க ....
எழுத்தை ரசித்து, ரசித்ததை அழகாகப் பகிர்ந்து மனம் மகிழும் பாராட்டினை வழங்கிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteரசனையான கவிதைகளின் தொகுப்பு.
ReplyDeleteரசித்த உங்களுக்கு என் இதயம் நறை நன்றி!
Deleteசிறப்பான விமர்சனம். அருமையான தொகுப்பாக இருக்கும் போல் தெரிகிறது...
ReplyDeleteanaivarukkum mikka nandri
ReplyDelete