நெப்போலியன் போனபார்ட் (Napoléon Bonaparte)
‘நெப்போலியன்’ அப்படின்னு சொன்னாலே ‘குடி’ மக்களுக்கு பிராந்தியும், சினிமா பிரி(வெறி)யர்களுக்கு ‘மாவீரன்’னு அடைமொழி வெச்சுக்கிட்ட ஒரு நடிகரும் நினைவுக்கு வருவாங்க. ஆனா உண்மையில ‘மாவீரன்’ங்கற அடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஒரிஜினல் மாவீரன் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நெப்போலியன் போனபார்ட்தாங்க! மன்னர் மரபில் வந்தவர்கள் அரசாண்ட காலத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் தேசத்திற்கு சக்கரவர்த்தியாக விளங்கினார் என்றால் அந்தப் பெருமை நெப்போலியன் போனபார்ட் ஒருத்தருக்குத்தாங்க சொந்தம்.
1769ம் வருஷம் ஆகஸ்ட் 16 பிரான்ஸ்ல கோர்சிக்கா என்ற :ஊர்ல பிறந்தாரு நெப்போலியன். அவரோட பெற்றோருக்கு இவரையும் சேர்த்து 13 பிள்ளைகள்.ராணுவப் பள்ளியில படிச்ச நெப்போலியன் புத்திசாலி மாணவனா இருந்தாரு. கணிதம், வரலாறு- புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்த பாடங்கள். (அவ்வ்வ்வ்! படிக்கிற காலத்துல எனக்குல்லாம் அலர்ஜியா இருந்ததே இந்த சப்ஜெக்ட்டுங்கதாங்க...) 16 வயசுல படிப்பை முடிச்சுட்டு ராணுவத்துல ஆர்ட்டிலரி பிரிவுல சேர்ந்தாரு. 1796ம் ஆண்டுல டுலால் நகர்ல நடந்த யுத்தத்துல இணையற்ற வீரத்தைக் காட்டினதால இவருக்கு படைத் தளபதியா பதவி உயர்வு கிடைச்சது.
அதுக்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னால ‘பிரெஞ்சுப் புரட்சி’ன்னு சரித்திரத்துல சொல்லப்படற மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தினதுல இவருக்கு முக்கியப் பங்கு இருந்துச்சு. அக்கம்பக்கமிருந்த ரஷ்யா, அமெரிக்கா மாதிரி பஞ்சாயத்து தலைவருங்க, இவரோட வளர்ச்சியப் பாத்துட்டு உஷாராகணும்னு நெனச்ச நேரத்துல.இவரு முந்திக்கிட்டு ராணுவப்புரட்சி மூலமா ஆட்சியைக் கைப்பற்றி, 1804ம் ஆண்டுல - அவரோட 35வது வயசுல - பிரான்ஸின் மன்னராக தனக்குத்தானே முடிசூட்டிக்கிட்டாரு நெப்போலியன். ‘‘இது என் உழைப்பில் கைப்பற்றியது. எனக்கு முடிசூட்டும் அருகதை எவருக்கும் இல்லை’’ன்னு சொன்னதை அவரோட தைரியம்னு நீங்க பாராட்டுனாலும் சரி... திமிருன்னு திட்டினாலும் சரி... அவர் செஞ்சதென்னமோ அதைத்தான்.

போர்த் திட்டங்களை வகுக்கறதுல இணையற்ற திறமை நெப்போலியனுக்கு இருந்துச்சு. அதனால அடுத்தடுத்து அவர் நிகழ்த்திய போர்கள்ல எல்லாம் வெற்றி வாகை சூடி இங்கிலாந்தைத் தவிர மற்ற எல்லா நாடுகளையும் வெற்றிகண்டு மொத்த ஐரோப்பாவையும் தன் கண்ட்ரோலுக்குள்ள கொண்டு வந்தாரு இந்த சாதனையாளர். நம்ம நாட்டாமை தீர்ப்பு சொல்வாரே... ‘இவங்களோட யாரும் அன்னந்தண்ணி பொழங்கக் கூடாது’ன்னு! அப்படி ‘இங்கிலாந்துடன் எந்த நாடும் வர்த்தகம் புரியக் கூடாதுன்னு சொல்லி Continental System-ங்கற ஒரு முறையக் கொண்டு வந்தாரு. இந்த நாட்டாமையோட தீர்ப்புக்கு எதிரா ரஷ்யா, இங்கிலாந்துகூட வர்த்தகம் பண்ணினதால கடுங்கோபம் அடைஞ்சு பெரும் படையோட (படைன்னா உடம்புலன்னு நெனக்காதீங்க. Big Armyங்கற அர்த்தத்துல சொல்றேன்) ரஷ்யாவை நோக்கி்ப் புறப்பட்டது இந்தச் சி்ஙகம்.
சிங்கத்துக்கு போர்த்தந்திரம் நல்லாத் தெரியும்ங்கறது வாஸ்தவம்தான். ஆனா நரியோட தந்திரம் அதைவிட உசத்தியானதாச்சே! மாஸ்கோ நகரத்துல எல்லா கட்டடங்களையும் நொறுக்கி தகர்த்துட்டு, தண்ணி கிடைக்கக் கூட வழியில்லாம பண்ணிட்டு, இரண்டரை ல்டசம் ரஷ்யர்களோட எஸ்கேப்பாயிட்டாரு ரஷ்ய மன்னர் ஷா. மாஸ்கோவுல டென்ட்டடிச்சு, ஷா வந்து சரணடைவார், இல்ல தகவலாவது அனுப்புவார்னு ஒரு மாசம் முகாமிட்டாரு நெப்போலியன். மாச இறுதியில வந்தது... தகவல் இல்லீங்க, கடும் பனிக்காலம்! குளிர்னா உங்க வூட்டுக் குளிரு, எங்க வூட்டுக் குளிரு இல்ல... ரத்தமே உறைஞ்சு போற மாதிரி கடுங்குளிர்! டென்ட்டடிச்சு தங்கியிருந்த நெப்போலியனோட படைகளுக்கு டப்பா டான்ஸாடிடுச்சு. நரியோட தந்திரத்தை தாமதமாப் புரிஞ்சுக்கிட்ட நெப்போலியன், நாட்டுக்குத் திரும்ப உத்தரவி்டடாரு. வழியெல்லாம் குளிரும், பசியும், தாகமும் வாட்ட படை வீரர்கள்ல பெரும்பகுதி இறந்தாங்க. உணவு கிடைக்காம அவங்க பயணம் செஞ்ச குதிரைகளையே வெட்டித் தின்னாங்கன்னா... எவ்வளவு கஷ்டம்னு யூகிச்சு்க்கங்க. சுமார் 6 லட்சம் வீரர்களோட புறப்பட்ட நெப்போலியன் வெறும் 20 ஆயிரம் வீரர்களோட நாடு திரும்பினாருங்க ஐயோ பாவமா!
‘சரிதான்பா... பலவீனமா இருக்கற இந்த சிங்கத்தை இப்பக் காலி பண்ணினாத்தான் .உண்டு’ன்னு முடிவு பண்ணி, பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸ் மேல போர் தொடுத்தன. இந்தப் போர்ல தன்னோட வாழ்க்கைல முதல் முதலா தோல்வியைச் சந்திச்சாரு நெப்போலியன். அவரைக் கைது பண்ணி ‘எல்பா’ங்கற தீவுல சிறை வெச்சாங்க. சிங்கத்தைச் சிறையில வெச்சா என்ன நடக்கும்...? சிங்கம் சிறையவே சிதைச்சுட்டு ஒரே வருஷத்துல தப்பி வந்துடுச்சு. பிரான்ஸ் மக்கள் அவரை சக்ரவர்த்தியா மீண்டும் ஏத்துக்க, புதிய படையை உருவாக்கினார் நெப்போலியன். அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பின்னால பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் மீண்டும் நெப்போலியனுக்கு எதிரா அணி திரண்டு படையெடுத்து வந்தாங்க. வாட்டர்லூ என்கிற இடத்தில நடந்த அந்த சரித்திரப் புகழ் பெற்ற போரில் நெப்போலியன் இட்ட ஆணைகளை அவர் தளபதிகள் சரியா நிறைவேற்றாததால இன்னொரு முறையும் (இறுதித் தோல்வி) நெப்போலியன் தோல்வியைச் சந்திச்சாரு.
இம்முறை அவரை செயின்ட் ஹெலினாங்கற தீவுல சிறை வெச்சாங்க. அந்தச் சிறையில இருக்கறப்பதாங்க நெப்போலியனுக்கு கடுமையான வயிற்று வலியும் மனச் சிதைவும் ஏற்பட்டுருச்சு. (வயிற்றுப் புற்றுநோய்னும் சொல்றாங்க.) ரொம்பவே கஷ்டப்பட்ட அவர், ஆறு ஆண்டுகள் அந்தச் சிறையில வாடினாரு. 1821ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி நெப்போலியன்ங்கற மாவீரனோட வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி விழுந்துச்சு.
பிரான்ஸ் மக்களோட பேராதரவோட நெப்போலியன் சக்கரவர்த்தியா திகழ்ந்ததற்குக் காரணம், நாட்டை அவர் ஆண்ட விதம். புதிய வீதிகளை உருவாக்குதல், பாலங்கள் கட்டுதல், தண்ணீர் விநியோகத்தை சீரமைத்தது, வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையச் செய்தது, பொருளாதார மற்றும் அரசியல் சட்டங்களில் சீர்திருத்தம் செய்ததுன்னு போர் வெற்றிகளைத் தவிர அவர் சாதிச்சது நிறைய. ‘சட்டத்துக்கும் முன் யாவரும் சமம்’ங்கற விஷயத்தை தீவிரமா கடைப்பிடிச்சாரு நெப்போலியன்.
மாவீரன் நெப்போலியன் கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள் ரெண்டு: 1. புத்தகங்கள் வாசிப்பதில் நெப்போலியன் ஒரு தீவிரவாதி. நிறையப் புத்தகங்கள் படிக்கிற அவரு ஒரு நாளைக்கு நாலு மணி நேரம்தான் தூங்குவார்னு கேள்வி. 2) ‘முடியாது என்ற வார்த்தையே என் அகராதியில கிடையாது’ -இது நெப்போலியனின் தாரக மந்திரம். இந்த ரெண்டைத் தவிர, துணிச்சல், தன்னம்பிக்கை போன்ற விஷயங்களையும் நாம அவர் வாழ்க்கைலருந்து எடுத்து நம்முடையதாக்கிக்கலாம். என்ன... நாஞ் சொல்றது சரிதானே...!

|
|
Tweet | ||
வரலாற்றுப் பாடம் சுவாரஸ்யமாக இருந்தது.
ReplyDeleteபாடமா... பாடம் நடத்தற ஆசிரியராகற அளவுக்கு நான் வொர்த் இல்ல ஸ்ரீராம். நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்களை நண்பர்களோட கதை பேசறேன். அம்புட்டுதான்! மிக்க நன்றி.
Deleteஎன்ன சார் இப்படி சொல்லிட்டிங்க.. தூக்கம் வராம சுவாரஸ்யமா நடத்தி இருக்கிங்க.. ஆசிரியர் சொல்லி கொடுக்கிறதெல்லாம் ஏறாது. இப்படி கதை மாதிரி சொன்னாதான் டக் டக்குனு புரியுது.
Deleteஉற்சாகம் தந்த கருத்துக்கு மனம் நிறைய நன்றி உஷா!
Deleteதாரக மந்திரம் : என்ன ஒரு மன உறுதி...!
ReplyDeleteஇவரைப் பற்றிய சிறு குறிப்பும் வரும் என் பதிவில்... (?)
எழுது்ங்க தனபாலன். உங்கள் எழுத்தில் இவர் மேலும் சிறக்கட்டும். நிறையப் பேரைச் சென்றடையட்டும். உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteநெப்போலியன் பற்றிய தகவல்கள் அருமை....
ReplyDelete//சிங்கத்தைச் சிறையில வெச்சா என்ன நடக்கும்...? சிங்கம் சிறையவே சிதைச்சுட்டு ஒரே வருஷத்துல தப்பி வந்துடுச்சு//
ஓ அதனாலதான் வடிவேலு அந்த டயலாக்கை படத்துல வச்சாரா....
இருக்கலாம். அந்த டயலாக் சுவாரஸ்யமா இருக்கேன்னு நான் பயன்படுத்திட்டும் இருக்கலாம். மிக்க நன்றி நண்பா!
Deletenalla paadam....
ReplyDeleteபாடத்தையும் ரசித்த சீனிக்கு இதயம் நிறைய நன்றி!
Deleteநெப்போலியன் பத்தி கொஞ்சம் தெரிஞ்சிருந்தாலும், உங்க ஸ்டைல்ல அழகா அவரப் பற்றி சொன்னது சுவாரசியம்
ReplyDeleteஎன் ஸ்டைல்ல சொன்னது அழகு, சுவாரஸ்யம்னு ரெண்டு வார்த்தைகளால எனக்கு யானை பலம் தந்துட்டீங்க முரளி. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteரசித்தேன். நெப்போலியன் பண்ணினதையெல்லாம் நானும் பண்ணப்போறேனுங்க. பொறுத்திருந்து பாருங்க.
ReplyDeleteஆஹா... நீங்க எந்த நாட்டு மேல படையெடுக்கப் போறீங்களோ? ஆனா உங்களை யாரும் சிறை வைக்க மாட்டாங்கன்னு நெனக்கிறேன்... மிக்க நன்றிங்க!
Deleteநெப்போலியன் பற்றிய வரலாற்று தகவல்கள் அருமை.
ReplyDeleteவரலாற்றுத் தகவல்களை ரசித்த நண்பனுக்கு மனம் நிறை நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGreat! Both - NB and BG!
ReplyDeleteஅடடா... சுருக்கமான கருத்தினால் எனக்கு எனர்ஜி பூஸ்டர் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteதெரியுமா இவரை என்று தலைப்பிட்டு வரலாற்றில் இடம் பெற்ற முக்கிய புள்ளிகளைப்பற்ரிய விபரத்தினை தந்து நிறைய விஷயங்களை அறியத்தந்து இருக்கின்றீர்கள்.தொடருங்கள்.
ReplyDeleteதங்கையி்ன் ஆதரவு இருக்கையி்ல தொடர்வதற்கென்ன தடை...? மகிழ்வுடன் தொடர்கிறேன். நன்றிம்மா!
Delete// அவரோட தைரியம்னு நீங்க பாராட்டுனாலும் சரி... திமிருன்னு திட்டினாலும் சரி... அவர் செஞ்சதென்னமோ அதைத்தான்.// ஹா ஹா ஹா ரசித்தேன்
ReplyDeleteகுழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் உள்ளது வாத்தியரே
ரசித்துப் படித்த சீனுவுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteவாழ்க்கையில கோழைகளா இருக்கிறவங்களும் குவார்ட்டர் நெப்போலியன் அடிச்சதும் பின்னி எடுப்பது எதனாலேன்னு இப்ப புரிஞ்சது..
ReplyDeleteஹா... ஹா... புரிஞ்சுக்கிட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா!
Deleteஎன்ன ஒரு போர் தந்திரம் !
ReplyDeleteஎப்படிப்பட்ட நிர்வாகத் திறமை !
பிரமிப்பா இருக்கு. பாராட்டுக்கள்.
இந்திய பிரபலங்களைப் பற்றியும்
எழுதுங்களேன்.
உலகப் பிரபலங்களைச் சொல்றதன் மூலமா வெளிநாடுகள்ல ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு இந்தியாவுல வந்து தொடரை முடிச்சிரலாம்னு ஐடியா தோழி! இந்தியப் பிரபலங்களை நம்மவர்களுக்கு நிறையத் தெரிஞ்சிருக்கும்கறதால உலகப் பிரபலங்களுக்கு முன்னுரிமை தர்றேன். ரசித்துக் கருத்திட் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
DeleteYeah he sleeps for only few hours that is why the word of napping (having kutti thookam - do not mistake it as kuttiyudan thokkam) came after him.
ReplyDeleteThank you for writing an article on this great leader bowing to my humble request.
உங்களனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதைவிட வேறென்ன சந்தோஷம் எனக்கு இருக்கிறது? அதென்ன... குட்டியுடன் தூக்கமா...? ரொம்பத்தான் குறும்பு உங்களுக்கு!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThe term waterloo also became famous after this great leader.
ReplyDeleteஆமாமுங்க... வாட்டர்லூ யுத்தம்ங்கற போரின் பேர் ரொம்பவே பிரபலம்தான். தொடர்ந்து ஊக்கம் தரும் உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteநெப்போலியன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
ReplyDelete//சிங்கத்தைச் சிறையில வெச்சா என்ன நடக்கும்...? சிங்கம் சிறையவே சிதைச்சுட்டு ஒரே வருஷத்துல தப்பி வந்துடுச்சு//
//‘முடியாது என்ற வார்த்தையே என் அகராதியில கிடையாது’//
சிரித்து மகிழவும்,சிந்திக்கவும் வைக்கும் பதிவு.நன்றி பகிர்வுக்கு.
சிரிப்புடன் சிந்திப்புக்கும் இடமளிக்கிறது என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஆயிரம் போர்வாள்களை விட நான் அதிகம் அஞ்சுவது பேனாக்களுக்கு தான் என்று கூறியதும் நெப்போலியனே.1795 என்று நினைக்கிறேன் அரசுக்கு எதிராக திரண்ட எதிர்ப்பாளர்களை பீரங்கிகளில் குண்டுகளுக்கு பதில் உலோகத்துண்டுகள் பீங்கான் துண்டுகளை பயன்படுத்தி கொத்துக்குண்டுகள் தத்துவத்தை உலகுக்கு அறிமுகம் செய்தவரும் நெப்போலியனே.நெப்போலியன் மரணத்தில் கூட மறக்காத ஜோசபினை மறந்துவிட்டீர்களே ஐயா.
ReplyDeleteநல்ல பதிவு இன்னும் சில விடயங்களை சேர்த்திருக்கலாம்
ஆமாம் நண்பா... அதைச் சொன்னவர் நெப்போலியனே. நெப்போலியன் = ஜோசபைன் பற்றிய விஷயங்களை தனிப் பதிவாகவே போட வேண்டும். இங்கே நான் குறிப்பிட விரும்பியது வீரத்தைப் பற்றி என்பதாலும், நீண்ட பதிவாக இருந்தால் படிப்பவர்களுக்கு அயர்ச்சி தருமே என்பதாலும் ஜோசபைன் பற்றிக் குறிப்பிடவில்லை. மிக்க நன்றி!
Delete‘மாவீரன்’ங்கற அடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஒரிஜினல் மாவீரன் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நெப்போலியன் போனஃபார்ட்தாங்க! //
ReplyDeleteதகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி சொன்ன உங்களுக்கு என் இதய நன்றி நண்பரே!
Deleteமாவீரனைப் பற்றிய பதிவை நன்றாக நிறைய தகவல்களுடன் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteநெப்போலியன் போலவே கணேஷுக்கும் 'முடியாது' என்ற வார்த்தை அகராதியில் இல்லையோ? சிரிக்கச்சிரிக்கவும் எழுதுவீர்கள்; இதைபோல மாவீரர்களைப் பற்றியும் (அங்கங்கே நகைச்சுவை தூவி) எழுத முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்!
ஆஹா... என்னைப் பற்றி எத்தனை உயர்வான எண்ணம் கொண்டுள்ளீர்கள். சிலிர்க்கிறேன் உங்களன்பில்! என் உளம் கனிந்த நன்றிகள்மா!
Deleteமாவீரனைப்பற்றிய பகிர்வு சுவாரஸ்யமா இருந்தது..
ReplyDeleteசுவாரஸ்யம் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறைய நன்றி!
Deleteவரலாற்று நாயகனை சுவைபட விவரித்தமை அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteசுவைபட விவரித்தேன்னு சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteநெப்போலியன் பற்றிய அனைத்துத் தகவல்களும் அருமை அண்ணா! இங்கு பிரான்ஸில், நெப்போலியன் அவர்களது நினைவிடங்கள் பல உள்ளன! நெப்போலியனது அரண்மனையும் உள்ளது. பகிர்வுக்கு நன்றி அண்ணா!!
ReplyDeleteஆமாம்.. பிரான்ஸில் உள்ள நினைவிடம் மற்றும் அரண்மனை பற்றிக் கேள்விப்பட்துண்டு நானும். அவற்றின் புகைப்படங்கள் இருந்தால் எனக்கு bganesh55@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப இயலுமா மணி... முடிந்தால் மிகமிக மகிழ்வேன் நான். மிக்க நன்றி!
Deleteசிறப்பான மனிதர் பற்றிய சிறப்பான பகிர்வு.....
ReplyDeleteதொடரட்டும் பகிர்வுகள்.
நண்பன் தரும் உற்சாகத்துடன் பகிர்வுகள் தொடரும். மிக்க நன்றி!
Deleteநெப்போலியன் போனபார்ட்டா?வந்தபார்ட் வேறு உண்டா? ஹி,ஹி!
ReplyDeleteஉன்மையில் நல்ல பகிர்வே!
என்னது? வந்த பார்ட்டா...? எப்படில்லாம் யோசிக்கறீங்கப்பா...! ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteநெப்போலியனைப் பற்றி நிறைய விசயங்களை
ReplyDeleteஉங்களின் மூலம் அறிந்து கொண்டேன்.
ஆனால்.....
இன்றைக்கும் நெப்போலியன் என்ற பெயரை எந்தக் குழந்தைக்கும்
பிரென்சு மக்கள் சூட்டாததின் பொருள் தான் விளங்கவே இல்லை.
தெரிந்தவர்கள் சொன்னால் அறிந்துக்கொள்வேன்.
நன்றி பாலகணேஷ் ஐயா. 8
பிரபல தலைவர்களி் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டும் வழக்கம் இந்தியாவில் தான் அதிகம். வெளிநாடுகளில் இல்லை என நினைக்கிறேன். தெரிந்தவர் எவரேனும் விளக்கினால் உங்களுடன் சேர்ந்து நானும் அறிந்து கொள்கிறேன் அருணா! உற்சாகம் தந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைய நன்றி!
Deleteபிரான்ஸ் பயணக்கதைக்காக அவர்பற்றி வாசித்தென் முன்பு. இவர் படித்த இராணுவப்பாடசாலையைப் பார்த்தோம். பயணக்கதையில் குறிப்பிட்டுள்ளேன்.
ReplyDeleteமிக நன்றி பதிவிற்கு. போர் வெறியர் பற்றியதற்கு.
வேதா. இலங்காதிலகம்..
வாசித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஒரு மாவீரனோட கதைய நகைசுவையோட சொல்லிடீங்க சார்...
ReplyDeleteஇவரோட டயலாக் தான் இப்பல்லாம் திருடி மாத்திகிடான்களா (மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தை...etc)
இருக்கலாம் சமீரா... நகைச்சுவையோட சொல்லியிருக்கேன்னு ரசிச்ச உனக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteதெரிந்த விஷயங்களே ஆனாலும் உங்கள் பதிவில் படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகிவிடுகிறது. நன்றிகளும் வாழ்த்துக்களும்...
ReplyDeleteதெரிந்த விஷயங்களே ஆனாலும் உங்கள் பதிவில் படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகிவிடுகிறது. நன்றிகளும் வாழ்த்துக்களும்...
ReplyDeleteஎன்னை வாழ்த்திய ஷமிக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமாவீரன் நெப்போலியன் பற்றி இதுவரை தெரியாத தகவல்களையும் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Delete