Monday, February 11, 2013

சினிமா - சில பய(ங்கர) டேட்டா!

Posted by பால கணேஷ் Monday, February 11, 2013
மீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக(!) ஓடிக் கொண்டிருக்கும் ‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா?’ என்ற படத்தின் கதை பழைய ‘இன்று போய் நாளை வா’ என்கிற பாக்யராஜ் படத்தின் கதை என்பதால் ஒரு சர்ச்சை எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பழைய திரைப்படங்களை எடுத்து அதை தூசு தட்டி, மாடர்ன் டிரெண்டுக்கு ஏற்றபடி பட்டி, டிங்கரிங் செய்து புதிய சரக்காகத் தரும் பழக்கம் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது.

ஆனால் இது பழைய சரக்கு என்பதை அறியாமலேயே தமிழக மக்கள் நீண்ட காலமாக திரைப்படங்களைக் கண்டு களித்து வந்திருக்கிறார்கள் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்காது,. தெரிஞ்சுக்கணுமா... மச்சி, கேளேன்.... மச்சி... நீ கேளேன்... கேக்க மாட்டியா... சரி, நானே ‌சொல்றேன்.

‘விஜயா வாஹினி’ நிறுவனம் வெளியிட்ட ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த மகத்தான வெற்றி்ப் படம். அதை ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற பெயரில் ஹிந்தியிலும், ‘ராமுடு பீமுடு’ என்று தெலுங்கிலும் எடுத்து வெற்றி கண்டது அந்த நிறுவனம். சில ஆண்டுகள் கழித்து அதே கதையை எம்.ஜி.ஆர். கேரக்டர்களைப் பெண்ணாக்கி வாணிஸ்ரீயை நடிக்க வைத்து தமிழில் ‘வாணி ராணி’ என்ற பெயரிலும், ஹேமமாலினியை வைத்து ‘சீதா அவுர் கீதா’ என்று ஹிந்தியிலும் படமாக்கி அவையும் வெற்றி பெற்றன. ஒரு தலைமுறை கழித்து ஸ்ரீதேவி நடிக்க ‘சால்பாஸ்’ என்ற பெயரில் அதே கதை மீண்டும் ஹிந்தியில் வெற்றிக் கொடி நாட்டியது. ஒரே தோற்றமுள்ள இருவர் இடம் மாறுவது என்ற அந்த சப்ஜெக்ட் வேறு வேறு விதங்களில் கையாளப்பட்ட படங்கள் தமிழிலும் நிறைய உண்டு.

சிவாஜியும் பத்மினியும் நடித்த ‘தேனும் பாலும்’ என்ற படத்தின் டிவிடி கிடைத்தால் வாங்கிப் பாருங்கள். அதேபோல சிவகுமாரும் அம்பிகாவும் நடித்த ‘கற்பூர தீபம்’ என்ற படத்தை ஏதாவது டி.வி.யில் போட்டால் அவசியம் பாருங்கள். இரண்டு திரைப்படங்களும் காட்சிக்கு் காட்சி... ஏன், ரெண்டு பெண்டாட்டிக்கார காமெடி கூட இரண்டு படங்களிலும் ஒன்றாயிருக்கும் அதிசயத்தைக் கண்டு ரசியுங்கள்.

 சிவகுமார், ஜெயசித்ரா இணைந்து நடித்த ‘எங்கம்மா சபதம்’ என்ற திரைப்படம் பின்னாட்களில் நெப்போலியன், குஷ்பு நடிக்க ‘வனஜா கிரிஜா’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. ‘உறவுக்குக் கை கொடுப்போம்’ என்ற பெயரில் விசு எழுதிய நாடகம் ஒன்று படமாகி (திரையரங்குகளை விட்டு) நன்றாக ஓடியது. பின்னாளில் விசு நடிகராகவும் ஆனதும் அந்தக் கதையை எடுத்து சீர்திருத்தி புதிய திரைக்கதையில் படமாக்கினார். தேசிய விருதும் வென்றார். அது ‘சம்சாரம் அது மின்சாரம்’

இவையெல்லாமே ஜனங்களின் மறதி என்கிற ஒரு சமாச்சாரத்தினை நம்பி, செய்யப்படும் விஷயங்கள். அன்றாட அவஸ்தைகள் ஏராளமாக உள்ள ஒவ்வொருவரும் பார்க்கும் படங்களின் கதைகளை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டு, அதை மற்றொன்றுடன் ஒப்பிடும் அளவுக்கு வேலையற்றவர்களா என்ன...?  ஆகவே மறுமுறை எடுத்தாலும் வெற்றிபெறும் என்கிற விஷயத்தை மற்ற எவரையும் விட நன்கு அறிந்தவர் இராம நாராயணன் அவர்கள். நடிகர் மோகன் இரட்டை வேடங்களில் நடிக்க, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று ஒரு திரைப்படம் எடுத்தார். செமயாக ஓடி கலெக்ஷன் அள்ளியது அந்தப் படம். அடுத்த மூன்றே ஆண்டுகளில் மோகன் கேரக்டர்களில் நளினியை நடிக்க வைத்து ‘நன்றி’ என்று அதே கதையை மீண்டும் எடுத்தார்- காட்சிக்கு காட்சி மாற்றாமல். சில காலம் கழித்து அதே கேரக்டர்களை பேபி ‌ஷாம்லிக்கு ஷிப்ட் செய்து ‘துர்கா’ என்ற பெயரில் மீண்டும் படமாக்கினார். இளகிய மனம் கொண்ட தமிழக மக்கள் மூன்று படங்களையும் ஓட வைத்தார்கள். ‘பிலிமோத்சவ்’ என்று திரைப்பட விழா நடக்கிற மாதிரி ‘ராமநாராணனோத்ஸவ்’ என்று ஒன்று நடத்தி அவர் இயக்கிய நூற்று சொச்சம் திரைப்படங்களைத் திரையிட்டால், அவற்றை முழுமையாக எவரேனும் பார்த்தால்... சுமார் பத்து கதைகளை நூறு படங்களாக அவர் எடுத்திருக்கும் அசாத்தியத்தைக் கண்டு இதயத் தாக்குதலே ஏற்பட்டு விடவும் வாய்ப்புண்டு.

ஆகவே... திரைப்பட இயக்குனர்களே, பின்னாட்களில் திரைப்படம் இயக்கவிருக்கும் இன்றைய பதிவர்களே... வெற்றிபெற்ற இன்ன படத்தை மீண்டும் நாங்கள் எடுக்கிறோம் என்று அபத்தமாக தகவல் வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்காமல், வேறு நடிகர்கள், வேறு ட்ரீட்மெண்ட் என்பதால் காபி ரைட், டீ ரைட் என்பதைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக எடுத்து வெளியிடலாம் உங்கள் படங்களை. என்ன... அதற்கு சில கண்டிஷன்கள் உண்டு. ஒன்று ட்ரெய்லரில் அந்தப் பழைய படத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் இருக்கக் கூடாது. இரண்டாவது இந்த அரிய(?) யோசனையை உங்களுக்குச் சொல்லித் தந்த எனக்கு வசூலில் ஒரு பர்சன்டேஜ் தந்துவிட வேண்டும். ஹலோ... உங்களத்தானுங்க.... எங்க ஓடறீங்க....?

72 comments:

  1. ஹா ஹா அருமையான விஷயமும் சொல்லி, கடைசியில் ஒரு ஐடியாவும் குடுத்து அசத்திவிட்டீர்கள் அண்ணா! சரி நான் படம் எடுத்தால் உங்களுக்கு கண்டிப்பாக பங்கு கொடுக்கறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... எனக்கும் பங்கு தர்றேன்னு சொன்ன உங்க தங்க மனசுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் மணி!

      Delete
  2. அட.. உக்காந்து யோசிச்சா இன்னும் நிறைய கண்டுபிடிக்கலாம் போலிருக்கே... உண்மையிலேயே நாம் இளகிய மனம் கொண்டவர்கள் தான்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஸ்கூல் பையன். நமது இளகிய மனத்தினை நம்பித்தான் நிறையப் படங்கள் வருகின்றன. நீங்களும் ரூம் போட்டு யோசிச்சுட்டு மத்த படங்கள சொல்லுங்க. மிக்க நன்றி!

      Delete
  3. தெலுங்கில் தாசரி நாராயணராவின் பாணி இதில் தனி. அவர் படங்களையே மறுபடி உல்டா பண்ணி எடுப்பார். ஒரு படத்தில் ஹீரோ ஏழை, ஹீரோயின் பணக்காரர் என்றால் அதை காபி பண்ணிய படத்தில் ஹீரோ பணக்காரர், ஹீரோயின் ஏழை. ஒரு படத்தில் ஹீரோவிற்கு அம்மா இல்லை என்றால், காப்பியடித்த படத்தில் ஹீரோயினுக்கு அம்மா இல்லை. உல்டா பண்ணி உல்டா பண்ணி எந்த படம் எதனுடைய காப்பி என்றே குழப்பும்! என்ன, எல்லா படமும் ஒரே மாதிரி இருக்கும்! நூறு படங்கள் டைரெக்ட் பண்ணுவதென்பது சும்மாவா. இப்படியெல்லாம் பண்ணினால்தான் நடக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தாசரியை ஆந்திராவின் ராமநாராயணன்னு தைரியமா சொல்லலாம் போலருக்கே. புதிய தகவல் தந்த அசத்திய நண்பர் பந்துவுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. :))) நல்லா போட்டீங்க பதிவு. சூப்பர்!

    இந்த ஆள்மாறாட்ட படத்துல 'வாழ்வு என் பக்கம்' லக்ஷ்மி ரெட்டை வேஷம் அதையும் சேத்துக்கங்க.
    அடுத்த வீட்டு பெண், சபாஷ் மீனா சேந்த கலவைதான் உள்ளத்தை அள்ளித்தா.

    'கண்ணா லட்டு திங்க ஆசையா' படம் எப்படிங்க ஓடுது? மஹா கொடுமை. தமிழ் நாடு ரசிகர்கள் ரசிப்பு தன்மை இப்படி ஆயிடுச்சே!:(

    சரி, நீங்க கொடுத்த ஐடியால படம் ஓடினா உங்களுக்கு ஒரு பெர்செண்ட் . படம் உதை வாங்கினா? அதுல உங்களுக்கு எத்தனை பெர்செண்ட்? :)))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ‘வாழ்வு என் பக்கம்’ நானும் பாத்திருக்கேன். ஆனா சேர்க்க மறந்துட்டேன். வாணிஸ்ரீ கிட்ட அடிவாங்கின அதே ஸ்ரீகாந்த் லக்ஷ்மி கிட்டயும் அடிவாங்குவாரு. ஐயோ பாஆஆவம்! நான் குடுத்த ஐடியாவுல படம் நல்லா ஓடிச்சுன்னா ஒரு பர்சென்ட் எனக்கு தருவீங்க. படம் உதை வாங்கிச்சுன்னா... ஹலோ... நீங்க யாருங்க? முன்னபின்ன உங்களப் பாத்ததேயில்லையே! ஹி... ஹி... தான்! மகிழ்வூட்டும் வருகைக்கும் அசத்தலான கருத்துக்கும் என் மனம் நிறை நன்றி.

      Delete


  5. இதற்கும் வந்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தவறாது வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தும் தங்களின் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா!

      Delete
  6. ஆஹா.... நோ ஒர்ரீஸ்.

    இதே கதைகளை நியூஸி பின்னணியில் தமிழ் சப்டைட்டிலோடு எடுத்தால்.....ஒருபய கண்டுபிடிக்க முடியாது:-)))

    உங்க 1% கட்டாயம் உண்டு கேட்டோ:-)))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நியூஸில படம்... எனக்கும் ஒரு பங்கு... ரொம்ப மகிழ்ச்சி டீச்சர்! நமக்குத் தேவை ஒரு இ.வா. தயாரிப்பாளர் மட்டுமே! மிக்க நன்றி!

      Delete
  7. ஹா ஹா ஹா ஹா செம அலசல் அண்ணே, நூற்றுக்கு நூறு உண்மை...!

    ReplyDelete
    Replies
    1. அலசலை ரசித்து ஆமோதித்த மனோவுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  8. சரி, அவங்களும் என்ன பண்ணுவாங்க சார். பட டிஸ்கஷன்ன்னு உக்கார்ந்தாலே முன்னாடி வெற்றி பெற்ற அந்த படம் மாதிரியே வேணும்னு கேக்குறாங்க.. டைரக்டரும் அது மாதிரி என்ன அதே கதையே எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணிடறார்..

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... எப்பவுமே அதர் சைட்லருந்தும் நீ்ங்க யோசிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ஆனந்த். நீங்க ‌சொல்றதும் வாஸ்தவம்தான்.

      Delete
  9. கலக்கல்.... தமிழ்படத்தில் முழு படம், சில சீன்கள் அடிக்கடி வரது மாதிரியே ஹிந்தியிலும் இதே கதை தான்....

    நல்ல அலசல்....

    ReplyDelete
    Replies
    1. அலசலை ரசித்துப் பாராட்டிய நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. சமீபத்தில் நம்ம சுரேஷ் கிருஷ்ணா கூட அவர் எடுத்த அண்ணாமலையை கொஞ்சம் கூட கதைக்கு சேதாரமில்லாம பரத்தை வச்சு அதே படத்தை எடுத்தாரே.. ஆனா அது படு ப்ளாப் ஆனது வேறு கதை..

    ReplyDelete
    Replies
    1. ஆமா... பரத் நடிச்ச அந்தப் படத்தைப் பத்தி கேள்விப்பட்டேன். ஆனா நான் பாக்காததால சொல்லலை. மிக்க நன்றி ஆன்நத்!

      Delete
  11. குட்டு வெளிப்பட்டுவிட்டதே !
    ராமராஜன் படங்களும் இதில் சேர்க்கலாமோ ?

    ReplyDelete
    Replies
    1. ராமராஜன் படங்களுக்கு கதை, மூளை எதுவுமே தேவையில்லைங்கறதால இதுல சேக்க வேணாம் தோழி. ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  12. இன்னும் நிறைய இருக்கே சார்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பின்னூட்டப் புயலே... ஒரு பதிவு பத்தாது எழுதறதுக்குங்கறதால சிலவற்றை மட்டும் குறிப்பிட்டேன். படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  13. பயடேட்டா நிஜமாகவே பயங்கரம்தான்.

    ReplyDelete
    Replies
    1. பய(ங்கர)டேட்டாவைப் படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. இந்த கருமத்துக்குதான் நான் சினிமாவே பார்க்குறதில்லைண்ணா

    ReplyDelete
    Replies
    1. அந்த வகையில நீ குடுத்து வச்சவதான் தங்கச்சி.

      Delete
  15. அதே போல பழைய பாடல்களை எப்படியெல்லாம் புதுசாக சுட்டுத் தள்ளியிருக்கிற்றர்கள் என்று காட்டினால் இளைய தலைமுறையினர்க்கு பயனாக இருக்குமே நண்பரே

    ReplyDelete
    Replies
    1. அது மிகப்பெரிய விஷயம் நண்பா. பின்னொரு சமயம் முயற்சிக்கிறேன். மிக்க நன்றி!

      Delete
  16. பாலிலிருந்து தயிர்,மோர்..வெண்ணெய்.. நெய் எல்லாம் தயாரிக்கற மாதிரி. ஒரு கதையை டிஸைன் டிஸைனா பண்ணிடுவோம்ல.. எதோ ஒண்ணிலிருந்துதான் இன்னோண்ணு கெடைக்கும்ங்க... எல்லாமே இப்படிதான் நடக்குது..ஒரே விஷயம்னாலும் சொல்ற சுவாரஸ்யம் வேற வேற மாதிரி இருக்கும்தானே! அதுல டெக்னிக் தெரிஞ்சிகிட்டவங்க டாப்பு.. அப்படில்லாம் ஒரு படம் எடுத்தா கமிஷன்லாம் கிடையாது.. நீங்கதான் புரடியூசர்.. ஹா..ஹா..!

    ReplyDelete
    Replies
    1. என்னாது... நான் புரொட்யூஸரா... சரியாப் போச்சு. டிஜிடல் காமிரா வாங்கவே இங்க சில்றையத் தேடித் தேத்திக்கிட்டு இருக்கேனுங்கோ.... உங்களுககு மனம் நிறைய நன்றி ‌‌(மறக்காம) சொல்லிட்டு மீ எஸ்கேப்!

      Delete
  17. எல்லோரும் எவ்வளவுதான் விதவிதமா யோசிப்பாங்க... திரும்பவும் அதே இட்லி, தோசைதான் பால கணேஷ் சார்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து்ப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  18. பின்னாட்களில் திரைப்படம் இயக்கவிருக்கும் இன்றைய பதிவர்களே... //அண்ணே!உங்களுக்கு இயக்க ஐடியா இருக்கு போலிருக்கே.வருங்கால இயக்குனர் பாலகணேஷ் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. எங்கம்மா.... ஆசை இருக்கு தாசில் பண்ண-ங்கற மாதிரிதான் இருக்கு என் நிலைமை! தங்கையின் வாழ்த்து பலித்தால் மிக்க மகிழ்ச்சிதான். மிகக நன்றிம்மா.

      Delete
  19. Very good analysis. What else to say? But the last line is a punch line. But 1% is very less. And in some movies, only that 1% is the profit for the producers.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... அப்படியும் லாபம் கிடைக்க வாய்ப்புண்டோ மோகன்! அப்ப நமக்கு நாமம்தான்ங்கறீங்க... மிக்க நன்றி!

      Delete
  20. ஹா...ஹா...ஹா... கறை நல்லது மாதிரி மறதியும் நல்லது...

    :) :) :)

    எனக்கு ஒரு டவுட் சார்!

    பய டேட்டா என்றால் பிடிச்சது, பிடிக்காதது, கடிச்சது, கடிக்காதது என்பது மாதிரி தானே எழுதணும்?

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. ச்ச்சும்மா... பயடேட்டான்னு வெசசா டெரர் தலைப்பே நிறையப் பேரை ஈர்‌க்கும்னு வெச்சேன் பாஷித்! நீங்க சொல்ற ஸ்டைல்ல எழுத சிவபிரபாசெல் கூட்டணிதான் சரியான ஆளுங்க. மிக்க நன்றி!

      Delete
  21. நான் இதே கதையை ரெண்டு பூனையை வைத்து எடுக்கப் போகிறேன். எங்க மாமா, ட்ரீம் கர்ல் கூட இப்படித்தான். சினிமாவுல இதெல்லாம் சகஜமுங்க....!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... பூனைய வெச்சா... ரைட்டு, எனக்கு கமிஷன் உண்டுல்ல...! மிக்க நன்றி!

      Delete
  22. ஓ! இவ்வளவு விசயம் இருக்கா! அப்பாவி மக்கள். அதில் நம்மளும் ஒருத்தர்...:))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... ஒரு‌ படம் வெற்றிகரமா ஓடறப்ப, நாமளும் அதுல ஒருத்தராயிடறோம்தான். ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. ஆனாலும் இந்த சினிமாகாரங்க பண்றது ரொம்ப அட்டூழியம் சார்...எனக்கும் வாணி ராணி பார்த்தா இந்த நியாபகம் தான் வரும்..
    உறவுக்கு கை கொடுப்போம் கை கொடுக்கலன்னாலும் 'சம்சாரம் அது மின்சாரம்' விசு சார்-கு கை கொடுதிடுச்சி!!உண்மையில் மிக அருமையான படம்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா. அது நல்ல சப்ஜெக்ட்ங்கறது மறுக்க முடியாத விஷயம்தான். ரசிச்சுப் படிச்சுக் கருத்திட்ட உனக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  24. துல்லியமாக விவரங்களைத் தந்திருக்கிறீர்கள்:)!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  25. நூற்றுக்கு நூறு வீதம் நிஜம் இது நல்ல ஆய்வு நானும் ஒரு படம் செய்யணும் வ்னஜா கிரிஜா போல அதில் குஸ்பூ ரோலுக்கு நம்ம சினேஹாவை நடிக்க வைத்தால் வரி கேட்க மாட்டீர்கள் தானே!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
    Replies
    1. சினேஹாவுடன் டூயட் பாட ஆசையா தம்பீ... நடக்கட்டும்... நடக்கட்டும்...! மிக்க நன்றி!

      Delete
  26. நானும் நிறைய படங்களில் இதை கவனித்திருக்கிறேன் சார். குறிப்பாக ராம.நாராயணன் படங்களில் வசனங்கள் கூட ரிபீட் ஆகும் உதாரணமாக "பையன் தொட்டுட்டான் பொண்ணு கெட்டுட்டா" என்ற வசனம் நிறைய படங்களில் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... அவர் ரிபிடிஷனை எழுத ஆரம்பிச்சா பதிவுகள் பத்தாது பாலா. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி!

      Delete

  27. //இளகிய மனம் கொண்ட தமிழக மக்கள் மூன்று படங்களையும் ஓட வைத்தார்கள். //

    இலக்கிய மனம் கொண்டவர்கள் ஒதுக்கினால் நாங்கள் சும்மா இருப்போமா? ஓட்டுவோம்ல.

    ReplyDelete
    Replies
    1. ஓட்டுங்க எசமான்... ஓட்டுங்க!

      Delete

  28. //பின்னாட்களில் திரைப்படம் இயக்கவிருக்கும் இன்றைய பதிவர்களே...//

    நன்றி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சேச்சே.... என்ன சிவா இது? ஒரு இயக்குனர் தன் உதவி இயக்குனருக்கு நன்றில்லாம் சொல்லிக்கிட்டு..? ஹி... ஹி...!

      Delete
  29. இது போன்ற பதிவுகள் அடிக்கடி போடுங்க சார். ஐ லைக் இட்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் செய்கிறேன் சிவா. நீங்கள் ரசித்ததில் மிக்க மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  30. பழைய இங்லிஷ் படத்தை திருடி கதை வசனம்னு சொந்த பேரும் போட்டுக்கிட்டு, இருவது வருஷமா கதையை மனசுலயே உருட்டிட்டிருந்ததா சொல்ற டெக்னிக் எதுல சேர்த்தி?

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு க்ரூப், என் எழுத்தாள நண்பர்கள் மெனக்கெட்டு சீர் திருத்திக் கொடுத்த திரைக்கதையில வந்த படம் வெற்றி அடைஞ்சப்ப, தானே மண்டைய உடைச்சுக்கிட்டு உருவாக்கினதா டிவில பேட்டி தந்த இயக்குனரைப் பார்த்தும் சிரிச்சதுண்டு நான். எழுத ஆரம்பிச்சா... பல பதிவுகள் போகுமே அப்பா ஸார்...!

      Delete
  31. ம்ம்... பழைய தகவல்களாகப் போட்டுப் பின்றீங்க...!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  32. ஹ்ம்ம்ம்.நிறைய விஷயங்களை தெரிஞ்சி வச்சிருக்கீங்க போல. அருமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  33. சார் இதே மாதிரி ரஜினி நடிச்ச உழைப்பாளி, படத்த அப்படியே T.ராஜேந்தர் சிம்புவ வெச்சி எடுத்த சபாஷ் பாபு வா இல்ல எங்க வீடு வேலனோ தெரியல ஒரே மாதிரியா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அடடா... நீங்க சொன்ன டிஆர். படத்தைப் பாக்கற அதிர்ஷ்டம்(?) எனக்கு வாய்க்காமப் போச்சே.... தகவல் தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி நண்பரே!

      Delete
  34. இப்படி எல்லாரும் எல்லாம் தெரிந்தவர்களாக இல்லையே!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாருமே கிடையாதே குட்டன்... மிக்க நன்றி!

      Delete
  35. படம் பார்ப்பது குறைவு என்பதால் ரசித்து வாசித்தேன். மிக நன்றாக அலசியுள்ளீர்கள் நன்றி...நன்றி....
    மறுபடி வருவேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  36. ஹா...ஹா....ரொம்பவும் ரசித்தேன். முக்கால் வாசிப் படங்கள் இப்படித்தான். இல்லையென்றால் வேறு மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்துவிடுவார்கள். இதுக்குத்தான் 'அரைத்த மாவு' என்று பெயர்.
    'ராமநாராயணோத்சவம்' நல்ல அருமையான யோசனை!

    ReplyDelete
  37. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    ReplyDelete
  38. utharavu indri ulle va idhu than indru poi nalai va kathai

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube