வாங்க... சும்மா ஜாலியா கொஞ்சம் பழகலாம்! எழுத்தாளர் சுஜாதாவுக்கு வலையுலகில் விசிறிகள் அதிகம் என்பதை நான் அவதானித்திருக்கிறேன். அதிலும் கணேஷ் - வஸந்த் கதாபாத்திரங்கள் சிரஞ்சீவித் தன்மை பெற்றவர்கள். இங்கே (எனக்குத் தெரிந்த அளவில்) சில கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். ஏன்னா... எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும். சரியான விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். யாரும் விடையளிக்காத கேள்வி (அப்படி ஒன்று இருந்தால்) இருந்தால் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடிப்பிடிச்சு விடையக் கண்டுபிடிச்சு அப்டேட் செய்யப்படும்.
1) சுஜாதா முதலில் கணேஷ் மட்டும் துப்பறிவதாகத்தான் எழுத ஆரம்பித்தார். பின்னால்தான் வஸந்த் வந்து இணைந்து கொண்டான். கேள்வி என்னவெனில் - கணேஷ் கதாபாத்திரத்தை சுஜாதா எழுதிய முதல் நாவல் எது?
1) சுஜாதா முதலில் கணேஷ் மட்டும் துப்பறிவதாகத்தான் எழுத ஆரம்பித்தார். பின்னால்தான் வஸந்த் வந்து இணைந்து கொண்டான். கேள்வி என்னவெனில் - கணேஷ் கதாபாத்திரத்தை சுஜாதா எழுதிய முதல் நாவல் எது?
அதன் கீழ் பேனாவில், ‘‘இந்த பைபிள் ஆர்.வஸந்த் என்பவரால் அந்த ஹோட்டல் அறையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது...’’ வஸந்தைப் பார்த்துச் சிரித்தாள். ‘‘என்ன செய்யறது? எனக்குப் புஸ்தகம்னா அவ்வளவு இஷ்டம்!’’
-இந்த வரிகள் சுஜாதாவின் எந்த நாவலில் இடம் பெறுகிறது?
3) சுஜாதாவின் கணேஷ் கதாபாத்திரத்தை ‘ப்ரியா’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடித்தார். அதற்கு முன்பே இரண்டு முறை சுஜாதாவின் கதைகள் படமானபோது வேறொரு நடிகர் கணேஷ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்தநடிகர் யார்? படங்கள் பெயர் தெரியுமா?

4) ‘‘ஏன் பொம்பளைங்களை இப்படி கலாட்டா பண்றார் அவர்?’’
‘‘அவன் எல்லாரையும் கலாட்டா பண்ணுவான். ஹி டேக்ஸ் எவ்ரிதி்ங் ஈஸி. சில வேளைகளில் எனக்கு அவன் மேல் ரொம்பக் கோபம் வரும்!’’
‘‘இருந்தாலும் அவர் உங்களைவிட இன்டலிஜென்ட்டுன்னு சொல்ல முடியாது...’’
‘‘சில சமயங்களில் அவன் மாதிரி வேகமா சிந்திக்கக் கூடியவன் இருக்கவே முடியாது. கோர்ட்டில் கிராஸ் எக்ஸாமினேஷன் பண்றதைப் பார்க்கணும் நீங்க. இட்ஸ் எ பிளஷர்...!’’
-இந்த வரிகள் இடம் பெற்ற சுஜாதாவின் நாவல் எது?
5) சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்’ தொலைக்காட்சித் தொடராக வந்தபோது அதில் வஸந்த் கேரக்டரில் நடித்தவர் யார்?

6) மொஸைக் தரை முழுவதும் கண்ணாடித் துண்டுக் இறைந்திருக்க நடுவில் ரத்தக் குதறல் தெரிந்து. காலணிகள், கால்கள், இடுப்பு பெல்ட் வரை தெளிவாக இருந்த அந்த உடலின் மேற்பாகம் உருத்தெரியாமல் செஞ்சிதறலாக இருந்தது. கணேஷ் கூரையைப் பார்க்க, அதில்கூட ரத்தக் கோலம் போட்டு சதைப் பிச்சல் ஒட்டிக் கொண்டிருந்தது. ‘‘மை காட், திஸ் இஸ் டெரிபிள்’’
‘‘ஆள் செத்துப் போயிட்டான்னு நினைக்கிறேன். பல்ஸ் பாக்கலாம்னா கையே இல்லையே...!’’ கணேஷ், வஸந்த்தை முறைத்தான். ‘‘அந்தம்மா எங்கய்யா?’
‘‘தனியா அழைச்சுட்டுப் போயிருக்காங்க. நல்லவேளை பின்பக்கமா வெடிச்சிருக்குது. ஹால்ல இருக்கறவங்களுக்கு சப்தம் கேக்கலியே. கேட்டிருந்தா சனங்க பயந்துபோய் மிதிச்சு அடிச்சுகிட்டு வெளிய போயிருந்தா நிறையப் பேர் செத்திருப்பாங்க...’’
‘‘இந்தாள் யாருங்க?’’ என்று வஸந்த் கீழே கிடந்தவனைக் காட்டினான். ‘‘யாரோ! இங்க எலக்ட்ரிக் வேலை பாக்கறவராம். மலையாளி!’’ வஸந்த் அந்த உடலைப் பார்த்து, ‘‘எல்லா மலையாளமும் மறந்து போயிருக்கும் என்றான். கணேஷ் அவனை அதட்டி, ‘‘வஸந்த், டேண்ட் பி ஸில்லி’’ என்றான்.
-சுஜாதாவின் எந்த நாவலில் இந்த வரிகள் வருகின்றன?
7) ‘‘நாய் என்ன செஞ்சது?’’ என்றான் வஸந்த். ‘‘பாத்ரூம்லயே சுத்திச் சுத்தி வந்தது. எதுக்கும் பண்ணைல துப்புரவா தேடச் சொல்லியிருக்கேன். ரொம்ப பெரிய ஏரியா. அதில நூறு ஆள் மறைஞ்சிருக்கலாம். நூறு தடயம் புதைஞ்சிருக்கலாம்...’’ கணேஷ், லீனாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். டிபார்ட்மெண்டின் பழுப்புக் காகிதத்தில் தெளிவாக எழுத ஆரம்பித்தான். ‘‘நான் ஜே.கணேஷ், வயது...’’

வஸந்த் ஜன்னல் ஓரத்தில் லீனாவுடன் உட்கார்ந்து கொண்டு, ‘‘எங்கே உன் கையைக் காட்டு’’ என்றான். அவள் கையைப் பிடித்து ரேகை பார்த்தான். ‘‘லீனா! ஸாரி, நான் ஆஸ்பத்திரி போய்ட்டு வந்தப்புறம் ஒருவிதமா குழப்பமாய்ருச்சு! அதுக்கு முன்னால உன்னை நீங்க, வாங்கன்னுதான் கூப்பிட்டுக்கிட்டிருந்தேன் இல்லை?’’ ‘‘எனக்கு ஞாபகமில்லை வஸந்த். ஆனா என்னை நீன்னே நீங்க கூப்பிடலாம் நான் சின்னவ தானே?’’ ‘‘எனக்கு மட்டும் என்ன வயசுங்கறே? இன்னிக்குல்லாம் இருந்தா ஏழோ, எட்டோ?’’
-சுஜாதாவின் மிகப்புகழ்பெற்ற கணேஷ்-வஸந்த் த்ரில்லரில் இந்த வரிகள் வரும். அது எந்த நாவல்?
அம்புட்டு தாங்க... இனி உங்களோட பதில்கள் என்னவெல்லாம் சுவாரஸ்யங்களைத் தாங்கி வருகின்றன என்பதை எதிர்பார்த்து ஆவலோட காத்திருக்கேன் நான்.
விடைகள் : 1) நைலான் கயிறு, 2) நிர்வாண நகரம், 3) ஜெய் சங்கர் - காயத்ரி, இது எப்படி இருக்கு ஆகிய படங்களில். 4) எதையும் ஒரு முறை, 5) விவேக், 6) கொலை அரங்கம், 7) கொலையுதிர் காலம்.

|
|
Tweet | ||
3 கேள்விக்கு பதில் ஜெயசங்கர் படம் காயத்ரி
ReplyDelete5கேள்விக்கு பதில் விவேக்
காயத்ரி வந்த பின்னர் சில ஆண்டுகளில் ‘இது எப்படி இருக்கு?’ என்ற படம் வெளிவந்தது. சுஜாதா எழுதிய ‘அனிதா இளம் மனைவி’ என்ற கதைதான் அது. அதிலும் ஜெய்தான் ஹீரோ. (இது விகடன் புத்தகத்துல சொல்லப்படலை சரவணா!) 5ம் கேள்வியும் அதுலருந்தே எடுத்ததால சரியா சொல்லிட்டீங்க. மத்ததுக்கு...?
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
படம் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் அது சுஜாதா நாவலை தழுவி வந்தது என்பது என்று தெரியாது சார்
ReplyDeleteஉங்கள் கேள்விக்கான பதில்கள் இதோ; 1.நைலான் கயிறு 2.எதையும் ஒரு முறை (என்று நினைக்கிறேன்).3.ஜெய் ஷங்கர், காயத்ரி மற்றும் இது எப்படி இருக்கு படங்கள்.4.எதையும் ஒரு முறை.5.அந்த தொடரை நான் பார்த்ததில்லை. நடிகர் சுரேஷ் மற்றும் விஜய் ஆதிராஜ் (தற்போதைய டி வீ நடிகர்) கணேஷ் வசந்தாக நடித்ததாக நினைவு.6.மூன்று நிமிஷம் கணேஷ்.7.கொலையுதிர் காலம்.
ReplyDeleteஇதில் சில தவறுகள் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் எப்படியும் இதில் தேறி விடுவேன் என்று தோன்றுகிறது. பதில் எழுதவும்.
ஒன்றும் மூன்றும் ஏழும் சரியே. விஜய் ஆதிராஜ் வஸந்த் கேரக்டரை சிறப்பாகச் செய்தார் என்பது என் கணிப்பு. கலந்து கொண்டு எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி காரிகன்!
Delete1. நைலான் கயிறு
ReplyDelete2. நிர்வாண நகரம்
3.ஜெய் சங்கர்
7.கொலையுதிர் காலம்
அடாடா... சுஜாதாவின் அதிதீவிர விசிறியான பாலஹனுமான் தவிர மற்றவர்கள் கலந்து கொள்ளலாம்னு ஒரு பின்குறிப்பு தர மறந்து போனேனே... உங்கள் விடைகள் எல்லாம் சரியே அண்ணா. எவரும் விடையளிக்காததாய் 6வது கேள்வி மட்டுமே என்னிடம் இப்போது எஞ்சியிருக்கிறது. காத்திருந்து பார்க்கிறேன்... யாரிடமிருந்து விடை வருகிறது என்று! மிக்க நன்றி!
Deleteபதிலைக் கண்டு பிடிக்கறதுக்கு கணேஷ் வசந்த் ஏற்பாடு பண்ண முடியாததால இந்தக் கேள்விக்கான விடைகளை கண்டுபிடித்து சொல்ல
ReplyDeleteபாலகணேஷ் அவர்கள் மூலம் கண்டு பிடித்து சொல்கிறேன்.,
ஹா... ஹா... நான் துப்பறிந்து உங்களுக்காக விடையைச் சொல்லி விடுகிறேன் முரளி. அஞ்சற்க. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஇந்த கண்டுபிடித்தல் எல்லாம் நமக்கு வராது பதில் கமெண்டுகளை பார்த்து தெரிந்துகொள்கிறேன். அல்லது அடுத்த உங்கள் பதிவில்..
ReplyDeleteஅடுத்த பதிவில்லம்மா... நாளைக்கு காலையில இதே பதிவில விடைகளை அப்டேட் பண்ணிட்டு, அடுத்ததை வெளியிட்டுருவேன். ரசித்துப் படித்த தென்றலுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteதொலைக் காட்சித் தொடரில் விஜய் ஆதிராஜ் கணேஷாக நடித்தார் என்று நினைவு.
ReplyDeleteவாங்க கேஜிஜி சார்... நம்ம பக்கம் பாத்து நாளாச்சு... நலம்தானே...ஆம். சுஹாஸினி எடுத்த தொடரில் விஜய் ஆதிராஜ் வஸந்தாக நடித்தார். கணேஷாக நடித்தவர் சுரேஷ்.
Deleteமுதல் கேள்விக்கான பதிலாகிய நைலான் கயிறு தவிர வேறு எதுவும் சரியாகத் தெரியவில்லை.
ReplyDeleteமத்த விடைகள் சீக்கிரம் அப்டேட் பண்ணிடறேன் ஸார்...! மிக்க நன்றி!
Deleteஇந்த மாதிரி கேள்விகளை நான் கல்லூரியில் படிக்கும் போது கேட்டிருந்தால் உடனடியாக பதில் சொல்லியிருப்பேன். இப்பொழுது திரும்பவும் எல்லாவற்றையும் படித்து பார்த்து அப் டேட் செய்து கொண்டுதான் சொல்ல முடியும். இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteமுயற்சிக்கிறேன் என்று கூறி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteசுஜாதா ஆய்வு நன்று.
ReplyDeleteநான் வரலைங்க.
இனிய வாழ்த்து தங்கள் மகா ஆர்வத்திற்கு.
இன்னும் வருவேனுங்க..
வேதா. இலங்காதிலகம்.
வாங்கோ வேதா சிஸ்டர்! நலம்தானே... என் ஆர்வத்தை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deleteஹூம், இம்மாதிரிப் புதிர்க் கேள்விகளுக்கான பதிலை ஆரம்பத்திலேயே வெளியிட்டால் எப்படி? முதல் கேள்விக்குப் பதில் நைலான் கயிறு தான் எல்லாரும் சொல்லி இருக்காப்போல!
ReplyDeleteஜெய்சங்கர் கணேஷாக நடித்து அந்தப் படத்தைத் தலையில் அடித்துக் கொண்டு பார்த்த நினைப்பு இருக்கு. ஹிஹிஹி, எந்தப் படம்னு தெரியலை. காயத்ரி தான்னு நினைக்கிறேன்.
விஜய் ஆதிராஜ் தான் வசந்தாக வருவார். கணேஷாக வருபவர் உயரமான வேறொரு நடிகர். தெலுங்கு நடிகர் சுமன் அல்லது சுரேஷ்???
ஆமாங்க கீதா மேடம். கமெண்ட் மாடரேஷன் வெச்சுட்டு அப்புறம் நீங்க சொன்ன மாதிரி செய்யணும்னு ஒரு நட்பு போனில் சொல்லிச்சு. முதல் தடவைங்கறதால தெரியாமப் போச்சு எனக்கு. இனி வர்ற க்விஸ்கள்ல (நிறைய ஸ்டாக் இருக்கு) சுதாரிச்சுடறேன்) ஜெய்சங்கர் மத்த கதாபாத்திரங்கள் போல சாதாரணமா கணேஷ் கேரக்டரையும் நடிச்சாரு. அதிகம் மெனக்கெடலை.
Deleteபுதிர்க் கேள்விகளுக்கான பதிலை நிறுத்தி வைச்சுட்டு, 1,3, 5 சரி, ஏழு தப்புனு மட்டும் பதில் கொடுங்க. அப்போத் தான் எல்லாரும் தலையைப் பிய்த்துக்கொண்டு தேட முடியும். ஹிஹிஹி
ReplyDeleteஇம்மறை ஏமாந்துட்டேன். இனி உங்க ஐடியாப்படியே செய்யலாம்க. உற்சாகமளித்த உங்கள் வருகைக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteசீக்கிரம் விடையைச் சொல்லுங்க சார்! இப்பவே கண்ணக் கட்டுது!!
ReplyDeleteஅதான் 6வது கேள்வி தவிர மத்ததுக்கான விடைகள் பின்னூட்டங்கள்லயே இருக்கே அழகு! பாத்துடுங்க. கண்ணக் கட்டாது. அடுத்த பதிவுக்கு முன்ன விடைய அப்டேட் பண்ணிர்றேன். மிக்க நன்றி.
Deleteஎனக்கும் அறிவுப்போட்டிக்கும் சம்பந்தமில்லேங்குறதுனாலே, நான் அட்டெண்டன்ஸ் போட்டுக்கிட்டு ‘எஸ்’ ஆயிடுறேன். :-)
ReplyDeleteஅறிவுப் போட்டின்னா நான்கூட திருதிருனுதான் விழிப்பேன் - மத்தவங்க நடத்தினா. நாமளே நடத்துறதுன்னா ஜாலி! விடை நமக்கு தெரியும்கறதால.. ஹி.... ஹி... மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றிண்ணா.
Deleteவாத்தியாரே
ReplyDelete6 கொலை அரங்கம்
விடைகளை எதிர்பார்த்து காத்துள்ளேன்
பலே சீனு... சரியாக விடை சொல்லி அசத்தி விட்டாய். மிக்க நன்றி!
Deleteஆஹா.. இப்படி எக்ஸாம்லாம் வச்சா .. என்ன பண்ணலாம் ?இருங்க.. முன்னாடி இருக்கறவங்க என்ன எழுதியிருக்காங்கன்னு பார்த்துட்டு சொல்றேன்...
ReplyDeleteஹா... ஹா.. இந்தக் குறு்க்கு வழி நல்லாவே இருக்கே. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி
Deleteகேள்விக்கு விடை ? மீண்டும் புத்தகம் படித்துத்தான் சொல்ல முடியும் :)
ReplyDeleteஇப்போது விடை சொல்லி விட்டேன். மிக்க நன்றி்ங்க!
Deleteவெரி சாரி.. சுஜாதா கதைகள் பிடிக்கும்.. ஆனா இவ்வளவு டீடேய்லா தெரியாது
ReplyDeleteஅதனாலென்ன நண்பா... நீங்கள் வருகை தந்து கருத்திட்டதும், சுஜாதா பிடிக்கும் என்றதும் மகிழ்வுதான் எனக்கு. மிக்க நன்றி!
Deleteலேட்டா வருவதில் ஒரு சௌகர்யம். ஏற்கெனவே எல்லோரும் விடையை சொல்லியிருப்பார்கள். ஜெய் கணேஷாக நடித்த காயத்ரியில் வில்லன் ரஜினி! பொதுவாக கணேஷாகவோ வசந்தாகவோ மட்டும் இல்லை, நாம் படித்து ரசித்த எந்த கேரக்டரையும் திரையில் உருவமாக யார் நடித்தாலும் மனம் ஏற்றுக் கொள்ளாது. இது என் கருத்து.
ReplyDeleteமிக உண்மை ஸ்ரீராம். ஆனால் என் மனதிலுள்ள வஸந்த் பிம்பத்தின் மிக அருகில் வந்தார் விஜய் ஆதிராஜ். கணேஷ் கேரக்டரில் ரஜினி, ஜெய் இருவரையுமே பார்க்க மனம் ஒப்பவில்லை. மிக்க நன்றி.
Deleteமன்னிக்கனும்.இதற்கு எதற்குமே பதில் தெரியாது.
ReplyDeleteவிடைகள் : 1) நைலான் கயிறு, 2) நிர்வாண நகரம், 3) ஜெய் சங்கர் - காயத்ரி, இது எப்படி இருக்கு ஆகிய படங்களில். 4) எதையும் ஒரு முறை, 5) விவேக், 6) கொலை அரங்கம், 7) கொலையுதிர் காலம்.
ReplyDeleteஅப்பாடா.... நான் சரியான விடைகளைக் கண்டுபிடித்துவிட்டேன்.
ஓ.கே...ங்களா பால கணேஷ் ஐயா.
எல்லாரும் எனக்கு ஒரு “ஓ“ போடுங்கள்.
என்னை அறிவாளியாக நிருபிக்கும் சந்தர்ப்பம் அதிஷ்டம் எனக்கில்லை.ஏன்னா அருணா செல்வம் நான் சொலவந்ததையே சொல்லிட்டாங்களே
ReplyDeleteவந்தேன்ஐயா! நன்றி!
ReplyDeleteஅட லேட்டா வந்துட்டேன் போல...
ReplyDeleteநல்ல புதிர்.
நல்லதொரு பகிர்வு. இது போல் புதிர்கள் தொடரட்டும்.
ReplyDelete