Friday, February 8, 2013

மொறு மொறு மிக்ஸர் - 16

Posted by பால கணேஷ் Friday, February 08, 2013

ரு சின்னப் புதிரோட இந்த மிக்ஸரைக் கொறிக்க ஆரம்பிக்கலாம். புதிர் என்னவோ ரொம்பவே ஸிம்பிளானது..! ஒன்பதாம் நம்பரை (9) தலைகீழா எழுதினா ஆறு (6) வருமே... அதாங்க புதிரே...!

                                                                            IX

-இந்த ஒன்பதை ஒரே ஒரு கோடு மட்டும் சேர்த்து நீங்க ஆறாக மாத்தணும். அவ்வளவுதாங்க கண்டிஷன். அது எப்படி சாத்தியம்ங்கறதை யோசிங்க... தெரியாதவங்களும் பதிலை யோசிக்கற அளவுக்குப் பொறுமை இல்லாதவங்களும் மட்டும் இந்தப் பதிவோட முடிவுல இருக்கற பதிலைப் பாத்துக்கலாம்.

========================================

ல்யாணமாகி புதிதாய் வாழ்க்கையைத் துவங்கும் மாப்பிள்ளையும் பெண்ணும் வெவ்வேறு ரசனைகள் உள்ளவர்களாக, இரு துருவங்களாகக் கூட இருக்கலாம். இரண்டு பல்சக்கரங்கள் சேர்ந்துதான் ஒரு இன்ஜின் ஓட வேண்டுமென்றால் அந்தப் பல் சக்கரங்கள் உராயும் போது நெருப்புப் பொறி வராமலிருக்கவும், சரியாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், நிறைய க்ரீஸை அப்புவார்கள். 

அதுபோலத்தான்... புதிதாய்த் திருமணமான கணவன் - மனைவி ஆகிய இரண்டு பல்சக்கரங்களும் தங்களுக்குள் அன்பு என்ற க்ரீஸை நிறைய அப்பிவிட்டால் வாழ்க்கை என்ற இன்ஜின் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மிக ஸ்மூத்தாக ஓடும்!

-ஒரு திருமண வரவேற்புரையில் லேனா தமிழ்வாணன் இப்படிப் பேசக் கேட்டவர் : அடியேன்!

========================================


போன வாரத்துல ஒரு நாள் அலுவலகம் புறப்பட நேரமாயிடுத்தேன்னு அவசரத்துல கிளம்பிப் போனதால என் செல்லை மறந்து வீட்ல விட்டுட்டுப் போயிட்டேன். காலையிலருந்து இரவு வீடு திரும்பும் வரைக்கும் ஒரு காலும் அட்டெண்ட் பண்ணாம இருந்தது ரொம்பவே ரெஃப்ரெஷிங்கா இருந்துச்சு. (ஈவ்னிங் நிறையப் பேருக்கு நான் கூப்ட்டு பேச வேண்டியிருந்தது வேற விஷயம்). இனிமே மாசத்துல ஒரு நாள் நோ டி.வி., நோ செல்போன் டேயா கொண்டாடடினா என்னன்னு தோணுது. புத்தகங்கள் மட்டுமே துணையா அந்த ஒரு நாளை அமைச்சுக்கணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தோணுது?
 
========================================

ரசனாகப்பட்டவன் போர்‌க்களத்தில் எதிரியுடன் பொருது வென்று நாட்டுக்குத் திரும்பியதும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆக்‌ஞை பிறப்பி்த்தான். மந்திரி பரிவாரங்களெல்லாஞ் சேர்ந்து அவ்வுத்தரவை நிறைவேற்றுங்காலையில் வீரசாகசஞ் செய்த அனைவருக்கும் பரிசு வழங்கலானான் அரசன். படைவீரர்களில் ஒருவன் மிகுந்த கொம்மாளியிட்டுக் கொண்டு சிரித்த முகமாயிருக்கக் கண்டு, ‘‘அகோ வீரனே! மிக மகிழ்வாகவன்றோ காணப்படுகின்றனை? போரில் நீ செய்த சாகசந்தானென்ன?’’ என வினவினான்.

வீரனாகப்பட்டவன் சிரித்தபடி, ‘‘நான் எதிரிப் படை வீரர்களில் இருபது பேரின் கால்களைத் துண்டித்து விட்டேன் அரசே...’’ எனப் பதிலிறுத்தான். ‘‘ஆஹா...! நீயன்றோ என் படையிற் சிறந்த வீரன்...! மிகப்பெரும் பரிசில் தருகிறேனுனக்கு! எதிரிகளின் கால்கலைத் துண்டிக்க முயன்றதின் அதிகமாய் அவர்கள் தலையைத் துண்டித்திருக்கலாமே சிப்பாயே...’’ என அரசன் கேட்டதற்கு அவன் ரொம்பவுஞ் சோகமாய்ப் பதிலிறுத்தானிப்படி: ‘‘நான் என் செய்வேன் அரசே...! யானும் அவ்வண்ணமே விரும்பினேன். ஆயின் எனக்கு முன் எவரோ அவர்கள் தலையைத் துண்டித்திருந்தார்களே... என் செய்வேன் அரசே...!’’

========================================

ன் நண்பன் தேவேந்திர‌ே காயல் போன வாரம் வரை நன்றாகத்தான் இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்துகொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி, அப்புறம் ரேடியோ, ரெப்ரெஜிரேடர், டெரிலின் சூட் ‌கொடுக்கிறார்கள் என்று கல்யாணம் பண்ணிக் கொண்டானாம். கூடவே ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்! (நவம்பர், 1965)

ச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. சம்போ கந்தா என்பதை சம்போகந் தா என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரஸ்யமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. ‘அத்தா உனை நான் கண்டு கொண்டேன்’ என்ற ஆழ்வார் வரி, ‘அத்தான் உனை நான் கண்டு கொண்டேன்’ என்று சினிமாப் பாட்டாக மாறியது. நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கில்லை. அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள கடினத்தை நான் அறிவேன். (ஜனவரி, 1967)

ந்த இதழின் மற்றொரு பக்கத்தில் சுஜாதாவின் ‘6961’ என்ற கதை ஆரம்பிக்கிறதாம். இதற்கு என்ன இத்தனை அல்லோலம்? வருகிறது, வருகிறது என்று இரண்டு மாதமாகப் பயங்காட்டி புதுமை, புரட்சி, அது இது என்று புரளி பண்ணி- எனக்கு என்னவோ இந்த எழுத்தாளரை சற்று அதிகமாகவே தூக்கி வைக்கிறார்கள் என்று படுகிறது. இதில் ஒரு ஆபத்து- அதிகமாக உயர, உயர இறுதியில் கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கும். இந்த எழுத்தாளரை சமீபத்தில் நான் சந்தித்த‌ேபோது நடந்த சம்பாஷனையில் I had the last word:-

அறிமுகப்படுத்தியவர் : ‘‘இவர்தான் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’’.  *  சுஜாதா: ‘‘அப்படியா... சந்தோஷம். இவர்...’’  *  அறி: ‘‘இவர்தான் கணையாழியில் நீர்க்குமிழிகள், கடைசிப் பக்கம், பெட்டி எல்லாம் எழுதுகிறவர்’’.  *  சுஜாதா : ‘‘அப்படியா? நான் படித்ததில்லை!’’  *  நான் : ‘‘நானும் உங்களுடைய கதைகளைப் படித்ததில்லை.’’  *  சுஜாதா: ‘‘You haven't missed much’’  *  நான்: ‘‘But you have’’. (ஆகஸ்ட் 1969)

-‘நீர்க்குமிழிகள்’ நூலில் சுஜாதா எழுதியவை. (இதில் குறிப்பிட வேண்டிய சுவாரஸ்ய விஷயம் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்பதும் அவரே. சில காலத்தின் பின் சுஜாதாவே அதை வெளிப்படுத்தி வி்டடார். சுஜாதாவைத் தவிர தி.ஜானகிராமன் ‘ஆண்டாளு அம்மாள்’ என்ற பெயரிலும, இந்திரா பார்த்தசாரதி ‘பரகால ஜீயர்’ என்ற பெயரிலும் சில காலம் கணையாழியின் கடைசிப் பக்கங்களை எழுதியிருக்கிறார்கள் என்பது உபரித் தகவல்)

========================================

ரைட்டு... இப்போ அந்தப் புதிரோட விடைக்கு வரலாம். ஒரு கோடு சேர்த்து இப்படி எழுதினீங்கன்னா...
                                                                 SIX

-ஒன்பது இப்ப ஆறா ஆகிடுச்சு இல்லீங்களா... என்ன... என்ன... முறைக்கறீங்க? நான் ஒரு கோடு சேக்கணும்னு சொன்னேனே தவிர, அது நேர்கோடா இருக்கணும்னு எப்பங்க சொன்னேன்...? அதான் ஒரு வளைகோடு சேர்த்து ஆறாக்கிட்டேன். ஹி... ஹி...


72 comments:

  1. மிக்ஸர் வழக்கம் போல மொறு மொருவென்று இருந்தது பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரி்ன சுவையை ரசித்த நண்பருக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  2. மொறு மொறு மிக்ஸர் அருமை.... நானும் முயற்சிக்கிறேன், மாதம் ஒருநாள் போன் இல்லாமல்....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப கஷ்டமாத் தெரியும் ஆரம்பத்துல. ஆனா பழகிட்டா ரசிக்க ஆரம்பிச்சுடுவோம் அதை. ட்ரை பண்றேன்னு சொன்ன ஸ்கூல் பையனுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  3. ////ஒன்பது இப்ப ஆறா ஆகிடுச்சு இல்லீங்களா... என்ன... என்ன... முறைக்கறீங்க? நான் ஒரு கோடு சேக்கணும்னு சொன்னேனே தவிர, அது நேர்கோடா இருக்கணும்னு எப்பங்க சொன்னேன்...? அதான் ஒரு வளைகோடு சேர்த்து ஆறாக்கிட்டேன். ஹி... ஹி...
    ////என்ன ஒரு அறிவு சூப்பர் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. என்னோட சூப்பர்(?) ப்ரெய்னைப் புரிஞ்சுக்கிட்ட ராஜ்க்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  4. மிக்ஸர் சுவை தூக்கல்தான்.

    போன வாரத்துல ஒரு நாள் அலுவலகம் புறப்பட நேரமாயிடுத்தேன்னு அவசரத்துல கிளம்பிப் போனதால என் செல்லை மறந்து வீட்ல விட்டுட்டுப் போயிட்டேன். காலையிலருந்து இரவு வீடு திரும்பும் வரைக்கும் ஒரு காலும் அட்டெண்ட் பண்ணாம இருந்தது ரொம்பவே ரெஃப்ரெஷிங்கா இருந்துச்சு. (ஈவ்னிங் நிறையப் பேருக்கு நான் கூப்ட்டு பேச வேண்டியிருந்தது வேற விஷயம்). இனிமே மாசத்துல ஒரு நாள் நோ டி.வி., நோ செல்போன் டேயா கொண்டாடடினா என்னன்னு தோணுது. புத்தகங்கள் மட்டுமே துணையா அந்த ஒரு நாளை அமைச்சுக்கணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தோணுது?
    //அப்ப நோ கம்பியூட்டர் டே இல்லையா???

    உங்கள் நண்பர் செய்த திருமணம்..ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா... ஒரு நாள் புத்தகங்கள் மட்டும் துணையிருக்க எல்லாத்துலயும் ஒதுங்கியிருக்கணும்கறது இப்ப என் விருப்பம். அப்புறம்... அந்தக் கல்யாணம் செஞ்சுககிட்டவரு என் நண்பர் இல்ல.. சுஜாதா எழுதினது அதுங்கறதால அவர் நண்பர். எப்படியிருப்பினும், மிக்žஸரின் சுவையை ரசி்ச்ச தங்கைக்கு இதயம் நிறை நன்றி!

      Delete
  5. அச்சக தவறை விடுங்கள்... பதிவில் எழுத்துப் பிழைகளை என்ன சொல்வது...? (உங்களது அல்ல)

    மனம் நோகாமல் எடுத்துரைத்தாலும், இடப்பட்ட என் கருத்துரையையே நீக்குவது...

    இதில் தமிழ் வளர்க்கும் (எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சிப்பவர்கள் உட்பட...) பல பேரின் பட்டியலே உள்ளது...

    கால்களை துண்டிக்கும் பல பேர்களை தினம் தினம்...
    - சந்திக்கிறேன்-தொழிலில்...
    - படிக்கிறேன்-பதிவுகளில்...(கால்களை மட்டுமல்ல)

    ReplyDelete
    Replies
    1. விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ளும் திறன் பலரிடம் இல்லை தனபாலன். அதைப் புறந்தள்ளுங்கள். இழப்பு அவர்களுக்கே! கால்களைத் துண்டிப்பது மட்டுமல்ல... தமிழைச் சரியாக எழுதுகிறேன் பேர்வழி என்று தவறான இடங்களில் ஒற்று போட்டு கொல்பவர்களும் உண்டு. என்ன செய்ய? ரசித்துப் படி்த்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  6. மிக்செரில் எ அ இ ரசித்தேன்.. யார் எழுதியது என்று சொலவில்லையே வாத்தியரே...கணையாழி கடைசி பக்கத்தில் சுஜாதாவைத் தவிர மற்றவர்களும் எழுதி உள்ளார்கள் என்பது எனக்கு புதிய தகவல்..

    மன்னர் காலத்து ஜோக் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. எல்லா அம்சங்களும் இனிமையா? நன்றி! மன்னர் காலத்து ஜோக்கையும் ரசித்த உனக்கு என் இதய நன்றி!

      Delete
  7. மிக்ஸர் நல்ல மொறு மொறுப்பு.

    //இனிமே மாசத்துல ஒரு நாள் நோ டி.வி., நோ செல்போன் டேயா கொண்டாடடினா என்னன்னு தோணுது.//

    மிகவும் நல்ல விஷயம். முயற்சி செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா நான் செய்யப் போறேன் இனிமே. மிக்ஸரின் மொறுமொறுப்பை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  8. திருமணம் ஆகும் வயதில் இருபவர்களுக்கு நல்ல அட்வைஸ்!!

    மொபைல் மறந்து வச்சுட்டு வந்ததால இருந்திருப்பீங்க.. பக்கதுல வச்சிட்டே உபயோகபடுதாம இருக்கறது ரொம்ப கஷ்டம் சார்... ஆனாலும் நல்ல விஷயம் தான் ஒரு நாள் மொபைல் இல்லாம இருக்கறது...

    வலைகொடு...போங்க சார் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!!! காலைல மண்ட காஞ்சிடிச்சி!!

    ReplyDelete
    Replies
    1. லேனாவின் அட்வை‌ஸை ரசித்து, புதிரில் மண்டை காய்ந்த போதும் மிக்ஸரைப் பாராட்டின சமீராவுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. மொபைல் இல்லாமை நல்லது. நான் எப்போதும் மொபைலை வீட்டில் வச்சுட்டுத்தான் போவேன் இந்தியப்பயணம் தவிர்த்து:-)))

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். இதை இனி ட்ரை பண்ணிப் பாத்துர வேண்டியதுதான். மிக்க நன்றி டீச்சர்!

      Delete
  10. சாருக்கு ஒரு அவார்டு முறுகலா ஒண்ணு, கொஞ்கம் கெட்டி சட்னி சொல்லு

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வரீங்க நண்பா? வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  11. -ஒரு திருமண வரவேற்புரையில் லேனா தமிழ்வாணன் இப்படிப் பேசக் கேட்டவர் : அடியேன்!

    கேட்டவ'ர்'.... அடியே'ன்'?

    கேட்டவன் அடியேன் அல்லது கேட்டவர் அடியேர் போட்டுருக்கலாமோ??? :)

    ReplyDelete
    Replies
    1. யப்பா... என்னமா யோசிக்கறீங்கப்பா? கேட்டவர் என்று நம்மை நாமே மரியாதையாக அழைத்தால்தானே மற்றவர் மதிப்பர்? அடியேன் என்பதும் மரியாதைவிகுதிதான் சிவா. ஸ்டாலிர் என்று போடமுடியாததால் ஸ்டாலின் என்று போடுகிறோமே... அதைப்போல அடியேன் என்பதே சரிதான்.

      Delete

  12. // புத்தகங்கள் மட்டுமே துணையா அந்த ஒரு நாளை அமைச்சுக்கணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தோணுது?//

    அன்னைக்கி மட்டும் உங்க டி.வி, மொபைலை எங்களுக்கு இலவசமா தாங்கன்னு சொல்ல தோணுது. வேறென்ன தோணும்?

    ReplyDelete
    Replies
    1. குடுத்துட்டாப் போச்சு.... டி.வி.ய மொத்தமா வேணும்னாலும் குடுத்துரலாம்... மொபைல மட்டும் திருப்பி வாங்கிக்குவேன். ஹி... ஹி... ரசித்துக் கருத்திட்டமைக்கு இதயம் நினற ந்னறி சிவா.

      Delete

  13. சீனு well said...

    //.கணையாழி கடைசி பக்கத்தில் சுஜாதாவைத் தவிர மற்றவர்களும் எழுதி உள்ளார்கள் என்பது எனக்கு புதிய தகவல்..//

    பயபுள்ள பால கணேஷ் அண்ணாத்தை கூட சேந்து கணையாழி, சுஜாதான்னு பேசிட்டு திரியுது. தப்பாச்சே!

    ReplyDelete
    Replies
    1. பயபுள்ளயத் திருத்தலாம்னு எதும் முயற்சிக்காதீங்க சிவா. வருங்கால தீவிர(இலக்கிய)வாதியை இழந்துடும் எழுத்துலகம். ஹி... ஹி...

      Delete
  14. எனக்கு புத்தகத்தை தவிர வேற துணை எதுவும் வேண்டாம். மிக்சர் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தென்றலும் நம்ம டைப்தான்னு முதல்லயே தெரியும் எனக்கு. மிக்ஸரை ரசித்த உனக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  15. Replies
    1. உங்களின் ரசிப்பு என் எழுத்தை வளமாக்குகிறது. என் இதயம் நனறி ஜெ!

      Delete
  16. Replies
    1. சுருக்கமான வார்த்தையில் ரசித்ததை அழகாகக் கூறி எனக்கு அளவற்ற உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. நல்ல சுவையான மிக்சர்...

    கோபத்துல ஒன்றிரண்டு முறை நாள் முழுவதும் மொபைலை ஆஃப் பண்ணி வெச்சிருக்கேன். நல்லா தான் இருந்தது....:)) தொடரலாம் போல இருக்கே.....கோபத்தை அல்ல...:))

    ReplyDelete
    Replies
    1. கோபம் வேண்டாம், அமைதியைத் தொடர்வோம் நாம். மிக்žரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  18. மாதமொரு இல்லை.. தினமுமே நான் போனை கண்டு கொள்வதே இல்லை. எப்போதும் சைலண்ட் மோடில் இருக்கும். நிம்மதியாக இருப்பேன். என் தோழிகளும் தொல்லை தராமல் தகவல் என்றால் மெசேஜ் அனுப்பி விடுவார்கள்.புத்தகம் நல்ல சாய்ஸ்!

    மொறு மொறு மிக்சர் கொறிக்க சுவை!

    ReplyDelete
    Replies
    1. பேசினால் பேசிக்கொண்டே இருப்பவர்களிடமிருந்து தப்பிக்க....நல்ல யோசனையாக இருக்கிறதே...

      Delete
    2. ஆமாம் அன்பு... எனக்கும் இது நல்ல வழியென்றே படுகிறது. மிக்க நன்றி டீச்சர் உஷா மேடம்!

      Delete
  19. ஒரு நாள் நோ மொபைல் நல்ல முடிவு. சுற்றியிருப்பவர்களை கவனித்தால் ஒரு பதிவு எழுதலாம்!

    திருமணம் பற்றிய லேனா அவர்களின் உரை பிரமாதம்.

    மொறுமொறுப்பாக, சுவையான மிக்ஸர்!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  20. லேனா அவர்களின் உரை நன்று.
    கால்களை வெட்டியது - என்னே ஒரு மா வீரம் !!??
    சுவை.

    ReplyDelete
    Replies
    1. லேனாவின் உரையையும் நகைச்சுவையையும் ரசித்து மிக்ஸரைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. நகைச்சுவையையும் லேனாவின் உரையையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  21. அச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. நிறைய ஹோட்டல்கள்ல ‘ஆனியன தோசை’ய ‘ஆணியன் தோசை’னு எழுதியிருக்கறத பாத்து சிரிச்சிருக்கேன். நீங்களும் கவனிச்சா பல இடங்கள்ல சிரிக்கலாம். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  22. கரகர மொறுமொறு மிக்சர் சுவையோ சுவை...

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸžரின் சு‌வையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  23. அண்ணா, வணக்கம்! வழக்கம் போல மிக்ஸர் செம டேஸ்ட்! ஒன்பதை ஆறாக மாற்றும் புதிரும், மாசத்தில் ஒருநாள் செல்ஃபோன், டி வி ஆஃப் டேயும் செம கலக்கல்!

    ReplyDelete
    Replies
    1. எல்லா அம்சங்களையும் ரசித்த மணிக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  24. சுவையான மிக்சர். செல்போன் இல்லாத நாள் நல்ல ஐடியா. சிகரட்டை விட முதலில் கஷ்டப் படுவோமே, அதற்கு ஒப்பானது. பழகி விட்டால் சுகம்தான்!

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் ஸ்ரீராம். அந்த தினம் செல் இல்லாமல் இருந்தது என்னவோ போல இருந்தாலும் அப்புறம் அது இனிமையாக்த் தோன்றியது. சரியான உவமை சொன்னீங்க. மிக்க நன்றி!

      Delete
  25. அந்தக் கால்வெட்டி வீரன் கதை சூப்பர்! :-)

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கொடும் தமிழையும் தாண்டி நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  26. புதிரை படிச்ச அடுத்த நொடியே பதில் தெரிஞ்சு போச்சு. ஏன்னா இந்த புதிர் எனக்கு ஏற்கெனவே தெரியும். ஹிஹிஹிஹி.....

    மிக்ஸர் சுவையா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் சுவாமி சுகபோதானந்தாவின் ‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ படிச்சிருக்கீங்களா மீனாக்ஷி? அதுலருந்து தான் புதிரை சுட்டேன். மிக்ஸரை ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
    2. 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' வார இதழ்ல வந்த போதே விடாம படிச்சிருக்கேன். அது ரொம்ப ரொம்ப பிடிச்சு போய் புத்தகமா வெளிவந்த போது வாங்கிட்டேன். ஆனா இது அதுல படிச்சதா நீங்க சொல்லிதான் நினைவு வரது. :)

      Delete
  27. சுஜாதா தகவல் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் நிறை நன்றி அழகு!

      Delete
  28. மொறு மொறு மிக்சர் சுவை மிக அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  29. அனைத்துச் செய்திகளும் அருமையாக இருந்தது.
    முக்கியமாக “கால் வெட்டி” கதை.

    இந்திரா காந்தியின் கணவர் மிகவும் நல்லவாரக
    இருந்திருக்கிறார்... அவர்கள் 11 பெற்றிருந்தால்...!!!
    யோசித்துக்கொண்ண்ண்டே இருக்கிறேன் பால கணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இந்திராகாநதி அம்மையார் நிறையப் பிள்ளைகள் பெற்றிருந்தால் இந்திய சரித்திரம் மாறியிருக்கும் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. கால்வெட்டி கதையையும் மற்ற பகுதிகளையும் ரசித்திட்ட உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  30. புதிரை ரசித்..தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து்ப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நட்பே!

      Delete

  31. சுவை மிகுதி!

    ReplyDelete
    Replies
    1. சுவையை ரசித்த உங்களுக்கு மனம் நிறை நன்றி!

      Delete
  32. அனைத்துமே சுவையாக இருந்தது.
    திருமண ஜோக் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  33. அருமை லேனா தமிழ்வாணன் கருத்து அதைப் பகிர்ந்ததுக்கு நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. கருத்தை ரசித்து மகிழ்ந்த தம்பிக்கு ம்கிழ்வுடன் என் நன்றி!

      Delete
  34. சுவையான மிக்சர்....

    சுஜாதா - சுஜாதா தான்....

    ReplyDelete
  35. Converting nine into six beyond one's imagination. No TV day and no mobile day very nice idea but very difficult to follow at least in case of mobile. Regarding war news, the same snippet appeared in a different style i.e. when soldiers who have lost the legs they were crying for which the king said when the soldiers who have lost their heads, they keep silent and why you are crying for losing the legs.

    ReplyDelete
  36. புதிரை நான் கண்டுபுடிச்சிட்டேன்.
    சுவையான மிக்சர்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube