Wednesday, February 6, 2013

தெரியுமா இவரை...! - 2

Posted by பால கணேஷ் Wednesday, February 06, 2013

                 ஸோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda)

1906 நவம்பர் 17ல் ஜப்பானில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் தந்தைக்கும், நெசவாளியான தாய்க்கும் பிறந்த சோய்சிரோ ஹோண்டோவின் இளமைப் பருவத்தில் குறிப்பிடும்படி ஒன்றுமில்லீங்க. இளைஞன் ஹோண்டா வசதிக்குறைவாக இருந்தாலும் என்னைப் போல மிகத் திறமைசாலியாக இருந்தாருங்கோ. (ஹி... ஹி...) தன் 15வது வயதிலேயே படிப்பை நிறுத்திட்டு... (அவரா எங்க நிறுத்தினாரு? அது மண்டைல ஏறாததால விட்டுட்டாரு) வேலை தேடி டோக்கியோ வந்தாரு.

ஒரு காரேஜில் மெக்கானிக்காகச் சேர்ந்து தொழில் கத்துக்கிட்டாரு. காங்கிரசும் கோ்ஷ்டிப் பூசலும் மாதிரி எதையும் ஆராய்ஞ்சு பாக்கறது அவரோட இணைஞ்ச தனிக்குணம். மோட்டார் பைக்குகளை அக்கக்கா பிரிச்சு மறுபடி சேர்க்கற அளவுக்கு தொழில் கத்துக்கிட்டாரு. அங்க ஆறு வருஷம் வேலை பாத்தாரு. அப்புறமென்ன...  தனிக்கட்சி ஆரம்பிக்க... ச்சே... தனியா ஆட்டோமோபைல் ஆரம்பிக்கணும்னு அங்கருந்து விலகினாரு. ஆறு வருஷம் கழிச்சு தன் 22வது வயதில் 1928-ம் ஆண்டு தனியாக ஆட்டோமொபைல் காரேஜ் வைத்து நடத்த ஆரம்பிச்சுட்டாரு.

ஹோண்டா தனக்கிருந்த ஆராய்ச்சி அறிவின் காரணமாக, ஒரு பிஸ்டனைக் கண்டுபிடிச்சிருந்தாருங்க. அதை கார்கள்ல பொருத்தினா வேகமாக இயங்க உதவுவதுடன், எரிபொருள் சேமிப்புக்கும் உதவுவதை டெஸ்ட் பண்ணிப் பாத்து தெரிஞ்சுக்கிட்டாரு. அதை டொயோட்டோ கம்பெனியில் வித்துரணும்னு விரும்பி அணுகினார். மிகப்பெரிய நிறுவனமான டொயோட்டோவின் இன்ஜினியர் குழுவைச் சந்தித்து தன் பிஸ்டனைப் பற்றி விளக்க முயற்சி பண்ணினாரு.
இவர் மிஸ்டர் ஹோண்டா.

அந்த இன்ஜினியருங்க எல்லாம் இவர் சொல்றதை காது கொடுத்துக் கேக்கவே தயாராயில்லை. சிலர் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. சிலர் உஷாரா விழாம சேரைப் புடிச்சுக்கிட்டு உக்காந்துட்டு சிரிச்சாங்க. அப்புறம், ‘‘போய் புள்ளைகுட்டிங்களைப் படிக்க வைய்யா...’’ என்று அவரை அவமானப்படுத்தி விரட்டினாங்க.

தன் முயற்சியில சற்றும் மனம் தளராத.... விக்கிரமாதித்தனில்லை, ஹோண்டா மீண்டும் மீண்டும் டொயோட்டாவின் மீது படையெடுத்தாருங்க. ஒரு வாரமில்ல... ஒரு மாசமில்ல... ஒரு வருஷம்! கடைசில இன்ஜினியர் குழு இவர் சொல்றதுக்கு காது குடுத்தது (வேற என்னத்தப் பண்ண? இவர் தொல்லை விட்டா சரின்னுதான்...). இவர் பொறுமையா தன் பிஸ்டனோட சிறப்பம்சங்களை விளக்கி டெமோ காட்டவும் அசந்துட்டாங்க. மேலிடத்துல பேசி, அவருக்கு பிஸ்டன் தயாரிச்சுத் தர்ற கான்ட்ராக்ட் தந்தாங்க.

இங்கதாங்க ஆரம்பிக்குது ‌ஹோண்டாவின் வியக்க வைக்கும் ‘விஸ்வரூப’க் கதை! பிஸ்டன்கள் தயாரிக்கறதுக்காக ஒரு ஃபாக்டரியை நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு ஹோண்டா. ஃபாக்டரி முக்கால்வாசி கட்டப்பட்ட நிலையில தானா இரண்டாம் உலகப் போர் ஏற்படணும்? அதுல ஜப்பான் மீது வீசப்பட்ட பல குண்டுகள்ல ஒண்ணு சரியா இவர் ஃபாக்டரி மேலயா விழுந்து வைக்கணும்? முற்றிலுமாக அழிஞ்சு போனது ஃபாக்டரி. ஹோண்டா கொஞ்சம் அப்செட்டானாருங்க...

ஆனாலும் மனம் தளராம மறுபடி பணம் திரட்டி, ஃபாக்டரியை மீண்டும் நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு. இந்த முறை ஃபாக்டரி முழுமையாக உருவெடுத்து, இன்னும் ரெண்டு நாள்ல உற்பத்திய ஆரம்பிச்சுடலாம்னு இருக்கற சூழ்நிலையில வந்துச்சுங்க அடுத்த சோதனை. ஜ்ப்பானுக்கு அடிக்கடி விருந்தாளியா வந்து பாடாப் படுத்தற நிலநடுக்கம் ஏற்பட, ஹோண்டாவோட ஃபாக்டரி முழுவதுமா இடிஞ்சு விழுந்துடுச்சு.

அடுத்தடுத்து இப்படி மெகா சோதனைகளை சந்திச்சிருந்தா நாமளாயிருந்தா, ‘கடவுளே நீ இல்ல. ஆனா இருந்தா நல்லாயிருக்கும்’னு கடவுளைத் திட்டியிருப்போம். இல்லாட்டி, மனசு உடைஞ்சு போயி, பாருக்கோ, டாஸ்மாக்குக்கோ ஓடியிருப்போம். அங்கதான் நிக்கிறாரு ஹோண்டா. மனசைத் தேத்திக்கிட்டு, தன் நண்பர்கள், தெரிந்தவர்களிடமெல்லாமிருந்து பணம் திரட்டி, தன்கிட்ட இருந்த சொற்ப சொத்துக்களையும் வித்து மீண்டும் ஃபாக்டரியை எழுப்பினாரு. இவ்வளவுக்கப்புறம் இவரை இயற்கை சோதிக்கலை. இந்த முறை ஃபாக்டரி முழுசா தயாராச்சு.

உற்பத்தி ஆரம்பிச்சு, டொயோட்டோ கம்பெனிக்கு பிஸ்டன்கள் சப்ளை பண்ண ஆரம்பிச்சாரு. சில காலம் கழிச்சு தன் கம்பெனியை 450,000 யென்னுக்கு டொயோட்டோ நிறுவனத்து கிட்டயே வித்துட்டாருங்க. அந்தப் பணத்தை வெச்சு 1946-ல ‌‘ஹோண்டா டெக்னிகல் ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட்’ங்கற நிறுவனத்தை ஏற்படுத்தினாரு. அதன் பின்னர் 1948ம் ஆண்டுல ‘ஹோண்டா மோட்டார் கம்பெனி’ தயாரிச்ச மோட்டார் பைக்குகள் விற்பனைக்கு வந்தன.

இது ஹோண்டா கம்பெனி பைக்!
அப்புறமென்னங்க... அண்ணாமலை ரஜினி அப்படியே லிஃப்டில ஏறுற நேரத்துல வாழ்க்கைல மேல ஏறுவாரே... அதுமாதிரி தாங்க... அதுக்கப்புறம் ஹோண்டாவோட பிரம்மாண்டமான வளர்ச்சி நிறுத்த முடியாததாயிடுச்சு. ஒரு கட்டத்துல டொயோட்டோவையே மிஞ்சி கார் சந்தையில முத்திரை பதிச்சது ஹோண்டா நிறுவனம். இன்னிக்கு இன்டர்நேஷனல் மார்ககெட்டில ஹோண்டா நிறுவனத்தின் கார்களும், பைக்குகளும் என்ன மதிப்பில இருக்குங்கறது உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச விஷயம். 

1973ம் ஆண்டு ரிடையராகும் வரை ஹோண்டா நிறுவனத்தின் பிரஸிடெண்ட்டா இருந்த அவர், அதன் பி்ன், ‘சுப்ரீம் அட்வைஸர்’ என்கிற உச்சப் அந்தஸ்துல ஹோண்டா நிறுவனத்துல தொடர்ந்தார். 'PEOPLE' பத்திரிகை 1980ல் அவரை '25 Most Intriguing People of the Year' என்ற பட்டியல்ல முதலிடம் அளிச்சும், ‘ஜப்பானியர்களின் ஹென்றிபோர்ட்’ என்று புகழ்ந்தும் கெளரவிச்சது. கல்லீரல் செயலிழந்ததன் காரணமா 5, ஆகஸ்ட்1991ல ஹோண்ட காலமானாரு.

போண்டான்னா விரும்பிச் சாப்பிடற நாம எல்லாரும் இந்த ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...?

46 comments:

  1. நீங்க சொல்வதுக்கு முன்னேயே நான் ஹோண்டா இருசக்கர வாகனத்தை வைத்துள்ளேன்.ஹி..ஹி..

    ReplyDelete
    Replies
    1. அடராமா...! நான் ஹோண்டாவோட தன்னம்பிக்கை, தைரியத்தை வாங்குவீங்கன்னு பாத்தா... நீரு பைக்கை வாங்கிட்டீரே... ஹா... ஹா... மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. முயற்சி திருவினை ஆக்கும்! என்பதற்கு , இவர் ஓர் எடுத்துக்காட்டு

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா... முயற்சியில் தளராத இந்த மனிதரின் வாழ்க்கை நமக்கு முன்னுதாரணம். ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  3. // போண்டான்னா விரும்பிச் சாப்பிடற நாம எல்லாரும்....//

    இந்த உள்குத்து தானே வேணாங்குறது? இப்போ நான் போட்டிருக்கிற இடுகையிலே ராயர் கஃபே போண்டாவைப் பத்தி எழுதினா, அதை நக்கலடிக்கிறதா? அடுத்த வாட்டி மீட் பண்ணும்போது ஒரு ப்ளேட் போண்டா வாங்கித் தந்தே தீரணும்!

    ஹோண்டாவைப் பத்தித் தெரியாட்டியும், நானும் ஹோண்டா தான் வைச்சிருக்கேன். நான் ஆக்டிவா இருக்கேனோ இல்லையோ, என் வண்டி பேரு ஆக்டிவா! :-)

    நக்கலும் நையாண்டியும் கலந்து ஒரு சாதனையாளரைப் பத்தி படுசுவாரசியமா எழுதியிருக்கீங்க கணேஷ்! உங்க அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. அட... உள்குத்து எதும் இல்லீங்ணா... நம்புங்கோ... ஆனா உங்களுக்கு போண்டா கண்டிப்பா உண்டு. ஆக்டிவா இல்லாட்டியும் நீங்க வெச்சிருக்கறது ஆக்டிவாவா? ஹா... ஹா... கருத்துல கூட நகைச்சுவை அள்ளித் தெளிக்க உங்களால மட்டும்தாங்ணா முடியும். மிக்க நன்றி!

      Delete
  4. எத்தனை தடை வந்தாலும் முயற்சியை தளர விடாமல் உழைத்தால் முன்னேற்றம் உண்டு என்பதற்கான ஒரு உதாரண மனிதனை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி பால கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. உதாரண மனிதரின் கதையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்!

      Delete
  5. அவரோட தளராத மனம் நம்மை தளர எல்லாம் வைக்குது.
    ஒரு பெருமையான மனிதரை பற்றிய
    அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... இரண்டு முறை தன் முயற்சி தரைமட்டமான போதும் விடாத தன்னம்பிக்கை, தைரியம்..! தெரிஞ்சுகிட்டப்ப என்னை அசர வெச்சது. உங்களயும் அசத்தினதுல மகிழ்ச்சி. மிக்க நன்றி!

      Delete
  6. என்ன ஒரு மன உறுதி...!

    என்ன ஒரு நகைச்சுவையான எழுத்து நடை...!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அந்த மனிதரோட மனஉறுதியை வியந்ததோட நில்லாம, என் எழுத்து நடையையும் பாராட்டியிருக்கற நண்பர் டி.டி.க்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ்!

      Delete
  7. சோய்சிரோ ஹோண்டோ தைரியமும் தன்னம்பிக்கையும் உழைப்பும் வியத்தக்கது.தொடர்ந்து பிரபலங்களைப்பற்றி எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய ஆச்சரிய மனிதர்களைப் பற்றி எழுதணும்னு ஆசைம்மா. நீங்கல்லாம் உற்சாகம் தர்றதால நிச்சயம் தொடர்கிறேன். மிக்க நன்றி!

      Delete
  8. இடியே ஆனாலும் தாங்கிக் கொள்ளும் இதயம்.... மிஸ்டர் ஹோண்டா..! உறுதி மட்டும் மாறாம இருந்தா உச்சியில் நிக்கலாம்னு சீரியஸா சொல்லாம சிரிச்சிகிட்டே சொல்லிட்டிங்க..!

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கைச் சரிதத்தை சொல்றப்ப, நகைச்சுவை கலக்கறது சாம்பார்ல பாயசம் கலந்த மாதிரி ஆயிடுமோன்னு ஒரு பயம் இருந்துச்சு. நீங்க ரசிச்சதுல நிம்மதியாச்சு மனசு. மிக்க நன்றி!

      Delete
  9. //போண்டான்னா விரும்பிச் சாப்பிடற நாம எல்லாரும் இந்த ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...?//

    மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க, கணேஷ். ஹோண்டோ பற்றிய தகவல்கள் அருமை.உங்க நடையில் அது மேலும் சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ராம்வி மேடம்! தன்னம்பிக்கை மனிதரை ரசிச்சதோட நில்லாம என் எழுத்து நடையயும் நல்லா இருக்குன்னு நீங்க சொன்னதுல என் தன்னம்பிக்கை ரொம்பவே கூடிப்‌போச்சு. மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  10. தெரிந்த பெயர். அவரைப்பற்றின தகவல் அறியாதது. தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அறிந்து கொண்டு ரசித்ததில் மிக்க மனநிறைவு கொண்டு என் நன்றி!

      Delete
  11. இப்போது தான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி நட்பே.

    ReplyDelete
    Replies
    1. தென்றலின் வருகைக்கும் ரசிப்புக்கும் என் மனம் நிறை நன்றி!

      Delete
  12. // இந்த ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...? //


    அதையே தான் நெனைக்குறோம்.....

    ReplyDelete
    Replies
    1. நான் நினைத்ததையே ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. தடைகளை தகர்த்தெறிந்த தன்னம்பிக்கை நாயகன் ஹோண்டாவிற்கு ஒரு சல்யூட்! நல்லதொரு தன்னம்பிக்கை பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தடைகளைத் தாண்டி வென்ற தன்னம்பிக்கை மனிதனை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. சுருக்கமான அதே நேரத்தில் சுவையான வரலாறு!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. அயராத முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என நிரூபித்துக் காட்டிய மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்து மிக்க மகிழ்ச்சி....

    நகைச்சுவையோடு உங்கள் பாணியில் சொல்லிச் செல்வதால் வரலாறு படிக்கும் போது ஏற்படும் தொய்வு இல்லை! :)

    ReplyDelete
    Replies
    1. தொய்வின்றி இருக்கிறது என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி நண்பரே!

      Delete
  16. //ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...?//
    வேறென்ன நினைக்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. ஹா.... ஹா... குட்டன் ஸ்டைல் பதில் அருமை! ஆமோதித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  17. மிகவும் ரசித்துப் படித்தேன். ஏற்கனவே டிட்பிட்டாக இங்கும், அங்குமாக ஹோண்டா அவர்களைப் பர்றிப் படித்திருக்கிறேன். இந்த ஹாஸ்ய நடை படிக்கப் பிடிக்காதவர்களையும் படிக்க வைக்கும். வரட்டுத்தனமாக வாழ்க்கை வரலாற்றை படிப்பது சாபம். இந்த வரலாறுகளை, இன்னும் சிறிது விஸ்தரித்து தொகுத்து பிரசுரியுங்கள்; சிறுவர்களுக்கும் படங்களுடன் தனிப் பதிப்பாக வெளியிடுங்கள். வாழ்த்துக்கள். - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜெ. இன்னும் சற்று விஸ்தாரமாக எழுதி புத்தகமாக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் இந்தப் பகுதியைத் துவக்கியுள்ளேன். நீங்களும் அதையே குறிப்பிட்டது மகிழ்ச்சி. படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  18. அசாத்திய தன்னம்பிக்கை, விடாமுயற்சியோடு சாதனை புரிந்த மாமனிதர் ஹோண்டாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி கணேஷ். நமக்கு உண்டாகும் பிரச்சனைகள் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்னுமளவுக்கு அவரது வாழ்க்கை நல்ல படிப்பினையைப் புகட்டுகிறது. ஒரு அற்புதமான பதிவைத் தந்ததோடு, அதை உங்களுடைய தனிப்பட்ட தேர்ந்த நடையில் தந்து மனத்தில் பதியவைத்துவிட்டீர்கள். நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. சிறு இடைவெளிக்குப் பின்ன உங்களை இங்க பாக்கறதுல ரொம்ப மகிழ்‌ச்சி. இந்தத் தன்னம்பிக்கை மனிதரின் சரிதத்தை ரசித்து என்னைப் பாராட்டி மகிழச் செய்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  19. //போண்டான்னா விரும்பிச் சாப்பிடற நாம எல்லாரும் இந்த ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...?//

    நாங்கல்லாம் சொல்ல மாட்டோம். ஏற்கனவே ஆக்டிவா வாங்கி செயல்ல காமிச்சாச்சே :-))))

    ReplyDelete
    Replies
    1. அட்வான்ஸாக செயலில் இறங்கியுள்ள நீங்களும் ஒரு உந்துசக்திதான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  20. ஒருத்தரோட வாழ்க்கை வரலாற்ற தொய்வில்லாமல், படிகறவங்களுக்கு சலிப்பு ஏற்படாம எழுத உங்க கிட்ட தான் சார் கத்துக்கணும்!!

    ஹோண்டா - நிறுவனரோட உழைப்பு மிக பெரியது.. ஜப்பானியர்கள் அயராத உழைப்பு எடுத்துகாட்டுகள்!!! அதை அழகா நகைசுவையோட பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. சலிப்பு ஏற்படாம, நகைச்சுவையோட பகிர்ந்திருக்கேன்னு சொல்லி எனக்கு ஒரு பாட்டில் க்ளூகோஸ் தந்திருக்க சமீரா. மிக்க நன்றிம்மா.

      Delete
  21. Soichiro Honda once said: “Many people dream of success. I believe that success can be achieved only through repeated failure and self-analysis. Success is only one percent of your work, and the rest – bold overcoming of obstacles. If you are not afraid of them, success will come to you itself”.
    Today’s prosperity of Honda Motor Co., Inc. proves the truth of its founder.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...! ஹோண்டா சொல்லியிருப்பது அட்சர லட்சம் பெறும். அருமையான வரிகள்! முன்பே தெரிஞ்சிருந்தா பதிவில சேர்த்திருப்பேனே... எடுத்துச் சொன்ன உங்களுக்கு மிகமிக மகிழ்வோட என் நன்றி சங்கரி மேடம்!

      Delete
  22. விடாமுயற்சிக்கு எப்போதுமே பலன் கிட்டும் என்பதை ஹோண்டா இனி எங்கு கண்டாலும் எனக்கு நினைவூட்டும் சார் ... கருத்துன்னா அது கவியாழி தான் சார்

    ReplyDelete
    Replies
    1. ஹோண்டா பற்றிய பகிர்வை ரசித்து, நம் பதிவுலக பவர் ஸ்டாரின் கருத்தையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. Very good biography. I have also heard about the biography of lee iacoco who is the founder of toyoto company. Hope to know about him more in your next blog. Sorry for one week's absence as I was in mumbai for some personal work.

    ReplyDelete
  24. Very good biography. I have also heard about the biography of lee iacoco who is the founder of toyoto company. Hope to know about him more in your next blog. Sorry for one week's absence as I was in mumbai for some personal work. It is evident that success would not come very easily. You need to have lot of patience and perseverence.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube