தலைப்பைப்
படித்ததும் ஒருகணம் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யித்தீர்கள்தானே...? உங்களுக்கென்னங்க...
தூரத்திலிருந்து கொண்டு ஆச்சர்யப்படலாம். நான் அடுக்கடுக்காய் அனுபவித்த அவஸ்தைகள்
எனக்குத்தானே தெரியும்...? வழக்கம்போல் என் கம்ப்யூட்டரில் ஒரு புத்தக அட்டைப்படம்
வடிவமைத்துக் கொண்டிருந்த நேரம்... புயலென அருகில் வந்தாள் சரிதா. “என்னங்க...
நீங்க இப்ப நடக்கப்போற எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகணும்...”
திகைத்தேன்.
‘ழே’ என்று விழித்தேன். “அதுநடக்கற காரியமில்ல சரி! திடீர்னு ஏனிந்த ஆசை?"
“அது
நடக்கற காரியமில்ல... நிக்கிற காரியம்னு எனக்கும் தெரியும். என் பிரண்டு
ஜெயந்தியோட ஹஸ்பென்ட் எலக்ஷன்ல நிக்ககறாராம். அவ பெருசா பீத்திக்கறா. என் ஹஸ்பெண்டை எலக்ஷன்ல
நிக்கவச்சு அவளோட
ஹஸ்பெண்டை விட ஒரு ஒட்டாவது அதிகம் வாங்கிக் காமிப்பேன்னு சபதம் போட்டுட்டு வந்திருக்கேன் ஏன் நீங்க நிக்கக் கூடாதா? ஜெயிச்சு எம்.
எல்.ஏ ஆக முடியாதா?”
“சரிதாக் கண்ணு! கோபப்படாதே... நீ ஒக்காந்திருக்கும்போது கூட நான் எப்பவுமே நின்னுக்கிட்டுதானே
இருக்கேன். இப்ப நடக்கறது எம்.பி எலெக்ஷன்மா..! இதுல ஜெயிச்சு
எம்.எல்.ஏ.வா ஆகமுடியாதும்மா. அதைத்தான் சொன்னேன்.”
சரிதா முறைத்தாள்... “இந்த
கேலிக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. ஓட்டுப் போடற வயசுகூட வராத ஸ்கூல் பையன்ங்க கூடல்லாம்
சகவாசம் வச்சுக்கிட்டா இப்படிதான் இருக்கும்...” என்க, ‘நல்ல வேளைடா... இவ ஆவிய, சீனுவ மறந்துட்டா போல
இருக்கு””’ குஷியானது மனஸ்.
“அதில்ல
சரி... நான் எந்த கட்சியில நிக்க முடியும்? எனக்கு யாரும் சீட்டு தர மாட்டாங்களே..?”
“நீங்க
அம்மாவுக்கு போன் போடுங்க. நான் கேக்கறேன்...”
“ஒரு மாசம் இங்க தங்கிட்டு
நேத்துதானே உங்க அம்மா
ஊருக்கு போனாங்க. இன்னும் ஊருக்குக்கூட போய்ச் சேர்ந்திருக்க
மாட்டாங்களே! அதுக்குள்ள எதுக்கு போன்?"
“ஐயோ...
ஐயோ... உங்களை
மாதிரி தத்தியை வச்சுகிட்டு என்ன பண்றது? நான் புரட்சித்தலைவி அம்மாவுக்கு டயல் பண்ண
சொன்னேன்...”
நான்
(வழக்கம்போல) ‘ழே’ என்று விழிக்க... சரிதாவே, அம்மாவுக்கு போன் செய்தாள். “வணக்கம்மா..!” போனில் பேசும்போதே முதுகை வளைத்து அவள் வணக்கம்
சொன்னது வேடிக்கையாக இருந்தது.... ஆச்சர்யமாகவும் கூட! சரிதாவால் இவ்வளவு வளைய முடியுமா..?. ஆஹா... அம்மா கிட்டபோன்லே பேசும்போதே என்னா பவ்யம்! ‘சபாஷ் சரிதா... நீ அரசியல்ல தேறிருவ’ என்றது மனஸ்.
“அப்படியா...
அப்படியா... அப்படியா...” போன் எதிர்முனையில்
வைக்கப்பட்டாலும்கூட சூரியன் பட கவுண்டமணி போல பில்டப் தந்து நிறையப்
பேசிவிட்டு... “அம்மா அடுத்தமுறை அவசியம் சீட் தர்றதா சொல்லிட்டாங்க. இப்ப நீங்க கலைஞர்
நம்பரை தேடிக் கொடுங்க” என்றாள்.
நிறைய
மெனக்கெட்டு நம்பரைத் தேடித்தர, கலைஞருக்கு கால் போனபோது அவள் தெரியாமல் ஸ்பீக்கரை
ஆன் செய்ய... “ஹலோ,
கலைஞர் தாத்தாவா? நான் சரிதா பேசறேன். எனக்கு ஒரு எம்.பி சீட்
வேணும்...”
என்று ஏதோ
குடும்ப உறுப்பினர் போல் அவள் உரிமையாக கேட்க... “எந்த சரிதா? நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் சீட்டு குடுத்திட்டேனே. உன்னை மறந்திட்டன் போல இருக்கு
வயசாகிடிச்சா! அத்தனை பேரையும் ஞபகம்
வச்சுக்க முடியலம்மா. முன்னாடியே வந்து கேக்கக் கூடாதா. இப்போதைக்கு என்
மனசுலதாம்மா இடம் கொடுக்க முடியும்"
என்று கலைஞர் சொல்வது தெளிவாக கேட்டது.
‘சே!’ என்று சலிப்பாக
முனகியபடி இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள். “சரி, நான் வேணும்னா
காங்கிரஸ்ல கேட்டுப் பாக்கட்டுமா?” என்றேன். “சே! காங்கிரஸ்லாம் வேணவே வேணாம். நான் வீசற
பூரிக்கட்டையைவே சமாளிக்கத் தெரியாது உங்களுக்கு. அங்க போனீங்கன்னா... சண்டைல
வேட்டியென்ன டவுசரே கிழிஞ்சிடும் உங்களுக்கு...” என சரிதா
சொல்ல... ‘சரிதாவே காங்கிரசை
வேணாம்னு சொல்லற அளவுக்கு மோசமாயிடுச்சே’ காங்கிரஸ் மீது பரிதாபமே வந்துவிட்டது எனக்கு.
“சரி...
அப்ப மோடியை காண்டாக்ட் பண்ணி சீட் கேப்பமா..?”
“அது
சரிப்படாதுங்க. அப்புறம் என்னோட பாய் பிரெண்ட்ஸ் எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க”
“என்னது..?
உனக்கு பாய் பிரெண்ட்ஸா..?” அதிர்ந்தேன் நான். “அடச்சே! நீங்க நினைக்கறதில்ல... எனக்கு முஸ்லீம் பெண்கள் நிறையப் பேர் பிரெண்டுங்க
இல்லயா..? அதைத்தான் சொன்னேன். அவங்க ஓட்டு BJP க்கு
கிடைக்காது.”
நான்
நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அதற்கு ஆயுள் கம்மி. “சரிங்க... அர்விந்த்
அகர்வாலுக்கு போன் பண்ணுங்க...”
“எனக்கு
முன்ன சோனியா அகர்வால்... இப்ப காஜல் அகர்வால் தெரியும். ஹி... ஹி... அரவிந்த்
அகர்வால் யாரு?”
“கடவுளே...
இப்படி பாலிடிக்ஸ்ல பூஜ்யமா இருக்கற உங்களப்போய் நம்பி சவால் விட்டுட்டு வந்தேனே... என்னைச்
சொல்லணும்! அதாங்க... டெல்லியில உண்ணாவிரதம் இருந்தாரே... இப்பகூட
ஆட்டோ டிரைவர்ட்ட அறை வாங்கினாரே... அவர்தாங்க...”
“நாசமாப்
போச்சு! அவர் அகர்வால் இல்லம்மா... அர்விந்த்
கெஜ்ரிவால்! ஆம் ஆத்மிங்கற கட்சியோட தலைவர்”
“ஏதோ
ஒரு வால்! சீக்கிரம் டயல் பண்ணிக் குடுங்க நான் ஹிந்தியில பேசி
உங்களுக்காக சீட் கேக்கறேன்...” என்க., டயல் செய்து தந்தபின் அவள் பேசிய ஹிந்தியாவது :
“ஹலோ ஜி! நான் சென்னை மாம்பலம் சுயஉதவிக் குழு தலைவி சரிதா பேசறேன்ஹை! மை ஹஸ்பன்ட்ஜிக்கு எம்.பி சீட் வேணும் ஹை””
‘என்னது...?
சுய உதவியா? பல் தேய்க்கற பிரஷ்ல
இருந்து குளிக்கறதுக்கு சோப்பு டவல் வரை நான்ல்ல எடுத்து வைக்கணும் இவளுக்கு.
அவ்வ்வ்வ்!’
என அலறியது மனஸ்.
“.......................”
“அவர் பக்கா ஆம்ஆத்மிஹை! நான் என்னா சொன்னாலும் ஆம் ஆம் சொல்லற ஆத்மி ஹை! அவர். உங்க கட்சிக்கு பொருத்தமா இருப்பாரு ஜி”
“.......................”””
“க்யா? அடிக்கடி உண்ணாவிரதம்
இருக்கணுமாஜி?
அதெல்லாம் இருப்பார்... நான் பாதிநாள் சமூக சேவை செய்யறதுக்கு வெளிய போய்டுவேன்ஜி. அப்ப
அவரு உண்ணாவிரதம்தான் ஹை”” ”
எப்பூடி...? ‘‘ஜி’’”யும் “ஹை”யும் சேர்த்துக்கிட்டா அதுதான் ஹிந்தின்னு அவ
புரிஞ்சுக்கிட்டது சக‘வாச‘ தோஷத்தாலதான்! ஒருமுறை
டெல்லி போனபோது சரிதாவுக்கு
வாசன் ஹிந்தி கற்றுக் கொடுத்த லட்சணம் அப்படி!. ரெண்டு பேர் வாயிலும் சிக்கி ஹிந்தி படாத பாடு பட்டது
நினைவுக்கு வந்தது. கெஜ்ரிவாலுடன் பேச்சு வார்த்தை அனுமார் வால்
மாதிரி நீளமாக போய்... கடைசியில் கோபத்துடன் போனைத் தூக்கி எறிந்தாள். (பணம் கொடுத்து
வாங்கியது நானல்லவா? அவ்வ்வ்!)
‘ஒருவழியா
தப்பிச்சிட்டோம்டா... சிஷ்யப் பிள்ளை சீனுப்பய வேற தெனாலிராமன் படத்துக்கு
டிக்கெட் வாங்கிட்டு காத்துக்கிட்டு இருப்பானே... சரிதாவை சமாளிச்சு
எப்படிக் கிளம்பறதுன்னு தெரியலையே...’ என்று மனஸ் புலம்ப... தன்
முயற்சியில் சற்றும் மனம் தளராத சரிதா, “ஏங்க... நான் இங்க நாயா பேயா உங்களுக்காக கத்திக்கிட்டிருக்கேன்.
நீங்க என்னடான்னா இஞ்சி தின்ன எதுவோ மாதிரி முழிச்சிக்ட்டிருக்கீங்க!”
என்ன
பதில் சொல்வதென்று தெரியாமல் நான் வாசல் பக்கம் பார்க்க அங்கே சீனுவின் தலை தெரிந்தது.
அடப்பாவி! நான் வர்றதுக்கு லேட்டானதால் வீட்டுக்கே வந்துட்டான் போல
இருக்கே.... அதிர்ந்த நான். ‘சீனு! அப்படியே போயிடு...’ என்று ஜாடை காட்ட... அதை ’உள்ளே வா’ என்பதாகப் புரிந்து கொண்டு உள்ளேயே
வந்துவிட்டான்.
“அடடே...
சீனுவா? வாப்பா...” என சரிதா வரவேற்றது ஆச்சர்யமாக இருந்தது . அவங்க வீட்டு ஆட்களை தவிர வேறு
யார் வந்தாலும் பத்ரகாளியாக மாறி விடும் சரிதாவா இது? நம்ப முடியவில்லை. ஒருவேளை இது
சரிதாவின் அரசியல் பாடமோ..?
“டேய்
சீனு! சரிதா கோவத்துல இருக்கா... உடனே ஓடிரு...” ” என்று நான் அடிக்குரலில் சொல்ல... சீனு தன் டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்து ரகசியத்தை ரகசியமாய் சொன்னான் : “ஸார்! நான் போன தடவை வந்தபோது உங்க வீட்டில சாப்பிட்டனே ஞாபகம் இருக்கா?
அப்பவும் அண்ணி கோபமா இருந்தாங்கள்ல... அவங்க வச்ச சுண்டக்கா சொத்தக் குழம்பை - சாரி வத்தக் குழம்பை ரொம்ப ரொம்ப
சூப்பர்னு சொன்னேனே! அப்ப எனக்கு பாராட்டும் உங்களுக்கு அடியும் கிடைச்சதே மறந்து போச்சா?
இப்பவும் அப்டி சமாளிச்சுருவேன்” என்றான் .
சரிதா,“சீனு! உன் வாத்தியாரை எலக்ஷன்ல சுயேச்சையா நிக்க வெக்கலாம்னு இருக்கேன். எவ்வளவு
நாள்தான் வெட்டியா மின்னல் வரிகள், ஜன்னல் கரிகள்னு பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்லாம எழுதிக்கிட்டிருக்கிறது? நீதான் இவருக்காக பேஸ்புக்கு, பேஸ் நோட்டுன்னு எல்லாத்துலயும் பிரச்சாரம் பண்ணனும். இப்ப அதுதானே ட்ரென்ட்?” ”
"அண்ணி! சூப்பர் ஐடியா! ஆனா ஒரு சின்னத் திருத்தம்...! சாருக்கு பதிலா நீங்களே நிக்கணும். அவரைவிட நீங்கதான் பேமஸ். உங்களை வச்சுதான் அவரே பேரு
வாங்கி இருக்கார்...?’ ”
தெனாலிராமன்
படத்தைவிட இங்கு
நடப்பது சுவாரசியமாக இருந்ததால் சினிமாவுக்கு கூப்பிட வந்ததையே மறந்தவனாக சீனு
என்னை வைத்து காமெடி பண்ணிக் கொண்டிருக்க, நான் கோபமாய் முறைக்க... சீனுப்பயல் அதைக் கண்டுகொள்ளாமல் சீரியசாக கலாய்த்துக் கொண்டிருந்தான். “கணேஷ் சார் எழுதின ‘‘சரிதாயணம்’” கதைகள்ல நீங்கதான் ஹீரோயின்! நான்,
என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்களோட ரசிகர்கள்தான். உங்களுக்குத்தான் அவரைவிட அதிக ஓட்டு
கிடைக்கும், அதையும் தவிர. அவருக்கு
எழுத தெரியுமே தவிர அதிரடியா பேசல்லாம் தெரியாது. அதுக்கு நீங்கதாங்க சரி” ” என்று உசுப்பேற்றிக்
கொண்டிருந்தான்.
“அடப்பாவி! உன்னைப் பத்தின கதைகள்னு
மட்டும்தானே சரிதாட்ட சொல்லி வச்சிருக்கேன். இவனால சரிதாயணத்தை முழுசா அவ படிச்சா என் கதி என்னவாகு? பயபுள்ள தெரிஞ்சே பத்த வைக்கிறானே” என்று ப(க)தறியது மனஸ். சீனு
அசால்ட்டாய் தொடர்ந்தான்.
“அண்ணி! அற்புதமா தேர்தல் அறிக்கை ஒண்ணு தயார் பண்ணனும்! நீங்க இணையத்துல பேமஸா இருகறதால
நெட்டை யூஸ் பண்ற அத்தனை பேரோட வோட்டும் கிடைக்கற மாதிரி இலவசங்களை அறிவிக்கலாம்”
சரிதா
உற்சாகமானாள். “அட. நல்லா இருக்கே ஐடியா... சாம்பிளுக்கு ஒண்ணு சொல்லு பாக்கலாம்”
“பேஸ்
புக்கில போடற ஸ்டேடஸ்க்கு 1000 லைக்
இலவசமா போடப்படும், ப்ளாக்ல எழுதற ஒவ்வொருவருக்கும் 100 விலையில்லா பாராட்டு பின்னூட்டம் போடப்படும். இலவச இன்டர்நெட் வசதி செய்து தரப்படும்... ” என்று தொடர்ந்து சீனு அள்ளி விட... “எக்சலன்ட் சீனு! இதெல்லாம் ஏன் இவருக்கு
தோணவே
மாட்டேங்குது? ரைட்டு... எப்ப வேட்பு மனு தாக்கல் பண்ணலாம்?” ”
“இப்பவே பண்ணலாம்.
ஆனா வேட்பு மனு தாக்கல் பண்ண ரெண்டு பேர் போகக்கூடாது கூட்டமா போகணும்”
“கூட்டத்துக்கு
எங்க போறது?””
“கவலைப்படாதீங்க...
இப்ப வரவழைச்சிட்றேன். ”
பயபுள்ள
மொபைலில்
அடுத்த விநாடியே மெசேஜ் அனுப்ப... ஸ்கூல் பையன், கோவை ஆவி, மெ.ப.சிவா, ரூபக்ராம், டி.என்.முரளிதரன், குடந்தையூர் சரவணன், அரசன், மதுமதி, பிரபாகரன்,
செல்வின், ஆரூர்மூனா, சேட்டைக்காரன், கே,ஆர்,பி,செந்தில், மதுரைத்தமிழன்,
தமிழ்வாசி பிரகாஷ் என ஒரு பெரும் படையே சில நிமிடங்களில் கூடிவிட்டது. ஒருசில நிமிடங்களில் பெருங்கூட்டத்தை கூட்டிய
சீனுவின் திறமையைக் கண்டு, தன் சபதம் நிறைவேறிவிடும் என்று சரிதா சந்தோஷமானாள். “சீனு... இவரோட தங்கைகள் ராஜி. சசிகலா. பிரியா இவங்களுக்கெல்லாம் போன் போடு.
அவங்க மத்தவங்களக் கூப்ட்டு ஒரு மகளிர் அணிக் கூட்டத்தையே சேர்த்துடுவாங்க. நாம
உடனே கிளம்பலாம்...’ ” என்றாள் குஷியாக.
அதற்குள்
நான்கைந்து கார்கள் வாசலில் வந்து நின்றன. எல்லாம் இந்த
உத்தமவில்லன் சீனுவின் ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும். பயபுள்ளக்கி என்னைய
மாட்டிவிடுறதுன்னா எப்பவும்
ஸ்பீடுதான்! “அண்ணி கார்லாம் வந்துடுச்சி... வாங்க போகலாம்... போற வழில மகளிரணிய பிக்கப் பண்ணிக்கலாம்.” என்க, சரிதா என்னைப் பார்த்து, “வீட்டை
பாத்துக்கோங்க. நான் தம்பிங்ககூட போய் வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டுவரேன். அதுக்குள்ள எனக்காக உருப்படியா
பேனர் கட்
அவுட்டையாவது டிஸைன் பண்ணி வைங்க”
நான் அந்தக் கும்பலை முறைக்க கண்டு கொள்ளாமல் அனைவரும் புறப்பட்டனர். “எலே சீனு! குருவையே காமெடி பீசாக்கிட்டியே... நீல்லாம் நல்லா வருவ லேய்...” என்று நொந்து கொண்டே, காலையில்
இருந்து பிரிக்கப் படாமல் இருந்த அன்றைய பேப்பரை எடுத்துப் பிரித்தேன். அதில் தலைப்பு செய்தியாக “நேற்றோடு வேட்பு மனு தாக்கல் முடிந்தது” என்றிருந்தது. அதைப்
படித்ததும் சந்தோஷமாக இருந்தாலும் சரிதா கோபமாகித் திரும்பி வருவதால் விளையும் பின்விளைவுகளை
எண்ணியதும் சற்று கலக்கமாக இருப்பதால்
‘ழே’ என்று
விழித்தபடி அமர்ந்திருக்கிறேன் நான்.
=========================================================
,இந்தச் சிறுகதையை எழுதியது நானல்ல... சரிதாயணத்தின் ரசிகரான நம் வலையுலக நண்பர் ஒருவரின் கைவண்ணம் இது. சற்றே என் பாணிக்கு மாற்றி வெளியிட்டிருக்கிறேன். எழுதியவரின் பெயர் பதிவிலேயே இருக்கிறது. அவர் யார் என்பதைச் சரியாகச் சொல்லும் முதல் மூன்று பேருக்கு என்னிடமிருந்து புத்தகப் பரிசு நிச்சயம்.
=========================================================
|
|
Tweet | ||
/ஓட்டுப் போடற வயசுகூட வராத ஸ்கூல் பையன்ங்க கூடல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டா//
ReplyDeleteஎன்னையா சொல்றாங்க?
//‘நல்ல வேளைடா... இவ ஆவிய, சீனுவ மறந்துட்டா போல இருக்கு” //
ஆமா என்னைத்தான் சொல்றாங்க....
ஹி... ஹி... ஹி... நீங்கதாங்கோ அது!
Deleteஎன்னது? வேட்பு மனு தாக்கல் முடிஞ்சிருச்சா? அதுக்குப்புறமும் இவ்வளவு அலப்பறையா? யாருன்னு கண்டுபிடிக்கனும்னா இன்னொரு தடவை படிக்கனுமே, படிக்கிறேன்..
ReplyDeleteஎப்ப வேட்புமனு தாக்கல் முடியுது, எப்ப பிரசாரம் முடியுதுன்னுகூட நிறைய பொதுஜனங்களுக் (சரிதாபோல) தெரியாது ஸ்.பை. என்ன சொல்ல...? ‘அவரை’க் கண்டுபிடித்து பரிசை வெல்க.
Deleteபதிவின் நீளத்தைப் பார்க்கும்போது இது சீனு எழுதியதாகத்தான் இருக்கவேண்டும். ஆகவே என் பதில், சீனு...
ReplyDeleteநீளத்தை மட்டும் வைத்துக் கணக்கிடுவது தப்புய்யா தம்பீ... புதன்கிழமை என்னோட அடுத்த பதிவில வடை... ஸாரி.. விடை கிடைக்கும் பாரு...
Deleteகலக்கல் கணேஷ்.
ReplyDeleteஉங்கள் பாணிக்கு மாற்றி இருக்கீங்க! யார் எழுதினான்னு தெரியலையே.... சீனு இல்லைன்னு சொல்லியாச்சு....
ம்ம்... வெயிட் பண்றேன்!
சீனு இல்லன்னு எங்க சொன்னேன்? பதிவின் நீளத்தை மட்டும் வெச்சு ஜட்ஜ் பண்ணாதன்னுதானே சொன்னேன்... ரசித்த உங்களுக்கு மகிழ்வான நன்றி வெங்கட்.
Delete//ஏதோ ஒரு வால்...// ஹா... ஹா...
ReplyDeleteஎழுதியது ஆவியா...?
ரசிச்சு சிரிச்ச உங்களுக்கு மகிழ்வோட என் நன்றி டி.டி. கெஸ் வொர்க்கால்லாம் சொல்லக் கூடாது. அப்றம் மார்க் கிடைக்காது உங்களுக்கு... ஹி... ஹி...!
Deleteஆஹா, ஆவிக்கு ஒட்டு போட ஒரு ஜீவன் இருக்கே.. ஹிஹிஹி..
Deleteகாலையில் இருந்து பிரிக்கப் படாமல் இருந்த அன்றைய பேப்பரை எடுத்துப் பிரித்தேன். அதில் தலைப்பு செய்தியாக “நேற்றோடு வேட்பு மனு தாக்கல் முடிந்தது” என்றிருந்தது.//// ha.ha.ha..
ReplyDeletesuper aa yochichu eluthi irukkuranga. ana yarunutan theriyala sir.
ரசித்துச் சிரித்த மகேஷுக்கு மகிழ்வான என் நன்றி.
Deleteஅடடே... சீனுவா? எழுதியது..!
ReplyDeleteசீனுவாவும் இருக்கலாங்க. ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.
Delete//நான் என்னா சொன்னாலும் ஆம் ஆம் சொல்லற ஆத்மி ஹை!//
ReplyDeleteஹஹஹா.. நான் விழுந்து விழுந்து சிரிச்ச இடம்.
உங்க சிரிப்பை பாக்கறதுல எனக்கு சந்தோஷம் டியர் ஆவி..!
Delete//அதுக்குள்ள எனக்காக உருப்படியா பேனர் கட் அவுட்டையாவது டிஸைன் பண்ணி வைங்க”//
ReplyDeleteஹஹஹா. பைனல் பஞ்ச்
ஹும்... அவ என்னை மட்டம் தட்டறதை ரசிச்சு சிரிக்கிறதப் பாருங்க மக்களே...!
Delete//லையுலக நண்பர் ஒருவரின் கைவண்ணம்//
ReplyDeleteசரிதாக்கா கேரக்டரை இவ்வளவு உள்வாங்கி எழுதியிருக்காரு.. உங்க எழுத்துகள நல்லா படிச்சு உங்க கூடவே இருக்கிற ஒரு சிஷ்யப் புள்ளயா தான் இருக்க முடியும்.. ஹிஹிஹி..
அவருக்கு பாவனாவின் பாவனைகள் பிடிக்கும், கவிதாவின் கவிதைகள் பிடிக்கும், ஆண்ட்ரியாவின் அழகு பிடிக்கும்.. இன்னும் பல டும் கள் இருப்பதால் இத்தோட நிறுத்திக்கிறேன்..
ஹா... ஹா... ஹா... அவர் தானான்னு நாளன்னிக்கு தெரிஞ்சுக்கோங்க ஆவி. படிச்சு ரசிச்சதுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteஇது சீனு எழுதியது இல்லை என்றால் ஆவி எழுதி இருக்கலாம் அல்லது உங்கள் தங்கை ராஜி எழுதி இருக்கலாம்
ReplyDeleteஎல்லாரும் சீனுவா ஆவியான்னு யோசிக்கறப்ப நீங்கதான் என் தங்கைய குறிப்பிட்டு சொல்லிருக்கீங்க. அதுக்காக ஸ்பெஷல் டாங்ஸ்.
Deleteசரிதாவை வைத்து எழுதப்படும் நகைச்சுவை பதிவுகளை படிக்கும் போதெல்லாம் எனக்கு நகைச்சுவை எழுத்தாளர் சாவிதான் நினைவுக்கு வருகிறார். தேர்தலை வைத்து பல பேர் காட்டமாக எழுதி தள்ளும் போது நீங்கள் அதை மிக நகைச்சுவையாக எழுதி வெளியிட்டதில் இருந்து உங்கள் தனித்திறமை வெளித்தெருகிறது அதாவது எழுதியவரின் தனித்திறமை...பாராட்டுக்கள்
ReplyDeleteஎன்னையும் இந்தக் கதையை எழுதிய நண்பரையும் பாராட்டிய உங்களுக்கு மகிழ்ச்சியோட என் நன்றி மதுரைத்தமிழன்.
Deleteஆவி.சீனு.சிவா, மதுரை தமிழன் இவர்களில் யாராவது ஒருவர்தான்
ReplyDeleteஎலேய் ஆவி... உனக்கு இன்னொருத்தரும் ஓட்டுப் போட்டிருக்காரு பாருலேய்... படிச்சு ரசிச்ச உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி முரளி.
Delete//ஆம் ஆம் சொல்லற ஆத்மி ஹை// ஹா ஹா ஹா அல்டிமேட் காமெடி ஹை :-)))))
ReplyDeleteஎன்ன ஒரு ட்விஸ்ட்டு.... பாதிபடிக்கும் போதே வாத்தியார் டச்சப்ன்னு கண்டுபுடிச்சிட்டேன்... நான் எழுதல.. ஆவி மேல பயங்கர டவுட்டு..
நெறையப் பேரு சீனுவான்னு சொல்ல... நீ மா‘யாவி’யா இருக்குமோன்னு டவுட் படறே... பாக்கலாம் எந்த கெஸ் சரின்னு... அல்டிமேட் காமெடியை ரசித்தமைக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteவரிக்கு வரி நகைச்சுவை நர்த்தனமாடுகிறது. எலக்ஷன் நேரத்துக்கேற்ற சரவெடி. சீட்டுக் கேட்ட அண்ணிக்கு கலைஞர் தாத்தாவின் பதில் கலகல.... யார் எழுதியது என்று அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் நானும்.
ReplyDeleteநகைச்சுவையை ரசித்த உங்களுக்கு மகிழ்வான என் நன்றி! புதன்கிழமை தவறாம வந்து விடையத் தெரிஞ்சுக்கங்க கீதா.
Delete“அது நடக்கற காரியமில்ல... நிக்கிற காரியம்னு எனக்கும் தெரியும்
ReplyDelete>>
இங்கதான் நீங்க நிக்குறீங்க அண்ணா!
நாந்தான் மகளிர் அணித்தலைவியாக்கும்.
ReplyDeleteநிச்சயமாம்மா... சரிதாவின் மகளிரணி உன் தலைமையில் தமிழ்நாட்டையே குலுக்கட்டும்...
Deleteசூப்பர் பாஸ்....
ReplyDeleteரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
DeleteI think this writer has the capacity to write political satire also. Whosoever he/she is, hats off!
ReplyDeleteஎழுதிய என் நண்பரைப் பாராட்டிய உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.
Deleteவணக்கம்,பால கணேஷ் சார்!நலமா?காலையில்(நமக்கு) அருமையான ஒரு சீரியஸ் சிரிப்பைப் பகிர்ந்தளித்தமைக்கு நன்றி,சார்!///இது ஆ.வி.யின் கை வண்ணத்தில் உருவாகி,உங்கள் மெருகூட்டலில் வந்தது தான் என "ஆணி" த் தரமாக உரைக்கிறேன்,ஹ!ஹ!!ஹா!!!(சிரிப்பு பதிவுக்கு,ஹி!ஹி!!ஹீ!!!)
ReplyDeleteசிரித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteதப்பா சொல்லிட்டேன்,இத எழுதினது மெ.ப.சிவா தான்!
Deleteஸ்கூல் பையன், கோவை ஆவி, மெ.ப.சிவா, ரூபக்ராம், டி.என்.முரளிதரன், குடந்தையூர் சரவணன், அரசன், மதுமதி, பிரபாகரன், செல்வின், ஆரூர்மூனா, சேட்டைக்காரன், கே,ஆர்,பி,செந்தில், மதுரைத்தமிழன், தமிழ்வாசி பிரகாஷ்,சீனு ... இவங்களில் ஒருத்தர்தான் இதை எழுதியதாய் இருக்கணும்! :))))
ReplyDeleteஇன்னா ஐடியா ஸ்ரீ...? அசத்திட்டீங்க...
Deleteநிச்சயம் இப்படி தெளிவாக பெரியதாக அருமையாக எழுதும் திறமை என்னிடம் இல்லை.
Deleteநிச்சயம் இது ராஜி அவர்கள் எழுதி கணேஷ் அவர்கள் மெறுகூட்டியதாகத்தான் இருக்கும். காரணம் இந்த பதிவில் என் பெயரும் வந்து இருக்கிறது.ராஜி ஒருத்தர்தான் சகோவாகிய என்னை மறக்காமல் தன் பதிவில் குறிப்பிடுவார் அல்லது மாட்டிவிடுவார். என்ன நான் சொன்னது சரியா?
சீனு,ஆவி,ராஜி இவர்களில் யாரவது ஒருத்தர்தான் எழுதி இருப்பாங்க அப்படியும் இல்லையென்றால் பாலகணேஷ் தூக்க கலக்கத்தில் எழுதி வெளியிட்டு இருப்பார்.
அடபோங்கப்பா இப்படி என்னை புலம்ப வைச்சிட்டீங்க.
சரி இருங்க ஒரு பெக் அடிச்சிட்டு வந்துடுறேன்...
ஹும்ம்ம் கடைசியாக நான் சொல்லப் போகும் மிக சரியான பதில் தமிழ் பதிவர்களில் ஒருத்தர்தான் இதை எழுதி இருக்க வேண்டும் என்பதை கண்டுபிடிச்சுட்டுடேன் ஆனால் அதை ரகசியம் கருதி இப்ப சொல்லப் போவதில்லை அவரை பாலகணேஷ் அவர்கள் பரிசு தரும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்
எனக்குப் பரிசு உண்டுதானே?
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்!!!
Deleteயாரு எழுதினது தெரியல அங்கிள் ...உங்க கும்மியில் ஆவியும் நீங்களுமே பரீட்சயம் ....
ReplyDeleteஎனக்கு தெரிஞ்ச ஆவி கே எனது ஒட்டு ...என்னோட கணிப்பு சரி என்றால் மறக்காம பரிசை என் அட்ரஸ் க்கு அனுப்பி வைச்சிடுங்க ....
எப்போவும் போல நகைச்சுவை அருமை
என்ன இப்புடிச் சொல்லிட்ட இளவரசி... நம்ம கும்மியில அரசன் உனக்குத் தெரிஞ்சவன்தானே... நகைச்சுவையை ரசித்த உனக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஉங்கள் பாணிக்கு மாற்றி இருக்கீங்க! யார் எழுதினான்னு//ரூபக் ராம்
ReplyDeleteவிரைவில் தெரிஞ்சிடும் நேசன்!
Deleteசரிதா மாமி ஹீ அரசியலுக்கு ஏத்த மாமிதான்!ஹீ
ReplyDeleteஆஹா... அவளோட கட்சில நேசன் மெம்பர் ஆயிடுவார் போலயே... நிச்சயம் உங்களுக்குப் பதவி தருவா சரிதா... ஹி... ஹி... ஹி... மிக்க நன்றிப்பா.
Deleteசரியான காமெடி! உன் முன்னாடி கூட நின்னுகிட்டுதான் இருக்கிறேன்ல ஆரம்பிச்சு இறுதி வரைக்கும் சிரித்து மாளவில்லை! அப்புறம் இதை எழுதியது குடந்தை ஆர்.வி.சரவணன் ஆ இருக்குமோன்னு ஒரு டவுட்டு!
ReplyDeleteகுடந்தையாருக்கு ஓட்டுப் போட்டு அவரை குஷிப்படுத்திட்டீங்க. நகைச்சுவையை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteவாசன் சரிதாவின் தம்பிதான். இந்த கேரக்டரை முன்பே ஓரிரண்டு முறை அறிமுக்ம் செய்துட்டதால இங்க விரிவா சொல்லலை நண்பரே... ஆனா அவரையே எழுதினவரா நீங்க நாமினேட் பண்ணுவீங்கன்னு நிச்சயம் நான் எதிர்பார்க்கலை. மிக்க நன்றி.
ReplyDeleteஎப்படியோ உங்கள் புகழுக்கெல்லாம் சரிதாதான் காரணம்னு சொல்லிட்டீங்க...
ReplyDeleteஆவியும் , சீனுவும் என் கணிப்பில் இருக்கிறார்கள்
வேட்பு மனு தாக்கல் முடிஞ்சா என்னா சரிதா அவங்களுக்கு சீட் கொடுக்கலைன்னா எலக்ஷனையே நிப்பாட்டிடுவோம்ல... எங்கள் ஓட்டு உங்களுக்கே...!
ReplyDeleteடைமிங் காமெடி... ரொம்ப ரொம்ப ரசிச்சி சிரிச்சேன்... !
super sir... I think it was written by settaikkaran.
ReplyDeleteநீங்களும் மொக்க போட ஆரம்பிச்சுட்டீங்களன்னு நினைச்சுட்டன் ....
ReplyDeleteஎழுதுனது ஸ்பை ?
looks like SettaiKaran
ReplyDeleteமுரளி சார் எழுதினது... இந்த பதிவுல.. நான் தான் கரெக்ட்டா சொல்லிருக்கேன்..புக் பார்சல் பண்ணுங்க!
ReplyDeleteமூங்கில் காற்று- டி.என் முரளிதரன் அவர்கள் தான் எழுதியது...
ReplyDeleteகண்டுபுடிச்சிட்டேன் இல்லே... எப்புடீ.....
நடப்பில் உள்ள விஷயங்களை கதையில் சேர்த்து நகைச்சுவையைப்
ReplyDeleteஅங்கங்கே தெளித்து சுவாரஸ்யமான விதத்தில் எழுதப்பட்ட எளிமையான ஒரு கதை. அருமை. வாழ்த்துக்கள் கணேஷ் சார்
உங்களுக்கும் இதனை எழுதியவருக்கும்.
ஆனாலும், அர்விந்த் கெஜ்ரிவால் பாவம்!
ReplyDeleteஎப்படி சமீராவும், அருணா செல்வமும் கண்டுபிடிச்சாங்க?
இதை படிக்கறதுக்கு முன்னாடி நான் உங்களோட அடுத்த பதிவை படிச்சுட்டேன் - இப்படி ஒரு அருமையான காமெடி அதுவும் உங்கள் பாணியில எழதின முரளிதரனுக்கு பாராட்டுக்கள்!
ஹைய்யோ!!!!!!!!!! கலக்கல் பதிவு!
ReplyDeleteசிரியோசிரின்னு சிரிச்சு இப்போ வயித்து வலி, நம்ம கோபாலுக்கு:-))))