Wednesday, April 23, 2014

அமைதியின் பின்னே....

Posted by பால கணேஷ் Wednesday, April 23, 2014
“என்னங்க...” ஜன்னலோர சீட்டில் மெலிதாய் கண்ணயர்ந்திருந்த செல்வத்தின் தோளில் விரல்களால் கொத்தினாள் கவிதா. “பின்னாடி சீட்ல இருக்கற ஆளு தன் காலால என் காலல உரசுறான். என்னன்னு கேளுங்க...”

“விடு கவி... பஸ்ல இந்த மாதிரி மேல படறதுல்லாம் சகஜம்டா!. இதைல்லாம் கேட்டா. ‘நீ ஆட்டோ புடிச்சுப் போறதுதானே... எதுக்கு பஸ்ல வர்ற?’ன்னு எடக்காதான் பதில் வரும். விட்று...”

பின்னால் திரும்பி அவனை முறைத்தாள் கவிதா. பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போல் தோற்றமளித்த அவன் ‘ஈ’யென்று வாயை அகலமாகத் திறந்து கோரமாக இளித்தான். பார்க்கச் சகிக்காமல் மீண்டும் முன்புறம் பார்வையைத் திருப்பினாள் கவிதா.

இரண்டு நிமிடக் கரைசலுக்குப் பின் மீண்டும் செல்வத்தின் தோளைக் கொத்தினாள். “தோ பாருங்க... அவன் கால் தெரியாமல்லாம படலை. இப்பவும் மறுபடி காலை நீட்டி உரசறான். ஆம்பளையா லட்சணமா அவனை மிரட்டிக் கேளுங்க...”

“கோபப்படறதால பிரச்னை நமக்குத்தான் வரும் கவி. காலை மேல தூக்கி வெச்சுக்கோ... இல்ல கால மடிச்சு உக்காந்துக்கோ... ப்ளீஸ்...”

‘ஹும்... முன்னல்லாம் என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக என்னென்ன ஹீரோத்தனம்லாம் ட்ரை பண்ணினாரு இவரு. இபப என்னடான்னா பொறுமையா இருக்கச் சொல்லி அட்வைஸு... வீரம்லாம் பொண்ணுங்க கிடைக்கற வரைக்கும்தான் போலருக்கு...‘ என்று மனதுக்குள் புலம்பியபடி அவன் சொன்னதைச் செய்தாள் கவிதா.

பயனில்லாமல் போயிற்று. அடுத்த ஐந்தாவது நிமிடம், சட்டென இருக்கையை விட்டு எழுந்து பட்டெனத் திரும்பி, மின்னல் வெட்டென கரத்தைச் சுழற்றி பின்னிருக்கை ஆசாமியின் கன்னத்தில் ஓயவிட்டாள் கவிதா. “யூ ராஸ்கல்...! ஏதோ தெரியாம கால் பட்ருச்சாக்கும்னு பொறுமையா இருந்தா... என்ன கொழுப்பு இருந்தா இடுப்புல கிள்ளுவ...? உன்னை....”

அந்த இளைஞன் அதிர்ந்து போய் எழுந்தான். இதற்கு மேலும் செல்வம் சும்மா உட்கார்ந்து இருந்துவிட முடியுமா என்ன...? அவனும் கோபமாக எழுந்து இரண்டொரு ‘சென்னை ஸ்பெஷல்’ வசவுகளை உதிர்த்து அவன் முகத்தில குத்தினான். இதுமாதிரி சந்தர்ப்பங்களில்... கூட்டமாக இருக்கையில்... நமது பொது ஜனங்களுக்கு எழும் வீர(?) உணர்ச்சியால் உந்தப்பட்டு சுற்றியிருப்பவர்களும் அவனுக்குத் தர்ம அடியை வினியோகிக்க ஆரம்பித்தனர்,

ஒரு கட்டத்தில் “நிறுத்துங்கப்பா... ஓவரா அடிச்சு அவனுக்கு ஏதாச்சும் ஆயிரப் போவுது... டிரைவர்.. வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க... இவனல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ள தள்ளினாதான் சரியா வரும்..” என்று கையில் சொம்பு தூக்காத நாட்டாமையாக மாறிக் குரல் கொடுத்தார் ஒரு பெரிசு.

“இல்ல... வேணாங்க... வயசுத் திமிர்ல பண்ணிட்டான். பாத்தா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கான். போலீஸ்லாம் வேணாம்... இவன் லைஃபே ஸ்பாயிலாயிடும். இங்க வாங்குன அடிகளை அவனால மறக்கவே முடியாது. அதுவே பெரிய தண்டனைதான். போலீஸ் வரைக்கும் போக வேணாம்...” என்றான் செல்வம்.

“பார்ரா கய்தே... அவரு இன்னா  மாதிரி பெருந்தன்மையா உன் லைப் பாழாயிடக் கூடாதேன்னு கவலைப்படறாரு... இனிமயாச்சும் ஒயுங்கா நடந்துக்கோ....” என்றபடி அவனை பஸ்ஸிலிருந்து வெளியே உதிர்த்தார் நடத்துனர். சின்னச் சின்ன சலசலப்பு பேச்சொலிகளுடன் பஸ் நகர்ந்தது. இரண்டொருவர் கை குலுக்கி செல்வத்தின் பெருந்தன்மையைப் பாராட்டினார்கள்.

டுத்த இரண்டாவது நிறுத்தத்தில் செல்வமும். கவிதாவும் இறங்கினார்கள். “நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் நினைச்சே பார்க்கலை செல்வம். என்மேல ஒருத்தன் கைய வெக்கிறான். அவனை உண்டு இல்லன்னு பண்ணுவீங்கன்னு பார்த்தா... புத்தாவதாரம் எடுத்து அட்வைஸ் பண்றீங்களே...” -வெடித்தாள் கவிதா.

கோபமாய் அவளை ஏறிட்ட செல்வம் அடிக்குரலில் சீறினான். “அறிவுகெட்டவளே...! அவனை அடிச்சதும் என்ன நடந்ததுன்னு கவனிச்சேதானே... தர்ம அடி கொடுக்கும் போதே ஒரு பெரிசு போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டிய விடச் சொல்றாரு... அதை எதிர்பார்த்துதான் உன்னை அடங்கிப் போகச் சொன்னேன். போலீஸ் ஸ்டேஷன் போனா அனாவசியமா விசாரனை அதுஇதுன்னு போயி... விஷயம் உன் புருஷனுக்கோ..... இல்ல, என் பொண்டாட்டிக்கோ தெரிஞ்சி போச்சுன்னா.... விளைவுகளை யோசிச்சுப் பாருடி,,,-” 

==========================================================
டி.,என்.முரளிதரன் -  மூங்கில் காற்று என்கிற தளத்தில் எழுதிவரும் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கதை, கவிதை, கட்டுரை என்று எல்லா ஏரியாவிலும் ஒரு கை பார்க்கும் இவர் நகைச்சுவைப் பேட்டையில் மட்டும் ஒதுங்கவில்லையே என்ற சிறு மனக்குறை எனக்கிருந்தது.. இப்போ என் பேட்டையிலயே பூந்து ‘எம்.பி.ஆகிறாள் சரிதா’ என்கிற கதையின் மூலம் வூடு கட்டி அடித்து அந்தக் குறையைப் போக்கி விட்டார். முரளியிடமிருந்து நகைச்சுவையை எதிர்பார்க்காததாலோ என்னவோ... சரியான விடையை எவரும் தரவில்லை. எனவே நான் அறிவித்த புத்தகப் பரிசு முரளிதரனுக்கே உரித்தாகிறது. உஙகளின் படைப்பை என் மேடையில் அரங்கேற்றி மகிழ வாய்ப்புத் தந்தமைக்கு என் நெகிழ்வான நன்றிகள் முரளி! உங்கள் அனைவரின் பாராட்டையும் பெற்ற அந்தக் கதைக்காக மீண்டும் ஒருமுறை கை தட்டி முரளியைப் பாராட்டுங்கள்...!
==========================================================
போனஸ் நியூஸ் : இப்போது கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ‘குமுதம்’ இதழில் நம் முரளிதரன் எழுதிய சிறுகதை இடம் பெற்றுள்ளது. வாங்கி வாசித்துக் கருத்திட்டு அவரை உற்சாகப்படுத்துங்கள். இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளைக் குவிக்க என் நல்வாழ்த்துகள் முரளி!
==========================================================
ஒரு (அவசியமான) பின்குறிப்பு : முரளிதரனைப் பாராட்டுகிற சுவாரஸ்யத்தில் நீங்கள் படித்த இந்தக் கதையை ரசித்தீர்களா இல்லையா என்பதைக் குறிப்பிட மறந்துடாதீஙக மக்களே... ஹி... ஹி... ஹி...!
==========================================================

93 comments:

  1. முரளிதரன் ஐயா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிய உங்களுக்கு மகிழ்வான நன்றி ஜெயக்குமார் ஸார்.

      Delete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
    Replies
    1. புதிய திரட்டியா...? அவசியம் பயன்படுத்திக் கொள்கிறோம் நாங்கள். நன்றி.

      Delete
    2. ஐயா நிர்வாகி,"நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்" ..........போதும் ஒரு தடவை விளம்பரப்படுத்தியது!பதிவுக்கும் ஊக்கம் கொடுங்கள்,இல்லாவிடில் கண்டு கொள்ள 'நாதி' இருக்காது.

      Delete
  3. ஹா ஹா.. பஸ் மேட்டர் எதிர்பாராத திருப்பம். யாரையுமே நம்ப முடியலையே...

    முரளி சார், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். வாத்தியார், சேட்டைக்காரன் ஸ்டைலில் எழுதமுடியும்னு நிரூபிச்சிட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. முரளியைப் பாராட்டி வாழ்த்தி, மறக்காம என் கதையை ரசிச்சதையும் சொன்ன ஸ்.பைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  4. உங்க கதையில கடைசியில வச்சீங்க பாருங்க டுவிஸ்டு. எதிர் பார்க்கவே இல்லை.
    சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்த உங்களுக்கு மகிழ்வான என் நன்றி.

      Delete
  5. ஹஹஹா.. செம்ம வாத்தியாரே.. எதிர்பார்க்கவேயில்ல இப்படி ஒரு ட்விஸ்ட.. அருமை

    ReplyDelete
    Replies
    1. ட்விஸ்டை ரசித்த ஆவிக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  6. முரளிதரன் பாஸ்! வித்தியாசமான நடை, களம் ன்னு யாரும் கண்டுபிடிக்காத மாதிரி அசத்தீட்டீங்க.. சூப்பர்..! குமுதம் இதழில் வந்ததுக்கும் வாழ்த்துகள்.. வாங்கிப் படிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. இத... இதத்தான் எதிர்பார்த்தேன் ஆனந்து. அவசியம் குமுதம் வாங்கிப் படிச்சுட்டு அவருக்கு தொலைபேசுங்க.

      Delete
  7. சரிதா கதையை உங்கள் வலைப் பக்கத்தில் வெளியிட்டமைக்கு நன்றி.சொதப்பி விடுவோமோ என்ற அச்சமும் இருந்தது.உங்கள் கச்சிதமான எடிட்டிங்கிற்கு நன்றி.

    இந்த அளவுக்கு வரவேற்பு கடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அந்த பெருமை அனைத்தும் சரிதா என்ற பாத்திரத்தை படைத்த உங்களையே சாரும்.
    ஒருவர் கூட என் பெயரை கணிக்காதது மட்டும் சின்ன ஏமாற்றமாக இருந்தாலும் கணிக்க முடியாத அளவுக்கு உங்கள பாணியில் இருந்தது என்றும் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. சரியான நேரத்தில் அழகான கற்பனையுடன் நகைச்சுவை ததும்ப எழுதியிருந்தீர்கள் நீங்கள். உண்மையில் இதை வெளியிட்டதில் எனக்குத்தான் அதிக மகிழ்வு முரளி.

      Delete
  8. //கவிதை, கட்டுரை என்று எல்லா ஏரியாவிலும் ஒரு கை பார்க்கும் இவர் நகைச்சுவைப் பேட்டையில் மட்டும் ஒதுங்கவில்லையே என்ற சிறு மனக்குறை எனக்கிருந்தது//
    வடிவேலுவை கதாபாத்திரமாக வைத்து நகைச்சுவை கதைகள் சில எழுதி இருக்கிறேன். அவை என் கற்பனையில் வடி வேலு என்ற டேப் இல் உள்ளன,
    ஆரம்பத்தில் அவை என் வலைப்பகா பார்வை அதிகரிப்பதற்கு உதவின

    ReplyDelete
    Replies
    1. வடிவேலு காமெடி நகைச்சுவை கதை ஒன்று நான் படித்து கருத்திட்டது நினைவில் உள்ளது. மற்றவை... உடனே பார்க்கிறேன். நன்றி நண்பா.

      Delete
  9. குமுதத்தில் கதை வெளியாகி இருப்பதை சென்னை பித்தன் ஐயா நேற்று காலையில் எனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து வாழ்த்திவிட்டார். என்னை வலைசரத்தில் முதலில் அறிமுகப் படுத்தியவரும் அவரே. முக்கிய அலுவலக வேலை காரணமாக நேற்று குமுதம் வாங்க முடியவில்லை இப்போதுதான் வாங்கிப் படித்தேன்.மகிழ்ச்சியாய் இருக்கிறது.
    தொடக்கத்தில் இருந்தே எனக்கு ஊக்கம் தந்தவர்களில் சென்னை பித்தன் அவர்கள் மிக முக்கியமானவர்.அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்த செய்தியை உங்கள் பக்கத்தில் வெளியிட்டு என்னையும் பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்றி கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இன்னும் பல சிகரங்களை நீங்கள் எட்ட மகிழ்வுடன் என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள் முரளி.

      Delete
  10. முரளிதரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    கதை முடிவு.. எதிர்பாராத திருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. முரளியைப் பாராட்டி கதையையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  11. நான் சரக்கு அடித்துவிட்டு சொன்னபதில் மிக சரியாக இருக்கிறது அதனால் பரிசு எனக்குதான் தர வேண்டும் அழுகுணி ஆட்டம் எல்லாம் கூடாது ஆனால் அதை முரளிக்கு கொடுத்ததினால் நான் பேசாம போகிறேன். இல்லை வூடு புகுந்து ரகளை பண்ணி இருப்பேன்

    ReplyDelete
    Replies
    1. என் கதையில் நான் உங்கள் பேரைக் குறிப்பிட, ராஜி மடடும்தான் என்கைக் குறிப்பிடுவார்னு நீங்க தப்பாச் சொன்னதால் கோபப்பட்டு உங்களுக்கு புத்தகப் பரிசு கொடுக்கலையாக்கும்..! (நீங்கள் இந்தியா வந்தால் என்னைப் பார்க்காம போக மாட்டீங்க. அப்ப உங்களுக்கு பல புத்தகங்கள் பரிசு உண்டு.)

      Delete
    2. இந்த பதில் சரக்கு அடிப்பதற்கு முன்னால் சொன்னது சரக்கு அடித்த பிறகு சொன்னது நிச்சயம் ஒரு தமிழ் பதிவர்தான் என்று சொல்லி இருக்கிறேன் முரளி ஒரு தமிழ் பதிவர்தானே அப்ப என் பதில் சரிதானே ஹீ.ஹீ

      Delete
  12. சரிதாயணம் பார்ட் 2 வெளியிட்டால் இதனையும் சேர்த்துக் கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் தயார் ஆகவிருக்கும் அதில் அவசியம் இதற்கும் இடம் உண்டு. அனுமதித்த பெருந்தன்மைக்கு மனம் நிறைய நன்றி நண்பா.

      Delete
  13. முரளிதான் எழுதியது என்றால் நம்ப முடியவில்லை ஒரு கணம்... முரளி எல்லா ஏரியாவிலும் கலக்குகிறார். அவர் இப்படி எழுதியதால் எல்லாப் பதிவர்களின் டெபாசிட்டும் காலியாகிவிட்டது. எல்லோரும் இடத்தை காலி பண்ணுங்கப்பா..


    முரளி எழுதியதை என் வூட்டுகாரம்மா பார்க்காம இருக்கணும் இல்லைன்னா அந்த தம்பி எவ்வளவு அழகாக எழுதுகிறது. நீ எல்லாம் என்ன எழுதுகிறே என்று பூரிக்கட்டையால் அடி கிடைக்கும்...ஹும்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. அருமையாச் சொன்னீங்க மதுரைத் தமிழா... எனக்கும் உங்க ஃபீலிங்தான்.

      Delete
  14. டி.என்.முரளிதரன் அவர்களிடமிருந்து இப்படியொரு நகைச்சுவையை எதிர்ப்பாக்கவேயில்லை... அவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. முரளிதரனின் எழுத்தை ரசித்துப் பாராட்டி வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. நீங்கள் கேட்டவை...

    சில "பாடல்" வரியுள்ள பாடல் வரிகளுடன், நமது வலைத்தளத்தில் ஆடியோ (mp3) ஃபைலை இணைப்பதற்கான விளக்கமும்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

    ReplyDelete
    Replies
    1. மிகப் பயன்தரும் பகிர்வு டி.டி. வலையுலக நண்பர்களின் சார்பாக நன்றி.

      Delete
  16. ஒரே நாளில் முரளிதரன் வலையுலக சூப்பர் ஸ்டாராகிவிட்டார்...

    ReplyDelete
  17. எம்ஜியாருக்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் அது போலதான் இங்கும் வாத்தியாருக்கு அப்புறம் இந்த சூப்பர் ஸ்டார்

    ReplyDelete
    Replies
    1. முரளி... இங்க கவனிங்க... மதுரைத்தமிழன் உங்கட்டருந்தும் ஒரு பரிசு வாங்க அடிபோடுறாரு. ஹி... ஹி... ஹி...

      Delete
  18. முரளியை புகழ்வதற்கே நேரம் இல்லை அதனால் பதிவர்களுக்கு உங்கள் கதையை படித்து ரசித்து கருத்திட நேரமில்லை அதனால் அதை கட் & பேஸ்ட் பண்ணி புதிய பதிவாகத்தான் நீங்கள் போட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்! இப்புடி ஒரேயடியா முரளி க்ட்சிக்கு மாறினா எப்படி? அப்புறம் உங்களை கட்சித்தாவல் தடைச் சட்டத்துல கைது பண்ண வெச்சிருவேன். ஆமா...

      Delete
  19. தெளிவாக சொல்லிச் சென்ற உங்கள் கதை அருமை இறுதியில் வந்த திருப்பமும் அருமை. கதைக்கு போட்டு இருந்த மாருதியின் ஒவியம் என்னை கவர்ந்தது நீண்ட நாட்களுக்கு அப்புறம் அதை பார்க்கிறேன் மொத்தத்தில் இந்த பதிவு மிக அருமை அருமை அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. கதையையும் அழகான மாருதி ஓவியத்தையும் ரசிச்சதை சொன்னதால தப்பிச்சீங்க... உங்களுக்கான அரெஸ்ட் வாரண்ட்டை கேன்ச்ல் பண்யிட்டேன்... ஹா... ஹா... ஹா... மிக்க நன்றிப்பா.

      Delete
  20. அமைதிக்குப் பின்னே இப்படி ஒரு புயல் இருக்கா!? சூப்பரப்பு!

    ReplyDelete
    Replies
    1. கதையினை ரசித்த தங்கைக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  21. முரளி சாரா இப்படி எழுதினார்!? ஆச்சர்ய்ம்தான். அவரின் கதையைப் படிக்க இப்பவே குமுதம் வாங்கி வரச் சொல்றென். தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா!

    ReplyDelete
    Replies
    1. நம்மவர்கள் அனைவரும் குமுதக் கதையைப் படித்து அவருக்கு ஊக்கம் தரணும்ங்கறதுதான் என் விருப்பம். உடனே படிச்சுட்டு கருத்து சொல்லும்மா...

      Delete

    2. முரளியின் கதை வெளிவந்திருப்பதினால் அதை நீங்கள் அறிவித்ததினால் இந்த வார குமுதம் விற்பனை மிகவும் அதிகரித்திருப்பதாக இந்தியா முழுவது பரபரப்பாக பேசப்படுகிறதாமே அது உண்மையா...

      Delete
    3. அவ்வ்வ்வ்வ்! வசந்திகளை... ஸாரி, வதந்திகளை நம்பாதீர்கள் பொதுமக்களே...

      Delete
  22. அச்சோசோ கவிதா ?!
    நான் இப்போ தான் சரிதா பதிவே படிச்சேன் பாலா அண்ணா (முன்னாடியே படிச்சமட்டும் சரியா சொல்லிருப்பியானா கேட்டீங்க ) முரளிதரன் சார் இதுக்கு முந்தின பதிவு கூட ஜோக்ஸ் தானே போட்டிருந்தார். வாழ்த்துக்கள் முரளி சார். குமுதம் வாங்கிப்பார்க்கிறேன் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்து முரளியைப் பாராட்டிய தங்கைக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  23. கவிதா கதையில் இப்படியொரு டிவிஸ்டை எதிர்பார்க்கலை...

    நகைச்சுவைக் கதைக்கும், குமுதம் இதழ் வெளியீட்டிற்கும் முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்
    ஒன்று புரிந்தது ..யாரையும் இவர் இப்படித்தான் என பிராண்ட் செய்ய முடியாதென்பது.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் எழில். யாரையும் சுலபமாய் கருதிவிடக் கூடாது என்பதும் நான் கற்ற பாடங்களுள் ஒன்று. கதையை ரசித்து முரளியைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  24. வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?//எனக்குப் பரிச்சயமில்லாத பதிவர்.இனி தொடர்வேன் அவர் பதிவுகளிலும்.வாழ்த்துக்கள் முரளி சார்,இந்தப் பதிவுக்கும்,குமுதம் இதழில் இடம் பிடித்தமைக்கும்!///நன்றி அறிமுகத்துக்கு,பால கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்து நண்பரை வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  25. கவிதா ன்னு பேருக்குப் பதிலா சாந்தி ன்னு வைக்க முடியாது,கூடாது.ஹ!ஹ!!ஹா!!!கதையின் ஓட்டம் முடிவில் தடுமாற வைத்தது.இது தான் தேர்ந்த ஒரு எழுத்தாளனின் மெருகு!

    ReplyDelete
    Replies
    1. எழுத்தினைப் பாராட்டி மகிழ்வு தந்த உங்களுக்கு மனநிறைவுடன் என் நன்றி.

      Delete
  26. அமைதிக்கு பின்னே இத்த க(நி)லவரமா?
    முரளி சார் தான் எழுதி இருப்பார்னு நினைச்சேன் இங்க வந்து பார்த்தா முடிவும் சொல்லிட்டிருக்கீங்க...ஏன்னா முரளி சார் ஏற்கனவே வடிவேலுவை வைச்சு கலாய்ச்சிருக்காரு.. சரி சரி சொல்லாம போனதால பரிசு மிஸ் ஆயிடுச்சு... பரிசு வேற யாருக்காச்சும் கிடைக்கட்டுமே என்ற பெருந்தன்மைதான் ...குமுதம் இதழில் சிறுகதை வந்ததுக்கு முரளி சாருக்கு பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்... விரைவில் பால கணேஷ் சாரையும் வார இதழ்களில் பார்க்க போறோம்...

    ReplyDelete
    Replies
    1. என்னே பெருந்தன்மை உஸா... ஹா... ஹா... ஹா... முரளியை வாழ்த்தி என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கும் உற்சாக டானிக்கை அள்ளித் தந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாம நான் இங்க ‘ழே’ன்னு முழிச்சிட்டிருக்கேன்.

      Delete
  27. ஹாஹஅஹா... இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும்னு நினைக்கவே இல்லையே!!!
    முரளி சார் கு, வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. கதையின் ட்விஸ்டை ரசித்து, முரளியை வாழ்த்திய உனக்கு என் மகிழ்வான நன்றிம்மா.

      Delete
  28. முரளிக்குப் பாராட்டுகள். இங்கு எழுதியிருந்த பதிவுக்கும் (புத்தகம் போச்சே) குமுதத்தில் சிறுகதைக்கும்.

    உங்கள் கத்தில் ட்விஸ்ட் எதிர்பாராத திருப்பம். குழப்புவதற்கு நடுவில் காலேஜ் டேஸ் பிளாஷ் பேக் வேறு!

    ReplyDelete
    Replies
    1. 'கதையில்' 'கத்தில்' ஆனதற்கு மன்னிச்சுடுங்க! :)

      Delete
    2. முரளியை பாராட்டி. என் கதையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸ்ரீ.

      Delete
  29. எதிர் பார்க்காத முடிவு..... அருமை.....

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  30. கணேஷ், வாழ்த்துகள். ஏ அப்பா கதை பஸ்ஸைவிடப் போன வேகம் என்ன. அது முடிந்த விதம் என்ன. வாத்தியாருக்கேற்ற சீடன். வாழ்த்துகள் மா. முரளிதரன் பதிவையும் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றிம்மா.

      Delete
  31. அவர்கள் .. சொல்வதை வழி மொழிலிறேன். அவர் கதை அறிவிப்பைத் தனியாகவும் உங்கள் கதையைத் தனியாகவும் வெளியிடணும்னு கேட்டுக்கறேன். கணேஷ்.

    ReplyDelete
  32. 90 (!!!) வயசு ஆகியும் இன்னும் சின்ன பையன்கள் அளவுக்கு கதை எழுதி கலக்குறிங்க சார் ..... செம ஜாலியான கதை முடிவு கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. அடடே... எனன கலைஞர் தாத்தாவுக்கு நிகரா உயர்த்திட்டீங்களே வயசால... அதுக்கும் கதைய ரசிச்சதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்கோ...!

      Delete
  33. உங்களை இன்னும் வெகுஜன பத்திரிகைகளில் பார்க்க / படிக்க முடியாதது எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்! உங்கள் கதையின் ப்ரமாதமான நடையும், எதிர் பார்க்கமுடியாத முடிவும் பமிகுந்த பாராட்டுக்கு உரியவை.
    திரு முரளி 'உங்கள் நடை / நகைசுவை' இரண்டையும் சுலபமாக வசப் படுத்திக் கொண்டுவிட்டார். அவர் பதிவுகளையும் படிக்க ஆவலாயிருக்கிறேன். - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. எழுத்து நடை சிறப்பாக இருக்கிறதென்று நீங்கள் சொன்னது உண்மையில் ஒரு விருது பெற்றதற்குச் சமமாக உணர்கிறேன். என் படைப்பை ரசித்து முரளியையும் வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  34. உண்மையிலேயே பல்சுவை பதிவர் என்ற பட்டம் முரளிதரன் சாருக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்! பல விசயங்களில் கலக்குகிறார். குமுதத்தில் வெளிவந்தமைக்கு பாராட்டுக்கள்! வாங்கி பார்க்கிறேன்! உங்க கதையில் கடைசி டிவிஸ்ட் செமையாக இருந்தது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முரளியைப் பாராட்டி என் கதையையும் ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  35. இவ்வளவு நகைச்சுவையாக முரளிதரன் எழுதுவார் என்று நினைக்க வில்லை.
    அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    அமைதியின் பின்னே..... இப்படியான முடிவா...? ம்ம்ம் ரசித்தேன் கணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. முரளிதரனின் நகைச்சுவையை ரசித்து என் கதையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  36. சென்னையில் முரளியை சந்தித்தபோதே சொன்னதாக நினைவு. பாரதி படம் போட்டு பதிவு எழுதும் இவரை ப் பார்த்து இன்னபடி என்று கணிக்க இயலாது என்று. நச் என்ற நகைச் சுவைக் கதை. பாராட்டுக்கள் உங்களுக்கும் முரளிக்கும்

    ReplyDelete
    Replies
    1. எங்களைப் பாராட்டிய உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  37. தாராளமாக பாராட்டுக்களை வாரி வழங்கிய வள்ளல் மதுரைத் தமிழனுக்கு மனமார்ந்த நன்றி .
    ஏற்கனவே காதல் கடித போட்டியின்போது என் கடிதத்திற்கு மதுரைத் தமிழனின் பாராட்டுக்கள் மறக்க முடியாதது.

    ReplyDelete
  38. wow what a twist in last two lines of the post. TOTALLY UNEXPECTED ONE

    ReplyDelete
    Replies
    1. ட்விஸ்ட்டை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  39. நடைமுறையில் உள்ளதை பட்டவர்தனமாய் எழுதிய முரளிக்கும் இதை வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதையை நான் எழுதவில்லை முந்தைய கதையைத்தான் நான் எழுதி இருந்தேன் கண்ணதாசன் சார்

      Delete
  40. குமுதம் இதழில் தங்கள் கதை வெளியானமைக்கு வாழ்த்துக்கள் முரளிதரன்.

    எம்.பி.ஆகிறாள் சரிதா கதையை முரளிதரன் எழுதியிருக்கலாம் என்று எனக்குள் சிறு சந்தேகம் எழுந்தது. ஆஹா... அதை வெளிப்படுத்தாமல் போனோமே என்று என்னையே குட்டிக்கொள்கிறேன். (கணேஷின் வழக்கமான நண்பர் வட்டாரத்தில் புதிதாய் முரளிதரன் பெயரை இணைத்திருப்பதைக் கொண்டுதான் அந்தப் பெயரை யூகித்தேன். மற்றபடி எழுத்துநடையோ கருத்தோ அவரை நினைவுபடுத்தவில்லை.)

    அமைதிக்குப் பின்னே... இப்படியொரு அபத்தம் இருக்குமென்று இறுதிவரை நினைக்கமுடியாத எழுத்தோட்டம், பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. எங்களைப் பாராட்டிய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிம்மா கீதா.

      Delete
  41. வணக்கம் சகோதரா !
    குமுதத்தில் வந்தமைக்கு அவர் தளத்தில் வாழ்த்திவிட்டேன். இபொழுது தான் கதையை தெரிந்து கொண்டேன். முடிவில் இப்படி ஒரு திருப்பமா எதிர்பார்க்கவே இல்லை நன்று நன்று !வாழ்த்துக்கள் ! இருவருக்கும். குமுதம் வாங்கி பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்துப் படித்து முரளியையும் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி இனியா.

      Delete
  42. எதிர்பார்த்தேன் - எதிர்பார்க்கலை .

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததை ரத்தினச் சுருக்கமாய்ச் சொன்ன ஜீவனுக்கு நன்றிகள் பல.

      Delete
  43. இவனுடன் வந்தவள் அவனையும் -இவனுக்குத் தெரியாமல்- ரசித்திருப்பாளே அன்றி கையையா ஓங்கியிருப்பாள்? லாஜிக் இடிக்குதே? கு.ப.ரா.வின் “ஆற்றாமை“ கதை அப்படித்தான் முடியும். இருந்தாலும் கடைசி ரெண்டுவரித் திருப்பம் குமுதம் ஒருபக்கக் கதைப்பகுதியில் பிரசுரமாகத் தக்கது. முரளிக்கு அவர் தளத்திலும் அலைபேசியிலும் வாழ்த்திவிட்டேன்.அடுத்து உங்களுக்குத்தான்...

    ReplyDelete
    Replies
    1. அவள் விலைமகள் அல்லவே... நீங்கள் சொன்னது போல எல்லோரையும் ரசிப்பதற்கு...? முரளியை வாழ்த்தியதுடன் என்னையும் வாழ்த்துவேன் என்ற தங்களின் வரிகளின் பின்னாலுள்ள என் மீதான நம்பிக்கை எனக்கு உற்சாக டானிக். மிகமிகமிக மகிழ்வுடன் நன்றி ஸார்.

      Delete
  44. அமைதிக்குப் பின்னே இப்படி ஒரு காரணமா? நல்ல ட்விஸ்ட் கணேஷ்.....

    முரளிதரன் “சரிதாயணம்” கதையில் கலக்கி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்து முரளியை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வான நன்றி.

      Delete
  45. ‘ஷாக்’ ஆன உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube