சில விஷயங்களை திரும்பத் திரும்பச் சொல்ல நேர்கையில் சற்றே அயற்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க முடிவதில்லை. நேற்று காலை ஆ.வி.அலுவலகம் சென்றுவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஜெமினி ப்ரிட்ஜின் மத்தியப் பகுதியை பஸ் நெருங்குகையில் எதிர் சாரியில் வாகனங்கள் தேங்கி நிற்பதைக் காண முடிந்தது. என்னவெள்று பார்த்தால்... விபத்து! மோட்டார் பைக்கில் அதிவேஏஏஏகமாக வந்த ஒரு ஆசாமி மற்றொரு வாகனத்தை முந்த முயன்று ஸ்கிட் ஆகி விழுந்திருக்கிறான். வாகனம் ஒருபுறம் குப்பையாக விழுந்து கிடக்க, உணர்வற்று கண்கள் செருகிக் கிடந்த அவனை மூன்று பேர் சேர்ந்து துக்கி அருகிலிருந்த ஆட்டோவில் ஏற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அச்சமயம் ஆட்டோவை நான் பயணித்த பஸ் நெருங்க... ஐயையோ... அந்த ஆசாமியின் முகமெல்லாம் ரத்தத்தில் குளித்திருந்தது. ஜன்னல் ஓரமிருந்து க்ளோஸப்பில் பார்க்க நேர்ந்தது வயிற்றைப் பிசைந்தது.
சென்னை சாலைகளில் பைக்கில் செல்லும் ஆசாமிகள் பெரும்பாலரிடம் இந்த கண்மூடித்தனமான வேகத்தை நான் பார்க்கிறேன். பைக் விற்கும் கம்பெனிகள் ‘எங்க பைக்ல 80 கிமீ வேகம் போகலாம்’ ‘எங்க பைக்ல 90 கி,மீ, வேகம் போகலாம்’னுல்லாம் விளம்பரம் பண்ணி விக்கறானுங்க. இவர்களும் அத்தனை வேகம் நம் நகர நெரிசலில் சாத்தியமா என்பதை கிஞ்சித்தும் நினையாமல் அவசர வேலை என்று சொல்லிக் கொண்டோ... இல்லை, ஒரு த்ரில் கருதியோ... ப்ளைட் ஓட்டுவது போல ஸும் என்று சவுண்டுடன் வளைந்து வளைந்த பலரை ஒவர்டேக் பண்ணி... கடைசியில் இப்படி ரத்தமுகமாகிறார்கள். சற்றே யோசித்துப் பாருங்கள். இப்படி தலைதெறிக்க பைக்கில் செல்வதால் அதிகம் போனால் பத்து நிமிடங்கள் அவனுக்கு மிச்சமாகியிருக்குமா...? இப்போது... ஆஸ்பத்திரிக்கு தெண்டச் செலவு செய்து கொண்டு குறைந்தது ஒரு வாரத்துக்கேனும் தன் வேலைகள் அனைத்தையும் கெடுத்துக் கொண்டு வெற்றாக படுத்திருக்கப் போகிறான்.
என் மூஞ்சூறு வாகனத்தில் செல்கையில் என்ன அவசரம் எனினும் நான் 30 கி..மீ. வேகத்திற்கு மேல் போனதில்லை. (அது 50 கி,மீ, வேகத்திற்கு மேல போக அனுமதிக்காதுன்றது வேற விஷயம். ஹி... ஹி...) இந்த விபத்தை நான் பார்த்தவரையில் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அடிபட்ட அந்த ஆசாமி தலைக்கவசம் அணிந்திருந்தால் இப்படி ரத்தமுகமமாகி இருக்கமாட்டார் என்பதை அவதானித்தேன். ஆகவே... என் இனிய தமிழ் மக்களே... 1) கண்மூடித்தனமான வேகம் வேண்டாம்... 2) அப்படித்தான்யா போவேன் என்று அடம்பிடித்தீரெனில்... தலைக்கவசத்தை மறக்க வேண்டாம் என்கிற விஷயத்தை மறுமுறையும் வலியுறுத்தி உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
• • • • • • • • • •
நான் எப்போதாவது தொலைக்காட்சிப் பக்கம் பார்வையைத் திருப்பும் ஆசாமி. இன்று எதேச்சையாக ‘ஆதித்யா’ நகைச்சுவைச் சேனல் வைத்தபோது ஒரு நிகழ்ச்சியின் ப்ரோமோ ஓடிக் கொண்டிருந்தது இங்கே நீங்கள் பார்க்கும் படத்தைக் காட்டி நான்கைந்து இளைஞிகளிடம் “இவர் யார் தெரியுமா?” என்று கேட்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். ஒரு பெண்குட்டி, “சார்லி சாப்ளின் மாதிரி இருக்காரு?”ங்குது. இன்னொண்றோ... “எங்க தாத்தா மாதிரி இருக்காது” என்கிறது. அனைவரும் கெக்கெக்கே என்று சிரிக்கிறார்கள். நிகழ்ச்சிக்குப் பேரு ‘தமிழ் பேசுங்க தலைவா’வாம் அடக் கருமாந்தரம் பிடிச்சதுங்களா..!. ப்ள்ளிப் படிப்புல இவரைப் பத்தி எதுவும் படிக்கலையா...? இல்ல... இந்த மாதிரி நிகழ்ச்சில இப்படி கோக்குமாக்காத்தான் பேசணும்னு பேசிக் சிரிக்குதுங்களா? அப்டின்னா கேலி செய்யறதுக்கு தமிழறிஞர்தானா கெடைச்சார்? அஜீத், விஜய்ன்னு எத்தனை நடிகனுங்க இருக்கானுங்க. அவங்களக் காட்டி கேலி பண்ண வேண்டியதுதானே... இந்தக் கழுதைங்களுக்கு அவனுங்களைல்லாம் நல்லாவே தெரிஞ்சிருக்கும்.
இதேமாதிரி கூத்தை இமான் அண்ணாச்சி எனபவர் நடத்தும் இன்னொரு நிகழ்விலும் காணக் கிடைத்தது. ‘இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?’ என்று அவர் கேட்கும் கேள்விக்கு, ’பிரதீபா பாட்டில்’ என்கிறது ஒரு ஜந்து. இன்னொரு ஜந்து அழுத்தம் திருத்தமாக ‘ராஜீவ்காந்தி’ என்கிறது. பிறிதொரு ஜந்துவோ, ‘வி.பி.சிங்’ என்று பதிலிறுத்து பல்லிளிக்கிறது. இந்த பிரகஸ்பதிகள் விட்டால் ஜைல்சிங், ராஜ்நாராயணன் என்று பின்னோக்கிப் போய் மகாத்மா காந்திதான் என்று பதில் சொன்னாலும் சொல்லும்கள் போல...! நிஜமாவே ஜனங்க இவ்வளவு முட்டாள்களா... இல்லை காமிரா முன்னால முட்டாள் மாதிரி நடிக்கறாங்களான்னுதான் எனக்குப் புரியலை. தொலைக்காட்சில முகம் வரணும்கறதுக்காக இப்படிப் பேசறாங்கன்னா... அந்த நிகழ்ச்சியை உங்க உறவு, நட்புகளோட சேர்ந்து பாக்கறப்ப கொஞ்சமாச்சும் மானம், ரோஷம், வெக்கம்... இதுமாதிரியான உணர்ச்சிகள் எட்டிப் பார்க்காதா என்ன? சற்திரபாபுவின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “ஒண்ணுமே புரியலே உலகத்துலே...!”
• • • • • • • • • •
கூல்...! இப்போ கொஞ்சம் ஜாலியா விளையாடலாம் நாம. கீழே நான்கு எழுத்தாளர்களோட படைப்புகள்லருந்து சில வரிகள் தந்திருக்கேன். நடையை வைத்து எழுத்தாளர்கள் யார் என்பதைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம். தெரியலன்னா நாளைக்கு விடையை அப்டேட் பண்ணுவேன். அப்ப பாத்துக்கலாம்.
1) “அவதானா” மைதிலி சமையலறைப் பக்கம் ஜாடையாகப் பார்க்கிறாள். அவளேதான்... அந்தக் கண்ணும், மூக்கும், அச்சில் வார்த்தாற் போன்ற முகமும் யாருக்கு வரும்? அலையலையாய் முதுகில் புரளும் கூந்தலும் அவள் மாயவரம் சந்நிதித் தெரு அபயம்தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால்... பசுமை படர்ந்த முகமும், நெற்றியில் பளிச்சிடும் குங்குமமும்தான் மைதிலியின் சந்தேகத்திற்குக் காரணம்.
2) நான் உங்களை மாதிரியில்லே சார். இன்னமும் பழைய பஞ்சாங்கம். திணறத் திணற ஜீன்ஸ் எல்லாம் போடுவது கிடையாது. சுத்தமான மல்வேட்டி, கிளாக்ஸோ ஜிப்பா, தோளில் கதர்த்துண்டு (இதையெல்லாம் பார்த்து என் வயசைப் பற்றி சந்தேகப்பட்டால் உங்களுக்கு விமோசனமே கிடையாது. யெங் மேன்! இப்பதான் பெண் பார்க்க பூனாவுக்குப் போகிறேனாக்கும்) சிகரெட், சுருட்டு பழக்கமெல்லாம் நோ. அதனால்தான் என் மூச்சு சீராக முழுசாக ஆரோக்கியமாக இருக்கும். ஆல்கஹால் சேர்ந்தது என்கிற ஒரே காரணத்துக்காக என்னதான் இருமல் வந்தாலும் சிரப்பைக்கூட சாப்பிட மாட்டேன். அவ்வளது இது... சுத்தம்!
3) நீரும் நானும் ஐஸ்வர்யா ராயும், கிளிண்டனும், சோனியா காந்தியும் உறவுதான். அதை நிரூபிக்கும் ஆவணங்கள்தான் நம்மிடம் இல்லை. ராஜாக்களுக்கும் அரச குலத்தவர்களுக்கும் ஓரளவு இருக்கிறது. அண்மையில் ராஜராஜசோழரின் வம்சத்தவர் ஒருவர் தஞ்சாவூர் அருகில் எஸ்.டி.டி. பூத் வைத்திருப்பதாகச் செய்தி படித்தேன். இதை நம்ப எனக்குத் தயக்கமே இல்லை. இந்த சிந்தனையை விரிவுபடுத்தினால் மேலும் வினோதங்கள் எழும். நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஒருசில மனிதர்களே இருந்தனர். அவர்களிடமிருந்துதான் உலகின் மக்கள் அனைவரும் கிளைத்தோம். விதிவிலக்கே இல்லை.
4) குறை நிலா மேகத்தை சல்லாத் துணியாகப் போர்த்தியிருந்தது. நட்சத்திரங்கள் முறை வைத்து மின்னிக் கொண்டிருந்தன. சென்னை துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியிருந்த கப்பல்களின் வெளிச்சங்கள் ‘கடலில் வைரங்கள் கொட்டப்பட்டதைப் போல்’ என்று உபமானங்கள் யோசிக்க வைத்தன. சரம் சரமாக விளக்குகள் போட்டு மண்டை மண்டையாக மைக்குகள் கட்டி சுற்றுவட்டாரக் குடியிருப்புகளில் யாரையும் தூங்கவிடாமல் ‘எதிர்க்கட்சி’ நண்பர்களுக்கு மைக்கில் தேர்தல் சவால்கள் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த நாலு பேர் : 1.அனுராதா ரமணன், 2.ராஜேந்திரகுமார், 3.சுஜாதா, 4.பட்டுக்கோட்டை பிரபாகர்.
|
|
Tweet | ||
வேகம் குறித்து அனைவரிடம் உள்ள ஆதங்கத்தை
ReplyDeleteமிகச் சரியாகப் பதிவு செய்துள்ளீர்கள்
புதிருக்கான விடையை நாளைதான்
தெரிந்து கொள்ளவேண்டும்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அவன் அங்க ஸ்கிட்டாகி விழுந்தப்ப பின்னால ஒரு ஆட்டோவும் காரும் வந்ததால பிரேக் போட்டு நின்னுட்டாங்க. ஒரு பஸ்ஸோ, தண்ணி லாரியோ வந்திருந்தா மனுசன் கூழாகியிருப்பான். அதை நெனக்கறப்பதான் எனக்கு பகீர்ங்குது. மிக்க நன்றி ஸார்.
Deletetha.ma 2
ReplyDeleteavar, avar. unarnthal than ithu pondra vipathukal thadukka padum sir. apparam antha tv chanal program nanum parthu iruken. ninga sonnathu sari tan sir.
ReplyDeleteஎன் கருத்தை ஆமோதித்த மகேஷுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteவேகம் விவேகமல்ல என்பதை இந்த வாகன ஓட்டிகள் எப்போது தான் புரிந்து கொள்வார்களோ.....
ReplyDeleteதொலைக்காட்சியில் வரும்போது சிலர் பேசுவது மஹா எரிச்சல் தான் கணேஷ்.....
//நடையை வைத்து எழுத்தாளர்கள் யார் என்பதைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம். தெரியலன்னா நாளைக்கு விடையை அப்டேட் பண்ணுவேன்.//
இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சு இருக்கு! :)
விளையாட்டுல ஈடுபடுவீங்கன்னுல்ல எதிர்பார்த்தேன்... என் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteநாளைக்கு படிச்சுகிறேன் ஸார்.. விடையோட.. ஹிஹிஹி..
ReplyDeleteஆஹா... மூணாவது ஆசாமி உன் ஃபேவரைட் ஆச்சே... சொல்லிடுவேன்னு நினைச்சேன். பின்(ஊக்கு)வாங்கிட்டியே ஆவி...! மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல பகிர்வு.///ஏன் இந்த வேகம்?நல்ல விஷயத்தை,உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கிறீர்கள்.வெளி நாடுகளில்,பைக்/ஸ்கூட்டி ட்டுபவர்கள் 'ஹெல்மெட்'கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உண்டு.நம் நாட்டில் நாமே உணர்ந்து தலைக் கவசம் அணிந்து நடை முறைப் படுத்தலாமே?
ReplyDeleteநிதானமான வேகத்தில் செல்பவர்களை விட, கண்மூடித்தனமாக அதிவேகத்தில் செல்பவர்களுக்கு அவசியம் அது தேவைதான் நண்பரே. பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.
Deleteநேற்று காலை ஆ.வி.அலுவலகம் சென்றுவிட்டு......///அவரோட ஆபீசுக்கு நீங்க ஏன் போனீங்க?ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteநீங்க நினைக்கற மாதிரி அது ‘நம்ம ஆவி’ இல்லிங்கோ.. ஆ(னந்த)வி(கடன்) அலுவலகம் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.
DeleteGood post.
ReplyDeleteIman Annachi is testing the IQ level of the common public. So please do not blame him. You have to blame the common public only who are interested to know about the latest films of their favourite hero than other matters which matters the most.
உண்மைதான் மோகன்... மக்களைத்தான் நொந்து கொள்ள வேண்டும். மிக்க நன்றி.
Deleteமுகநூலில் சரியான தலைப்புடன்... அதிக வேகம் அதிக ஆபத்து - எப்போது உணர்வார்களோ...?
ReplyDeleteஇமான் அண்ணாச்சி - குட்டீஸ் சுட்டீஸ் தவறாமல் பார்ப்பதுண்டு...
நீங்கள் சொன்ன நிகழ்ச்சியால் - அடிக்கடி தலையில் அடித்துக் கொண்டு தலை வலிப்பதால் பார்ப்பதில்லை...!
நானும் நாளைக்கு வருகிறேன்...
நேத்து அந்த சம்பவத்தைப் பார்த்ததும் கோபத்துல முகநூல்ல அந்தத் தலைப்பை வெச்சுட்டேன் டிடி. அப்புறம்தான் ரொம்ப கோவமாயிட்டமோன்னு தோணிச்சு. அதான் ரௌத்திரம் தவிர்த்து மைல்டா ப்ளாக்ல எழுதிட்டேன் நாளையும் வரும் உங்களுக்கு மிக்க நன்றி.
Deleteஅன்பின் பாலகணேஷர்,
ReplyDeleteஇந்த பைக் ஓட்டிகள் மெதுவாக ஓட்டினால் மானக்கேடு என நினைக்கிறார்கள், கடந்த சனி மாலை 6 மணி அளவில்,மதுரவாயல் பைப்பாசில் திருநீர்மலையருகே , ஒரு பைக் ஓட்டி ,நேராக கண்டெயினர் லாரி அடில போயி "அரைப்பட்டுக்கிடந்தார்" கிட்டத்தட்ட 2 மணி நேரம் டிராபிக் ஜாம், ஒரு லேனில் மட்டும் வண்டியை அனுப்பினார்கள், அது வரைக்கும் உடலை எடுக்கவேயில்லை, ஆர்வத்துல நானும் சன்னல் வழியா எட்டிப்பார்த்துட்டு ரெண்டு நாளைக்கு "கண்ணுலவே நின்னுச்சு" அவ்வ்!
# பாரதிதாசனை மக்களுக்கு தெரியலைனு "டீவிக்காரங்க" சொல்லுறாங்களே ,என்னிக்காவது அவர் பற்றிய நிகழ்ச்சிய போட்டிருக்காங்களா,இல்லை அவர் பிறந்த நாள்,நினைவுநாள் என படம், செய்தி தொகுப்பு என வெளியிட்டு இருக்காங்களா? நமீதாவுக்கு பிறந்த நாள் என்றால் கூட சிறப்பு நிகழ்ச்சி வழங்கும் தொ.காவினர் , மக்களுக்கு தெரியலையே என சொன்னால் சிரிப்பு தான் வருது.
பாரதிதாசனின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை தொகுத்து பாவேந்தம் என்ற நூலை ,த.கோவேந்தன் என்பவர் எழுதியுள்ளார் ,அதில் பல சுவையான சம்பவங்கள் இருக்கு, அந்த காலத்தில் விபூதி வீரமுத்து என ஒருவர் வேலூரில் சுயமரியாதை இயக்கத்தினரைப்பற்றி கேவலமாக பேசினார் என கோவேந்தன் அடித்துவிட்டாராம், அதைக்கேள்விப்பட்ட பாவேந்தர் , ஏன்பா அடிச்சனு கேட்டுவிட்டு ,ஆளை அடிச்சு விடக்கூடாது ,முடிச்சு இருக்கணும் இவனமாரி ஆளுங்க எல்லாம் சமூகக்கேடு என்றாராம் கவிஞர்களிலேயே "முரட்டுக்குணமும்" கொண்டவர் குஸ்தி பயின்றவராம், ஜிப்பாவை முண்டா தெரிய மடக்கி சுருட்டிக்கிட்டு "சண்டியர்" போல நடப்பாராம் :-))
நல்லவேளை இந்த கூத்தை எல்லாம் பார்க்க அவரில்ல பார்த்திருந்தா "முடிக்க" சொல்லி இருப்பார் :-))
----------------
# நான்கு பத்திகளை கொடுத்தீங்களே ,இன்னும் கொஞ்சம் டிரேட்மார்க் எழுத்து நடை தெரியிறாப்போல கொடுத்திருக்கலாம், எனக்கு அந்த அளவுக்கு எழுத்தாளர்களின் மொழிநடைலாம் பழக்கமில்லை, எதுக்கும் முயற்சிக்கிறேன்.
1) பாலகுமரன்.
2)கல்கி(அவர் காலத்தில ஜீன்ஸ் உண்டா? ஆனால் பழைய நடையில் உள்ளதால் கல்கியா இருக்கும்னு ஒரு கணிப்பு)
3) சுஜாதா(ஆவிக்கு வேற குளு கொடுத்தீங்க, ஐஷ்வர்யா ராய், ராஜராஜ சோழன் எனப்பார்த்ததும் எனக்கு சுஜாதா தான் நினைவுக்கு வந்துச்சு)
4) சுபா அல்லது பி.கேபி.
* விபத்துக்களை எப்போது காண நேர்ந்தாலும் அடிவயிற்றைப் பிசையத்தான் செய்கிறது - அவர்தம் குடும்பங்களை நினைத்து!
Delete* பாரதியின் தாசன் தன் குரு சொன்னதைப் போல ரௌத்திரம் பழகியவர் என்பது எனக்குத தெரியும். அவரைப் பத்தின இந்த புத்தகத் தகவல் எனக்குப் புதுசு. தேடிப் பிடிச்சு வாங்கிடணும். டேங்க்ஸ்ப்பா...!
• மிகப் பரிச்சயமான மொழிகளை... உதாரணமா ‘ஙே’ன்னு போட்டா ரைட்டர் பேரை ரொம்ப ஈசியா சொல்லிடுவாங்க. அதான் கொஞ்சம் புரியற மாதிரி தேடி தேடி செலக்ட் பண்ணேன். அதுலயும் நீங்க கில்லின்னு நிரூபிச்சுட்டிங்க - ரெண்டு சரியான விடை சொல்லி. கை குடுஙக பிரதர்.
• ஆர்வமா பங்கெடுத்துக்கிட்ட ஒரே ஒரு வவ்வாலுக்கு நிறைய நிறைய நன்றி.
விட்டுப்போச்சு,
ReplyDeleteபடத்தில் இருக்கும் பாரதிதாசனின் இந்த கெட் அப் வயசான பின்னர் உருவானது ஆரம்பத்தில் பெருசா மீச வச்சு முறுக்கிவிட்டுக்கொண்டு தான் இருப்பாராம், பாரதியாரின் இன்ஸ்பைரேஷன் :-))
இணையத்துல தேடறப்ப இதான் கிடைச்சது. பழைய பேர்ட்டோ கலெக்ஷன் இருக்கான்னு தேடிப் பாக்குறேன்.
Deleteவேகம் - பல இளைஞர்களின் ஃபேஷன்....:((
ReplyDeleteஇந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் இருப்பதே சிறந்தது. ஏன்னா கோபம் நமக்கு தலைக்கேறுவது அவசியமில்லாதது. இதுங்க வேணும்னு செய்யுதா? இல்ல உண்மையிலேயே முட்டாளான்னு தெரியலை...
நாளை வந்து விடைகளை பார்த்துக் கொள்கிறேன்...:)))
இதே குழப்பம்தான் என்னிடமும் தோழி. நாளையும் வரப்போகும் உங்களுக்கு நிறைய நிறைய நன்றி.
Delete//இப்படி தலைதெறிக்க பைக்கில் செல்வதால் அதிகம் போனால் பத்து நிமிடங்கள் அவனுக்கு மிச்சமாகியிருக்குமா...? //
ReplyDeleteஅய்யோ அண்ணேன் ...! பத்து நிமிச மிச்சம் முக்கியமில்ல ... அட்லீஸ்ட் பத்து பேரு அரண்டு போயி நம்ம திரும்பி பார்க்கணும் .. அதேன் முக்கியம்
நிஜந்தான்னு தோணுது ஜீவன். ர்ர்ர்ர்ரூம் என்று ஸ்பெஷல் சவுண்டை பைக்குகளுக்கு செட் பண்ணிக் கொண்டு பலர் திரிவதைப் பார்க்கிறேன். அவர்கள் க்ராஸ் பண்ணும் போதெல்லாம் எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்வுடன் என் நன்றி.
Deleteமுதல் இரண்டு விவரங்களும் முகநூலில் படித்து விட்டேன்! 2. இமான் நிகழ்சிகளில் அடிக்கடி பார்க்கும் கூத்து தான் அது.
ReplyDeleteமுதலாவது தி.ஜா வாக இருக்கலாம். அல்லது வவா சொன்னது போல பாலகுமாரர். மற்ற மூன்றிலும் கொஞ்சம் சுஜாதா வாசனை அடிக்கிறது.
நீங்க ஈஸியா சொல்லிடுவீங்கன்னு நெனச்சென். உங்க கருத்தைப் படிச்சதும் வவ்வால் சொன்ன மாதிரி எழுத்தாளர்களின் முத்திரை வரிகளையே குடுத்திருக்கலாமொன்னு தோணுது. அடுத்த முறை எளிமையா தந்துடறேன். சரியா...? மிக்க நன்றி ஸ்ரீ.
Deleteஇளைய தலை முறையின் வேகம் மூளைக்கு வேலை கொடுப்பதிலோ விஷய ஞானம் காட்டுவதிலோ இல்லை என்னும் ஆதங்கம் எனக்கும் உண்டு. பதி பல்சுவை ரசித்தேன். நிறையவே எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்திருக்கிறேன். இருந்தாலும் அவர்களுக்க்கான நடை எதுவும் தெரியவில்லை பூவனம் ஜீவி சரியாக பதில் கூறலாம்
ReplyDeleteஎன் கருத்தை ஆமோதித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.
Deleteமித வேகம் மிகக் காக்கும் என்ற உங்கள் கூற்று மிகையில்லை, மிக முக்கியம்.
ReplyDeleteஆமோதித்து ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.
Deleteவேகம் விபரீதம் என்று இளைஞர்கள் உணர்வதாய் தெரியவில்லை! அவர்கள் முட்டாளாய் காண்பித்து நம்மை முட்டாளுக்குகின்றனர் சேனல்கள். எழுத்தாளர்கள் 1. கல்கி 2. தெரியவில்லை 3. சுஜாதா. 4. சுபா. இன்னும் கொஞ்சம் யோசித்தால் அனைத்துமே சுஜாதா டச் தெரிகிறது! நீங்க ஆவிக்கு க்ளு கொடுத்து குழப்பீட்டீங்களே!
ReplyDeleteஎல்லாவற்றிலுமே சுஜாதா டச் தெரிகிறது என்று ஸ்ரீராமைப் போலவே நீங்களும் சொல்லிருக்கறதுலருந்து நான் செலக்ட் பண்ணது தப்போன்னு எனக்கே தோண ஆரம்பிச்சுடுச்சு சுரேஷ். அடுத்த முறை சிம்பிளா விளையாடிரலாம். மிக்க நன்றி.
Deleteவேகம் விவேகமல்ல என்று எத்தனை முறை கூவினாலும் மக்கள் கேடகப்போவதில்லை! கேட்டிருந்தால் தினமும் சிலர் பரலோகத்திற்கு டிக்கட் வாங்க மாட்டார்களே! ஓ டிக்கெட் கிடையாது இல்லையா மறந்து போச்சு! ஃப்ரீயானதுனால இருக்குமோ? நல்ல பகிர்வு!
ReplyDeleteஇது போன்ற டி.வி. நிகழ்சிகள் பொதுவாக அறுவைதான்! தொலைக்காட்சிகள் எப்போது சினிமாவிலிருந்து சற்று விலகி இலக்கியங்கள், நல்ல எழுத்துக்கள், எழுத்தாளர்கள், நல்ல நிகழ்சிகள்: பக்கம் திரும்புமோ அபோது மக்களுக்கும் கொஞ்சம் அறிவு வரும். பாரதிதாசன் எல்லாம் மதிப் பெண்ணுக்காகத்தானே! தங்கள் கருத்து மிகச் சரியே!
3 அது எழுத்தாளர் சுஜாதா! என்ற நினைவு! (கற்றதும் பெற்றதும் என்பதும் நினைவு) மற்றவை தெரியவில்லை நாளதான் தெரியுமே!
என் கருத்துக்களுடன் ஒத்துப்போய் ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Delete//‘இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?’ என்று அவர் கேட்கும் கேள்விக்கு, ’பிரதீபா பாட்டில்’ என்கிறது ஒரு ஜந்து. இன்னொரு ஜந்து அழுத்தம் திருத்தமாக ‘ராஜீவ்காந்தி’ என்கிறது. //
ReplyDeleteஅண்ணேன் இதுவாவது பரவால்ல, சமயத்துல அரசியலுக்கே சம்பந்தம் இல்லாத ஆளுக பேரையெல்லாம் சொல்லுற அபத்தமும் நடக்கும் ...
தெரியாதுங்குரத தெரியாதுன்னு சொல்லத் தெரியாதவங்க இங்க அதிகம் ..
சென்னைல வந்த புதுசுல நான் வழிகேட்டப்ப பலர் இந்த மாதிரி வாய்க்கு வந்ததை சொல்லிக் குழப்பி பாடாப்படுத்தினாய்ங்க. அப்பத்தான் உன் கமெண்ட்ல இருக்கற கடைசி வரியின் வீரியத்தை உணர்ந்தேன் ஜீவன். நல்லாச் சொன்னேப்பா...
Deleteபாரதிதாசனைத் தெரியாதவர்கள் தமிழ் நாட்டிலா
ReplyDeleteவேதனையாக இருக்கிறது ஐயா
வெளிநாட்டு நடிகரைத் தெரிந்திருக்கிறது இந்தச் சனியன்களுக்கு... நம்ம சிங்கத்தைத் தெரியல... என்ன்த்தச் சொல்ல..?
Deleteஉதவாதினி ஒரு தாமதம்
ReplyDeleteஉடனே விழி தமிழா
என்றவருக்கே இந்த கதியா
த.ம.9
ReplyDeleteமூன்றாவது சுஜாதா என்பதை ஊகிக்க முடிகிறது
ReplyDeleteமுதல் அனுராதா ரமணன் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது ரா.கி ரங்கராஜன்
நாலாவது பி.கே.பி
அடடே... மூன்று சரியான விடை சொல்லி அசத்திட்டீங்க முரளி..! நீங்க கில்லாடியோன் கா கிலாடிதான். மகிழ்வான என் நன்றிகள்.
Deleteமுன்பே சிலர் பதில் தந்துள்ளனர்.
ReplyDeleteஇருந்தாலும் ...
1. அனுராதா ரமணன்,
2. பட்டுக் கோட்டை பிரபாகர்
படித்து ரசித்து முயன்றதற்கு மனம் நிறைய நன்றி நண்பரே.
Deleteசரி, பாரதிதாசனை தப்பா சொன்னங்கன்னு காய்ச்சிருகீங்களே! விடை(guess தான்) சொல்ல பயமா இருக்கு:[
ReplyDeleteஅனுராதா
பாலகுமாரன்
சுஜாதா
pkp
மாலை விடைகளை சரி பார்த்துகிறேன்!
நம் தமிழ்க் கவிஞரைத் தெரியாம இருக்காங்களேன்ற கோவம்தான் அது... இந்த மேட்டர்லல்லாம் கோபமே வராது... அதும் டீச்சர்கிட்டயா? சான்ஸே இல்ல... நான்கில் மூன்றுக்கு சரியான விடை சொல்லி அசத்திட்டம்மா மைதிலி. வாழ்த்துகளும் மனம் நிறைந்த நன்றிகளும்.
Deleteஇதை உங்கள் முக நூல் பக்கத்திலும் பார்த்தேன் அண்ணா... என்ன செய்ய இவர்ளை... தினமும் இதுபோல் எத்தனையோ விபத்துகள் நடந்தும் சிலர் திருந்தவே மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது...
ReplyDeleteஇமான் அண்ணாச்சியின் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியினைப் பார்த்து நானும் கடுப்பானதுண்டு... இத்னால்தான் தொலைக்காட்சியின் பக்கம் சென்றால் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகள் டிஸ்கவரி தமிழ் இல்லையெனில் நல்ல சினிமா ஏதுமிருந்தால் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்வது... இதில் சமீப காலமாய் விஜய் டீவியில் வரும் சில பொது அறிவு நிகழ்ச்சிகள்... அதில் சிலைடில் அவர்கள் போடும் தமிழ் அடஅடஅட.... இவர்களுக்கெள்ளாம் தான் தமிழ் பேச்சு இவர்களின் மூச்சு...
எழுத்தாளர்களில் சுஜாதா ஒருவரை மட்டுமே கண்டு கொள்ள முடிந்தது... ( நீ இன்னும் வளரனும் பிரியா)
இந்த வேகம் நல்லதில்லை என்று கை,கால்கள் போனபின் உணருவார்களோ, என்னவோ. இப்போதெல்லாம் கைபேசியில் பேசிக்கொண்டே ஒரு கையால் ஓட்டுவது நாகரீகம் ஆகிவிட்டது, கணேஷ். அவர்கள் உயிருக்கு ஆபத்து என்பதுடன் நம்மையும் குலை நடுங்க வைத்துவிடுகிறார்கள்.
ReplyDeleteஇமான் அண்ணாச்சி ஒருமுறை 'ஜீவனாம்சம்' என்றால் என்ன என்று கேட்டார். விதம் விதமான பதில்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது என்றே தெரியவில்லை. ஒருவர் சொன்னார்: 'நான் இறந்தபின் என் மனைவிக்கு கொடுக்கப் போகும் பணம், ஜீவனாம்சம்' என்று!
எல்லோரும் முதல் நாளே உங்க பதிவை படிச்சுட்டு, நாளைக்கு வரேன் எழுத்தாளர்கள் யார்னு தெரிஞ்சுக்க என்று சொல்லியிருக்கிறார்கள். நான் இன்று வந்து விடைகளையும் தெரிந்து கொண்டுவிட்டேன்...ஹி...ஹி....!
இந்த மாதிரி விபத்துனால தான் என்னோட அம்மாவையும் நண்பனையும் இழந்தேன்... அப்பா ரொம்ப பொறுமை, அப்படி பட்ட அப்பாவோட வண்டிய தட்டி விட்டு அம்மாவ கொன்னவங்கள என்னன்னு சொல்றது? நண்பன், ஒரு வருங்கால பாரதம், அவன் உயிரோட இருந்திருந்தா எவ்வளவோ சாதிச்சிருப்பான்... அத்தனையோ பேர கண் தானம் பண்ண வச்சிருக்கான், ரெத்த தானம் பண்ண வச்சிருக்கான், கடைசியில அவன் கண்ண தானம் பண்ணிட்டு வர வேண்டியதா போச்சு... ரெத்தம் பாத்தாலே பைத்தியம் மாதிரி அலறி துடிப்பேன் சில நேரம்.... தெரியாம எத்தனையோ பேர் பாதிக்கப்பட்ருக்காங்க ... தெரிஞ்சே படுகுழில விழுவேன்ன்னு சொல்றாங்களே அவங்கள என்ன சொல்றது? அவங்க தான் சாகுறாங்கனா எத்தனையோ குடும்பத்தையே (நிம்மதியையே) சாகடிச்சுடுறாங்களே
ReplyDeletehummm ரொம்ப கஷ்டம் சென்னை ல ...என்னிடம் பொறுப்பு இல்லாத துனால நானும் வண்டி ஓட்டப் பயப்பிடுவேன் ...அந்து ஆறு மணி நேரம் பயணத்துக்கே செலவு ...
ReplyDeleteடிவி பார்க்காதா ஆளா நீங்க ....
புத்தகம் வாசிப்பு பழக்கம் என்னிடம் துளியும் இல்லை ....முயற்சிக்கிறேன் ஆனாலும் ஹும்ம்ம் முடியல
வேகம் குறித்த வேதனையான பகிர்வு, அவசியமான ஒன்று.
ReplyDelete