Monday, March 3, 2014

மொறு மொறு மிக்ஸர் - 24

Posted by பால கணேஷ் Monday, March 03, 2014
‘‘அப்போது எனக்கு 17 வயது. பம்பாயில் ஹெமு அதிகாரி நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். முகாமின் மற்ற விவரங்களைக் கவனித்துக் கொண்டவர் தாராபூர். கடும் வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்குப் பயிறசி நடக்கும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. இடையில் ஓய்வும் கிடையாது. முதல் நாள் பயிற்சி முடிந்து பகல் உணவுக்கு உட்கார்ந்தோம். இரண்டு சப்பாத்திகளும், கொஞ்சம் காய்கறிகளும் பரிமாறினார்கள். எனக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட, சாப்பிட மறுத்தேன். 

நான் வடக்கில் இருந்து வருகிறேன். கடுமையாக உழைக்கிறேன். வேகமாகப் பந்து வீசுகிறேன். பயிற்சி முடிந்ததும் எனக்குப் பயங்கரப் பசி ஏற்படுகிறது. அதுமாதிரி நேரத்தில் ஒரு குதிரையையே என்னால் சாப்பிட முடியும். அவர்களோ இரண்டு சப்பாத்திகள் தருகிறார்கள்! தாராபூர் என்னிடம் சீறிக்கொண்டு வந்தார். ‘நாங்கள் தரும் சாப்பாடு உனக்குப் பிடிக்கவில்லையா?' என்று கேட்டார். ‘இல்லை சார். நான் வேகமாகப் பந்து வீசுபவன். எனக்கு நிறையச் சாப்பாடு வேண்டும்' என்றேன். தாராபூர் ஏளனமாகச் சிரித்துவிட்டு, கிண்டலாகச் சொன்னார்: ‘இந்தியாவில் ஃபாஸ்ட் பௌலர்களே கிடையாது!'. பொங்கி வந்த கண்ணீரை நான் அடக்கிக் கொண்டேன். இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு வேகப்பந்து வீச்சாளராகத் திகழ வேண்டும் என்று உறுதி கொண்டேன். நன்றி தாராபூர்! அன்று எனக்கு நீங்கள் மிகப்பெரிய சேவை செய்தீர்கள்!"

--- இப்படித் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டனான கபில்தேவ் நிகாஞ்ச். அடைந்த அவமானத்தை முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக மாற்றிக் கொண்ட இவரின் மன உறுதியை நாமும் கைக்கொள்ள ஆசைப்படுவோமாக!

=================================================

நாம் பார்க்கும் சினிமாக்களுக்கு சென்சார் போர்டு என்று ஒன்று இருககிறது (தானே?). கலாசசாரத்துக்கு ஒவ்வாத, ஆபாசக் காட்சிகள் வந்தால் ‘ஏ’ என்கிற சர்டிபிகேட் தரப்படுவதன் மூலம் ‘‘அலர்ட் ஆகிக்கங்கப்பா" என்கிறார்கள். அசைவம் சாப்பிடாதவர் நீங்கள் எனில், நீங்கள் வாங்குகிற ஆயில் முதல் பிஸ்கட் பாக்கெட் வரை சுத்த சைவமாக இருந்தால் பச்சையில் ஒரு வட்டத்தை அச்சிட்டு, ‘‘அசைவம் கலக்கலைப்பா. சாப்பிடலாம் நீங்க" என்கிறார்கள். இபபடி எலலாத்துலயும் உஷாரா இருந்து வாங்குற நம்மால எளவு... நாம படிக்கிற புத்தகத்துல சூதானமா இருந்து வாங்க முடியலையேப்பு...! தலைப்பையும், அவங்க தர்ற பில்டப்பையும் நம்பி ஏதோ நாலு நல்ல விஷயம் எழுதியிருப்பாங்கன்னு நெனச்சு வாங்கிப் படிச்சோம்னா... ‘சமூகத்துல நடக்காததையா எழுதிட்டோம்'னு ஒரு சாக்குச் சொல்லிட்டு சாங்கோபாங்கமா பாலுறவுகளையும், பெண்களின் உறுப்புகளை அப்பட்டமாக வர்ணித்தும், ஒருபாலின :உறவுகளை விரிவாகவும் எழுதித் தொலைக்கிறான்கள். இந்த மாதிரி புத்தகங்கள்ல அட்டைப்படத்துல ஒரு நீலக்கலர் கத்திரிக்கோலை போடணும்னு யாராச்சும் சட்டம் கொண்டு வந்தீங்கன்னா.... ரெம்பப் பேரு பொழச்சுப்போம் சாமிங்களா...!

=================================================

டாக்டர் காந்தன் ரொம்பவும் நல்லவர் என்று அவ்வூரில் நல்ல பெயர் எடுத்தவர். கொஞ்சம் வயசுதான். முப்பபதுக்குள் இருக்கும். ஜனங்கள் அவரிடம் ரொம்ப மரியாதை வைத்திருந்தனர். அவர் டாகடர் தொழிலை ஆரம்பித்து இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளாகவே அதில் விரக்தியடைந்து, அத்தொழிலை விட்டுவிட்டு இளம் சன்னியாசியைப் போல அடுத்த ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார். அதற்குக் காரணம்... அவரிடம் வைத்தியம் செய்து கொண்ட நோயாளிகள் யாரும் அவருடைய திறமையை மற்றவர்களிடம் சொல்லி விளம்பரப் படுத்தாமலேயே பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டார்கள்!

--- ‘மாயமாய் மறையும் மந்திர மனிதன்' மர்மநாவலில் சிரஞ்சீவி. (நோ.. நோ... நீங்க நினைக்கிற தெலுங்கு நடிகரில்லை. பழைய தமிழ் எழுத்தாளர் இவர்!)

=================================================

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும்போது ‘புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடானது' ‘மது அருந்துவது உடல்நலத்தக்குக் கேடானது' என்று திரைப்படங்கள்/தொலைக்காட்சிகளில் அறிவிப்பை திரையில் ஓர் ஓரமாக மின்ன வைக்கிறார்கள் சமீபகாலமாக. அந்நாளைய படங்களில் சிவாஜியோ, சுருளிராஜனோ சிகரெட் பிடித்தால்கூட இப்போது இந்த அறிவிப்பைச் சேர்த்துத்தான் தொ.கா. ஒளிபரப்புகிறது. இந்த சமூக அக்கறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க. திரைப்படம்/தொலைக்காட்சி அன்பர்களுக்கு நான் சிபாரிசு செய்யும் வேறுசில அறிவிப்புகள்:

* கதாநாயகர்கள் ஒரே ஒரு குத்துவிட, ஸ்டண்ட் நடிகர்கள் பலர் அரை கிலோமீட்டர் ‘ஆஆஆஆ'வென்று அலறியபடியே ஆகாயத்தில் பறக்கும் காட்சிகளில்... ‘வன்முறை வெகுஜன நலத்துக்குக் கேடானது!'
 
* சீரியலில் மாமியாரும் மருமகளும் மற்றொரு மருமகளைத் தீர்த்துக்கட்ட திட்டமிடும் சமயங்களில் அல்லது ‘அவளைப் பழிவாங்கி நடுத்தெருவுல நிறுத்தாம விடமாட்டேன்டா' என்று அடித்தொண்டையில் வில்லன்/வில்லி கதாபாத்திரங்கள் அலறுகையில்... ‘சதி செய்தல் குடும்ப நலத்துக்குக் கேடானது!'
 
* ஒரு இளைஞனும், இளைஞியும் பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் காதலித்து ஆடிப் பாடும் காட்சிகளில்... ‘காதலிப்பது பெற்றோர் நலத்துக்கு எதிரானது!'
 
* அடியாட்கள் ஒருவனை வெட்டி ரத்தம் தெறிக்க கசாப்பு போடும் காட்சியில் (அ) கதாநாயகன் வில்லன் கும்பலை கதறக் கதற வெட்டித் தள்ளுகையில்... ‘ரத்தவெறி சிறுவர் நலனுக்கு எதிரானது!'
 
--- இதுமாதிரி இன்னும் வேற ஏதாச்சும் போடலாம்னு உங்களுக்குத் தோணுதா? இக்கட நேனு வெய்ட் சேஸ்தானு! செப்பண்டி!

=================================================

ரு பெரிய கோடீஸ்வரர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் இளையமகன் சந்தேகிக்க, அவன் நண்பன் துப்பறிய முயல, இறந்தவரின் அறைக்கு நேர்கீழே தோட்டத்தில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டெடுக்கிறான். டாக்டர் அவை ஒரு மனித விரலின் எலும்புகள் என்கிறார். சிலபல விசாரணைகளுக்குப் பின், பிறிதொரு சந்தர்ப்பத்தில் டாக்டரின் குரு எனப்படும் துறவியின் சமாதியில் தோண்டுகையில் எலும்புக்கூட்டில் ஒரு விரல் இல்லை. கண்டெடுத்த விரல் துண்டுகளை அங்கு ஒட்டிப் பார்க்க கச்சிதமாகப் பொருந்துகிறது. அங்கே மறந்து வைத்துவிட்ட வாட்ச்சை எடுக்க நள்ளிரவில் தன்னந்தனியே செல்லும் துப்பறியும் நண்பனுக்கு முன்வந்து அந்த எலும்புக்கூடு "என் சமாதியை ஏன் தோண்டின?" என்று கேட்க, அதிர்ச்சியில் ரத்தம் கக்கி இறக்கிறார் அவர். தொடர்ந்து அந்த எலும்புக்கூட்டு பேய் பலர்முன் தென்பட்டு பயமுறுத்துகிறது.

--- என்னன்னு புரியலையா? ‘ஒரு விரல்'ங்கற த்ரில்லர் திரைப்படத்தோட கதையிலதான் இதெல்லாம் வருது. இரண்டு மணி நேரம் ஓடற இந்தப் படத்துல ரெண்டே பாட்டுதான். நல்ல விறுவிறுப்பான கதையோட்டமும் எதிர்பாராத முடிவும் அசர வெச்சது. இந்த மாதிரிக் கதைகள்ல கடைசியில ‘இவனா குற்றவாளி?’ங்கற ஆச்சரியமும், அவன் செய்த விதத்தை விவரிக்கும்போது ‘அட!’ என்கிற வியப்பும் வந்தால் படத்துக்கு வெற்றி எனலாம். அந்த வகையில் இந்தப் படம் வெற்றிப்படம்தான்! என் சின்ன வயசுல நான் பார்க்கிற திரைப்படங்கள்ல ‘ஒருவிரல் கிருஷ்ணாராவ்’ன்னு டைட்டில்ல பாக்கறப்ப ‘இந்த ஆள் மட்டும் எப்படி ஒரு விரலோட பிறந்தார்?’ன்னு வியந்ததுண்டு.  எங்கம்மா அந்த நபரை திரையில இவர்தான்டான்னு அறிமுகப்படுத்தினப்ப அவர் கைகள்ல அஞ்சு அஞ்சு விரல்கள் இருக்கறதப் பாத்துட்டு வியந்ததும், அம்மா தலையில தட்டி ‘‘ஒரு விரல்ங்கற படத்துல நடிச்சதால அந்தப் பேர்டா’’ன்னு சொன்னதும் இப்ப நினைச்சா சிரிப்பு வருது. அதேமாதிரி வழுக்கை மண்டையோட அவரைப் பார்த்துட்டு, இந்தப் படத்துல (முதல் படம்ங்கறதால) இளமையா தலைமுடியோட பாக்கறப்பவும் சிரிப்புத்தான் வந்தது.

ரொம்ப நாளா பாக்கணும்னு ஆசைப்பட்டுக்கிட்டிருந்த இந்தப் படத்தோட டிவிடி சமீபத்திய வேட்டையில கிடைக்கவும் உடனே வாங்கிப் பாத்துட்டேன். தேங்காய் சீனிவாசனுக்கும் இது முதல் படம்ங்கறதும், அவர் மிகமிகமிக இளமையா வர்றதும் எதிர்பாராத ஆச்சரியங்கள். அவரின் கேரக்டரிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது மற்றொரு ஆச்சரியம். த்ரில்லர் பட ரசிகர்களாக நீங்க இருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம். (இதவெச்சு ஒரு தனிப்பதிவே எழுதியிருக்கலாம். சிஷ்யனைப் பாத்தாவது கத்துக்கடா கணேஷா! --- சிரிக்குது மனஸ்!)

81 comments:

  1. தாராபூர் ஏளனம் - நமக்குக் கிடைத்த பரிசு...

    அறிவிப்புகளைப் போட ஆரம்பித்தால், இன்றைய படங்களுக்கு முழுவதும் போட வேண்டி வரும்...!

    ஒரு விரல் என்றும் ரசனை...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். கபில் என்ற மகத்தான கிரிக்கெட்டர் உரம் பெற்று எழுந்தது நமக்கான பரிசுதான். ரசித்துப் படித்த உங்களுக்கு மனம் நறைந்த நன்றி நண்பா!

      Delete
  2. --- இப்படித் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டனான கபில்தேவ் நிகாஞ்ச். அடைந்த அவமானத்தை முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக மாற்றிக் கொண்ட இவரின் மன உறுதியை நாமும் கைக்கொள்ள ஆசைப்படுவோமாக!/// theriyatha thakaval sir. pakirnthu kondamaikku nandri. matha ellam sirichum sinthikkavum irunthichu.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த மகேஷுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  3. மிக்சர் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு... ரொம்ப நல்லா இருந்தது... நீலக் கலர் கொடுப்பது மாதிரியே, இன்னம் பல இருக்குங்க... நாமே எப்பவாவது புத்தகம் வாசிக்கறவங்க நம்ம நேரத்தை வீணாக்குது சில புத்தகங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நல்ல கடலைகளுக்குள்ள சொத்தைக கடலை எதிர்ப்படுற மாதிரி சில புத்தகங்கள் எதிர்பாராம நம்ம கைல சிக்கறப்ப வர்ற எரிச்சலே தனிதான் எழில்! மிக்ஸரை ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. கபில்தேவ் பற்றிய தகவல் மூலம் நமக்கு எதிரிகளும் தேவைப்படுகிறார்கள் என்று உணர்கிறேன். ஒரு விரல் சுவாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. எதிரிகளை நேசிக்க முடியாட்டாலும் அவங்களின் இருப்பு நம்மை வேகப்படுத்தும்கறது நிஜம்தான் ஸ்.பை.! அதையே ஆளை அழிக்கிறதுன்னு நெகடிவா திங்க் பண்ணாம, அவனைவிட வளர்ந்து எதிரியை வெல்வதுன்னு பாஸிடிவா எடுத்துக்கிட்டா எதிரிகள் தேவைதான்!

      Delete
    2. வித்தியாசமான சிந்தனையா இருக்கே ஸ்பை..

      Delete
  5. காமெடியன் மற்ற சிறு காமெடியனை கிண்டல் செய்யும்போது, "மற்றவர்களை ஏளனம் செய்தல் மனநலத்துக்கு கேடுவிளைவிக்கும்" என்று மின்ன வைக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. அட... இது நல்லா இருக்கே...! அனேகமா சந்தானம் வர்ற சீன்கள் எல்லாத்துலயும் வெக்க வேண்டியிருக்கும் ஸ்.பை. ஹி... ஹி... ஹி...!

      Delete
    2. "டேய் பனங்கா மண்டைத் தலையா" ன்னு நம்ம கவுண்டர் சொல்லும்போது நம்மையும் அறியாமல் சிரிப்பு வருதா.. அது ஜாலியா சொல்றது ஸ்பை.. செந்தில் (நடிகர்) மேல உள்ள வெறுப்பில சொல்றதில்ல.. ஸோ இதை நான் ஏத்துக்க மாட்டேன்..

      Delete
  6. நீலக் கத்திரிக்கோலை முதலில் எங்கே போடுவது சார் - சௌந்தர்யலஹரியில் தொடங்குவோமா? திருப்பாவையில் தொடங்குவோமா? ராமாயணமா? மகாபாரதமா? சிவபுராணமா?

    ReplyDelete
    Replies
    1. காதலும் காமமும் வேறல்லவா அப்பா ஸார்...! நீங்கள் குறிப்பிட்டவை எல்லாம் நேரடியாக, அப்பட்டமாக, கொச்சையாக செக்ஸைச் சொல்லியவை அல்லவே... சமீபத்திய சில ‘நீல’ நாவல்களின் வரிகளை இங்கே சொல்லவும் கூசுகிறதே... அவற்றைப் பற்றித்தான் நான் குறிப்பிடுவது!

      Delete
    2. என்ன இப்படி சொல்லிட்டீங்க.

      முருகன் பிறப்பைப் பத்தி சிவபுராணத்துல சொல்லியிருக்கிறதையோ, சொந்த மருமகளை இன்னொருத்தருடன் படுக்கச் சொல்றதை மகாபாரதத்துலாயோ, சக்தியின் இடுப்புக்குக் கீழ்ப் பகுதி பற்றிய சௌந்தர்யலஹரி வர்ணனையோ, திருப்பாவையில் வரும் மென்முலை வர்ணனைகளையோ.. இன்னொரு தரம் படிச்சுட்டு சொல்லுங்க.. இதெல்லாம் sample தான்..

      விகாரம் வார்த்தையில் இல்லை. மனதில் உண்டு.

      Delete
    3. அப்பாதுரை ஸார்.. நீங்க மேலே சொன்ன எந்த வார்த்தையுமே மனச உறுத்துற மாதிரியோ, ஆபாசமாவோ தோணல. காதல் உணர்வுகள், காம உணர்வுகள் இதை சொல்றதுல ஒரு நேர்த்தி இருக்கு.. இன்னாரெல்லாம் படிக்கப் போறாங்கன்னு மனசுல நினைச்சு எழுதினா எல்லா வகையான வாசகர்களும் படிக்கலாம்.. "வாத்தியார்" குறிப்பிட்ட புத்தகத்தை நீங்க படிச்சீங்கன்னா இதை நீங்களே ஒத்துக்குவீங்க.. ( அந்த குறிப்பிட்ட ஒரு சில புதினங்கள் இலக்கியமா மாறிடக் கூடாது.. அதுதான் அந்த வேண்டுகோளின் சாராம்சம்) சொல்லனும்னு தோணித்து..அதிகப் பிரசங்கியா நினைக்காதீங்க ப்ளீஸ்..! :)

      Delete
    4. ஆவி சொல்றது கரெக்ட் அப்பா ஸார்! என் சிறு பிராயத்துல ‘சரோஜாதேவி புக்’ அப்படின்னு மறைமுகமா வித்ததா கேள்விப்பட்டிருக்கேன். இப்ப அந்த ரேஞ்சுக்கு வெளிப்படையாவே பல ‘எலக்கிய(?)’வாதிகள் எழுதறாங்களேன்ற ஆதங்கம்தான் நான் குறிப்பிட விரும்பினது!

      Delete
    5. நீங்க எந்த புத்தகம் சொல்றீங்கனு தெரியலியே? ஆவலைக் கிளப்பி விட்டீங்களே?

      என்ன? சரோஜாதேவி புக்ஸ் கேள்விப் பட்டிருக்கீங்களா.. படிச்சதில்லைனு சொல்ல வரீங்களா? அய்யகோ.. அது உண்மையெனில் எத்தனை இழந்துளீர் அன்பரே.. தமிழ் வளர்த்த தே புத்தகங்கள்.. தமிழ் வளர்த்ததே புத்தகங்கள்..!

      Delete
    6. நான் குறிப்பிடற புத்தகம் பத்தி உங்களுக்கு உள்டப்பியில தனி மடல் அனுப்பறேன் அப்பா ஸார்! நம்பக் கஷ்டமா இருந்தாலும் நம்பித்தான் ஆகணும் நீங்க... நிசமாவே நான் ‘ச.தேவி’ புக்ஸ் பத்தி கேள்விப்பட்டது மட்டுமே. படிக்கிற பாக்கியம்(!) கிடைச்சதில்ல!

      Delete
    7. சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்....துன்பம் போற்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்....:)

      Ithuvum sex enru yaravathu solvomaa.. how u view it, how u read it , in emotions are important... a word "haa " u can make lot of imotions

      Delete
    8. அன்பின் பால கணேஷர்,

      //நிசமாவே நான் ‘ச.தேவி’ புக்ஸ் பத்தி கேள்விப்பட்டது மட்டுமே. படிக்கிற பாக்கியம்(!) கிடைச்சதில்ல!//

      நானும் உங்க கட்சிதான் ,கேள்விப்பட்டது தான் "கண்ணால"பார்த்ததுக்கூட இல்லை,ஆனால் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்கிறாங்க,அந்த புக் ஒரு கல்ட் கிளாசிக் இலக்கியமாவே ஆகிடுச்சு அவ்வ்!

      #ஹி...ஹி நீங்க ஏதோ புக்கு சொன்னிங்களே,பேரு சொல்லுங்க தேடிப்படிச்சுக்கிறேன்,நாலு பேருக்கிட்டே அதெல்லாம் படிக்கக்கூடாதுனு ஒரு விழிப்புணர்வு செய்து வைக்கத்தான் கேட்டேன் ,வேறொன்னுமில்லை!

      Delete
    9. சொல்கிறேன் வவ்வால்! கீழே கருத்துப் பெட்டியின் கீழே தென்படும் என் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள். விரிவாக மடல் அனுப்புகிறேன்!

      Delete
  7. கபில்தேவி தன்னம்பிக்கை கதை புதுசு. அப்புறம் புத்த்க விமர்சனத்துக்கு நீங்கலாம்தான் இருக்கீங்களே! இப்பலாம் விமர்சனம் படிச்சுப் பார்த்தப் பிறகுதான் புத்தகம் வாங்குறோம். ஒரு விரல்ன்னு ஒரு படம் வந்த விசயம் இப்பதான் தெரிஞ்சுக்கிட்ட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ‘ஒரு விரல்’ பத்தி அதிக எதிர்பார்ப்பில்லாமல் பார்த்த எனக்கு ரொம்பவே பிடிசசிருந்துச்சும்மா படம்! கபில் நான் வியக்கும் ஹீரோக்களில் ஒருவர். ரசித்துப் படித்த தங்கைக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
    2. கபில் அழுதுகிட்டே கொடுத்த பேட்டி பார்த்தீங்களா? (தெனாலில கமல் கூட கிண்டல் அடிச்சிருப்பாரு)

      Delete
    3. ஒரு நேர்மையாளனின் மனக்குமுறல் வெளிப்பட்ட விதம் அது! அதை கிண்டலடிச்சதுல கமல் மேலயே எனக்கு கொள்ளைக் கடுப்பு ஆவி!

      Delete
  8. //இதவெச்சு ஒரு தனிப்பதிவே எழுதியிருக்கலாம். சிஷ்யனைப் பாத்தாவது கத்துக்கடா கணேஷா! --- // ஹா ஹா ஹா.. அந்த நாள் கூட லிஸ்ட்ல இருக்கு.. பார்க்கலாம் வாத்தியாரே :-))))))

    ReplyDelete
    Replies
    1. ‘அந்த நாள்’ ஒரு கொலைச் சம்பவத்தை துப்பறிபவரிடம் ஒவ்வொருவர் சொல்லும் கோணங்களிலும் காட்சிப்படுத்தி அசரடிக்கும்! கடைசியில் நடந்த உண்மை தெரிய வரும்போது... அட! (அகிரோ குரோசேவாவின் ‘ரஷோமான்’ டைப் கதை சொல்லல்) அவசியம் எழுதுய்யா ராசா...! மிக்க நன்றி!

      Delete
    2. "அந்த நாள்" விமர்சனம் எழுதறது கொஞ்சம் கஷ்டம்.. ஒரே சம்பவம்.. ஒன்பது, பத்து கோணங்கள்.. செம்ம ட்விஸ்ட்.. சான்சே இல்லாத வகையில் எடிட்டிங் மற்றும் டைரக்சன் செய்யப்பட்ட படம்..

      Delete
    3. விமர்சனம் கஷ்டமா? அதெல்லாம் நம்ம பய ஊதித் தள்ளிப்புடுவான் ஆவி!

      Delete
  9. ///புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும்போது ‘புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடானது' ‘மது அருந்துவது உடல்நலத்தக்குக் கேடானது' ///

    இது போல டிவி & சினிமா பார்ப்பது மன நலத்துக்கு கேடு அல்லது கலாச்சாரத்திற்கு கேடு என்று கேடுகெட்ட காட்சிகள் வரும் போது டைட்டில் போடுவார்கள் என்றால் மிக நன்றாக இருக்குமே

    ReplyDelete
    Replies
    1. நல்லாத்தான் இருக்கும்! ஆனா அப்படிச் செய்ய முன்வர அவர்களால் இயலாது நண்பா! மிக்க நன்றி!

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. கபில்தேவ் விசயம் அனைவருக்கும் நல்ல உதாரணம்... தொலைக்காட்சி அறிவிப்புகள் குறித்து நானும் யோசித்ததுண்டு அண்ணா குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும் நெடுந்தொடர்களிலும்.... புத்தகங்களுக்கான குறிப்பில் சிறிது மாற்றுக் கருத்து உண்டு...

    ஒரு விரல் படம் முதல் முறையாக கேள்விப் படுகிறேன்... இது நன்றாக இருக்கிறதே இரசித்த படங்களையும் அறிமுகப்படுத்துவது.... நல்ல முயற்ச்சி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. இனிமே அப்பப்ப படங்களையும் பகிர்றேன்மா. ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  12. Good mixture. Can u please give me a caption for 'ACHU PICHU JOKES"

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி! (அடுத்து நீங்க கேட்டிருப்பதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்பா... நீங்க எழுதறதே அப்படித்தான் இருக்குன்னு பதில் வந்துடுச்சுன்னா? ஹி.. ஹி...!)

      Delete
    2. Such answers will not from elsewhere but only from sariga madam.

      Delete
    3. Please read as "saritha madam"

      Delete
  13. ஒரு விரல் பார்த்ததில்லை.. அடுத்த முறை வரும்போது வாங்கிக்கறேன்..

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் ஆனந்து! நிச்சயம் நீயும் ரசிப்பேங்கறது என் உறுதியான நம்பிக்கை!

      Delete
  14. அவர் பேரு கபில்தேவ் நிகாஞ்ச் ன்னு இன்னைக்கு தான் தெரியும்l.. அதுசரி மிக்சர் சுவையே மறந்து போற அளவுக்கா கேப் விடறது.. அடிக்கடி போடுங்க.. சாப்பிட நாங்க ரெடி.. ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. இனி அடிக்கடி பரிமாறிடலாம்... ஆவியின் விருப்பமே நம் விருப்பம்1

      Delete
  15. உண்மையில் மொறு,மொறு வென்று தான் இருந்தது,மிக்ஸர்!///'ஒரு விரல்'நான் சிறு வயதில் இருந்த போது வெளியான படம்!பயத்தினால் பார்க்கவில்லை,இப்போது கிடைத்தால் பார்க்கலாம் தான்!///அந்த தொலைக் காட்சி/திரையரங்கு அறிவிப்புகள் நன்மை தருவன தான்!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் இதயம நிறை நன்றி!

      Delete
  16. கபில்தேவின் அந்தக் குமுறல் நானும் படித்திருக்கிறேன்.

    சினிமாப் பாடல் காட்சிகளில் "இயற்கைக்கு முரணானது' என்று போடலாம்!
    பழைய படங்கள் - குறிப்பாகத் திகில் படங்கள் - தேடித் தேடித் பார்க்கிறீர்கள் போல...நடத்துங்க!

    ReplyDelete
    Replies
    1. சமீபமா ஏழெட்டு பழைய திகில் படங்கள் கலெக்ஷன் வாங்கிட்டு வந்திருக்கேன் ஸ்ரீ! பாடல் காட்சிகள்ல நீங்க சொன்ன ஐடியா... நல்லாவே இருக்கு! மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  17. அன்பின் பால கணேஷர்,

    மிக்சர் சைட் டிஷ் என் நினைத்தேன் மெயின் டிஷ் ஆகவே இருக்கு :-))

    # அதே தாராபூர் தான் கபில் தேவ் இந்திய டீமுக்கு செலெக்ட் ஆகவும் காரணம்.

    ஆரம்பத்தில் கபிலை டீமில் சேர்க்கலை, கடுப்பான கபில் தாராப்பூர் வீட்டு முன்னால நின்னு என்ன ஏன் சேர்க்கலைனு சொன்னாத்தான் போவேன்னு காலையில இருந்து மத்தியானம் வரைக்கும் வெயிலில் நின்னாராம், ,ஆரம்பத்தில் பையன் நின்னுப்பார்த்துட்டு போயிருவான்னு நினைச்சு தாராப்பூர் வீட்டுல சாப்பிட்டு படுத்திட்டார் , மதியனாம பார்த்தால் அப்பவும் ,கேட்டில் வெயிலில் நின்னுக்கிட்டு இருந்தாராம் கபில், ரொம்ப பாவமாக இருக்கவே கூப்பிட்டு பேசிட்டு ,அப்புறம் டீமில் சேர்க்க ஏற்பாடு செய்தாராம்.

    அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினரும் ,தாராப்புர் தான்,அவர் நினைச்சால் சேர்க்க முடியும், தேர்வு செய்யும் முறை அப்படித்தான் இருந்திருக்கு.

    இதுவும் அதே புக்கில தான் இருக்கு, எப்பவோ படிச்சது,நீங்க சொல்லவும் நியாபகம் வந்துடுச்சு.

    # பாகிஸ்தான் காரங்க அப்போ இந்தியாவுக்கு எதிரா பேட்டிங் செய்யும் போது ஹெல்மெட் போடவே மாட்டாங்களாம்,ஏன்னா இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து முட்டிக்கு மேல ஏறாது.

    முதல் போட்டி கபில் பாகிஸ்தானுக்கு எதிராக பந்து வீசினார்,வழக்கம் போல ஹெல்மெட் போடாமல் வந்து இருக்காங்க, ரெண்டே பால் தான் போட்டாராம், பெவிலியனைப்பார்த்து "ஹெல்மெட்" எடுத்து வர சொல்லிட்டாங்களாம்.ஹெல்மெட் போட்டப்பிறகும் ,மண்டையில தான் பவுன்சர் போட்டு இருக்கார்,பவுன்சர் போட்ட முதல் இந்தியப்பவுலரே கபில் தான்!

    அப்போ கவாஸ்கர்லாம் ஓபனிங் பவுலராக சும்மா வந்து போடும் நிலைனா,நம்ம பந்து வீச்சு பலம் என்னனு புரிஞ்சிருக்கும்,மத்த எல்லாமே ஸ்பின்னர்ஸ்!

    கபிலின் ஆரம்பக்கால பந்துகள் பறக்குமாம், எல்லாம் மூஞ்சுக்கே ஏத்துவாராம்! கால் முட்டி ஆபரேஷனுக்கு பிறகு தான் வேகம் போயிடுச்சு,அப்புறமா அவுட் ஸ்விங்கர் வச்சே சமாளிச்சார்.

    அவரோட ஒரு சாதனை ,அப்பவே ஒரு டெஸ்ட்ல ஒரே இன்னிங்க்ஸ்ல 9 விக்கெட் எடுத்தார்,ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளராக இதை யாருமே இன்னும் முறியடிக்க முடியல.
    ----------------

    ஒரு விரல் படம் & கிருஷ்ணா ராவ் கதைய நானும் கேள்விப்பட்டிருக்கேன்,ஆனால் இந்தப்படத்துக்குலாம் டிவிடிலாம் இருக்குமானு நினைச்சேன்,ஆனால் கண்டுப்புடிச்சுட்டீங்களே,பெரிய ஆள் தான்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லியிருக்கற தகவல் எல்லாமே பர்ஃபெக்ட் வவ்வால்! அப்பல்லாம் பௌன்சர்ன்னாலே வெஸ்ட் இண்டீஸ்தான் ஞாபகம் வரும். ஆறடிக்கு ஜைஜான்டிக்கா ராட்சஷர்கள் மாதிரி ஃபாஸ்ட் பவுலர்ஸ் அவங்கட்ட இருந்தாங்க. கபில் வந்த பிறகுதான் இந்திய பவுலிங்கின் ஓபனிங்குக்கு எல்லாரும் பயந்தாங்க. முட்டி ஆபரேஷன் முடிஞ்சு விளையாட வந்தப்ப கபில் சொன்னது : ‘‘தீர்ந்து போன கேஸாகத்தான் நான் கருதப்பட்டேன். பத்திரிகைக்காரர்கள் எனக்காக துக்கம் அனுஷ்டித்தார்கள். ஒரு விஷயத்தை எல்லாரும் மறந்து விட்டார்கள். எனக்கு ஆபரேஷன் நடந்தது முழங்காலில் தானே தவிர முதுகெலும்பில் அல்ல!’’ அதன் பிறகும் அவுட் ஸ்விங்கர்கள் மூலமா எக்கானாமிகல் பவுலராக இந்தியாவிற்கு பலகாலம் தொடர்ந்தது கபிலின் சாதனை!

      அப்புறம்... இந்தப் படம் என்ன... பி.யு.சின்னப்பா நடித்த படங்கள் கூட சென்னையில் டிவிடியாக கிடைக்குது வவ்வால்!

      மிக்ஸரை ரசித்து, எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு உளம் நிறைந்த நன்றி!

      Delete
    2. பால கணேஷர்,

      வெஸ்ட் இன்டீஸ் வேகப்பந்து வீச்சுக்கு பிரபலம் தான் ,ஆனால் அதுக்கு முன்னரே இருந்து இங்கிலாந்து,ஆசி வேகப்பந்து வீச்சாளர்கள் தான் வெகு பிரபலம், அவங்க கிட்டே இருந்து தான் வெஸ்ட் இன்டீஸ் இடத்தை பறிச்சது,இப்போ சுத்தமா போயிடுச்சு.

      பவுன்சரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியதே இங்கிலாந்து பவுலர்கள் தான், அதுக்கு முன்ன வரையில் பவுன்சர் போடலாம்னே பவுலருக்கு தெரியாது :-))

      டொனால்ட் பிராட்மேனை கவுக்கனே பவுன்சரை டெவெலப் செய்தார்கள் இங்கிலாந்து அணியினர், அதை பாடி லைன் சீரிஸ் என்றே அழைப்பார்கள்.

      ஹரால்ட் லார்வுட் என்ற இங்கிலாந்து பந்து வீச்சாளர் தான் பிராட்மேனை முதன் முதலில் பவுன்சர் போட்டு மிரட்டியதே.

      லகான் படத்தில இதை ஒரு காட்சியாக வைத்திருப்பார்கள், இன்னும் சொல்லப்போனால் லகானில் பல கிரிக்கெட்டின் முதல் சந்தர்ப்பங்களை காட்சிப்படித்தியிருப்பாங்க, சச்சின் தான் கிரிக்கெட் ஆலோசகராக லகானுக்கு வேலை செய்தாராம்.

      #//அப்புறம்... இந்தப் படம் என்ன... பி.யு.சின்னப்பா நடித்த படங்கள் கூட சென்னையில் டிவிடியாக கிடைக்குது வவ்வால்!//

      சில பழைய படங்கள் கிடைக்குது,ஆனால் நாம ஒரு படம் பேரு சொல்லிக்கேட்டா மட்டும் இதுலாம் கிடைக்காதுனு சொல்லி கடுப்பேத்திடுறாங்க.

      இணையத்தில பல கிடைக்குது, நான் பல அந்த கால கிளாசிக் படங்களை இப்படித்தான் பார்க்கிறேன்.

      Delete
    3. சுவாரசியமான விவரங்கள் வவ்வால்.

      Delete
    4. ‘பாடி லைன்’ன்னு டான் பிராட்மேன் பத்தி ஒரு சீரியல் தூர்தர்ஷன்ல வந்தப்ப பார்த்தது இப்ப ஞாபகம் வருது வவ்வால். (அப்பல்லாம் தொலைக்காட்சில நல்ல விஷயங்களும் வந்தது) அதுல நீங்க சொல்ற விஷயங்கள் இருந்ததும் இப்ப மனசுல நினைவுக்கு வருது. அருமையான தகவல்களோட வந்து என் நினைவலைகளை மீட்டியதற்கு மிக்க நன்றி நண்பா!

      Delete
    5. அப்பாதுரை சார் ,நன்றி!

      அதே வேகத்தில் நம்ம பதிவுக்கு வந்துட்டிங்க போல,பின்னூட்டங்கள் பார்த்தேன்,நன்றி!

      எல்லாம் நம்ம பால கணேஷர் எடுத்துக்கொடுக்க ,அதை வச்சு டெவெலப் செய்தது தான்.

      யாராவது பால் போட்டா தானே பேட்டிங்க் செய்ய வரும்!
      ---------------------

      அன்பின் பால கணேஷர்,

      இப்படி யாராவது கிளரிவிட்டா தான் நமக்கு நியாபகமே வருது, எனவே உங்களுக்கும் நன்றி!

      Delete
  18. உங்க சமூக அக்கறை ரொம்ப நல்லாருக்கு...........

    ReplyDelete
    Replies
    1. என் சமூக அக்கறையையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  19. சுவாரசியமான பல தகவல்கள்! புத்தகங்களை நூலகத்தில் இதுபோல் சின்னசின்ன அடையாளங்களுடன் அடுக்கியிருப்பார்கள். அட்டையிலிருந்தே அது எந்த வகை என்பதை அறிந்துகொள்ளலாம். அதுபோல் எல்லாப் புத்தகங்களிலும் இருந்தால் வாங்குபவர்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.
    ஒருவிரல் கிருஷ்ணாராவ் - இதுவரை பெயர்க்காரணம் பற்றி யோசித்ததே இல்லை. அப்படியொரு திரைப்படம் வந்திருக்கிறது என்பதே புதிய தகவல்தான் எனக்கு.
    அனைத்தையும் ரசித்தேன். நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் ரசித்த உங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி தோழி!

      Delete
  20. நல்ல தொகுப்பு.

    *சிபாரிசு செய்திருக்கும் அறிவிப்புகளும் அவசியமே.

    *ஒரு விரல் அடைமொழியானதன் காரணம் தெரியும், ஆனால் திரைப்படம் பற்றி இப்போதுதான் அறிய வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்து, எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  21. செம கிரிஸ்பி மிக்ஸர் !
    கபில் கதைய வைச்சு ரெண்டு கிளாஸ் தேத்தலாம்!
    பஞ்ச் டயலாக் தாயாரிப்பாளர் நலனுக்கு கேடானது//விஜய் கவனத்துக்கு //
    //இந்த ஆள் மட்டும் எப்படி ஒரு விரலோட பிறந்தார்?’ன்னு வியந்ததுண்டு.//
    எனக்கும் இப்டி ஒரு டௌட் வந்திருக்கு பாலா சார்!!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்து சிலாகித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  22. மிக அருமையான சுவாரஸ்யமான தகவல்கள்! கபில்தேவ் பற்றிய தகவலை ஏற்கனவே படித்து இருந்தாலும் இனித்தது. வவ்வால் சொன்ன தகவல்கள் இன்னும் அறிந்துகொள்ள வைத்தது. கபில்தேவ் என்னுடைய பேவரிட் கிரிக்கெட்டராக இருந்தார் என்பதில் பெருமிதம் அடைகிறேன்! ஒருவிரல் பட கதையும், பழைய புத்தகம் நாவலின் சுருக்கமும் ஆர்வத்தை தூண்டின. மேய்ச்சல் மைதானத்தில் சுருக்கி தரலாமே! நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா சுரேஷ்! அவசியம் இதைச் செய்கிறேன். மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  23. கபிலின் அனுபவம் நல்லதொரு உதாரணம்!

    நீலக் கத்திரிக்கோல் யோசனை நல்ல ஐடியா! நண்பரே!

    அது போல படங்களும், தொடர்களுக்கும் ஏன் விளம்பரங்களுக்கும் கூட கொடுக்கலாம்.....பல விளம்பரங்கள் மிகக் கேவலமாக உள்ளன!

    இப்போது திரில்லர் லிஸ்டில் தெகிடியுடன் ஒரு விரல் சேர்ந்துவிட்டது......

    பாலசந்தரின் "அந்த நாள்" கூட நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம் பார்த்திருக்க வில்லையெனில்!

    மொறு மொறு....நல்ல சுவையுடன்!!

    ReplyDelete
    Replies
    1. சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  24. ரொம்ப சுவாரசிமாக சொல்லி இருக்கிறீர்கள். தொடர்கிறேன். நிறைய எழுத தோன்றுகிறது. நேரமில்லை. அடுத்த பதிவிர்கு விரிவாக எழுதுகிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு உளம்கனிந்த நன்றி!

      Delete
  25. கபில் வரலாறு சூப்பர்! பழைய பட விடயம் அருமை ஒருவிரல் ராவ் மறக்க முடியாது ஜோக்கில்!

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்த பிரதருக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  26. அந்தப் பாடம் பார்க்கவேண்டிய எனது
    பட்டியலில் உள்ளது
    தங்களைச் சந்திக்கையில் பெற்றுக் கொள்ள ஆசை
    அப்படியே முடிந்தால் பொம்மை படமும்
    சுவாரஸ்யமான சுவையான மொறு மொறு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், தருகிறேன்... பார்த்து மகிழுங்கள் ஸார்! சுவாரஸ்யம். சுவை என்று தெம்பூட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  27. கபில்தேவ் பற்றிய தகவல் மூலம் நமக்கு எதிரிகளும் தேவைப்படுகிறார்கள் என்று உணர்கிறேன்.
    ஒரு விரல் வாய்ப்பு கிடைப்பின் அவசியம் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  28. மிக்குசரு சூப்பருபா...
    //கதாநாயகர்கள் ஒரே ஒரு குத்துவிட, ஸ்டண்ட் நடிகர்கள் பலர் அரை கிலோமீட்டர் ‘ஆஆஆஆ'வென்று அலறியபடியே ஆகாயத்தில் பறக்கும் காட்சிகளில்...//
    "இது புவியீர்ப்பு விதிக்கு எதிரானது..." ன்னு போட சொல்லுபா...

    ReplyDelete
    Replies
    1. போட்றச் சொல்லிரலாம் நைனா, ஜுப்பரு! மிக்ஸரை ரசிச்ச உங்களுக்கு படா டாங்ஸுப்பா!

      Delete
  29. கபில்தேவ் பற்றிய செய்திகள் படித்தது நினைவுக்கு வருகிறது. அந்த நாட்களில்டெஸ்ட் மேட்ச் கமெண்டரி கேட்பது வழக்கம். பந்து வீச்சாளரின் வேகம் குறித்து கமெண்டேடர் சொல்வதுதான் தெரியும். நம்மிடையே ரமாகாந்த் தேசாய் என்னும் ஒரு வேகப் பந்து வீச்சாளர் ( உயரம் குறைந்தவர்) பௌன்சர் போட்டு எதிர் டீமை அச்சுறுத்தினார் என்று கேள்விபட்டிருக்கிறேன். அதே போல் வேகப் பந்தை எதிர்கொள்ளும் துணிச்சல்மிக்கவராக ஹார்டிகர் என்பவரை ஹர்டிகர் த ஹார்ட் என்று கமெண்டரியில் குறிப்பிட்டதும்நினைவுக்கு வருகிறது மிக்சர் நேர்த்தியாய் வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தகவல்கள் பலதும் பகிர்ந்து நேர்த்தியாக வந்திருக்கிறதென்று பாராட்டிய தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஐயா!

      Delete
  30. ரெம்பப் பிரம்மாதமான மிக்சர்ண்ணா...

    வவ்வாலுக்கும் நன்றி ...!

    //கபில் கதைய வைச்சு ரெண்டு கிளாஸ் தேத்தலாம்!// :)

    ReplyDelete
    Replies
    1. ரிட்டர்ன் ஆயாச்சா ஜீவன்? மகிழ்ச்சி! மிக்ஸரையும் நண்பர்கள் கமெண்ட்டையும் சேர்த்து ரசிச்ச உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  31. சுவையான மிக்சர் வாத்தியாரே....

    மிகவும் ரசித்தேன்.... ஒரு விரல் - பார்க்கத் தூண்டிவிட்டீர்கள்.....

    ReplyDelete
  32. மொறு மொறு மிக்சர் சுவையே பல தகவல்கள் ரசித்தேன். ஐடியா எல்லாம் நன்றே !அசத்திட்டீங்க! கபில் விடயமும் புதிது கற்றுக்கொள்ள வேண்டியதே.
    வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube