Thursday, February 13, 2014

மீபத்தில் ‘கரைசேரா அலை' அரசனின் த்ங்கை திருமணத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு பஞ்ச(த்தில் அடிபடாத)பாண்டவர்களாக நான், சீனு, ஸ்.பை., கோவை ஆவி மற்றும் ரூபக் (கார் கொணர்ந்த வள்ளல்) ஆகியோர் குடுமியான் மலை, நார்த்தா மலை, சித்தன்ன வாசல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஸ்தலங்களுக்கு விசிட் அடித்தோம். இவை பற்றிய பய(ண)க்குறிபுகளை சீனு தன் தளத்தில் திடங்கொண்டு விளக்கி வருவதால் இங்கே சில சிப்ஸ்களை மட்டும் நான் தூவுகிறேன்.

* மதியம் 2 மணிக்குப் புறப்படுவதாக நிச்சயித்து, பங்ச்சுவலாக 3 மணிக்கு எங்கள் கார் புறப்பட்டதால், ஸ்.பை.யும், ஆவியும், சீனுவும் மதிய உணவு அதுவரை சாப்பிடாததால் நந்திவரத்துக்குச் சற்று முன்னால் ‘காரைக்குடில்' என்ற உணவகத்தின் முன் காரை நிறுத்தினார் ரூபக். உணவகத்தின் வாசலில் அருவி கொட்டுவதைப் போல் அமைத்து, அருவியின் அருகில் குகையின் வாசல் போல அமைத்திருந்தார்கள். உள்ளே போய்ப் பார்த்தால், மரத்தை வெட்டித் தள்ளியபின் அதன் அடிப்பாகம் இருக்குமில்லையா... அதைப் போல சேர்களை அமைத்திருந்தார்கள். கை கழுவ வாஷ் பேஸினுக்குப் போனால்... ஒரு பீப்பாயைக் கவிழ்த்து வைத்து அதிலிருந்து தண்ணீர் கொட்டுகிற மாதிரி செட்டப். சரிதான்... உடம்பில் இலை தழைகளைச் சுற்றி அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொண்டு ‘ஜிம்பாரே ஜிம்பாரே ஜிம்பக ஜிம்பா' என்றபடி வெயிட்டர் (வெயிட்டி வந்தால் நல்லா இருக்குமேன்னு ஜொள்ளு விட்டது ஒருபக்க மனசு) வருவாரோ என்று எதிர்பார்த்தேன். கையில் கால்குலேடடர் போன்ற வஸ்துவுடன் நாகரீக யுவர்கள்தான் வந்தார்கள்... சரி, நாம் ‘கிவ்'வி வெச்சது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு ஆர்டர் பண்ணினோம். உணவு வகைகள் ஏமாற்றாத நல்ல ருசியில் இருந்தது ஒரு பெரும் ஆறுதல்.

* ‘ரூபக்கின் கார் வலிமையானதா, இல்லை நாங்கள் வலிமையானவர்களா தெரிந்து கொள்கிறோம்’ என்று அஃறிணைகள் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன போலிருக்கிறது! திடீரென்று ஒரு பைரவர் ரூபக்கின் காரில் மோதி, ரூபக்கைத் திடுக்கிட வைத்து, ‘உன் கார்தான் பெரிசு, எனக்கு வலிக்குதுப்பா' என்று தன் பாஷையில் கத்தியபடி ஓட்டமெடுத்தார். பிறிதொரு ஏரியாவில் அசால்ட்டாக ஒரு ரிஷபர் குறுக்கிட்டு ரூபக்கின் பொறுமையைச் சோதித்தார். தலைநகரம் தவிர மற்றப் பகுதிகளில் தமிழ்நாடெங்கும் மிருகங்களின் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது போலும்! எதிர்பாராத இந்த நிகழ்வுகளெல்லாம் எங்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது - ரூபக்கைத் தவிர! ஹி... ஹி...!

* பல பத்திரிகைக்காரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ‘இணையத்தில் எழுதுபவர்கள்' என்றால் ஒரு எள்ளல் இருப்பதைக் கவனித்ததுண்டு நான். என்னைப் பொறுத்தவரையில் இணையத்தில் எழுதுகிற ஒருவனாக நான் இருப்பதில் மிகவும் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன். ஏனென்றால்... மாமனாகவோ, மச்சானாகவோ இல்லாமல்... இணைய நண்பர்கள் என்பதற்காக எங்களை வரவேற்று, உபசரித்து நட்பைக் கொட்டிய ‘சிவகாசிக்காரன்’ ராம்குமார் போன்றவர்கள் எமக்குக் கிடைப்பது இணையத்தின் வலிமையாலன்றோ...! உண்மையில் சிவகாசிக்காரனை முதன்முறையாகச் சந்திக்கப் போவதால் எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஏனெனில் நண்பர்கள் அனைவருக்கும் அவரின் எழுத்து பரிச்சயமாகியிருக்க, நான் அவரின் எழுத்துக்களில் ‘நாய்' பற்றி எழுதிய ஒரு பதிவு தவிர வேறெதுவும் படித்ததில்லை. இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற தயக்கம் எனக்குள். ‘‘மின்னல் வரிகள் படிச்சதுண்டா நீங்கள்?" என்று நான் ராம்குமாரிடம் கேட்க, ‘‘எதுவுமே படிசசதில்ல..." என்று பதிலிறுத்து என் வயிற்றில் பாலை வார்த்தார் அவர். ‘நண்பேன்டா' என்று அவரை கை குலுக்கி கட்டிக் கொண்டேன். ஹா... ஹா... ஹா...!

* நார்த்தா மலையை நாங்கள் அடைந்தபோது நடுப்பகல் ஒன்றரை மணி இருக்கும். அந்த படைபடைக்கும் வெயிலில் மலையேற விரும்பவில்லை என்று நானும் ஆவியும் காரிலேயே தங்கிவிட முடிவு செய்ய.. மற்ற மூவரும் மேலே போய்ப் பார்த்து வந்தார்கள். வந்ததும் ‘‘ச்சே...! மிஸ் பண்ணிட்டிங்க நீங்க. அருமையான இடம். வந்திருக்கணும்..." என்றெல்லாம் பசங்க (எங்க வ.எரிச்சலை கிளப்பணும்னே) செம பில்டப் கொடுத்தார்கள். ‘ஹி... ஹி... ஹி... இதுமாதிரி நெறைய பில்டப்பப் பாத்திருக்கோம்ல நாங்க' என்று நானும் ஆவியும் சிரித்துக் கொண்டோம். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை சீனுவின் பதிவில் படிக்க அவலுடன்... ஸாரி, ஆவலுடன் காத்திருக்கிறேன்!

* கங்கைகொண்ட சோழபுரம் நிறையவே பிரமிப்பைத் தந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்கதாக, சோழர் காலத்தியதாக இருந்த போதிலும் நேற்றுச் செதுக்கியவை போல சிற்பங்கள் அப்படி அழகாக இருக்கின்றன. ஆலயம், கோட்டையைச் சுற்றிலும் அழகாக புல்வெளி வளர்த்திருப்பதால் வெயிலின் கடுமை தெரியவில்லை. நாங்கள் சென்றது முகூர்த்த தினமாக இருந்ததால் கல்யாண ஜோடிகளும், துணையாக வந்த நிறைய ‘அம்மணி’களும் பார்வைக்குக் குளிர்ச்சி தந்தார்கள். ஹி... ஹி...! ஒவ்வொருவரின் காமிராக்களிலும் சலிக்கும் வரை புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளிவிட்டு (அட, கோயிலை, சிற்பங்களைத் தாங்க...) புறப்பட்டோம்.

* வார்த்தைகளை உபயோகிப்பதில் படுசிக்கனத்தைக் கையாளும் ஸ்கூல் பையன்(ர்?) இந்தப் பயணத்தில் கொஞ்சம் பேசியும், என்னை தூங்கும் சமயத்திலும், டைஐஐஐட் குளோசப்பிலும் தன் காமிராவால் சுட்டு, அராஜகனாக அவதாரமெடுத்து அசர வைத்தார். (எலேய்... தப்பித் தவறி எதையும் பப்ளிஷ் பண்ணித் தொலைச்சிராத... இங்க கொள்ளைப் பேருக்கு உன்னால ஹார்ட் அட்டாக் வந்துரும்டியோய்...!) மணிரத்னத்தின் பட ஹீரோக்கள் மாதிரி பேசுகிற ரூபக்கிடமும் இப்போது சற்று முன்னேற்றம் - பேசுவதில்! இவையெல்லாம் பயணம் எங்களுக்குத் தந்த அனுகூலங்கள்!

* ஆவி என்றால் மிருகங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. சித்தன்னவாசலில் ஆவியின் மீது பாசம் கொண்டு அவரைத் துரத்தியது ஒரு ஆஞ்சநேயர் அம்சம்! அரியலூரிலோ தனிமையானதொரு தோப்பில் இயற்கையன்னையின் மடியில்(?) அரசன் எங்களுக்கு மதிய விருந்து படைக்க, தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம், ஆவியின் முதுகுக்கு வெகு பின்னால், ஏதோ நீண்டநாள் நண்பர் போல நாக்கைத் தொங்கப் போட்டபடி வந்து அமர்ந்தார் ஒரு பைரவர். நாங்கள் அதைக் கவனித்துச் சொல்ல, திரும்பிய ஆவி அத்தனை அருகில் ‘நண்பரை’(!) எதிர்பார்க்காததால் ஜெர்க் ஆனார். ஹா... ஹா... ஹா...!

* புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி, பைபாஸ் ரோடைப் பிடித்த சமயத்தில் அரியலூருக்கு எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற குழப்பம் வந்தது. அப்போது சிவகாசிக்காரன், ‘‘அங்க ரெண்டு பொண்ணுங்க போவுது, அவங்ககிட்ட கேளுங்கப்பா..." என்று தூண்ட, முன் இருக்கையிலிருந்த ஆவி, ஜன்னலின் வெளியே தலைநீட்டி வழி கேட்க, ‘‘தெரியாது" என்ற அந்தப் பெண்களில் ஒருத்தி, ‘‘நமக்கே இங்க ஒரு மண்ணும் தெரியாது. இதுங்க நம்மகிட்டப் போயி வழி கேக்குது பாரு..." என்று தன் தோழியிடம் சொன்னது காருக்குள்ளிருந்த எங்களுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்க, சிவகாசிக்காரரின் திருமுகத்தில் சற்றே அசடு வழிய, படுகுஷி எனக்குள்! மத்தவங்க பல்பு வாங்கினா, நமக்கு எப்பவும் குஷிதானே..! அப்புறம் சற்றுத் தொலைவு சென்றதும் எதிர்பட்ட ஒரு ஆட்டோக்காரர் ஆபத்பாந்தவனாக வழிசொல்லி உதவினார்.

மொத்தத்தில்.... மொபைல் பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல என்னை ரீசார்ஜ் செய்துகொண்டு உற்சாகத்துடன் ஊர் திரும்ப வைத்தது இந்தப் பயணம். ஊருக்குத் திரும்பியதுமே ஆவியின் ‘ஆவிப்பா’ வெளியீட்டு விழா நடந்தது. அதைப் பற்றி பின்னர் ஆவி விரிவாக எழுதுவார் (என்று நம்புகிறேன்).

53 comments:

  1. //கொஞ்சம் பேசியும், என்னை தூங்கும் சமயத்திலும், டைஐஐஐட் குளோசப்பிலும் தன் காமிராவால் சுட்டு, அராஜகனாக அவதாரமெடுத்து அசர வைத்தார்//

    அந்த போட்டோலாம் பாத்துட்டீங்களா?

    சிவகாசிக்காரனை எனக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியது சீனு தான்.. அன்பாக மிரட்டி என்னைப் படிக்க வைத்தவர்... நான் முதன்முறையாகப் படித்த சிறுகதை "சாமி காப்பாத்து".

    ReplyDelete
    Replies
    1. ஓ... சீனுப்பயல் இப்படி மிரட்டில்லாம் படிக்க வெக்கிறானா? என்னை மிரட்டினதில்லப்பா இதுவுரை...! உன் போட்டோக்களையெல்லாம் பாத்ததுமே இந்த விஷயங்களைக் கவனிச்சு அரண்டு போய்ட்டேன். அடுத்த பயணம் வரும்போது பழிக்குப் பழி வாங்க உத்தேசம்...! என்னிடம் உஸாராயிரும் ஸ்கூல் பையரே...!

      Delete
  2. ரூபக் அவர்கள் பேசுவதில் முன்னேற்றம் மிகவும் சந்தோசம்...

    வயிற்றில் பாலை வார்த்த எனது இணைய நண்பருக்கும் சந்தோசம்...!

    இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே...!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து சந்தோஷங்களை அனுபவித்து எனக்கும் வாழ்த்துச் சொன்ன அன்பு நண்பருக்கு அகமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  3. பால கணேஷர்,

    பயணக்கட்டுரையா? ம்ம் நடத்துங்க!

    //மதியம் 2 மணிக்குப் புறப்படுவதாக நிச்சயித்து, பங்ச்சுவலாக 3 மணிக்கு எங்கள் கார் புறப்பட்டதால், ஸ்.பை.யும், ஆவியும், சீனுவும் மதிய உணவு அதுவரை சாப்பிடாததால் நந்திவரத்துக்குச் சற்று முன்னால் ‘காரைக்குடில்' என்ற உணவகத்தின் முன் காரை நிறுத்தினார் ரூபக்.//

    இது எந்தப்பக்கம் இருந்து கிளம்பும் போது?

    சென்னையில் இருந்தெனில், கூடுவாஞ்சேரிதான் ,நந்திவரம்!

    அங்கே அப்படி எதுவும் ஹோட்டலே இல்லையே,ஒரு வேளை என் கண்ணுக்கு தெரியாமா இருக்கா? இருந்தால் போய்ப்பார்த்துடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. சென்னையிலிருந்து புறப்படும் போதுதான் நண்பா! நந்திவரம் என்பது கூடுவாஞ்சேரியின் பழைய பெயர். அதற்குச் சற்று முன்பாகவே ‘காரைக் குடில்’ வந்து விடுகிறது. ஆக... நீரும் சென்னைவாசி என்பதைக் கண்டு கொண்டேன்..! ஹா... ஹா... ஹா...!

      Delete
  4. என்னைப் பொறுத்தவரையில் இணையத்தில் எழுதுகிற ஒருவனாக நான் இருப்பதில் மிகவும் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன்
    >>>
    wநானும்தான் பெருமை கொள்கிறேன் அண்ணா! இல்லன்னா, ஒற்றைக் குரங்காய் பிறந்த என்னால் ஆவி, நீங்க, ஸ்பை, ஸ்பை வொய்ஃப், விக்கியண்ணா, ரூபக். சீனு, செந்தில், சசி, ஜீவா, பிரகாஷ் மூலமா சகோதர பாசத்தை திகட்ட திகட்ட அனுபவிக்க முடியாதே!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாம்மா... கிட்டத்தட்ட உன் நிலையில இருககறவன்தானே நானும்...! இன்னிக்கு எத்தனையெத்தனை உறவுகளை நான் பெற்றிருக்கிறேன் என்பதை எண்ணி நாளும் மகிழ்கிறேன். என் கருத்துக்கு ஒத்திசைந்த தங்கைக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  5. //வெயிட்டி வந்தால் நல்லா இருக்குமேன்னு ஜொள்ளு விட்டது ஒருபக்க மனசு// ஹா ஹா ஹா

    எல்லாத்தையும் ஒரு பதிவுல எழுதுறது எப்படின்னு இதப் பார்த்து கத்துக்கணும் வாத்தியாரே.. நான் ஒரு வரி ஜிந்திச்சாலெ அது ஒரு பக்க நீளத்துக்குலா போகுது..

    மீண்டும் ஒருமுறை அத்தனையையும் ரீவைண்ட் செய்தது போன்ற உணர்வு..

    நார்த்தா மலை மட்டும் ஸ்பை எழுதுவார், நான் சித்தன்ன வாசலில் இருந்து நேரே GKC க்கு பறந்து விடுவேன்...

    ReplyDelete
    Replies
    1. ஓ... அப்ப நான் அந்த ஏரியாவக்கு மட்டும் ஸ்பையோட பயணம் போறேன். எனக்குல்லாம் நீளமா எழுதணும்னு நெனச்சாலும் முடியலயே தமபி... ஆட்டோமேட்டிக்கா (அ) டாக்ஸிமேட்டிக்கா எடிட்டிங் நடந்து வார்த்தைச் சிக்கனம் வந்துருது... ஹும்...!

      Delete
  6. மொறு மொரு மிக்ஸர் போல இந்த பயண பதிவு படிக்க அருமையாக இருக்கிறது அதே நேரத்தில் பொறாமையாகவும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எழுதும் நையாண்டி, கேலி, நகைச்சுவைப் பதிவுகள் சிலவற்றைப் படிக்கையில் எனக்கும் பொறாமைதான் வரும்...! Vice Versa! பகிர்வை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி நண்பா!

      Delete
  7. புதுக்கோட்டை வந்தீங்களே எங்க ஊர் புவனேஸ்வரியையும், கோகர்ணரையும் கூட தரிசிச்சிருந்திருக்கலாம். குடுமியான் மலை, நார்த்தமலை கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. டைட் ஷெட்யூலில் முடிந்தவரை சுற்றிப் பார்க்கலாமே என்று திட்டமிட்டதால் நீங்கள் சொன்ன விஷயத்தை மிஸ் பண்ண வேண்டியதாயிடுச்சு. மலரும் நினைவுகளுக்குச் சென்று மகிழ்ந்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  8. மொத்தத்தில்.... மொபைல் பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல என்னை ரீசார்ஜ் செய்துகொண்டு உற்சாகத்துடன் ஊர் திரும்ப வைத்தது//அடிக்கடி ரீசார்ஜ் பண்ணிக்கொண்டு பதிவெழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிஸ்டர் சொல்லிட்டா அப்பீல் ஏது...? அப்படியே பண்ணிடறேம்மா! மிக்க நன்றி!

      Delete
  9. நாலுபேரிடம் சொல்லிவிட்டுப் போனால் என்னவாம்? நாங்களும் எதிர்காலத்தில் புத்தகம் போடுவோம்ல?

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியாதான்! அடுத்த டூர் ப்ளான் பண்றப்ப எல்லாரிட்டயும் சொல்லிட்டு, பெரிய ஜமாவாப் புறப்படுவோம் ஸார்! மிகக நன்றி!

      Delete
  10. செம சிரிப்பு!///அரசர்(ன்)தங்கச்சிக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?அப்போ இனிமே ஒரு அர(ரி)சி தேடணும்,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. நான்கூட ‘அலை இனி கரை சேர்ந்துடுமா?’ என்று அரசனிடம் கேட்டேன். ‘அதுக்கெல்லாம் நாளாகும் ஸார்’ என்று சிரித்து மழுப்பி விட்டார் அரசன். ஸோ... அரசி கிடைக்க எத்தனை காலமாகுமோ...? சிரித்து ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி!

      Delete
  11. அட...ரெண்டு புகைப்படம் சேர்த்திருக்கக் கூடாதோ...

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஃப்ளோவுல எழுதி முடிச்சதும் பப்ளிஷ் பண்ணிட்டேன் ஸ்ரீராம். நீங்க சொன்ன மாதிரி படம் சேர்த்திருக்கலாமோன்னு இப்பத் தோணுது. டாங்ஸுப்பா1

      Delete
    2. Ella photovaiyum FB la thaan release pannratha plan vachchirukkaarunnu ninaikkaren!! hehe

      Delete
  12. It is very difficult to write a travelogue and even if I write it will be boring because self does not know how to write it to induce the readers to read at one go. But your travelogue is very interesting to read with your usual battle of wits.

    ReplyDelete
    Replies
    1. ஏமாற்றாத என் நகைச்சுவைப் பாதையை ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி மோகன்!

      Delete
  13. சுவையாக குட்டி குட்டி செய்திகளாய் பயணத்தை பகிர்ந்தது சுவாரஸ்யம்! என்னையும் உங்க சிஷ்யனாக சேர்த்துக்கோங்க பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹா... அதுக்கு முதல்ல நாம ஒரு தரம் சந்திச்சுப் பேசணும் சுரேஷ். அவ்வளவுதான்.... நீங்களும் என்னவராகலாம்! ரைட்டா? டாங்ஸு!

      Delete
  14. பய[ண]ங்கள் தொடரட்டும் அண்ணே...

    ReplyDelete
    Replies
    1. தொடர வாழ்த்திய நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. தலைநகரம் தவிர மற்றப் பகுதிகளில் தமிழ்நாடெங்கும் மிருகங்களின் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது போலும்! /// அப்படியே கும்பகோணம் பக்கமும் போய்ட்டு வாங்கனா...

    ReplyDelete
    Replies
    1. தஞ்சாவூர், கும்பகோணம் பக்கம்லாம் முன்பே விசிட் அடிச்சாச்சுன்றதாலதான் இந்த ட்ரிப்பை இப்படி ப்ளான் பண்ணினோம் ப்ரியா. அங்கயும் ஒரு முறை இப்ப இருக்கற மனநிலைல போய்ட்டு வந்து எழுத ஆசை உண்டு. பார்க்கலாம். மிக்க நன்றிம்மா!

      Delete
  16. சின்ன, சின்னதா இருந்தாலும் இரசிக்க வைத்துவிட்டன, இந்தப் பயணக் குறிப்புக்கள்.

    ReplyDelete
  17. பயண அனுபவம் புதுமை சிரிப்பும் சுவாரசியமும்!

    ReplyDelete
  18. GKC-யில் எடுத்த படங்கள் எங்கே:)?

    ReplyDelete
  19. இதெல்லாம் அசல் ஊர் பெயர்களா? பெயர் காரணமாவது தெரிஞ்சுக்கிட்டீங்களா.. இல்லை அதையும் எல்லாம் தெரிஞ்ச அம்மணிகள் கிட்டே கேட்டீங்களா..?

    இணைய எழுத்தாளர் - பத்திரிகை எழுத்தாளர்.. தனிப் பதிவுக்கான கரு.
    (இதை வச்சு யாரு சிறப்பான பதிவு எழுதுறாங்களோ அவங்களுக்கு அடுத்த முறை சென்னை வரப்ப தலப்பா கட்டு குல்லா அவுருனு புதுசு புதுசா ரெஸ்டராந்ட் தொறந்திருக்காங்களே.. அதுல ஒண்ணுல டின்னர் வாங்கித் தரேன். அப்படி எழுதாதவங்க எனக்கு வாங்கித் தரலாம்).

    ReplyDelete
    Replies
    1. பெயர்க்காரணம் தெரியாம எந்த ஊரையும் விட்டு வாறது இல்ல அப்பா சார்..

      டின்னர் வாங்கி தர ரெடியா இருங்க :-)))))))

      Delete
  20. ஒரு அருமையான பயணக் கட்டுரை! அதுவும் தங்கள் நண்பர்களாகிய சிஷ்யகோடிகளுடன்!!! பயனக் கட்டுரையின் நடை சூப்பருங்க!!!! ஹாங்களும் பயணித்தது போல இருந்தது!..அதுவும் நல்ல நகைச்சுவகலந்து!

    ஆவியை நன்றாக ஓட்டியிருக்கின்றீர்கள்!!!!!!!!

    என்ன கொஞ்சம் பொறாமையாகவும்??!!!!!!! ஐயோ! கண்ணு எல்லாம் வைக்க மாட்டோங்க.....மனமுவந்து வாழ்ததுவோம்...!!!!!

    ReplyDelete
  21. எப்போதோ பார்த்தது ! தங்கள் பதிவு நினைவூட்டியது! நன்றி!

    ReplyDelete
  22. இது ரொம்பத் தப்பு பாலகணேஷ் சார். எங்க ஊருக்கு வந்திட்டு எங்களுக்கெலலாம் சொல்லாம கடையில சாப்பிட்டுப் போயிருக்கீங்க? அப்பறம் எதுக்கு இணைய உறவு அது இதுன்னு சொல்லணும். நார்த்தாமலையிலர்ந்துதான் தஞ்சைப் பெரிய கோவிலுக்கே கல்லெடுத்துப் போனான் ராஜராஜன் அதைப் பாக்காம காருக்குள்ளயே உட்காந்திட்டீங்க.. அட போங்க சார்! அடுத்த முறை வரும்போது சொல்லுங்க பெரிய வரவேற்பே வச்சிருவோம். நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.

    ReplyDelete
    Replies
    1. //அப்பறம் எதுக்கு இணைய உறவு அது இதுன்னு சொல்லணும்.//

      ஹி...ஹி..ஹா ...ஹா ஓஹோ ஹோ அவ்வ்வ் !

      ஒரு பின்னூட்டம் கொஞ்சம் "மாத்தி கருத்து சொன்னாலே" பொங்குவாருங்கோ முத்துநிலவன் அய்யா ,அப்பாலிக்கா என்னைய்யா இணைய உறவு :-))

      தப்பி தவறி இவரை போன்றவர்களை எல்லாம் நேரில் சந்தித்து விடக்கூடாது என நினைத்துக்கொள்வேன் :-))

      Delete
  23. நீங்கள் சென்ற இடங்களில் சித்தன்ன வாசல் சென்றிருக்கிறேன் (அப்போதுநீங்கள் பிறந்திருப்பீர்களா என்பது சந்தேகம்.) நான்கைந்து வருடங்கள் முன்பு கங்கை கொண்ட சோழபுரம் சென்றோம். ஏறத்தாழ தஞ்சை பெரிய கோவிலின் ஜெராக்ஸ்,பயணங்கள் மனசுக்குப் புத்துணர்ச்சி தரும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. அருமையான, சுகமான எழுத்து!!

    இத்தனை தூரம் நண்பர்களுக்கு மதிப்பு கொடுத்து கிட்டத்தட்ட எங்கள் எல்லை வரை வந்து, ரசித்துச் சென்றிருப்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது! விரைவில் தஞ்சைப்பக்கம் வாருங்கள்! விருந்தோம்பலுக்கு தஞ்சை புகழ் பெற்றது! ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!!

    ReplyDelete
  25. விரைவில் தஞ்சைக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன்

    ReplyDelete
  26. //பிறிதொரு ஏரியாவில் அசால்ட்டாக ஒரு ரிஷபர் குறுக்கிட்டு ரூபக்கின் பொறுமையைச் சோதித்தார்.// ஹிஹிஹி...
    //மொத்தத்தில்.... மொபைல் பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல என்னை ரீசார்ஜ் செய்துகொண்டு உற்சாகத்துடன் ஊர் திரும்ப வைத்தது இந்தப் பயணம்.//

    ரெம்பக் குட்த்து வச்சிக்கின ஆளுபா...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
  27. குடந்தை சரவணன் சாருக்கு, சென்ற 09/02/2014 ஞாயிறன்று நான் ஃபோன் செய்தபோது அவர், நீங்களெல்லோரும் கங்கைகொண்டசோழபுரத்தில் இருப்பதாகக் கூறினார். அந்தப் பயணக் கட்டுரைதானே?

    ReplyDelete
  28. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் :ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : பொறந்த வீட்டுப் புராணம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அறிவிப்புக்ள் சுவாரசியமானவை தனபாலன்.

      Delete
  29. ஹா ..ஹா ..இப்படி தான் சார் காலைல வேலைக்கு போகும் போதே மாடெல்லாம் மேச்சுட்டு தான் ஸ்கூலுக்கு போக முடியும்! இங்க வண்டி ஓட்ட எட்டு போட்ட மட்டும் பத்தாதுங்கோ! எங்க ஊருக்குள்ள வந்துட்டு போயிருகிங்க ,திருகொகர்ணத்தை கண்டிப்பா மிஸ் பண்ணிடிங்க. அட்டகாசமா குடைவரை கோயில்! சுஜாதா டச்சுல செம காமெடி யா எழுரிங்க அண்ணா !

    ReplyDelete
  30. பயணம் இனிமையானது தான் கணேஷ்...... அடுத்த பயணம் இப்படி மனதுக்குப் பிடித்த நண்பர்களோடு செல்ல ஆசை..... பார்க்கலாம் - அடுத்த தமிழகப் பயணத்தின் போது முடியுமா என!

    ReplyDelete
  31. சுவாரஸ்யமான பயணம் களைத்து இருப்பீர்கள் அடுத்த பயணம் துவங்க முன்னர் சற்று நேரம் இளைப்பாறுங்கள் தொடரலாம் !
    நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  32. எங்கயாவது கிளம்பும்போது இப்படி கும்பலாக போவதில் இருக்கும் சந்தோஷம் வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது அப்டின்னு இனிமே சொல்லமுடியாதுப்பா... அவ்ளோ அழகா எழுதி இருக்கீங்க. எல்லாரும் பல்பு வாங்கினா உங்களுக்கு ஜாலியா? இருக்கட்டும் இருக்கட்டும்.. :) ஸ்கூல்பையன் சரவணன் என்னிடம் பேசிய ஒரே வார்த்தை மொபைல் இங்க சார்ஜ் பண்ண எங்க வைக்க அப்டின்னு கேட்டப்ப அதோ அப்டின்னு சொன்னது தான் :) சீனு ஆனந்த் ரெண்டு பேரோட அட்டகாசம் தாங்கமுடியலையேப்பா.. அதென்னப்பா பைரவருக்கு ஆனந்த் மேலே அப்படி ஒரு இஷ்டம்? :) நீங்க போன உணவகத்தோட விவரிப்பு நேரில் பார்த்தமாதிரியே இருந்ததுப்பா..

    அரசன் தங்கையின் திருமணத்துக்கு எல்லோரும் சென்று வந்ததை இங்க சிப்ஸ் மாதிரி தூவினாலும் நல்லாவே மொறுமொறுன்னே இருந்தது கணேஷா..

    அரசன் தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

    இணையத்தில் எழுத ஆரம்பித்து நான் பெற்ற நட்பு வட்டம் அத்தனையும் வைரங்கள்... இதை நான் ரொம்ப சந்தோஷமாக பகிர்கிறேன்...

    ரூபக் பேச்சில் இப்ப நல்ல முன்னேற்றம் என்பது கேட்க சந்தோஷமா இருக்கு..

    சீனுவோடது படிச்சு பார்க்கலாம்..

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube