Monday, August 26, 2013

பதிவர் திருவிழாவில் சேட்டை!

Posted by பால கணேஷ் Monday, August 26, 2013
பதிவர் திருவிழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாய் நடந்தேறி  வருகின்றன. உணவுப்பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மேடை அலங்காரம், பதிவர்களுக்கான பாட்ஜ் அச்சிடுதல் என பணிகள் முடுக்கி விடப்பட்டு, வரும் ஞாயிற்றுக் கிழமை சந்திப்பிற்கான படபடப்பு  பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன.

சென்ற ஆண்டு பதிவர் திருவிழா நடந்த பொழுது ‘தென்றல்’ சசிகலா எழுதிய ‘தென்றலின் கனவு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதை நான் வடிவமைத்திருந்தேன் என்றபோதிலும் அவசரமாக, குறுகிய காலத்திற்குள் செயல்பட்டு அச்சாக்கி கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக எங்கள் மனதிற்கு முழுமையான  திருப்திதரும் வண்ணம் அமையவில்லை. சரி, அடுத்த தொகுப்பினை சசி வெளியிடும்‌போது அதை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்று எங்களை நாங்களே ஆறுதல்படுத்திக் கொண்டோம்.

இந்த ஆண்டு வெளியிடப்படவிருக்கும் புத்தகங்கள் நான்கு. அதில் இரண்டு என் கைவண்ணத்தில் வெளிவருகிறது என்பது மகிழ்வான விஷயம் (எனக்கு!). சதீஸ் சங்கவியின் ‘இதழில் எழுதிய கவிதைகள்’ புத்தகத்தை நான் வடிவமைத்திருக்கிறேன். சிற்சில படங்களை மாற்றச் சொன்னதைத் தவிர மற்றபடி முழுமையாக உற்சாகப்படுத்தி நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் சதீஸ் சங்கவி. அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! அப்புறம்... அண்ணன் சேட்டைக்காரனின் புத்தகத்தை நான் வடிவமைத்து அச்சிட்டு அது பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இங்கே தந்திருக்கிறேன். அவைரும் தவறாது கலந்து கொண்டு உற்சாகப்படுத்தும்படி வேண்டுகிறேன்.


26 comments:

  1. வாழ்த்துக்கள் மாமே!

    ReplyDelete
  2. நல்வாழ்த்துகள் :)

    ReplyDelete
  3. "சேட்டைக்காரன்" டைட்டில் பான்ட் வேட்டைக்கரனை (பழசு!) நினைவுபடுத்துவதாய் உள்ளது.

    சூப்பர் சார்.. நாட்கள் நெருங்க நெருங்க சந்தோஷத்தின் அளவு அதிகமாகிறது.

    ReplyDelete
  4. சேட்டை "அண்ணா"வுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. டிசைன் சூப்பரா வந்திருக்கு...

    ReplyDelete
  6. சேட்டைக்காரனின் எழுத்தும் உங்கள் வடிவமைப்பும்
    நிச்சயம் சூப்பராகத்தான் இருக்கும்
    இரண்டு இமயங்கள் இணைந்தது என்றால்
    சூப்பராகத்தானே இருக்கனும் ?

    ReplyDelete
  7. நிச்சயமாய் நம்பலாம் ..உங்கள் கை வண்ணமும் ,சேட்டைக்காரனின் எழுத்தும் 'மொட்டைத் தலையும் முழங்காலும் 'போலிருக்காது !

    ReplyDelete
  8. சூப்"பார்"...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. சங்கவிக்கும், சேட்டை ஐயாவுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. அனைவர்க்கும் வாழ்த்துக்கள்! அழைப்பிதழ் வடிவமைப்பு அசத்தல்!

    ReplyDelete
  12. Congratulations for publishing this book. How to get this book by post (there is no mention about the cost and the postage charges) for those who can not attend the function. Kindly give information about this also.

    ReplyDelete
  13. தலைவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நிச்சயம் வந்து விடுகிறேன்!
    உங்களுக்கும் திரு சேட்டைகாரருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. சேட்டைக்காரர் வேணு ஸாருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு எங்கள் பாராட்டுகள் கணேஷ்!

    ReplyDelete
  16. இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது சார் நாம் சந்தித்து!!
    அடுத்த சந்திப்பிற்காக காத்துகொண்டிருகிறேன்....
    உங்கள் அழைப்பின் வடிவமைப்பே அழகா இருக்கு!!

    சேட்டை சாருக்கும் .. உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  17. எழுத்தாளர் சேட்டைக்காரன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். நூலாக்கித்தந்த தங்களுக்கு அன்பான பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
  18. சங்கவி , சேட்டைக்காரன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. எழுத்தாளர்கள் சங்கவி மற்றும் சேட்டைக்காரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. ஆவலுடன் இந்த புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  21. வேணுஜி, சங்கவி ஆகியோருக்கும் புத்தகங்களை வடிவமைத்த தங்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  22. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. அன்பு கணேஷ் விழா சிறப்புற நடை பெறுவதற்கும்,புது நூல்கள் வெளீயீடு நிறைவாக இருப்பதற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    சேட்டைக் காரனுக்கு என்னை மறந்து கூட போயிருக்கும்:)
    இந்தப் புத்தக டிஸ்கவரி பாலஸில் கிடைக்குமா. வாங்கிக் கொள்கிறேன்.
    விழாவின் வெற்றிக்கு இறைவனிடம் என் பிரார்த்தனைகள்/.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube