ஹாய் எவ்ரிபடி... உங்களைல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சு. எல்லாரும் நலந்தானே...!
எஞ்சோகக் கதையக் கேளு தாய்க்குலமே... அதக் கேட்டாக்கத் தாங்காதம்மா உங்க மனமே... இன்டர்நெட்டு ஒண்ணை நம்பி எங்கடையத் தொறந்து வெச்சேன்... போஸ்ட்டு மேல போஸ்ட்டாப் போட்டு உங்களையும் அறுத்து வந்தேன்... எஞ்சோகக் கதையக் கேளு தாய்க்குலமே...
அப்படின்னு ஆரம்பிச்சு ஒரு மாசமா ஆபீஸ்லயும், வீட்லயும், நெட் கிடைக்காமயும் பட்ட பாட்டைல்லாம் சொல்லிக் கைப்புள்ள ஸ்டைல்ல அழணும் நானு நியாயமா. ஆனா சோகக் கதையிலயும் கூட ஹாஸ்யத்தை எதிர்பார்ர்க்கற டைப்பாச்சுதே நாம... அதனால அதையெல்லாம் விட்டுட்டு ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்குள்ள வரலாம். கடல்ல விழற மழைத்துளில ஒண்ணு எங்க போகுதுன்னு யாரு தேடப் போறாங்கன்னு எனக்குள்ள ஒரு நெனப்பு இருந்திச்சு. பல பெரிய அலைகளும், சில சிறிய அலைகளும் இந்த மழைத்துளியக் காணாம தேடிப் புடிச்சு விசாரிச்சப்பத்த்தான் என் எண்ணம் தவறானதுன்னு புரிஞ்சிச்சு. இணையத்துல நுழைஞ்சதுல நாமளும் நிறைய மனுஷங்களைச் சம்பாதிச்சிருக்கோம்னு அளவில்லாத சந்தோஷமும் எழுந்துச்சு.
அதுலயும் இந்த ஸ்.பை. ஒருபடி மேல போயி... ‘காணாமல் போன பதிவர்’ன்னு நம்மளைப் பத்தி ஒரு பதிவே எழுதினதப் பாத்ததும் மனசுக்குள்ள ‘டர்ர்’ராயிருச்சு. இனியும் நாம கவனிக்காம வுட்டா...கோவை ஆவி, சீனு, அரசன், ரூபக்-னு நம்ம சங்கத்து உறுப்பினர்கல்லாம் சேர்ந்து புதுசா வந்ந்திருக்கற இந்து பேப்பர்ல கூட விளம்பரம் குடுத்துடுவாங்களோன்னு தோணிச்சு. (எல்லா பயபுள்ள்ளைங்க கிட்டயும் நம்ம போட்டோ வேற இருக்குது!) சரி... நாமளும் ஏதாச்சும் பழையபடி கிறுக்கலாமேன்னு ரீ எண்ட்ரி இப்ப!
‘காணாமப் போன’ அப்படின்னு படிச்சதுமே எழுத்தாளர் சாவி எழுதின அவரோட சின்ன வயசு அனுபவம் ஒண்ணு படிச்சது நினைவுக்கு வந்தது. எட்டு வகுப்பு வரை தமிழில் படித்த அவரை ஒன்பதாம் வகுப்பில் இங்கிலீஷ் மீடியத்துக்கு மாற்றினதால படிக்கறது கஷ்டமா இருக்க, எக்ஸாம் எழுதினா பெயிலாயிடுவோமோன்னு பயந்து, அவங்கப்பா எக்ஸாம் பீஸ் கட்டக் குடுத்த பணத்தை எடுத்துக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்ட்டாரு.கைல இருந்த காசெல்லாம் தீர்ற நிலையில திருப்பாதிரிபுலியூர்ல படிச்சுட்டிருந்த அவரோட அத்தை மகனைத் தேடிப் போயிருக்க்காரு.அவன் லீவுல சொந்த ஊருக்குப் போயிட்டதால, கைலருந்த காசும் தீர்ந்து போக ரெண்டு நாள் கொலப்பட்டினியா பாடசாலைத் திண்ணையில கெடந்தவரு, ஒரு ஓட்டல்காரரை சினேகம் பண்ணிக்கிட்டு அவர் உதவியால ஊருக்கு லெட்டர் எழுதிப் போட்ருக்காரு. ஊர்ல இவரக் காணாம தவிச்சு இவங்கப்பா அம்மா கோயில் கோயிலா வேண்டிட்டிருக்காங்க. லெட்டரைப் பாத்ததும் அப்பா வந்து சாவியை மயிலாப்பூருக்கு கூட்டிட்டுப் போயிட்ட்டாரு. அங்க அவரு வேண்டிக்கிட்ட மாதிரி பிராமணர்களுக்கு முந்திரிப்பருப்பு, பாயசம் எல்லாம் வெச்சு அட்டகாசமா ஒரு விருந்து போட்ருக்காரு அவரோட அப்பா. விருந்துல சாப்பிட்டுட்டு பெரிசா ஏப்பம் விட்ட படி வந்த ஒருத்தரு, ‘‘சாப்பாடு பிரமாதம்டா... மகராஜனா நீ அடிக்கடி இப்படிக் காணாம போயிண்டிரு... எங்களுக்கு அப்பதான் நல்ல சாப்ப்பாடு கெடைக்கும்’’ அப்படின்னாராம்...! ஹா... ஹா...! அதுமாதிரி நான் காணாமப் போயி திரும்ப வந்ததுக்கு நம்ம ஸ்.பை. சரவணன் உங்க எல்லாருக்கும் விருந்து வெக்காட்டியும் அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது மெகா விருந்து ஒண்ணு வெப்ப்பாருன்னு நெனக்கிறேன். ஹி... ஹி...!
நம்ம ஸ்.பை. தன் பதிவுல எழுதியிருந்த ஒரு வரி எனக்கு ரொம்பப் புடிச்சது. நான் மீண்டும் வலைக்குள்ள வந்ததும் நண்பர்கள் அனைவரோட பதிவுகளையும் சேத்துவெச்சுப் படிச்சு கருத்துப் போடுவேன்னு சொல்லியிருந்ந்தாரு. அது ரொம்பக் கரெக்ட். மத்தவங்களுக்கு கருத்து போடறதுக்க்காகவே எனக்குன்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சவன் நானுங்கறதால அம்ம பய நல்லாப் புரிஞ்சு வெச்சுருக்கானேன்னு மகிழ்வா இருந்ந்திச்சு. நாளைலருந்து அதைச் செய்யறதுதான் என்னோட தலையாய (கண்ணாய, கையாய) பணிங்கோ...!
****************************************************
அவர் என் நெருங்கிய நண்பர். ‘பூக்கூடை’ என்ற தளத்தில் தன் சிந்தனை மலர்களை நிரப்பிட்டிருந்தாரு. (யாரெல்ல்லாம் ‘பூக்க்கூடை’க்கு விசிட் அடிச்சிருக்கீங்க? கை தூக்குங்க..) ஆரோக்கியதாஸ் என்பது அவர் பெயர். அநியாயத்துக்கு நல்லவர். செப்டம்பர் 9ம் தேதி செல்வி. ஜெசிந்தா மேரி கிட்ட வசமா மாட்டிக்கிட்டாரு. சீரியஸ் டைப்பான அவரை கல்யாணத்தன்னிக்காவது ‘சிரி’யஸ் போஸ்ல போட்டோ எடுக்கலாம்னு ரொம்ப ட்ரை பண்ணேன்... கடைசில ‘நான் அலுதுடுவேன்’னு மிரட்ட்டினதும் கொஞ்சமா சிரிப்பை(?)ச் சிந்தறாரு பாரு்ங்கோ...!
****************************************************
இப்ப நம்மோட... ஐ மீன் என்னோட... சமீபத்த்திய கோவை ட்ரிப்புல எடுத்த சில படங்கள் உங்க பார்வைக்கு...

|
|
Tweet | ||
//நான் காணாமப் போயி திரும்ப வந்ததுக்கு நம்ம ஸ்.பை. சரவணன் உங்க எல்லாருக்கும் விருந்து வெக்காட்டியும் அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது மெகா விருந்து ஒண்ணு வெப்ப்பாருன்னு நெனக்கிறேன். //
ReplyDeleteகண்டிப்பா உண்டு... எங்க போலாம்னு எனக்கு SMS அனுப்புங்க...
மீண்டும் வருக... பதிவுகள் பல தருக....
முதல் ஆளாய் வரவேற்ற ஸ்.பை.க்கு மனம் நிறைய நன்றி!
Delete//எல்லா பயபுள்ள்ளைங்க கிட்டயும் நம்ம போட்டோ வேற இருக்குது!//
ReplyDeleteஅந்த போட்டோவை விட காமெடியான போட்டோவும் இருக்குது...
அச்சச்ச்சோ... முதல்ல எல்லாத்தையும் பறிமுதல் பண்ணிப்புடணும்டா கணேஷ்!
Deleteஉசாரு...!
கோவை ட்ரிப் படங்கள் கலக்கல்...
ReplyDeleteஸ்.பை. சரவணன் அவர்களுக்கு நன்றி...
படங்களை ரசித்து சரவணனுக்கும் நன்றி சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா!
Deleteமீண்டு வந்த மின்னல்!வாழ்த்துகள்..!
ReplyDeleteமகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteமீண்டும் உங்கள் தளத்தில் ஒரு அசத்தல் பதிவு...... Welcome Back....
ReplyDeleteஸ்.பை. நல்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு கூப்பிட்டு போங்க! :)
என்னை வரவேற்ற நண்பருக்கு மகிழ்வுடன் என் நன்றி! உண்மைல ஸ்.பை. ரெடின்னு தான் சொல்றாரு... நான்தான் தள்ளிப் போட்டுட்டிருக்கேன்பா!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகண்டிப்பா உண்டு... எங்க போலாம்னு எனக்கு SMS அனுப்புங்க...//அண்ணா..ஐ டி சி கிராண்ட் சோழா போய்ட்டு வந்து அதையும் ஒரு பதிவாக தேத்திடுங்க.
ReplyDeleteகரெக்ட்..பதிவரா லட்சணமா இனிமே உணவங்களையும் எழுதிர வேண்டியது தான்மா!
Deleteஅட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது மெகா விருந்து ஒண்ணு வெப்ப்பாருன்னு நெனக்கிறேன். ஹி... ஹி...!
ReplyDelete///அண்ணே அதுக்காக அடிக்கடி காணாமல் போய்டாதீங்க...புகைப்படங்கள் நன்றாக இருந்தன .கமெண்ட் அதைவிட நன்று!
இல்லைம்மா! கடும் நெருக்கடிகள் என்னை காணாமப் போக வெச்சுடுச்சு. இனி அது நேராது. படங்களையும் (முக்கியமா) கமெண்ட்டையும்) ரசிச்ச தங்கைக்கு மனம் நிறைய நன்றி!
Deleteமீண்டு(ம்) வருக.
ReplyDeleteவரவேற்ற உங்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றி!
Deleteவந்தாச்சா! வாங்க வாங்க.....
ReplyDeleteவரவேற்ற நண்பனுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteமீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.....
ReplyDeleteஅருமையான பதிவர் சந்திப்பு ம்ம்ம்ம்ம் அசத்துங்க அசத்துங்க....!
வரவேற்று மகிழ்ந்த நண்பனுக்கு இதயம் நிறைந்த நன்றி!
Deleteமாநாட்டு வேலைகளில் களைப்பாகி ஓய்வு எடுத்திட்டிருக்கீங்கன்னு நினைச்சேன்.. மின்னல் மீண்டும் மின்ன ஆரம்பித்ததில் மகிழ்ச்சி :-))
ReplyDeleteஇல்லிங்க சாரல் மேம்... அந்த வேலைகள்ல களைப்பே வராது. மகிழ்வோட செய்யறதாச்சுதே... சொந்த வாழ்க்கைச் சிக்கல்கள் சில ஏற்பட்டதுதான் காரணம். இப்ப க்க்ளியர். மின்னலை வரவேற்ற உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteவந்தாச்சா..! இனி வழக்கம் போல மின்னட்டும்!
ReplyDeleteஆம் ஐயா... இனி தவறாது. உங்களின் அன்பிற்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteகாணமல் போனவர் வந்துட்டரா.....
ReplyDeleteவந்தாச்சு தம்பீ...! மிக்க நன்றி!
Deleteமீண்டும் வந்த மின்னலை பதிவுலகின் எல்லா வட்ட சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறோம்
ReplyDeleteவட்டம், சதுரம் யாவற்றின் சார்பாகவும் வரவேற்ற குடந்தையூராருக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅலுவலக வேலையில் தீவிரமாகிட்டீங்கன்னு நினைச்சேன்... மாப்பிள்ளையை மிரட்டி புகைப்படம் எடுத்தீங்களோ?.... கோவை புகைப்படங்கள் அருமை....
ReplyDeleteஇந்த முறை கோவை விசிட்டில நான் பாக்க்காம மிஸ் பண்ணினது உங்கள மட்டும் தாங்க. (அழைத்துப் பேசாதது என் தவறுதான்) அக்டோபர்ல மீண்டும் வர்றப்ப பாக்கலாம்னு சமாதானம் பண்ணிட்டு வந்துட்டேன். படங்களை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteநீங்கள் இல்லாமல் இருந்தது பதிவு உலகில்
ReplyDeleteநிஜமாகவே ஒரு குறையாகத்தான் பட்டது
வந்து சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்
தங்களின் அன்பிற்குத் தலைவணங்கிய நன்றி நண்பரே!
Deletetha.ma 5
ReplyDeleteவருகவருக
ReplyDeleteமொரு மொரு கடலைகள்
தருக.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
இதோ... நாளைக்கே மொறுமொறுன்னு மிக்ஸர் பரிமாறிடறேன் சூரித்தாத்தா! மிக்க நன்றி!
Deleteமீண்டும் வந்ததில் மகிழ்ச்சி அண்ணா...
ReplyDeleteமின்னலைக் கண்டத்தில் மகிழ்ச்சி...
மகிழ்ந்து வரவேற்ற வெற்றிவேலுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!
Deleteதொடர்ந்து "மின்ன" வேண்டுகிறேன்
ReplyDeleteநிச்சயம் செய்கிறேன் ராஜா! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteவந்தாச்சா வாங்க வாங்க எங்க அண்ணாத்தைய கோவையாருங்க கடத்திட்டாங்கனு போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு நினைத்தேன்.
ReplyDeleteஎன்னது அவரை...கடத்துறதா....
Deleteஹா... ஹா... ஹா...! நல்லவேளை... சசி கிட்டருந்து கோவை நண்பர்கள் தப்பிச்சாங்க. மிக்க நன்றிம்மா!
Deleteமீண்டு(ம்) வந்தமைக்கு இனிய பாராட்டுகள்:-)
ReplyDeleteபாராட்டிய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!
DeleteYESSSSS YOU ARE BACK WITH A BANG
ReplyDeleteஇந்த பாங்-கை விடாமல் பிடிச்சுக்கறேன் நண்பா! மிக்க நன்றி!
Deleteகாணோமேன்னுதான் நானும் பார்த்தேன். வருக, வருக!
ReplyDeleteஎன்னைத் தேடிய, வரவேற்ற ஸ்ரீராமுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteபதிவுலகை மீண்டும் கலகல(க்க)ப்பூட்ட வந்திருக்கும் கணேஷூக்கு இனிய வரவேற்புகள். உங்களிடம் எவராலும் நிரப்பவியலாத வெற்றிடமாகவே இதுநாள்வரை இருந்தது என்பது உண்மை. இனி பதிவுகள் தொடரும் என்னும் அறிவிப்பே மகிழ்வைத் தருகிறது. சிறிய இடைவெளிக்குப் பின்னரான வருகைக்கு நல்வரவு கணேஷ்.
ReplyDeleteநீங்கள் என்மீது கொண்ட நம்பிக்கைக்கும், வரவேற்புக்கும் என் இதயம் நிறை நன்றி தோழி!
Deleteநல்ல தலைப்பு:). வருக!
ReplyDeleteவரவேற்புத் தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமீண்டு வந்த மின்னல்!வாழ்த்துகள்..!
ReplyDeleteVetha.Elangathilakam.
என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteபோட்டோலாம் நச்...
ReplyDeleteஆமா எங்களை கூட கவனிக்காம அப்படி என்ன உறியரீங்க..
போட்டோக்கள்ல உங்க பங்களிப்பும் உண்டே ஜீவா! கிரெடிட்ல பாதி உங்களுக்கேதான்! என்னை சாக்லெட் மில்க்ஷேக் உறிஞ்ச வெச்சுட்டு பச்சப்புள்ளயாட்டம் கேக்குறாரு பாரேன் கேள்வி.. ஹி... ஹி...! மிக்க நன்றிப்பா!
Deleteஆமா அந்த சினிமாகாரங்கத்தான் இப்படி விளம்பரம் பண்றானுங்கன உங்களுக்கு எதுக்கண்ணா இந்த விளம்பரம்?
ReplyDeleteany how நீ...........................................................ண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவை பார்த்ததில் உள்ளம் சொல்லுதே "மோர்"!
கொஞ்சம் கேப் விட்டுட்டதால மக்களுக்கு முகம் மறந்துரக் கூடாதேன்னுதான் புகைப்பட ஆல்பம் அஜீஸ்...! இதுக்கே இப்படிச் சொன்னா, அடுத்த பதிவுல நான் பகிரப் போற படத்துக்கு என்ன சொல்விங்களோ..? உற்சாகமாய் வரவேற்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deletewelcome back
ReplyDeleteவரவேற்ற உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!
Deleteவாங்க அண்ணாச்சி மீண்டும் கடை கலகலப்பாகட்டும் :)))
ReplyDeleteஅன்போடு வரவேற்ற நேசனுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமீன்டும் மின்னலடித்ததற்கு வரவேற்பும் இனிய வாழ்த்துக்களும்!!
ReplyDeleteமின்னலை வரவேற்று வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமீண்டு வந்த மின்னலே வருக வருக! இனி தவறாமல் பதிவுகளை தருக தருக!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
தவறாமல் (இயன்றவரை நல்ல) பதிவுகள் தருகிறேன் ரஞ்சனிம்மா. வாழத்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஊர்ல இல்ல.. .மீட்டிங்கை மிஸ் பன்னிட்டேனே
ReplyDeleteநானும்தான் உங்களை மிஸ் பண்ணிட்டேன் நண்பா! அக்டோபர் விசிட்ல சேத்து வெச்சு கொண்டாடிரலாம். மிக்க நன்றி!
Deleteஇடைவெளிக்குப் பின் மின்னலை கண்டு மகிழ்ச்சி
ReplyDeleteமகிழ்வு கொண்டு முரளிக்கு மனம் நிறைய நன்றி!
Deleteபலத்த இடி மழையெல்லாம் நாளை வருமோ?
ReplyDeleteஇன்றே இல்லை இல்லை, இப்போது சென்னையில் பலத்த மழை...
Deleteஇடி, மழை சென்னையிலிருந்து இனி இங்கும் இடம்பெயர்ந்து நிறைய வரும் நண்பரே! மிக்க நன்றி!
Deletewelcome back sir
ReplyDeleteவரவேற்புத் தந்த நிலாமகளுக்கு மகிழ்வுடன் என் இதயம் நிறை நன்றி!
Deleteதினமும் உங்கள் பக்கம் வந்து ஏமாந்தது தான் மிச்சம்... நேத்து ஒருநாள் வரல.... உடனே பதிவு போட்டு இருக்கீங்க.....
ReplyDeleteகோவை ட்ரிப் - அலுவலக வேலைய இல்ல... சொந்த வேலையா சார்....
நீங்க இன்னும் பதிவர் தின நிகழ்ச்சி பத்தி பதிவே போடல.... ஐ ஆம் வெயிடிங்.......
கோவை ட்ரிப் சொந்த வேலை தாம்மா... பதிவர் திருவிழா பத்தி எல்லாரும் போட்டு முடிச்சுட்டதால நான் இந்த முறை நோ...! அடுத்த நமக்குத் தெரிஞ்சதை எழுதிட்டே போலாம், சரியா...! உனக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஓ... மின்...ன.ல்.. மின்னியது எப்போ????...
ReplyDeleteஇங்கு எமக்கு தெரியவே இல்லையே...:)
நல்வரவு! உங்கள் மீள்வரவு!
வாழ்த்துக்கள் சகோ!
மீள்வரவை வரவேற்று வாழ்த்திய சகோதரிக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஒரு விசேசம்னா வேலை இருக்கும்தா அதுக்காக இப்படியா சார் பதிவர் திருவிழாக்கு ஒரு மாதம் முன்னாடி போனவரு எல்லாம் முடிஞ்சு ஒரு மாதம் முடிஞ்சு வரீங்க... எப்படியோ டிவில சொல்லும் முன்னாடி வந்துடீங்க.. welcome back sir ;)
ReplyDeleteஆமாம்மா... லாங் கேப்பாத்தான் ஆய்டுச்சுல்ல...! அன்பாய் வரவேற்ற உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஆரோக்கிய தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கோவை படங்கள் அருமை
ReplyDeleteதாஸை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபடங்களும் கமெண்ட்ஸும் ha..ha..! எந்த விஷயமானாலும் சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையையும் தொடர்பு படுத்தி அருமையா எழுதறதுல உங்களை சொல்லவா வேணும்?
ReplyDelete