என் நண்பனைப் பார்க்க நான் சென்ற சமயம் அவன் வீட்டிலில்லை என்பதால் காத்திருக்¢க நேர்ந்தது. அவன் மனைவி நாலாம் வகுப்புப் படிக்கும் தன் மகளுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தாள். அங்கேயிருந்த குமுதத்தைக் கையிலெடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த நான் சும்மாயிராமல் அந்தச் சுட்டி ஒன்றிரண்டு முறை அவள் அம்மாவிடம் சந்தேகம் கேட்டபோது நான் முந்திக் கொண்டு பதில் சொன்னேன். "அம்மாவே சொல்லட்டும் அங்க்கிள்" என்றது அது. "சரிம்மா"வென்று புத்தகத்தைப் புரட்டிய நான், அடுத்த சில நிமிடங்களிலேயே அவள் கேட்ட ஏதோ கேள்விக்கு என்னை மறந்து பதிலிறுத்து விட்டேன். சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்த அந்த வாண்டு, "அங்கிளுக்கு எல்லாத்துக்கும் ஆன்ஸர் தெரிஞ்சிருக்கு. ஏன் அங்க்கிள்... 1948ல நம்ம பிரதமரோட பேர் என்ன?"ன்னு கேட்டுச்சு.
"ஹும், ஒரு சிறுகுட்டி நம்மைச் சோதிக்குன்னு" என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு கெத்தாக, "ஜவஹர்லால் நேரும்மா" என்றேன். "தப்புத் தப்பா ஆன்ஸர் சொல்றீங்க..." என்று கை கொட்டிச் சிரித்தது அது. "நான் சரியாத்தாம்மா சொன்னேன்" என்க, அவள் சொன்னாள், "1948லயும் நம்ம பிரதமரோட பேர் மன்மோகன்சிங் தான் அங்க்கிள். அவரு என்ன வருஷத்துக்கு ஒரு பேரா மாத்திக்குவாரு...?" நான் 'ழே'யென்று விழிக்க, நண்பனின் மனைவி வாய்விட்டுச் சிரித்துவிட்டுச் சொன்னாள்: "அண்ணா... இன்னிக்கு வாரமலர்ல இந்தத் துணுக்கு வந்திருக்கு. நான் படிச்சுட்டு சிரிச்சிட்டிருந்தப்ப, இவ என்னன்னு கேட்டா. விளக்கமா சொன்னேன். இப்ப ப்ராக்டிகலா உங்ககிட்ட டெஸ்ட் பண்ணிட்டா..." அவ்வ்வ்வ்! இன்றையக் குழந்தைகள் ரொம்பத்தான் வெவரமப்பா!
================================================
எண்களில் ஏழு என்கிற எண் மனிதர்களோடு விசித்திரத் தொடர்புடைய ஒரு எண்ணாகும். ஏழு பிறப்பு, ஏழு உலகங்கள், ஏழு ராகங்கள் என்று ஏழுக்குப் பின்னாலே உள்ள விஷயங்கள் ஏன் ஏழோடு நின்றுவிட்டன? அது ஏன் எட்டுப் பிறப்பு என்றோ எட்டு உலகங்கள் என்றோ குறிப்பிடப்படுவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் உலகம் என்றால் ஏழு, உருவம் என்றாலும் ஏழு, பிறப்பென்றாலும் ஏழு என்று எழு பிரதானப்படுத்தப்படுவதன் பின்னாலே சில சித்த சூட்சுமங்கள் உள்ளன.
நம் உடம்பு ஐந்து பூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, வெளி, நெருப்பு என்கிற ஐந்துமே நம் உடம்புக்குள்ளேயம் உள்ளது. நம் உடம்பில் மட்டுமல்ல... மிருகங்கள், தாவரங்களிடம் கூட இந்த ஐந்துவிதக் கூறுகள் உண்டு. இந்த ஐந்தும் ஒன்று சேர்ந்து உருவாகின்ற ஒரு விஷயமே நம் உடலாகும். மனிதர்களிடம் மட்டும் இந்த ஐந்து சற்று விரிந்து ஆறு என்ற ஒரு அறிவைப் பெற்று நிமிர்கின்றது. ஆறாகிய அறிவுதான் எண்ணங்களாகிய மனமாக வடிவம் கொள்கிறது. எண்ணங்கள் என்றாலே அது சப்தம்தானே? அதாவது, ஆறாகிய அறிவு ஏழாகிய சப்தமாகிறது. இந்த சப்தம்தான் பாட்டு, பேச்சு, மௌனம் என்று பல வடிவங்களை எடுக்கிறது. மொத்தத்தில் மனிதன் அறியப்படுவது, வளருவது, வாழ்வது என்கிற எல்லாமே அவன் பேசுவதை வைத்துத்தான்.
இதைவைத்தே அவன் அரிய பல உண்மைகளை எட்டுகிறான். ஏழு முதிர்ந்தால் அடுத்தது எட்டு... எட்டி விட்டால் அடுத்துது ஒன்பது! இந்த ஒன்பதுக்கு ஒரு விசி¢த்திரமான தன்மை, இதை எதால் பெருக்கினாலும் இதன் மடங்குகளில் இது மாறவே மாறாது. அவை எல்லாமும் கூட்டுத் தொகை ஒன்பதாகவே முடியும். மாறாத் தன்மை உடையதை நாம் கடவுளாக நினைக்கிறோம். கடவுளே அழியாத, அழிக்க முடியாத சக்தி. ஒன்பதிடமும் அந்தத் தன்மை பொருந்துகிறது. அதனால்தான் ஒன்பது சார்ந்த விஷயங்களை ¨நவ சக்தி¨, ¨நவக்கிரகங்கள்¨, ¨நவநாயக சித்தர்கள்¨ என்கிறோம். -¨சிவரகசியம்¨ நூலில் இந்திரா சௌந்தர்ராஜன்

* ஒரு மனிதன் விமானத்தில் சாகசங்கள் செய்வதற்காக மேலே பறந்தான். துரதிர்ஷ்டவசமாக அவன் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக தரையில் ஒரு வைக்கோல் போர் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஒரு கூரிய கடப்பாரை வைக்கோல் போரிலிருந்து வெளியே நீண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் கடப்பாரையில் விழவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவன் வைக்கோல்போர் மேலும் விழவில்லை.
* ஒருமுறை எங்களூர் டூரிங் டாக்கீஸில் 'கந்தன் கருணை' படம் பார்க்க என் பாட்டியையும் அழைத்துப் போயிருந்தேன். முருகனாக நடித்த சிவகுமார் கையில் வேலுடன் தோன்றியதும் பாட்டி எழுந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். பின்னாலிருந்து ஒரு குரல், "பாட்டி... அது முருகன் இல்லை, சிவகுமார்! உக்காரு..." என்றது. அதைத் தொடர்ந்து சிலர் சிரிக்கும் சப்தம் கேட்க, எனக்கு அவமானமாக இருந்தது. பாட்டி குரல் வந்த பக்கம் திரும்பி, "எவன்டா அவன்...? சிவகுமாரன் என்றால் முருகன்தான் என்பது தெரியாதவன்..." என்று சத்தமிட... எல்லாப் பக்கமும் கப்சிப்!
* பாரதிதாசன் 'குயில்' ஏடு நடத்திக் கொண்டிருந்த நேரம். முத்துப்பேட்டையில் ஒரு திருமண விழாவுக்கு வந்திருந்தார். கூட்டத்தினரிடம், "இந்தப் பக்கமெல்லாம் குயில் கிடைக்குதா?" என்று கேட்டார். முதியவர் ஒருவர் சூள் கொட்டிவிட்டுச் சொன்னார்... "எங்கேங்க கிடைக்குது? இந்தப் பக்கம் இருந்த காட்டையெல்லாம் வெட்டிப்புட்டானுங்களே... குயில் எங்கருந்து கெடைக்கும்?" என்று.
-இவை சுட்ட பழங்கள் பழைய 'குமுதம்' இதழ்களிலிருந்து!

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன? மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.
================================================
To end with a smile :
"அப்பா ... காக்கா கத்துனா சொந்தக்காரங்க வருவாங்காளா?" "ஆமாம்... மகனே" "அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க?" "உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க..."
|
|
Tweet | ||
ஹா ஹா ஹா நல்லா தெரியுது உங்க வாட்ச்...
ReplyDeleteதூள் வாத்தியாரே
நான் லேட்டா வந்தாலும் இப்போ ரெண்டாவதா வந்துட்டேன்.. ஹிஹிஹி..
Deleteஒரு நாள் இங்கே முழுவதும் இங்கே மின்வெட்டு...
Deleteமுதல் கருத்துரைக்கு போட்டியா...? ம்...ம்...ம்
¨¨தூள்¨ என் சீனுவுக்கும், கரண்ட் கட்டால் புலம்பிய தனபாலனுக்கும் என் மனம் நிறை நன்றி! இந்த ஐடியா நல்லா இருக்கே ஆனந்து!
Deleteம்ம்ம்... இதுக்குத்தான் சின்னப் பிள்ளைகளிடம் பாத்து பேசனும்கிறது.... சுட்ட பழங்கள் சுவாரஸ்யம்... வாச் கட்டி அதைக் காட்டி எடுத்த போட்டோ சூப்பர்.. காந்தி கணக்கு போனவாரம் யாரோ ஒரு பெண் பதிவரும் அவங்க ப்ளாக்ல சொல்லியிருந்தாங்க...
ReplyDeleteமொத்தத்தில் சுவையான கரகர மொறுமொறு மிக்சர்...
ஹே ஹே ஸ்கூல் நான் முந்திட்டனே ஹே ஹே ஹே ஹே
Deleteசீனு, ரெண்டு பேர் போட்டிருக்கிற கமென்ட் பார்க்கும்போது ஸ்.பை. தான் மொதல்ல கமென்ட் அடிக்க ஆரம்பிச்சிருக்கணும்.. ஆனா பாவம் அவரு டைப்பி முடிக்கறதுக்குள்ள முதலிடம் போயிடிச்சு..வெரி பேட்.. :)))
Delete//ம்ம்ம்... இதுக்குத்தான் சின்னப் பிள்ளைகளிடம் பாத்து பேசனும்கிறது....//
Deleteஸ்.பை. - ஒருவேளை சின்னப் பிள்ளைன்னு சீனுவைத்தான் சொன்னீங்களோ?
அட அப்ரசண்டிகளா அடிச்சுக்காதீங்கப்பா ...!
Deleteமிக்ஸரின் சுவையை ரசித்த ஸ்.பை.க்கு மனம் நிறைய நன்றி!
Deleteபார்ரா நான்தான் மொத கமெண்ட்.. அடடே ஆச்சரியம் ...!
ReplyDeleteஅடடா நான் ரெண்டாவது வந்திட்டேனே... வாத்தியாரோட போஸ்டுக்கு கமென்ட் போடுறதுல என்ன ஒரு போட்டி...
Deleteஹா ஹா ஹா நல்ல பாருங்க ரெண்டு பேருமே 7.10 ஆனா செகண்ட்ஸ்ல திடங்கொண்டு முந்திட்டான் சீனு
Deleteகமெண்ட்ல முந்துறதா முக்கியம், வாத்தியாரோட மனசுல இடம் பிடிக்கிறது தான் முக்கியம்....
Deleteவாத்தியாரே ஏக்கர் எம்புட்டு சொன்னா வசதிய பொறுத்து ஒரு அர கிரவுண்ட் வாங்கி போட முடியும்...
Deleteஸ்கூல் பசங்கள்ளா க்யுல வாங்கப்பா :-))))))))
தம்பிகளா, ஓரமா போய் விளையாடுங்கப்பா!!
Deleteஏற்கனவே நீங்கல்லாம் பல ஏக்கராக்களை வாங்கிப் போட்டாச்சு பாய்ஸ்! அதுனால புதுசா வர்றவங்களுக்கு இடம் கொடுக்கலாம். சரியா...!
Deleteகாந்தி கணக்கு நல்ல தகவல்... சுட்ட விசயங்கள் அருமை... இறுதியில் வழக்கம் போல் உங்கள் டச் சூப்பர்....
ReplyDeleteசூப்பர் என்று ரசித்த ப்ரியாவுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஆரம்பமும் முடிவும் மிக அருமை
ReplyDeleteபடித்து ரசித்த மதுரைத்தமிழனுக்கு மனம் நிறைய நன்றி!
DeleteInteresting!
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteசிறுமி போட்ட துணுக்கு சூபர்.
ReplyDeleteவாட்ச் படம் அருமை... ஒரு வழியாக பாலகன் கணேஷைக் கண்டோம் :)
காந்தி கணக்கு தோன்றிய வரலாறு முதல் முறை கேள்விப்படுகிறேன்
// பாலகன் கணேஷைக் // பார்ரா
Deleteகாந்தி கணக்கோட வரலாறு தெரியாமலே பல கடைகளிலே காந்தி கணக்கு சொல்லிட்டு வந்ததா கேள்வி??
Deleteபடித்து (பாலகனையும்) ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி ரூபக்!
Deleteபாலகன் கணேஷ் கொள்ளை அழகு. உங்கள் அம்மாவை உங்களுக்குச் சுத்திப் போடச் சொல்லுங்கள் :-)
ReplyDeleteஅவசியம் சொல்கிறேன் அண்ணா! ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅடேயப்பா உங்களை விட
ReplyDeleteஉங்க வாட்ச்தான் தூக்கலாத் தெரியுது
நல்ல சுவையான மொறு மொறு மிக்ஸர் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபால கணேஷ்... பால்யத்தில் கணேஷ் - பார்த்தேன் - “அப்படியே இருந்திருக்கலாம்!” - நம் எல்லோருக்கும் இருக்கும் ஆசை! :)
ReplyDeleteகடைசி ஜோக் - சிரித்து மாளலை!
படித்து சுவைத்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி வெங்கட்!
Delete//எவன்டா அவன்...? சிவகுமாரன் என்றால் முருகன்தான் என்பது தெரியாதவன்..." என்று சத்தமிட... எல்லாப் பக்கமும் கப்சிப்!//
ReplyDeleteஅங்கே சிவாஜி நடித்திருந்தாலும் பாட்டி "சிவாவே "ஜி" ன்னு சொல்லி பாடம் கேட்டுகிட்டே ஆள் முருகன்னு சொல்லியிருப்பாரோ?
சிவா- வை மரியாதையா அழைச்சா சிவாஜி தானே...! ஹா... ஹா...!
Deleteவாத்தியாரே, டைட்டன் கம்பெனி ஓனர் கூட வாட்சுக்கு இவ்வளவு பப்ளிசிட்டி பண்ணியிருக்க மாட்டார்..
ReplyDeleteஅது அந்த வயசோட மகிமை. அப்ப(வும்) நான் வெவரம் பத்தாத ஒருத்தனாச்சுதே! ஹி... ஹி...!
Delete//"அம்மாவே சொல்லட்டும் அங்க்கிள்" //
ReplyDeleteஅங்கிளுக்கு பல்ப் கொடுக்க வேண்டாமுன்னு அந்த கொழந்த எவ்வளோ முயற்சி பண்ணிச்சி.. நீங்களா ஸ்டூல் போட்டு ஏறி எறிஞ்சுகிட்டு இருந்த பல்ப பிடிங்கிட்டு அப்புறம் சுடுதுன்னு சொன்னா என்ன நியாயம் தலைவரே.. ஹஹஹா..
அட ஆமப்பா... இதத்தான் வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிறதுன்னு சொல்லுவாங்க போலருக்கு. அய்யோ... அய்யோ...!
Deleteவாட்சை கட்டிட்டு இப்படி கூட சீன் காட்டலாமா?அப்பா..அப்பவே பெரிய சீன் பார்டியாக இருந்து இருப்பீங்க போலும்:)
ReplyDeleteஅவரு என்ன வருஷத்துக்கு ஒரு பேரா மாத்திக்குவாரு...?"//செமையாக ரசித்தேன்...
ரசித்துப் படித்த தங்கைக்கு என் உளம்கனிந்த நனறி!
Delete// அப்பா ... காக்கா கத்துனா சொந்தக்காரங்க வருவாங்காளா?" "ஆமாம்... மகனே" "அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க?" "உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க..."//
ReplyDeleteஎன்னைக் கவர்ந்த மிக்சர்! அனைத்தும் நன்று! பாலா!
அனைத்தும் நன்று எனக்கூறி மகிழ்வு தந்த ஐயாவுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDeleteபடித்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete-¨சிவரகசியம்¨ நூலில் இந்திரா சௌந்தர்ராஜன் - அருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteஅரிய தகவல்களை ரசித்த உங்களுக்கு அன்புடன் என் நன்றி!
Deleteரசித்தேன்.
ReplyDeleteஏழு ராகங்கள் இல்லை. அது ஏராளமா இருக்கு. ஏழு ஸ்வரங்கள் என்று இருக்கணும்..
அப்புறம்..... சிவரகசியம்...... // மனிதர்களிடம் மட்டும் இந்த ஐந்து சற்று விரிந்து ஆறு என்ற ஒரு அறிவைப் பெற்று நிமிர்கின்றது. ஆறாகிய அறிவுதான் எண்ணங்களாகிய மனமாக வடிவம் கொள்கிறது. //
இது மனுசன் தானாவே நினைச்சுக்கறது நமக்குத்தான் அறிவு உண்டுன்னு. மிருகங்களுடன் பழகிப்பாருங்கள்.. எங்க ரஜ்ஜூ எப்படியெல்லாம் சிந்திக்கிறான்னு பார்த்தால் வியப்புதான். இத்துனூண்டு மூளைக்குள் எப்படியெல்லாம் எண்ண ஓட்டம்!!!!
அட, ஆமாம்ல... இந்திரா சௌந்தர்ராஜன் அவசரத்துல ஏழு ராகங்கள்னு எழுதிட்டார் போலருக்கு...1 வாயில்லாப் பிராணிகளோட நான் அதிகம் பழகாததால நீங்க சொல்ற விஷயம் புதுசுதான் எனக்கு. (சரிதா முன்னால நானே வாயில்லாப் பிராணிதான். ஹி... ஹி...!) மிக்க நன்றி டீச்சர்!
Deleteவாரே வா வாத்யாரே...
ReplyDeleteஒரே வரியில் என் மனம் நிறைய உற்சாகத்தை நிரப்பிய தம்பி விக்கிக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteha..ha... நான் வேற இந்த பதிவை ஆபிஸ்லயா படிக்கனும்...? தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கிற என்னை யாராவது பார்த்து லூஸுன்னு நினைச்சிட போறாங்கன்னு சுத்தி நோட்டம் விட்டுட்டு சிரிக்காம லாக் பண்ணலாம்னாலும் முடியல்ல.. சரி சரி சிரிச்சிக்கிட்டே இதை டைப் பண்றேன்....
ReplyDeleteஇந்த குட்டீஸ்ங்க இருக்கே.. அதுங்க படுத்தற பாடு இருக்கே... எங்க வீட்ல ஒரு வாலு இருக்கு லீவு நாள்ல நிம்மதியா தூங்க விடாது... தூங்கி எந்திரிச்சு கண்ணாடியை பார்த்தா எனக்கு மீசையையும் அவங்க அப்பாவிற்கு ஹேர்-கிளிப்பும் போட்டிருக்கும். என் போனை எடுத்து இப்படி பேசி ரிங்-டோனா வச்சிருக்கா- " மம்மி... மம்மி நல்லாத்தான் சமைக்க மாட்டேங்கிற... இந்த போனையாவது எடு..." இது தெரியாம நான் மொபைலை வெளியில் எடுத்துட்டு போயிட்ட பிறகு கால் பண்றா... மத்தவங்களுக்கு இது கேட்டுடுச்சேன்னு என்பதை விட அவ பண்ண குறும்புதான் எனக்கு சிரிப்பைத்தான் தந்தது.
அப்புறம் இந்த வாட்ச் தெரியுற மாதிரி போட்டோ.. என்னால் சிரிப்பை அடக்க முடியலைங்க...! சிரிச்சி... சிரிச்சி.. யாராவது பார்க்கிறாங்களான்னு வேறு முழிக்கிறேன்..
நாங்கள்லாம் காக்கா கத்தினா முன் ஜாக்கிரதையா வீட்டை பூட்டிக்கிட்டு வெளியில் போயிடுவோம்... ஹி... ஹி...!
இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்.. காலையில் உங்க பதிவை படிச்சி சிரிச்சி சந்தோஷமா முகம் மலர்ந்துவிட்டது அதற்காக உங்களுக்கு ஸ்பெஷல் நன்றியை சொல்லனும்!
மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்பா...
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உஷா!
Deleteஉங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள் உஷா! உங்க மகளின் குறும்பு வாய்விட்டுச் சிரித்து ரசிக்க வெச்சது! மிக்ஸரை ரசிச்சு மனம் நிறையப் பாராட்டின உங்களுக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொன்ன மஞ்சு மற்றும் ரஞ்சனிம்மாவுக்கும் என் இதயம் நிறை நன்றி!
Deleteவாழ்த்திய அன்பு மனங்களுக்கு மிக்க நன்றி!
Delete''.."அப்பா ... காக்கா கத்துனா சொந்தக்காரங்க வருவாங்காளா?" "ஆமாம்... மகனே" "அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க?" "உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க..."
ReplyDeleteமிக்சர் அருமை. இது வும் எல்லாமும் ரசித்தேன் .
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
எல்லாவற்றையும் ரசித்த வேதாம்மாவுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteதெரியறமாதிரி போட்டோ எடுத்துக்கலைன்னா அப்றம் அந்த வாட்சுக்கு என்ன பெருமை :-))
ReplyDeleteகுழந்தை கொடுத்த பல்பு அட்டகாசம்.
ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஇறுதியில் ' நச் '. மிக்சர் சுவை.
ReplyDeleteமிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி தோழி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகாந்தி கணக்குன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன்
ReplyDelete>>
வாட்ச் தெரியுற மாதிரி சின்ன புள்ளைல எடுத்த ஃபோட்டோ என்கிட்டயும் இருக்கு
>>
இந்த காலத்து பசங்ககிட்ட உசாரா இருக்க வேணாமா?!
கரெக்டும்மா... உஷாரா இருந்துருக்கணும்... அசந்துட்டேன்! படித்து ரசித்த உனக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.. காந்தி கணக்கு என்ன என்பதை இன்றுதான் அறிந்தேன்...
ReplyDelete'வாட்ச்' கட்டிய சிறுபையன் அருமை...
ஆமா சகோ நீங்க இந்த 'வாட்ச்' விஷயத்தில நம்ம கட்சியோ... :) அதுக்காக போட்டோக்கு போஸ் குடுக்கிறதின்னு நினைச்சுக்க வேணாம்...
இப்பவும் நீங்க அப்பிடித்தானோ.. இருங்க பதிவர் சந்திப்பு படங்கள்ல ஒருவாட்டி செக் பண்னிக்குவோம்....:))).
காக்கா கத்தினா வரும் விருந்தினர்... நகைச்சுவை 'டாப்'...
வாழ்த்துக்கள் சகோ!
அனைத்து அம்சங்களையும் ரசித்த சிஸ். இளமதிக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசுவாரஸ்யம் துளியும் குறையாத பகிர்வு கணேஷா.. நேரில் எப்படி சிரிக்கவைக்கிறீர்களோ இயல்பாக. அதே போல் எழுத்திலும்.. ரசித்து வாசித்தேன். இருந்தாலும் இப்டியாப்பா போய் ஒரு சின்ன குழந்தைக்கிட்ட மாட்டிக்கொள்வது? வெவரம் தான் இந்தக்காலத்துக்குழந்தைகள். இபானிடம் மாட்டிக்கொண்டு தினம் தினம் நான் ஙே என்று முழிச்சிட்டு இருக்கிறேனே... கவனமா இருங்க... :) சாக்லேட் வாங்கிக்கொடுத்தோமா தேமேன்னு இருந்தோமான்னு இருக்கணும் புரிஞ்சுதாப்பா?
ReplyDeleteவாட்ச் நல்லா தான் இருக்கு போட்டோ ரெண்டிலும் வாட்ச் தெரிகிறதுப்பா :)
சுட்டப்பழம் துரதிர்ஷ்டவசமா அதிர்ஷ்டவசமா நல்லா தான் இருக்கு...
காக்கா காக்கான்னு கத்தினா.. விருந்தினர் வருவாங்க. வந்தவங்க திரும்பி போக மனைவி கத்துனா போதுமா ஹாஹா.. கணேஷா கணேஷா இப்பவ கண்ணக்கட்டுதே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா... :)
மனம் மகிழ வைத்த வருகைக்கும், ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்துப் பாராட்டிய அழகிய கருத்துரைக்கும் இதயம் நிறை நன்றி மன்ச்சூ!
Deleteபல்பு வாங்கியாச்சா அண்ணே
ReplyDeleteசில பல்புகளைத்தான பிரதர் வெளியில சொல்றோம் நாம.. அப்படி சமீபத்துல கிடைச்ச ஒண்ணு இது. மிக்க நன்றி!
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteசிரித்து ரசித்தேன்.
வாழ்த்துக்கள் கணேஷ் ஐயா.
படித்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteவாச் சூப்பர்.:))
ReplyDeleteகாக்கா... ஹா....ஹா....
பல்பு :)
ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteமிக்சர் செம்ம டேஸ்ட்டு......!
ReplyDeleteநா ஒரு வாட்ச் கம்பெனி ஆரம்பிக்கிறேன் ... நீங்க அதுக்கு பிரான்ட் ஆல்ட்டோவா வந்துருங்க ....! ரெண்டு பெரும் சேர்ந்து வாட்ச் கம்பெனிய நல்லா ஓட வப்போம் ...!
பிராண்ட் ஆல்ட்டோவா நானா...? எனக்கு பேனர் வெச்சே கம்பெனி ஒரு வழியாயிடும்... ஹா.. ஹா...! மிக்ஸரை ரசிச்ச தம்பிக்கு என் மனம் நிறைய நன்றி
Deleteரசிக்க வைத்த துணுக்குகள் நிறைந்த மிக்சர் மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்ஸரின் சுவையை ரசித்த சுரேஷுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇந்த காலத்து குழந்தைகளிடம் ரொம்பவும் உஷாராக இருக்கணும்! மின்னலை நன்றாக மடக்கி விட்டாள் அந்த சுட்டிப்பெண்.
ReplyDeleteகாந்தி கணக்கு பற்றி நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன். அப்படியே ஒரு வரி பிசகாமல். நம் இருவருக்கும் ஒருவரே இந்த மடலை 'forward' பண்ணியிருப்பாரோ?
உங்கள் திருமண புகைப்படம் என்று நினைத்தேன்.:)
கடைசி ஜோக் சூப்பரு!
நல்ல தகவலா இருக்கேன்னு அதைச் சேத்தேன். நீங்க பதிவாவே போட்டுட்டீங்கன்றதக் கவனிக்காம போய்ட்டனே...! மிக்ஸரை ரசி¢த்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteமிக்ஸர் சுவை.
ReplyDeleteசுவை என்று சொல்லி மகிழ்வு தந்த குமாருக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஅத்தனை ஜோக்கும் சிரிப்பை வரவழைத்தன. கடைசி ஜோக் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.. ("அம்மா.. ரெண்டுங்கெட்டான்பியே அந்த மாமா வந்திருக்கார்மா" - என் சிறுவயது நினைவு)
ReplyDeleteஉங்க அனுபவத்துல 'ரெண்டுங்கெட்டான்' மாமாவா? மதன் ஒருமுறை விகடன்ல "அப்பா... எப்ப வந்தாலும் வெறுங்கையோட வருவாரே... அந்த மாமா வந்திருக்கார்" என்று ரெட்டைவால் ரெங்குடுவுக்கு டயலாக் எழுதினது எனக்கு வந்தது இதைப் படிக்கறப்ப. ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமதனுக்கு ரொம்ப முன்னால் விகடனில் வந்தது ரெகெ. பெயர் மறந்துவிட்டது.. கோபுலு நோ.. ராஜூ?
DeleteMr. Balaganesh, I am the last to post my comments.
ReplyDeleteI was away in Mumbai. Your mixture is really nice and quite timely also (here it is raining for the past four days).
When you have mentioned about the importance of Numbers 7, 8 and 9, there is one more number in between 7 and 8 (i.e. 7 1/2). I expect a detailed explanation about this number in your next post.
Already i wrote many stories about seven and half... i mean... saritha stories. Hi... Hi...! (She is out of station now) Thankyou Mohan!
Deleteமிக்சரில் எல்லாமே முந்திரி பருப்புதான் நவ பால கணேஷ் ....த.ம. ரேங்க் ஒன்பதில் இருப்பதால் உங்களுக்கு இந்த பெயர் !
ReplyDeleteத.ம.12
தனிப்பட்ட ஒரு திரட்டியோட ரேங்க்கை பெரிசா நான் எடுத்துக்கறதில்ல பகவான்ஜீ... 130லருந்து 4 வரைக்கும் நான் ஆக்டிவா நிறையப் பதிவுகள் எழுதிட்டிருந்தப்ப அடைஞ்சுட்டேன். உங்க எல்லாரோட மனசுலயும் ஒரு இடம் கிடைச்சிருக்கு எனக்குன்றதத்தான் நான் இப்ப பெருமையா நினைக்கறேன். மிக்ஸரை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
ReplyDeleteமிக்ஸர் அருமை. அலாதி ருசி. காந்திக் கணக்கும், சிறுமியின் குறும்புக் கேள்வியும் மறக்க இயலாதது. நன்றி
ReplyDeleteகடைசி ஜோக் சூப்பர்...உண்மையில் பல குடும்பங்களில் நடப்பது..
ReplyDelete