Monday, September 30, 2013

வாங்க... வாங்க... நீங்க ரொம்ம்ம்ப்ப நல்லவர்! நான் தலைப்புலயே எச்சரிச்சும்கூட என்னைய நம்பிப் படிக்கலாம்னு உள்ள வந்துட்டீங்க. இப்படித்தாங்க... "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க"ன்னு ஒருத்தர் சொன்னப்பக் கூட அவரோட பேச்சைக் கேக்காம நம்ம ஜனங்க அந்தப் புத்தகத்தை வாங்கித் தள்ளிட்டாங்க. யார் எது சொன்னாலும் அதுக்கு நேர்மாறாச் செய்யறது சின்னப் புள்ளையில இருந்தே நமக்கெல்லாம் பழக்கம்தானுங்களே... நல்லது சொன்னா ஜனங்க எங்கங்க கேக்கறாங்க...? இப்பகூட நான் உங்களோட கழுத்துல இருந்துல்லாம் ரத்தம் வந்துரக் கூடாதேங்கற நல்லெண்ணத்துலதான் இந்தத் தலைப்பை வெச்சேங்க... அதைத் தாண்டி அப்படி ஒண்ணு நடக்கணும்னு இருந்துச்சுன்னா... எல்லாம் விதிங்க! சரி, இப்ப உங்ககிட்ட சில கேள்விகள் கேக்கப் போறேன். அதுக்கு உடனே விடை கண்டுபிடிச்சவங்க, உங்களோட ரெண்டு கையையும் முதுகுக்குப் பின்னால கொண்டு போயி தட்டிக் கொடுத்துக்கங்க. முடியாதவங்களுக்கு... பதிவோட கடைசியில வடை கிடைக்கும்... ஸாரி, விடை கிடைக்கும்!

======================================

1. நஸ்ரியான்னா உருகற ஆளாச்சே நம்ம கோவை ஆவி, 'ராஜாராணி' எப்படியிருக்குன்னு அவரக் கேட்டாத் தெரியுமேன்னுட்டு போன் செய்தபோது தொடர்ந்து ரிங் போச்சு... ஆனா எடுக்கலை. சரி... பயபுள்ள ஏதோ தியேட்டர்ல இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டு கட் பண்ணிட்டேன். அது மிகச்சரி! ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணின ஆவி, தான் தியேட்டர்ல 'ராஜாராணி' படம் பாத்துட்டிருந்ததாச் சொன்னார். அப்ப நான் ஆவி, தி பாஸ் கிட்ட ஒரு கேள்வி கேட்டேன். அந்தக் கேள்வியைக் காதுல வாங்கினதும், என் பக்கத்து சீட்ல வொர்க் பண்ணிட்டிருந்தவர் தலைசுத்தி சீட்லயே மயங்கி விழுந்துட்டாருங்க! அப்படி நான் என்ன கேள்வியைக் கேட்டிருப்பேன்?

======================================

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்தபோது பாகிஸ்தான் உபதளபதி ஒருவர் புதிய பைலட்டுக்கு போர் விமானத்தை இயக்கும் விதத்தை விளக்கிக் கொண்டிருந்தார். "இந்த பட்டனை அழுத்தினால் விமானம் மேலேறும், இதை அழுத்தினால் வலதுபுறம் திரும்பும், இதை அழுத்தினால் இடதுபுறம் திரும்பும்" என்றார். விமானி கேட்டார் "சரி ஐயா... விமானத்தைக் கீழே இறக்க என்ன செய்ய வேண்டும்?" உபதளபதியின் பதில்: "அதைப் பற்றிக் கவலைப்படாதே. அதை இந்தியர்கள் கவனித்துக் கொள்வார்கள்." (1980 தினமணி கதிரிலிருந்து)

======================================

2. சென்னையின் பிரம்மாண்ட நூலகத்திற்குப் போயிருந்தப்ப அந்த ஆங்கில நாளிதழ் என் கண்ணுல பட்டது. நமக்கு ஆங்கிலப் பேப்பர்லாம் படிக்கிற அளவுக்கு 'வெவரம்' பத்தாதுன்னாலும் ஒரு 'பந்தா'வுக்காக அப்பப்ப புரட்டறதுண்டு. அப்படி அந்த பேப்பரைக் கையிலெடுத்து புரட்டினப்ப சென்ட்டர்ல வர்ற டபுள் ஸ்ப்ரெட் பேஜ்ல இடதுபக்க ஓரத்துல ஒரு ஆப்பிரிக்க யானையோட கலர்ப் படத்தைப் போட்டு, ஒரு column அளவுல அதைப் பத்தி மேட்டர் போட்டிருந்தாங்க... அதே பேஜோட வலது பக்க ஓரத்துல ஒரு சயாமியப் பூனையோட கலர்ப் படத்தைப் போட்டு, அதைப் பத்தியும் ஒரு column அளவுல மேட்டர் போட்டிருந்தாங்க. இதைக் கவனிச்சதும் என்னோட மூளையில (நிசமா இருக்குங்க!) ஒரு ஸ்பார்க் ஆச்சு! உடனே ஒரு தமிழ்ப் பழமொழியோட ஞாபகம் வந்துருச்சுங்க. அந்தத் தமிழ்ப் பழமொழி எதுன்னு உங்களுக்குத் தெரியுதா?

======================================

ண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளிச் சிறுவர்கள் பேருந்தில் கூட்டமாக ஏறினர். ஒவ்வொரு பயணிக்குமாக டிக்கெட் வழங்கிக் கொண்டு வந்த கண்டக்டர் அவர்கள் அருகில் வந்ததும், "என்னப்பா... எல்லாரும் பாஸ் தானா?" என்று கேட்டார். உடன் ஒரு சிறுவன், இன்னொருவனைக் கை காட்டி, "இல்லை ஸார்... இவன் மட்டும் ஃபெயில் ஸார்" என்றுகூற, அனைவரும் சிரித்து விட்டனர். (1980 'அதே' கதிரிலிருந்து)

======================================

3. தங்களின் மகளுக்கு சமீபத்தில் திருமணத்தை முடித்திருந்த அந்தப் பெற்றோர், வீட்டிற்கு வந்த தங்கள் உறவின தம்பதியிடம் கல்யாண போட்டோக்களைக் காட்ட விரும்பி, ஒரு கேள்வி கேட்டனர். அந்தக் கேள்வியைக் காதில் வாங்கியதும் உறவினர்கள் தலையிலடித்துக் கொண்டு, "கர்மம்... கர்மம்...!" என்றபடி இடத்தைக் காலி செய்தனர். அப்படி அவர்கள் கேட்ட கேள்விதான் என்ன?

======================================

"சார்..." என்றார்கள் யாரோ. "யார்?" என்றேன் நான். "பார்..." என்றாள் திவ்யா என் முதுகில் ஒன்றுவைத்து. வேகமாய் எழுந்துபோய் கதவைத் திறந்தேன். வெளியில் நின்றவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். ஏதோ புதுமையான விதத்தில் உடையும் நகைகளும் அணிந்து நேரே சரித்திரப்பட ஷுட்டிங்கிலிருந்து வந்த ஹீரோயின் போலத் தோற்றமளித்தாள். "யாரும்மா நீ?" என்றேன். "அரிமர்த்தன பாண்டியரின் துணைவி யாம். எமை எதிர்த்த சோழனின் ரத்தத்தைக் குடித்துவிட்டு படுகளத்திலிருந்து வந்திருக்கிறேன் பல்லவ இளவரசே..." என்று பல்லைக்காட்டிச் சிரித்தாள். ஐயோ...! சிரிக்கையில் வாயில் இரண்டு கோரைப் பற்கள் நீண்டிருந்தது தெரிந்தது. அவற்றிலிருந்து ரத்தம் வழிந்தது. அப்போதுதான் அவள் கையைக் கவனித்தேன்... ரத்தம் சொட்டியபடி ஒரு கத்தி! உளறிக் கொட்டி, கிளறி மூடி அலறியடித்து உள்ளே ஓடி, கட்டிலில் கிடந்த திவ்யாவின் அருகில் விழுந்தேன்--- "ஐயோ.. பேய்... பேய்...!". 'பளார்' என்று முதுகில் ஒரு அறை வைத்தாள். "ராஸ்கல்! ராத்திரி பூரா என்னை தேவதைன்னு சொல்லிட்டு, பொழுது விடிஞ்சதும் பேய்ங்கறியா..? கெட் லாஸ்ட்" என்றாள்.

-நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் வரும் சில வரிகள் இவை. இதை வைத்து இது க்ரைம் கதையா? சரித்திரக் கதையா, ஆவிக் கதையா, நகைச்சுவைக் கதையா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். சரியான விடை தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால் உங்கள் தலை இஞ்சிநூறாகச் (சுக்குநூறாகத்தான் எப்பவும் சிதறணுமா?) சிதறிவிடும்! ஹா... ஹா...!

======================================

இனி... விடைகள் :

1. நான் கேட்ட கேள்வி: "ஆனந்து, படத்துல நஸ்ரியாவைத்தவிர நம்மளை மாதிரி இளைஞர்களுக்குப் பிடிக்கற விஷயங்கள் என்ன இருக்கு?"

2. அந்தப் பழமொழி: யானைக்கு ஒரு column வந்தா பூனைக்கு ஒரு column வரும்!

3. அந்தப் பெற்றோர் கேட்டது: "எங்க சாந்தி கல்யாண போட்டோ வந்திருக்கு. பாக்கறேளா...?"

35 comments:

 1. Very nice...... especially the small piece from your story.....

  ReplyDelete
 2. சார் தினமனி துணுக்கு சூப்பர்.... உங்கள் கதை அனேகமாஇ நகைச்சுவை நிறைந்த சரித்திரமும் நிகழ்காலமும் கலந்த கதையாக இருக்குமோ.... :P

  ReplyDelete

 3. இந்த பதிவை நான் படிக்கவில்லை கண்ணால் மட்டும் பார்த்தேனுங்க

  ReplyDelete
 4. அத்தனையும் ரசித்தேன் கணேஷ்.... காலம் புரிந்து கொள்ள முடிந்தது - column என எழுதிவிட்டதால்.... :)

  ReplyDelete
 5. உங்க பக்கத்தை படிக்காதீங்கன்னு சொல்லியெல்லாம் எங்களை வரவழைக்க வேண்டாம் உங்க பதிவுன்னாவே வந்திடுவோம்...அவ்வளவு இன்ரெஸ்ட்டா இருந்தது பதிவு.... எனக்கு எந்த கேள்விக்கும் பதில் தெரியலை அதான் துக்கமா இருக்கு...

  ReplyDelete
 6. இந்தப் பதிவை நான் படிக்கவே இல்லை.

  ReplyDelete
 7. சாமீ...! விடைகளை படித்தவுடன் லேசா மயக்கம் வருது...! ஹா... ஹா...

  காதல் கதை...?

  ReplyDelete
 8. //நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் வரும் சில வரிகள் இவை.//
  நீங்களுமா?

  ReplyDelete
 9. சாந்தி கல்யாணத்துக்கு என்னை கூப்பிடாதனால 2/3 தான் சார்.

  ReplyDelete
 10. நான் இந்த பக்கம் வரவேயில்லங்க.. எதையும் படிக்கவும் இல்லங்க.

  ReplyDelete
 11. ப்ளீஸ்... இந்தப் பதிவைப் படிக்காதீங்க!//எங்கேயோ போய்ட்டீங்க.

  ப்ளீஸ் இந்த பதிவை அவசியம் படிங்க.. இப்படி ஒரு தலைப்பு வைத்தாலும் நாங்க படிப்போம்ங்க...

  ReplyDelete
 12. # "எங்க சாந்தி கல்யாண போட்டோ வந்திருக்கு. பாக்கறேளா...?"#இது உங்களோடது ...#முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?#இது என்னோடது ..இரண்டுக்கு உள்ள ஒற்றுமையை கண்டு பிடிச்சி சொல்லலைன்னா ...தல சிதறு தேங்காயா சிதறிடும் !
  உதவிக்கு என் லிங்க் >>>http://jokkaali.blogspot.com/2013/09/blog-post_192.html

  ReplyDelete
 13. // நான் கேட்ட கேள்வி: "ஆனந்து, படத்துல நஸ்ரியாவைத்தவிர நம்மளை மாதிரி இளைஞர்களுக்குப் பிடிக்கற விஷயங்கள் என்ன இருக்கு?"// கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன் :)

  ReplyDelete
 14. என்னமா டெக்னிக்கலா தலைப்பு வைக்கிறாங்கய்யா !
  பதிவைப் படிக்கவில்லை என்பதால் அதைப் பற்றிய
  விமர்சனமும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. டெக்னிக்கு மாறினால்தான் நம்ம பொழப்பும் உருப்படும் ஸ்வராணி

   Delete
 15. Very good. Out of three, two are easily answerable.

  ReplyDelete
 16. நீங்க கேட்ட கேள்வியும்.. விடைகளும்.. ஹ...ஹ்.. ஹா... ஹா..! பேஸ்-புக்ல ஒரு காமெடி போட்டோ ஒண்ணு பார்த்தேன்.. அது நம்ம மன் மோகன் சிங் இழுத்து மூடியிருக்கிற வாயை எந்திரன் ரஜினி சிரிக்கிற மாதிரி மோல்டு பண்ணுவார்... அதெல்லாம் எதுக்கு உங்க வலைப்பக்கத்தை அவரை படிக்கச் சொன்னா நிசமாவே சிரிச்சிடுவாரில்ல... அப்புறம் இப்படி எல்லாம் அதிசயத்தை நிகழ்த்தின உங்களுக்கு பாராட்டு விழால்லாம் நடக்கும்ல... அப்ப நாங்களும் உங்களோட குரூப் போட்டோவுக்கு நிப்போம்ல... மறக்காம வாட்ச் கட்டிட்டு!

  நீங்க எழுதற கதை எதுவாக இருந்தாலும் அதுல நகைச்சுவை மட்டும் கியாரண்டி!

  சிரிக்க வைச்சதுக்கு டேங்க்ஸ்ங்க....

  ReplyDelete
 17. கேள்விகளை விட தினமணி துணுக்குகள் சூப்பரோ சுப்பர் அதிலும் பாகிஸ்தான் விமானியின் பேச்சு அய்யய்யோ வயிறு வலிக்குது

  காலையிலே கலாய்த்துவிட்டீங்க
  அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. அண்ணே! வயசானாலும் உங்க ஸ்டைலும், அழகும் மாறலைண்ணே! நீங்க எப்பவும் சிரஞ்சீவிதான் (தெலுங்கு சினி ஸ்டார் இல்ல). ஆவிக்குலாம் வயசகி கிழவனாகிட்டாலும் நீங்க எப்பவும் யூத்ங்கண்ணா!!

  ReplyDelete
 19. எல்லோரும் பாஸ் பழசா இருந்தாலும் செம

  ReplyDelete
 20. புதிர் போட்ட பதிவு சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. சென்னையின் பிரம்மாண்ட நூலகத்திற்குப் போயிருந்தப்ப அந்த ஆங்கில நாளிதழ் என் கண்ணுல பட்டது//

  ஆங்கில நாளிதழை தவிர்த்தது வேண்டுமானால் ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம் , ஆனால் நூலகத்தை சொல்லாமல் தவிர்த்த காரணத்தை சீனு விரைவில் கண்டு பிடிப்பதாக சொல்லி இருக்கிறார் ... நான் தெரிஞ்சே தான் வந்து தலையை நீட்டினேன் சார் ... தலைப்பை பார்க்கவில்லை

  ReplyDelete
 22. இது க்ரைம் கதையா? சரித்திரக் கதையா, ஆவிக் கதையா, நகைச்சுவைக் கதையா

  எல்லாம் கலந்து எழுதிய கதையா..!

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. ஆணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் சத்தியமா நான் விடைய படிக்கலையாக்கும்

  ReplyDelete
 25. ரசிக்க வைத்த பதிவு.... நாம் ஞாயிறு அன்று பேசியது இதுதானா? சூப்பர்....

  ReplyDelete
 26. எல்லாப் பகுதியுமே சூப்பர்....

  அது என்ன கதைன்னு என் மண்டை வெடிக்கறதுக்குள்ளே சொல்லிடுங்க...:))

  ReplyDelete
 27. மிஷ்கின் மாதிரி திரில்லர் கதை எழுதப் போறீங்கன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 28. செம கலாய்ப்பு... ரசித்தேன் கணேஷ். அநேகமாக உங்கள் கதை க்ரைம் &ஹ்யூமர் கதையாக இருக்கும் வாய்ப்புள்ளது. சீக்கிரமே சொல்லுங்கள்.

  ReplyDelete
 29. நடிகர்கள்: பால கணேஷ் +++

  visit : http://worldcinemafan.blogspot.in/2013/10/blog-post.html

  ReplyDelete
 30. ஹா... ஹா.... அருமையான எழுத்து அண்ணா...
  உங்க கதைகள் நகைச்சுவை கலந்து இருக்கும்... இதுவும் அது மாதிரியான கதையாகத்தான் இருக்கும்...

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube