அது என் பள்ளிப் பருவம். ஏழாவதோ, எட்டாவதோ படித்ததாக நினைவு (1979-80). ஒரு தீபாவளித் திருநாளில் 'நினைத்தாலே இனிக்கும்' படம் ரிலீஸான போது ஆர்வமாய் அடித்துப் பிடித்து ஓடி, பெண்கள் வரிசையில் புகுந்து (ஹி... ஹி... ஹி...!) டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தேன். அதன்பின் பலமுறை தியேட்டர்களிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதும் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்திருக்கிறேன். என் எவர்க்ரீன் ஃபேவரைட் லிஸ்டில் அது இப்பவும் இருக்கிறது என்றால் அதற்குக் காரணங்கள் பல.
* அப்போதைய என் ஃபேவரிட் கதாநாயகன் கமலஹாசன் (அப்ப உலகநாயகன் இல்ல... வெறும் காதல் இளவரசன், சாக்லேட் பாய் இமேஜ்தான் அப்ப) கதாநாயகனாக நடித்திருந்தார். * சிங்கப்பூரை அழகாக விஷுவலைஸ் செய்திருப்பார்கள். (அதுதானே முக்கியம், கதை என்பது துளியூண்டு இருந்தால் போதும் என்பது இயக்குனர் கே.பி.யின் தீர்மானம்) * சுஜாதாவின் குறும்பு கொப்பளிக்கும் 'நறுக் சுருக்' வசனங்கள் * சேலை கட்டியும், கட்டாமலும் (ஐ மீன்... பேண்ட் ஷர்ட்டில்!) கதாநாயகி ஜெயப்ரதா ரொம்ப அழகாக பார்பி டால் போல இருப்பார். * 'கறுப்பன்' என்று அதுகாறும் ஏளனமாகப் பேசி கேலி செய்துவந்த ரஜினிகாந்தின் (இன்றைய சூப்பர்ஸ்டார்) நடிப்பை நான் ரசித்துக் கைதட்டிய முதல் படம். * 'இது ஒரு தேனிசை மழை' என்று விளமபரப்படுத்தப்படதற்கேற்ப எம்.எஸ்.விஸ்வநாதன அதகளப்படுத்தியிருந்த இனிமையான பாடல்கள் இப்பவும் 'கேட்டாலே இனிக்கும்!'.
'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சில மாதங்கள் முன்னால் சுஜாதாவின் கதையான 'ப்ரியா'வை (அமெரிக்கப் பின்னணியில் அவர் எழுதியதை சிங்கப்பூராக மாற்றி, அவர் கதையைக் நிறையவே கொத்துக்கறி பண்ணி) சண்டை, சாகசங்கள் எல்லாம் சேர்த்து (பின்ன... ரஜினிகாந்த் நடிச்சா அதெலலாம் இல்லாம ஆர்ட்ஃபிலிமாய்யா எடுக்க முடியும்?) சிங்கப்பூரை கலர்ஃபுல்லா படம் பிடிச்சுக் காட்டி ஹிட்டடிச்சிருந்தாங்க. இப்பவும் கேட்டா ரசிக்கிற மாதிரி இருக்கும் அந்தப் படத்தின் பாடல்கள்ல இளையராஜாவின் இசை. அதே சுஜாதாவின் கதை வசனத்துல, அதே சிங்கப்பூர்ல, அதே ரஜினி(யோட கமலும்) வெச்சு ஒரு மியூஸிக்கல் ஹிட் குடுக்கறோம் பாருன்னு கே.பாலசந்தர் ஆசைப்பட்டு எடுத்த படம்தான் 'நினைத்தாலே இனிக்கும்' எம்.எஸ்.வி.க்கும் அப்ப 'தன்கிட்ட சரக்கு இன்னும் தீர்ந்துடலை'ன்னு நிரூபிக்கற ஒரு உந்துதல் இருந்தது. அதன் விளைவுதான்... அது 'தேனிசை மழை'யாக உருவானது.

இத்தனை ப்ளஸ்கள் உள்ள, ரசனையான படம் இப்போது டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு வருகிறது என்ற விஷயம் தெரிந்ததுமே முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். மெ.ப.சிவகுமாரிடம் எப்படியும் டிக்கெட் வாங்கி விடு, நாம் போயாக வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டிருந்தேன். ஆனாலும் படம் ரிலீஸான நேற்றைய தினம் சிவாவால் வர இயலாமல் போனதால், கோவையிலிருந்து வந்திருந்த ஆவியை ஸ்கூல் பையனின் உதவியுடன் பிடித்துக் கொண்டு நேற்று மாலைக் காட்சிக்கு உற்சாகமாகத்தான் போனோம். ஹும்... போகாமலே இருந்திருக்கலாம்னு இப்பத் தோணுது.
முதல்ல குறிப்பிட வேண்டிய விஷயம்... 'டிஜிட்டலைசேஷன்' அப்படின்னா என்னன்னு எனக்கு சுத்தமாப் புரியலை. இதற்குமுன் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு வந்திருந்த 'கர்ணன்' 'பாசமலர்' படங்களை நான் பார்க்கத் தவறிவிட்டேன். இப்ப இந்தப் படத்தப் பார்த்தா... எம்.எஸ்.வி. இசை(ழை)த்திருந்த அழகான இசைக்கு நடுவுல சில கூடுதல் ஒலிகளை சேர்த்திருக்காங்க. அதுதான் டிஜிட்டலைஸா? படத்தோட ப்ரிண்ட்ல சில காட்சிகள்ல இப்பவும் மழை பெய்யுது. அப்ப படத்தோட ப்ரிண்ட், கலர் கரெக்ஷன் பண்றதுக்குப் பேரு டிஜிட்டலைஸா? ஒண்ணுமே புரியல ஸாமீஈஈஈஈ! எதுவா இருந்தாலும் இனிமே எந்தப் பழைய படத்தையும் டிஜிட்டலைஸ் பண்றேன் பேர்வழின்னு எவனும் புறப்பட்டுக் கெடுத்துக் குட்டிச்சுவராக்காம இருக்கணும்னு இடியாப்பேஸ்வரரை வேண்டிக்குவோம்.
படத்துல ரஜினிகாந்த் இருக்கறதால வேற நகைச்சுவைகள் தேவையில்லைன்னு டிஜிட்டலைஸ்(?) பண்ணின புண்ணியவான்கள் நினைச்சுட்டாங்க போலருக்கு. கமலின் மியூசிக் ட்ரூப்பில் வரும் 'மாமா' குடித்துவிட்டு வந்து செய்யும் அலப்பறையையும், அதை கேஸட்டில் ரெக்கார்ட் செய்து பின்னால் அவர் மனைவியிடம் நண்பன் மாட்டிவிட்டு அடிவாங்க வைக்கும் காட்சிகளும் ஸ்வாகா! 'யுவர் லவ்விங்லி' என்ற பனியன் போட்டவனை அடியுங்கள் என்று வில்லன் சொல்ல, கமலுக்குப் பதிலாக 'மாமா' அடிவாங்கிக் கதறி ஓடும காட்சியும்கூட அபேஸ்! கீதா அடுக்கு மாடிக் கட்டடத்திலிருந்து தள்ளிவிடுவது போன்ற கனவு கண்டு அலறியபடி எழுந்திருக்கும் ரஜினியின் எக்ஸ்பிரஷனைத் தொடர்ந்து நண்பர்கள் வந்து பேசும் காட்சி நோ! பாயசத்துக்கு மேல மிதக்கற அத்தனை முந்திரிகளையும் அள்ளிக் குப்பையில போட்டிருக்காங்க.

சரி, போய்த் தொலையுதுன்னு மனசைத் தேத்திக்கலாம்னா டிஜிட்டலைஸ் பண்ணின டீமுக்கு இருந்த அசுரப் பசியில ரெண்டு பாட்டுக்களையும் முழுங்கி ஏப்பம் விட்டிருக்காங்க. சிங்கப்பூர் பார்க்ல ஜெயப்ரதாவுக்காக வெயிட் பண்றப்ப கமல் கற்பனைல வர்ற, எம்.எஸ்.வி. எலக்ட்ரிக் கிதார் இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணை மட்டுமே வெச்சுக்கிட்டு அசத்தின 'காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல்மனம் நோகும்வரை' பாட்டு காதுல (கண்ணுலயும்) விழாமப் போச்சே! கமல் + நண்பர்களோட ஜெயப்ரதா ஊர் சுத்தற பாட்டான 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' பாட்டை யாவரும் கேளாமலிருக்கக் கடவர் என்று வெட்டி எறிந்து விட்டிருக்கிறார்கள்.
ஆக.. முந்திரிப் பருப்புகளும், திராட்சைகளும் அகற்றப்பட்டு பாயாசம்(னு நெனச்சுக்கிட்டு) இந்தப் படத்தை நமக்கு 'இனிக்கும்'னு தந்திருக்காங்க. எனக்குக் கசப்பாத்தான் இருந்துச்சு. இந்தப் படம் பார்த்ததுக்கு அதே காம்ப்ளக்ஸ்ல 'ராஜாராணி' நஸ்ரியாவைப் பார்த்து பிரசவம்... ஸாரி, பரவசம் அடைஞ்சிருக்கலாம். இல்ல... பக்கத்து தியேட்டர் காம்பவுண்ட்ல ஓடற 'ஓநாயையும் ஆட்டுக்குட்டியையும்' பாத்து ரசிச்சிருந்திருக்கலாம். ஹும்...! விதிங்க விதி! இனி டிஜிட்டலைஸ் பண்ணப்பட்டு எந்தப் படம் வெளியானாலும் அதைப் பாக்கறதில்லைங்கறது தியேட்டர்ல பாத்த ஒரு முண்டகக்கண்ணி (அம்மன்?) மேல சத்தியம்! ஹி.. ஹி...!
===================================================
டெய்ல் பீஸ் ஸாரி... தல பீஸ்!: 'நினைத்தாலே இனிக்கும்' படத்துக்கு முன்னால தல நடிக்கிற ¨ஆரம்பம்¨ பட ட்ரெய்லர் போட்டாங்க. ட்ரெய்லர்ல தல ஆக்ஷன் பண்றார். ரெண்டே ரெண்டு வசனம் பேசறாரு. அது என்னன்னுகூட கேக்க விடாத அளவுக்கு தியேட்டர்ல ஆரவாரமும் கரகோஷமும்! அது இனி வெறும் தல இல்லீங்க.... பெருந்தல!

|
|
Tweet | ||
அனுபவப்பட்டவன் ஒருத்தன் ‘ நினைத்தாலே சலிக்கும்’னு இடுகை எழுதினதுக்கப்புறமும் இந்த டிஜிட்டல் படங்களைப் போய்ப் பார்த்துட்டு, அப்பாலிக்கா சொந்தச் செலவுலே சூனியமான்னு கூச்சல் போட்டா எப்படீண்ணேன்? :-)
ReplyDeleteசரியாச் சொன்னீங்கண்ணா...! அனுபவஸ்தர் சொன்னதக் கேக்காம பாடல்களை ரசிச்சு, கமல், ஜெயப்ரதா காம்பினேஷன்ல பள்ளிப் பருவத்துக்கு ஒரு மலரும் நினைவு விசிட் போலாம்னு சபலப்பட்டதுக்கு சரியான அடி..! அவ்வ்வ்வ்!
Deleteஹஹஹஹா!! இந்த பதிவு படிக்கும் பொது நாணமும் இத தான் நினைச்சேன்.. சேட்டை சார் பதிவு படிகலையோன்னு...
Deleteநல்லது.. என்கிட்டே இருக்குற பழைய டிவிடியை பாதுகாப்பா வச்சுக்கணும்.
Deleteஇடைவிடாமல் பொழிந்து தள்ளிய மனக்குமுறல்கள்..!
ReplyDeleteஇந்தக் கால பசங்களுக்கு ரஜினி கமல் ஒரு சேர பார்க்கிறதே பரவசம். அதுவே போதும்னு இப்படி பண்ணிட்டாங்க போல. முன்பே இப்படத்தை பார்த்த நீங்க சோல்லலேன்னா எங்களுக்கெல்லாம் தெரியவே செய்திருக்காது.
ReplyDeleteஅவ்வளவு டிஜிட்டல் இரைச்சலுக்குப் பிறகும் ஒவ்வொரு பாடல்களுக்கும் கைகளும் கால்களும் தானாக தாளமிட்டது.
ReplyDeletegreat escape
ReplyDeleteபடத்திலே பாட்டுக்கள் மட்டுமே உருப்படி ,அதுவும் கட் ...எதுக்கு இந்த படத்தை ...?
ReplyDeleteஒசியில்கூட பார்க்கக்கூடாது!
ahaahaahaa thodarnthu ezuthunga sir. good post.
ReplyDeleteமுந்திரி, திராட்சை உவமை அருமை. 16வயதினேலேயே டிஜிட்டலைஸ் பண்றாங்கன்னு கேள்விபட்டேனே. (அப்புறம் இந்த கர்ணன் படம் பார்த்தேன். கிளாரிட்டியே இல்ல. :( )
ReplyDeleteஅய்யய்யோ... கெடுத்துட்டாய்ங்களா... நான் கூட அப்போது பலமுறை பார்த்து ரசித்த படம். இப்போதும் ஒருமுறை பார்க்கலாமா என்று யோசனை இருந்தது. நல்லவேளை சொன்னீர்கள்! என்னிடம் இருக்கும் டிவிடி போதும்!
ReplyDeleteenna comment enna comment!!!! super super
ReplyDeleteYour review for a boring movie is very very interesting to read.
நீங்கள் சொன்னால் சரி. நோ அப்பீல்! இன்னும் கிராமத்துப் பக்கம் ரஜினி, கமல் நடித்த பழைய படங்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. டிஜிட்டல் என்ற பெயரில் பழைய படங்களின் தனித் தன்மையை கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறது.
ReplyDeleteஆண்டவன் இருக்கான்டா கொமாரு ஆண்டவன் இருக்கான் :-)))))))))
ReplyDeleteஹஹா ரொம்ப நல்ல வர்ணனை
ReplyDeleteஉண்மையை அழகாச் சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteஎன்றைக்குமே ஒரிஜினலுக்குத்தான் மதிப்பு...
தல என்னைக்குமே மாஸ்தான் அண்ணா...
ஆரம்பத்துக்காக இப்பவே ஆர்வமா இருக்கமுல்ல...
ஆண்டவன் இருக்கான்டா கொமாரு ஆண்டவன் இருக்கான் // nanbendaa
ReplyDeleteநல்ல வேளை
ReplyDeleteஇன்று உரலுக்குள் தலை கொடுக்க இருந்தேன்
காப்பாற்றியமைக்கு மனமார்ந்த நன்றி
என்ன அக்கிரமம்! நாசமா போகட்டும் டிஜிடலைஸ் செஞ்சவங்களும் அந்த ஐடியாவோட கிளம்பினவரும்.
ReplyDeleteYou wondered - 'digitalize(?)'! Right doubt. It should be Digitization. You have repeated the word so many times with this doubt. For info. - Digitizing is the process of changing text, images, or audio sounds into digital form. Both photos and audios can be edited and saved in the final desired format. You can find more information here: http://en.wikipedia.org/wiki/Digitizing...
ReplyDeleteWhy பார்த்தாலே கசக்கும்! If some scenes are not there, it is a bit 'less sweet' - that's all!
If they have added additional sound bits to songs, it should be called re-mixing. It is a crime and injustice to MSV. For this reason alone, the new digitized print can be criticized!
-R. J.
நவீன மயப்படுத்துகின்றோம் என்று சில
ReplyDeleteநடுவில் காட்சிகளை நகம் போல வெட்டிவிடுவதால் வீழ்ந்து போவது
நாம்பார்த்து ரசித்த விடலைக்கால நினைவுகள் தான்!
நான் பார்க்கும் ஆவலில் இல்லை
நீங்களே சலித்த பின் எப்படி இனிக்கும் இனி!ஹீ
நினைத்தால்தானே இனிப்பதற்கு! எனவே எனக்குக் கவலை இல்லை!
ReplyDeleteஅது சரி அப்போ பதினாறு வயதினிலேவும் இதே கதையாதான் இருக்கும். சேட்டை எப்படியும் முதலிலேயே வார்னிங் கொடுத்துடுவாரு. தப்பிச்சண்டா சாமி.
ReplyDeleteபாயாசம் சாப்பிட போய் ஆயாசத்தோடு வந்திருக்கிறீர்கள்! பாவமாத்தான் இருக்கு! எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி!
ReplyDeleteசின்ன வயதில் பார்த்த படங்கள் எதுவும் இப்போது ரசிக்காது கணேஷ்! நமக்கும் வயசாகுதில்ல!
ReplyDeleteஇதெல்லாம் மக்களை ஏமாற்றும் வியாபாரத் தந்திரம்..
ReplyDelete>>'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சில மாதங்கள் முன்னால் சுஜாதாவின் கதையான 'ப்ரியா'வை (அமெரிக்கப் பின்னணியில் அவர் எழுதியதை சிங்கப்பூராக மாற்றி, அவர் கதையைக் நிறையவே கொத்துக்கறி பண்ணி) சண்டை, சாகசங்கள் எல்லாம் சேர்த்து (பின்ன... ரஜினிகாந்த் நடிச்சா அதெலலாம் இல்லாம ஆர்ட்ஃபிலிமாய்யா எடுக்க முடியும்?) சிங்கப்பூரை கலர்ஃபுல்லா படம் பிடிச்சுக் காட்டி ஹிட்டடிச்சிருந்தாங்க.
ReplyDeleteப்ரியா பற்றி சுஜாதா கூறுகிறார்…..
1975 –ல் நான் லண்டன், ஜெர்மனி இரண்டு தேசங்களுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துத் திரும்பி வந்ததும் லண்டனில் நடப்பது போல் ஒரு தொடர்கதை எழுதட்டுமா ? என்று எஸ்.ஏ.பியைக் கேட்டபோது அவர் உடனே சம்மதித்தார். அந்தக் கதை ‘ப்ரியா’.
ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் போகிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார்.
பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.
‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார். லண்டன், சிங்கப்பூராக மாற்றப்பட்டு வெற்றிப்படமாக ஓடியது.
நினைத்தாலே இனிக்கும் படத்தைப் பற்றி சுஜாதா...
ReplyDelete“என்னைப் பொறுத்த வரை இப்போது என்றில்லை. ஆரம்பம் முதலே குறைவான வசனங்களையே எழுதி வருகிறேன். நான் கதை-வசனம் எழுதி, கே.பாலசந்தர் இயக்கிய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தைப் பாருங்கள்… மிக மிகக் குறைவான வசனங்களே அதில் இருக்கும்.”அப்போது ‘ABBA ‘ என்றொரு ஆங்கிலப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நேரம். அதுபோல நாமும் ஒரு படம் பண்ணலாம் என்று பாலசந்தர் விரும்பியதால், அதே போன்ற ஒரு சுப்ஜெக்ட்டை ரெடி செய்தோம். ‘ABBA ‘ போலவே ஒரு இசைக் குழுவை வைத்துக் கதை பண்ணினோம். காட்சிகளும், பாட்டும்தான் அதிகம் வைத்தோம். வசனம் மிகக் குறைவாகவே இருந்தது. அது மாபெரும் வெற்றி பெற்றது.
உம்ம விதி ஸ்கூல் பையனையும் , ஆவியையும் பிடித்துக்கொண்டதே .....! நல்ல வேளை சீனுவுக்கு அந்தநாள் வேலையற்ற நாளாக அமையவில்லை ....!
ReplyDeleteதியேட்டர்ல பாத்த ஒரு முண்டகக்கண்ணி (அம்மன்?)
ReplyDelete>>
ஆவி, சிவா, சீனு, செந்தில் கூட சேராதீங்கன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் கேட்டீங்களா?! படத்தை பாருங்கன்னு சொன்னா படத்துக்கு வந்தை பொண்ணு கண்ணை பார்த்துட்டு வந்திருக்கீரு!! உங்களை என்ன செய்யலாம்!?
பல பேரை காப்பாத்தி இருக்கீங்க. நினைத்தாலே ஓட்டம்
ReplyDelete