Monday, October 21, 2013

மொறு மொறு மிக்ஸர் - 21

Posted by பால கணேஷ் Monday, October 21, 2013
ஸ்ரியாதாசனான கோவை ஆவியிடம், ‘‘சென்னைல நாம ‘ராஜாராணி’ படம் சேர்ந்து பாக்கணும்" என்று முன்பே சொல்லி வைத்திருந்தேன். ஏற்கனவே கோவையில் இரண்டு முறை பார்த்திருந்தாலும்கூட எனக்காக மூன்றாம் முறை படம் பார்க்கும் தியாகத்தைச் செய்தார் அவர். படத்தைப் பற்றி வலையில் நிறையப் பேர் வலையில் எழுதித் தள்ளி விட்டார்கள். எனவே, பாயாசத்தில் மிதக்கும் முந்திரிகளாக நான் ரசித்த சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன்.

* இரவில் குடித்துவிட்டு வீடு திரும்பும் ஆர்யாவுக்காக நயன்தாரா கதவு திறக்க மறுக்க, ஆர்யா அபார்ட்மெண்ட் வாசிகளைத் தூங்க விடாமல் ஒவ்வொரு வீட்டுக் கதவையாகத் தட்டி டார்ச்சர் செய்ய, அனைவரும் ஒன்றுகூடி தத்தமது லாங்வேஜில் நயனிடம் புகார் சொல்லிவிட்டுச் சென்றதும், ப்ளாட் வாசியின் நாய் ஒன்று வந்து அதன் பாஷையில் புலம்பிவிட்டுச் செல்வது. * மப்பில் நஸ்ரியா வீட்டு வாசலில் ஆர்யா மயங்கிவிட, அவரை கேட்டின் உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு, தான் அவனைக் காதலித்த தருணங்களை நஸ்ரியா நினைத்துப் பார்க்கையில் வரும் நஸ்ரியாவின் சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன் கட்ஷாட்கள். * கஸ்டமர் கேர் ஜெய்யை நயனின் தோழிகள் கலாய்ப்பது (தொடர்ந்து டயல் செய்தால் நாம் விரும்பும் நபரை கஸ்டமர் கேரில் பிடிக்கறதுங்கறது லேசான விஷயமா என்ன?) * சத்யராஜின் கதாபாத்திரம்.

=========================================

நான்கு பதிவர்கள் சந்தித்தால் உலக க்ஷேமத்துக்காக மழை வேண்டி யாகம் செய்வதைப் பற்றியோ, இந்தியப் பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவது என்பது பற்றியோ பேசப் போவதில்லை. நட்புரீதியாக (சிலவேளைகளில் தொழில் ரீதியாகவும்) சந்தித்து உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கம் என்றால் எவரும் புரிந்து கொள்வதாக இல்லை. தமிழின் முன்னணி(?) பத்திரிகையான குமுதம் இதழில் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் புகழ்ந்து எழுதியவர்கள் (அதில் வரும் மரண மொக்கைகளை மட்டுமே இவர்கள் பிரசுரிப்பது வேறு விஷயம்!) ப்ளாக் பற்றிய கட்டுரையில் மட்டும் தங்கள் வயிற்றெரிச்சலை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். ‘‘....கொஞ்சம் கொஞ்சமாக நான்கு, எட்டு, பதினாறு என வளர்ந்து ‘பதிவர் சந்திப்பு’ என மெரீனா பீச், காந்தி சிலை அருகே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்று சந்திப்புகளில் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய சந்திப்புகளில் அதுவும் ஒன்றாக இருககக் கூடும்" என்கிறது குமுதம்.

‘‘நமக்கு கதையோ, கட்டுரையோ, ஜோக்கோ... என்ன எழவா இருந்தாலும் எழுதி அனுப்பிட்டு நாம நாலு பேரு அதை செலக்ட் பண்ணி வெளியிடறதுக்காக நாலு மாசம் நாக்கைத் தொங்கப் போட்டு காத்திருந்து, அப்புறம் அது நாலாயிரம் பேரை அடையறதுல்ல பெருமை... இவனுங்க எழுதி தானே வெளியிட்டுக்கறாங்க. நாப்பதாயிரம் பேரை ரீச் பண்றாங்க... என்னாங்கடா இது?" ‘‘நம்ம வாசகர் ஒருத்தன் இன்னொரு ஊருக்குப் போறான்னா எவனுக்கும் தெரியாது அது. ஆனா ஒரு ப்ளாக்கர் இன்னொரு ஊருக்குப் போறான்னா, உடனே தகவல் தெரிவிச்சுடறான். அங்க இருக்கறவங்க செமையா உபசரிககிறாங்க. என்ன அநியாயம்?" ‘‘நாம (ஓசியில்) படம் பார்த்து ரெண்டு நாள்ல விமர்சனம் எழுதறதுக்கு முன்னாடி இவனுங்க (பணம் கொடுத்து) படத்தைப் பாத்துட்டு ராவோட ராவா விமர்சனமா எழுதித் தள்ளிடறானுங்களே..." -என்பன போன்ற குமுதத்தின் ------ எரிச்சல்கள் அந்தக் கட்டுரையில் பிரதிபலிப்பதாகவே நான் நினைக்கிறேன். ஒருவரை இமிடேட் பண்ணுதல், மிமிக்ரி பண்ணுதல் ஆகியவை புகழ்ச்சியின் மற்றொரு வழியே என்பார்கள். அதுபோல இணையதளத்தைப் பற்றி குமுதம் எழுதியதை பெரிய பாராட்டாகவே இப்போது எண்ணத் தோன்றுகிறது. மகிழ்வோம்!

=========================================

ந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்துத்தான் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைச் சொல்ல முடியும். அதன்படி பார்த்தால் 2012ல் 45 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு இப்போது 65 ரூபாயைத் தாண்டி விட்டது. 1977ல் மலேசிய ‘ரிங்கிட்'டின் மதிப்பு அதலபாதாளத்துக்குச் சரிந்தபோது அந்நாட்டு அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மூன்றே வருடங்களில் அமெரிக்க டாலருக்கு நிகராகத் தன் ‘ரிங்கிட்'டின் மதிப்பை உயர்த்தியது. * தங்கத்தின் இறக்குமதியை நிறுத்தியது * வெளிநாட்டு வங்கிகளில் ஊழல் அரசியல்வாதிகள் போட்டிருந்த பணத்தை சப்ஜாடாக பறிமுதல் செய்தது * வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியுமா என முயன்று வெற்றி பெற்றது ஆகியவை அந்த நடவடிக்கைகள். ரூபாயின் மதிப்பை உயர்த்த, ‘‘பொதுமக்களே, தங்கம் வாங்காதீங்க" என்கிறார் ஒரு அமைச்சர். ‘‘சொந்த வாகனத்துல பயணிக்காம, பஸ்/ரயில்ல பயணியுங்க"ங்கறார் இன்னொரு அமைச்சர். இப்படி பொதுமக்கள் தியாகம் செஞ்சாப் போதும், நாங்க ஸ்விஸ் பாங்க்குல கோடிகளைக் குவிச்சு வெக்கறதுங்கற விஷயத்தை தியாகம் செய்யவே மாட்டோம்ங்கற தலைவர்களோட தேசப்பற்று புல்லரிக்க வெக்குதில்ல...

சரி விடுங்க... பொருளாதாரத்துல முன்னேறாட்டி என்ன... தொழில்நுட்ப பயன்பாட்டில எங்கயோ போயிட்டிருக்கோம் நாம. இணைய தளத்தைப் பயன்படுத்துவதில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிச்சிருக்குன்னு ‘காம்ஸ்கோர்’ ஆராய்ச்சி நிறுவனப் புள்ளிவிவரம் தெரிவிச்சிருக்கு சமீபத்துல. செல்போன் பயன்படுத்துபவர்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைச்சிருக்குன்னும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கினறன. இப்படிப் பெருமைப்படறதுக்கு விஷயங்களா நம்மகிட்ட இல்ல... பாரத் மாதா கீ ஜே!

=========================================

‘‘திரும்பத் திரும்ப ஒரே மாதிரி இடத்துல சந்திக்காம புதுசா எங்கயாவது பாக்கலாமா?’’ என்று ஸ.பை.யிடம் கேட்டதற்கு பரங்கி மலையில் ஏறலாம் என்றார் அவர். எனக்கும் நீண்ட நாட்களாகவே அங்கு செல்லும் எண்ணம் இருந்ததால் சீனு + கோவை ஆவி சகிதம் மலையேறினோம். மலையில் ஏறியதுமே ‘தூய ஆவியின் வருகை உங்களை புனிதப்படுத்தும்’ என்று பாதிரியார் மைககில் பேச, ஆவி நம்மை பெருமையாகப் பார்த்தார். மலையைச் சுற்றி சென்னை அழகியின் இயற்கை அழகை ரசித்து, புகைப்படமெடுத்து பேசிக் கொண்டிருக்கையிலேயே மலையில் நல்ல மழை! மழைக்கு ஒதுங்கிய இடத்தில் ஆவியிடம் எடுக்கப்பட்ட ஒரு மினி பேட்டி

* ‘‘எதனால ஆவின்னு பேர் வெச்சுக்க முடிவு பண்ணீங்க? ‘‘படிக்கறவங்களுக்கு ஒரு டெரரா இருக்கட்டுமேன்னுதான்..." ‘‘அதுக்கு உங்க ஃபோட்டோவை ப்ளாக்ல போட்டிருந்தாலே போதுமே..." ‘‘ஹி...! ஹி...!" * ‘‘மிஸ்டர் ஆவி! ரொம்ப எளிமையான நடையில எழுதிட்டிருக்கீங்க... எப்ப சீனு மாதிரி இலக்கிய நடையில ஜெயமோகனோட ஜெராக்ஸ் மாதிரி எழுதுவீங்க?" (‘‘வாத்தியாரே... இது அநியாயம்’’ -சீனு!) ‘‘எனக்கு ஜெயமோகன், சாருபாலா (சாருநிவேதிதாவை அவர் சொன்ன அழகு! ஹி... ஹி..!) மாதிரி இலக்கியமா எழுதல்லாம் ஆசை இல்ல ஸார்... எழுதவும் வராது. வர்றதைப் பண்ணுவமே..." * ‘‘நீங்க இயக்குனரானா நஸ்ரியாவைத்தான் ஹீரோயினாப் போடுவீங்கன்னு உலகத்துக்கே தெரியும். ஹீரோவா யாரைப் போடுவீங்க?" ‘‘பெரிய பட்ஜெட் படம்னா சூர்யாவைப் போடுவேன்..." ‘‘சின்ன பட்ஜெட் படம்னா..?" ‘‘நானே நடிச்சிடுவேன்..." ‘‘நீர் நடிச்சாலே அது பிரம்மாண்டப் படமா ஆயிடுமே..." ‘‘ஹி... ஹி...! அப்ப நம்ம சீனுவை ஹீரோவாப் போட்டுடுவேன்" -விக்ரமாதித்தனின் சரியான பதிலால் தெறித்து ஓடிய வேதாளம் மாதிரி ஆவியின் இந்தப் பதிலால் சீனு மென்மழையிலேயே ஓடத் துவங்க, மலையை விட்டு இறங்கினோம் கீழே.

=========================================

ன்றரை ஆண்டுகளாக அந்தப் பெண் எனக்குப் பரிச்சயம். நான் எழுதும் பதிவுகளை தவறாமல் படித்து ரசித்த விஷயங்களைச் சொல்லிக் கருத்திட்டுச் செல்வாள். சரி, அவளின் தளத்தில் என்ன எழுதுகிறாள் என்று படிக்கலாம் என்று முயன்றபோதுதான் வலைத்தளமே எழுதாத வாசகி என்பது எனக்குப் புரிந்தது. (இப்படி வலையில் எழுதாத பல வாசகர்கள் கிடைப்பது பாக்கியம்). முதலாம் ஆண்டு பதிவர் திருவிழாவில் சந்தித்தேன் நேரில். ரஞ்சனி அம்மாவும் நானும் தந்த உற்சாகத்தின் பேரில் ஒரு வலைத்தளம் துவங்கி நம்மை நதிக்கரையில் நடைபோடச் செய்தாள் அந்தப் பெண். (இப்பக் கொஞ்ச நாளா நதிக்கரையில எழுதறதில்ல... கல்யாணம் ஆன ராசி நிறைய எழுத வெக்கட்டும்!)

அவளின் பெயர் சமீரா. அதன்பின் பல சந்திப்புகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள். ஒரு மகளைப் போல என்மேல் அன்பைப் பொழிந்து வந்த அந்தப் பெண்ணுக்கு முந்தாநாள் திருமண நிச்சயதார்த்தமும், நேற்று திருமணமும் சிறப்பாக நடந்தேறியது. சென்று வாழ்த்தி வந்த அனுபவம் மிக மகிழ்வானது. விழாவுக்கு என்னுடன் வந்திருந்த மற்றொரு பிரபலத்தை (ஹி.. ஹி...) நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் - படத்தில காண்க.

73 comments:

  1. தலைவர்களோட தேசப்பற்றை பார்க்கும் போது, குறிப்பிட்ட தகவல்களை நினைத்து பெருமைப்பட வேண்டியது தான்...!

    சீனுவை ஹீரோவாப் போடலாம்... உயரம் சரியாக வரும்...!

    சமீரா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா டி.டி.! சீனுவும் சிவகார்த்திகேயன் போல ஷைன் பண்ணலாம் நிச்சயம்! சமீராவுக்கு வாழ்த்துச சொன்ன உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  2. மிக்ஸர் வழக்கத்தைவிட மிக சுவையாக இருந்தது.பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டி உற்சாகம் தந்த மதுரைத் தமிழனுக்கு இதயம நிறை நன்றி!

      Delete
  3. மிக்ஸர் என்றால் இப்படித்தான் இருக்கணும்
    என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்லலாம்
    பல விஷயங்களை கலந்து எழுதியது பிடித்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டி உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  4. சமீரா அவர்களுக்கு வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. உன் வாழ்த்தை அங்கு சேர்ப்பித்து விடுகிறேன் ஆனந்து!

      Delete
  5. //நஸ்ரியாதாசனான கோவை ஆவியிடம், //

    அவ்வ்வ்வவ்..

    ReplyDelete
    Replies
    1. அட... நெசத்தத் தானப்பா சொன்னேன்! இவ்வளவு ஃபீலிங்கா?

      Delete
  6. இந்தியாவில் இருந்து பதிவுகள் எழுதினால் மிக நல்ல நட்புகளை பெற மிக அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் நேரில் அடிக்கடி சந்தித்து உறவாடவும் வாய்ப்புக்கள் அதிகம்..பொறாமை பட வைக்கிறது

    சமீரா தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...இந்த தம்பதிகள் இன்று போல என்றும் மகிழ்வாக வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இருக்கும் நாட்டிலும் இரண்டு மூன்று பதிவர்கள் இருப்பினும் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் குறைவு என்பது நிஜந்தான். எங்களுக்கு வாய்ப்பும், நேரமும், மனமும் ஒன்றாக அமைவது எங்கள் பாக்கியமே. பொறாமைப்பட்டதற்கும், சமீராவை வாழ்த்தியதற்கும் என் இதயம்நிறை நன்றி!

      Delete
  7. //இப்படிப் பெருமைப்படறதுக்கு விஷயங்களா நம்மகிட்ட இல்ல..// மக்கள் தொகையை விட்டுட்டீங்களே ஸார்!

    ReplyDelete
    Replies
    1. அட... ஆமால்ல... அதையும் கூட நான் லிஸ்ட்ல சேர்த்திருக்கலாம்தான்!

      Delete
  8. // சாருபாலா (சாருநிவேதிதாவை அவர் சொன்ன அழகு!//

    பட், பட்டுன்னு கேள்விகள் கேட்டீங்களா? அதனால "Small Slip between the Cup and the Lip".. ஹிஹிஹி.. ( இப்படி சொல்லி சமாளிப்போம்)

    ReplyDelete
    Replies
    1. சரி... சரி.. டங் ஆஃப் த ஸ்லிப் (ஹி.. ஹி...) எல்லாருக்கும் வர்றதுதான். வுடு!

      Delete
  9. பொருளாதார மேம்பாட்டிற்கு
    சரியான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்...
    வரிகளை செலுத்திவிட்டு ... வாங்கும் பொருட்களையும்
    அதிக விலைகொடுத்து வாங்கும் நிலையில் இருக்கிறோம்.
    ஊழல் பெரிச்சாளிகளை முதலில் அடைத்துவைத்து
    பெண்டு கழட்டனும்...
    பதுக்கிவைத்த பணங்கள் வெளிக்கொணரப்படவேண்டும்...
    இரண்டு பொருளாதார மேதைகள் ..இருந்தும்.
    நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு
    சென்று கொண்டிருப்பது நாட்டிற்கு அழகல்ல,,,
    அதன் வளர்ச்சிக்கு உகந்ததல்ல...
    அருமையான பதிவு நண்பரே...

    ReplyDelete
  10. சகோதரி சமீராவுக்கு மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்டு உற்சாகம் தந்து, சமீராவையும் வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி மகேன்!

      Delete
  11. Replies
    1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி மகேஷ்!

      Delete
  12. பதிவர்கள் சந்தித்தாலே மழை கொட்டுகிறது... அந்த மழையினூடே ஆவியின் பேட்டி அருமை... நன்றாக ஞாபகம் இருக்கிறது வாத்தியாரே... பதுக்கி வைத்ததில் பாதியை வெளிக் கொணர்ந்தாலே போதும், இந்தியா வல்லரசாவது உறுதி...

    ReplyDelete
  13. சமீராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என எழுத்தை ரசித்து, சமீராவையும் வாழ்த்திய ஸ்.பை.க்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  14. ஊக்குவிக்கும் சமீராவை ஊக்குவிக்க ஒருத்தர் வந்தாச்சா!? ரைட்டு! மணமக்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. சீனு, ஆவி, ஸ்பை லாம் வந்தபின் இந்த தங்கச்சியை மறந்துட்டீங்க போல!!

    ReplyDelete
    Replies
    1. அக்கா, அப்ப அன்னைக்கி தலைவர்கிட்ட "ஆவி பாவியெல்லாம் வந்தப்புறம் நீங்க என்னை மறந்துட்டீங்கன்னு" சொன்னீங்களே அதுல ஆவி நானு, பாவி யாரு?? ;-) (கோர்த்து விட்டுடோம்ல!!)

      Delete
    2. அதும் நீதான் கண்ணா!

      Delete
    3. சமீராவுக்கு உன் வாழ்த்தும் கிடைச்சதுல மிக்க மகிழ்ச்சிம்மா. தங்கையை மறககறதுங்கறது சாத்தியமா என்ன? அதுக்கு எனக்குப் பைத்தியம் புடிசசாத்தான் உண்டு! ரைட்டா? தொலைபேசாததால இந்த வருத்தம்னு புரியுது. இனி தொடர்ந்து பேசுறேன். நன்றிம்மா!



      சமீராவுக்கு உன் வாழ்த்தும் கிடைச்சதுல மிக்க மகிழ்ச்சிம்மா. தங்கையை மறககறதுங்கறது சாத்தியமா என்ன? அதுக்கு எனக்குப் பைத்தியம் புடிசசாத்தான் உண்டு! ரைட்டா? தொலைபேசாததால இந்த வருத்தம்னு புரியுது. இனி தொடர்ந்து பேசுறேன். நன்றிம்மா!


      Delete
  16. எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது அந்த வார குமுதம் பியுட்டி ஸ்பெஷல் மற்றும் இன்டர்நெட் ஸ்பெஷலாக வந்திருந்ததும் நான் முதலில் தேர்ந்தெடுத்தது பியுட்டி ஸ்பெஷல் என்பதையும் :-))))))

    // எப்ப சீனு மாதிரி இலக்கிய நடையில ஜெயமோகனோட ஜெராக்ஸ் மாதிரி எழுதுவீங்க?"// சில ஆகசிறந்த அவதானிப்புகளை நான் எழுதுவதால் மட்டுமே ஜெமோவின் ஜெராக்ஸ் ஆகிவட முடியாது என்பதை அண்டப் பெருவெளியில் நிகழும் பிரபஞ்சத்தின் சுழற்ச்சியில் பின் அதன் நீட்ச்சியில் இருந்து எங்கோ எப்போதோ ஆரம்பித்த தொடர்ச்சியில் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் வாத்தியாரிடம் சொல்லிக்கொள்'ல்'வதே எனக்கு பேர் அவாவும் பேரு மகிழ்ச்சியும் ... ( இனி கேப்பீங்க ஹா ஹா ஹா )

    //விழாவுக்கு என்னுடன் வந்திருந்த மற்றொரு பிரபலத்தை (ஹி.. ஹி...) நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் - படத்தில காண்க.// ஆம் அந்த பிரபலத்தின் பெயர் தமிழ்தொட்டில் எண்ணம் வலையில் எழுதி வரும் பதிவர் மற்றும் ரணகளம் என்ற சிறந்த குறும்படத்தை இயக்கிய நாளைய இயக்குனர்..

    வாத்தியாரே நான் உங்க மேல கடுங் கோவத்துல இருக்கேன், நானும் தான உங்களோட வந்தேன் என்ன பத்தி ஏன் ஒரு வார்த்த கூட எழுதல ( செத்தாண்டா சேகரு, நான் என்னச் சொன்னேன் :-))))))



    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்! இனி இலக்கியம் பத்தியே பேசமாட்டேன் சீனு! ஆளவுடு...!

      Delete
  17. பல்சுவை விருந்து ரசித்தேன் அண்ணே....குமுதம் மேட்டரை விடுங்க அவிங்க கொஞ்ச காலமா நம்ம மேல எரிச்சலாதான் இருக்காங்க, இதுக்கு அர்த்தம் நாம் வளர்கிறோமே மம்மி"ன்னு சொல்லிக்குவோம் அண்ணே...!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் மனோ! நாம் வளர்கிறோம்னு நெனச்சு சந்தோஷப்பட்டுககலாம்! இதை ரசிச்சுப் படிச்சு பாராட்டினதோட நில்லாம முகநூல்லயும் பகிர்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  18. கல்யாணத்துக்கு போய் பிரியாணி சாப்பிட்ட மேட்டர விட்டுடீங்களே அண்ணே...

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... அதெல்லாம் சொல்லாமலே புரிஞ்சுக்கற விஷயம் தம்பீ...! வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைய நன்றி

      Delete
  19. குமுதத்திற்கு சரியான பதிலடி கொடுத்திட்டிங்க....
    சமீரா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பதிலடி கொடுத்துல்லாம் என்ன ஆவப்போவுது உஷா! என் ஆதங்கத்தை உங்களோடல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டேன்... அவ்ளவ்தான்! சமீராவை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  20. சுவையான மொறு மொறு மிக்சர்....
    மணமக்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து மணமக்க¬ள் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. கறுப்புப் பணத்தை கொண்டு வந்திருந்தாலே, நாம் தப்பித்திருக்கலாம்..ம், அதுக்கு நமக்கு கொடுப்பினை இல்லையே!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்... அதுக்கு எந்த அரசியல்வாதியும் நேர்மையா இல்லியேங்கறதுதான் நம்மளோட வருத்தம்! மிக்க நன்றி!

      Delete
  22. //போன்ற குமுதத்தின் ------ எரிச்சல்கள் அந்தக் கட்டுரையில் பிரதிபலிப்பதாகவே நான் நினைக்கிறேன். ///

    லிங்கு கொடுங்க சார்.

    அதெல்லாம் காசு குடுத்து வாங்க முடியுமா இப்ப விக்கிற வெலைவாசில?

    ReplyDelete
    Replies
    1. நெட்டில் நான் பத்திரிகைகள் படிக்கிறதில்லையே மிஸ்டர் வௌங்காதவன்... அதனால லிங்க் தர முடியல. ஸாரி...! படிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. குமுதம்ல அப்படித்தான் ஏதாச்சும் குண்டக்க மண்டக்க எழுதுவாங்க..எல்லாம் நன்மைக்கே..

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்தான் கலியபெருமாள்! இப்படித்தான் நினைச்சு ஆறுதல்பட்டுக்க வேண்டியிருக்குது. மிக்க நன்றி!

      Delete
  24. சுவையான மொறுமொறு மிக்சர்!!!

    மிகவும் சிரித்த இடங்கள்.
    “துர்ய ஆவியின் வருகை உங்களைப் புனிதப்படுத்தும்....“

    ‘‘எதனால ஆவின்னு பேர் வெச்சுக்க முடிவு பண்ணீங்க? ‘‘படிக்கறவங்களுக்கு ஒரு டெரரா இருக்கட்டுமேன்னுதான்..." ‘‘அதுக்கு உங்க ஃபோட்டோவை ப்ளாக்ல போட்டிருந்தாலே போதுமே..." ஹா ஹா ஹா...

    சமீரா தம்பதியருக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்த அம்சத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டி உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  25. பெருமைப்படறதுக்கு விஷயங்களா நம்மகிட்ட இல்ல... பாரத் மாதா கீ ஜே!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டுங்க... இதே மனஉணர்வுலதான் நானும் குரல் கொடுத்தேன். மிக்க நன்றி!

      Delete

  26. ஆஹா குமுதம் மேட்டரை படிக்காம விட்டுட்டேன்... தெரிந்திரிருந்தால் கண்டித்து பதிவு எழுதியிருக்கலாம்..

    EXCHANGE RATE -ஐ வைத்து இந்திய பொருளாதாரத்தை மதிப்பிட முடியாது என்பதுதான் என் அபிப்பிராயம். அதம் மூலம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது என சொல்லலாம். ஆனால் பொருளாதார வீழ்ச்சிக்கும் ரூபாயின் வீழ்ச்சிக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. ரூபாயின் வீழ்ச்சிக்குத் தகுந்தவாறு சம்பளம் ஏறுகிறது. அல்லது சம்பளம் உயர்வதின் மூலம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது.

    ReplyDelete
    Replies
    1. பொருளாதாரம் குறித்து அழகான விளக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  27. கல்யாணம் ஆன புது தம்பதிகளுக்கு வாழ்த்துகள்....

    அப்புறம் மத்த எல்லாம் விசயங்களும் ஒரு மிக்சர் சாப்ட்ட எபக்ட்...

    ReplyDelete
    Replies
    1. புதுமணத் தம்பதியரை வாழ்த்தி, பாராட்டினால் எனக்கு எனர்ஜி தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  28. சுவையான மிக்சர்! குமுதம் படிக்கவில்லை! வயிற்றெரிச்சலிலெயே நமது வளர்ச்சி தெரிகிறது அதற்கு பாராட்டுவோம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்.... அதற்காகப் பாராட்டலாம்தான்! படித்து ரசித்துக் கருத்திட்டமைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  29. //மப்பில் நஸ்ரியா வீட்டு வாசலில் ஆர்யா மயங்கிவிட, அவரை கேட்டின் உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு, தான் அவனைக் காதலித்த தருணங்களை நஸ்ரியா நினைத்துப் பார்க்கையில் வரும் நஸ்ரியாவின் சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன் கட்ஷாட்கள். //

    ஆவி ....எழுதுங்க எழுதுங்கன்னு ஆவிய வாங்குதுக்கப்புறம் தானே இத எழுதுனீக...?

    தி.கொ.போ.சீ வாசகர் முக்கோணம் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு ....! யாரெல்லாம் வர்றீங்க ....!

    ReplyDelete
    Replies
    1. அதென்ன முக்கோணம்.. டீடெயிலா செப்பு மாமு!!

      Delete
    2. ஆவி... வாசகர் வட்டம்னு அவனவன் ஆரம்பிச்சு போரடிச்சுன்றதால வாசகர் முக்கோணம்னு புதுமையா சொல்றாரு ஜீவன் தம்பி! புரியலியா...!

      Delete
  30. திரிகோணமலை சந்திப்பு மன்னிக்கவும் பரங்கிமலை சந்திப்பு உரையாடல்கள் நல்லாருக்குன்னா... அதிலும் நம்ம சீனு அண்ணா ஹீரோ ஆகப்போராருங்கரத நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு...

    திருமணமாகப் போகும் தோழி.சமீரா விற்கு என் வாழ்த்துகள்...

    சிறப்பான பதிவு...

    ReplyDelete
    Replies
    1. சமீராவை வாழ்த்தி, ‘ஹீரோ’ சீனுவை உற்சாகப்படுத்தி, என்னையும் பாராட்டிய உங்களுக்கு எங்களின இதயம் நிறை நன்றி!

      Delete
  31. நஸ்ரியாதாசனான ஆவி...

    கலக்கல் பெயர்...

    ReplyDelete
    Replies
    1. ஆவிக்கான அடைமொழியை ரசித்தமைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  32. ராஜாராணி...
    ஆவி பேட்டி
    சீனு ஹீரோ என எல்லாம் ரசிக்க வைத்தது அண்ணா....
    சகோதரியின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா அம்சங்களையும் ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி தம்பி குமார்!

      Delete
  33. சமீரா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களை அவர்களிடம் சேர்ப்பித்து விடுகிறேன் நண்பரே... மிக்க நன்றி!

      Delete
  34. சிறப்பான மொறுமொறு மிக்சர்....

    மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  35. மிக்ஸர் சுவையாக உள்ளது................

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளாச்சு எஸ்தரைப் பார்த்து... நலமா தங்காய்? இதை ரசித்த உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  36. வருகிறேன் டி.டி. தகவல் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  37. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!! இவ்ளோபேரோட வாழ்த்துக்கள் கிடைச்சதுக்கு! அனைவருக்கும் என் நன்றிகள்...

    முதல் நன்றி பாலா சார் உங்களுக்கு தான்!!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube