Friday, August 16, 2013

சேட்டையும், நானும்!

Posted by பால கணேஷ் Friday, August 16, 2013
லைப்பைப் படிச்சதும் சின்ன வயசுல (ஏன்... இப்பவும்தான்) நான் செஞ்ச சேட்டைகளைப் பத்திச் சொல்லப்போறேன்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா... ஸாரி. இது அதப்பத்தி இல்ல. கடந்த ரெண்டு வாரமா அடுக்கடுக்காக நிறைய கமிட்மெண்ட்ஸ் நேரத்தைச் சாப்பிட்டதாலயும், இணைய இணைப்பும் படுத்தோ படுத்துன்னு படுத்தி எடுத்ததாலயும் ரெண்டு வாரமா இணையப் பக்கம் வரமுடியாமப் போச்சுது. (நிம்மதியா இருந்தீங்கதானே!) ‘உன்னால யார் எழுதினதையும் படிச்சு கருத்திட முடியாத நிலையில நீ மட்டும் பதிவிடறது அநியாயம்’னு மனஸ் சொல்லிச்சுங்கறதும் ஒரு காரணம்.  இப்ப மறுபடி படிக்கவும் எழுதவும் செய்யலாம்னு வந்தா... என்ன எழுதறதுன்னு தெரியல. அதனால... நண்பர் தி.தனபாலன் அழைச்சிருந்த தொடர்பதிவை எழுதலாம்னு முடிவு பண்ணி, என் முதல் பதிவைப் பத்திச் சொல்லப் போறேன்.

கிழக்குப் பதிப்பகத்துல நான் பணிசெய்த காலத்துலதான் பதிவுலகம்னு ஒண்ணு இருக்கறதும், ப்ளாக்னு ஒண்ணை ஓப்பன் பண்ணி நிறையப் பேரு தங்கள் படைப்புகளை வெளியிடறாங்கன்றதும் தெரியும். அப்ப சேட்டைக்காரன், கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், சி.பி.செந்தில்குமார்னு நிறையப் பதிவர்களோட படைப்புகளைப் படிச்சு ரசிச்சிருக்கேன். பின்னாட்கள்ல ‘ஊஞ்சல்’ பத்திரிகையில உதவி ஆசிரியராப் பணி புரிஞ்ச சமயத்துல சேட்டைக்காரன் ‘கல்யாணம் attend பண்ணிப்பார்’ன்னு ஒரு நகைச்சுவைக் கதை எழுதியிருந்தார். அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து பி.கே.பி. ஸார் கிட்ட காட்டினேன். அவர் அதை மிக ரசிச்சு ‘‘நல்லாருக்கே... யார்னு விசாரிச்சு பர்மிஷன் வாங்குங்க... ஊஞ்சல்ல போடலாம்’’ன்னார்.

சேட்டைக்காரனை எப்படிப் புடிக்கிறதுன்னு யோசிச்சு சி.பி.க்கு போன் பண்ணினேன். ‘‘சேட்டைக்காரன் போன் நம்பர்லாம் இல்லப்பா. அவர் முகம் காட்ட விரும்பறதில்ல. ஈமெயில் ஐ.டி. இருக்கு. அதுல வேணா கான்டாக்ட் பண்ணிப் பாருங்க’’ன்னுட்டுத் தந்தார். ஈமெயில் அனுப்பிக் கேட்டதுக்கு, ‘தாராளமா பப்ளிஷ் பண்ணிக்கங்க. எனக்கு மிக்க மகிழ்‌ச்சி’ன்னு பதில் வந்தது சேட்டை கிட்டயிருந்து. அடுத்த இஷ்யூல பப்ளிஷ் பண்ணிட்டோம். புத்தகத்தோட காப்பியையும், கதைக்கான எளிய சன்மானத்தையும் கொடுக்கலாம்னு அவர் அட்ரஸ்/போன் நம்பர் கேட்டு ஈமெயில் அனுப்பினேன். பதில் இல்ல... மறுபடி ஒரு மெயில்... நோ ரெஸ்பான்ஸ்! எனக்குக் கடுமையான கோபம் வந்துருச்சு. கடுமையா கோபம் வந்துச்சுன்னா.... அலுதுடுவேன்! ‘நான் ரகசியம் காக்கத் தெரிஞ்ச நபர்தான். உங்களப் பத்தி எதையும் சொல்ல மாட்டேன். புத்தக காப்பியும், சன்மானமும் தரத்தானே கேக்கறேன். என்கிட்டயாவது உங்க பேர், ஊர் சொல்லக் கூடாதா?’ன்னு மூணாவதா ஒரு மெயில் அனுப்பினேன். ‘உங்க மெயிலைப் படிச்சதும் எனக்கு லேசான குற்ற உணர்வே வந்துடுச்சு. ஒரு வாரமா வேலையில பிஸிங்கறதாலதான் பதில் தரலை. என் பேர் வேணுகோபாலன்’ அப்படின்னு ஆரம்பிச்சு, போன் நம்பர், அட்ரஸ் தந்து பதில் எழுதியிருந்தார்.

து 2011ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம். உடனே அவரைப் பாக்கணும்னு அவர் தந்திருந்த அட்ரஸுக்குப் போனேன். காலிங்பெல்லை அடிச்சதும், பச்சை மிளகாய்க்கு பேண்ட், ஷர்ட் போட்டாற் போலிருந்த ஒரு ஆசாமி கதவைத் திறந்தார். ‘‘வேணுகோபாலன்...?’’ என்று நான் இழுக்க, ‘‘நான்தான். உள்ள வாங்க’’ என்று அழைத்து அன்பாகப் பேசினார். அந்த முதல் சந்திப்பில் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை. செப்டம்பரில் அவரை நான் மீண்டும் சந்தித்ததில்தான் குறிப்பிடும்படியான விஷயம் இருக்கு. ப்ளாக் பதிவுகளைப் பத்தி பேசிட்டிருந்துட்டு, ‘‘எப்படி இதெல்லாம் எழுதறீங்க? நிறைய கருத்துக்கள் வேற வருது...? எனக்கும்கூட ட்ரை பண்ணலாம்னு எண்ணம் உண்டு’’ன்னு சொன்னேன். தன் கம்ப்யூட்டர்கிட்ட கூட்டிட்டுப் போயி, டாஷ்போர்ட்னா என்ன, எப்படி பதிவு எழுதி பப்ளிஷ் பண்ணனும்னு எல்லாத்தையும் விளக்கி டெமோ காட்டினார். கூடவே, ‘‘உங்க இமெயில் ‌ஐ.டி. சொல்லுங்க’’ன்னு கேட்டு, ‘‘ஒரு டைட்டில் சொல்லுங்க’’ன்னு கேட்டு (மனசுக்கு வந்த ‘மின்னல் வரிகள்’னு சொன்னேன்) உடனே எனக்கு ஒரு ப்ளாக்கை உருவாக்கிட்டார். ‘‘இதுல எப்ப வேணா நீங்க பதிவுகள் எழுதலாம். எப்ப எந்த டவுட்னாலும் என்னைக் கேளுங்க’’ன்னாரு. அப்ப இருந்து சேட்டைஸார் மாறி சேட்டையண்ணா ஆயிட்டாரு.

சரின்னு வீட்டுக்கு வந்துட்டு, எழுதலாம்னு பாத்தா... ‘என்னத்த எழுதறது, எப்படி எழுத்து நடைய அமைச்சுக்கறது’ன்னு ஒண்ணும் புரியல. மனசுக்கு வந்ததைக் கிறுக்கி (இப்பவும் அப்படித்தான்னு யாரோ சொல்றது கேக்குது) என் முதல் பதிவை பப்ளிஷ் பண்ணினேன். அது 11, செப்டம்பர் 2011ல. இப்ப அதை எடுத்து படிச்சுப் பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது- நாமளா எழுதினோம்னு! சேட்டைக்காரன் முதல் கமெண்ட் இட்டு, முதல் பின்தொடர்பவராகவும் ஆனார். (வேற வழி?) சி.பி.செந்தில்குமார் கருத்து போட்டிருந்தார். இவங்கல்லாம் நமக்குத் தெரிஞ்சவங்க. தெரியாத நபர்னு பாத்தா... ‘பனித்துளி சங்கர்’ன்னு ஒரு கவிஞர்... அப்ப ப்ளாக்ல கவிதைகள்லாம் எழுதி நிறைய போஸ்ட் போட்டிருந்தார். அவரோட கருத்து வந்து விழுந்தது. எனக்கு தெம்பைத் தந்தது. அந்த தைரியத்துல ரெண்டாவது பதிவை எழுதி பப்ளிஷ் பண்ணினா... அதுக்கு கமெண்ட்டுகள் அதிகம் கிடைச்சுது. ஜாக்கி சேகர், அம்பாளடியாள், முனைவர் குணசீலன் வேலன் இப்படி கருத்துச் சொல்லியிருந்த எல்லாருமே முன்னணிப் பதிவர்ங்க... சும்மாவே குதிச்சுக கூத்தாடற குரங்கு, கள்ளை வேற குடிச்சுட்டா என்ன பண்ணும்...? .அதுக்கப்புறம் என் ‘மின்னல் வரிகள்’ எக்ஸ்பிரஸ் மானாவாரியா ஸ்பீட் எடுத்து கன்னாபின்னான்னு ஓடத் ‌தொடங்கிருச்சு...!

லையுலகில் இப்படி ஒரு விபரீதத்துக்கு வித்திட்டு, உங்களையெல்லாம் மாட்டிவிட்ட சேட்டையண்ணனைப் பழிவாங்கணும்னு ரொம்ப நாளா எனக்கு ஆசை இருந்துச்சு. எப்படின்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன். இப்ப... அது நிறைவேறப் போகுது. சேட்டைக்காரன் எழுதிய நகைச்சுவைக் கதைகளைத் ‌தொகுத்து, ‘மொட்டைத் தலையும் முழங்காலும்’ங்கற தலைப்புல புத்தகமா நான் டிசைன் பண்ணி, பதிப்பித்து வெளியிடறேன். அது செப்டம்பர் 1ல நடக்கவிருக்கற பதிவர் சந்திப்புல வெளியிடப்படும் / புத்தகங்கள் அங்கே கிடைக்கும் என்கிற தகவலை உங்களுடன் பகிர்ந்‌து கொள்வதில் மகிழ்கிறேன். இந்தவிதமாக சேட்டைக்காரனைப் பழிவாங்கி விட்டதில் ரொம்பத் திருப்தி எனக்கு!

71 comments:

  1. மீண்டும் சுதந்திரம் பெற்று பதிவு எழுத வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் நன்றி நண்பா!

      Delete
  2. //மொட்டைத் தலையும் முழங்காலும்’ங்கற தலைப்புல புத்தகமா நான் டிசைன் பண்ணி, பதிப்பித்து வெளியிடறேன்.//

    ஆகா..அருமையான விஷயம்,.

    // பச்சை மிளகாய்க்கு பேண்ட், ஷர்ட் போட்டாற் போலிருந்த ஒரு ஆசாமி கதவைத் திறந்தார்//

    அவர பார்த்தா அவ்வளவு சேட்டை பண்ணற மாதிரி தெரியாது.. ஆனா..

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆனந்து.. டைமிங்கோட ஜோ்க்காப் பேசி மத்தவங்களைச் சிரிக்க வெக்கறதுல அவர் ஒரு ஜுனியர் நாகேஷாச்சே...! மிக்க நன்றி!

      Delete
  3. நான் நன்றாக கவனித்து பார்த்ததில் பல பிரபலங்கள் புதிதாக யாராவது வலைத்தளம் ஆரம்பித்து பதிவுகள் இட ஆரம்பித்ததும் அந்த பதிவில் சென்று கருத்துக்கள் இடுவார்கள் . உடனே அந்த புதிய பதிவாளரும் ஆஹா பிரபலமே நம்ம பதிவில் கருத்து சொல்லி இருக்கிராரே என்று உடனே அவர்கள் ஃப்ளோவர் லிஸ்ட்டில் சேர்ந்துவிடுவார்கள். அதன் பின் அந்த பிரபலங்கள் கருத்தே சொல்வருவதில்லை

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒண்ணு இருக்கா என்ன..? நான் இபபடி டீப்பா கவனிச்சதில்லையே நண்பா...!

      Delete
  4. "நேரம் கிடைக்குமோ...? எழுதுவாரோ...?" என்று உங்கள் தளத்திற்கு வந்தேன்... மிகவும் சந்தோசம் + நன்றி... சேட்டையண்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பதிவினால் மகிழ்ந்து, சேட்டையண்ணாவை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  5. இனிய வணக்கம் நண்பரே...
    நலமா??
    நகைச்சுவை என்பது அவ்வளவு எளிதாக வரும் உணர்வல்ல...
    சேட்டைக்காரன் அவர்களின் பதிவுகளில் ஒவ்வொரு வரியிலும்
    ஒவ்வொரு எழுத்திலும் நகைச்சுவை உணர்வு இருக்கும்.
    அப்படிப்பட்ட மனிதரை கடந்த சென்னை பதிவர் சந்திப்பில் தான் கண்டேன்..
    சட்டென்று நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் தான் அவர் பிம்பத்தில் .தெரிந்தார்...
    ==
    சேட்டைக்காரன் அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு
    என் மனமார்ந்த ..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சேட்டைக்காரனை ரசித்து, புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மகேன்!

      Delete
  6. மின்னல் வரிகளில் சற்றே இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு பதிவு..... வாழ்த்துகள் கணேஷ்.....

    சேட்டையண்ணாவின் புத்தகம் வெளி வருவதில் எனக்கும் மகிழ்ச்சி. எனது வாழ்த்துகளும்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  7. நானும் சேட்டைக்காரனின் பதிவுகளை விரும்பி படிப்பேன் ...சமீப காலமாக அவர் எழுதுவதே இல்லை என்ற வருத்தம் உண்டு ,,,கடைசியாக,கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்று எழுதினார் ,கடவுள் பிறக்காததாலோ என்னவோ ,அப்புறம் எழுதக் காணாம் ..அவரிடம் இருந்து நிறைய எதிர்ப் பார்க்கிறேன் !அவர் எழுத்து புத்தக வடிவில் வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. புத்தகத்தை வரவேற்ற பகவான்ஜிக்கு மிக்க நன்றி! சேட்டைக்காரனின் நகைச்சுவை தவிர்த்த வேறு படைப்புகள் இன்னும் இரண்டு புத்தகங்களாக வெளிவரத் திட்டமிட்டிருக்கேன். உங்கள் எல்லாரின் ஆதரவுதான் வேணும்!

      Delete
  8. காலிங்பெல்லை அடிச்சதும், பச்சை மிளகாய்க்கு பேண்ட், ஷர்ட் போட்டாற் போலிருந்த ஒரு ஆசாமி கதவைத் திறந்தார்//மனசுமட்டும் தூய வெள்ளை என்றும் சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே! வெள்ளை உள்ளம் படைத்த அந்த மனிதரை வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  9. வாழ்த்துக்கள் சேட்டை அண்ணாச்சி ...

    ReplyDelete
    Replies
    1. சேட்டையண்ணாவிடம் உங்கள் வாழ்த்துக்களை சேர்ப்பிச்சிடறேன் செந்தில... மிக்க நன்றி!

      Delete
  10. கொஞ்சம் கேப் விட்டு விட்டீர்களோ!
    சில நாட்களுக்குப் பிறகு இப்பதான் உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.
    திரு சேட்டைக்காரரின் பதிவுகள் புத்தக வடிவில் வருவது மகிழ்வ்ச்சி!
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. இனி கேப் இருக்காது ராஜி மேடம்! சேட்டையண்ணாவின் புத்தகத்தால் மகிழ்ந்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. சில நாட்களாக பதிவுகளைக் காணோம்
    என்ற போதே தாங்கள் முக்கியமான பணியில்
    இருக்கிறீர்கள் எனப் புரிந்து கொண்டோம்
    நானும் சேட்டைகாரன் எழுத்தின் ரசிகன் என்பதால்
    இது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி தந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  12. புத்தகம் வெளியிடுங்கள்....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம நிறை நன்றி பிரகாஷ்!

      Delete
  13. நீஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பின் வலையுலகம் வரும் உங்களுக்கு கட் அவுட் வைத்து வாழ்த்துவதில் சங்கம் பெருமை கொள்கிறது

    சேட்டைக்காரன் கதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுவது மிகப் பெரிய சந்தோசம் வாத்தியாரே...

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு ஆஆஆஆஆ :-)))))))))))

    ReplyDelete
    Replies
    1. கட் அவுட் வைத்து வரவேற்று மகிழ்ந்த சீனுவுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  14. வாழ்த்துக்கள்! wonderful!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  15. edai velikku piraku ungal pathivu padikkurathla makizchi athilum unga mothal pathivu anupavam rompa svarasyama irunthichu sir.

    ReplyDelete
    Replies
    1. என் முதல் பதிவு அனுபவத்தை ரசித்த உனக்கு மகிழ்வுடன் என் நன்றி மகேஷ்!

      Delete
  16. தலைப்பை பார்த்ததும் நான் கண்டிப்பா சேட்டை ஸார் பத்தி இருக்கும் நினைச்சேன்.. என் நம்பிக்கை வீண் போகல.. முதல் பதிவு இட்டது எப்பவுமே ஒரு அலாதியான இன்பம் தான்!!

    என்ன சொன்னீங்க ஏதோ எழுதறீங்களா... அப்போ என்னல்லாம் என்ன சொல்லுவாங்க.. ஹையோ.. பயமா இருக்கே!!!

    புத்தகம் தலைப்பு சூப்பர்... சேட்டை ஸார் என்ன பண்றார்.. கொஞ்சம் அப்‌டேட் பண்ணுங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. அப்டேட் தர்றேன் சமீரா. என் முதல் பதிவை ரசிச்சு மகிழ்ந்த உனக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  17. சென்ற பதிவர் மாநாட்டில் அவர் (சேட்டைக்காரன்) தலை காட்டியதிலிருந்து அவருடைய முந்தைய பதிவுகளில் இருந்த காரம், மணம், நையாண்டி இல்லாமல் போயிற்று. இப்போது அவருடைய பதிவுகள அதிகம் வருவது இல்லை. சேட்டைக்காரன் எழுதியவற்றின் தொகுப்பை நீங்கள் கொணர்வதில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. சேட்டையை ரசித்து புத்தகமாவதில் மகிழ்ந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. சேட்டையண்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் அவர் சேட்டையண்ணாவா? நல்லது... மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  19. Settaikaran has also given dummy songs in his blog which I used to enjoy.
    He is a hilarious writer but nowadays I do not know why he has stopped writing. Must be busy in learning the language of Gujarati.

    ReplyDelete
    Replies
    1. சேட்டையண்ணாவின் நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  20. // //மொட்டைத் தலையும் முழங்காலும்’ங்கற தலைப்புல புத்தகமா நான் டிசைன் பண்ணி, பதிப்பித்து வெளியிடறேன்.//

    தலைப்பும், அட்டைப்படமும் சீக்கிரம் படிக்கனும்ன்னு தோணுது...

    சேட்டை அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அட்டைப் படத்தை ரசித்து, வாழ்த்திய நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. நீஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பின் வலையுலகம் வரும் உங்களுக்கு கட் அவுட் வைத்து வாழ்த்துவதில் சங்கம் பெருமை கொள்கிறது

    ரீபீட்

    சேட்டைக்காரன் எழுதிய நகைச்சுவைக் கதைகளைத் ‌தொகுத்து, ‘மொட்டைத் தலையும் முழங்காலும்’ங்கற தலைப்புல புத்தகமா நான் டிசைன் பண்ணி, பதிப்பித்து வெளியிடறேன்.

    வாழ்த்துக்கள்

    ஒரு book புக் பண்ணிக்குறேன்

    ReplyDelete
    Replies
    1. பு்த்தகத்தை புக் பண்ணி என்னை வரவேற்ற குடந்தையூராருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. நல்வரவு. :)

    சேட்டை அவர்களின் புத்தக வெளியீடு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    வெளியிடும் உங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ந்து வாழ்த்தி, என்னைப் பாராட்டிய மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  23. பச்சை மிளகாய்க்கு பேண்ட், ஷர்ட் போட்டாற் போலிருந்த ஒரு ஆசாமி கதவைத் திறந்தார்.
    >>
    இதுக்கே அவர் முகம் காட்ட மாட்டாராம்?! இன்னும் உங்களை போல அழகா இருந்துட்டா?! எழுத கூட மாட்டார்ன்னு நினைக்குறேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஹையா...! என் தங்கை என்னை அழகுன்னுட்டாங்க...! ஹேப்பி...!

      Delete
  24. சேட்டை அவர்களின் புத்தக வெளியீடு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ந்து வாழ்த்திய ரிஷபண்ணாவுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  25. நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் பதிவை காண்பதில் மகிழ்ச்சி.. Welcome Back.

    இதுவரை சேட்டைக்காரனின் பதிவுகளை படித்தது இல்லை, புத்தகமாக வாங்கி படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதுவரை சேட்டைக்காரனைப் படித்ததில்லைன்னா இந்த புக் உனக்‌கு அதிகமாவே ரசிக்கும் ரூபக்! என்னை வரவேற்ற உன் அன்புக்கு மிக்க நன்றி!

      Delete
  26. நானும் திரு சேட்டைகாரரின்விசிறி தான். அவருடைய புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
    குருநாதரை மறக்காமல் செய்னன்றியைக் காட்டும் உங்களுக்கும், திரு சேட்டைகாரருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் வாங்கிப் படிக்க ஆவலாய் இருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா!

      Delete
  27. சேட்டையின் கதைகள் புத்தகமாக வெளியிடுவது குறித்த செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கள் மகிழ்வையும் தெம்பையும் அளிக்கிறது ராகவன் žஸார். உங்களுக்கு என மனம் நிறைய நன்றி!

      Delete
  28. நல்ல பதிவு சார்.. உங்கள் முதல் அனுபவம் அருமை... புதிய பதிவர்களை தாங்களும் தேடிப் பிடித்து கருத்துக்கள் சொல்வதும் சொந்த அனுபவத்திலிருந்து தொடங்கியதோ....

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஒரு காரணம் ப்ரியா. இயல்பாகவே நிறையப் படிப்பதில் எனக்குள்ள ஆர்வமும் இன்னொரு காரணம். என் முதல் அனுபவத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  29. முதல்ல உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்... அப்புறம் சேட்டையண்ணாவின் கதைகளை புத்தகமாக கொண்டுவருவதற்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. என்னை வரவேற்று, புத்தகத்தை வாழ்த்திய ஸ்.பை.க்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  30. நீங்க எழுத்தாளரான கதை , சக எழுத்தாளரின்
    புத்தக வெளியீடு கதை என்று இந்த பதிவு
    சற்றே இடைவெளி விட்டு வந்தாலும்
    குணம் ,மணம், காரம் , சுவை குறையவில்லை.
    வாழ்த்துக்கள் இருவருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. எழுத்தின் சுவையை ரசித்து, எங்களை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி தோழி!

      Delete
  31. Very nice flow of words and thoughts.
    I am only a reader of blogs and read almost all the names you mentioned. Your style is also humorous.It is a great feeling that someone offered to help you and push start your writing skills on the web.It is surprising that this has already garnered 54 comments. I attended the last year's meet just out of curiosity. I am out of the country now and cannot participate in all the fun.
    It was very thoughtful of you to pay tribute to a person who hand-held you in your formative years.Congratulations for the meet and wishing the function all success. I am following Settaikaran too. Give him my best wishes too.

    ReplyDelete
    Replies
    1. நீங்களாவது பரவால்லை சங்கர்...வாசகரா இருந்து படிக்கறதோட கமெண்ட்டும் போடறீங்க. நான் வாசகரா இருந்து படிச்ச காலத்துல கமெண்ட் போடறது எப்படின்னுகூட எனக்குத் தெரியாது. எல்லாம் கத்துத் தந்த ‌ே சட்டையண்ணாவுக்கு நான் செலுத்தும் நன்றியை நீங்க பாராட்டி, வாழ்த்தினதுல ரொம்ப மகிழ்ச்சி எனக்கு! என் எழுத்தைப் பாராட்டினதுக்கும், உடலால தொலைவில இருந்தாலும் மனதால நீங்க நெருங்கி இருக்கறதுக்கும் என் இதயம் நிறை நன்றி!

      Delete
  32. மொட்டைத் தலையும் முழங்காலும்’ங்கற தலைப்புல புத்தகமா நான் டிசைன் பண்ணி, பதிப்பித்து வெளியிடறேன்.//

    ஆகா..அருமையான விஷயம்,. வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

    ReplyDelete
  33. இடைவெளிக்குப் பின்னர் நல்லதொரு பதிவுடன் வந்திருக்கிறீர்கள் அண்ணா....
    தொடருங்கள் அண்ணா.....

    ReplyDelete
  34. வாங்க பாலா அண்ணா! ரொம்ப நாளா பார்க்கவே முடியல! முதல் பதிவு அனுபவம் அருமை! செப்டெம்பர் 11 லயா வெயிட்டீங்க?? ஆவ்வ்வ்! உங்களின் சுவாசரியமான எழுத்து நடையே எம்மையெல்லாம் ரசித்துப் படிக்க வைக்கிறது. ஸோ, உங்கள் பதிவுகள் கிறுக்கல்கள் அல்ல!

    அப்புறம் சேட்டை சாரின் புத்தம் டிசைன் சூப்பர். அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  35. அண்ணே என்னுடைய கல்யாணத்திற்க்கு முந்தைய நாள் தான் நீங்க ப்லாக் ஆரம்பிச்சு இருக்கீங்க

    ReplyDelete
  36. சேட்டை அவர்களை கடந்த பதிவில்தான். சந்திப்பில் பார்த்தேன்.
    நகைச்சுவையில் அவரை மிஞ்ச ஆளில்லை.
    //பச்சை மிளகாய்க்கு பேண்ட், ஷர்ட் போட்டாற் போலிருந்த ஒரு ஆசாமி கதவைத் திறந்தார். ‘//
    அவர் பாணியிலேயே அறிமுகம். சூப்பர்.
    நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.
    ***********************
    ஜாக்கி சேகர் வேறு வலைப்பக்கத்திற்கு கருத்திட்டு இதுவரை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு கருத்திட்டது அதிசயமே. ஒரு வேளை மதுரை தமிழன் சொன்ன உத்தியாக இருக்குமோ.?

    ReplyDelete
  37. மின்னல் வரிகள் பிறந்த கதை அறிந்தோம்:).

    புத்தக வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. மின்னல் வரிகள் - அட இவ்ளோ பேக்ரவுண்ட் கீதா...சர்தான்...சேட்டையார் தான் காரணமா...ரைட்டு...

    ReplyDelete
  39. பதிவுல சேட்டைகாரன் வந்திருக்காக.அண்ணன் பனித்துளி வந்திருக்காக .ஜாக்கி சேகர் வந்திருக்காக.முனைவர் குணசீலன் வந்திருக்காக.அக்கா அம்பாளடியாள் வந்திருக்காக.வாம்மா( )வரிகள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube