Wednesday, August 21, 2013

வடம் பிடிக்க வாருங்கள்...!

Posted by பால கணேஷ் Wednesday, August 21, 2013
திவர் திருவிழாவுல அழைப்பிதழ்ல ஒரு கூடுதல் சேர்க்கை. கோவையைச் சேர்ந்த புதிய பெண் பதிவரான யாமிதாஷா தன்னோட புத்தகத்தை வெளியிடறாங்க. அவங்களுக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்! அழைப்பிதழ்ல இது சேர்க்கப்பட்டிருக்கு. இங்க க்ளிக்கி அப்டேட்டைப் பாத்துக்கங்க.

து ஓர் ஆலயத்தின் பெருந் தேர்! பிரம்மாண்டமான வடிவத்தில் தூரத்திலிருந்து பார்க்கையிலேயே பிரமிப்பைத் தருகிறது. அந்தத் தேரை ஊரே கூடி இழுக்கிறது. இழுக்கிற கூட்டத்தில் நல்ல உடல் வலிமை பெற்ற இளைஞர்களும், வலிமை குன்றிய நோஞ்சான்களும், ஏன்... முதியவர்களும்கூட உண்டு. அதில் இன்னாரில் பலத்தால்தான் தேர் நகர்ந்தது என்று அறுதியிட்டு பிரித்துக் கூறிவிட முடியுமா என்ன...? அனைவரும் தங்களால் இயன்ற சக்தியை வழங்கியதன் பலன்... அந்தப் பிரம்மாண்டத் தேர் நகர்ந்து ஊரிலுள்ளோர் அனைவருக்கும் இறை தரிசனமும் மகிழ்வும் தருகிறது. அதேபோலத்தான்... நமது வலைப்பதிவர் திருவிழாவும்!

சென்ற ஆகஸ்டில் நிகழ்ந்த தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா அனைவர் நினைவிலும் உறைந்திருக்கும். அஃது மிகவும் சிறப்பாக நடந்தேறியது என்று அனைவரும் பாராட்டியதிலும், எவரும் குறை சொல்லாததிலும் மிக்க மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தந்த உற்சாகத்துடன் வரும் செப்டம்பர் 1ல் இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது. ஒரு தினம் முழுவதும் நம்மை மகிழ்விலாழ்த்தும் இந்த விழாவிற்காக பல மனிதத் தேனீக்கள் பறந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கலாம் என ஒரு முடிவு நிர்வாகக் குழுவினால் எடுக்கப்பட்டது. அதன் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம். நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.

First Name            : Raja
Last Name            : Sekar
Display Name       : RAJA. S
Account Number   : 30694397853
Branch Code          : 006850
CIF No.                  : 85462623959
IFS Code                : SBIN0006850
MICR Code           : 600002047
Branch                    : SBI Saligramam Branch
Address                  : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093


Contact : 044- 24849775 / தொடர்புக்கு : அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645

பணத்தை செலுத்திவிட்டு அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள். பணம் வந்து சேர்ந்ததும்  tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம்.. நன்றி.. என்ற தகவல் வந்து சேரும்.

விருப்பப்படுபவர்கள் விருப்பப்பட்ட தொகையை மனமுவந்து அளித்தால் அதுவே மகிழ்வுதரும் விஷயம். இதில் நோஞ்சான் யார், பலசாலி யார் என்பது கணக்கிடப்படுவதில்லை... அன்புடன் தரும் பங்களிப்பே பிரதானம்! பதிவர் திருவிழாத் தேரை சிறப்பாக இழுத்து அனைவருக்கும் மகிழ்ச்சிதர உங்களின் பங்களிப்பைச் செலுத்த விரும்பினால் உடன் செய்து மகிழுங்கள்/மகிழ வையுங்கள். மிக்க நன்றி.


சீனு - எனக்கு நண்பன், சீடன், விமர்சகன் என்று எல்லா நிலையிலும் நெருக்கமானவன். இவனு(ரு)க்கு நகைச்சுவை நன்றாக எழுதவரும் என்கிற என் கணிப்பை பலமுறை வலியுறுத்தியதுண்டு. ஒருசமயம் நகைச்சுவை எழுத்து பற்றி நேரில் விளக்கம் தந்ததும் உண்டு. சீனு எழுதிய இந்தப் பதிவில் மிகச் சிறப்பாக நகைச்சுவை அமைந்திருந்தது. 

இப்போது நீ்ங்கள் படித்து ரசித்த ‌‘மோகினிப்பேயும் சரிதாவும்’ கதையை எழுதியனுப்பி என் தளத்தில் போடச் சொன்னான். தான் எழுதின படைப்பை இன்னொருத்தரை வெளியிடச் சொல்ல எவ்வளவு திடங்கொண்ட மனசு வேணும்...?  அதைச் சற்றே எடிட் செய்து, என் பங்களிப்பாய் சில வரிகள் சேர்த்து பப்ளிஷ் பண்ணியதில்... நான் எழுதியது என்றே நிறைய கமெண்ட்டுகள்! தான் ஒரு கு.மி.சி.ங்கறத நிரூபிச்சுட்டான் அம்ம பய. மகிழ்ச்சியாய் இருக்கிறது! அசத்துடா பையா! என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களும் ஆசியும்!  சீனுதான் என்று சரியாகக் கணித்தவர்கள் அவர்கள் உண்மைகள், ரமணி ஸார், ஸ்ரவாணி ஆகிய மூவரும்! இவர்களுக்கு என்னிடமிருந்து புத்தகப் பரிசு உண்டு. யப்பா மதுரைத் தமிழா... உடனே ஒரு ப்ளைட் பிடிச்சு சென்னை வாங்க! உங்கள நேர்ல பாத்துத்தான் பரிசக் குடுப்பேனாக்கும்! 

22 comments:

  1. aiyo my guessing thappa pochee... its ok nalla irunthichu 2 nal thrill yar eluthiyathunu sir.

    ReplyDelete
  2. அழைப்பிதழ் மாற்றம் எனது தளத்திலும் update செய்து விட்டேன்... சிஷ்யர் சீனு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஓ, சீனு தான் எழுதினதா? யாரோட எழுத்து எப்படி இருக்குன்னு சொல்லவே முடியலையே...

    ReplyDelete
  4. வடம் பிடிக்கவும் தடம் பதிக்கவும் தயார்.
    இபோதுதான் படித்தேன். குருவை மிஞ்சும் சிஷ்யன். வாழ்க!

    ReplyDelete
  5. ஹஹஹா.. நல்ல ட்விஸ்டு..

    ReplyDelete
  6. கண்டிப்பா நேர்ல வந்து பரிசு வாங்கிக்கிறேன். அதுக்கு முன்னால விமான டிக்கெட் எப்ப வாங்கி அனுப்புறீங்க என்று சொல்லுங்க அதற்கு தகுந்தாப்பல இந்தியாவிற்கு வர விசா வாங்கனும் அதற்கும் பண செலவு உண்டு அதை எப்படி எனக்கு அனுப்ப போறீங்கன்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்...


    நான் பெரிய உலக அழகன் என் மூஞ்சியை பார்க்க இப்படியெல்லாம் ஆசைப்படுறாங்கப்பா ஒரு முறை என் மூஞ்சியை பார்த்தா பல நாட்கள் உங்களுக்கு தூக்கம் வராது

    இப்படியெல்லாம் நீங்க கஷ்டப்படணுமா அல்லது புக்கை தபாலில் அனுப்பிவிடுறீங்களா

    ReplyDelete
    Replies
    1. ஹலோ MTG அவர்களே ,

      சுண்டக்காய் கால்பணம் தந்து சுண்டக்காய் தந்து
      சுமைக்கூலி
      முக்கால் பணமும் தந்து .... நீங்கள் வந்து .....
      கிடைத்த சந்தில் இப்படியா லந்து பண்ணுவது ?

      Delete
  7. ஆஹா , கணிப்பு சரியா ?
    மூவருக்குமே பரிசா ?
    நல்லது . மகிழ்ச்சி. நன்றி !

    [ பி : கு : ஏற்கனவே நீங்கள் படிப்பதற்கென
    தந்து விட்டுச் சென்ற புத்தகங்கள் எனக்கு மிக அருமையாய்
    கிடைத்த பொக்கிஷங்கள் ]

    ReplyDelete
  8. புதிய புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்... சீனுவுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. வடம் பிடிக்கவும் தடம் பதிக்கவும்
    இபோதுதான் படித்தேன் Nanry.
    Best wishes.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  10. ஆஹா இப்படிக்கூட நடந்திருக்கின்றதா ?...!! வாழ்த்துக்கள் கதாசிரியர்
    சீனுவுக்கும் உங்களுக்கும் :)

    ReplyDelete
  11. பரவாயில்லை பதிவர் சந்திப்பில்
    ஒரு புத்தகம் தேத்தியாச்சு
    வேற போட்டி ஏதும் வச்சாக்கூட
    நல்லதுதான்னு படுது...

    ReplyDelete
  12. சீனு என்றாலே அதிரடி , கலக்கல் , அழகன் என்றுதானே அர்த்தம் .

    ( இப்படி கமென்ட் போடசொல்லி சீனு மிரட்டியதால் போட்டேன் )

    ReplyDelete
  13. நான் 50% கரெக்டா சொன்னதால...பாதி புத்தகம் கண்டிப்பா நீங்க தரனும் சொல்லிட்டேன்...

    ReplyDelete
  14. நூல்கள் வெளியிடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திடுங்கள் அண்ணா!!

    ReplyDelete
  15. புத்தகம் வெளியிடுவோருக்கு வாழ்த்துக்கள்.
    விழா சிறக்க வாழ்த்துக்கள்...
    நண்பர் சீனுவுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. தங்களுடைய தளத்தில் என் படைப்பு வெளிவருவதை ஒரு மிகப் பெரும் பத்திரிக்கையில் வருவது போல் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்...வெளியிட்டதோடு அல்லாமல் நான் எதிர்பார்க்காத அங்கீகாரம் பெற்றுக் கொடுத்ததற்கு நன்றி... சில நாட்களாய் சோம்பி இருக்கும் என் மனதிற்கு இது ஒரு உற்சாக பூஸ்ட்

    ReplyDelete
  17. வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்களை PDF ஆக வெளியிட வேண்டுகிறேன், எங்களை போன்ற வெளிநாட்டில் வாழ் தமிழர்களும் பயன்பெறலாம்.

      புத்தகம் வெளியிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

      Delete
  18. குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருக்கும் சீனுவிற்கும், குருவான உங்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube