Thursday, September 22, 2011

நகரைத் தேடிய விமானி

Posted by பால கணேஷ் Thursday, September 22, 2011
ரித்திரக் கதைகளிலும் சரி, பழைய சரித்திர திரைப்படங்களிலும் சரி தவறாமல் ஒரு விஷயம் வரும். மன்னன் தன் மந்திரியைப் பார்த்து, ‘‘மந்திரி! மாதம் மும்மாரி பொழிகிறதா?’’ என்று கேட்பார். அவர் ஏன் அப்படிக் கேட்க வேண்டும்? நாட்டில் மழை பொழிந்தால் அவருக்கு மட்டும் தெரியாமல் போய்விடப் போகிறதா... இல்லை மன்னர் ஃபாரின் டூர் எதுவும் போயிருந்தாரா? எதற்கு இப்படி அபத்தமாகக் கேட்பதாக எழுதுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன்.


வசந்த் டி.வி.யில் திரு.டெல்லிகணேஷ் இப்படிச் சொன்னார்: ஒரு நாட்டில் வேதம் அறிந்த அந்தணர்கள் சரியானபடி தர்மங்களை கடைப்பிடித்து வருவார்களேயானால் அவர்கள் பொருட்டு ஒரு மழை. மன்னனாய் இருப்பவன் நீதி நெறி வழுவாது சிறப்பான ஆட்சி புரிந்தால்  அவன் பொருட்டு ஒரு மழை. பெண்கள் கற்புநெறி வழுவாமல் பத்தினிகளாய் இருந்தால் அவர்களின் பொருட்டு ஒரு மழை. ஆக, ஒரு மாதத்தில் இந்த விஷயங்களுக்காக மும்முறை மழை பொழிய வேண்டும். நாட்டில் இந்த மூன்று விஷயங்களும் சரிவர நடக்கிறதா என்பதைத்தான் அப்படி ஒரு கேள்வியாக மன்னர் கேட்கிறார்.


இந்தச் செய்தி எனக்குப் புதிதாக இருந்தது. உங்களுக்கு?

 
-----------------------------------------------------------

 
ழுத்தாளர் என்.சொக்கன் அவருடைய வலைத்தளத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் கதாநாயகன் செம்பட்டை (சிவகுமார்) வண்டிச்சோலை கிராமத்திலிலிருந்து யாருக்கு என்ன தேவையோ அதை சேலம் போய் வாங்கி வந்து தருவார். ‘‘வெத்தல வெத்தல வெத்தலயோவ்’’ என்று ஒரு பாடலில் கிராமத்தவர்களிடம் அவர் என்ன வேண்டும் என்று கேட்பதும், அதைப் பாடலாகப் பாடியபடி வழிநடப்பதும் வரும். அதில் ஒரு பயில்வான், ‘‘டேய், நாலு தோலாவுக்கு பாதாமும் பிஸ்தாவும், மூணு தோலாவுக்கு முந்திரியும் திராட்சையும் வாங்கிட்டு வாடா’’ என்பார். தோலா என்றால் என்ன அளவு? -இதுதான் சொக்கன் கேட்டிருந்த கேள்வி.

 
எனக்கும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. என் சித்தப்பாவிற்கு போன் செய்து கேட்டேன். தோலா, பலம், சேர், வீசை மணங்கு என்றெல்லாம் அளவுமுறைகள் அக்காலத்தில் இருந்ததாகக் கூறினார். இக்கால அளவுகளில் அவை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள விரும்பிக் கேட்டபோது ஒரு வாய்ப்பாடு சொன்னார்.

 
ஒரு ரூபாய் எடை    =    1 தோலா
3 தோலா எடை          =    1 பலம்
8 பலம் எடை              =    1 சேர்
5 சேர் எடை                =    1 வீசை
8 வீசை                         =    1 மணங்கு

 
இதுதான் வாய்ப்பாடாம். இதில் வீசை என்பது 1400 கிராம் என்றால் தோலா எவ்வளவு என்று கணக்குப் போட்டுக் கொள் என்றார். நான் கணக்கில் கொஞ்சம் வீக். ஹி... ஹி... தோலா என்றால் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டு கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் சொக்கன் சார்!

 
இந்த விஷயம் எனக்குப் புதிதாக இருந்தது. உங்களுக்கு?


-----------------------------------------------------------


கீழே நான் கொடுத்திருப்பதை திரு.பாக்யராஜ் அவர்களின் குரலில் கற்பனை செய்து கொண்டு படிக்கவும்.


வாழ்க்கைல சமயோசிதமா நடந்துக்கறது ரொம்ப முக்கியமான விசயங்க. ஒரு பாகவதர் ஹரிகதை சொல்லிட்டிருந்தார். ஏதாவது ஒரு கதைய வசனம் பாதி, பாட்டு பாதியா கலந்து சொல்றதுக்கு ஹரிகதைன்னு பேருங்க. அவரு தலைவனை சந்திச்ச தலைவி தன் தோழிகிட்ட அவனைப் பத்தி விசாரிக்கிற சீனைச்  சொல்லிட்டு பாட ஆரம்பிச்சாரு. ‘‘அழகுள்ள துரை இவர் யாரடி?’’ என்று தலைவி கேட்பதாக பாட்டை ஆரம்பிக்கறப்ப அந்த ஊர் பெரிய மனுசன் ஒருத்தர் அங்க வந்தாரு. நம்ம ஆளு அவரைக் காமிச்சு ‘அழகுள்ள துரை இவர் யாரடி?’ன்னு கேட்டு பாடவும், எல்லாரும் கை தட்டினாங்க.


தொடர்ந்து அவர் பாடிக்கிட்டே வர்ற நேரத்தில இன்னொரு ஊர் பெரிய மனுசன் வந்து சேர்ந்தாரு. அவரு நல்லா ஆறடி உயரமான ஆசாமி. நம்ம ஆளு அவரைக் கை காட்டி, ‘அழகுள்ள துரை இவர் ஆறடி’ ன்னு ‘ஆறடி’க்கு அழுத்தம் குடுத்துப் பாடவும், செமையா கை தட்டல் வாங்கிக்கிட்டாரு.


அந்தக் கைதட்டல் அடங்கறதுக்குள்ள இன்னொரு ஊர்ப் பெரிய மனுசன் வந்தாரு. இவரு அபூர்வ சகோதரர்கள் கமல் மாதிரி குள்ளமான ஆசாமி. நம்ம ஆள் அவரைப் பார்த்ததும் சட்டுன்னு, ‘‘அழ குள்ளதுரை இவர் யாரடி?’’ ன்னு ‘குள்ள துரை’க்கு அழுத்தம் கொடுத்துப் பாடவும், முன்னெல்லாம் விட பலமா கை தட்டிப் பாராட்டினாங்க ஊர் சனங்க.


இப்படி சமயத்துக்குத் தகுந்த மாதிரி சமயோசிதமா யோசிச்சு சமாளிக்கிற புத்திசாலிங்கதாங்க எல்லாத்துலயும் ஜெயிக்க முடியும். இந்த விசயத்தை என்னோட கேள்வி பதில் பகுதியிலயும் எழுதியிருக்கேன் என்று ஒருமுறை அவரைச் சந்தித்த தருணத்தில் கே.பாக்யராஜ் அவர்கள் சொன்னார்.


இந்தக் கதை எனக்குப் புதிதாக இருந்தது. உங்களுக்கு?


-----------------------------------------------------------


லைஞரின் ஆட்சியில் ‘சிங்கார சென்னை’, ஜெயலலிதாவின் ஆட்சியில் ‘எழில்மிகு சென்னை’ -இப்படியெல்லாம் அழகாகத்தான் சொல்லுகின்றனர். ஆனால் பலமாக ஒரு மழை பெய்தால் சிங்காரமும், எழிலும் காணாமல் போய் விடுகிறது. பல ஏரியாக்களில் தண்ணீர் வடிவதற்கு சரியான ஏற்பாடு இல்லாததால் தேங்கி நிற்கும் குட்டைகளும், சேறுமாக பாதசாரியாக அதைக் கடப்பதற்குள் பரதம், கதகளி, குச்சுப்புடி என்று எந்த இலக்கணத்திலும் அடங்காத நாட்டியம் ஒன்றை ஆடித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. சைதாப்பேட்டை அண்டர் பிரிட்ஜில் என் வாகனத்தில் சென்றபோது ‘நாடோடி மன்னன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போல, மேலே இரண்டு பக்கமிருந்தும் குழாய்களில் மழைத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. விளைவாக, என் வாகனம் நனைந்துதான் அந்த அண்டர் ப்ரிட்ஜிலிருந்து மேலே வர வேண்டியிருந்தது. புதுச்சேரியில் சாலைகளில் இப்படி மழை நீர் தேங்குவதில்லை. ஹும்! அதை நினைத்துப் பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கிறது.


-----------------------------------------------------------


ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம் ஜப்பான் கடலைக் கடந்து ஒசாமா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘‘ஏன் மிஸ்டர் நாகேஷ்! நாம இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்?’’ -இது அசோகனின் கேள்வி. ‘‘கொஞ்சம் இரு... வெளில எட்டிப் பார்த்துச் சொல்றேன். மைல்கல் அங்கதானே நட்டிருப்பாங்க... பாத்துட்டாப் போச்சு’’ என்று பதிலைச் சொன்னார் நாகேஷ். அவ்வளவுதான்... எதற்கும் சிரிக்காத சொர்ணமும் அவருடன் சேர்ந்து மற்றவர்களும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.


சாகாவை நெருங்க நெருங்க விமானம் மேலும் கீழும் ஆடியது. அதுவரையில் வெளிப்படையாக உரத்துப் பேசாமலிருந்த திரு.அசோகன் கேட்டார். ‘‘என்ன நாகேஷ் இது..? கீழே கீழே இப்படி இறங்கி பயமுறுத்தறான்?’’  நாகேஷின் பதில்: ‘‘அது ஒண்ணுமில்ல... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடறான்...’’ -இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்?


-- ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ என்கிற நூலின் ஆசிரியர் எம்.ஜி.ஆர். (புரட்சித்தலைவர் தான்) இப்படிக் குறிப்பிடுகிறார்.

7 comments:

  1. //‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’//

    சிவகுமாரின் நூறாவது படம் என்று வாசித்த ஞாபகம். இளையராஜா, தீபாவுக்காக பொறுமையாகப் பார்த்தேன். :-)

    உ.சு.வாலிபன் குறித்த செய்திகள் இதுவரை கேள்விப்படாதவை. நாகேஷ்-ன்னா சும்மாவா?

    இடுகையில் மும்மாரி பெய்திருக்கிறது. :-)

    ReplyDelete
  2. எனக்கும் சில புதிதான விஷயங்களை தெரியப் படுத்தி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு நன்றி..


    தமிழர்களை கேவலப்படுத்துவதா?

    ReplyDelete
  3. எல்லாமே வித்யாசமான தகவல்கள் நன்றி பகிர்வுக்கு.:)

    ReplyDelete
  4. என் வலை வந்து வாழ்த்தியதுக்கு நன்றி நண்பரே...
    இது என் முதல் வருகை...கண்டிப்பாய் இறுதியாயிருக்காதென்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை...

    ReplyDelete
  5. தோலா... தெரியாத தகவல்.. நல்ல பகிர்வுகள்..

    ReplyDelete
  6. 1.புதிய தகவல்.நன்றி
    2.எனக்குத்தெரியுமே!
    3.கேள்விப்பட்டிருக்கிறேன்.
    4.தினசரி குப்பைகளே அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்-நாற்றம்.
    5.அருமை.

    ReplyDelete
  7. புதிய தகவல்.நன்றி

    பகிர்வுகள் அருமை.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube