அனைவருக்கும் வணக்கம்! இது என்னுடைய முதல் பதிவு. தவழும் குழந்தைக்கு விரல் கொடுத்து நடக்க உதவும் பெரியவர்கள் போல உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
குழந்தை என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய நீண்டநாள் சந்தேகம் ஒன்று. `எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து' என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். எனக்கு நினைவு தெரிந்த நாள் எது என்று நானும் நினைவு தெரிந்த நாளாய் யோசித்துப் பார்க்கிறேன்... தெரியவில்லை. உங்களுக்கு நினைவு தெரிந்த நாள் எது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதை விடுங்கள்... என்னுடைய சிறு வயதில் பண்டிகைகள் வருகிறது என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பே ஒருவித ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி என்றால் இந்த வாரமே பரபரப்பாக குன்றி மணிகள் சேகரிப்பது துவங்கி தயாராகிக் கொண்டிருப்போம். அதிலும் தீபாவளிப் பண்டிகை என்றால் கேட்கவே வேண்டாம்... எத்தனை புது டிரெஸ் வாங்குவது என்பதில் துவங்கி எவ்வளவு ரூபாய்க்கு வெடி வாங்குவது என்பது வரை ஒரு மாதத்திற்கு முன்னாலிருந்தே பிளான் பண்ணி வீட்டில் நச்சரிக்கத் துவங்கி திட்டும் வாங்கிக் கட்டிக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக பட்டாசுகளின் சத்தம் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஆங்காங்கே கேட்கத் துவங்கி விடும்.
ஆனால் எனக்கென்னவோ இக்காலத்து சிறுவர்களிடம் அத்தகைய ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கிறதாகத் தோன்றவில்லை. இப்போது தீபாவளியை நெருங்க ஒரு மாதமிருக்கும் நிலையில் எந்த வெடிச் சத்தத்தையும் நான் கேட்கவில்லை. (கல்யாண மண்டபங்களிலும், பிணத்தின் முன்பும் வெடிப்பது இந்த வகையில் சேராது). ஏராளமான டி.வி. சேனல்கள் வந்து இயல்பான சிறு வயது ஆர்வங்கள் பலவற்றைப் பறித்துக் கொண்டு விட்டன என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
எனக்கு இப்படித் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி?
டிஸ்கி 1 பதிவுக்காக ஷொட்டுக் கொடுக்க விரும்புபவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
டிஸ்கி 2 நான் பதிவுகள் எழுதத் தூண்டுதலாக இருந்த மூவர்˜ நண்பர்கள் ஜாக்கி சேகர், சி.பி.செந்தில்குமார் மற்றும் அண்ணன் சேட்டைக்காரன். குட்ட விரும்புபவர்கள் இவர்களைக் குட்டவும். ஹி! ஹி!
|
|
Tweet | ||
வாழ்த்துக்கள் கணேஷ்! உங்களுக்கு முதல் பின்னூட்டமிடுவதையும், உங்களைப் பின்தொடரும் முதல் நபராக இருப்பதையும் பெருமையாகக் கருதுகிறேன். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரட்டும்! வாழ்த்துகள்!
ReplyDelete(சந்தடி சாக்குலே என்னை அண்ணனாக்கிட்டீங்களா? :-))) சரிதான்! )
என்னைப்போல் மொக்கைப்பதிவெல்லாம் போடாமல் நல்ல பதிவாக போடவும். ஹி ஹி
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே . உங்களின் சிறந்த எழுத்து திறமையால் பல இதயங்கள் சிறைபட்டுபோகட்டும் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
ReplyDeleteநூறாவது பதிவினைப் படித்து வாழ்த்தி விட்டு முதல் பதிவுக்கு வரும் முதல் ஆள் நான்! நல்ல தொடக்கம். மற்ற பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்....
ReplyDeleteஹாய் ண்ணா ...! வாழ்த்துக்கள் ...!
ReplyDelete//உங்களுக்கு நினைவு தெரிந்த நாள் எது என்பது உங்களுக்குத் தெரியுமா?//
அவ்வ்வ்வ்வ் !