Monday, August 4, 2014

அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 04, 2014
ன்னால் சுலபமாக எழுத வராத ஒன்று என்பதாலேயே கவிதைகளையும் கவிஞர்களையும் பிடிக்குமெனக்கு. நேரடியாகப் பொருளுணர்த்தும் கவிதைகள், மறைபொருளாய் நம்மை உணரச் செய்யும் கவிதைகள், எதுவும் புரிபடாது – அந்தக் காரணத்தாலேயே – சிறந்த கவிதைகளோ என எண்ண வைப்பவை, உரைநடையை அடுத்தடுத்த வரிகளாக உடைத்துப் போடுகிற கவிதைகள் (என்று சொல்லப்படுபவை) என்று எல்லா எல்லா ரகங்களையும் படித்திருக்கிற படியால் நல்ல கவிதைகளின் தொகுப்பு கையில் கிடைக்கையில், படித்து முடிக்கையில் மனம் நிறைந்து விடும். அத்தகையதொரு நிறைவை சமீபத்தில் எனக்கு வழங்கியது திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ‘அன்ன பட்சி’ கவிதை நூல்.

நானறிந்த வரையில் தேனக்காவே ஒரு அன்னப்பட்சிதான். சந்திக்கிற எல்லா மனிதர்களிடமும் ஏதாவது நல்ல விஷயத்தைக் கண்டெடுத்து அதை மட்டுமே போற்றுகிற அன்னப்பட்சி அவர். நெற்றிப் பொட்டில்லாத பெண் மாதிரி ஒற்று இல்லாமல் அன்ன பட்சி என்று தலைப்பு வைத்திருந்தது எனக்கு கொஞ்சம் உறுத்தல்தான். அதுசரி…. இப்பல்லாம் எந்தப் பொண்ணுய்யா நெற்றிப் பொட்டு வைக்குது? புருவப் பொட்டும். மூக்குப் பொட்டும் தானே வைக்குது என்கிறீர்களா…? அதுவும் சரிதேங். பட்… இங்க பேச வந்த விஷயம் கவிதைகளைப் பற்றி.



இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தன. அவற்றில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். (பின்ன... முழுசாக் குறிப்பிட்டா தேனக்காவோ, இல்லை அகநாழிகை வாசுதேவனோ என்னைக் ‘கவனிச்சுட’ மாட்டாங்களா என்ன...?) குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவதை ரசிக்காதவர் இருக்க முடியாது. கவிதை படைத்தால் குழந்தையின் பார்வையில் படைப்பது வழக்கம். இவர் பொம்மையின் பார்வையில் கவிதை தந்திருக்கிறார் இப்படி : கடைக்கு வந்தாய் | எல்லா பொம்மைகளிலும் | சொல்பேச்சு கேட்பது போலிருந்த | என்னைத்தான் விரும்பினாய் என்று துவங்கி கனவிலாவது விட்டு | விடுதலையாகும் எண்ணத்தோடு | குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாய் | தூங்கப் படைக்கப்படாத நான் | உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் | நீ எழுந்தவுடன் விளையாட என்று முடிக்கையில் நம் ரசனைப் புருவங்கள் உயரத்தான் செய்கின்றன.

இந்தத் தொகுப்பில் ‘கடவுளை நேசித்தல்’ என்றொரு கவிதை இருக்கிறது. அது எனக்கு மிகமிகப் பிடித்தமான கவிதை. சற்றே பெரியதாக இருப்பதால் இங்குக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் படித்தீர்களேயானால் ‘அட... நாமும் இப்படித்தானே’ என்று உங்களில் பெரும்பாலோர் சொல்வீர்கள். ‘சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்’ என்கிற கவிதையின் கருப்பொருளும் சொல்லாடலும் தந்த பிரமிப்பு இன்னும் என்னுள்.

இந்நூலில் இயற்கையை ரசிக்கிறார், செல்லப் பிராணியைப் போற்றுகிறார், விவசாயிக்காய் வருந்துகிறார், குழந்தையுடன் கொஞ்சுகிறார், காதலுக்காய் ஏங்குகிறார், படிப்பவருடன் பேசுகிறார், அறிவுரைக்கிறார்... இப்படி எல்லாப் பரிமாணங்களிலும் கவிதைக் குழந்தைகளை நிரப்பியிருக்கிறார் நூலாசிரியர். ஹாட்ஸ் ஆஃப் தேனக்கா..!

தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஊன்றிக் கவனித்து இயற்கையையும் மனிதர்களையும் நேசிப்பவர்கள் அழகிய கவிதைகளையும் நேசிக்கக் கூடியவர்களாகத்தான் நிச்சயம் இருப்பார்கள். நீங்கள் நல்ல ரசனையாளர். கவிதைகளை ரசிப்பவர் என்பதால் இந்த கவிதைத் தொகுப்பையும் நிச்சயம் ரசிப்பீர்கள். வாங்கி அல்லது (இரவல்) வாங்கி எவ்வாறேனும் படித்தீர்களெனில் நான் எழுதியவை எதுவும் மிகையில்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள். புத்தகம் விலை என்ன, எங்க கிடைக்கும்னு கேக்கறவங்க உடனே இங்க க்ளிக்கி தேனக்காவோட தளத்துக்கு ஓடுங்கோ....!

பி.கு.: நான் படித்து, எழுதாமல், நீண்ட நாளாக வெயிட்டிங்கில் இருந்த நமது பதிவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் விமர்சனம்/அறிமுகம் செய்யவிருக்கிறேன் இந்த மாதத்தில். அடுத்தடுத்த பகிர்வுகளுக்கிடையில் அவைகளும் வரும்.

---------------------------------------------------------------------------------------------------
இப்போது வாசகர்கூடத்தில் : தமிழ்பேசுகிறார் ஹாரிபாட்டர்
---------------------------------------------------------------------------------------------------


28 comments:

  1. பின் குறிப்பு பதிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் இப்போதெல்லாம் face book -ல் அதிக ஈடுபாடு போல் தெரிகிறது. இந்தக் கவிதைகள் வலைப்பூவில் வந்தவையா.?தேனம்மை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் அவர் பதிவுகள் வாசித்த நினைவு இல்லை. பத்திரிக்கைகளிலும் எழுதி இருக்கிறார் இல்லையா.?

    ReplyDelete
    Replies
    1. அடுத்தது ஒரு மொறுமொறு மிக்ஸர் போட்டுட்டு ராமலக்ஷ்மி மேடம் புத்தகம். அதுக்கப்பறம் ஒரு பதிவு போட்டுட்டு உங்க புத்தகம்னு ப்ளான் பண்ணிருக்கேன். நிச்சயம் வரும். தேனம்மை அக்கா வலையிலும் பத்திரிகைகளிலும் எழுதியவைதான் புத்தகத்தில் உள்ளன. மிக்க நன்றி ஐயா.

      Delete
    2. மிக்க நன்றி பாலசுப்ரமண்யம் சார். நால் வலையில்தான் முதலில் எழுத ஆரம்பித்தேன். :)


      நன்றி பாலா. :)

      Delete
  2. நல்லதொரு விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நூல் அறிமுகத்தை ரசித்த சுரேஷுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
    2. நன்றி தளிர் சுரேஷ் :)

      நன்றி பாலா :)

      Delete
  3. வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///வாங்கிப் படித்தது மட்டுமில்லாமல்,அழகாக விமர்சித்து(பொருளுரைத்து?),(இரவலாவது)வாங்கி படிக்கும் வண்ணம் ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நலம் நண்பரே. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
    2. நன்றி சுப்ரமணியம் யோகராசா சார். :)

      நன்றி பாலா :)

      Delete
  4. முதல் வரிகளைப் படித்ததும் எங்கே விடாமுயற்சியுடன் கவிதை எழுதியே தீர்த்தீர்களோவென்று நடுங்கிப் போனேன். சே சே நம்ம கணேஷாச்சேனு இப்பத்தான் நம்பிக்கை மீண்டும்..

    அன்னப்பட்சி படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசியுங்கள். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் அப்பா ஸார். மிக்க நன்றி.

      Delete
    2. நன்றி அப்பாதுரை சார். படிச்சிட்டு சொல்லுங்க. :)

      நன்றி பாலா. ;)

      Delete
  5. வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று. வாங்கி வைத்திருக்கிறேன். அடுத்த திருச்சி பயணத்தின் போது எடுத்து வர வேண்டும்.

    புத்தகங்கள் அறிமுகம் தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் லிஸ்டிலும் இருக்கிறது என்பது மகிழ்வு. படியுங்கள் அவசியம். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
    2. நன்றி வெங்கட். படிச்சிட்டு சொல்லுங்க. :)

      நன்றி பாலா :)

      Delete
  6. லிஸ்டில் சேர்த்தாகிவிட்டது! நிறைய இருக்கு சார்! எப்படியாவது தட்டி முட்டியாவது..நேரம் ஏற்படுத்திக் கொண்டு வாசிக்க வேண்டும்...

    அறிமுகத்திற்கு மிக்க நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன் சார். படிச்சிட்டு சொல்லுங்க.:)

      Delete
    2. அறிமுகத்தை ரசித்த உங்களுக்கு என் அன்பான நன்றி.

      Delete
  7. அன்பின் பாலகணேஷ் சகோ,

    எதிர்பார்க்கவே இல்லை. இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டீர்கள்.

    மிக அருமையான விமர்சனம். அன்னப்பட்சிக்கு உரிய அங்கீகாரம் அளித்துவிட்டீர்கள். ( ரெஜிஸ்டர்டு முத்திரை ) :)

    அடுத்து அடுத்து ராமலெக்ஷ்மி, பாலா சார் என்று விமர்சனம் போட்டு அசத்துங்க.

    அன்பும் நன்றியும் வாழ்த்துகளும் பாலா.

    அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன் அக்கா :)

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாளாகவே இப்ப அப்பன்னு சோம்பல் காரணமா வெய்ட்டிங்ல இருந்தது தேனக்கா. இனி ப்ளாக்லயும் நிறைய எழுதலாம்னு சோம்பலை உதறி உங்களை வெச்சு ‘அக்காச் சுழி’ போட்டு ஆரம்பிச்சுட்டேன். நன்றி சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. அருமையான விமர்சனம். தேனம்மையின் பல கவிதைகளை அவர் பக்கத்திலேயே வாசித்திருக்கிறேன். விமர்சனம் எழுத வேண்டிய புத்தகங்களில் ஒன்று. விரைவில் நானும் படித்த புத்தகங்களைப் பகிர்ந்திட ஆரம்பிக்கிறேன். அடைமழை குறித்த உங்கள் பார்வைக்குக் காத்திருக்கிறேன்:). நன்றி.

    வாழ்த்துகள் தேனம்மை!

    ReplyDelete
    Replies
    1. புத்தக விமர்சனம் என்ன.... எதை எழுதினாலும் அசத்துவது உங்க எழுத்து. கலக்குங்க மேம். படித்து ரசித்து தேனக்காவையும் வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  9. எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம் என்றாலும் உங்கள் விமர்சனம் படிக்கத்தூண்டுகிறது.... அன்னபட்சி அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன்.... ஆனால் சகோதரி தேனம்மை அக்காவிடம் பேச முடியவில்லை...

    நிச்சயம் படிக்கிறேன்... வாழ்த்துக்கள் தேனக்கா...

    ReplyDelete
    Replies
    1. நானுமேகூட ஒரு காலத்துல கவிதைன்னா காததூரம் ஓடினவன்தான் ஸ்.பை. இரண்டொரு புத்தகங்களைப் படித்து ரசித்தால் மனம் அதற்கு லயப்பட்டு விடும். முயன்று பார். மிக்க நன்றி.

      Delete
  10. சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  11. அருமையான விமர்சனம் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  12. ஆஹா! இப்போ நான் புத்தபுதுசுன்னு ப்லாக் கலரே மாறி இருக்கே! அட்டகாசம் ன லுக் அண்ட் FEEL! அறிமுகமும் அருமை:)

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube