நண்பர்கள் தினத்தன்று சென்னைக்கு வந்திருந்த, விமர்சன உலகம் என்ற தளத்தில் எழுதிவரும் மாக்னேஷ்-ஐ நான், சீனு, ஸ்.பை. மூவரும் சந்திக்க நடேசன் பார்க் சென்றோம். பார்க் வாசலை நாங்கள் அடைந்த நேரம் சிவப்பாக ‘மொபைல் போலீஸ் ஸ்டேஷன்’ என்று பெயர் பொறித்த பெரிய வேன் ஒன்று பார்க் வாசலில் வந்து நின்றது. ‘மொபைல் கோர்ட்’ பாத்திருக்கிறோம்... இதென்ன மொபைல் போலீஸ் ஸ்டேஷன் என்கிற வியப்புடன் பார்த்தோம். “சரிதான்... ரோட்ல பிடிக்கறவங்களை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போறதுக்குக் கூட பொறுமையில்லாம வேன்லயே வெச்சு வெளுக்கப் போறாங்களா?”என்றேன் நான். பார்க்கினுள் சென்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த சமயம்... அந்த போலீஸ் வேனிலிருந்து மெகாபோன் வைத்து பேசுவது மாதிரி சத்தம் கேட்க, பொதுஜனங்கள் நிறையப் பேர் வேனின் அருகில் சென்று நிற்பதையும் பார்க்க முடிந்தது. வாசலுக்கு வந்தோம்.
அட.. வேனின் பின்புறத்தில் ஒரு ஸ்கிரீன் கட்டி, ப்ரொஜக்டர் வைத்து படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொலை மற்றும் கொள்ளைக் கேஸ் ஹிஸ்டரிகள் மூன்றை குறும்படமாக எடுத்து, எப்படியெல்லாம் குற்றவாளிகளுக்கு நம் இயல்பான பேச்சின் மூலம் க்ளூ கொடுக்கிறோம், எப்படியெல்லாம் தனியே இருக்கும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே நடிகர் நாஸர் தலைகாட்டி அட்வைஸிக் கொண்டிருந்தார்.
டாகுமெண்ட் படம்தானே என்று ஏனோதானோ என்று எடுக்காமல் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் பார்ப்பது போன்ற உணர்வு வரும்படி சிரத்தையாக எடுத்திருந்தார்கள் குறும்படத்தை. ஒரு பெண் போலீஸ் அதிகாரி படத்தைப் பற்றிய கருத்தை எழுதித் தரும்படி லெட்ஜர் ஒன்றை நீட்டினார். நானும் சீனுவும் எங்கள் கருத்தைப் பதிந்தோம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லப்படும் வாசகத்தை மெய்ப்பிக்கும் விதமாக மக்களுடன் நெருங்கி வந்து காவல்துறை செய்திருக்கும் இந்த ஏற்பாடு எங்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
====================================================
“நான் இன்று கதை சொல்ல வரவில்லை. தமிழில் உள்ள சிறுகதை இலக்கியத்தைப் பற்றிச் சொல்லத்தான் வந்திருக்கிறேன். அதற்கு பூர்வ பீடிகையாக சிறுகதை என்றால் என்ன என்பதைச் சிறிது கவனித்துக் கொள்வோம். சிறுகதையின் முக்கிய அம்சம், அதில் ஒரேயொரு சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்தச் சம்பவத்தை வெறும் வளர்த்தல் இல்லாமல், வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக் கொண்டு போனால் அது நாலு வரியாக இருந்தாலும் சிறுகதை தான்; நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்....”
-ஆனந்த விகடன் 1939ம் ஆண்டு இதழில் இப்படிச் சொல்பவர் கல்கி அவர்கள்.
====================================================
ஆரம்ப தினங்களில் பக்கங்களை ப்ளாக் எடுத்து ஓட்டி புத்தகம் தயாராகும். பின்னாளில் ஈயத்தில் எழுத்துக்களைக் கோர்த்து கம்போஸ் செய்து அச்சாகின. அதன்பின் கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுட் எடுத்து, அதை வெட்டி ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பும் நிலை. இப்யோதைய நவீன கம்ப்யூட்டர்களினால் வெட்டி ஒட்டுகிற வேலை இல்லாமல் மொத்தப் பக்கங்களும் கம்ப்யூட்டரிலேயே வடிவநைத்து ப்ரிண்டிங்கிற்கு அனுப்பிவிட முடிகிறது. இத்தனை முன்னேறிய நிலையில் புத்தகங்கள் தயாராகி நம்மை வந்தடைந்து கொண்டிருக்க இதன் அடுத்த பரிணாமம் ஒன்றும் தற்போது அரங்கேறியுள்ளது.
புத்தகத்தைத் தயாரித்து அதை அச்சிடாமல் ஈபுக் என்ற பெயரில் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் படிக்கும் விதமாக எளிய கட்டணத்தில் வழங்குவது என்ற முறைதான் அது. பேப்பர் மிச்சம், அச்சிடும் செலவு மிச்சம் என்பதால் பெரிய பெரிய புத்தகமாக இருந்தாலும் குறைந்த விலையில் தரமுடியும் இந்த முறையில். அப்படி அரவிந்த் சச்சிதானந்தம் என்பவர் எழுதிய ‘தட்பம் தவிர்’ என்ற க்ரைம் நாவலை சமீபத்தில் வாங்கி (மொபைலிலேயே) படித்தேன். கொலை, விசாரணை, மர்மம், அடுத்த கொலை என்று விறுவிறுப்பாகக் கொண்டு சென்று ஏமாற்றாத முடிவுடன் அமைந்த அந்தக் கதையை ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். இங்கே க்ளிக்கி நீங்களும் வாங்கிப் படிக்கலாம். ஹாட்ஸ் ஆஃப் டு மிஸ்டர் அரவிந்த் சச்சிதானந்தம். இதைப் படிச்சதும் நாமளும் இப்படி ஈ புத்தகம் தயாரிச்சு வெளியிட்டா என்னன்னு ஆசை வந்துடுச்சு. முதாலாவதா சீனு வைத்த காதல் கடிதப் போட்டிக்கு வந்த சுவாரஸ்ய கடிதங்களைத் தொகுத்து பளிச்சென்று கலர் ஈ புத்தகமாக வெளியிடலாம் என்று எனக்கு ஆசை. சீனுவும். அப்பாதுரை ஸாரும் பச்சைக்கொடி காட்டினால் தயாராகிடும்.
====================================================
சீனாவின் நான்ஜிங் நகரத்தில் இருக்கிறது அழுகாச்சி கடை. அங்கே போனால் நீங்கள் உங்கள் பிரச்னைகளை நினைத்து உங்கள் இஷ்டத்துக்கு கத்திக் கதறி அழுதுவிட்டு வரலாம். கையில் கிடைத்ததை தூக்கிப் போட்டு உடைத்து உங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தலாம். இதற்காக ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் வசூலிக்கிறார்கள். அழுகாச்சி கடைகளைக் கண்டுபிடித்தவர் லுவோ ஜன் என்பவர். இப்போது இந்த ஐடியா சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. ஆங்காங்கே ஓரிரு அழுகாச்சி கடைகள் இதேபோல் வந்து விட்டன. லுவோ ஜன் அழுகாச்சி கடை ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது. இப்போது நல்ல காசு. (அதனால அவர் மட்டும் அழுகாச்சி இல்லாம சிரிச்சுட்டிருப்பாரு போலருக்கு....)
-ப்ரஸன்னா எழுதிய ‘பணமே ஜெயம்’ நூலிலிருந்து...
|
|
Tweet | ||
மொறு மொறு மிக்ஸர் அருமை
ReplyDeleteஈ புக் எதிர்காலத்தை ஆக்கிரமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
இருப்பினும் கையில் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிப்பதில் இருக்கும் சுகமே தனிதான்
நன்றி நண்பரே
நானும் உங்க கட்சிதான். ஆனாலும் மொபைலில் ஈ புக் படிக்கவும் பழகிட்டேன் நண்பரே. மிக்க நன்றி.
Deleteதம 2
ReplyDelete// ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போறதுக்குக் கூட பொறுமையில்லாம வேன்லயே வெச்சு வெளுக்கப் போறாங்களா?”//
ReplyDeleteஹா....ஹா...ஹா...
குறும்படம்...
ஆஹா.... இவிங்களும் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா..
ஆனால் தீம் நல்ல முயற்சி. பலபேருக்கு இது தெரிந்திருப்பதில்லை.
தட்பம் தவிர் பற்றி முகநூலிலேயே வாசித்தேன்.
அழுகாச்சிக் கடை.... அட! அண்ணாச்சி கடையை விட லாபம் கிடைக்கும் போலேருக்கே... எப்படி புதுசு புதுசா ஐடியா வருது மக்களுக்கு!
ஆமா ஸ்ரீ. வீட்ல இருக்கற பெண்கள் நிறையப் பேர் தங்களை அறியாம பல தகவல்களை கொட்டிடறாங்க. அதனால பார்க் மாதிரி நிறையப் பேர் வர்ற இடங்கள்ல காட்டறது நிச்சயம் விழிப்புணர்வு தரும். மிக்க நன்றி.
Delete//ஒரு பெண் போலீஸ் அதிகாரி படத்தைப் பற்றிய கருத்தை எழுதித் தரும்படி லெட்ஜர் ஒன்றை நீட்டினார். நானும் சீனுவும் எங்கள் கருத்தைப் பதிந்தோம்.///
ReplyDeleteபதிவுலக பிரபலம் என்பதால் உங்கள் ஆட்டோகிராபை இப்படி எழுதி வாங்கி இருக்கலாம். இல்லை நீங்க எந்த சீனு அந்த ஆபிஸர் வீட்டு பொண்ணுக்கு காதல் கடிதம் பெயர் போடாமல் எழுதி இருக்கலாம் அதை கண்டு பிடிக்க இப்படி எழுதி வாங்கி இருக்கலாம்...
அந்த லெட்ஜர்ல கருத்தோட சேர்த்து பேரு, வீட்டு அட்ரஸ், மொபைல் நம்பரு, பிறந்த தேதி எல்லாத் தகவலும் கேட்ருந்தாங்க. குடுத்துட்டமே. அவ்வ்வ்வ்வ்.
Deletephoto id கேட்டாலொழிய எப்ப யார் கேட்டாலும் கொடுக்குறதுக்காகவே நாலஞ்சு பெயர் முகவரி வச்சிருக்கேன். நீங்களும் அப்படித்தானே?
Deleteவணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///மொறு,மொறு மிக்சர் மொறு,மொறு என்றிருந்தது.ஈ-புக் நல்லது தான்.இந்த அவசர உலகில் புக் ஸ்டாலுக்கெல்லாம் போய்,தேடி...........எழுதுபவர்களுக்கும் நடை மிச்சம்.இந்த முறை(ஈ- புக்)பலரிடம் சென்று சேரக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.
ReplyDeleteமொபைல் அல்லது கம்ப்யூட்டரில் படிக்கப் பழகி விட்டவர்களுக்கு இது மிகப் பயனுள்ள விஷயம் தான் நண்பரே. வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
Deleteமிக்ஸர் கர கர மொறு மொறு சூப்பர் சுவை சகோ :)
ReplyDeleteநீங்கள் ரசித்ததில் மிக மகிழ்வு கொண்டு என் இதயம் நிறை நன்றிக்கா.
Deleteபோலீஸ் உங்கள் நண்பன் என்பது போல் நம்மிடம் கருத்துக்களும் தெரிந்து கொள்கிறார்களா... நல்ல விஷயம்.
ReplyDeleteஈ புக் இதுவரை படித்ததில்லை. நிதானமாக புத்தகத்தை புரட்டுவது போல் இருக்குமா என்று தெரியவில்லையே...
அழுகாச்சி கடை!!!! என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க....:)
மிக்சர் மிகவும் சுவையாக இருந்தது.
பெரிய திரை கொண்ட ஆண்டராய்ட் போன் இருந்துச்சுன்னா மொபைல்ல படிக்கறது சுகமா இருக்கும் தோழி. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteகாவல் துறையின் இந்த முயற்ச்சி மிகவும் நல்ல விசயம்னா... இத்துடன் நானும் ஒரு விசயம் சொல்லனும் சமீபத்துல நான் பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பித்திருந்தேன், அதில் காவல் துறை விசாரணை வந்த போது இவர்களுக்கு எத்தனை அழுக வேண்டி இருக்குமோ என்ற எண்ணத்தில் அழுது கொண்டே சென்ற எங்களை நம் காவல் துறை ஒற்றை ர்ரூபாய் கூட வாங்காமல் சிரித்து கொண்டே வெளியில் அனுப்பி மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது.. சரி நம் ஊரில் மட்டும்தான் காவல் நண்பர்கள் மாறி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால் கோவை நகரில் என் சித்தி பையனுக்கும் இதுவே நடந்தது அவனிடமும் ஒற்றை பைசா வாங்க வில்லை... நாடு நிஜமாவே மாறிட்டு வருதோ....
ReplyDeleteஅப்புறம் ஏ-புக். இது குறித்து திண்டுக்கல் தனபாலன் அண்ணாவும் ஒரு பதிவு எழுதியிருந்தார் அல்லவா... ஆனால் என்னதான் மொபைலில் கம்பியூட்டரில் படித்தாலும் புத்தகங்களை தொட்டுப் பார்த்து வாசனை நுகர்ந்து படிப்பதில் கிடைக்கும் இன்பம் அதில் கிடைப்பது சந்தேகமே... இல்லையா?
புத்தகங்களைக் கையில் புரட்டிப் படிப்பது தனி சுகம்தான். அது மொபைலில் படிப்பதில் வராது ப்ரியா. ஆனாலும் நீண்ட பயணங்களில் பக்கத்தில் இருப்பவர் அறுக்காம இருக்கவாவது மொபைல்ல படிக்கலாம். எனக்கு மொபைல்ல படிக்கறதும் பிடிச்சிருக்கு. காவல்துறையின் நடவடிக்கையை நீ பாராட்டியிருப்பது மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா.
Deleteஇந்த அழுகாச்சிக் கடை ஐடியா முன்பே வந்திருக்கிறது என்று நினைக்கிறேன் ஜெருசலேமில் wailing wall என்று இருக்கிறதாமே . அங்கே போய் காசேதும் கொடுக்காமலேயே அழலாம் என்று படித்த நினைவு. 1939-ல் கல்கியின் பார்வையில் சிறுகதைகு இலட்சணம் அது என்று அவர் கூறி இருக்கிறார்.மாறுபடலாம் இல்லையா.? இப்போதே புத்தகம் வாசிப்போர் எண்ணிக்கை குறைகிறதுஇணையத்தில் புத்தகம் என்றால் சுத்தம் ......! வருவோர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்
ReplyDeleteகல்கி சொல்லியிருக்கும் சிறுகதைக்கான இலக்கணத்தில் எனக்கு உடன்பாடில்லை ஸார். அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் பகிர்ந்தேன். வெய்லிங் வால் பற்றி இப்பதான் கேள்விப்படறேன். மிக்க நன்றி.
DeleteSir, ungalai eppo meet panna porennu theriyalai. Oru naal athey natesn parkkil neengal, School Paiyan, Seenu, Kovai Aavi avargalodu meet pannanum......mmmmmmmm
ReplyDeleteஎனக்கும் சந்திக்க வேண்டும் என்கிற ஆசை அபரிமிதமாக உண்டு சுரேஷ். பெங்களூரு வரும் வேலை ஒன்று என் கையருகில் வந்து தட்டிப் போய் விட்டது என்பதில் மிக ஏமாற்றமானேன். அந்த இனிய தினத்தை எதிர்பார்த்து ஆவலுடன் என் காத்திருப்பும். ஊக்கம் தந்த உங்கள் கருத்துக்கு உளம் கனிந்த நன்றி.
Deleteதற்போது சென்னையின் பூங்காக்களில் பயணித்துக்கொண்டிருக்கும் இம்முயற்சி, தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பயணித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம்தான் தோண்றியது.
ReplyDeleteஅமரர் கல்கியின் வார்த்தைகளை பகிர்ந்தமைக்கு, நன்றி அண்ணே!!!
தமிழில் , E-BOOK வகையில் வெளியிடுதலை ஊக்கப்படுத்தினால் இன்னும் பல புதியவர்களின் முயற்சிகளும் திறமைகளும் வெளிப்படும்.அதை பதிவினூடே தெரிவித்தமைக்கும் நன்றி அண்ணா!!!
அப்புறம் போட்டோ எடுத்த 'திடங்கொண்டு போராடு' சிந்தனை சிகரம் சீனு அண்ணனுக்கும் நன்றி!!!
மிக்ஸரை ரசித்த உனக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteவிழிப்புணர்வுக் குறும்படங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது நல்ல முயற்சி.
ReplyDeleteஇதையேதான் நானும் எழுதி கையொப்பமிட்டுத் தந்தேன் மேம். உங்கள் கருத்தும் ஒத்துப் போவதில் மகிழ்வுடன் என் நன்றி.
Deleteபோலீஸ் மக்களின் நண்பனா? சென்னை இத்தனை மாறிவிட்டதா?! படிக்க நிறைவாக இருக்கிறது.
ReplyDeleteகாக எழுதினவங்க இல்லே பகொ காட்டணும்? இருந்தாலும் என்னைக் கேட்டீங்கனு ஒரே பெருமையில ரெண்டு கைலயும் பச்சை கொடி. இந்தாங்க.
எனக்கும் நிறைவு தந்த விஷயம் ஸார் அது. நான் குறிப்பிட்ட முயற்சிக்கு எனக்கு முக்கியமானவங்க நீங்களும் சீனுவும். உங்க க்ரீன் சிக்னல் கிடைச்சதுல மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. (இந்த சீனுப்பயல இன்னும் காணமே...)
Deleteமொறு மொறு மிக்ஸர் - 26 இல்
ReplyDeleteகாரம் சாரம் நன்று
தொடருங்கள்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. பா புனைவதா...? நானா..? ஏதோ கொஞ்சம் நஞ்சம் வரும். ஆனா போட்டிக்கு வர்ற அளவுக்கு...? சான்ஸே இல்லங்க. அழைத்ததற்கு நன்றி.
Deleteஅழுகாச்சி கடை புது விஷயம்! ஈ புக் நிறைய டவுன்லோட் பண்ணி வெச்சும் படிக்கதோணமாட்டேங்குது! போலீஸ் நண்பனாக நெருங்கி வருவது ஆச்சர்யம்தான்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமுதல்ல அப்படித்தான் இருக்கும் சுரேஷ். படிக்க ஆரம்பிச்சுட்டிங்கன்னா அது நல்லாப் பழகிரும். பகிர்வினை ரசித்து நன்றி சொன்ன உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteபோலீஸ் இவ்வளவு முன்னேறிட்டாங்களா....அட....
ReplyDeleteகல்கியின் சிறுகதை விளக்கம் நல்ல ஒரு தகவல்...
அழுகாச்சி கடை மேபி சீனாவுக்கு வேணுமா இருக்கலாம் ஆனா நம்ம ஊர்லதான் நிறைய பெண்கள் பாத்ரூம்ல போயி அழுதுட்டு வர்ரோம் சொல்லிக் கேட்டுருக்கமே....இல்லனா கோயில்ல கூட நிறைய பேரு அழுகறத பாத்துருக்கோம்....
சீனு பச்சைக் கொடு காட்டுங்க ப்ளீஸ்
அனைத்தையும் ரசித்த உங்களுக்கு என் அன்பான நன்றி.
Deleteஅண்ணா! நீங்க நண்பர்களோட ஒரு இடத்துக்கு போன போலீசா இருந்தாகூட வந்து படம் காட்டுறாங்க பாருங்க! கிரேட் ணா!
ReplyDeleteஅழுவாச்சி கடை.....எப்டிலாம் கல்லா கட்டுராங்கப்பா!!
ரசித்துப் படித்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஇபுத்தகம் நல்ல முயற்சிதான். ஆனால் என்னவோ கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு வாசிக்கும் நிறைவு வரமாட்டேன் என்கிறது. காவல்துறையின் செயல் பாராட்டப்படவேண்டியது. அழுகாச்சி கடை இன்றைய அவசர உலகில் மன அழுத்தம் அதிகம் வரும் நிலையில் தேவையான ஒன்றுதான். பகிர்ந்த அனைத்துக்குமாய் நன்றி கணேஷ்.
ReplyDeleteஎனக்கு ரெண்டு வாசிப்புமே இப்ப பழகிட்டுது கீதா. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Delete