Monday, September 23, 2013

சரிதாவும், நம்பியாரும்!

Posted by பால கணேஷ் Monday, September 23, 2013
பொதுவாக சரிதா விருப்பங்கள் அதிகம் இல்லாதவள். ஆனால் சில சமயங்களில் அவளுக்கு ஏற்படும் விருப்பங்கள் விபரீதமாகி, என் பேங்க் பேலன்ஸுக்கு உலை வைப்பது வழக்கம். அப்படி என்னதான்யா அவள் விருப்பப்பட்டு அடம் பிடித்துவிடப் போகிறாள் என்றுதானே நினைக்கிறீர்கள்..? சென்ற வாரம் நடந்த (சோகக்)கதையைக் கேளுங்கள்... புரிந்துவிடும்!

‘‘ஹ
ப்பா... என்னா வெயில்... என்னா வெயில்...’’ என்று முனகியபடி ஃபேனைச் சுழலவிட்டு அதன் கீழிருந்த ஃசோபாவில் சரிந்தேன். ‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா?’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது. நான் பணிந்தால் எகிறுவதும், எகிறினால் பணிவதும் அவள் வழக்கம் என்பதால் ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்?’’ என்றாள் மெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள்.

‘‘அடராமா... என்னிக்கு நான் சொல்ற விஷயத்தை நீங்க சரியாப் புரிஞ்சுட்டிருக்கீங்க இப்ப புரியறதுக்கு? ஒரே வெக்கையா இருக்கே... ஒரு ஏ.சி. மெஷின் வாங்கிப் போடுங்கன்னுதானே கேட்டுட்டிருக்கேன். நம்ம அக்கம் பக்கத்து வீட்ல எல்லார்ட்டயும் இருக்கு தெரியுமா? நம்ம வாசனுக்குத் (அவள் தம்பி) தெரிஞ்ச கடை ஒண்ணு இருக்காம். டிஸ்கவுண்ட்ல வாங்கித் தர்றேன்... நமக்கு நாலாயிரம் மிச்சமாகும்ங்கறான்...’’

‘‘வாசனா...?  அவன் எனக்கு நாலாயிரம் மிச்சம் பண்ணினா, அதுக்குப் பின்னால நாப்பதாயிரத்துக்குச் செலவு வெச்சிருப்பானே...’’ என்றேன். ‘‘ஹும்... அவனானா அக்கா, அத்திம்பேர்னு உசிர விடறான். உங்களுக்கானா அவனைக் கண்டாலே இளக்காரம்தான். எங்க வீட்டு மனுஷாளை எப்ப மதிச்சிருக்கீங்க நீங்க...’’ என்று ஆரம்பித்தாள் கடூரமான குரலில். வேறென்ன... ‘‘சரிம்மா... ஆஃபீஸ்ல என்னை வந்து பாக்கச் சொல்லு. செக் தர்றேன். உடனே ஒண்ணு வாங்கிரலாம்’’ என்று (வழக்கம் போல) நான் சொல்வதில் முடிந்தது அது.

‘‘என்னங்க... நானும் வாசனுமாப் போயி ஏ.ஸி. மெஷின் வாங்கிட்டு வந்துட்டோம். அதை ஃபிட் பண்றதுக்கு ஆளுங்களை அனுப்பறேன்னாங்க. கொஞ்சம் பர்மிஷன் போட்டுட்டு உடனே வாங்களேன்...’’ என்று செல்போனில் பேசிய சரிதாவின் குரலில்தான் எத்தனை இனிமை! உடனே கிளம்பி வந்த எனக்கு, என் வீட்டில்தான் நுழைகிறேனா என்று சந்தேகமே வந்துவிட்டது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் வரவழைத்து தான் ஏ.ஸி. மெஷின் வாங்கிவிட்ட பிரபாவத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். ஏதோ பெண் பார்க்க வந்தவர்கள் மாதிரி அவர்களுக்கு பக்கோடா, (நெய் மணக்க) கேசரி என்று உபசாரம் வேறு. சரிதான்... இந்த யானையை வாங்கியதால் இன்னும் எத்தனை அங்குசங்களுக்குச் செலவு பண்ணப் போகிறேனோ என்று (அவற்றைச் சாப்பிடாமலேயே) எனக்கு வயிற்றைக் கலக்கியது.

ஏ.ஸி. மெஷின் பொருத்தித் தருவதற்காக இரண்டு மெக்கானிக்குகள் வந்தனர். ஹாலில் எங்கே மாட்ட வேண்டுமென்று சரிதா சொல்ல, வேலை செய்து கொண்டிருந்த அவர்களிடம் ஏ.ஸி. மெஷின் என்ன லெவல் கூலிங்கில் வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்துத்தானா சரிதா அக்கம்பக்கத்தினரை அனுப்பிவிட்டு உள்நுழைய வேண்டும்? ‘‘டேய் வாசா... இவங்க கிட்ட ஏ.ஸி. மெஷின் பத்தின எல்லா விஷயத்தையும் நல்லாக் கேட்டுக்கோடா... உங்கத்திம்பேருக்கு அவ்வளவு சமத்து(?) பத்தாது’’ என்று உரக்க அவள் சொல்ல, அந்த ஏ.ஸி. மெக்கானிக் என்னை காக்காய் கொண்டு வந்து போட்ட வஸ்துவைப் போலப் பார்த்தான். அவ்வ்வ்வ்வ்! என்று புலம்பியபடி இடத்தைக் காலி செய்தேன்.

சற்று நேரத்தில் அவர்கள் சென்றதும், என்னமோ காஃன்பரன்ஸில் நலத்திட்டங்களை திறக்கும் முதல்வர் போல வாசன் பெருமையாய் ரிமோட்டைக் கையில் ஏந்தி ஏ.ஸி.யை ஆன் செய்ய, சரிதா கைதட்டினாள். அப்போது வாசனின் செல்ஃபோன் ‘‘ஊதா கலரு ரிப்பன்’’ என்று உரக்க அலறியது. ‘‘டேய், அவருக்கு இப்படி கண்ட பாட்டையும் ரிங்டோனா கத்தவிடறது பிடிக்காதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். வீட்ல வந்தா செல்லை ‘மன்மோகன்’ மோடில போட்டுத் தொலையேண்டா’’ என்று சரிதா (அவனையும்) திட்ட, அவன் தன் அப்பா அம்மாவிடம் ஏ.ஸி. வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அப்புறமென்ன...

வேறொரு வேலையாக வெளியில் சென்ற நான் இரவு வீடு திரும்பியபோது ஏ.ஸி. மெஷினிலிருந்து இரண்டு ரம்பங்கள் உரசிக் கொள்கிற தினுசில் ‘கொர்’ என்று பெருத்த சப்தம் வந்து கொண்டிருக்க... மிஷினுக்குக் கீழே வெள்ளையாய் ஒரு மூட்டை தெரிந்தது. ‘‘சரிதாம்­மா... ஏ.ஸி. மெஷினுக்கு என்னமோ ஆய்டுச்சு. வினோதமா சத்தம் போடுது பாரு’’ என்று பயந்து சத்தமிட்டபடி அருகில் சென்று பார்த்தால்... அடக்கடவுளே... மரவட்டை போல உடலைச் சுருக்கிக் கொண்டு படுத்திருந்த சரிதாவின் அப்பாவின் வெள்ளை பனியன், வேஷ்டிதான் எனக்கு மூட்டை மாதிரி தெரிந்திருக்கிறது. அந்த ரம்ப சத்தம் அவரிடமிருந்தல்லவா வந்து கொண்டிருக்கிறது! இலவச இணைப்பாக என் மாமியாரின் குரலும் சமையலறையிலிருந்து என்னை வரவேற்றது!

அன்னிக்கு ஆரம்பிச்சதுங்க... அடு¢த்து வந்த வாரம் முழுக்க தான் ஏ.ஸி. வாங்கி விட்ட பெருமை(!)யை விதவிதமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் சரிதா. உதாரணத்துக்கு... செல்லில் வந்த காலை அட்டெண்ட் பண்ணினால், ‘‘அதுவாடி... புதுசா ஏ.ஸி. போட்ருக்கோம்ல. அதனால ரிங் அடிச்ச சத்தமே காதுல விழல...’’ என்று ஆரம்பிப்பதும், இவளாகவே கால் செய்து ‘‘இப்பல்லாம் ஏ.ஸி.யிலயே புழங்கிட்டு, நான் ஏ.ஸி.யில சினிமா பாக்கக் கூட முடிய மாட்டேங்கறது’’ என்று செல் பேச்சை முடிப்பதும் ஆக, சரிதா டமாரம் பலமாக இரைய ஆரம்பித்தது-... ‘இவளுக்கு ஏன்டா செல்ஃபோன் வாங்கித் தந்தோம்’ என்று நான் சலித்துக் கொள்ளுமளவுக்கு. (செல்போன் வாங்கிப் பட்ட அவஸ்தை தனிக்கதை).

‘‘ஏங்க... ஏ.ஸி. ரூம்ல இவ்ளோ பெரிய பீரோ இருந்தா இடைஞ்சலா இருக்கு. ரூம் நல்லாக் கூல் ஆக மாட்டேங்கறது. இதை நகத்தி முன் ரூம்ல போடுங்க...’’ என்று ஆரம்பித்து அடுத்த ஒரு வாரம் என்னை முதுகு அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். போல வளைந்து போகுமளவுக்கு வீட்டை ரீஅரேன்ஜ் பண்ணுகிறேன் பேர்வழியென்று ‘ட்ரில்’ வாங்கினாள். அவளுக்கு ஏ.ஸி. மெஷின் கூலாக இருக்க, எனக்குள்ளே எழுந்த உஷ்ணத்தில் அது ‘எம்.என்.நம்பியார்’ மாதிரி தெரிய ஆரம்பித்தது எனக்கு.

அந்த மாதக் கடைசியில் கணக்கு வழக்குப் பார்த்தபோது கன்ஃபர்ம்டாகத் தெரிந்து போனது அது நம்பியார்தானென்று! சரிதா செல்போனில் அனைவரிடமும் தன் ஏ.ஸி. பெருமை(!)  பேசியதில் செல்ஃபோன் பில் இரண்டு மடங்காகி விட்டிருந்தது. ஏ.ஸி.யை தரிசிக்க(?) வந்த அவள் தோழிகள், உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் எல்லாருக்கும் தாராளமாக டிபன், ஸ்வீட் செய்து வழங்கியதில் மளிகை பில் இரண்டு மடங்காகி, என்னை விழி பிதுங்க விட்டிருந்தது. அவள் குடும்பம் இடத்தை அடைத்துக் கொண்டதே என்று ஏ.ஸி. ஹாலை அவர்களுக்கு வழங்கிவிட்டு, நான் முன் ரூமில் ஃபேனில் படுத்துக் கொண்டது தப்பாயிற்று. ÔÔஏ.ஸி. ரூம்ல இருக்கறச்ச யாராவது கதவு தட்டினாலும் கேக்கறதில்ல. காலம்பற பால்காரன் பால் போடறதுகூடத் தெரிய மாட்டேங்கறது. நீங்க முன் ரூம்லயே இருந்தா இதெல்லாம் கரெக்டாப் பாத்துக்கறீங்க... இதையே மெயின்டைன் பண்ணுங்களேன்ÕÕ என்று கூலாக அவள் உத்தரவிட... அவ்வ்வ்வ்வ! ஏ.ஸி. எனக்கு எட்டாக்கனி ஐயா...!

இப்போது புரிகிறதா உங்களுக்கு... சரிதா புதிதாய் எதன் மேலாவது ஆசை வைத்தால் நான் ஏன் அலறுகிறேன் என்பது...! அதுசரி... உங்கள் வீட்டில் ‘நம்பியார்’ உண்டா? உங்க அனுபவங்களையும் சொல்லுங்களேன், ப்ளீஸ்...!

61 comments:

  1. இவ்வளவு சிரமப்பட்டாலும் a/c எட்டாக்கனியாகி விட்டதே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கோ... அதானே இங்க சோகக் கதையாயிருச்சு... ஹி... ஹி...!

      Delete
  2. எம்.என்.நம்பியார் பரவாயில்லை... பல இடங்களில் பி.எஸ். வீரப்பா...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அப்படிக் காட்சி தருதா? சூப்பருங்கோ... மிக்க நன்றி!

      Delete
  3. நானும் இதே வஸ்துவை ஐந்து மாதங்களுக்கு முன் வாங்கிப்போட்டேன் அதற்குப்பின், கரண்ட் பில் 4000 ரூபாய் இரண்டு மாதஙளுக்கு வருகிறது...... அவ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்.பை.யைக் கூட என்னைய மாதிரியே அழ வெச்சிருச்சே இந்த வில்லன்...! மிக்க நன்றி ஸ்.பை.!

      Delete
  4. சார் பேசாம முன்னாடி ரூம் லயும் A/C போற்றுங்கலேன்... நீங்கலும் A/Cல இருந்த மாறி இருக்கும்... :P

    ReplyDelete
    Replies
    1. ஒரு நம்பியாருக்கே மூச்சுத் திணறிட்டிருக்குதும்மா ப்ரியா... இன்னொண்ணா... அவ்வ்வ்வ்! மிக்க நன்றிம்மா!

      Delete
  5. எல்லோருடைய சோகக் கதையையும் கேட்டு
    ஆறுதல் அடைய நினைக்கும் உங்களை
    எனக்கு ரொம்பப் பிடித்துப்போயிற்று
    (சேம் பிளட்தான் காரணம் எனச் சொல்லவும் வேண்டுமோ )

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ரமணி ஸாருக்கும் ஸேம் பிளட்ங்கறதக் கேக்கவே இதமா இருக்குதே... மிக்க நன்றி ஸார்!

      Delete
  6. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’

    ‘மன்மோகன்’ மோடில போட்டுத் தொலையேண்டா’’

    யண்ணா..எப்டிண்ணா இப்டில்லாம் யோசிக்கறீங்க.ரொம்ப ரசித்து வாசித்தேன்..இப்படி அடிக்கடி உங்கள் வீட்டுக்கு நம்பியார் வரட்டுமாக.அதை வைத்து கணேஷண்ணா நிறைய பதிவெழுதி எங்களை எல்லாம் சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தட்டுமாக!

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி நுணுகி ரசிச்சு மகிழ்ந்த தங்கையைப் பாராட்டலாம்னா, அதையே ரிப்பீட்டு பண்ணி கை தட்டுறாரு தம்பி ஜீவன்...! ரெண்டு பேத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  7. ஹா.. ஹா.. இப்படியெல்லாம் நகைச்சுவையாய் உங்களால்தான் எழுத முடியும் ஒவ்வொரு வார்த்தையும் ரசிச்சேன்.
    //(அவற்றைச் சாப்பிடாமலேயே) எனக்கு வயிற்றைக் கலக்கியது.//...

    //வீட்ல வந்தா செல்லை ‘மன்மோகன்’ மோடில போட்டுத் தொலையேண்டா’’ என்று //....

    //அடக்கடவுளே... மரவட்டை போல உடலைச் சுருக்கிக் கொண்டு படுத்திருந்த
    சரிதாவின் அப்பாவின் வெள்ளை பனியன், வேஷ்டிதான் எனக்கு மூட்டை மாதிரி தெரிந்திருக்கிறது//...

    நல்ல காமெடி போங்க..

    எங்க வீட்ல ஏ.ஸி இருக்குது அவ்வளவுதான். மத்தபடி அது ஓடுதான்னுல்லாம் கேக்கப்படாது...! அதுக்கு வில்லனா எங்க ஆத்துக்கார் இருக்கார்.. அப்பப்ப ஈ.பி மீட்டர் ரீடிங் செக் பண்ணி .. அதற்கு ஆப்பு(off) வைக்க..! மனுஷன் வெளிய போனாலும் வந்து எவ்வளவு யூனிட் ஆகியிருக்குன்னு செக் பண்ணிக்குவாருன்னா பாருங்க எவ்வளவு உஷாரான ஆளுன்னு..!

    ReplyDelete
    Replies
    1. அடடே... அன்பு ஸாரோட டெக்னிக்கை நாமளும் ஃபாலோ பண்ணலாம் போலருக்கே...! என் எழுத்தை ரசிச்சுப் பாராட்டினதுக்கும் சேர்த்து மனம் நிறைய நன்றிகள் உஸா!

      Delete
  8. நீங்க ஏச ஆரம்பிச்சதிலிருந்து ஏசி உங்களுக்கு கிடைக்கலைங்கற வரையிலும் நல்லா ரசிச்சி சிரிச்சேங்க.... இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு அட்லீஸ்ட் உங்களுக்கும் முன் ரூமில் ஏசி கிடைக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுச் சிரிச்சதோட எனக்காக வாழ்த்தும் சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. ஏசிபுட்டேன் மிக மிக ரசிக்கவைத்தது.. வீட்டிற்கு ஒரு பொருள் வாங்க பாவம் அண்ணி என்ன பாடு படுறாங்க பாருங்க..

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொருளை அண்ணிக்கு வாங்கித் தர்றதுக்காக எங்கண்ணன் என்னா பாடு படறாரு... அப்படின்னுல்ல கமெண்ட் வந்திருக்கணும்1 அவ்வ்வ்வ்! மிக்க நன்றிம்மா!

      Delete
  10. At least in your house, expenses increased because of cell phone and snacks. But in my house, the current bill touched Himalayan height (of course it is given once in two months) after fixing A/c, was really shocking. In Gujarat, per unit you have to pay Rs.6/- if your consumption exceeds 100 units per month.

    ReplyDelete
    Replies
    1. பரோடாக்காரர் சோகக் கதையக் கேட்டா... நம்ம கதை எம்புட்டோ தேவலை போலருக்கே...! ஹா... ஹா... மிக்க நன்றி நண்பரே!

      Delete
  11. நல்லாதான் ஏசிட்டீங்க!!

    ReplyDelete
    Replies
    1. ஏ.சி.யதை ரசித்த தங்கைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  12. Replies
    1. ரசித்துச் சிரித்த நண்பருக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  13. ஏசிப்போட்ட புராணம் ஜூப்பரு :-))

    ReplyDelete
    Replies
    1. ஏசி(ய) புராணத்தை ரசித்த சாரல் மேடத்துக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  14. Replies
    1. படிச்சு ரசிச்சு வாய்விட்டுச் சிரிச்ச டீச்சருக்கு மனமகிழ்வோட என் நன்றி!

      Delete
  15. சரிதாவின் சக’வாச’ தோஷத்தால் வந்த வினை! :-))

    ReplyDelete
    Replies
    1. அந்த தோஷத்துனால படற பாட்டை இன்னும் பல கதைகளாச் சொல்லலாம்ணா. மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  16. அய்யோ....அய்யோ....
    பக்கோடா, கேசரி விருந்து ,செல்போன்........

    மொட்டைமாடி இல்லாமல் ரூம் ஆவது கிடைத்ததே :)))

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த மாதேவிக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  17. Replies
    1. வெல்கம் காயத்ரி தேவி! ரசி¢ச்சுச் சிரிச்சு, சூப்பர்னு பாராட்டின உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

      Delete
  18. நெடுநாள் இடைவிட்டு வந்த சரிதாயணம் படித்து மகிழ்ந்தேன் :) எல்லாம் சொன்னிங்க, ஆனா கரண்ட் பில் பற்றி சொல்லலையே ?

    ReplyDelete
    Replies
    1. சென்ற வாரம் நடந்த சோகக் கதைன்னு ஆரம்பத்துலயே சொன்னேனே... அதனால கரண்ட் பில் பத்தி தனியாப் புலம்ப அடுத்த மாசம் ஆயிரும் ரூபக்! மிக்க நன்றி!

      Delete
  19. ஆஹா ஏசியால் ஒரு கலவரமே நடக்குது !:))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நேசன்... என் வீட்ல கலவரம் ஓய்ஞ்சு இப்பத்தான் நிலவரம் சாதகமா ஆச்சு. மிக்க நன்றி!

      Delete
  20. ///சரிதாவின் அப்பாவின் வெள்ளை பனியன், வேஷ்டிதான் எனக்கு மூட்டை மாதிரி தெரிந்திருக்கிறது//

    சரவணன் மினாட்சியில்தான் வெள்ளை வேட்டி அடிக்கடி வந்து உசிரை வாங்கிச்சுன்னா உங்க வீட்டுலேயும் அப்படித்தானா?

    ReplyDelete
    Replies
    1. நான் தொ.கா. தொடர்கள் பார்ப்பதில்லை மதுரைத் தமிழன் (நல்லவேளையா). அதனால சரவணன்-மீனாட்சி பத்தித் தெரியல. படிச்சு ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  21. ஒரு வாட்டர் ஹீட்டரை வாங்கிட்டு நான் படுற பாடு ?ஏ சீ யா...நோ சான்ஸ் !
    எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கி 'நம்பி யாரும் 'வாங்கினதா தெரியலே !

    ReplyDelete
    Replies
    1. ¨நம்பி¨யாரும் வாங்கினதா... சூப்பரா வார்த்தைகள்ல விளையாடறீங்களே பகவான்ஜீ... படிச்சு ரசிச்ச உங்களுக்கு என் .உளங்கனிந்த நன்றி!

      Delete
  22. ஹா ஹா ஹா மின்னலுடன் மின்னலென சரிதா ரிட்டர்ன்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுச் சிரிச்ச சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. ஏசியால் இவ்வளவு பிரச்சினைகளா..

    ReplyDelete
    Replies
    1. சின்னச் சின்ன விஷயங்கள்கூட எங்களுக்கு ப்ரச்னையாத்தான் ஆயிடும் நண்பரே... அடுத்து வர்ற கதையில பாருங்களேன், புரியும்...! மிக்க நன்றி!

      Delete

  24. ஏ சி மெஷின் ஓட கரண்ட் இருக்கிறதா.?

    ReplyDelete
    Replies
    1. கரண்ட் இப்பல்லாம் முழுமையாக் கிடைக்குதே சென்னையில... உங்க ஏரியாவுல இன்னும் பழைய நிலைமைதானா? மிக்க நன்றி ஐயா!

      Delete
  25. நீண்ட இடைவெளிக்குப் பின் அதிரடியாய் ஒரு சிரிப்பு பகிர்வு.....

    எம்.என். நம்பியார், மன்மோகன் மோட் :)))))

    ReplyDelete
    Replies
    1. படித்து, ரசித்துச் சிரித்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  26. உங்க அளவுக்கு எங்களுக்கு தைரியம் இல்ல பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா... நான் ரொம்ம்ப தைரியமா இருக்கேன். (வேறென்ன சொல்ல முடியும்?) ஹி... ஹி...! மிக்க நன்றி புதுவைக்காரரே!

      Delete
  27. இங்க நம்ம ஊரே (பிரான்சு) ஏசியில தான் இயங்குகிறது.
    அதனால இங்க நடக்கற வில்லத்தனங்களைச் சொல்லி மாலாது
    என்பதால் நான் சொல்லவில்லைங்க கணேஷ் ஐயா.
    பதிவை இரசித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுச் மகிழ்ந்தேன்னு சொல்லி எனக்குத் தெம்பூட்டிய உங்களுக்கு என் உளம்கனிநத் நன்றி!

      Delete
  28. “பணிந்தால் எகிறுவதும்”, “எகிறினால் பணிவதும்” அவள் வழக்கம் – என்கிறீர்களே, முன்னது சரி, பின்னது பொய் தானே? – இமயத்தலைவன் (இராய.செல்லப்பா).

    ReplyDelete
    Replies
    1. 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்துல ஒரு வசனம் வரும் : ''சரி விடுறா... எவன் சொந்தக் கதையச் சொல்லும் போது முழுசா உண்மையப் பேசியிருக்கான்...'' அப்படின்னு. ஹி... ஹி...! ரொம்ப நன்றி ஸார்...!

      Delete
  29. என்னடா... அண்ணியை இவ்வளவு தைரியமா திட்டறீங்களேன்னு நினைச்சேன். தொடர்ந்து படிச்சதுக்கப்புறம்தான் தெரியிது ஏசிப்போட சொன்னதுக்கு என்று. அவங்க கேட்டது ஏர் கண்டிஷன் என்று தெரிஞ்சிருந்தாலும் இதுதான் சாக்கு என்று திட்டியிருப்பீங்க. சரிதானே நான் சொல்றது?

    உங்க கற்பனை வளமும் நகைச்சுவை நயமும், வார்த்தை விளையாட்டும் எப்போதும் போல் என்னைக் கவர்ந்தன. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
  30. நீங்க யூகிச்சதுல தப்பேயில்ல கீதா... மிகச் சரி! ஏசி போடுங்கன்னு அவ சொன்னத நல்லாப் புரிஞ்சுக்கிட்டும் கிடைச்ச சான்ஸை விட்ரக் கூடாதேன்னுதான்... ஹி... ஹி...! என் எழுத்து நடையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

    ReplyDelete
  31. வணக்கம்
    இன்று18.02.2014 வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  32. வலைச்சரத்தில் இருந்து ராஜி இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க..
    ஏசிப்போட்டதும் மன்மோகன் மோடும் மிகவும் சிரிக்க வைத்தன..அருமை!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube