Monday, August 19, 2013

மோகினிப் பிசாசும், சரிதாவும்!

Posted by பால கணேஷ் Monday, August 19, 2013
மீபகாலமாக பொழுதுபோகாத மோகினிப் பிசாசு ஒன்று வீடு வீடாக சென்று அங்கிருப்பவர்களை பயமுறுத்தி வருகிறது என்று சரவணா ஸ்டோர்சுக்கு மிக அருகில் இருக்கும் மாம்பலத்தில் ஒரு வதந்தி மிகத் தீவிரமாய் பரவியது. அதிலும் இந்த மோகினி சற்றே வித்தியாசமாக பெண்களை மட்டுமே விரட்டி விரட்டி அடிப்பதாக டெவலப் ஆகியிருந்தது அந்த வதந்தி. பொதுவாகவே எனக்கு பேய் பயமெல்லாம் கிடையாது, அதுவும் சரிதா வசிக்கக் கூடிய இடத்தில் எப்படி ஒரு பேயால் தைரியமாக வசிக்க முடியும்? ஹலோ... அவசரப்படாதீங்க... சரிதா மாதிரியான படித்த தைரியமான ஒருத்தி வசிக்கும் இடத்தில் பேய் பயம் இருக்காது என்றுதான் சொல்ல வந்தேன். ஹி... ஹி...!

மேற்படி வதந்தியைக் கேள்விப்பட்ட நாளில் இருந்தே சரிதா கொஞ்சம் பயந்திருந்தாள், இருப்பினும் பயத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க என்றளவில் எங்கள் சம்சார வாழ்க்கை ஹிம்சார வாழ்க்கையாக போய்க் கொண்டிருந்தது. அதிலும் ஒரு வினோதம் பாருங்கள்.. அந்த மோகினி ஒன்றாம் நம்பர் வீட்டில் ஆரம்பித்து வரிசை மாறாமல் வீடு வீடாக விஸிட் அடித்து வருகிறதாம், இப்படிபட்ட விபரீத வரிசையில் இன்று இரவு எங்கள் டர்ன். குறிப்பாக அது பெண்களை மட்டுமே டார்கெட் செய்வதால் நான் ஓவர் குஷியிலும், சரிதா வரலாறு காணாத பயத்திலும் இருந்தோம் என்பதை இங்கே எழுத விரும்புகிறேன்.

லேசான தூறலுடன் வானம் மெல்ல இருட்டத் தொடங்கியிருந்தது, வங்கக் கடலில் லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை என்று ரமணன் சொல்லிவிட்ட காரணத்தால் காற்று பேயாட்டாம் ஆடிக்கொண்டிருந்தது, பேய்க்காற்றில் (அதிலும் பேயா?) ஜன்னல்கள் அனைத்தும் டமால் டுமீலிக் கொண்டிருந்தன, இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தல் ஒரு பேய் வருவதற்கான அத்தனை ஸ்பெஷல் எபெக்டும் இயற்கையாகவே அமைந்துவிட்டது போல் தோன்றியது.

"ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும், உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்",  என சஷ்டிகவசம் பாடிக் கொண்டிருந்த சரிதாவின் முகத்தில் முழுவதுமாக கிலி குடிகொண்டிருந்தது. பயத்தில் அவளது கரங்கள் ஐந்து கிலோ ஐஸ்கட்டியை வைத்தது போல நடுங்கிக் கொண்டிருந்தது. சரிதா பயப்படுவதை பார்க்கும் போதெல்லாம் இனம் புரியா ஒரு இன்பம் என்னுள் குடிகொள்வது எனக்கு வழக்கமாகி விட்டது. மின்னல் வரிகளில் சரிதாவின் பெருமை(!)களை டைப்பியபடியே ஓரக்கண்ணால் சரிதா பயந்து கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டிருந்தேன், மணி சரியாக ஏழைத் தொட்ட நொடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு டிடிஎஸ் எபெக்டில் "ஜல் ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்" என மெல்ல கொலுசுச் சத்தம் கேட்கத் தொடங்கி இருந்தது; சைடு எஃபக்டாக பூமி அதிர்ந்தது. "டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குடு" ஓ...! கொலுசுச் சத்தம் கேட்டதும் சஷ்டிக்கவசத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடுகுடு குடுகுடுவென நிலமதிர ஓடிவந்து மூச்சிரைக்க என்னருகில் நின்றாள் என் சகதர்மிணி. அந்த எஃபக்டதான்...! ஹி.. ஹி...!

"ஏங்க.. கொலுசு சத்தம்.... அந்த கொலுசு சத்தம் உங்களுக்கு கேட்டதா.?" மேல்மூச்சு கீழ்மூச்சு தனது உடைந்து போன குரலில் சரிதா என்னிடம் கேட்டுக் கொண்டிருந்த பொழுதே மீண்டும் "ஜல் ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்" இம்முறை ஜல்லுடன் பயங்கரமான சிரிப்புச் சத்தமும் சேர்ந்து எக்கோவாகத் தொடங்கியது. சரிதா நடுங்கிக் கொண்டிருந்தாள்.  சரிதா இப்படி நிறையவே பயப்படுவதைப் பார்த்த எனக்கோ உடனே திருப்பதி ஏழுமலையானுக்கு பாதயாத்திரை போக வேண்டும் போல் இருந்தது. "ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்! உன்னய உண்டு இல்லன்னு பண்றேன் பாரு...." அடித்தொண்டையில் இருந்து அலறிய அந்த மோகினிப் பிசாசு இன்னும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தது. "ஏங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்குதுங்க, என்ன எப்படியாது காப்பாத்துங்க" என் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டே அழ ஆரம்பித்தாள் சரிதா.

"அய்யோ சொக்கா சொக்கா, அத்தனையும் எனக்கா...அய்யோ சொக்கா சொக்கா...." தருமி நாகேஷ் திருவிளையாடல் படத்தில் துள்ளிக் குதிப்பாரே அப்படித்தான் எனக்கும் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. காரணம் சரிதா என்னை இவ்வளளவு மரி‌யாதையாக அழைத்தது அவளுக்கு தாலி கட்டும் முன்வரை மட்டுமே.  "உன்னச் சும்மா விட மாட்டேன்டி, எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே சீண்டிப் பார்ப்ப... உன்ன சும்மா விடவே மாட்டேன்... ஹாஆஆஆஹ் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா " சத்தமாக, மிக சத்தமாக  சிரிக்கத் தொடங்கியது அந்த மோகினிப் பிசாசு. "ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா ..." அந்த பயத்திலும் நான் பயப்படாமல் இருப்பதை கண்டுபிடித்து விட்டாள் சரிதா. 

ங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தை இங்கே சொல்கிறேன்... இந்த மோகினிப் பிசாசு வதந்தி பரவியதில் இருந்தே தொடர்ச்சியாக சரிதாவிடம் சில மாற்றங்கள் தெரிந்தது. கொஞ்சம் பவ்யமாய் நடந்துகொள்ள ஆரம்பித்திருந்தாள். அவளை என் வழிக்குக் கொண்டு வர இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அறிந்த நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். எலக்ட்ரிகல் ஸ்பெஷலிஸ்டான  எனது நண்பன் சரவணன் மூலமாக என் வீட்டை சுற்றிலும் மறைவான இடங்களில் ஸ்பீக்கர் செட் செய்து ஒரு பேய் எபெக்ட் வரும் விதத்தில் ஏற்பாடு செய்திருந்தேன். சிலநாட்களாக சரிதா என்னிடம் பேசிய அதவாது என்னோடு சண்டை போடும் போது அவள் கத்திய குரல்களை அவளுக்கே தெரியாமல் ரெக்கார்ட் செய்து, அதையே மோகினியின் குரலாக மாற்றியிருந்தோம், என்னுடைய அதிபுத்திசாலி மனைவியால் அவளது குரலைக் கூட அவளால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பயந்திருந்தாள். நான் அவள் பயத்தைக் கண்டு ரசித்துச் சிரித்து மேலுக்கு நான் பயந்த மாதிரி(!) நடித்துக் கொண்டிருந்தேன்.

ன்னை நானே மனதுள் பாராட்டிக் கொண்டிருந்த போதுதான் எதிர்பாராத மற்றொரு புதிய குரல் கேட்டது, இது என் அருகில் நின்று கொண்டிருக்கும் சரிதாவின் குரலும் இல்லை, நாங்கள் ரெக்கார்ட் செய்த சரிதாவின் குரலும் இல்லை. புதுக்குரல்! "டேய் கணேஷா... என்ன விளையாடுறியா..? எம்மேல பயமில்லாமப் போயிருச்சா?" புதிய பெண் குரல் நான்கு புறம் இருந்தும் எக்கோவானது.

"ஏங்க அந்த பேய பார்த்து நீங்க பயப்படல இல்ல, அதான் அதுக்கு உங்க மேல கோவம் வந்த்ருச்சு" சரிதா இன்னும் அப்பாவியாய் பயந்து கொண்டிருந்தாள். இப்போது நான் மெய்யாலுமே பயப்படத் தொடங்கியிருந்தேன். இரண்டு விதமான கொலுசு சப்தம் கேட்டது, இரண்டு விதமான பெண்களின் குரல் கேட்டது. ஒன்று சரிதாவின் ரெகார்டட் குரல் மற்றும் ரெகார்டட் ஜல் ஜல், மற்றொன்று....? அய்யகோ! அப்படியென்றால் மோகினிப் பிசாசு  இருப்பது நிஜம் தானா? நான் தான் அவசரப்பட்டு சரிதாவை சீண்டுவதாக நினைத்து மோகினியை சீண்டி விட்டேனா?

எங்கள் அருகில் மல்லிகை வாசம் வீசத் தொடங்கியது. என்னுடைய முதல் பிளானில் மல்லிகையை சேர்க்க மறந்துவிட்டேன்  . நான் கூட யோசித்தேன் மல்லிகை இல்லாமல் பேய் டிராமாவா என்று. இந்த நிஜப் பேய் நிஜமாகவே மல்லிகையுடன் வரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. " ஹாஆஆஆஹ் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்ஹஹா, கணேஷா நீ செத்தடா" இது நிஜ மோகினிப் பிசாசு "சொன்னாலும் சொல்லாட்டாலும், கணேஷா... நீ செத்தடா!" இது மை மைண்ட் வாய்ஸ்!

"உன்ன சும்மா விடமாட்டேன்.. உன்ன... உன்ன..." இது ரெகார்டட் சரிதா. "ஹையோ! என் புருசன ஒன்னும் பண்ணிராத..." இது நிஜ சரிதா

"தைரியம் இருந்த எதிர்ல வந்துபாரு.. ரெண்டுல ஒண்ணு பாத்துரலாம்".. ரெக்கார்டட் சரிதா. ரெக்கார்டட் வாய்சுக்கும், சரிதாவின் நிஜக் குரலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாத மோகினி, மேற்கூறிய பஞ்ச் டயலாக்கைக் கேட்டதும், "யாரப் பார்த்துடி தைரியம் இல்லாதவன்னு சொன்ன.. தில் இருந்தா என் கூட மோதிப் பாருடி" என்றபடி சட்டென முன்னால் வந்து நின்றது.

நல்ல உஜாலா போட்ட வெள்ளை சாரி, முந்தானை காற்றில் பரவிக் கொண்டிருந்தது. தலை நிறைய மல்லிகைப்பூ,  நல்ல களையான முகம், சிக்கென்ற தேகம், சரிதாவிற்கு முன்னரே இவளைப் பார்த்திருந்தால் இவளே தேவலை என்று மனம் என் நினைத்தாலும் நினைத்திருக்கும். அந்த மோகினியை நான் சைட் அடிப்பதை சரிதா கவனித்து விட்டாலும்... அதைப் பார்த்த அதிர்ச்சியில் கீழே மயங்கி விழாத குறையாக, "என்னங்க என்னக் காப்பாத்துங்க’’ என்று என்னிடம் சரணாகதி அடைந்தாள் சரிதா. (சரிதாவின் சரணாகதி - நல்ல டைட்டில் இல்ல...?)

"உன் புருசனை... மொதல்ல அவனக் காப்பாத்திக்கச் சொல்லு..." என்று சொல்லிக் கொண்டே அவளது நீளமான விரல்களையுடைய கைகளை என் கழுத்தை நோக்கி நீட்டினாள் அந்த மோகினி.  இந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத மற்றொரு ஆண் ஒரு குரல், இது என் நண்பன் சரவணனின் குரல் அது! "டேய் கணேஷா... ரெக்கார்டட் வாய்ஸ் பக்காவா வொர்க் ஆகுது... நம்ம செட்டப்ப பார்த்து சரிதா என்ன அந்த மோகினியே வந்தாலும் பயப்படுவா.. உன் காலுல விழுவா... நம்ம பிளான் சக்சஸ்டா... " என்று அவன் கூறிய போது நானும் அவனும் பேய்ச் சிரிப்பாகச் சிரித்ததும் ஒலித்தது. அவசர அவசரமாக பேய் செட்டப்பை ரெக்கார்ட் செய்ததால் இதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம். அட தேவுடா!

சரிதா மெல்ல என்னைப் பார்த்தாள்.. பின் மோகினியைப் பார்த்தாள்.. பின் மீண்டுமு் என்னைப் பார்த்தாள்.. இப்போது நான் அவள் கண்களுக்கு சிவப்பாக தெரிந்திருக்க வேண்டும், காரணம் ஏற்கனவே பெரிய அவள் கண்கள் நல்ல பெரிய உருண்டை மாதுளை போலாகி நல்ல சிவப்பாகவும் இருந்தது. மீண்டும் என்னைப் பார்த்து, மோகினியை ருத்ர பார்வை பார்த்தாள். அடுத்த கணம்... அந்த மோகினியின் மேல் பாய்ந்தாள் சரிதா.  "ஏண்டி சக்காளத்தி... குத்துக்கல்லாட்டம் இங்க நான் ஒருத்தி இருக்கும் போதே உனக்கு எம்புருஷன் கேக்குதா? நீயும் அவனும் சேந்து என்னைய இந்த வீட்ட விட்டே அடிச்சி தொரத்தி குடும்பம் நடத்தலாம்னு பாக்றியா குடும்பம்... உன் நாடகம் எல்லாம் என்கிட்டே நடக்காதுடி பிசாசே..." என்றபடி அந்த மோகினியை அடிக்கத் தொடங்கினாள் சரிதா...!

நாளதுவரையில் இப்படி நாயடிப் பேயடியை எங்கும் பட்டிராத அந்த மோகினி, தான் செட்டப்பல்ல, நிஜமாகவே மோகினிதான் என்று எவ்வளவோ கதறியும் சரிதா நம்புவதாயில்லை. என்மீது இருந்த மொத்தக் கோபமும் சேர்த்து அந்த மோகினி மேல் திரும்ப, அடித்து துவம்சம் செய்யலானாள்.‌ மோகினி என்னைப் போல் அடிவாங்குகிற விஷயத்தில் சர்வீஸ் போட்டிராததால்... மல்லிகையைக் காணோம், கொலுசைக் காணோம் என்று ஆவி பறக்க அலறியடித்து ஓடத்தொடங்கியது. ஓடுகிற அந்த அவசரத்திலும்கூட அது  என்னை மிகவும் பாவமாய் பார்த்துக் கொண்டே சொல்லியது: "அப்பனே கணேஷா..! நான் தப்பிச்சுருவேன்... உன் நிலமைய நினைச்சாதான்யா ரொம்ப பாவமா இருக்கு!" அடுத்த கணம் அது எஸ்கேப்பாக... திரும்பி என்னை முறைக்கலானாள் சரிதா. அவ்வ்வ்வ்வ்வ! யாராச்சும் ஓடியாங்க ப்ளீஸ்... உடனே என்னைக் காப்பாத்....!

பின்குறிப்பு1 : இந்த சரிதா கதை (வழக்கத்தைவிட) நன்றாக இருக்கிறதென்று உங்களுக்குத் தோன்றினால் அது மிகச்சரி. ஏனெனில் இதை எழுதியது நானல்ல. என் தீவிர வாசகர்களில் ஒருவர்! சற்றே என் ஸ்டைலுக்கு(?) மாற்றி  இங்கே தந்துள்ளேன். இதை எழுதிய (நீங்கள் அறிந்த) அந்த மர்ம நபர் யார் என்பதை சரியாக பின்னூட்டத்தில் சொல்லும் அனைவருக்கும் அவர்கள் என்னை சந்திக்கும் சந்தர்ப்பத்தில் (அமையும்போது) ஒரு பயனுள்ள புத்தகம் பரிசாக வழஙகப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். (முடிஞ்சால் அந்த மோகினி கையால தர உத்தேசம்!). அடுத்த பதிவில் அவர் பெயரை அறிவிக்கிறேன்.

பின்குறிப்பு 2 : நாளைலருந்து பதிவர் சந்திப்பு பத்தின தகவல்கள் தொடர்ந்து ‘மின்னல் வரிகள்’ல வெளியிட வேண்டியிருக்கு. இந்த சந்தர்ப்பத்துல என்னதான் இணையத்திற்கு நேரம் ஒதுக்கி அனைவரது எழுத்தையும் படிக்கணும்னு மனசு அடிச்சுக்கிட்டாலும் இப்ப என்னைச் சுற்றியிருக்கற நிர்ப்பந்தங்கள் படுத்துது; தடுக்குது. அதனால... செப்.1 வரை என்னைப் பொறுத்தருளி தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தரும்படி வேண்டுகிறேன்.


================================================================
அப்டேட் : இந்தக் கதையை எழுதியவர்: சீனு (திடங்கொண்டு போராடு)
================================================================

35 comments:

  1. ஹைய்யோ!!!! 'கதி'கலங்கிப் போயிட்டேனே:-)))))

    ReplyDelete
  2. மோகினி ராஜியா இருக்கும்

    ReplyDelete
  3. ஆனா இதை எழுதியது சீனுதான் பைனல் ஆன்சர்

    ReplyDelete
    Replies
    1. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அபார நம்பிக்கைக்கு மிக்க நன்றி சார்... அனால் உண்மை எதுவென்று அறிய நாளைவரை பொறுத்திருக்க தானே வேண்டும் :-)))))))))

      Delete

  4. மோகினி கையால என்று சொல்வதால் ராஜியாதான் இருக்கும் எனக்கு ஒரு சந்தேகம் மோகினி என்பது ஆண்பாலா அல்லது பெண்பாலா? ஆவின் பால என்று சொல்லாதீர்கள் அமலாப் பால் என்று கூட சொல்லாம்

    ReplyDelete
  5. ஹாஹா அருமை சார்... எழுதியவருக்கு வழ்துக்கள்....

    ReplyDelete
  6. மிகவும் ரசித்தேன்
    அனேகமாக சீனுவாக இருக்கத்தான்
    அதிக வாய்ப்பு
    புத்தகம் கிடைக்கும்தானே
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  7. நீங்கள் சொல்லும்வரை வேறொருவர் எழுதியதென்று
    தோன்றவில்லை எனக்கு...
    மிகவும் அழகாக நேர்த்தியாக எழுதியிருக்கிறார்
    எழுதியது யாராக இருந்தாலும் அவருக்கு என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்....
    ==
    இந்தமுறை பதிவர் சந்திப்புக்கு நான் வரமுடியாமல் போனதை
    நினைத்து ..வருந்துகிறேன். எனினும் விழா சிறக்க
    என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. டமாஸாக்குது. ஆனா எள்தினது யார்னு தெர்லியே ப்ரதர்?

    ReplyDelete
  9. நம்ம மகேஷின் சகோதரியா...?

    ReplyDelete
  10. பதிவர் சந்திப்பு வேலைல பிசிதானே!! அதனால பொறுத்தருள்கிறோம் அப்பனே!

    ReplyDelete
  11. அருமையாக உங்களைப் போலவே கதை புனைந்து இருக்கிறார்.
    வாழ்த்துக்கள். அது சீனுவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?
    ஏற்கனவே அவருக்குக் கதை எழுதும் அனுபவம் உண்டே !
    கதையை ரசித்து சிரித்தேன் .

    ReplyDelete
  12. Yennai Aval Adikka, Aval Yennai Adikka - super comedy sorry tragedy.

    ReplyDelete
  13. நீண்ட ஒரு இடைவெலிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிக்கும் சரிதாவும் நானும் தொடற் படிக்க ஆரமித்தது முதல்
    ஒவ்வொரு வரியும் ரசித்துக்கொண்டு வந்தேன்
    ஆனா கடைசியில போட்டிங்கலே சார். பின் குரிப்பு.
    முடியல செமையா மொக்கை வாங்கிட்டேன்.


    உலகத்துல எட்டு பேர் ஒரே மாதிரி இருப்பாங்கனு கேழ்வி பட்டேன் ஆனா.
    கொஞ்சம் கூட சந்தேகம் வராத மாதிரி எழுதி இருக்குராங்க.

    முடியல..

    சினு சார் இருக்க வாய்ப்பே இல்ல

    யாரோ பெண் வாசகர்தான் இருப்பாங்க..

    நாளைக்கு தெரிய தானே பொகுது..








    ReplyDelete
    Replies
    1. //யாரோ பெண் வாசகர்தான் இருப்பாங்க..// என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை, என் மொத்த சந்தேகமும் வாத்தியார் மேல் தான்

      Delete
  14. சரிதா என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது இறுதி பின்குறிப்பு தான் மண்டையைக் குழப்புகிறது... சத்தியமாக யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை


    சமீபத்தில் சரிதாயணம் படித்து அகமகிழ்ந்து பதிவெழுதியது நம்ம ஆவி தான், ஆவியும் இதைப் போன்று எழுதக் கூடியவர் தான், எனக்கு அவர் மேல் மைல்ட் டவுட்டு உள்ளது...

    மற்றொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால் ஏன் வாத்தியாரே இந்த பதிவை எழுதிவிட்டு நம்மை மண்டை காய விடக் கூடாது.. எனகென்னவோ வாத்தியார் மீதும் சந்தேகம் அதிகமாய் உள்ளது,...

    ஆவி பாஸ் உங்க மேலையும் தான்...

    ReplyDelete
    Replies
    1. அந்த சிதம்பர ரகசியத்த எழுத ஆரம்பிச்சதுல இருந்து ஒரு சி.ஐ.டி மாதிரி தான் சிந்திக்குது பயபுள்ள..

      இருந்தாலும் இந்த விறுவிறுப்பான த்ரில்லரை நான் எழுதியிருப்பேன்னு டவுட்ட கிளப்பின சீனுவ பாக்கும்பாக்கும்போது என் விழிகளில் கண்ணீர்.. ஆனந்த கண்ணீர்ப்பா..

      (ஆனாலும் உறுதியா சொல்லலையேன்னு வருத்தமும்..)

      Delete
  15. ராஜியாக இருக்குமோ ?

    ReplyDelete
    Replies
    1. இருக்குமோ என்ன.. என் டவுட்டு அவிங்க மேல தான்!

      Delete
  16. சீனு எழுதின மாதிரி தெரியல. எனக்கும் ஆவி மேலதான் கொஞ்சம் சந்தேகம்...

    உங்கள் பணி அனைத்தும் சிறப்பாக முடிந்து, மீண்டும் நீங்கள் பதிவுலகில் வலம் வர காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஷப்பா.. இதெல்லாம் படிக்கும் போது ஒரு படத்துல விவேக் எதேச்சையா ரவுடி ஆகிடுவார்.. அதே பீலிங்ஸ் தான் எனக்கும்..

      Delete
  17. It is not written by you but by your die hard fan. Who can be this. Either it must be your sister Raji or may be your wife herself might have written this.

    ReplyDelete

  18. இந்தமாதிரி நகைச் சுவையாக எழுத வேண்டும் என்று ஆசை உண்டு. ஏன் இதை நாந்தான் எழுதினேன் என்று சொன்னால் கணேஷ் புத்தகப் பரிசு தர மாட்டாரா என்ன.?

    ReplyDelete
  19. சீனு இல்லன்னா ராஜி ஆன்ட்டி...
    எது எப்படியோ சூப்பர் சரணாகதி .... (கணேஷின் கதி!!!)

    ReplyDelete
  20. நீங்க கலக்குங்க அண்ணே

    ReplyDelete
  21. எனக்கு சுப்பு தாத்தா டச் தெரியுது.. ராஜி அக்கா மேலயும் டவுட்டு.. அன்பு நண்பர்கள் ரெண்டு பேர் சொன்ன பிறகு என் மேலேயே கொஞ்சம் டவுட்டு.. ஹிஹிஹி..

    ReplyDelete
  22. //சரிதாவிற்கு முன்னரே இவளைப் பார்த்திருந்தால் இவளே தேவலை என்று மனம் என் நினைத்தாலும் நினைத்திருக்கும்//

    எது எப்படியோ, ஒரு பூரிக் கட்டைய வாங்கி பார்சல் பண்ணீட்டேன் சார்! :-)

    ReplyDelete
  23. அருமை...
    யார் எழுதியிருந்தாலும் அருமையான எழுத்துக்கு வாழ்த்துக்கள்....
    ஆமா...யார்ன்னு சொன்னாத்தான் அண்ணன் புத்தகம் தருவீங்களா.. இல்லைன்னா தரமாட்டிங்களா என்ன...

    ReplyDelete
  24. இந்தக் கதையை வேறு யாரோ எழுதினார்கள் என்றால் நம்ப சிரமமாக உள்ளது. கரு அவர்களுடையது என்றாலும் உங்கள் டச் (அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க...) கதை முழுக்கப் பரவிக்கிடக்கிறது. கந்த சஷ்டி கவச இடைச்செருகல் நல்ல ரசனை. நண்பர் சரவணன் உதவியதாய்க் கதையில் வருகிறது. அந்த நண்பர்தான் இதை எழுதியிருப்பாரோ? கலக்கலாய் எழுதியவருக்கும் அதில் ஸ்டைலைக் கலந்து அளித்த தங்களுக்கும் பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
  25. மஞ்சுபாசிணி அக்காளாக இருக்குமோ?? :))) எல்லா அலுவல்கள் முடிய மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  26. எனக்கென்னவோ சரிதாவே எழுதியிருப்பாங்களோன்னு தோணுது. அவங்களும் உங்க வாசகர் வட்டத்துல இருக்காங்கதானே :-)

    ReplyDelete
  27. முதலில் எனக்கும் சீனு என்றுதான் தோன்றியது. எழுதிய மோகினி பிசாசு - மன்னிக்கவும் - பதிவர் யார் என்று தெரியவில்லையே. ஆனால் ஒன்று கணேஷின் ஸ்டைல் அப்படியே வந்திருக்கிறது. யார் அந்த ghost (!!) எழுத்தாளர்?

    ReplyDelete
  28. குருவை விரைவில் மிஞ்சி விடுவார் சீனு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube