Monday, May 20, 2013

மாலே, சிவகுமாரா!

Posted by பால கணேஷ் Monday, May 20, 2013
ரண்டு வாரங்களாக டூர் அடித்தபின் நேற்று ஞாயிறன்று சென்னையிலேயே சோம்பலான பொழுதாகக் கழிந்து கொண்டிருந்த சமயம், மெ.ப.சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. ‘‘என்ன சிவா?’’ என்றதற்கு, ‘‘ஸார்! வடபழனில ஃபோரம் மால்ன்னு புதுசா ஒண்ணு திறந்திருக்காங்க. போய் சுத்திட்டு வரலாமா?..’’ என்றார். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து மூன்று மணி நேரம் ஏ.ஸி.யி.ல் கழிக்கலாம் என்ற சபலத்தில் ‘‘ஓ.கே.’’ என்றேன் சிவாவின் பின்னணிச் சதி புரியாமல். ‘‘சரி, 12 மணிக்கு ரெடியா இருங்க’’ என்றார். அந்த நல்லவன் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன், ‘‘சிவனேன்னு வீட்ல கிடந்த என்னை 'வடபழனில புதுசா Forum Mall திறந்திருக்காங்க. கெளம்புடா. சைட் அடிக்க போலாம்' என்று தரதரவென்று உச்சி வெய்யில் இழுத்து செல்லப்போகும் பாலகணேஷ் அவர்களே!! நம்மள எதிர்க்கட்சிக்காரன் பாத்தா என்ன நெனைப்பான்? இருந்தாலும்...இதோ கெளம்பிட்டேன்’’ என்று மூஞ்சிப்புத்தகத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு கிளம்பியிருக்கிறார். கூடவே ‘ரெமோ பாலகணேஷுடன் அம்பி சிவா’ என்று கமெண்ட் வேறு. பாருங்க பொது(ப்ளாக்)மக்களே... ஒரு அப்பாவி(!)யோட இமேஜை எப்படில்லாம் டாமேஜ் பண்றாங்கன்னு...! அவ்வ்வ்வ்வ்!

தரைத்தளத்திலிருந்து பிரம்மாண்டமான இந்த மாலின் ஒரு பகுதி!
டபழனியில் கமலா தியேட்டருக்கு எதிரில், க்ரீன் பார்க் ஓட்டலுக்கு அருகில் நான்கு ப்ளோர்களுடன் பிரம்மாண்டமாக முளைத்திருக்கிற ஒய்யார மோகினி ஃபாரம் விஜயா மால்! சென்ற வாரம் ‌கோவை ஆவியுடன் கோவையில் பார்த்த மாலை மனதிற்குள் மிக வியந்திருந்தேன். இந்த மாலின் அழகு அதைத் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டது! சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால், ஸ்கைவாக் மால் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட வெகு அழகு! வாகனத்தை உள்ளே செலுத்தி நிறுத்தியதுமே முதல் அதிர்ச்சி காத்திருந்தது. ‘‘பார்க்கிங் ஃப்ரீ சார்’’ என்றாள் அங்கு டிக்கெட் வழங்கிய ‌கன்னி(?). சிவாவிடம் இதைப் பற்றிப் புகழ்ந்தவாறே மாலினுள் நுழைய, ‘‘முதல் ஒரு மாசம்தான் இப்படி ஃப்ரீ பார்க்கிங் தருவாங்க. அப்புறம் கண்டிப்பா சார்ஜ் பண்ணிடுவாங்க ஸார்’’ என்றார் சிவா. ‌ம்ம்ம்... இந்த விஷயத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேணும்!

சிங்கம் போல... ஏ சிங்கம் போல நிக்கிறாரு எங்க தளபதி, அட எஸ்கலேட்டர் ஏறி வாரார் எங்க தளபதி!
உள்ளே சென்றதும் முதலில் கவனத்தை ஈர்த்தது இரண்டு வரிசைக கடைகளுக்கு இடையில் நடப்பதற்கு தாராளமாக இடம் விட்டு அமைத்திருக்கும் விதம். இரண்டாவதாக கவனத்தைக் கவர்ந்தது ஒவ்வொரு மாடிக்கும் ஏறி இறங்க எஸ்கலேட்டர்கள் வைத்திருப்பது! மூ்ன்றாவதாக கவனத்தைக் கவர்ந்தது வெறும் செருப்புக் கால்களாலேயே ஸ்கேட்டிங் செய்கிற விதமாக அமைக்கப்பட்டிருக்கும் அழகான வழவழ ஃப்ளோரிங்! நான்காவதாக...  ‘‘சிவா, அந்த பொம்மை நல்லா இருக்கு பாரேன்’’ என்றேன். வேகமாக நான் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த சிவா, அங்கே ஒரு கடையின் கவுண்ட்டரில் பில்லிங் ‌செக்ஷனில் இருந்த பெண்ணைக் கண்டதும் ஜெர்க் ஆனார். ‘‘ஸாஆஆர்!’’ என்றார். பின்ன ‘ரெமோ’ வேற எப்படி இருக்கறதாம்? எனக்குப் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் - நிபந்தனை - பதினெட்டு ஆண்டுக்கு முன் பிறந்திருக்க வேண்டும். ஹி... ஹி...!

கிரவுண்ட் ஃப்ளோரில் ‘தாம்பூலா -ரிடர்‌ன் கிஃப்ட் ஷாப்’ என்று ஒரு கடையினுள் முதலில் நுழைந்தோம். ‘‘ரிடர்ன் கிப்ட் என்றால் கல்யாணத்துல நமக்கு அதிகமா வந்த பொருள்களை இவங்கட்ட ரிடர்ன் பண்ணிட்டு பணம் வாங்கிக்கற சிஸ்டமா இருக்கும்’’ என்றேன். கடையில் இருந்தவர், ‘‘கல்யாணத்துல நமக்கு கிஃப்ட் பண்றவங்களுக்கு, நாம ரிடர்ன் கிஃப்ட் இங்க வாங்கி பண்ணலாம். அதுக்கான கடை இது’’ என்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த சின்ன, பெரிய யானை பொம்மைகள் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் கவனத்தைக் கவர்ந்தார். சிவா ஒரு யானை பொம்மையை எடுத்துப் பார்த்துவிட்டு, ‘‘ரொம்ப சீப் ஸார்... 850 ரூபாதான்’’ என்றார். ‘‘அடப்பாஆஆஆவி! இதுவா சீப்பு?’’ என்று வேகமாக அவரை இழுத்துக் கொண்டு, அடுத்த ப்ளோருக்குச் சென்றோம்.

நடக்கறதுக்கு என்னங்க... ஓடிப்பிடிச்சே விளையாடற அளவு தாராளமா இடம்!
கிரவுண்ட் ஃப்ளோரிலும் முதல் ப்ளோரிலும் ஆரெம்கேவி இரண்டு ஷாப்கள் இருக்கின்றன. முதல் ப்ளோர் கடையில் உள்ளே நுழைந்ததும் கஸ்டமர்களுககு அவர்கள் தரும் வரவேற்பு மிகப் பிடித்திருந்தது. உள்ளே ஒரு ரவுண்ட் வந்தோம். குறைந்த பட்ஜெட்டாக 500 ரூபாயில் தொடங்கி கல்யாண மாப்பிள்ளைகள் அணியும் கற்கள் பதித்த உடை, கிரீடம், வேலைப்பாடான செருப்பு உள்ளிட்ட உடைகள் 20ஆயிரம் வரை எக்க்கச்சக்கமாக வைத்திருக்கிறார்கள். கடையின் முகப்பிலேயே எலக்ட்ரானிக் தறியில் ஒருவர் பட்டுப் புடவை நெய்து கொண்டிருப்பதை லைவாகப் பார்க்க முடிந்தது கூடுதல் ரசனை!

இரண்டாவது ப்ளோரில் ஒரு ஸ்போர்ட்ஸ் கடையினுள் விசிட் அடித்தோம். டென்ட் அடிக்கும் மெட்டீரியலிலிருந்து பந்து வரை எல்லா ஐட்டங்களும் வைத்திருக்கிறார்கள்- ‘குறைந்த’(?) விலையில்! அங்கே ஒரு ஆசாமி வாட்டர் ஸர்ஃபிங் பண்ணுவது மாதிரியான ஒரு சக்கரம் வைத்த ஐட்டத்தில் ;நின்றபடி கடையைச் சுற்றிச் சுற்றி வந்ததும், அவர் கையில் விஷ்ணுவின் சக்கரம் போல ஒரு வாலிபால் பந்தை சுழல வைத்தபடி கீழே விழாமல் இருந்ததும் அசர வைத்தது! அங்கே ‘ஸால்ட்’ என்ற ரெஸ்டாரண்ட் இருகக, அதன் வாசலில் ப்ரைஸ் லிஸ்டை போர்டில் எழுதி வைத்திருந்தார்கள். ‘‘இருங்க ஸார், பாத்துட்டுப் போலாம்’’ என்றார் சிவா. என்னே ஒரு தீர்க்கதரிசனம் சிவாவுக்கு! அந்த விலைகளை பார்க்க மட்டும்தான் முடிந்தது. ‘ஹும்ம்’ என்று பெருமூச்சு விட்டு, ‘‘வா, அடுத்த ஃப்ளோருக்குப் போலாம்’’ என்றேன். மூன்றாவது மாடிக்குச் சென்றோம். வழியில் நிறைய ‘பொம்மைகள்’ இந்த இளைஞனின் கண்ணில் பட்டு ரசிக்க வைத்தன. ஸைட் அடிக்கும் வயதைக் கடந்திருந்த சிவா பவ்யமாக நேர் பார்வையுடன் உடன் வந்தார்.

மூன்றாவது மாடியில் சுற்றியபடியே வர ‘உணவு நீதிமன்றம்’ (Food Court) கண்ணைக் கவர்ந்தது. உள்ளே... அராபியன் கடைகளிலிருந்து நம்ம இட்லி, வடை கடை வரை வரிசையாக அணிவகுத்திருந்தன. வரிசையாகப் பார்த்தபடி வர, பாண்டி கடை எனற தலைப்பில் கீழே மதுரை - போஸ்ட் நம்பர் 5 என்ற சப்டைட்டிலுடன் இருந்த கடை கண்ணை இழுத்தது. திண்டுக்கல் பிரியாணியிலிருந்து ஜிகர்தண்டா வரை சுத்தமான எங்கூர்க் கடை! கண்ணை இழுக்காதா பின்னே? சிவா அங்கே ஏதாவது சாப்பிட்டு டேஸ்ட் பார்க்கலாம் என்றதால் (அவர் உபயத்தில்) உணவை வாங்கினோம். ‘‘தண்ணி குடுங்க ஸார்’’ என்றதற்கு, ‘‘‌லெஃப்ட்ல ரெண்டாவது கடையில கிடைக்கும் ஸார்’’ என்றார்கள். தலைவர் கேபிள் சங்கர் சொல்லித் தந்தபடி சண்டை போட்ர வேண்டியதுதான் என்று எங்களுக்குள்ளிருந்த அன்னியனை எழுப்பி நாங்கள் தயாராகி, ‘‘அது வேணாம் ஸார்... சாப்பாடு குடுத்த நீங்க தண்ணி தர வேணாமா?’’ என்க, ‘‘அப்ப ரைட் சைட்ல போனீங்கன்னா வாட்டர் இருக்கு. எடுத்துக்கலாம் ஸார்’’ என்றார் கடைச் சிப்பந்தி. வலதுபக்கத்தில் நிறைய பெட் பாட்டில்கள் வைத்து, வாட்டர் கூலரும் வைத்திருந்தார்கள். அன்னியனை கூல் பண்ணி அனுப்பிவிட்டு பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு சாப்பிட்டோம். கொடுத்த பணத்துக்கு நிறைவான மதிய உணவுங்க!

எலக்ட்ரானிக் தறியும், பாண்டி கடையும், பின்னே ஃபுட்கோர்ட்டும்!
இந்த ஃபுட்‌கோர்ட்டிலும் சாப்பிடுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த டேபிள் சேர்கள் மிகப் பிடித்திருந்தன. நான்கு பேர் உட்கார்ந்து சாப்பிடும்படியும், கூடுதல் இரண்டு பேர் வந்தால் பக்கத்திலிருந்து இழுத்துப் போட்டுக் கொள்ளும்படியும் இருந்தன. கலர் காம்பினேஷனும் ரசனை! நிதானமாக அங்கே அமர்ந்து அரட்டையடித்து விட்டு நிறைய (விண்டோ) ஷாப்பிங் பண்ணியதில் களைப்பாகி விட்டதால், கீழே வந்து ஆளுக்‌கொரு சாக்லேட் பட்டையை பர்ச்சேஸ் பண்ணிவிட்டுக் கிளம்பினோம். மூன்று மணி நேரத்தை நண்பனுடன் அங்கே கழித்ததில் மனம் உற்சாகமாகியிருந்தது. என் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்பட்டுவிட்ட உணர்வு எனக்குள் நிரம்பியிருந்தது. மாலே மால் இது பலே மால் என்று அடையாளம் காட்டிய சிவகுமாரா! உனக்கு மிக்க நன்றி! (ஹையா... ஒருவழியா டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணிட்டேனே!)

76 comments:

  1. கடைசி வரை அந்நியன் வெளியேவே வரவிடவில்லை...

    ஃபோரம் மால் பற்றிய தகவலுக்கு நன்றி... அடுத்த முறை அங்கு வரும் போது பார்த்திட வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. மாலு்க்கு தனியாப் போனா ‘மோகினி’ங்க உங்க மீசையில மயங்கி சுத்திக்கும் D.D. அதனால என்னையும் துணைக்கு கூட்டிட்டுப் போங்க. ஹி... ஹி...! மிக்க நன்றி!

      Delete
  2. மாலுக்கு நானெல்லாம் பொம்மை பார்க்கிறதுக்கு மட்டும்தான் போறது... சிவா சொன்னது மாதிரி இன்னும் ஒரு மாசம்தான், பார்க்கிங் கட்டணம் வசூலிக்க ஆரம்பிச்சிருவாங்க...

    அது சரி.. என்னையும் கூப்பிட்டிருக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. கூப்பிட்டிருக்கலாம் தான். சிவா போன் பண்ணினதுக்கும் கிளம்பினதுக்கும் இடையில அரை மணி நேரம்தான் இருந்துச்சு. அதனால யாரையும் கூப்பிட அந்த நேரத்துல தோணல நண்பா. ஸாரி... வர்ற ஸன்டே நாமல்லாம் மறுபடி ஒரு ரவுண்ட் போயிரலாம். நான் ரெடி... நீங்க ரெடியா? மிக்க நன்றி!

      Delete
  3. நாங்களும் சுற்றிப் பார்த்து விட்டோம் உங்கள் எழுத்தில்:). நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எங்களுடன் சேர்ந்து சுற்றிப் பார்த்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. குன்றாத இளமையுடன்..
    செண்டு மலருடன் (நம்ம சிவகுமார் தான்!)
    சென்னையின் மத்தியில்
    புன்னை வனத்தினிலே
    மேன்மைமிகு மால் ஒன்றை
    நன்றாக சுற்றிவந்த
    பலே! பால கணேஷா..(மன்னிக்கணும் நண்பரே ஒருமைக்கு... ஒரு ப்ளோ ல வந்துருச்சி..)

    ReplyDelete
    Replies
    1. அட நீ வேறய்யா... ஒருமைல கூப்ட்டா என்ன குறைஞ்சா போயிடும்? நான்லாம் சிவாவை அப்படித்தான் பேசுவேன். பதிவில மரியாதை கடைப்பிடிக்கிறோம். அவ்ளவ் தான். மிக ரசித்து மா‌லை என்னுடன் சுற்றிவந்த மகேனுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  5. இது வரை பார்த்து ரசித்த அனைத்திலும் சிறந்த வணிக வளாகம் என்று எழுதியிருக்கிறீர்கள்! அடுத்த முறை சென்னை வரும்போது பார்த்து விட வேண்டியது தான்!!

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வாருங்கள். நாம் பார்க்கலாம். உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி மனோம்மா!

      Delete
  6. //கல்யாணத்துல நமக்கு கிஃப்ட் பண்றவங்களுக்கு, நாம ரிடர்ன் கிஃப்ட் இங்க வாங்கி பண்ணலாம். அதுக்கான கடை // புதுசு புதுசா யாவாராத்த டெவெலப் பண்றாங்களே

    // (அவர் உபயத்தில்) // நான் வரவில்லையே என்ற ஆகசிறந்த வேதனையை இந்த இடத்தில் இட்லி குக்கரில் வைத்து எடுக்கப்பட்ட ஆவி பறக்கும் இட்லியை வேகமாய் பியித்து அதே வேகத்தில் வாயில் வைத்தால் எவ்வளவு வேத்தனையைத் தருமோ அவ்வளவு வேதனையை அனுபவித்தேன்

    - ஆகசிறந்த தமிழ் இலக்கியவாதி சித்தன்

    ReplyDelete
    Replies
    1. எலேய்... இந்த ‘ஆகச்சிறந்த‘ வார்த்தைக்காகவே உன்னை சங்கத்துலருந்து விலக்கிரணும் முதல்ல! எப்ப ஊர்லருந்து வந்த? நீ இருககறது தெரிஞ்சா உன்னையில்ல ஸ்பான்ஸர் பண்ண வெச்சிருப்போம் நாங்க! அடுத்த முறை நாம போறப்ப.... ரைட்டா? மிக்க நன்றி!

      Delete
  7. மாலின் விஸ்வரூப தரிசனம் அருமை!!

    இங்கேதானே ஒரு கல்யாண மண்டபம் இருந்தது? அதே இடமா?

    ReplyDelete
    Replies
    1. தியேட்டர்கள் மண்டபங்களாதலும், மண்டபங்கள் மால்களாதலும் வழுவல கால வகையினானே டீச்சர்! மாலின் விஸ்வரூப தரிசனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  8. /எனக்குப் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் - நிபந்தனை - பதினெட்டு ஆண்டுக்கு முன் பிறந்திருக்க வேண்டும். ஹி... ஹி...!/

    அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ. பூக்கள் வெடிக்கும் ஸ்டன் கன் ரெமோ. ராம்ப் வாக் ரெமோ!!

    ReplyDelete
  9. சிவகுமாருக்கு முதல் நன்றியும்
    அருமையான பதிவாகத் தந்த உங்களுக்கு
    இரண்டாவது நன்றியும்
    அடுத்த சென்னை விசிட்டில் நிச்சயம்
    சுற்றிப்பார்க்கவேண்டும்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுககு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. ‘‘ரிடர்ன் கிப்ட் என்றால் கல்யாணத்துல நமக்கு அதிகமா வந்த பொருள்களை இவங்கட்ட ரிடர்ன் பண்ணிட்டு பணம் வாங்கிக்கற சிஸ்டமா இருக்கும்’’

    மூன்றாவது மாடியில் சுற்றியபடியே வர ‘உணவு நீதிமன்றம்’ (Food Court) கண்ணைக் கவர்ந்தது. என்றேன்//ஆஹா என்னமா யோசிக்கறீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... நாங்க யோசிச்ச இன்னொரு விஷயத்தை இங்க சொல்லலை. சிவகுமார் எழுதாட்டா அடுத்த பதிவுல சொல்றேன். இன்னும் வியப்பீங்க சிஸ்! மிக்க நன்றி!

      Delete
  11. பக்கம் தானே பார்த்து விடுவோம்! நன்றி இருவருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா! உங்களுக்கும் ரசனை மிக்க ஒரு அனுபவமாய் அமையும். அவசியம் பாருங்கள். மிக்க நன்றி!

      Delete
  12. கைசெலவில்லாமல் எங்களை மாலுக்கு அழைத்து சென்ற உங்களுக்கு நன்றி கணேஷ் நானும் சுற்றிப் பார்த்து விட்டேன் உங்கள் எழுத்திலன் மூலம்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் சுற்றிப் பார்த்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  13. தங்களின் எழுத்தை கை பற்றி கொண்டு சுற்றி பார்த்த திருப்தி சார்
    இருந்தாலும் ஒரு முறை சென்று பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. போய்ப் பாருங்கள் சரவணன். உங்களுக்கும் பிடிக்கும். மிக்க நன்றி!

      Delete
  14. எனது ஸ்வீட் காரம் காபி யில் சரிதாயணம் பற்றி சொல்லியுள்ளேன் சார் நேரமிருக்கும் போது பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. பகிர்ந்து பெருமை தந்த உங்களுக்கு என் .உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. நல்ல அறிமுகம் சார்

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  16. / ஸைட் அடிக்கும் வயதைக் கடந்திருந்த சிவா பவ்யமாக நேர் பார்வையுடன் உடன் வந்தார்./

    என்ன ஒரு எகத்தாளம்...

    ReplyDelete

  17. //அன்னியனை கூல் பண்ணி அனுப்பிவிட்டு பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு சாப்பிட்டோம்./

    'வேணாம் சார். நாம ஞாயித்து கெளம மதியம் அன்னத்துல கை வக்கனுமே தவிர யார் கன்னத்துலயும் கை வக்க வேண்டாம்' என்று நான் சொன்னபிறகே கோபம் தணிந்தது. செத்தான் அந்நியன்!!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஸேம் பிளட்! மிக்க நன்றி சிவா!

      Delete
  18. //எனக்குப் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் - நிபந்தனை - பதினெட்டு ஆண்டுக்கு முன் பிறந்திருக்க வேண்டும். ஹி... ஹி//

    பதினெட்டு ஆண்டா? (ஆயிரத்தி தொள்ளாயிரத்து) பதினெட்டாம் ஆண்டா?

    நல்ல அறிமுகம்!

    உடனே இந்தக் கடையைப் பற்றி சரிதா அண்ணிக்குத் தெரியப்படுத்த வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. கதயக் கெடுத்துப்புட்டீங்களே...! 1918ன்னா நாம எஸ்கேப்பாயிருவோம்ல..! தலைநகரத்துலருந்து இங்க போட்டுக் குடுக்க ஆசையா? வேணாம் ஸாமி! விட்ருங்கோ...! மிக்க நன்றி!

      Delete
  19. அதானே பெண் குழந்தைகள் பிடிக்கும்னு சொன்னா பரவாயில்ல விட்டிருப்போம். அதில் நிபந்தனை வேறா ? கிளம்புங்க பதிவர் நண்பர்களே சரிதாவிடம் செல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. அடாடா... தென்றல் வேற இந்த சதியில கூட்டுச் சேர்ந்துருச்சே! சசி... இதப்பத்தி கண்டுக்காம விட்டா வர்ற வாரம் குச்சி ஐஸ் வாங்கித் தர்றேன். நல்ல பொண்ணில்ல...! ஆங்.. அது! மிக்க நன்றிம்மா!

      Delete
  20. மால் விளையாட்டு!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பா... இந்த மால் விளையாட்டை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  21. ஃபோரம் மால் பற்றிய உங்கள் வர்ணனையும், புகைப்படமும் அழகாக இருக்கு! அட லே-அவுட் சிம்பிள் சூப்பரா மாத்திட்டிருக்கிங்களே...

    ReplyDelete
    Replies
    1. பதிவுடன் சேர்த்து சிம்பிள் லேஅவுட்டையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. I think this is newly opened mall in Chennai. Virtually, I also enjoyed the window shopping through you.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... இப்பதான் ஓபன் ஆச்சு! என்னோட ஷாப்பிங் பண்ணின உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  23. Replies
    1. யெஸ் பிரதர்... யூவார் ரைட்! மெனி மெனி தாங்க்ஸ்!

      Delete
  24. சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சுவையென்று சொல்லி மகிழ்வு தந்த சுரேஷுக்கு மனம் நிறை நன்றி!

      Delete
  25. ஃபோரம் மாலில் நாங்களும் உங்களுடன் வந்து விண்டோ ஷாப்பிங் பண்ணியாச்சு!
    ஏனுங்கோ! இங்க படிக்கட்டுகளும் உண்டா? இல்லை வெறும் எஸ்கலேட்டர் மட்டும்தானா? எஸ்கலேட்டர் என்றால் கொஞ்சம் பயம்...ஹி....ஹி...!
    அடுத்தமுறை சென்னையில் பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கூட உண்மையில எஸ்கலேட்டர்னா பயம் உண்டு ரஞ்சனிம்மா. கோவை மால்ல வேகமா மூவ் ஆச்சு. ஆவியோட கையப் பிடிச்சுக்கிட்டேதான் போனேன். இங்க ஸ்பீட் கம்மியா வெச்சிருக்காங்க. அதனால ரசனையா ஏறிப் போக முடியது. இதுக்கு தயங்கறவங்களுக்காக லிஃப்ட்டும் இருக்கு. வாங்க, அவசியம் சுத்தலாம் நாம! மிக்க நன்றி!

      Delete
  26. Replies
    1. வாருங்கள்... அவசியம் பாருங்கள்... படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  27. இரண்டு வாரங்களாக டூர் அடித்தபின் நேற்று ஞாயிறன்று சென்னையிலேயே சோம்பலான பொழுதாகக் கழிந்து கொண்டிருந்த சமயம், மெ.ப.சிவகுமாரிடமிருந்து போன் வந்தது.////

    புதுசா மால் இருக்கு.... கொஞ்சம் சுத்திட்டு வரலாம்னு நீங்க தான் சிவாவை கூப்பிட்டதா காத்து வாக்கில் ஒரு செய்தி எனக்கு வந்துச்சு....

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ... அது வெறும் வதந்தீ...! நம்பாதீங்க பிரகாஷ்!

      Delete
  28. மால் நன்றாக இருக்கிறது. அடுத்த விசிட் இந்தியா வர சொல்கிறீர்கள்.... :))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மாதேவி! மோஸ்ட் வெல்கம்! நாங்கல்லாம் இப்ப உங்களுக்கு துணைக்கு இருக்கோம்ல... பாத்து ரசிக்கலாம் வாங்கோ. மிக்க நன்றி!

      Delete
  29. ‘ரெமோ பாலகணேஷுடன் அம்பி சிவா’ என்று கமெண்ட் வேறு. ////

    நண்பர்களே, கணேஷ் சாரை ரெமோ என அழைப்பதில் ரொம்ப ஹேப்பியா இருக்கார்... காரணம், அந்நியன்னு கொடூரனை சொல்லாம ரெமோ-ன்னு sweet boy-யை தானே சொல்றான்னு ரொம்ப சந்தோசப்பட்டார்....

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் பிரகாஷ்... ரெமோவாக இருக்க எனக்கு விருப்பம்தான். ஸ்வீட் ராஸ்கல் இல்லையா? மிக்க நன்றி நண்பா!

      Delete
  30. என்னங்க சார் கோவை வந்தீங்க... கோவை நேரத்தை பார்க்கக்கூட இல்லை... ஆனா அம்மணிகளின் வாசம் உங்கள் எழுத்திலும்....

    சென்னை வரும்போது சுத்திப் பார்க்கிறோம் போரம் மாலை... அதற்கு முன்பே ஒரு வியூ கொடுத்தமைக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஜீவாவின் காத்து ஒட்டிக்கிச்சு போல... ஹி... ஹி... சென்னை வாருங்கள்... அவசியம் பார்த்து ரசியுங்கள்- எங்களுடன் சேர்ந்து! மிக்க நன்றி!

      Delete
  31. சிவாவும் நீங்களும் ஒரே மேட்டரைப் பத்தி எழுதி இருக்கீங்க.அதான் பாஸ் நட்பு..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழா! நான் பெருமை கொள்ளும் விஷயங்களில் இந்த நட்பும் ஒன்று. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  32. சென்னையில் இருந்தும் எந்த மாலையும் பார்க்க(வாங்க அல்ல) சந்தர்பம் வாய்க்கவில்லை.
    மால் பெருமை அருமை.

    ReplyDelete
    Replies
    1. மாலையும் வாங்கவா...? மால்ல இருக்கற சில பொருட்களை வாங்கினாலே உங்க பர்ஸும் கிரெடிட் கார்டும் காலியாய்டும் முரளி! எங்களை மாதிரி ஷாப்பிங் பண்ணினா தப்பிச்சீங்க! மாலின் பெருமையை ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  33. forum மால் பற்றிய விமரிசனம் படிக்க படிக்க பார்க்க தூண்டுகிறது.
    ஒருமுறை சென்று பார்க்க வேண்டும்.
    எந்த மாலுக்குள் நுழைந்தாலும் ஏதோ நாம் இந்தியாவில் இல்லையோ என்று நினைக்கத் தோன்றும். இதுவும் அப்படித் தானோ? இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என்னமோ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா நீங்க நினைக்கிற மாதிரி எனக்கும் தோணினதுண்டு. மாலின் தோற்றத்தையும், அசால்ட்டா விலையப் பத்திக் கவலைப்படாம பர்ச்சேஸ் பண்ற ஜனங்களையும் பாக்கையில எனக்கும் வெளிநாட்டுல இருக்கோமோன்னு மைல்டா ஒரு டவுட் வரத்தான் செய்யுது. மிக்க நன்றி!

      Delete
  34. ம்ம் .அடுத்த வருடம் வடபழனியில் உங்கள் பெயர் சொல்லி இந்த மால் பார்த்துவிட்டாப்போச்சு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன். கண்டிப்பாய் நாம் போய்ப் பார்க்கலாம். மிக்க நன்றி!

      Delete
  35. நல்லதொரு பயண அனுபவத்தை மனம் ரசிக்கும்படியாக
    சொன்னீர்கள் ஐயா அதிலும் கெட்டித் தனமாக தண்ணீர் வேண்டிக்
    குடித்த தைரியத்தைப் பாராட்டத் தான் வேண்டும் :) வாழ்த்துக்கள்
    மேலும் அனுபவப் பகிர்வு தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  36. இப்போது பல இடங்களில் இது போன்ற மஹால்கள் கட்ட துவங்கி உள்ளனர் இல்லையா...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மனோ. மால்கள் பெருகி வருகின்றன. அதே அளவுக்கு எல்லா மால்களிலும் ஜனங்களும் ஆர்வமாக வந்து வாங்குவதைப் பார்க்கவும் வியப்பாகத்தான் இருக்குது. மிக்க நன்றி!

      Delete
  37. நான் சென்னைக்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அநேகமாக முற்றிலுமாக மாறி இருக்கும் போலிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சென்னை மட்டுமில்லை பாலா... சில வருட இடைவெளிக்குப் பின் எந்த நகரத்திற்குச் சென்றாலும் இதுதான் நிதர்சனமாக இருக்கிறது. நான் முன்பு பார்த்த ‌மதுரையும் கோவையும் இப்போதில்லை. அபார வளர்ச்சி! மிக்க நன்றிப்பா!

      Delete
  38. \\ வழியில் நிறைய ‘பொம்மைகள்’ இந்த இளைஞனின் கண்ணில் பட்டு ரசிக்க வைத்தன. \\ அடுத்த முறை பொம்மை பார்க்க என்ன விட்டுட்டு போகாதிங்க. கால் பண்ணி 'பொம்மை'னு சொன்னா ஓடோடி வந்திடுவேன்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube