ஹாய்... ஹாய்... ஹாய்..! எல்லாத்துக்கும் வணக்கம்! சுகந்தன்னே...? கடந்த வாரம், பத்து நாளா கோவை, பெங்களூரு எனறு தொடர்ந்து பயணங்கள் அமைஞ்சதுனாலயும், எங்க ஏரியாவுல மின்சார கேபிள்கள் ஒண்ணு மாத்தி ஒண்ணா பல இடங்கள்ல பழுதுபட்டுப் போனதுனால சரியானபடி மின்சார வசதி கிடைக்காம படுத்தி எடுத்ததுனாலயும் வலைப் பக்கம் எட்டிப் பாக்கக் கூட முடியாமப் போச்சு. எதையும் படிக்கவும் எழுதவும் முடியாமப் போனதுல ரொம்ப வருத்தம் எனக்கு. ஐ மிஸ்ட் யூ ஆல்!
கோயமுத்தூர்ல நான் போன வேலைய முடிச்சுப்போட்டு நண்பர்களைச் சந்திக்கலாமுனு பாத்தா... ஜீவா அண்ணாவும், சரளா அக்காவும் (ஒரு மருவாதிதேன்) ஊர்லஇல்லன்னு சொல்லிப் போட்டாங்க. அடடா...ன்னு ஏமாற்றமடைஞ்ச எனக்கு ‘நான் கோவைலதான் இருக்கேனுங்கோ’ என்று அபயம் தந்தார் ஆவி. (அறியாதவர்களுக்கு: ஆனந்தராஜா விஜயராகவன் என்பதன் சுருக்!) அவரையும் ஜீவன்சுப்புவையும் பாத்துடலாம், ரெண்டு நாள் கோவையில ரிலாக்ஸ்டா சுத்தலாமுன்னு போனேனுங்கோ. ஆனா நாம நெனச்சச மாதிரி எங்கிங்க நடக்குது? கெரவம் ஒரே நாள்ல பொட்டியத் தூக்க வேண்டியதாயிடுச்சுங்கோ! தம்பி ஜீவன்சுப்புவுக்கு போன் பண்ணி நான் வாங்கியிருந்த அப்பாயின்ட்மென்ட்டை கேன்சல் பண்ணி, அடுத்த முறை பாக்கலாம்னுட்டுக் கெளம்பிட்டனுங்கோ! ஆசாமி நம்ம மேல கான்டாகி செம கடுப்புல இருப்பாருன்னு நெனக்கிறேன்!
கோவை ஆவி என்னை ஒரு ஷாப்பிங் மாலுக்குக் கூட்டிட்டுப் போனார். கோயமுத்தூர்ல அவ்வளவு பிரம்மாண்டமா, அழகான ஒரு மாலை நான் எதிர்பார்க்கலை. ஏறத்தாழ ரெண்டு மணி நேரம் நானும், ஆவியும், (உலகசினிமா ரசிகன்) பாஸ்கரன் சாருமா உரையாடினது மறக்க முடியாத அனுபவம். என் பெங்களூரு நண்பன் ஒரு அவசர வேலை இருப்பதாகச் சொல்லி வரச் சொன்னதால கோவையிலயே என்னுடைய ரொம்ப நாள் விருப்பமான ஆன்ட்ராய்ட் மொபைல் (ஸாம்ஸங்) ஒண்ணை பர்ச்சேஸ் பண்ணிட்டு அன்றிரவே பெங்களூர் போனேன்.எங்க சந்திப்பை பத்தி கோவை ஆவி பதிவாவே எழுதிட்டாரு... இங்க க்ளிக் பண்ணினா நீங்க படிக்கலாம்.
பெங்களூர்ல கலாசிபாளையத்திலருந்து கன்டோன்மென்ட் வரைக்கும் போக ஆட்டோ பிடிச்சேன். டிஸ்டன்ஸை மனசுக்குள்ள கணக்குப் பண்ணிட்டே வந்தேன். கிட்டத்தட்ட சென்னை கோயம்பேடுலருந்து மாம்பலம் போற தூரம் இருக்கும். ஆட்டோ டிரைவர் நூறு ரூபாய் கேட்டாரு. பெங்களூரில் போன வேலைய முடிச்சுட்டு தனியார் ஏ.ஸி.பஸ்ல சென்னை கோயம்பேடு வந்து இறங்கினதும் ஆட்டோ டிரைவர்கள் மொய்ச்சுக்கிட்டாங்க. அங்கருந்து மாம்பலம் போறதுக்கு எவ்வளவுன்னு கேட்டதுக்கு 175 ரூபா குடுங்க சார்ன்னு கூசாம கேட்டாங்க. சர்தான் போங்கப்பா, நான் உள்ளூர்க்காரன்தான்னு சொல்லிட்டு ரெண்டு பஸ் மாறி 20 ரூபா செலவுல வீட்டுக்கு வந்தேன். இந்த ஆட்டோவாலாக்களால அல்லவா நாங்கல்லாம் நூறு நூறாச் செலவழிக்காம சிக்கனமா 10, 20 பஸ்சுக்கு செலவழிக்க முடியுது. சிக்கனத்தை ப்ராக்டிக்கலா கத்துத் தர்ற இந்த சென்னை ஆட்டோ டிரைவர்கள் மகராஜன்களாக இப்படியே இருக்கட்டும்!
ரைட்டு, நாமளும் இருக்கோம்னு அட்டென்டன்ஸ் குடுத்துரலாம்னு தானுங்க இப்ப வந்தேன். அதனால நான் எதுவும் எழுதி உங்களை போரடிக்காம, சின்னதா நான் படிச்ச சுவாரஸ்யமான விஷயங்களை இங்க தரலாம்னு இருக்கேன். (வொர்க் லோடுலயும் அலைச்சல்லயும் மண்டை காய்ஞ்சு போய் எதுவும் எழுத வரலைங்கறத எவ்வளவு நாசூக்காச் சொல்ல வேண்டியிருக்கு. அவ்வ்வ்வவ்!)

மனுசப் பய புள்ளங்களுக்கு நாங்க மட்டும் குறைஞ்சவிங்களா? |
பெண்கள் நெத்தியில இட்டுக்கற திலகத்தை பொட்டுன்னு சொல்வாங்க. இப்பல்லாம் நெத்தியில எந்தப்பகுதியில் பொட்டு வைக்கணும்கற கட்டுப்பாடே கிடையாது. அழகுக்கும், நாகரிகத்திற்கும் தக்கபடி நெத்தியில எங்க வேணும்னாலும் பொட்டு வெச்சிக்கறாங்க.சிலர் வெச்சுக்காமயும் திரியறாங்க. ‘அது எங்க இஷ்டம்லேய்... நீ யாரு கேக்க?’ன்னு தான் பதில் வரும் இதப்பத்திப் பேசினா. நாஞ்சொல்ல வர்றது என்னன்னாக்கே... வெவ்வேறான நெற்றி அமைப்பை உடையவங்க அதுக்குத் தக்கன பொட்டுக்களை தேர்ந்தெடுக்கலாம்கறதுதேங்!
* விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள்,பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறந்தது போல் அழகாகத் தெரியும். * நெற்றி அகலம் குறைந்தவர்கள்,இரண்டு புருவங்களுக்கு இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும். * சதுர வடிவிலான முக அமைப்பு கொண்டவர்கள் சற்றுப் பெரிய வட்ட வடிவிலான பொட்டு வைக்க வேண்டும். * வட்ட வடிவிலான முக அமைப்பைக் கொண்டவர்கள் சிறிய,பெரிய, முக்கோணம், வளைவு வடிவம் போன்ற பொட்டுக்களை வைக்கலாம். * ஜீன்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், மிடி போன்றவற்றை அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகுதான்! (ஹி... ஹி...)

மனமிருந்தால் நத்தைக்கூட்டில் மான்கள் வாழலாம்! சிங்கம்கூட பாசத்தோட மானை வளர்க்கலாம்! |
கொஞ்சம் பொறுங்க.. நான் ஊத்தறதை கிளாஸ் ரொம்பினதும் நீஙக எடுத்துக் குடிக்கலாம்! |
|
|
Tweet | ||
மான் சிங்கம் போட்டோ சூப்பர். போடோஷாப் வித்தையோ
ReplyDeleteI agree with ypu murali.
Deleteதமிழ் மணம் எங்க சார் காணோம்? டெம்ப்ளேட் மாத்தினதால காணாமப் போச்சா.? பிரபல பதிவர் ஆயிட்டதால தூக்கிட்டீங்களா?
ReplyDeleteஇன்னும் நிறைய வேலைகள் ப்ளாக் லேஅவுட்ல பண்ண வேண்டியிருக்கு முரளி. அடுத்த போஸ்ட்டுக்கு வந்துடும். மிக்க நன்றிப்பா!
Deleteநாசூக்கா அழகா சொல்லிட்டீங்க... கிளாஸ் தான் நிறையவே மாட்டேங்குது... ஹிஹி...
ReplyDeleteபுதிய தள வடிவமைப்புக்கு வாழ்த்துக்கள்...
அழகா சொன்னதை ரசிச்சதுக்கும், தள வடிவமைப்பை பாராட்டினதுக்கும் என் மனம் நிறை நன்றி நண்பா!
Deleteஎனக்கென்னவோ சிங்கம் சப்புக்கொட்டுவதைப் போலத் தோன்றுகிறதே? சின்ன வயசுல சேமியா ஐஸ்னு ஒரு குச்சியிலே கிடைக்கும். சின்னதா கடிக்குறதுக்கு முன்னால் இப்படி நக்கிப் பார்ப்போம். ஆகா! என்ன ருசி!
ReplyDeleteபெங்களூரு ஆட்டோக்காரர்களை நானும் மதிக்கிறேன்.
சிங்கத்தப் பாத்தா உங்களுக்கு அப்டியா தோணிச்சு....? சேமியா ஐஸ் என் சிறு வயசு ஞாபகங்கள்லயும் உண்டு அப்பா ஸார்! மறுபடி நினைவூட்டி மகிழ வெச்சுட்டீங்க. மிக்க நன்றி!
Deleteஓ.. புது லேயவுட் நல்லா இருக்குது.. சட்டுனு லோடாவுது.
ReplyDeleteசட்னு லோடாகணும்னு தான் என் நண்பன் தமிழ்வாசி பிரகாஷோட சேர்ந்து இந்தத் தளத்தை மாத்திட்டிருக்கேன். மிக்க நன்றி!
Deleteஇனிய வணக்கம் நண்பரே...
ReplyDeleteபயணம் சென்று வந்ததையும்
மிகவும் சுவாரஸ்யமாக கொடுப்பது
உங்களுக்கு கைவந்த கலை என்பது
மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது..
==
நம்ம ஊர் பக்கம் எப்போது வரப்போறீங்க???
மதுரைக்கும் உங்க ஊர் பக்கமும் ஒரு விசிட் வரணும்னு ஆசை இருக்கு. எப்பன்னு தான் சொல்லத் தெரியல. முயற்சிக்கிறேன் மகேன். மிக்க நன்றி!
Deleteஆஹா... கோவைத்தமிழ் கொஞ்சிவிளையாடுதே... பெண்களுக்கு பொட்டு வைப்பதற்கான டிப்ஸ் வழங்கியதற்கு நன்றி கணேஷ். நிறையபேருக்கு உதவும். ரசனையான படங்கள்.
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஆஹா சிக்கனத்துக்கு ஆட்டோகாரன் பலியாகிட்டான் ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteநான் தப்பிச்சேன்... அவன் பலியாய்ட்டான். ஹி... ஹி... மிக்க நன்றி நண்பா!
Delete//மனுசப் பய புள்ளங்களுக்கு நாங்க மட்டும் குறைஞ்சவிங்களா?//
ReplyDeleteஎன்ன தில்லு பாருங்க நீங்களும் ...
அந்த பூனையத்தாங்க சொல்றேன்..
என்ன தெனாவெட்டு...
என்னடா ஒரு பெரிசு Old man தன்னை பார்க்குதே...
அப்படின்னு ஒரு ரண்டு நிமிசமாவது பீடியை பின்னாடி ஒளிச்சுக்கவேணாம் ?
அட.. அதான் போகட்டும்..
இந்தா பெரிசு... ஒண்ணு தான் இருக்கு....
கொஞ்சூண்டு ஒடைச்சுத்தாரேன்.
நீயும் இழுத்துப்பாறேன்... super sukam.
அப்படின்னு
கொடுக்கவேணாம் ?
ரொம்ப மோசமுங்க... கொஞ்சம் கண்டிச்சு வையுங்க...
சுப்பு தாத்தா.
சரிங்கோ... கண்டிச்சு வெச்சுரலாமுங்கோ. மிக்க நன்றிங்கோ!
Deleteஹா..ஹா..ஹா...ஓவர் மருவாதிதான்.... உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே...எப்படி இருக்கிறது எங்க ஊர் மால்...ஏகப்பட்ட அம்மணிகளுடன்...
ReplyDeleteஉங்களை மிஸ் பண்ணினதுல எனக்கும் ரொம்ப வருத்தம்தான் ஜீவா. அடுத்த முறை சரிக்கட்டிரலாம். உங்க ஊர் மாலை மட்டும்தான் நான் ரசிச்சேன்னு சொன்னா நம்பவா போறீங்க? ஹி... ஹி...! அருமையா இருக்கு அம்மணிங்களோட..! மிக்க நன்றி!
Deleteகுல தெய்வ வழிபாட்டிற்காக குடும்பத்தோடு மாதேஸ்வரன் கோவிலுக்கு போய்விட்டோம் உங்களை சந்திக்க முடியாமைக்கு வருத்தம் இருக்கிறது அடுத்தமுறை அவசியம் சந்திக்கலாம் ...உங்கள் பதிவும் படமும் அருமை குளிர்பானம் குடிபதற்குள் கூன் விழுந்துவிடும் போல .......
ReplyDeleteஎனக்கும் கவிதாயினி தோழியைச் சந்திக்காதது குறைதான். அடுத்த சந்திப்பில ஈடு கட்டிரலாம்! ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteம்.. கலக்குங்க தலைவரே...
ReplyDeleteமிக்க நன்றி நண்பா!
Deleteபுகைப்படங்கள் அழகு....எங்க ஊருக்கு வந்திருக்கீங்க... எப்படி உங்க ஊரைவிட அமைதியா... அருமையா இருக்குதானேங்க....
ReplyDeleteஆமாங்க எழில்! எனக்கு எப்பவுமே உங்க ஊர் பிடித்தமானது தான். அங்க நாலு வருஷம் இருந்திருக்கேனே... ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
DeletePottai pathi nalla pottula adichha madhiri solliteenga.
ReplyDeleteCommenced the post with Coimbatore slang and from there you took us to Bangalore in a reasonably rated autorickshaw and ended your tour programme in Chennai. Autowalas in Chennai are mini terrorists. Sometimes the rate they demand is so horrible that we get confused whether it is the auto fare to reach our destination or the cost of autorickshaw itself. Even today they have not changed a bit is quite disgusting.
ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!
Deleteபெயருக்கு ஏற்றார் போல மின்னல் ஆகிட்டிங்க. இனி நானும் சொல்லளாம் என் பசங்களிடம் இங்க பாருங்கப்பா மின்னல் வந்திருக்காங்கனு.
ReplyDeleteகண்டிப்பா உங்க ஏரியாவுக்கும் வர்றேன் தென்றல்! பிள்ளைங்கட்ட மின்னலக் காட்டலாம் நீங்க! மிக்க நன்றி!
Deleteசிங்கம் போட்டோ வும் அதற்கான பாடல் வரிகளும் ரசிக்கும் படி இருக்கு ( அதற்காக மத்தது ரசிக்கும் படி இல்லே னு அர்த்தமில்ல) கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கலாம் னு நானும் வெயிட் பண்றேன் ரொம்பவே மாட்டேங்குதே சார்
ReplyDeleteஅனைத்தையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete
ReplyDeleteஎன்ன கணேஷ்! எங்க ஊருக்கு வந்துட்டு பார்க்காமலேயே போயிட்டீங்க?
ஞாயிறு காலை பெங்களூரு வந்து அன்றிரவே திரும்ப வேண்டிய சூழல் ரஞ்சனிம்மா! டைப்பிங் ஒர்க் டைட்டா இருந்ததால எங்கயும் அசைய முடியல. அடுத்த மாசம் மீண்டும் வருவேன்- நிதானமா தங்கற மாதிரி. அப்ப அவசியம் போன் பண்ணிட்டு சந்திக்கறேன். மிக்க நன்றி!
Deleteபெங்களூர் வரும் சென்னைவாசிகள் தவறாமல் சிலாகிப்பது ஆட்டோ கட்டணம் குறித்தே.
ReplyDeleteஆம். அதே நியாயமான பணம் பெற்றுக் கொள்ளலை இங்குள்ளவர்களும் செய்தால் என்ன என்ற ஆதங்கமுடன் சேர்ந்த பாராட்டு அது. மிக்க நன்றிங்க!
Deleteஅருமையான, சுவாரசியமான எழுத்து!! போகிற போக்கில் பெண்களுக்கு பொட்டு வைக்கிற டிப்ஸ்!!
ReplyDeleteஅருமையான எழுத்து என்று ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவெட்டி அரட்டை எப்பவும் சுகம்தான்..... (ஹிஹி...)
ReplyDeleteசிங்கம் மான் படம் அழகு.
நீங்க பார்க்காதப்போ ஒருதரம் கப் ரொம்பி, நான் எடுத்துக் குடிச்சுப் போட்டேனுங்க...!
அப்பாதுரை சொன்னாப்ல புது டெம்ப்ளேட் சீக்கிரம்தான் லோட் ஆவுது...
அட... ட்ரிங்கக் குடிச்ச ஒரே ஆளு நீங்கதானுங்கோ! புது டெம்ப்ளேட் இனி தொடரும். ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஅட்டகாசமா உங்க பாணியில் ஒரு ஜாலியான பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteபெண்கள் போட்டு வைப்பதைப் பற்றிய டிப்ஸ் அருமையாக இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் குளிர்பானம் எப்ப டம்ப்ளரில் நிறைவது? எப்போ குடிப்பது.
சரி நிறையட்டும் என்று உங்கள் பக்கத்தை அப்படியே விட்டு விட்டு வேறு tab திறந்து வேறு வலை பக்கம் செல்கிறேன். மீண்டும் வந்து பார்க்கிறேன்......
நீங்க ஏமாற்றமடையாம இருக்க அடுத்த பதிவுல வேறொரு நல்ல குளிர்பானமே தந்துடறேன். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅண்ணன்னேன் என்னன்னேன் இப்பூடி பண்ணிப்புட்டீக....? சரி வுடுங்க அடுத்தவாட்டி பாத்துப்புடலாம் .
ReplyDeleteபுது மொபைல் புது டெம்ப்ளேட் கலக்குறீங்க போங்க .....!
தம்பியச் சந்திக்க முடியாமப் போச்சேன்னு எனக்கும் ரொம்ப வரு்த்தம் தேங்! அடுத்த முறை கண்டிப்பா பாத்துரலாம். மிக்க நன்றி!
Deleteஅனைத்தையும் ரசித்தேன் ஒன்னே ஒன்னைத்தவிர.
ReplyDeleteபாவம்யா....அந்தப் பூனை. அதை விட்டுருங்க ப்ளீஸ்.............
கெட்ட பழக்கம் இல்லாத ஜீவன்கள்!
நல்லவேளை....இந்தப்பதிவைப்படிக்கும்போது ராஜலக்ஷ்மி என் பக்கத்தில் இல்லை!
ச்சும்மா கிராபிக்ஸ் தானேன்னு போட்டேன் டீச்சர்! செல்லங்கள் மேல பிரியம் உள்ள உங்களுக்கு அலர்ஜியாய்டுச்சா? ஸாரி! மத்த அனைத்தையும் ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஎன்ன சார்! ஊத்திக்கிட்டே இருக்கீங்க!...ஏதொ அடைச்சிக்கிட்டுதா!....
ReplyDeleteபதிவு சுவையாக உள்ளது.
ரசித்தேன். பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
தீராத கப்பு அது. அதான் ஊத்திட்டே இருக்கோம்...! ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteப்றதர்!.... வழக்கம்போல இந்தமுறையும் உங்க பதிவு கலக்கல்...:). படங்களும் அசத்தல்.
ReplyDeleteஅட... இங்கை பாருங்க புகைவிடும் பூனையை...:)..
ஆமா... இப்பதான் புரியுது எங்கவீட்டு மியாவ் நான் சாமி படத்துக்குமுன்னாலே சந்தணக்குச்சி கொழுத்திவச்சா அதிலிருந்து வர்ர புகையை ஏன் உத்துப்பாக்குதுன்னு...
நம்மவீட்டு பூஸாருக்கும் இப்புடி பழக்கம் இருக்குமோ???...:).
எல்லாமே சிறப்பு + சிரிப்பு = ரசிப்பு... மிக்க நன்றி!
எந்த பூஸாருக்கும் இந்தப் பழக்கம் இருக்காது சிஸ்டர்! சும்மா ஜாலி, கேலிக்குத்தான். எல்லாத்தையும் ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஎதையும் சுவாரஸ்யமாகச் சொல்ல சிலரால்தான்
ReplyDeleteமுடிகிறது.அதில் முதல் வரிசையில் நீங்கள்
அதற்கு இந்தப் பதிவு சாட்சி
அந்தக் கண்ணாடி கிளாஸ் நிரம்புமா நிரம்பாதா
ரொம்ப நேரம் வெயிட் பண்ணினேன்
படங்கள் இரண்டும் அருமை
வாழ்த்துக்கள்
வருஷக் கணக்கா வெயிட் பண்ணினாலும் அந்த கிளாஸ் நிரம்பாது ரமணி ஸார் ரசித்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteபடங்கள் அருமையாக உள்ளன. பொட்டுக்கு இவ்வளோ இலக்கணமா ? , நல்ல வேளை நான் ஆணாக பிறந்துட்டேன். ஹி....ஹி...
ReplyDeleteஎனக்கெல்லாம் பெண்ணாகப் பிறந்திருக்கலாமோ என்ற எண்ணம் அடிக்கடி வரும் ரூபக். படங்களை ரசித்த உங்களு்க்கு என் மனம் நிறைய நன்றி!!
Deleteபொட்டு விசயம் படிச்சதுனு நீங்க சொல்லி நான் நம்ம்பிட்டேன்!
ReplyDeleteநம்பிட்ட நல்ல பொண்ணுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅங்கருந்து மாம்பலம் போறதுக்கு எவ்வளவுன்னு கேட்டதுக்கு 175 ரூபா குடுங்க சார்ன்னு கூசாம கேட்டாங்க.//என்றுதான் இதற்கு விடிவுகாலம் வருமோ;
ReplyDelete//* விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள்,பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறந்தது போல் அழகாகத் தெரியும்.//அண்ணே லேடீஸ் பியூட்டி பார்லர் வைக்கும் திட்டம் ஏதும் கைவசம் இருக்கா என்ன?மேற்கு மாம்பலத்தில் நல்லதொரு பியூட்டி பார்லர் இல்லை என்பது மேலதிகத்தகவல்.
கோயமுத்தூர் போய் என்ன வாங்கி வந்தீங்களோ இல்லையோ அப்படியே அந்த ஊர் பாஷையை வாங்கிட்டு வந்திட்டீங்க..பதிவில் அப்படியே அப்பட்டமா தெரிகிறது.
கடைசி படம் ரசித்தேன்.
ப்யூட்டி டிப்ஸ் நிறைய கைவசம் இருக்கு சிஸ்! அப்பப்ப எடுத்து வுடலாம்னு உத்தேசம். பார்லர்லாம் நமக்கு சரிப்பட்டு வராதும்மா.கொங்கு தமிழையும் படங்களையும் ரசித்தமைக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteகோவை பாஷையில் கலங்குறீங்ணா....
ReplyDeleteசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. படித்தேன். ரசித்தேன். புதிய டெம்ப்ளேட் நல்லா இருக்கு. புது மொபைல் - வாழ்த்துகள்!
ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசென்னையிலும் ஒருசில நல்ல ஆட்டோகாரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..ஆனால் அவர்கள் பூர்வீகம் சென்னையாக இருக்காது..
ReplyDeleteஜாலி அரட்டை தான் சார்...
ReplyDeleteசென்னை ஆட்டோ டிரைவர் பத்தின ஒரு பொசிடிவ் எண்ணம் நல்ல இருக்கு.. எதையுமே இப்படி பார்த்த தப்பு கண்டுபிடிக்க வாய்ப்பே இருக்காது போல!!!
android போன்... கலக்குங்க சார்!!!