அந்தப் பதிவரை எனக்கு நீஈஈஈண்ட காலமாகப் பழக்கம். அவர் பதிவுலகிற்கு வந்தபின் ரொம்பவே விவரமானவராயிட்டார். பதிவுகள் எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னால அவர் வாங்கின ரெண்டு பல்புகளை இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன்.
சம்பவம் : 1
அது 2000ம் ஆண்டு. அவர் அப்ப திருநெல்வேலியில வேலை பாத்துட்டிருந்தார். அவருக்கு மிக நெருங்கிய நண்பன் போன் பண்ணி (இருவரும் ஒரே அலுவலகம்தான்- நண்பனுக்கு வெளியில் சுற்றும் உத்தியோகம்) ‘‘லேய், தினேஷ் நெல்லைக்கு வந்திருக்காம்லே. பேசியே நாளாச்சுன்னு சொன்னியே... உடனே போன் பண்ணிப் பேசிட்டுப் போய்ப் பாருலே. இன்னிக்கு ராத்திரி ஊருக்குப் போறானாம்...’’ என்றான். ‘‘நம்பர் சொல்றா, குறிச்சுக்கறேன்’’ என்று இவர் பேப்பருடன் தயாராக, நண்பன் சொன்னான்: ‘‘மூணு ரெண்டு நாலு ஜீரோ மூணு ரெண்டு’’ என்று. நம்ம அ.ப. பேப்பர்ல இப்படி எழுதிக்கிட்டாரு: 324032.
அலுவலகத்திலிருந்து வெளியே வந்து பப்ளிக் டெலிபோன் பூத்தில பல தடவை அந்த நம்பரை ட்ரை பண்ணினாரு. அவருக்குக் கிடைச்ச பதில்: "This number does not exist."ங்கறதுதான். கடைசில வெறுத்துப் போய் டயல் பண்றதை விட்டுட்டாரு. மாலையில டூர்லருந்து அந்த நண்பன் வந்ததும், ‘‘என்னலே, பேசினியா?’’ என்று கேட்க, இவர், ‘‘பல தடவை ட்ரை பண்ணேன்டா. நம்பர் டஸ்நாட் எக்ஸிஸ்ட்ன்னே வருது’’ என்றிருக்கிறார். அவன் உடனே இவரை பூத்துக்கு அழைத்துப் போய் நம்பரை டயல் பண்ண, இவர் டிஸ்ப்ளேயில் பார்த்திருக்கிறார்- 32000032 என்பது சரியான நம்பர்.
தினேஷிடம் பேசிமுடித்து வெளியே வந்ததும், நண்பர் மீது பாய்ந்தார் இவர். ‘‘ஏலே மூதி! நம்பரை ஒழுங்காச் சொல்ல மாட்டியாலே... மூணு ரெண்டு டபுள் ஜீரோ டபுள் ஜீரோ மூணு ரெண்டுன்னு நீ சொல்லியிருந்தா அப்பவே பேசியிருபேன்ல..’’ என்று சொல்லி தான் எழுதி வைத்திருந்த நம்பரைக் காட்ட, அவன் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறான். ‘‘எலே, கோட்டிக்காரப் பயலே! எங்கயாச்சும் ஆறு டிஜிட்ல டெலிபோன் நம்பர் வருமாலே...? அப்பவே நீ சுதாரிச்சிருக்க வேணாமா? நீ தப்புப் பண்ணிட்டு என்னைக் கேக்க?’’ என்று அவன் விடாமல் சிரிக்க, இவர் ‘ழே’ என்று விழித்திருக்கிறார்.
சம்பவம் : 2
நம்ம அ.ப.வை ஒரு அவசர வேலையா பெங்களூர்ல இருக்கற அவர் நண்பன் உடனே வரச் சொல்லி, டிக்கெட்டும் அனுப்பினதால புறப்பட்டுப் போனார். அவர் முன்னப்பின்ன பெங்களூரு போனதில்ல. கண்டோன்மென்ட் ஸ்டேஷன் நெருங்கறப்ப நண்பனுக்கு போன் பண்றார். அவன், ‘‘நான் ஒன்வேல சுத்திட்டு வர்றதுக்கு லேட்டாயிடும். ஸ்டேஷன் பக்கத்துல ரெண்டு நிமிஷ நடை தூரத்துல காரோட வெயிட் பண்ணிட்டிருக்கேன். ஸ்டேஷனை விட்டு வெளிய வந்ததும் கூப்பிடு’’ என்றிருக்கிறான் நண்பன். இவர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், அவனைக் கூப்பிட்டு, ‘‘நான் ஸ்டேஷனுக்கு வெளில நிக்கறேன்’’ என்க, அவன், ‘‘எதிர்ல ஒரு யானை தெரியுதா?’’ என்று கேட்டிருக்கிறான். இவர் பார்க்க, எதிரில் ஒரு யானை நடந்து சென்று கொண்டிருந்தது. ‘‘ஆமா, தெரியுது’’ என்று இவர் பதிலளித்ததும், ‘‘அந்த யானை திசையிலயே வந்தா ஒரு சர்க்கிள் வரும். அதுல இடது பக்கம் திரும்பினா, காரோட நான் நிக்கறது தெரியும்’’ என்றிருக்கிறான்.
இவரும் யானை சென்ற திசையிலேயே அதைப் பின்தொடர்ந்து நடந்திருக்கிறார். சிறிது தொலைவு சென்றதும், பாதை இரண்டாகப் பிரிய, யானை இடதுபுறப் பாதையில் சென்று விட்டது. சர்க்கிள் எதையும் காணோமே என்று இவர் ‘ழே’ என்று விழித்து, மீண்டும் நண்பனுக்கு டயல் செய்து, ‘‘டேய், நீ சொன்னபடி யானை வழியா வந்ததுல ரோடுதான் ரெண்டாப் பிரியுது. சர்க்கிள் எதையும் காணமேடா’’ என்று கேட்க, ‘‘நீ இடது பக்கம் போயிட்ட போலருக்கு. அப்படியே திரும்பி ஸ்டேஷனுக்கு வந்து வலதுபுறமா வா’’ என்று நண்பன் பதிலுரைக்க, விதியே என்று இவர் மீண்டும் ஸ்டேஷனை நோக்கி நடந்து, அதைத் தாண்டி கொஞ்சம் தூரம் நடந்தார்.
அங்கே சற்று தூரம் சென்றதும் ஒரு யானை சிலை இருக்க, அதைச் சுற்றி ஒரு சர்க்கிள் இருந்தது. அதில் இடதுபுறம் செல்லும் பாதையில் பார்க்க, காரின் வெளியி்ல் நின்றிருந்த நண்பன் கையாட்டி அழைத்திருக்கிறான். நண்பனின் அருகில் சென்றதும், ‘‘ஏன் இத்தனை லேட்?’’ என்று அவன் கேட்க, ‘‘நீ யானை தெரியுதான்னு கேட்டப்ப, என் எதிர்ல ஒரு யானை நடந்துட்டிருந்தது. நீ எங்கருந்தோ என்னைப் பாத்துட்டுதான் பேசறேன்னு நான் நினைச்சு, யானை திசையில நீ போகச் சொன்னதால அது பின்னால போய்ட்டேன். இப்பத்தான் புரியுது நீ யானை சிலையச் சொல்லியிருக்கேன்னு. ஏண்டா பாவி... யானை சிலைன்னு தெளிவாச் சொல்லித் தொலையக் கூடாதா?’’ என்று இவர் வருத்தம் பாதி, கோபம் பாதியாகக் கேட்க, நெல்லை நண்பனைப் போலவே இந்த பெங்களூர் நண்பனும் ரசித்து வாய்விட்டுச் சிரித்திருக்கிறான். ‘‘ஏண்டா நான் பேசற நேரம் நிஜ யானை நேர்ல போகும்னு கனாவா கண்டேன்?’’ என்று அவன் சிரிக்க, இவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.
இப்படி இரண்டு பல்புகள் வாங்கிய அந்த அ.ப. யாருன்னு கேக்கறீங்களா? ஜன்னல் வரிகள் ஜாலடணேஷ் தவிர வேற யாரு அவ்வளவு புத்திசாலி(?)யா இருக்க முடியும்? ஹி... ஹி...
======================================
இப்ப புத்தகக் கண்காட்சி அப்டேட்ஸ்: என்னுடைய ‘சரிதாயணம்’ புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸ் -- ஸ்டால்: 43,44 தவிர, மயிலவன் பதிப்பகம் ---ஸ்டால் 295, 296 ஸ்டாலிலும் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நம் பதிவர் புத்தகங்களுள் எனக்குத் தெரிந்த மேலும் இரண்டு.

அகிலா - ரசனை மிகுந்த கவிதைகளையும், அழகான எழுத்து நடையில் கட்டுரைகளையும் படைக்கும் இவரது படைப்புகள் இப்போது ‘சின்னச் சின்னச் சிதறல்கள்’ (இவர் எழுதும் தளத்தின் பெயரும் அதுவே) நூல் வடிவம் பெற்றிருக்கிறது. ஜீவா என்று விரிவாக நண்பர்களால் அழைக்கப்படும் இவரின் சுருக்கப் பெயர் ஜீவானந்தம். ‘கோவை நேரம்’ என்ற தன் தளத்தி்ல பல அரிய ஆலயங்களைப் பற்றியும், நல்ல உணவகங்களைப் பற்றியும், இவர் சென்று சுற்றுலா தலங்களைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார். அவை இப்பொழுது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன- ‘கோவை நேரம்’ என்ற பெயரிலேயே.
இவை தவிர கடுகு (அகஸ்தியன்) அவர்கள் எழுதிய ‘கமலாவும் நானும்’ என்ற நகைச்சுவைக் கதைகளும், அனுபவக் கட்டுரைகளும் அடங்கிய பொக்கிஷப் புத்தகமும் இம்முறை பு.க.வில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.
இந்த மூன்று புத்தகங்களும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலிலேயே கிடைக்கும் என்று பட்சி சொல்கிறது. (பஜ்ஜி இல்லீங்க, பட்சி!) உங்கள் புத்தகக் கண்காட்சி விசிட்டில் தவறாமல் டிஸ்கவரிக்கு ஒரு விசிட் அடித்து நம் பதிவர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ்வீர்கள்.. சரிதானே...!